Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Desamthaan Perithu!
Desamthaan Perithu!
Desamthaan Perithu!
Ebook223 pages1 hour

Desamthaan Perithu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் தமிழில் எழுதிய முதல் சிறுகதை தொடங்கி, இலக்கியபீடம், அமுதசுரபி, கலைமகள், லேடீஸ் ஸ்பெஷல், மங்கையர் மலர் மின்னிதழ், குவிகம் மின்னிதழ் , பூபாளம் ஆகிய தமிழ் இதழ்களில் பிரசுரமான பரிசு பெற்ற சிறுகதைகள் மற்றும் என் மனதிற்கு நெருக்கமான கதைகளை இத்தொகுப்பில் கொடுத்துள்ளேன்.

Languageதமிழ்
Release dateMay 18, 2024
ISBN6580179311131
Desamthaan Perithu!

Related to Desamthaan Perithu!

Related ebooks

Reviews for Desamthaan Perithu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Desamthaan Perithu! - Manjula Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தேசம்தான் பெரிது!

    (சிறுகதை தொகுப்பு)

    Desamthaan Perithu!

    (Sirukadhai Thoguppu)

    Author:

    மஞ்சுளா சுவாமிநாதன்

    Manjula Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/manjula-swaminathan

    பொருளடக்கம்

    என்னுரை

    அணிந்துரை

    அணிந்துரை

    1. தேசம்தான் பெரிது!

    2. வெள்ளை புடவையும் தையல் மிஷினும்

    3. கருப்பு வெள்ளை

    4. மகிழுந்து

    5. நேரம்

    6. தன யோக ஜாதகி

    7. மன்னிப்பு கேட்டால் போதுமா?

    8. பெருமாள் புண்ணியத்தில்

    9. இன்னாருடைய மனைவி

    10. கடைசி அழைப்பு

    11. மறுபடியும்

    12. அமலா புடவை

    என்னுரை

    தமிழ் இலக்கியத்தின் பல்வேறு ஜாம்பவான்களின் கதைகளைப் படித்து வளர்ந்த எனக்கு, என்னுடைய சிறுகதை தொகுப்பை பிரசுரம் செய்கிறேன் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் என் குடும்பத்தின் முதல் தலைமுறை எழுத்தாளர். எந்த ஒரு பின்புலமும் இன்றி, எந்த ஒரு ஆசிரியரின் அறிமுகமும் இல்லாமல் என் எழுத்தை வைத்தே தமிழ் இதழ்களில் சுமார் இருபது கதைகள் மற்றும் கட்டுரைகள் பிரசுரம் செய்துவிட்டேன். எனது சிறுகதைகளில் இரண்டு சிறுகதைகளுக்கு போட்டிகளில் முதல் பரிசு கிடைத்துள்ளது என்பதால் என் மகிழ்ச்சி இரட்டிப்பு அடைந்துள்ளது.

    கொரோனா ஊரடங்கின்போது மீண்டும் புத்தகங்கள் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் தானாக பிறந்தது. நான் எழுதிய முதல் சிறுகதையான ‘நேரம்’, நான் மங்கையர் மலர் இதழுக்கு அனுப்பி ஒரு வாரத்தில், டிசம்பர் 2021ல் பிரசுரம் ஆனது. நான் அதனை பார்த்தது ஒரு மாதம் கழித்து. அதன் பிறகு தொடர்ந்து தமிழில் பல்வேறு இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறேன். குறிப்பாக சிறுகதை போட்டிகளில் தவறாமல் பங்கேற்று வருகிறேன்.

