Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

திருமகள் தேடி வந்தாள்…
திருமகள் தேடி வந்தாள்…
திருமகள் தேடி வந்தாள்…
Ebook171 pages1 hour

திருமகள் தேடி வந்தாள்…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூவிழி... காலை, மதியத்திற்கான சமையலை முடித்தாள். 

அவளுக்கு விபரம் தெரிந்த பிறகு...

"அப்பா... நாம ஆடும், கோழியும், மீனும் சமைத்துச் சாப்பிட வேண்டாம்ப்பா! அதுவும் நம்மைப் போல உயிர்! பாவம்! 'உயிர் கொல்லாமையை மகாவீரர், புத்தர், வள்ளலார் போன்ற மகான்கள் வலியுறுத்தியிருக்காங்க, அப்பா! ப்ளீஸ்ப்பா... பாடத்துல படிச்சேம்ப்பா! வேண்டாம்ப்பா!" 

அழுது கெஞ்சிய மகளை... பூபதி வாரியணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டார். 

"என் தங்கம்...! என் வைரம்...! நீ சொன்னால் சரிதான்டா, கண்ணு! இனி அசைவத்தை நாம் சாப்பிட வேண்டாம்டா!" என்று அசைவம் சாப்பிடுவதை என்றோ... எப்போதோ விட்டு விட்டனர். 

பட்டுப் பூச்சியிலிருந்துதான் பட்டாடை நெய்கிறார்கள் என்று அறிந்ததிலிருந்து... பட்டு கட்டுவதையே விட்டு விட்டாள், பூவிழி. 

வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி வாங்கி... மொட்டை மாடியில் மணலைப் பரப்பிக் கீரை காய்கறிகள் விளைவித்தாள். தொட்டிச் செடிகளில் பூச்செடிகள் வளர்த்தாள். 

இரண்டு வீடுகளுக்கும் தேவையான காய்கறி, கீரைகள், பூக்கள் அபரிமிதமாய்க் கிடைத்தன. 

பூவிழி பெரும் நற்குணங்களுக்குச் சொந்தக்காரி.

தலையோடு குளித்துவிட்டு வந்தாள்.

இளம் ரோஸ் வண்ணத்தில் வெள்ளையும், கறுப்பும் பூக்களிட்ட காட்டன் சேலையை அணிந்தாள் 

முடியை உலர்த்தி... தளரத் தளரப் பின்னலிட்டு... சரம் சரமாய் மல்லிகையைச் சூடி... காதோரத்தில் ஒரு இளம் ரோஸ் நிற ரோஜாவையும் செருகிக் கொண்டாள். 

நெற்றியில் அதே நிறத்தில் ஒட்டுப் பொட்டு.

கண்களுக்கு அளவாய் மையெழுதி... கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்க்கத் திருப்தியாய் இருந்தது. 

அதே சமயம் தான் இத்தனை பேரழகியா என வியப்பு மேலிட... சிறு நகை புரிந்தாள். 

அதன் விளைவாய்... அவளின் கதுப்புக் கன்னங்களில் லேசாய்ச் சிறு குழிகள் தோன்றி... மேலும், அழகுக்கு அழகு சேர்த்தன. 

"பூவிழி! கிளம்பி விட்டீயாமா...?" என்று மலர்விழி கேட்டாள். 

"ம்..." என்றாள். 

"ஷாப்பிங் முடிந்து மதியம் வந்து விடுவீயாம்மா...?"

"அம்மா... முதல்ல ஷாப்பிங். அப்புறம் கோயில்... பிறகு சினிமாவுக்குப் போகலாம் என்று ஐடியாம்மா...!" 

"சினிமாவா...?"

"ம். 'நிமிர்ந்து நில்' என்று சமுத்திரக்கனி படம் ஒன்று வந்திருக்கும்மா. ரொம்ப நன்றாக இருக்கிறதாம். அதுல 'ஜெயம் ரவி' தூள் கிளப்பியிருக்கிறாராம். என் தோழி தாமரை 'ஜெயம் ரவி' பைத்தியம் தெரியுமில்லையா...? ஆசைப்படுகிறாள். அவளோடு போய் வருகிறேன்ம்மா!" 

"இரண்டு பேரும் தனியாகவா போகப்போறீங்க...?"

"நானும், தாமரையும் போனதே இல்லையா...? புதுசாகவா போகப் போகிறோம்...?" 

"காலம் கெட்டுக் கிடக்குது, பூவிழி! அதுவும் இல்லாமல் நீ எதையாவது வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு வருபவள்! அப்பாவையும் கூட்டிக் கொண்டு போ."  

