Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ப்ரிம்ரோஸின் சாபம்: ஒரு துணிச்சலான சிறுமியின் மாய கதை
ப்ரிம்ரோஸின் சாபம்: ஒரு துணிச்சலான சிறுமியின் மாய கதை
ப்ரிம்ரோஸின் சாபம்: ஒரு துணிச்சலான சிறுமியின் மாய கதை
Ebook124 pages1 hour

ப்ரிம்ரோஸின் சாபம்: ஒரு துணிச்சலான சிறுமியின் மாய கதை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ப்ரிம்ரோஸின் சாபம்: ஒரு துணிச்சலான சிறுமியின் மாய கதை

 

Primrose's Curse: A Fairy Tale of an Audacious Girl (Tamil Edition).

 

ப்ரிம்ரோஸ் ஃபெர்னெடிஸ் என்னும் அழகும் துணிச்சலும் வாய்ந்த பன்னிரண்டு வயது பெண்ணுடன், தெய்வீக மாய திறன்களைக் கொண்ட கானக விலங்குகளின் ஒரு குழுவும் இணைந்து எரோடாவின் மந்தமான பகுதியிலுள்ள, இருண்ட தீவான மிரிசடைக்கு‌ ஒரு சாகசப் பயணத்தை மேற்கொண்டனர். அவர்களது துணிச்சல் நிறைந்த இந்த பயணமானது, தீய சூனியக்காரி, அரசி எவிலின் பிரஸ்டைன் என்பவளை வீழ்த்தி, மனித குலத்திற்கு அவள் அளித்த சாபத்தை உடைத்து எறிவதே ஆகும்.

கானக விலங்குகள் குழுவுடன் சேர்ந்து ப்ரிம்ரோஸ், அந்த கொடிய சக்தி வாய்ந்த சூனியக்காரியைத் தோற்கடிப்பதற்கான பயணத்தை எவ்வாறு மேற்கொள்ள போகின்றனர்?

அன்பான வனப்பகுதி விலங்குகளின் குழுவும், ஒரு அப்பாவியான பன்னிரண்டு வயது சிறுமியும் ஒன்றிணைந்து பயங்கரமான அரசி எவிலினை வீழ்த்துவரா? மேலும், அவர்களால் மனித குலத்திற்கு மீண்டும் அமைதி, நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வர இயலுமா?

இந்த மாய காவிய கதையைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்வதற்க்கு, முழு புத்தகத்தையும் வாசிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateAug 6, 2021
ISBN9781950263585
ப்ரிம்ரோஸின் சாபம்: ஒரு துணிச்சலான சிறுமியின் மாய கதை
Author

Kiara Shankar

Kiara Shankar es una talentosa autora y compositora de dieciséis años de San Francisco, California, EE. UU. Además de su pasión por escribir, le gusta leer y crear obras de arte. Su reciente libro, Avocado la Tortuga, ha sido traducido a quince idiomas, incluidos español, alemán, italiano, francés, chino tradicional, chino simplificado, hebreo, hindi, tamil, bengalí, kannada, ucraniano y más.

Read more from Kiara Shankar

Related authors

Related to ப்ரிம்ரோஸின் சாபம்

Related ebooks

Reviews for ப்ரிம்ரோஸின் சாபம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ப்ரிம்ரோஸின் சாபம் - Kiara Shankar

    Copyright ©  2021 by VIKI Publishing®. All rights reserved.

    No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

    This is a work of fiction. The characters in this book are entirely fictional. Any resemblance to actual place, business establishments, and persons living or dead is entirely coincidental.

    Library of Congress Control Number:  2019900256

    ISBN-13: Tamil Edition

    978-1-950263-58-5 (eBook)

    978-1-950263-57-8 (Paperback)

    ISBN-13 / ISBN: (English Editions):

    978-1-950263-00-4  /  1-950263-00-2 (Paperback - Color Interior)

    978-1-950263-03-5 / 1-950263-03-7 (Paperback - B&W Interior)

    978-1-950263-01-1 / 1-950263-01-0  (Hardcover - Color Interior)

    978-1-950263-02-8 / 1-950263-02-9 (eBook)

    978-1-950-263-10-3 / 1-950263-10-X (Audiobook)

    First Edition: Aug 2021. Published by VIKI Publishing®, San Francisco, California, USA.

    Story by Kiara Shankar and Vinay Shankar, San Francisco, California, USA.

    Translated by Ramya Mahadhi, Tamil Nadu, India.