    இந்தத் தொகுப்பில் எனது பரிசு பெற்ற சிறுகதைகள் மற்றும் என் மனதிற்கு நெருக்கமான என்னுடைய வேறு சில சிறுகதைகளையும் சேர்த்து பதினோரு சிறுகதைகளையும் ஒரு குறுநாவலையும் தொகுத்துள்ளேன். நாவல்கள் படிப்பது எனக்கு பிடிக்கும், ஆனால், பெரும்பாலான நாவல்கள் நடுவில் தொய்வு ஏற்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதேபோல ஒரு முழுநீள நாவலை எழுதி முடிப்பதே ஒரு எழுத்தாளருக்கு பெரிய சவால்தான். ஆகையால், என் முதல் சிறுகதை துவங்கி அதன் பரிணாமமாக நான் எழுதிய என் முதல் குறுநாவல் ‘அமலா புடவையையும்’ இந்தத் தொகுப்போடு இணைத்துள்ளேன். என் முதல் நாவலுக்கு இக்கதை ஒரு முன்னோட்டம் என்று நம்புகிறேன்.

    என் தொகுப்பின் தலைப்புக் கதை ‘தேசம்தான் பெரிது!’ முதல் பரிசு பெற்றுவிட்டது என்பதை தெரிவிக்க இலக்கியபீடம் ஆசிரியர் திரு. கண்ணன் விக்கிரமன் அவர்கள் அழைத்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. போட்டிக்கு வந்த ஆயிரம் கதைகளில் எனது கதைக்கு முதல் பரிசு கிடைத்தது என்ற செய்தி என்னை பெரிதும் ஊக்கப்படுத்தியது. அக்கதையின மூலக்கரு ‘நம் உயிரைக் காட்டிலும் நமக்கு நம் தேசம்தான் பெரிதாக இருக்க வேண்டும்’ என்பதுதான். அதனை இந்திய வரலாற்றில் நடந்த சில உண்மை சம்பவங்களின் பின்னணியில் அமைத்திருந்தேன். கதைகள் எழுதுவதாலும் படிப்பதாலும் என்ன பயன் என்று அவ்வப்போது எனக்கு தோன்றியதுண்டு, ஆனால், இது போன்ற சிந்தனைகளை வாசகர்கள் மனதில் ஆழமாக கதைகளால் விதைக்க முடியும் என்று அந்த பரிசு எனக்கு நினைவு படுத்தியது.

    நீ என்ன எழுதற? எழுத்தாளர் ஜெயமோகனைப் போல உன்னால் எழுத முடியுமா? என்று ஒருமுறை என் கணவர் விளையாட்டாக என்னிடம் கேட்டார். அந்த கேள்விக்கு என்னிடம் அப்போது விடையில்லை. ‘கடைசி அழைப்பு’ என்ற என் கதையை செப்டம்பர் 2023ல் இலக்கிய சிந்தனை தேர்வுக் கதைகளில் ஒன்றாக நடுவர் தேர்ந்தெடுத்திருந்தார். அவர் தேர்வு செய்திருந்த முதல் பத்து கதைகளில் எழுத்தாளர் ஜெயமோகனின் கதையும் இருந்தது. இருவருக்கும் அந்த மாதம் சிறந்த கதைக்கான பரிசு கிடைக்கவில்லை, இருந்தும் அந்த சம்பவம் என் எழுத்தின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கையை அளித்தது.

    எழுத்துலகத்தை பொறுத்த வரை நம் சிறந்த படைப்பை நாம் தொடர்ந்து அளித்து வந்தால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

    இத்தொகுப்பின் அணிந்துரையை இருவரிடம் கேட்டுப் பெற்றேன். ஒருவர், மூத்த எழுத்தாளர் திருமதி. ரேவதி பாலு அவர்கள். மற்றொருவர், எனது பிழைகளை சரிபார்ப்பவரும், என் விமர்சகருமான என் கணவர் திரு. சுவாமிநாதன். இவர்கள் இருவரும் தரும் ஊக்கத்தால்தான் நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த புத்தகத்தைப் பற்றிய உங்கள் மேலான கருத்துகளை juliemanju2002@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும். ஒரு எழுத்தாளருக்கு அவர்கள் வாசகர்களின் கடிதங்களை விட சிறந்த ஊக்கம் இருக்க முடியாது.

