Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aangileyarai Athira Vaithavargal
Aangileyarai Athira Vaithavargal
Aangileyarai Athira Vaithavargal
Ebook97 pages39 minutes

Aangileyarai Athira Vaithavargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தியாவிற்கு வியாபாரம் செய்வதற்காக வந்த ஆங்கிலேயர் இங்கிருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி சிறிது சிறிதாகத் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர்.

கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரைத் தீரமுடன் எதிர்த்த வீரமன்னர் பூலித்தேவர், வீர அரசி வேலுநாச்சியார் ஆகிய இருவர் வரலாற்றையும் 20 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் வரலாற்றையும் தொகுத்து தமிழ் மக்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580125510592
Aangileyarai Athira Vaithavargal

Related to Aangileyarai Athira Vaithavargal

Related ebooks

Reviews for Aangileyarai Athira Vaithavargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aangileyarai Athira Vaithavargal - AR. Arulselvan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆங்கிலேயரை அதிர வைத்தவர்கள்

    Aangileyarai Athira Vaithavargal

    Author:

    அரு. அருள்செல்வன்

    AR. Arulselvan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arulselvan

    பொருளடக்கம்

    முன்னுரை

    பூலித்தேவர்

    வேலுநாச்சியார்

    செண்பகராமன்

    வ.உ. சிதம்பரம் பிள்ளை

    சுபாஷ் சந்திர போஸ்

    முன்னுரை

    இந்தியாவிற்கு வியாபாரம் செய்வதற்காக வந்த ஆங்கிலேயர் இங்கிருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி சிறிது சிறிதாகத் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர்.

    கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரைத் தீரமுடன் எதிர்த்த வீரமன்னர் பூலித்தேவர், வீர அரசி வேலுநாச்சியார் ஆகிய இருவர் வரலாற்றையும் 20 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் வரலாற்றையும் தொகுத்து தமிழ் மக்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.

    அன்புடன்

    அரு. அருள்செல்வன்

    பூலித்தேவர்

    தென்பாண்டி நாட்டில் நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம் நெற்கட்டுஞ்சேவல். இப்போது இவ்வூர் ஆவடையாபுரம் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கிராமத்தில் பிறந்தவரே பூலித்தேவர். இவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பதற்கு சரியான வரலாற்றுக்குறிப்புகள் இல்லை. இவர் கி.பி. 1705 இல் இருந்து 1710க்குள் பிறந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    மதுரை நாயக்க மன்னர்கள் 200 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி புரிந்தனர். நாயக்க மரபில் வந்த கடைசி அரசி மீனாட்சி 1736 இல் அரசியல் சூழ்ச்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

    திருநெல்வேலி பகுதியில் இரு பிரிவினர் ஆட்சி செய்தனர். அப்பிரிவுகள் கீழ்த்திசைப் பாளையக்காரர்கள், மேற்திசை பாளையக்காரர்கள் எனப்பட்டனர். கீழ்த்திசை பாளையக்காரர்களின் தலைவராக பொல்லாப்பாண்டிய நாயக்கர் தலைமை தாங்கினார். இவரே வீரபாண்டிய கட்டபொம்மனின் பாட்டனார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர். மேற்திசைப் பாளையங்களுக்கு தலைமை தாங்கியவர் பூலித்தேவர்.

    அப்போது தமிழகம் முழுவதையும் தன கட்டுப்பாட்டில் கொண்டு வர முஹம்மது அலி எனும் ஆற்காடு நவாப் முயன்று கொண்டிருந்தார். தன் சகோதரன் அப்துல் ரஹீம் தலைமையில் ஒரு படையைத் தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் கீழ்த்திசை, மேற்திசை ஆகிய இரண்டு பகுதியைச் சார்ந்த பாளையக்காரர்களும் எந்தத் தொகையையும் கொடுக்காமல் திருப்பி அனுப்பினர்.

    இதற்கிடையே சந்தாசாஹிபு என்ற மன்னன் ஆற்காடு நவாபுக்கு போட்டியாக பாளையக்காரர்களிடம் நயமாகப் பேசித் தன பக்கம் இழுத்தார். இதைக் கண்டு கலங்கிய ஆற்காடு நவாப் ஆங்கிலேயரின் உதவியை நாடினார். இது மாதிரி சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த ஆங்கிலக் கம்பெனியார் ஆற்காடு நவாப்புக்கு உதவ முன் வந்தனர். கி.பி 1752 இல் தஞ்சையில் சந்தாசாஹிபு கொல்லப்பட்டார்.

    பாளையக்காரர்களை அடக்க 1755 இல் ஒரு பெரிய படை புறப்பட்டது. ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான், ஆங்கிலேய தளபதி கர்னல் ஹீரான், கான்சாகிப் ஆகிய மூவர் படைக்கு தலைமை தாங்கினார்.

