Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sarayu
Sarayu
Sarayu
Ebook39 pages14 minutes

Sarayu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சரயு, மானஸா இரு வேறு பரிணாமங்களில் கதாபாத்திரங்களின் மனநிலையை, அவர்களின் வாழ்க்கையை உணர்த்தும் சிறுகதைத் தொகுப்பு.

சரயு - சரயு தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள். மரணத்தை முதிர்ச்சியோடு எதிர்கொள்கிறாள். அந்த நிலையிலும் பிறருக்கு உதவும் மனப்பான்மையுடன் இருக்கிறாள் என்பதை அழகாக நம் கண் முன்னே காட்சியாக விவரிக்கிறது.

மானஸா – “அழகைப் பார்க்கும் காதலுக்கு ஆழம் கிடையாது; ஆழ்ந்த காதலுக்கு அழிவே கிடையாது”, என்று காதலின் ஆழத்தையும், பெருமையையும் எல்லோருக்கும் உணர்த்துகிறது.

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580177310866
Sarayu

Related to Sarayu

Related ebooks

Reviews for Sarayu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sarayu - Kalyani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சரயு

    Sarayu

    Author:

    கல்யாணி

    Kalyani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalyani

    பொருளடக்கம்

    சரயு

    முதல்‌ நாள்

    இரண்டாம்‌ நாள்‌

    மூன்றாம்‌ நாள்‌

    நான்காம்‌ நாள்

    ஐந்தாம்‌ நாள்‌

    ஆறாம்‌ நாள்‌

    ஏழாவது நாள்

    மானஸா

    சரயு

    சரயு தன்‌ நீண்ட கூந்தலை மென்மையாக வருடி விட்டாள்‌. இது எத்தனை நாளாக என்னோடு உயிராக ஒட்டிக்‌ கொண்டிருந்தது. கரு நீளக் கூந்தல்‌ பெண்ணிற்கு அழகு. அந்தக் கூந்தலை வளர்க்க அவருடைய பாட்டி எத்தனை கஷ்டப்பட்டு இருப்பாள்‌. வாரத்திற்கு இருமுறை சீயக்காய்‌ தேய்த்து, சாம்பிராணி போடுவாள். மயிர்க்கால்களில்‌ பரபரவென்று தேங்காய்‌ எண்ணெய்‌ தேய்த்து, அழகாகச் சிக்கெடுத்து, நேர்த்தியாகப் பின்னலைப் பின்னுவாள்‌. இரட்டை ஐடை, ஒத்தை ஐடை போட்டு அதற்கு அடுக்கான மல்லிகைப்பூ, கனகாம்பரம்‌ சூடுவாள். எண்ணெய்‌ தேய்க்கும்‌ நாள்களில்‌ குளித்த பின்னால்‌ போடுவாள்‌.

    வாசலில்‌ நிழலாடியது. நர்ஸ்‌ வந்தாள்‌. அருகில் வந்து ட்ரிப்ஸ்‌ மாட்டினாள்‌.

    சீக்கிரம்‌ தலையைப் பின்னி ரெடியாக இருங்க, டாக்டர்‌ வந்து விடுவார்‌, எனக் கூறினாள்‌.

    டவல்‌ பாத் குடுத்தாள்‌. அம்மா இப்பொழுது வந்து விடுவாள்‌. அம்மா பின்னல்‌ லூசாக இருக்கும்‌. இப்பொழுது எல்லாம்‌ இறுக்கமான பின்னல்‌ பின்னினால்‌ தலையில்‌ வலி உண்டாகிறது.

    இதோ அம்மா வந்துவிட்டாள்.என்ன சரயு, தூங்கினாயா?.

    டிபன்‌ காரியரில்‌ பொங்கல்‌ வாசனை மூக்கைத் துளைத்தது. அம்மாவின்‌ கைமணம்‌ தனி தான்‌. அம்மா அருகில்‌ வந்து தலையைப் பின்னினாள். தலை வாரும்‌ போது ஒரு கொத்து முடி கையில்‌ வந்தது, அம்மாவின்‌ கேவல்‌ கேட்டது.

    என்னடி இது, இப்படி முடி கொட்டறதே!.

    அம்மா, உனக்குத் தெரியாதா, ட்ரீட்மெண்டோட பக்க விளைவு தான்‌. இன்னும்‌ கொட்டும்‌. அம்மா அழாதே.

    என்னவோ, இந்தக் கடவுளுக்குக் கண்ணே இல்லடி சரயு, இல்லேன்னா உனக்குப் போய் இப்படி…..

    அம்மா, காலையிலே அழாதே, எனக்குப் பசிக்கிறது. அப்புறம்‌ எனக்குச் சாப்பிட முடியாது. தொண்டை எல்லாம்‌ எரியும்‌, எனக்கு ஊட்டி விடறயா.

    அம்மா பொங்கலை நெய்‌ விட்டு ஊட்டினாள்‌. சட்னி தான்‌

    Enjoying the preview?
    Page 1 of 1