Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Booker T. Washington
Booker T. Washington
Booker T. Washington
Ebook187 pages1 hour

Booker T. Washington

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முனைவர் சுடர்க்கொடி கண்ணன் அவர்கள் எழுதிய மாமனிதர் புக்கரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் இந்நூல், மாணவர்களுக்கு நல்லறிவூட்டுவதாய் உள்ளது. கல்வியின் பெருமையையும், உழைப்பின் உயர்வையும் நமக்கு உணர்த்துகிறது. 'ஒருவர் உண்மையாக உழைத்தால், தாமும் உயர்ந்து, தம் இனத்தவரையும் உயர்த்தி விடலாம்' என்று வழிகாட்டுகிறது இந்நூல். திக்கற்ற ஏழையாய் பிறந்து, இடைவிடா உழைப்பால் படிப்படியாய் உயர்ந்தவர் புக்கர் என்பதைப் படிக்கும் போது 'நாமும் உழைத்தால் முன்னேறலாம்' என்னும் நம்பிக்கை விதையை நமக்குள் விதைக்கிறது. இந்த நம்பிக்கை விதை விருட்சமாக மாற, தமிழ்நாடு தழைக்க - தமிழ்க்குடி உயர, தமிழ் நாட்டு மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் விரைந்து முன்னேற, இந்நூலைப் படித்துப் பயன்பெறுவார்களாக!

முனைவர் C. சைலேந்திர பாபு, IPS

தலைமை இயக்குநர். தமிழ்நாடு காவல்துறை

Languageதமிழ்
Release dateFeb 25, 2023
ISBN6580162809569
Booker T. Washington

Related to Booker T. Washington

Related ebooks

Reviews for Booker T. Washington

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Booker T. Washington - Dr. K. Sudarkodi Kannan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    புக்கர் தி. வாஷிங்டன்

    Booker T. Washington

    Author:

    முனைவர். க. சுடர்க்கொடி கண்ணன்

    Dr. K. Sudarkodi Kannan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-k-sudarkodi-kannan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை - 1

    வாழ்த்துரை - 2

    வாழ்த்துரை - 3

    வாழ்த்துரை - 4

    வாழ்த்துரை - 5

    வாழ்த்துரை – 6

    மதிப்புரை

    1. பிறப்பும் வளர்ப்பும்

    2. கல்வியில் ஆர்வமும் கலாசாலையில் சேர்தலும்

    3. படிப்பும் பட்டமும்

    4. முதற்பணியும் முன்னேற்றமும்

    5. தலைமைப் பதவியும் தாளாண்மையும்

    6. இல்வாழ்க்கையும் இடைவிடா உழைப்பும்

    7. புகழும் பொறாமையும்

    8. மாண்பும் மறைவும்

    வாழ்த்துரை - 1

    C:\Users\ASUS\Desktop\Booker\1.JPG

    பேராசிரியர் முனைவர் சுடர்க்கொடி கண்ணன் எழுதி வழங்கும் இந்த வாழ்க்கை வரலாற்று நூல், புக்கர் தி. வாஷிங்டன் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கக் கல்வியாளரின் கடும் போராட்ட வாழ்வை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறது. அடிமை வாழ்விலிருந்து உரிமை வாழ்விற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காகக் கல்வி நலமே வழிகாட்டுவதைத் தன் வாழ்க்கையில் உணர்ந்தறிந்த புக்கர் தன் இன மக்களின் துயர் துடைக்க உருவான கருவிதான் கல்வி என்றறிந்து கல்விச்சாலைகளை நிறுவினார். புகழ்பெற்ற டஸ்கிகீக் கல்வி நிலையம் என்னும் மாபெரும் பல்கலைக்கல்லூரியை நிறுவுவதற்காக அவர் அடைந்த அல்லல்கள் எண்ணிலடங்கா.

    நல்லதொரு மகனாக, நற்சொல் கேட்டு நடக்கும் மாணாக்கனாக, நாணயமிக்க தொண்டனாக, நன்னெறி கற்றுத் தரும் ஆசிரியனாக, நாநயமிக்க சொற்பொழிவாளராக, நன்மதிப்புமிக்க கணவனாக வாழ்க்கையை எதிர்கொண்ட புக்கர் வாழ்நாள் முழுவதும் நல்லதொரு போராட்டத்தைக் கடந்து வந்த பாதையில் நம்மையும் வழிநடத்தி வைத்துள்ளார் நூலாசிரியர்.