    மூன்று பேரில் குறிப்பிடத்தக்கவன் கான்சாகிப் என்பவன், யூசுப்கான், முஹம்மது யூசுப்,கும்மந்தான் எனப் பல பெயர்களும் இவனுக்கு உண்டு. இவன் ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் பிறந்தவன். மருதநாயகம் என்பது இவனுக்கு மக்கள் அளித்த பட்டப் பெயர் என்று கூறப்படுகிறது.

    இவன் சிறுவயதில் பெற்றோருக்கு அடங்காமல் வீட்டை விட்டு ஓடி பிறகு ஆற்காடு நவாபிடம் பணியாற்றினான். முதலில் பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றி பின் ஆங்கிலேயப் படையில் இணைந்தான். ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற அடியெடுத்துக் கொடுத்தவர் இராபர்ட் கிளைவ் என்பவர். நவாபுக்கு ஆதரவாக அவர் நடத்திய ஆற்காடுப் போரிலும் பின்னர் திருச்சியில் நடைபெற்ற போரிலும் அவருக்கு உறுதுணையாக இருந்து மதிநுட்பத்தோடு வெற்றி தேடித்தந்தவன் கான் சாஹிப். ராபர்ட் கிளவுக்கு சமமாக இவனை ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

    இப்படிப்பட்ட ஒரு திறமையான படை நெல்லைச் சீமைக்கு 1755 இல் புறப்பட்டது. இப்படை முதலில் மதுரையில் இருந்த மரியானா, டூடேமியா, நபிகான் என்ற மூன்று பட்டாணியர்களையும் அடக்கி மதுரையைப் பிடித்தது. அடுத்து நெல்லைக்குக் குறிவைத்தது.

    நெல்லை மாவட்டத்தில் முதற்கட்டமாக பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தது. அங்கு ஆண்ட கட்டபொம்மு ஆங்கிலேயரையும் நவாபையும் பகைத்துக் கொள்ள பயந்தார். கப்பம் கட்டி விடுவதாகவும், ஆயினும் தவணை தர வேண்டும் என்றும் கேட்டார். இதற்கு ஒத்துக் கொண்டஆங்கிலேய நவாப் படை கட்டபொம்முவுக்கு வேண்டிய முக்கிய நபர்கள் சிலரை பணயக் கைதிகளாகப் பெற்றுக் கொண்டது.

    இந்நிலையில் திருச்சிக்கு திரும்பி வருமாறு ஆங்கிலப் படைக்கு ஆணை வந்தது. திருச்சிக்கு கிளம்ப இருந்த ஆங்கிலத் தளபதி கர்னல் துரையை அருள் கூர்ந்து பூலித்தேவனை அடக்கி விட்டு செல்ல வேண்டும் என்று மாபூஸ்கான் வேண்டினான். அவனுடைய வேண்டுகோளை ஏற்று படையின் ஒரு பகுதி பூலித்தேவரின் நெற்கட்டுஞ்சேவல் கோட்டையை முற்றுகையிட்டது.

    ஆங்கிலேயர் எப்போதும் தம்மோடு தமிழும் ஆங்கிலமும் அறிந்த மொழிபெயர்ப்பாளர்களை வைத்திருந்தனர். அப்படிப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பாளனை பூலித்தேவரை சந்திக்கச் செய்தனர். அவன் பூலித்தேவரை சந்தித்து பேசினான். அனால் பூலித்தேவர் கர்னலின் மொழிபெயர்ப்பாளரிடம் தந்திரமாக பேசி சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார். கர்னல் வசம் போதிய பீரங்கிகள் இல்லை என்பதை அறிந்து கொண்டார். எனவே கர்னல் படை நெருங்கும் வரை அமைதியாக இருந்தார். பூலித்தேவரின் அறிவைப் புரிந்து கொண்ட கர்னல் ரூபாய் இருபதினாயிரம் கொடுங்கள் நான் திரும்பி விடுகிறேன் எங்க கோரிக்கை விடுத்தான். அனால் ஒரு பைசா கூட தர மறுத்துவிட்டார் பூலித்தேவர். சோறும் தண்ணீரும் ஆங்கிலப்படையிடம் போதுமானதாக இல்லை. அவமானத்தோடு திருச்சிக்கு திரும்பினான் கர்னல்.அவனை சென்னைக்கு அழைத்த மேலிடம் அவன் மீது ஊழல் குற்றம் சாட்டி வேலையை விட்டே நீக்கியது. இவ்வாறு பூலித்தேவர் மீதான ஆங்கிலேயரின் முதற்படையெடுப்பு தோல்வியில் முடிந்தது.

    அடுத்து, பூலித்தேவர் சந்தித்தது களக்காடுப்

    Enjoying the preview?
    Page 1 of 1