Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaaviyam Kattum Kaarigaikal
Kaaviyam Kattum Kaarigaikal
Kaaviyam Kattum Kaarigaikal
Ebook219 pages1 hour

Kaaviyam Kattum Kaarigaikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இலக்கியம், இதிகாசம், காப்பியங்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதில் அடிப்படையாக இருப்பது பெண்களை, பெண்களுக்காக, பெண்களை காப்பாற்ற, பெண்களின் பெருமையை உயர்த்திப் பிடிக்கவே அந்தக் காவியங்கள் உண்டாகின. மேலும் ஐம்பெரும் காப்பியங்கள் நம் தமிழர் வாழ்வின் பண்பாடு, கலாசாரம், சமூக நிலை ,அரசாள்பவர்களின், நேர்மை, நியாயம், திறமைகளைப் பற்றியும், அந்தக் கால சமூக சூழல்களையும் விளக்கிப் பேசுகிறது. ஆணுக்கு நிகராக சம உரிமையும், திறமையும் பெற்றிருந்த பெண்கள் அரசியலிலும் மறைமுகமாக ஈடுபட்டார்கள். தன் கணவன் கள்வன் அல்ல என்று நிரூபித்த கண்ணகி, பசிப்பிணிப் போக்கிய மணிமேகலை, சீவகனுக்கு துணையாக நின்ற பெண்கள் , அநியாயம் செய்தவனை பழிவாங்கிய வளையாபதி, குண்டலகேசி, இவர்கள் சமண மதத்தையும் பரப்பினார்கள். அந்தக் காலகட்டங்களில் தமிழகத்தில் பரவி இருந்த சமண பௌத்த சமயங்களின் பெருமைகளையும் இந்த நூல்கள் விளக்கமாக எடுத்துரைக்கிறது. அதை பற்றிய சிறு சிறு கட்டுரைகளே காவியம் காட்டும் காரிகைகள் என்ற புத்தகம்.

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580101011118
Kaaviyam Kattum Kaarigaikal

Read more from Ga Prabha

Related to Kaaviyam Kattum Kaarigaikal

Related ebooks

Reviews for Kaaviyam Kattum Kaarigaikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaaviyam Kattum Kaarigaikal - GA Prabha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காவியம் காட்டும் காரிகைகள்

    Kaaviyam Kattum Kaarigaikal

    Author:

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    பொருளடக்கம்

    முன்னுரை

    காவியம் காட்டும் காரிகைகள்

    சிலப்பதிகாரம்

    மதுராபுரித் தெய்வம்.

    தேவந்தி

    கவுந்தியடிகள்.

    மாதரி

    கோப்பெருந்தேவி

    வேண்மாள்

    கண்ணகித் தெய்வம்.

    மணிமேகலை

    சம்பாபதித் தெய்வம்

    சித்திராபதி

    வயந்தமாலை

    சுதாமதி

    மணிமேகலா தெய்வம்

    தீவு திலகை

    காயசண்டிகை

    ஆதிரை

    கந்திற் பாவை.

    அரசமாதேவி

    சீவக சிந்தாமணி

    (சுநந்தை)

    காந்தருவதத்தை

    குணமாலை

    பதுமையார்

    கேமசரி

    கனக மாலை.

    சுரமஞ்சரி

    இலக்கணை

    சரோஜகமலம்

    வளையாபதி

    மகாகாளி

    குண்டலகேசி

    பத்திரை

    குண்டலகேசி

    முன்னுரை

    இனிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்.

