Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadavul Sinthum Kaneer
Kadavul Sinthum Kaneer
Kadavul Sinthum Kaneer
Ebook102 pages33 minutes

Kadavul Sinthum Kaneer

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இங்கு ஒவ்வொரு மனிதரும் மறைமுகமாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறோம்.

அந்தக் காளமே இந்தக் 'கடவுள் சிந்தும் கண்ணீர் துளிகள்' பல மனிதர்களுக்குள் விம்மி கொண்டிருக்கும் ரத்தத்தின் வாசம் இதில் எழுதப்பட்டிருக்கிறது.

Languageதமிழ்
PublisherUkiyoto
Release dateJul 12, 2021
Kadavul Sinthum Kaneer

Related to Kadavul Sinthum Kaneer

Related ebooks

Related categories

Reviews for Kadavul Sinthum Kaneer

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadavul Sinthum Kaneer - Raveendar

    கடவுள் சிந்தும் கண்ணீர் துளிகள்

    மோ. ரவிந்தர் 

    Ukiyoto Publishing

    அனைத்து உலகளாவிய வெளியீட்டு உரிமைகளும்

    Ukiyoto Publishing

    சேர்ந்தது

    Published in 2021

    Content Copyright © Raveendar

    ISBN 978-93-5490-083-9

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

    இந்த வெளியீட்டின் எந்த பகுதியும் வெளியீட்டாளரின் முன் அனுமதியின்றி, எந்த வகையிலும், மின்னணு, இயந்திர, புகைப்பட நகல், பதிவு செய்தல் அல்லது வேறு எந்த வகையிலும், எந்த வகையிலும் மறுஉருவாக்கம், பரிமாற்றம் அல்லது மீட்டெடுப்பு முறையில் சேமிக்கப்படக்கூடாது.

    ஆசிரியரின் தார்மீக உரிமைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    இந்த புத்தகத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள்நிகழ்ச்சிகள், இடங்கள் அனைத்தும் ஆசிரியரின் கற்பனை அல்லது கற்பனைகாக உருவாக்கப்பட்டது, யார் மனதையும் புண்படுத்துவதாக எழுதப்படவில்லை. உண்மையான நபர்கள், வாழும் அல்லது இறந்தவர்கள் அல்லது உண்மையான நிகழ்வுகளுடன் உள்ள எந்த ஒற்றுமையும் முற்றிலும் தற்செயலானது.

    இந்த புத்தகம் வர்த்தகத்தின் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, வெளியீட்டாளரின் முன் அனுமதியின்றி, கடன் வழங்கவோமறுவிற்பனை செய்யவோ, பணியமர்த்தப்படவோ அல்லது வேறுவிதமாக புழக்கத்தில் விடவோ கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு விற்கப்படுகிறது.

    இந்த படைப்பு Pachyderm Tales உடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது

    www.pachydermtales.com

    முன்னுரை

    இந்தப் பிரபஞ்சம் தோன்றிய காலம் முதற்கொண்டு இன்றுவரை எத்தனையோ உயிரினங்கள் இங்கு வாழ்ந்து அழிந்து இருக்கின்றது. இன்னும் எத்தனையோ உயிரினங்கள் தோன்ற மறைய உள்ளது.

    ஆனால், அன்று முதல் இன்றுவரை அவர்களுடைய கனவுகள்ஆசை வாழ்க்கைக்கான பயணம் நிறைவேறி இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்?.

    ஏன் ஒருவராலும் அவர்களுடைய இலக்கை முழுமையாக அடைய முடியவில்லை என்ற தேடலில் தான் எனக்கு இந்த "கடவுள் சிந்தும் கண்ணீர்த் துளிகள்" சிறுகதைகள் எனக்குத் தோன்றியது.

