Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oomai Manithargal
Oomai Manithargal
Oomai Manithargal
Ebook125 pages56 minutes

Oomai Manithargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110002964
Oomai Manithargal

Read more from Anuradha Ramanan

Related to Oomai Manithargal

Related ebooks

Reviews for Oomai Manithargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oomai Manithargal - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    ஊமை மனிதர்கள்

    Oomai Manithargal

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    முன்னுரை

    பிரியமுள்ள வாசகர்களே!

    வணக்கம். கொஞ்சம் காதல், கொஞ்சம் உருக்கம், கொஞ்சமே கொஞ்சம் மர்மம் சேர்ந்த நாவல் தான் 'ஊமை மனிதர்கள்.'

    'ஒரு வேளை சோற்றைப் பிடித்துச் சாப்பிட்டால், அடுத்த வேளைக்குக் கரைத்துத்தான் குடிக்க வேண்டும்' என்ற நிலையிலுள்ள குடும்பத்திலிருந்து வந்த மூன்றாவது பெண் வசந்தா; நாலாவது பெண் அமுதா. வசந்தாவின் கணவன் சண்முகம்; அவன் தம்பி கதிர் என்ற கதிரேசன் இத்தனை பேரைக் கொண்ட குடித்தனம். 'பேய்' உருவில் உயிருடன் நடமாடும் அருந்ததி, அவன் கணவன் சுந்தரம், மறைந்த மூத்தாள் அபிராமி பெற்ற குழந்தை பாப்பு, வீட்டின் தரைத்தளத்தில் குடியிருப்பு; அப்பெரிய வீட்டிற்கு சொந்தக்காரர்கள் அவர்கள்.

    ஏற்கனவே ஒருத்தனோட ஓடிப்போய், மூணு மாசம் குடித்தனம் நடத்தின பெண்ணாக இருந்த அபிராமியை, பெரிய வீடு, மெக்கானிக் கடை, ஐந்தாறு ஆட்டோக்கள், ஐம்பது பவுன் நகைகள் சீருடன் ஏற்றுக் கொண்டவன் சுந்தரம், சொந்தக்காரன் என்ற பெயரில்.

    ஒன்றரை வருட வாழ்க்கையுடன் தன் உயிரை மாய்த்துக் கொண்ட அபிராமிக்குப் பின் வந்தவள் தான் 'அருந்ததி'.

    அபிராமியின் மறைவுக்குப் பின் நெஞ்சு நிறைந்த கனவுகளோடு வந்த அருந்ததிக்கு ஆயிரம் ஏமாற்றங்கள். காரணம், சுந்தரத்தின் 'இயலாமை'. அதனால் 'மூத்தாளின்' குழந்தைக்கு எப்போது வசை பாட்டுதான்.

    சுந்தரத்தின் 'இயலாமை'யைப் பயன்படுத்திக் கொண்டு, மேடவாக்கத்திலிருந்து 'சுகத்தை' அனுபவிக்க 'தாய் மாமன்' என்ற போர்வையில் வரும் ஒருவனுடன் அருந்ததி நடத்தும் 'இல்லறம்' ஆம்! சுந்தரம் ஒரு ஊமை மனிதன்!

    மூத்தவள் - எவனுக்கோ பிறந்த குழந்தைக்கு இவனைத் தந்தையாக நினைத்துப் பார்க்கவும் முடியாமல் குழந்தையுடன், சொத்துக்களையும் இவளிடமே விட்டுப் போனாள் அபிராமி... அக்குழந்தைதான் பாப்பு!

    இரண்டாமவளோ - எவனுக்கோ பெற்று, 'அதற்கு நீதான் தந்தை... உனக்குப் பிறகு இந்த வீடும், சொத்தும் இவனுக்குத்தான்' என்று அடாவடியாய் நடந்து கொள்கிறாள் அருந்ததி... அப்பிள்ளைதான் ராசுக்குட்டி!

    'வக்கத்தவன் வீட்டுலப் பொங்கிக் போட்டுக்கிட்டு, ஏதோ ஒரு திக்கத்த பொண்ணுக்கு வளர்ப்புத் தாயா இருந்தே காலத்தைக் கழிச்சிட எவளாலே முடியும்' எனக் கிழவி சுந்தரத்தைக் கேட்டது அருந்ததியின் கோவத்திற்கு ஆதரவைத் திரட்டுகிறது.

    இருப்பினும் தன் பேத்தியைக் கொடுமைப்படுத்திய அருந்ததியை வீட்டை விட்டு விரட்டியதோடு, சுந்தரத்திடமிருந்த சொத்துக்களைப் பிடுங்கிய கிழவி, உண்மையான பாசம் கொண்டாடும் அமுதாவிடம், உண்மையறிந்து பாப்புவை ஒப்படைத்து, 'உரிமைக்காரனிடம் உடைமையைச் சேர்த்த நிம்மதி'யுடன் ஊருக்குத் திரும்புகிறாள்.

    தேசிய ஒருமைப்பாட்டின் அடித்தளமான ஜாதிப் பிரச்சனையில், உண்மைக் காதல் அழிந்து போவதை இக்கதையில் தொட்டுக் காட்டியுள்ளேன்.

    பூம்புகார் பதிப்பகத்தினர் மிக விரும்பி இக்கதையை அழகிய நூல் வடிவமாக்கி உங்கள் முன் வைத்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

    இப்படிக்கு

    அன்புடன்

    அனுராதாரமணன்.

    1

    வீடு பெரிசுதான். இந்தக் காலத்தில் இத்தனை பெரிய வீட்டை ஐயாயிரம் ரூபாய் வாடகைக்கு எந்தப் பைத்தியக்காரனும் தரமாட்டான்...