    இலக்கியங்கள், இதிகாசங்கள், புராணங்கள் இவற்றுடன், காப்பியங்களும் படிக்கப் படிக்க சிலிர்ப்பூட்டுப்வை. எத்தனை முறை படித்தாலும் சலிக்காது. கண்ணகியின் கொந்தளிப்பு, நியாயம் தவறி விட்டான் மன்னன் என்றதும் சிலிர்த்து எழும் அவளின் கோபம், ஊழ்வினை வந்து உறுத்தூட்டும் என்ற வாழ்வியல் நம்பிக்கை நிறைந்த சிலப்பதிகாரம், அமுதசுரபி மூலம் பசிப்பிணி நீக்கிய மணிமேகலை, துணிவும் தைரியமும் நிறைந்த பெண்களாய் நின்று அநியாயத்தை அழித்து, நீதியை நிலைநாட்ட, சீவகனுக்கு துணை நின்ற பெண்களைப் பற்றிய சீவக சிந்தாமணி, சமண மதத்தைப் பரப்பிய குண்டலகேசி, வளையாபதி காப்பியங்களை, பள்ளிகளில் படித்தது மறந்து போயிருக்குமா?

    காப்பியங்கள் அனைத்தும் பெண்கள் மூலமாக அறத்தைப் பற்றிப் பேசுகின்றன. அவர்களின் துணிவும், வீரமும் இன்று கற்பனை செய்ய முடியாதவை. ஆச்சர்யமூட்டுபவை. எனவேதான் ஐம்பெரும் காப்பியங்களில் உள்ள பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதினேன். அடித்தளம் மீறாமல், அந்தச் சூழ்நிலையில் அவர்கள் என்ன பேசியிருப்பார்கள், எப்படி நடந்திருப்பார்கள் என்பதை காப்பியத்தில் உள்ளதை வைத்துக் கற்பனை செய்து எழுதினேன்.

    இதற்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது.

    தினமலர் பெண்கள் மலரில் இருபத்தி ஐந்து வாரங்கள் தொடராக வந்தது. இதை அழகாக வெளியிட்டு, அற்புதமான படங்களுடன் பிரம்மாதப் படுத்திய, தினமலர் நிர்வாகத்திற்கும், அதன் ஆசிரியர் அவ்ர்களுக்கும் என் மகிழ்வான நன்றிகள்.

    வழக்கம்போல் புஸ்தகா இதை அழகான அச்சுப்பதிப்பாக வெளியிடுகிறது. வழக்கம்போல் வாசகர்களும் இதை வாங்கிப்படித்து, உற்சாகப்படுத்த வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

    எழுத்து ஒரு அற்புதமான வரம். இவர் மூலம் இதை எழுத வேண்டும் என்று இறைவன்தான் தீர்மானிக்கிறான். எந்த ஒன்றையும் நாம் தீர்மானிப்பதில்லை என்பதே உண்மை. இது இந்தக் காப்பியங்களைப் படிக்கும்போது உங்களுக்குப் புரியும்.

    புரிந்து படித்தால் இது இன்னும் சுவாரஸ்யமாகும்.

    இந்த நேரத்தில் என் தமிழ் ஆசிரியர்களை நினைக்கிறேன். கணிதப் பட்டதாரியான எனக்குத் தமிழின் மேல் ஆர்வம் ஏற்படக் காரணம் அவர்கள்தான். பாட புத்தகப் பகுதிகளைத் தாண்டி, அதனுடன் தொடர்புடைய மற்ற விஷயங்களைக் கூறி அனைத்தையும் தேடித் படிக்க வைத்தார்கள். அப்படி படித்தவைதான் சிந்தனையில் ஊறி இன்று அச்சுக்களில் வெளி வந்திருக்கிறது.

    அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். என் தமிழாசிரியர்கள் அனைவருக்கும் இந்நூல் சமர்ப்பணம்.

    நன்றி.

    அன்புடன்,

    ஜி ஏ பிரபா.

    மொபைல்... 94865 72227

    காவியம் காட்டும் காரிகைகள்

    ஒரு காப்பியம் என்பது தனி ஒருவனின் வரலாற்றைக் கூறுவது மட்டும் இல்லாமல் அவன் வாழ்ந்த காலத்து சமுதாயத்தின் வாழ்க்கை முறைகள், நெறிகளைச் சொல்லிச் செல்லும் ஒப்பற்ற காவியம். உயர்ந்த குறிக்கோளைக் கொண்ட தலைவனுடன் இணைந்து காப்பியத்தை நடத்திச் செல்லும் துணைப் பாத்திரங்கள் மூலம் வாழ்வியல் உபதேசத்தை, வாழும் முறையை நமக்கு விளக்குகிறார் காப்பியத்தின் ஆசிரியர்.

