Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oxygen Naragam
Oxygen Naragam
Oxygen Naragam
Ebook95 pages33 minutes

Oxygen Naragam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரஞ்சனி ஒரு அழகான பெண். மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில் வெற்றி பெற்றவள். இவளின் காதலர் கலாதர். இவளின் அழகில் மயங்கி மோகம் கொண்டவர் சூப்பர் ஸ்டார் பொன்குமார். இருவரையும் ரஞ்சனி உருவில் கொலை செய்தது யார்? இன்னும் பல மர்மங்கள் நிறைந்த திகிலான கதையான ஆக்சிஜன் நரகத்தை வாசிப்போம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateApr 29, 2023
ISBN6580111009803
Oxygen Naragam

Read more from Arnika Nasser

Related to Oxygen Naragam

Related ebooks

Reviews for Oxygen Naragam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oxygen Naragam - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆக்ஸிஜன் நரகம்

    Oxygen Naragam

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கான்பரன்ஸ்ஹால் புரூனே தனமாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடையின் பேக்ட்ராப் பேனர் மிஸ் மெட்ராஸ் 94 போட்டியை ஒரு பிரபல பெண்கள் மாத இதழும், குளியல் சோப்புகம்பெனி ஒன்றும் இணைந்து நடத்துவதாய் அறிவித்திருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்தட்டு பார்வையாளர் குழுமம்.

    மேடையினை ஒட்டிய முதல்வரிசையில் நடுவர் மூவர் அமர்ந்திருந்தனர்.

    நடுவரில் ஒருவர் தமிழின் சூப்பர் ஸ்டார் பொன்குமார். செயற்கை பழுப்பேற்றிய பம்பைகேசம். கண்களில் ரேபான் குளிர்கண்ணாடி. நுனியில் மினியேச்சர் நிலவு சுமக்கும் கச்சித மூக்கு. சம்மர் கிராப்பிய மீசை. நிகோட்டின் உதடுகள். க்ரீம் கலர் ஃபுல் சூட்டிங். மெஸ்கோஸ் வகை ஷூஸ் உடலில் பாய்ஸன் நறுமணம். தொண்டையில் ஷிவாஸ் ரீகல் போதை.

    இரண்டாம் நடுவர் நிகழ்ச்சியை ஸ்பான்ஸர் செய்யும் பெண்கள் மாத இதழின் எடிட்டர். மூன்றாமவர் ஒரு ப்யூட்டிஸியன்.

    பார்வையாளர் குழுமத்தில் கலாதர் அமர்ந்திருந்தான். வயது 29, உயரம் 5 அடி 9 அங்குலம். நீள்வட்ட முகம். குறும்புக்கண்கள். பவர் கிளாஸ். வழக்கத்துக்கு மாறாக குழப்பமுகத்தில் இருந்தான்.

    கான்பரன்ஸ் ஹால் முழுவதும் மேற்கத்திய இசை வழிந்தது.

    நிகழ்ச்சியைத் தொகுக்கும் பெண்மணி இடப்பக்க மைக்கில் நின்றிருந்தாள்.

    இரு வீடியோ காமிராக்களும் நான்கு ஸ்டில் காமிராக்களும், மினியேச்சர் மின்னல் துப்பி நிகழ்வுகளை விழுங்கிக் கொண்டிருந்தன.

    நிகழ்ச்சி தொகுக்கும் பெண்மணி அறிவிக்க,

    மிஸ் மெட்ராஸ் போட்டி ஆரம்பித்தது.

    மொத்தம் 26 பங்கேற்பாளர்கள்.

    ஒவ்வொரு பெண்ணும் நளினமாக நடந்து வந்து குறுக்கே நெடுக்கே பின்னுக்குப் போய் நடுவரை அசத்தினர்.

    பத்தாவது பங்கேற்பாளராக ரஞ்சனி நடந்து வந்தாள்.