"அப்படி எல்லாம் நடக்காதும்மா. வம்பு என்னைத் தேடி வந்தாலும்... விலகி வந்துடறேம்மா. அப்பாவை ஏன் இழுத்து அடிக்கணும். அவர் இன்று ஒருநாள் ரெஸ்ட் எடுக்கட்டும்மா." 

"பூவிழி சொல்வதுதான் சரி. நீயேன் பயந்து சாகறே...? பூவிழி என்ன விபரம் தெரியாதவளா...? பள்ளிக் கூடம், வேலை, இதுல இலவசத் தனிப் படிப்புன்னு ஆறு நாளும் கடுமையா உழைக்கற பெண். ஒரு நாள் வெளியே போய் பூவிழி இஷ்டம் போல நாளைச் செலவழிக்கட்டுமே!" 

"காலம் கெட்டுக் கிடக்குதுங்க. ரவுடிகளும், கொலைகளும், கொள்ளையும் நகரத்துல மலிந்து போய்க் கிடக்கு!" 

"அதுக்காக வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்க முடியுமா...?" 

"ரெண்டு மாசத்துக்கு முன்பு ராம் தியேட்டர்ல பாத்ரூம்ல வைத்து... ஒரு பொம்பளையைப் பொம்பளையே நகைக்காகக் கழுத்தை நெரித்துக் கொன்று இருக்காளே! அதை அறிந்தவர்தானே, நீங்க...?" என்று கணவனிடம் சீறினாள், மலர்விழி. 

"ஏன் கண்டதைப் பேசி... பூவிழியோட மூடைக் கெடுக்கறே...? பூவிழி சாப்பிட்டையாம்மா...?" 

"ம்... ஆச்சுப்பா." 

"நீ கிளம்பும்மா." 

"அப்பா... மால்ல மளிகையை வாங்கி வைத்து விடறேன். அப்புறமா வந்து எடுத்துக் கொள்ளுங்கள்." 

"சரிம்மா, பூவிழி. ஜாக்கிரதைடா!"

பூவிழி கையாட்டிவிட்டுக் கிளம்பி விட்டாள்.

Languageதமிழ்
Release dateFeb 28, 2024
ISBN9798224926510
திருமகள் தேடி வந்தாள்…

Read more from R.Maheswari

Related to திருமகள் தேடி வந்தாள்…

Related ebooks

Reviews for திருமகள் தேடி வந்தாள்…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    திருமகள் தேடி வந்தாள்… - R.Maheswari

    1

    அன்று ஞாயிற்றுக் கிழமை!

    ஆனாலும், பூவிழிக்கு எப்போதும் போலவே... வைகறையிலேயே விழிப்பு வந்துவிட்டது.

    அறையின் சன்னலைத் திறந்து வெளியே எட்டி நீலவானத்தைப் பார்த்தாள்.

    வானி... வெண்மேகங்கள், கருமேகங்களையெல்லாம் ஊடுருவி... நிலவுப் பெண், உல்லாசமாய் மேற்கு மலையை நோக்கி நடை போட்டுக் கொண்டிருந்தாள்.

    அந்த அழகிய காட்சியில் பூவிழியின் உள்ளம் பறிபோனது.

    மேல் மாடியின் முன்புறம் வீடும்... அதைத் தொடர்ந்து பரந்து விரிந்த நீண்ட மொட்டை மாடியும் இருந்தது. அங்கு பூவிழி வைத்திருந்த தொட்டிச் செடிகளில் பூத்த ரோஜாக்களும்... மல்லிகைகளும்... முல்லைக் கொடிகளில் அரும்பிய மொட்டுக்களும் இதழ் விரித்து ஏராளமான நறுமணத்தை வள்ளல்களாய் வாரி வழங்கிக் கொண்டிருந்தன.

    அந்த நறுமணங்களும்... தென்றலும் கைகோத்துக் கொண்டு வந்து... பூவிழியின் நாசியைத் தொட்டது.

    அந்த நறுமணத்தை உள்ளிழுத்து ஆழ சுவாசிக்க உடலுக்குப் புத்துணர்ச்சி வந்தது.

    பூவிழி... அழகி!

    இல்லையில்லை, பேரழகி!

    அவளுக்கு அழகிய குண்டு முகம்!

    அதில் மீன்குஞ்சுகளாய்... இரு நீண்ட கரிய பெரிய நயனங்கள்!

    முடிகள் அடர்ந்த சிப்பி இமை!