    Visit the publisher’s website at www.vikipublishing.com

    Dedicated to Humanity

    பொருளடக்கம்

    ஆரம்பக் கால வாழ்க்கை

    வனப்பகுதி விலங்குகளுடன் சந்திப்பு

    குள்ளர்களுடனான சந்திப்பு

    ராணி சாராவின் திருமணத்தில் கலந்து கொள்கின்றனர்

    இருண்ட மிரிசடைக்கு காவிய பயணம்

    ஒரு ரகசிய பாதையும் மிரிசடையை நிர்மூலமாக்கலும்

    தீயதில் ஒரு நல்லது

    எவிலினை அழித்தல்

    வீட்டிற்கு திரும்பும் பயணம்

    தற்போதைக்கு பிரியாவிடை

    குடும்பத்துடன் மீண்டும் இணைந்தாள்

    நூல் ஆசிரியர்கள் பற்றிய தகவல்

    ஆரம்பக் கால வாழ்க்கை

    முன்னொரு காலத்தில், பெரிய அடர்ந்த காட்டில், சிறிய மர குடிசையில் ப்ரிம்ரோஸ் ஃபெர்னெடிஸ் என்ற அழகான துணிச்சலான பன்னிரண்டு வயது சிறுமி வாழ்ந்து வந்தாள். அவள் நீண்ட பொன்னிற கூந்தலும், பெரிய நீள நிற கண்களும், இளஞ்சிவப்பு ரோஜா இதழ்கள் போன்ற உதடுகளும் கொண்டிருந்தாள். அழகான தோற்றமும் நல்ல மனமும் கொண்டிருந்த போதிலும், ப்ரிம்ரோஸின் குடும்பம் கடுமையான நிதி சிக்கல்களால் அவதிப்பட்டனர். அவர்களது குடும்பத்தின் நிதி நிலைமை காரணமாக பிரதான நகரமான அஸ்தாரில், அவர்களால் வசிக்க முடியவில்லை. எனவே, அவர்கள் நகர மையத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள வெறிச்சோடிய காட்டில் வாழ வேண்டியிருந்தது. ப்ரிம்ரோஸின் குடிசை, அந்த ஊரிலிருந்து ஒரு மணி நேர பார வண்டி சவாரி தொலைவில் உள்ளது.

    ப்ரிம்ரோஸ் வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பருத்தி ஆடைகளை தைத்தும், கம்பளி சட்டைகளை பின்னியும் பணம் சம்பாதித்தாள். அவளின் மூத்த சகோதரன், ஸ்டான்லி, காட்டில் இருந்து மரங்களை வெட்டி , அஸ்தாரில் உள்ள வணிகர்களுக்கு விற்பனை செய்து வந்தான். பின்னர் ஸ்டான்லி அந்த கனமான மரத்துண்டுகள், தையல் ஆடைகள் மற்றும் கம்பளி சட்டைகள், ஆகிய அனைத்தையும் தன் குடும்பதிற்கு சொந்தமான பழுப்பு நிற பார வண்டியில் நேட் என்கிற வெள்ளை குதிரையின் உதவியுடன் ஏற்றிக் கொண்டு செல்வான்.

    ப்ரிம்ரோஸின் தாய் ஒரு நோயை எதிர்த்து நீண்ட காலம் போராடிக் கொண்டிருந்தார், பின்பு எதிர்பாரா விதமாக ஓரு நாள் காலையில் காலமானார். ப்ரிம்ரோஸ், அவள் தந்தை மற்றும் சகோதரன் ஸ்டான்லி ஆகிய மூவரும் தங்கள் அன்புக்குரிய குடும்ப உறுப்பினரின் இழப்பினால் சில நாட்கள் துக்கத்தில் ஆழ்ந்து இருந்தனர்.

    ஃபெர்னெடிஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பயங்கரமான இழப்புக்குப் பிறகு, ஸ்டான்லி, காடுகளில் நீண்ட நேரம் வேலை செய்தான், ப்ரிம்ரோஸ் தனது வயதான தந்தையை கவனித்துக் கொள்வதோடு, ஒவ்வொரு நாளும் துணிகளையும் தைத்து, வீட்டின் அன்றாட வேலைகளையும் நிர்வகித்து வந்தாள்.

    நாட்கள் கடந்தது, ஒரு நாள் மாலை ப்ரிம்ரோஸ் குடும்பத்திற்கு இரவு உணவு சமைத்துக் கொண்டு இருக்கும் பொழுது அவளுடைய தந்தை திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார், அந்த பக்கவாதம் அவரின் இரண்டு கால்களிலும் கடுமையான முடக்கத்தை ஏற்ப்படுத்தியது. இதனால் ஏறப்பட்ட வலிப்பினால், அவரால் பேசவோ படுக்கையில் இருந்து நகரவோ இயலவில்லை.

    ப்ரிம்ரோஸ் மற்றும் ஸ்டான்லி அவருக்கு இயற்கை மூலிகைகளால் ஆன சில மருந்துகளை வழங்கினர், அது அவர் குரலை மீட்டெடுக்க உதவியது. ஆனால், அவரின் உடல்நிலை தொடர்ந்து குன்றியது.

    ப்ரிம்ரோஸ் நோய்வாய்பட்ட தனது தந்தையை தினமும் கவனித்துக் கொண்டாள், அதே நேரத்தில் ஸ்டான்லி, காட்டில் கடுமையாக உழைத்து, அவர்களது குடும்ப செலவுக்காக பணம் சம்பாதித்தான்.

    சில நாட்களில், அவர்களின் தந்தையின் உடல்நிலை மெல்ல நலம் பெற்றது, ஆனால் அவரது முடக்கப்பட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1