    கேசத்தைக் கனகச்சிதமாக அலங்காரக் கொண்டை போட்டிருந்தாள். கேசம் இழுத்து பின்னுக்கு வாரப்பட்டடிருந்ததால் போனஸ் நெற்றி பளபளத்தது. சீரமைக்கப்பட்ட புருவங்கள். ஷெரோன் ஸ்டோன் கண்கள். அடக்கி வாசிக்கும் மூக்கு. சிவப்பு நிற லிப்ஸ்டிக் பூசப்பட்ட இரு மின்சார ஜெல்லி உதடுகள்.

    பொம்மலாட்டத்தில் ஒரு சந்தன நிலா!

    பார்வையாளர்கள் ஸ்தம்பித்தனர்.

    பொன்குமாரின் இதயத்தில் காம மின்னல்!

    சுவர்ப் பல்லி இரையெடுக்க ஆயத்தமானது.

    இந்த ராஜ அழகு பெண் தன்னுடைய காதலி என்ற கம்பீர உணர்வில் அமர்ந்திருந்தான் கலாதர்.

    ரஞ்சனியை அடுத்த வந்த பங்கேற்பாளர்கள் நண்பகலில் தெரியும் நிலா போல சோகை அடித்தனர்.

    போட்டியின் இரண்டாவது சுற்று ஆரம்பித்தது.

    பங்கேற்பாளர்கள் நடுவர் கேட்கும் ஒரு கேள்விக்கு அறிவுப் பூர்வமாக பதிலளிக்க வேண்டும்.

    பொன்குமார் கேள்வியை வீசினான்.

    அழகுப் போட்டிகள் உண்மையா?

    நொடி தாமதித்து ரஞ்சனி பதிலளிக்க ஆரம்பித்தாள்.

    அழகுப் போட்டிகள் விளம்பர உலகின் உடனடித் தேவைகள். அழகைக் கணிக்க எந்த உலக அளவுகோலும் இல்லை. ஆன்ம அழகே உண்மையானது. நிலையானது. நான் மிஸ்மெட்ராஸாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது உங்கள் மூவரின் ரசனை விருப்பத்தையே பிரதிபலிக்கும்!

    நடுவர் உட்பட பார்வையாளர் குழுமம் கைதட்டியது. கலாதர் மிகையாய்.

    இரண்டாவது சுற்று முடிந்தது.

    போட்டி முடிவை நிகழ்ச்சித் தொகுப்பாளர் அறிவித்தாள்.

    மிஸ் மெட்ராஸ் – நம்பர் டென் ரஞ்சனி!

    கைதட்டல் எழுந்தது.

    பொன்குமார் மேடைக்கு எழுந்து போனான்.

    ரஞ்சனி பார்வையாளருக்குக் கையசைத்தபடியே வந்தாள்.

    பொன்குமார் ரஞ்சனி தலையில் கிரீடம் அணிவித்தான். ப்ளாஷ்கள் மின்னின. கைதட்டல் எழுந்தது. சான்றிதழும் செக்கும் அளித்துக் கை குலுக்கினான்.

    ரகசியக் குரலில் கன்கிராட்ஸ் ரஞ்சனி!

    தாங்க்யூ சார்!

    மிஸ் யுனிவர்ஸ்க்குப் போட்டியிட்டாலும் ஜெயிப்பாய்!

    தாங்க்யூ சார்!

    நீ விருப்பப்பட்டால் என்னுடைய அடுத்த படத்தில் நீ ஹீரோயினாக நடிக்கலாம்!

    எனக்கு விருப்பமில்லை சார்!

    சரி அதை விடு! இந்தா என் விசிட்டிங்கார்டு! போன் பண்ணிவிட்டு வா. நாம் பேச நிறைய விஷயங்கள் உள்ளன. உன் எதிர்காலத்துக்கு உதவும்…

    சாரி… விசிட்டிங் கார்டை ஒதுக்கினாள்.

    உன் அழகான அறியாமை வாழ்க! எரிச்சலாய் முணுமுணுத்தான். நிகழ்ச்சி முடிவுற்றது.

    மேடையிலிருந்து இறங்கி வரும் ரஞ்சனியை காதலாய் வரவேற்றான் கலாதர்.

    வாழ்த்துகள் நிலவே!

    "வாழ்த்துகள் இருக்கட்டும் கலாதர். எங்கே

    Enjoying the preview?
    Page 1 of 1