    இந்துவைப் போன்ற நுதல் (நெற்றி)!

    இராமனின் கையில் தவழும் நாணேற்றிய வில்லாய் இரு புருவங்கள்!

    கூர்மையான நாசி!

    தாமரையைப் பிய்த்து ஒட்ட வைத்தாற் போன்ற இளம் ரோஸ் நிற இதழ்கள்!

    அவ்விதழ்களுக்குள்ளே முத்துக்களைப் பதித்து வைத்தாற் போன்ற பல் வரிசைகள்!

    காஷ்மீர் ஆப்பிளை வெட்டி வைத்தாற் போன்ற கதுப்புக் கன்னங்கள்!

    சங்குக் கழுத்து! அதற்குக் கீழே அழகான அங்கலாவண்யங்கள்!

    சிறுத்த கொடியிடை!

    சிற்பம் போன்ற செதுக்கிய மேனி!

    கறுத்தடர்ந்த கார் கூந்தல் முட்டிக்குக் கீழே தொங்கும்!

    பாலோடு மஞ்சளையும், சந்தனத்தையும் கலந்து குழைத்த நிறம்!

    இருபத்தைந்து முடிந்து இருபத்தாறு வயது தொடக்கம்.

    பூவிழி முதுகலை இயற்பியல் ஆசிரியை.

    அவள் எம்.எஸ்ஸி. பி.எட்., முடித்தபோது அறிவித்த டி.ஆர்.பி. டெஸ்டிற்கு கடுமையாக உழைத்தாள். அவள் உழைப்பு வீண் போகவில்லை.

    முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று விட்டாள்! திண்டிவனம் அரசுப் பள்ளியில் வேலையும் கிடைத்து விட்டது.

    அவள் ஊர் விழுப்புரம்! தினந்தோறும் திண்டிவனம் சென்று திரும்புவாள்.

    அவளுக்கு முன்பிருந்த இயற்பியல் ஆசிரியர் எழுபது, எண்பது விழுக்காட்டிற்கு மேல் தேர்ச்சி காட்டியதில்லை.

    பூவிழி பணியேற்று... கடுமையாக உழைத்து... பணியேற்ற ஆண்டே... நூறு சதவீதத் தேர்ச்சியைத் தந்து ஆச்சரியப்பட வைத்து விட்டாள்.

    மற்ற வேதியியல், கணிதம் போன்ற ஆசிரியர்கள் எழுபது, எண்பது விழுக்காடுதான் தந்தனர்.

    பள்ளியின் முழுத் தேர்ச்சி எண்பத்து ஐந்து.

    அத்தனை பேரும் முதலில் பொறாமை கொண்டனர். பின்னர் பொறாமையை விட்டு... அவளின் கல்வி கற்பிக்கும் முறை, தேர்வு முறைகளைக் கேட்டு... தாங்களும் கடைப்பிடித்தனர். அவளோடு போட்டி போட்டுப் பாடத்தை நடத்தினர்.

    விளைவு அடுத்த ஆண்டே அனைவரும் தொண்ணூற்று ஐந்து சதவீதம் தந்தனர். ஆனால், பூவிழியோ அதே நூறு சதவீதத் தேர்ச்சியைத் தந்தாள்.

    இந்தக் கல்வியாண்டு மேலும் முயற்சிக்கின்றனர், பூவிழியோடு இணைந்து.

    பள்ளியின் பத்து, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சியை நூறாக்கிவிட முயற்சிக்கின்றனர்.

    பாடத்தை முடித்து விட்டாள்.

    தினம் தினம் படிப்பும், கூடவே சிறுசிறு தேர்வுகளும் நடத்திக் கொண்டிருக்கிறாள், பூவிழி.

    தினம் பேப்பர் திருத்தும் வேலையிருக்கும்.

    நாலரைக்குப் பள்ளி முடிந்தாலும்... பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு ஐந்தரை வரை ஸ்பெஷல் க்ளாஸ் உண்டு. ஆனால், இவர்கள் மேலும் அரை மணி நேரம் கூட்டிக் கொள்வார்கள்.

    பின், பஸ் பிடித்து வீடு வந்து சேர ஏழாகிவிடும்! பின் அந்தப் பகுதி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தனிப் படிப்புச் சொல்லித் தருவாள்.

    அத்தனை பேரும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், அவர்களின் முன்னேற்றத்திற்காக இலவசமாய்த் தனிப் படிப்பு சொல்லித் தருகிறாள். இயற்பியலோடு மற்றப் பாடங்களையும் சொல்லித் தரும் திறமையுள்ளவள், பூவிழி.