    அந்தத் தேடலில் எனக்கு விடை கிடைத்ததா என்றால் கிடைக்கவில்லை என்றுதான் நான் இங்குச் சொல்ல வேண்டும், காரணம், ஒருவருடைய கனவை இன்னொருவர் மதிக்கப்படவில்லை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் இங்கு நான், வேறென்ன.

    எனது எந்த "கடவுள் சிந்தும் கண்ணீர்த் துளிகள்" சிறுகதைகளை இளகிய மனம் கொண்ட மனிதர்கள் படிக்க வேண்டாம் என்று மிகத் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், இந்தக் "கடவுள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் சிறுகதைத் தொகுப்பில். பல கதாபாத்திரங்களை மனமில்லாமல் கொன்று கொலை செய்திருக்கிறேன் இந்தச் சிறுகதைத் தொகுப்பிற்கு அது தேவை என்பதால்.

    பணம் பொருள் மட்டுமே ஒரு மனிதனின் தேவை என்றாகிவிடாது, அதையும் தாண்டி அவனுடைய கனவு ஆசை கற்பனை என்று பல இருக்கிறது.

    அவர்களுடைய மனங்களை இங்கு மனவருத்தத்தோடு பதிவு செய்து இருக்கிறேன். முடிந்தால் இது போன்ற மனிதர்களுக்குக் கை கொடுத்து அவர்களைத் தூக்கி விடுங்கள். இல்லையேல் உங்கள் பாத எதுவோ அதில் பயப்படுங்கள். அவர்களுடைய ஆசைகளைக் கனவுகளை ஏளனமாகப் பேசி விடாதீர்கள். உங்கள் ஒருவரின் சொல்லில் அவர்களுடைய பாதைகள் பயணங்கள் நிச்சயமாகத் தடைபடுகிறது.

    என்னைப் பொறுத்தவரையில் கடவுள் கருப்பொருளை அல்லது காட்சிப்பொருளாக என்பது விவாதங்கள் இங்கு ஒருபுறம் இருந்தாலும், உயிருள்ள ஒரு மனிதனை இங்குக் கடவுள். அவன் சொல் வழிகாட்டுதல் எப்படி இருக்கிறதோ அவன் பாதையில் வரும் இன்னொருவரின் பாதைகள் பயணங்கள் வழிகள் மாற்றப்படுகிறது என்பதை இந்தப் பதிவு செய்து கொள்கிறேன்.

    உளி வடிக்கும் சிலைதான் அழகு பெறுகிறது.

    நீங்களும், உங்கள் இதயத்தின் வலிகளை மறைத்துக் கொள்ளுங்கள், உங்கள் பாதையில் அதை மறைப்பதால் அழகு பெறுவீர்கள்.

    என் சாதனை என்னும் பயணத்தில் உடன் வரும் எனது அனைத்து நண்பர்களுக்கும் இங்கனம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    - என்றும் அன்புடன்

    மோ.ரவிந்தர்

    மீலாத் துயரத்தையும் மீட்டெடுத்து நான் வருவேன்,

    அன்பே துணையாக நீ கிடைத்தால் !

    திருடன்

    இரவு நேரம், சுமார் 11 மணி இருக்கும், கார்த்திகை மாதம் என்பதால் அந்த வானத்தில் இருக்கும் வெண்மதி வெளியே வரலாமா, வேண்டாமா என்று கார்மேகக் கூட்டத்துக்கு இடையில் ஒளிந்து கொண்டு யோசித்துக் கொண்டிருந்தது.

    சற்று நேரத்திற்கு முன்பாகத் தான் சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள பெரும் இடங்களிலும், மழை பெய்து ஓய்ந்திருக்க வேண்டும், அந்த இடத்தில் சாலை முழுவதும் கருப்பு வைரம் சிந்தி சிதறுவதைப் போல், அங்கிருந்த மின் கம்பத்தின் விளக்குகளின் வெளிச்சத்தில் அங்கும் இங்குமாக மின்னிக் கொண்டிருந்தது, சாலை

    Enjoying the preview?
    Page 1 of 1