    அணிந்துரை

    இந்த தொகுப்பை வெளியிடும் மஞ்சுளா சுவாமிநாதன் வெகு வேகமாக வளர்ந்து வரும் ஒரு இளம் எழுத்தாளர். ‘அட! நான் பார்த்துக் கொண்டே இருக்கும்போதே இவ்வளவு உயரமாக வளர்ந்து விட்டாயே!’ என்று நம் குழந்தைகளைப் பார்த்து வியப்பும் பெருமிதமும் அடைவோம் அல்லவா? அது போல இவருடைய இந்த வளர்ச்சி என் கண் முன்னே நிகழ்கிறது என்பதில் எனக்கு ஒரு தனி மகிழ்ச்சியும் பெருமிதமும். இவர் ‘அடையாறு டைம்ஸ்’ என்னும் ஆங்கில வாரப்பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலை பார்த்த காலத்திலிருந்தே பழக்கம். பிறகு பாரம்பரியமிக்க மங்கையர்மலர் குழுவில் பணியாற்றினார். ஆங்கிலம், தமிழ் இரண்டிலுமே சரளமாக எழுதக்கூடிய இவர் எண்ணற்ற கட்டுரைகள், நேர்காணல்கள் எழுதியுள்ளார்.

    ஒரு இரண்டு வருடங்களாகத் தான் சிறுகதைகள் எழுதி வருகிறார். யாருக்குமே தனக்குள்ளே ஒரு எழுத்தாளர் ஒளிந்துள்ளார் என்பதை கண்டுபிடிக்கவே வருடங்கள் ஆகி விடும். இது எப்படியென்றால் முதலில் நிறைய படிக்க வேண்டும். படித்த விஷயங்களின் தாக்கத்தால் நமக்குள் ஒரு உந்துதல் ஏற்பட்டு, ‘அட! நம்மால கூட இது மாதிரி எழுத முடியும் போலிருக்கிறதே!’ என்னும் எண்ணம் எழும். எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சொல்வார்கள். ‘கதை எழுதுவதில் மூன்று விதமிருக்கிறது. ஒன்று நம் கண்ணால் பார்த்த நிகழ்வை எழுதுவது, இரண்டாவது ஒரு நிகழ்வை மற்றொருவர் விவரிப்பதை கேட்டு அதிலிருந்து எழும் கரு, மூன்றாவது முற்றிலும் நம் கற்பனையை கைக்கொண்டு நாமாகவே ஒன்றைப் பற்றி எழுதுவது.’ என்று.

    ஆனால் எழுத ஆரம்பித்த உடனே சிறந்த எழுத்தாளர் ஆகிவிடுவார்கள் என்றெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஒரு உண்மையான நிகழ்வை தனது கற்பனைத் திறன் கலந்து ஒரு சிறந்த புனைக் கதையாக எழுதுவது என்பது எல்லோருக்கும் கைவரும் என்று சொல்லவும் முடியாது.

    ஆனால், மஞ்சுளாவிற்கு இது மிக இயல்பாக கை வந்திருக்கிறது. அத்துடன் அவருடைய மடை திறந்த வெள்ளம் போன்ற, ஆற்றொழுக்கைப் போல தெளிந்த நீரோட்டமாக ஓடி வரும் மிக மிக இயல்பான, ஜாலியான எழுத்தும் அவருடைய சிறுகதைகளுக்கு சிறப்பு சேர்க்கிறது.