    அதன் பின்பு உணவு சமைத்து, பெற்றோரோடு உண்டுவிட்டுச் சிறிது நேரம் படிப்பாள். பின் உறங்கிப் போவாள்.

    மறுநாள் விடியலில் தான் பேப்பரை எடுத்துக் கொண்டு உட்காருவாள். பேப்பரைத் திருத்துவாள்.

    இன்றும் பேப்பர் கட்டை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

    திருத்தி முடிக்கும் போது பலபலவென விடிந்து விட்டது.

    அப்பா, பூபதி! ஆட்டோ ஓட்டுநர்!

    அம்மா, மலர்விழி , ஹவுஸ் வொய்ப். அப்பாவின் முதலெழுத்து... அம்மாவின் கடைசி இரண்டு எழுத்து சேர்ந்ததுதான் அவளின் பெயர்!

    தாய், நோய்களுக்குச் சொந்தக்காரி. அவளுக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து தாயை நோயோடுதான் பார்த்திருக்கிறாள். சர்க்கரை! மூச்சிரைப்பு! சமீபமாய்ப் பக்கவாதம் வந்து படுத்துவிட்டாள். ஆஸ்பத்திரி, மருந்து, மாத்திரைச் செலவுகள் அதிகம். பிசியோதெரபிஸ்ட் வீட்டிற்கே வந்து சில பயிற்சிகளை அளிக்க... வாக்கரின் உதவியால் நடமாடுகிறாள்.

    பூபதி எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர்.

    ஆட்டோ ஓட்டி வரும் வருமானத்தில் வீட்டு வாடகை, உணவு, மலர்விழியின் மருத்துவச் செலவு என முழி பிதுங்கியதால்...

    பூவிழியை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைத்தார்.

    பூவிழியும் தந்தையின் கடுமையான உழைப்பு கண்டும்... தாயின் நோயும், இயலாமையும் கண்டும்... தந்தையோடு வீட்டு வேலைகளைப் பகிர்ந்து, செய்துவிட்டு, பள்ளிக்குப் போய்ப் பொறுப்பாய்ப் படித்தாள்.

    பூவிழி வகுப்பில் முதல் மாணவியாகத் தான் தேர்ச்சி பெறுவாள்.

    பத்து, பன்னிரண்டாம் வகுப்பில்... அரசுப்பள்ளியில், விழுப்புரம் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்று... விழுப்புரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாவட்டத்தின் சிறந்த அரசுப் பள்ளி என்ற பேரையும், பெருமையையும், நற்புகழையும் தேடித் தந்தாள்.

    வீட்டின் நிதிநிலைமை மோசம் என்றாலும் பொறியியல் படிக்க ஆசைப்பட்டாள்.

    தன் சக்திக்கேற்ப... பூவிழியைப் பட்டப்படிப்பு படிக்க வைத்து... தன் மகளை ஆசிரியராக்க விரும்பினார், பூபதி.

    தந்தையின் ஆசையை நிறைவேற்ற... தன் ஆசையை உள்ளுக்குள் புதைத்துப் படித்தவள், பூவிழி.

    பூவிழிபோல அழகும்... அறிவும்... படிப்பும்... திறமையும்... பண்பாடும்... ஒழுக்கமும் ஒருங்கே வாய்ந்த பெண்களைப் பார்ப்பது... இந்தக் காலத்தில் அரிது.

    நிறைய வரன்கள் வருகிறார்கள்.

    அவளுடைய தாயின் நோய் கண்டு நிராகரித்தவர்கள், பல பேர்,

    வரதட்சிணை கிடைக்காது என்று திரும்பிப் பாராமல் ஓடியவர்கள், சிலபேர்.

    அடுத்ததாய்த் தாய்க்கு நோய் இருந்தாலும் பரவாயில்லை. பெண்ணுக்கு அழகும்... அரசு வேலையும்... அதன் மூலமாய் வரும் பெரும் சம்பளமும் எதிர்பார்த்து... ‘எங்களுக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது!’ என்று வந்தவர்கள்... பூவிழி சொன்னதைக் கண்டு திரும்பிப் பாராமல் ஓட்டமெடுத்தனர்.

    என் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை என் தாய், தகப்பன் உயிரோடு இருக்கும் வரை... கடைசிக்காலம் வரை கொடுப்பேன். என்னை மகளுக்கு மகளாய்... மகனுக்கு மகனாய் வளர்த்தவர்கள்! அவர்களை நான் அவர்களின் கடைசி மூச்சு வரை ஒரு ஆண் மகனைப் போலத் தாங்கிக் கொள்ள வேண்டும். இதற்குச் சம்மத மென்றால்... உங்களை மணந்து கொள்ளச் சம்மதிக்கிறேன்.