    கற்கை நன்றே, கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற நறுந்தொகையின் தொடருக்கேற்ப இடர்பல எய்தினாலும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகப் புக்கர் எதிர்கொண்ட துயரங்கள் நூலாசிரியர் மனதை எவ்விதம் நெகிழ வைத்தது என்பதை என்னால் உணர முடிகிறது.

    கல்லூரி முதல்வராக உள்ள பேராசிரியரான முனைவர் சுடர்க்கொடி கண்ணன் படைத்த இந்நூலைத் தமிழுலகம் பெரிதும் வரவேற்கும்.

    பகைவரையும் நட்போடு அரவணைக்கும் பாங்கு புக்கரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும். ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கைக் கல்வியும் இரு சிறகாகும் என்பதைப் புக்கர் நமக்கு உணர்த்தியுள்ளார். உப்பளத்தில் வேலை பார்த்த புக்கர் அந்த உப்பினைப் போலவே நம் மனதிலும் சாரமாக நிற்கிறார்.

    இரவுப் பள்ளி, முதியோர் கல்வி, அறிவொளி இயக்கம் போன்ற கல்வித் திட்டங்களுக்கு வழிகாட்டியாகப் புக்கர் வாழ்ந்ததை இந்நூல் மூலம் அறிகிறோம். ஓங்கி உயர்ந்து ஒளிவீசும் ஒவ்வொரு கல்விக் கழகத்துக்குப் பின்னேயும் ஒப்பற்ற ஈகம் ஒளிந்திருக்கும் என்ற உண்மைக்கேற்ப இன்றும் டஸ்கிகீக் கல்வி நிலையத்திற்கு உயிராய் நிற்கிறது புக்கரின் உள்ளுணர்வாகும்.

    சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் புக்கர் அளித்த அடிமையிலிருந்து விடுதலை என்ற அருங்கொடை நூல் இன வேறுபாட்டு கொடுமை நிறைந்த இச்சமூகத்தில் நமக்கு இன்றும் இங்கு வேண்டுவதாகும். அடிமைத்தனத்தைக் கருவியாகக் கொண்டு செயற்படும் ஆட்கொல்லி மனிதர்கள் இவ்வுலகில் உள்ளவரை, புக்கர் போன்ற புரட்சியாளர்கள் புதிதுபுதிதாகத் தோன்றியபடியேயிருப்பார்கள்.

    கற்றலினால் கிடைக்கும் விடுதலையை விளக்கி வரைந்த இந்நூல் பள்ளி / கல்லூரி மாணவர்களிடம் கற்றல் குறித்த அறிவார்வ அனலைத் தூண்டிவிடும் என்பதில் ஐயமில்லை. எழுதியது போலவே தன் வாழ்க்கையைக் குறிக்கோள் வாழ்வாகக் கல்விப் பணிக்கெனத் தம்மை ஆட்படுத்திக் கொண்ட ஆற்றலாளர் பேராசிரியர் சுடர்க்கொடி கண்ணன் பல்வேறு நிறுவனங்களின் பாராட்டும் பரிசிலும் பெற்றவர் ஆவார். அறிவூட்டுவதாகவும் உணர்வூட்டுவதாகவும் அமைந்த இதுபோன்ற பயன்மிக்க படைப்புக் கனிகள் நூலாசிரியரின் நுண்ணறிவின் பயனாகத் தொடர்ந்து வெளிவர வாழ்த்துகிறேன்.

    C:\Users\ASUS\Desktop\Booker\2.JPG

    (ந. அருள்)

    வாழ்த்துரை - 2

    C:\Users\ASUS\Desktop\Booker\3.JPG

    சென்னையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுடர்க்கொடி கண்ணன் அவர்கள், தன்னைப் போன்ற கல்வியாளர் புக்கர் தி. வாஷிங்டன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.