    ‘தேசம்தான் பெரிது’ என்னும் தலைப்பில் அவர் எழுதி இலக்கியபீடம் இதழில் முதல் பரிசு பெற்ற சிறுகதை தேசத்தின் மீது அவருக்கு இருக்கும் நேசத்தை அழகாக விளக்குகிறது. ‘வெள்ளைப் புடவையும் தையல் மிஷினும்’ என்ற மற்றொரு முதல் பரிசு பெற்ற சிறுகதை, விதவை என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் குடும்பத்தினர் மீது அவருக்கு ஏற்படும் கோபத்தையும், அதற்கு நேர்மாறாக தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் விதத்திலும், இந்த சமுதாயத்தின் மீதும் அடுத்த தலைமுறைப் பெண்கள் மீதும் அவருக்கு இருக்கும் அக்கறை வெளிப்படுகிறது. ‘கறுப்பு வெள்ளை’ என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் சிறுகதை பொதுவாகவே மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்கும் நினைப்பையும் அதனால் நம் மனப்பான்மையில் ஏற்படும் மாற்றங்களையும் சுட்டிக் காட்டுகிறது. ‘மகிழுந்து’ ஒரு மகிழ்வான சிறுகதை. எப்படி குடும்பத்தில் ஒரு தாத்தா பேரக்குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுபவராக உள்ளார் என்பதைக் காட்டும் மிக எளிமையான இனிமையான கதை.

    இந்தத் தலைமுறையினர் எல்லோரும் நிறைய சம்பாதிக்கிறார்கள். எல்லோராலும் நினைத்ததை வாங்க முடிகிறது, நினைத்தபடி இருக்க முடிகிறது. ஆனால் தங்கள் நேரத்தை நமக்காக மட்டுமே செலவழித்து நம் முன்னேற்றத்தை சாத்தியமாக்கிய நம் பெற்றோர்களுக்கு நம்மால் எந்த விதத்தில் கைம்மாறு செய்ய முடியும்? அவர்களுக்கு தேவை இருக்கும்போது அவர்களுக்காக நம் நேரத்தை செலவிட வேண்டும் அல்லவா? ‘நேரம்’ சிறுகதை இந்த உயரிய கருத்தை மிக அழகாக விளக்குகிறது.

    ‘தன யோக ஜாதகி’ குடும்பத்தில் தான் தான் எல்லாம் என்று தானே தன்னைப் பற்றி பெருமைப்பட்டு தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு இளம்பெண்ணைப் பற்றி, ஒரு அட்டகாசமான நடையில் அமைந்த அமர்க்களமான சிறுகதை. இவர் வைக்கும் தலைப்புகளும் அசத்தலாக இருக்கும் என்பதற்கு உதாரணம் இந்த சிறுகதை. ‘மன்னிப்பு கேட்டால் போதுமா?’ ஒரு நெகிழ்வான சிறுகதை.

    ‘பெருமாள் புண்ணியத்தில்’, தன் தகப்பனாருக்குப் பிறகு தான் அந்தக் கோவில் அர்ச்சகர் ஆக விரும்பாத மகனின் கதை. மற்றவர்கள் பார்க்காத ஒரு கோணத்தில் ஒரு விஷயத்தை யோசித்து அதே சமயத்தில் எல்லோரும் கண்டிப்பாக ஒத்துக் கொள்ளும் விதத்தில் எழுதப்பட்ட அற்புதமான கதை. ‘இன்னாருடைய மனைவி’ கலா போல பல பெண்கள் இருப்பார்கள், அவர்களுக்கென்று ஒரு தனியான அடையாளம் இல்லாமல். இந்த நிலைமையை வெற்றிகரமாக முறியடித்து தனக்கென்று ஒரு பிரத்யேக அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு அதில் வெற்றிக் கொடி நாட்டும் கலா என்னும் பெண்ணின் சுவாரசியமான கதை.

    எல்லா விவாகரத்துகளும் அதற்குப் பிற்பாடும் கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் வெறுப்பதாக அமைவதில்லை என்பதை விளக்கும் விதமாக அமைந்துள்ளது ‘கடைசி அழைப்பு’ சிறுகதை. விவாகரத்து செய்து விட்ட போதிலும் கணவன் மேல் வெறுப்பில்லாத மனைவி அவன் மறுமணம்

    Enjoying the preview?
    Page 1 of 1