    ஒரு காப்பியம் என்பது அறம்,பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு அறங்களையும் கூறுவதாலேயே காப்பியம் என்று பெயர் பெறுகிறது.அந்த அறங்களை அடைய முயலும் தலைவன், தலைவிக்கு உதவியாக இருப்பவர்களே துணைப் பாத்திரங்கள். பொதுவில் அவர்கள் மனசாட்சியாக நின்று பேசுகிறார்கள். இது நல்லது, இது கெட்டது என்று நமக்கு எடுத்துக் கூறுகிறார்கள். அப்படி ஐம்பெரும் காப்பியத்தில் நின்று நம்மையும் காப்பியத்துடன் அழைத்துச் செல்பவர்களைப் பற்றிய கட்டுரையே காவியம் காட்டும் காரிகைகள்.

    சிலப்பதிகாரம்

    unnamed (1).png

    காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம். இயல்,இசை நாடகம் என்று முத்தமிழும் இணைந்து, அரசியலில் நீதி, ஊழ் வினை, பத்தினிப் பெண்ணின் சாபம் என்பதுடன், அன்றைய கால சமுக நிலை, மதம், உணர்வுகள், மனசாட்சி என்று சகல விஷயங்களையும் விளக்கமாகப் பேசுகிறது சிலப்பதிகாரம்.

    இதில் வரும் துணைப் பாத்திரங்கள் கண்ணகி, கோவலன் வாழ்க்கை மாற்றத்திற்கு காரணமான ஊழ்வினையை அறிந்தவர்கள், விதி நடத்திச் சென்ற பாதையில் அறியாமலேயே சென்றவர்கள்.அவர்கள் முலமே முன்வினைப் பற்றியும், கண்ணகி, கோவலன் முழு வாழ்க்கையும் நமக்குத் தெரிகிறது.இலக்கிய வானில் முழு நிலவு சிலப்பதிகாரம்.

    (ஒன்று )

    மதுராபுரித் தெய்வம்.

    தாழ்ந்த சடையும், இளம்பருதி போன்ற நெற்றியையும்

    உடையவள்.வீரக் கழல் அணிந்தவள்.பாண்டிய குலத்தின்

    குலதெய்வம்.மலர்ந்த தாமரை மலர் ஏந்திய மதுராபுரித்

    தெய்வம் கண்ணகியின் அருகில் வந்து நின்றது.

    சிலப்பதிகாரம்.

    தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    வானத்தை எட்டும் அதன் த்க்கங்குகளின் ஒளியையும் மிறி ஆக்ரோஷம் கொண்ட கண்ணகியின் சிரிப்பு உயிர்க் குலைய நடுங்கச் செய்தது,மாட மாளிகைகள், கோபுரங்கள். வணிக விதிகள், பசிய வயல்கள், நந்த வனங்கள், தெருக்கள்,என்று பாரபட்சமின்றி நெருப்பு எரித்துச் சாம்பலாக்கியது.

    உண்டு களித்த மகிழ்ச்சியில் ஊழிக் கூத்தாடியது தீ.

    மதுரயைக் காத்து நின்ற நால்வகை பூதங்களும் நகரை விட்டு வெளியேறியது.பசுக்கூட்டங்கள், கன்றுகள், பெண் யானைகள், சிலிர்க்கும் குதிரைகள், ஆடுகள், கோழிகள் மற்ற உயிரினங்கள் கதறிக் கொண்டு உயிர் காக்க ஓடுவது தெய்வத்தைக் கலங்க வைத்தது.