    கதிர், ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்...

    தெருவே தெரிந்தது... வாசற்பக்கம் அடர்ந்து வளர்ந்திருந்த மாமரம், ஜன்னலின் விளிம்பை ஒரு பக்கம் தொட்டுக் கொண்டிருந்தது... சின்னதும், பெரிசுமாய் இப்பொழுதே காய்ப்புத் தொடங்கிவிட்டது...

    கைக்குப் பக்கத்துல... எட்டிப் பறிச்சிடலாம் போல இருக்கு இல்லே...

    கதிரின் முதுகுக்குப் பின்னால், கிச்சு கிச்சு மூட்டுகிற குரலில்...

    திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை...

    அமுதாதான்...

    மற்ற நேரங்களில் எப்படியோ... கதிரிடம் பேசும் போது மட்டும், அமுதாவின் குரலில் தனிப்பட்ட கிளர்ச்சி வந்துவிடும்...

    கதிருக்கும் அது தெரியும். அதனாலேயே அவன், திரும்பிப் பார்ப்பதைத் தவிர்க்கிறான்...

    அது மட்டுமில்லை.

    இப்பொழுது அவன் திரும்பினால், நிச்சயமாய் அமுதாவுடன் எதிரும் புதிருமாய் மோதிக்கொள்ள வேண்டியதுதான்.

    அதற்கு வசதியாகத்தானே அவள் நின்று கொண் டிருக்கிறாள்...

    அவன், ஜன்னல் கம்பியில் முகவாயைப் பதித்துக் கொண்டான்.

    உள்ளே, கதிரின் அண்ணி வசந்தா, தொண்டை கிழியக் கத்திக்கொண்டிருந்தாள்.

    மூணு பெட்ரூம்... ரெண்டு ஹால்... ஒரு பூஜையறை... ரெண்டு வெராந்தா... தவிர ரூமுக்கு ரூமு பால்கனி... இத்தனையையும் சேர்த்து ஒரு மனுஷன், ஐயாயிரத்துக்கு வாடகைக்கு விடறான்னா, ஏன் எதுக் குன்னு ஒரு வார்த்தை யாரையாச்சும் விசாரிச்சீங்களா...

    .......

    அந்தப் பக்கம் தேனாம்பேட்டை; இந்தப் பக்கம் ஆழ்வார் பேட்டை... ஆபீசுக்கு எனக்கும் தம்பிக்கும் வசதியா இருக்கும்... கல்யாணக் கச்சேரிக்கெல்லாம் போயிட்டு வர இதைவிட சென்டர் வேற கிடைக்காதுன்னு சொல்லி

    இப்ப என்ன குறைஞ்சு போச்சுங்கறே வசு... நிசம்மாவே சொல்லு. நாமும் பத்து வருஷமா, பதினஞ்சு வீட்டுல குடியிருந்துட்டோமே... இதைவிட ஒசத்தியா எந்த வீடாவது இருந்துச்சா…

    - இது, கதிரின் அண்ணன் கணேசன்.

    அதுக்காக... பேய் உலாவற வீடுதான் கிடைச்சுதா? புள்ள குட்டியோட நான் நல்லாயிருக்க வேணாமா? வீட்டுல கன்னிகழியாத என் தங்கச்சியும், முப்பத்தியஞ்சு வயசுக்கும் கல்யாணமாகாத உங்க தம்பியும் இருக்கறது மறந்து போச்சா... இப்பத்தான் வேலைக்காரி சொல்றா... வீட்டுக்காரனோட முதல் சம்சாரம் பத்து வருசத்துக்கு முன்னாலே தூக்கு போட்டுட்டுச் செத்துப் போயிட்டாளாம்... இப்ப இருக்கறது ரெண்டாவது சம்சாரமாம். இங்கேதான் உசிரை விட்டிருக்கா... எங்கே தொங்கினாளோ... ஆவியா நடமாடறான்னா, எந்த இளிச்சவாயன் வாடகைக்கு வருவான்...

    ஷ்... கத்தாதே வசு... பேயும், பிசாசும் உன்னை என்ன பண்ணும்...

    என்னது?

    அவசரப்படாதே. முழுசாக் கேளு. பேய், பிசாசு எல்லாமே சக்தி வாய்ந்த அம்மன் கிட்ட, தங்களோட வேலையக் காட்டாது. உன்னைப் பார்த்தாலே கற்பகாம்பிகை மாதிரி இருக்கே... எது வந்தாலும் கையெடுத்துக் கும்பிட்டுட்டு ஒதுங்கிப் போயுடும்மா...

    களுக்!!

    அமுதாதான்... வாயைப் பொத்திக்கொண்டு நகர்ந்தாள். அப்படி அவள் நகரும்போது, அவளது புடவையின் விசிறல், கதிரின் புறங்கழுத்தை மிக நாசூக்காக, பட்டும் படாமலுமாய்த் தொட்டுச் சென்றது...

    அவள் நகர்ந்துவிட்டாள் என்பது உறுதியான பின்தான் திரும்பினான் கதிர்.

    வசந்தா, கணவனின் சமாதானத்தில் கொஞ்சம் வேகம் தணிந்தாலும், பெருமூச்செறிந்தபடி பேச்சைத் தொடர்ந்தாள்.

    "என்னவோ... எத்தனையோ வீட்டுல இருந்தாச்சு. ஒவ்வொரு வீட்டுலேயும் பால்

    Enjoying the preview?
    Page 1 of 1