    பூவிழியின் சம்பளத்தில் குறியாய் வந்தவர்கள் இது தேராது என்று ஓடிப் போயினர்.

    இதையும் சம்மதித்துச் பெரும் வசதி படைத்த... தனா மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் தனசேகர்... ஜெயலட்சுமி ஹோட்டல் முதலாளியின் மகன் ராம்... பெரிய நகைக்கடை வைத்திருக்கும் சுராணா சேட்டின் மகன் மதன்குமார் சுராணா... மற்றும் நிர்மல் போன்றோரைப் பெரும் பணக்காரர்கள், வேண்டாம் என்று பூவிழி நிராகரித்தாள்.

    பஸ்ஸில் ஒருத்தன் அவளை லேசாய் வேண்டுமென்று உரசி விட்டால் அவ்வளவுதான். அவன் தொலைந்தான். செருப்பைக் கழற்றிப் பிய்ந்து போகும் வரை அடித்து விடுவாள்.

    கல்லூரியிலோ அவளின் குணம் கண்டு ஆண் பிள்ளைகள் காத தூரம் ஓடிப் போவார்கள். தூரே நின்று ஏக்கப் பெருமூச்சு விடுவதோடு சரி.

    நிமிர்ந்த நடையும்...

    நேர்கொண்ட பார்வையும்...

    செயலில் நேர்மையையும்... கடமையையும் இரு கண்களாய் மதிப்பவள், பூவிழி.

    அவளுக்குத் தெரிந்த ஆண்கள் வைத்த பெயர்...

    அல்லி ராணி!

    ஹிட்லரின் தங்கை!

    முசோலினியின் மறுபிறப்பு!

    முரட்டுக் குதிரை! | ஆனால், அவளை நெருங்கியவர்களுக்கும்... மாணவ, மாணவிகளுக்கும்... ‘மிக மிக அன்பானவள்’ என்று தெரியும்.

    உறவினர்களுக்கோ பாசமானவள் என்று தெரியும்.

    இத்தனை நற்குணங்கள் நிறைந்த இவளை ஆளப்போகும் ராஜகுமாரன் எங்கிருக்கிறானோ...?

    என்ன செய்து கொண்டிருக்கிறானோ...?

    2

    பூவிழி... காலை, மதியத்திற்கான சமையலை முடித்தாள்.

    அவளுக்கு விபரம் தெரிந்த பிறகு...

    அப்பா... நாம ஆடும், கோழியும், மீனும் சமைத்துச் சாப்பிட வேண்டாம்ப்பா! அதுவும் நம்மைப் போல உயிர்! பாவம்! ‘உயிர் கொல்லாமையை மகாவீரர், புத்தர், வள்ளலார் போன்ற மகான்கள் வலியுறுத்தியிருக்காங்க, அப்பா! ப்ளீஸ்ப்பா... பாடத்துல படிச்சேம்ப்பா! வேண்டாம்ப்பா!

    அழுது கெஞ்சிய மகளை... பூபதி வாரியணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டார்.

    என் தங்கம்...! என் வைரம்...! நீ சொன்னால் சரிதான்டா, கண்ணு! இனி அசைவத்தை நாம் சாப்பிட வேண்டாம்டா! என்று அசைவம் சாப்பிடுவதை என்றோ... எப்போதோ விட்டு விட்டனர்.

    பட்டுப் பூச்சியிலிருந்துதான் பட்டாடை நெய்கிறார்கள் என்று அறிந்ததிலிருந்து... பட்டு கட்டுவதையே விட்டு விட்டாள், பூவிழி.

    வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி வாங்கி... மொட்டை மாடியில் மணலைப் பரப்பிக் கீரை காய்கறிகள் விளைவித்தாள். தொட்டிச் செடிகளில் பூச்செடிகள் வளர்த்தாள்.

    இரண்டு வீடுகளுக்கும் தேவையான காய்கறி, கீரைகள், பூக்கள் அபரிமிதமாய்க் கிடைத்தன.

    பூவிழி பெரும் நற்குணங்களுக்குச் சொந்தக்காரி.

    தலையோடு குளித்துவிட்டு வந்தாள்.

    இளம் ரோஸ் வண்ணத்தில் வெள்ளையும், கறுப்பும் பூக்களிட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1