    நகரின் காவல் தெய்வம்.பாண்டிய மன்னனின் குலதெய்வம். காவலனையும், அவன் தேவியையும் இழந்து, நகர் கண்ணகியின் கோபத்தில் எரிந்து சாம்பலாவதைக் கண்டு தவித்துக், கலங்கியது.கற்பின் கனல் தீயாய் மாறி அவள் கொங்கையைச் சுழற்றி எரிந்த தீ நகரை எரித்துச் சாம்பலாவதை கண்டு செய்வதறியாமல் தவித்தது.

    வீண் பழி சுமத்தப் பட்டு இறந்த கணவனை விடத் தன் கணவன் கள்வன் என்ற கோபம், நியாயம் தவறிய வேதனைதான் அவளை ஆங்காரத்தில் தள்ளியது என்று தெய்வத்துக்குத் தெரிந்தது.முன்வினைப் பயனை ஒவ்வொருவரும் அனுபவித்தே ஆக வேண்டும்.எத்தனை தவங்கள், விரதங்கள்,இருந்தாலும் அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. கோவலன், பாண்டிய மன்னன்,அவன் தேவி என்று எல்லோரின் மரணத்துக்குக் காரணம் ஊழ்வினைதான் காரணம் என்று கண்ணகி புரிந்து கொள்ள வேண்டுமே என்ற கவலை தெய்வத்தின் முகத்தில் தோன்றியது.

    அறவாழ்வு பிறழாத,கணவனயே தொழும் மகளிர், முதியோர்கள், குழந்தைகள், அறம் பிறழ்ந்த அரசனின் செயலே இத்தீக்குக் காரணம் என்று எரியும் நெருப்பைப் பார்த்து கை கூப்பி அழுதபடி அதற்குப் பலியாகினார்கள்.

    இனியும் நகர் அழிவதைப் பார்க்க முடியாது என்று மதுராபுரித் தெய்வம் அவள் பின் வந்து நின்றது. வேதனையில் கூம்பிய தன் முகத்தை வேறு பக்கம் திருப்பியபடி கண்ணகி கேட்டாள்.

    யார் நீ? எதற்கு என் பின்னோடு வருகிறாய்?

    மெல்லிய தேகம்.மையிட்ட குவளை மலர் போன்ற கண்கள்.பொன்னிற மேனியள்.இடக் கையில் தாமரை மலரும், வலக் கையில் மழுவும் வைத்திருந்தாள்.காலில் சிலம்பு.மனம் வருத்தத்தைக் காட்டும் கண்கள் நீர் தளும்ப அவளை ஏறெடுத்துப் பார்த்தாள்.

    பெண்ணே, உன் குறை என்ன? என்னிடம் கூறுவாயானால் என்னால் முடிந்த ஆறுதலைச் சொல்ல முடியும் என்றாள்.

    என் கணவனை மீண்டும் தர முடியுமா? ஆக்ரோஷத்துடன் கேட்டாள்.

    மாண்டவர் மீண்டதாகச் சரித்திரம் இல்லை

    எனில் இந்த மாநகரம் அழிந்து போகட்டும்.

    எதையும் ஆக்கவோ, அழிக்கவோ உனக்கு அதிகாரம் இல்லை கண்ணகி. இது இப்படி நடக்க வேண்டும் என்று ஏற்கனவே எழுதி வைக்கப் பட்டது.உணக்குத் தெரிய வேண்டிய முன்வினைக் கதை ஒன்று உள்ளது.

    வெறுப்புடன் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் கண்ணகி.

    கண்ணகி பாண்டிய வம்சம் அற நெறி தவறாது ஆட்சி நடத்திய வம்சம். நீதி, நெறி தவறாமல், குடி மக்களைக் கண் போலக் காப்பாற்றியவர்கள். மக்கள் நலனே தன் நலம் என்று வந்தவர்கள்.அவன் ஆட்சியில் வேத முழக்கத்தைத் தவிர குறை சொல்லி வருபவர்களின் ஆராய்ச்சி மணி ஓசையை கேட்டதில்லை.பகைவர்கள் அவனைத் தொழுதுதான் வழக்கமே தவிர யாரும் தூற்றும் கொடுங்கோலன் அல்ல.

    மன்னவன் தவறுக்காக வாதாடுகிறாயா?---கண்ணகி.

    "இல்லை கண்ணகி. நீ பாண்டிய மன்னனின் பெருமைகள அறிந்து கொள்ள வேண்டும். கீரந்தை என்பவன் வணிகத்திற்காக வெளியூர் சென்றதால், மன்னவன் இருக்க உனக்குப் பயம் வேண்டாம் என்று சொல்லிச் செல்கிறான். இரவில் வலம் வந்த மன்னன் அதைக் கேட்டு மகிழ்ந்து அவளுக்கு பாதுகாப்பு தருகிறான். ஒரு நாள் நகர்வலம் வரும்போது வீட்டில் ஆண் குரல் கேட்டு கதவைத் தட்டி விட்டுச் செல்கிறான். வெளியூரிலிருந்து திரும்பிய கீரந்தை தன் மனிவியுடன் பேசும் குரலைக் கேட்டுத் தவறுதலாக கதவைத் தட்டிய மன்னன் தன் செய்கைக்கு வருந்தி தன் வலது கையை தறித்துக் கொண்டான்.

    வார்த்திகன் என்பவனின் மகன்.சிறுவன். பால் மணம் மாறாத பாலகன். பாண்டிய மன்னனிடம் பரிசு பெற்று வந்த பராசரனிடம் வேதம் முழங்கி பரிசுகள், அணிகலன்கள் பெற்றான். உல்லாசமாக அவைகளை அணிந்து விளையாடிய அவன் மேல் பொறாமை கொண்ட சிலர், அவனைத் திருடன் என்று அதிகாரிகளிடம் பிடித்துக் கொடுத்தனர்.

    கொற்றவை கோவில் முன் விழுந்து அழுகிறாள் சிறுவனின் தாய்.அரசனுக்கு விஷயம் தெரிந்து சிறுவனை விடுதலை செய்தான். அதன் பிறகுதான் மன்னவன் ஆணை இட்டான். பொக்கிஷமோ, முயற்சி செய்து வந்த பொருளோ, அது அவர்களுக்கே சொந்தம் என்று அறிவித்து சிறுவனுக்கு நிலங்கள், தங்க காசுகள் த்ருகிறான்.

    பாண்டியன் ஆண்ட கூடல் நகரம் அற நெறி நிரம்பிய நகரம்.

    ஆனால் அவனுக்குமே சாபம் இருந்தது. நீதி தவறிய மன்னன், மனைவியுடன் இறக்கவும் மதுரை தீக்கிரையாகவும் விதி எழுதிச் சென்றிருக்கிறது. உன் கணவன் கோவலன் முன் ஜென்மத்தில் செய்த தவறின் விளைவே இந்தப் பிறவியில் கொலையாகக் காரணம்." அவளுக்குப் புரியும் விதத்தில் விளக்கமாகச் சொன்னது மதுராபுரித் தெய்வம்.

    கொதிக்கும் மூச்சை தணித்து தெய்வத்துக்கு காது தந்தாள் கண்ணகி.

    "சிங்கபுரம், கபிலபுரம் என்று இரு நாடு. அதன் அரசர்களுக்குள் பகை. என்றும் போர்தான். அரசன் மட்டுமல்ல, ஜனங்களும் அவர்களுக்குள் பகை கொண்டிருந்தனர்.சங்கமன் என்ற கபிலபுரத்து வணிகன் நிறையப் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் தன் மனைவி நீலியுடன் சிங்கபுரத்துக்கு வந்து கடைவீதியில் தான் கொண்டு வந்த பொருள்களை விற்றுக் கொண்டிருந்தான்.

    கோவலன், அந்த சிங்கபுரத்தில் பரதன் என்ற பெயரில் அரசனின் ஊழியனாக இருந்தான். சங்கமன் கபிலபுரத்து பிரஜை என்று தெரிந்து, அரசனிடம் நல்ல பெயர்

    Enjoying the preview?
    Page 1 of 1