    டஸ்கிகீ பல்கலைக்கழகத்தின் முதல்வராக இருந்து, ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் கல்வியை வளர்த்தவர் புக்கர் தி. வாஷிங்டன். டஸ்கிகீ பல்கலைக்கழகத்தைத் தற்சார்புடைய அமைப்பாக உருவாக்கத் தன்னையே அர்ப்பணித்துப் பல தொழில்களில் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தவர். ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் பொருளாதார நிலை வளர வேண்டுமென்பதற்காக, அவர்களுக்குத் தொழிற்முறைப் பயிற்சியாவது கிடைக்க வேண்டுமென்று போராடினார். பொருளாதார உரிமைகளுக்காக வாக்குரிமையை விட்டுத்தருவோம் என்று அவர் செய்த ‘அட்லாண்டா காம்ப்ரமைஸ்’ ஒப்பந்தம் பலரால் விமர்சிக்கப்பட்டாலும் திரு. வாஷிங்டன் அவர்களை நாடறியச் செய்தது.

    வாழ்க்கையை முன்னேற்ற, கல்வியால் மட்டுமே முடியும் என்று உறுதியாக நம்பி, நம் பிள்ளைகளும் அதிகாரிகளாக வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் உழைத்த நம் கர்மவீரர் காமராஜரை இப்போது நாம் நினைத்துப் பார்க்கிறோம். அப்படி நாம் பார்த்துக் கற்க வேண்டிய மேலைநாட்டு முன்னோடிகளில் ஒருவர் திரு. புக்கர் தி. வாஷிங்டன்.

    அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முனைவர் சுடர்க்கொடி கண்ணன் அவர்களின் இந்த அருமையான முயற்சியை வாழ்த்துவதில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை பெருமை கொள்கிறது.

    நன்றி!

    அன்புடன்

    C:\Users\ASUS\Desktop\Booker\4.JPG

    சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன்

    தலைவர், ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை.

    வாழ்த்துரை - 3

    C:\Users\ASUS\Desktop\Booker\5.JPG

    பூமிப்பந்தில் புரட்சிகள் பல நூறு நடந்ததாலேயே இன்று நாம் சுதந்திரக்காற்றைச் சுகமாக சுவாசித்துக்கொண்டிருக்கிறோம். பொதுவாகப் புரட்சிகளை அகப்புரட்சி, புறப்புரட்சி எனப் பிரித்தால், அகப்புரட்சியே அனைத்திற்கும் அடிப்படையாக இருந்துள்ளது என்பது விளங்கும். அகப்புரட்சியிலும் முதன்மையானது கல்விப்புரட்சியே. வளர்ந்தநாடு அமெரிக்காவென வாய் நிறையப் பேசுகிறோம். இவ்வளர்ச்சி வரலாற்றில் பலபேர் இருந்தாலும் அடிமை இனத்தை ஆளும் இனமாக மாற்றியவர்களுள் முக்கியமானவர் புக்கர் தி. வாஷிங்டன் என்பவர். அவரின் வாழ்க்கையை எட்டுப் பகுதிகளாகப் பிரித்து அந்தந்த வயதில் நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் நாம் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்திய இதிகாசங்கள், இலக்கியங்கள், வரலாறுகளோடு ஒப்பிட்டு இந்நூலை மதிப்பிற்குரிய முனைவர் சுடர்க்கொடி கண்ணன் அவர்கள் எழுதியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

    கல்விப் புரட்சியாளர் புக்கர் தி. வாஷிங்டன் என்ற இந்தப்புத்தகத்தில் ஒரு அடிமைத்தாயின் வேலை, ஏழ்மைநிலை, அவல வாழ்க்கைக்கு மத்தியில் தன் பிள்ளைகளின்மேல் அவர் காட்டிய அன்பு, கடமை பற்றியும், புக்கர், சகோதரர் ஜான் இவர்களின் சணற்சட்டை பாசத்தை இராவணன் விபீடணன் சகோதரப் பாசத்தோடு ஒப்பிட்டிருப்பதும், நோய்க்கு மருந்துண்டால் நோய் தீரும், ஆனால் பசியே நோயானால் எம்மருந்தை உண்டு பசி தீர்ப்பது என்ற கேள்வியில் புக்கர் தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டம், அவலநிலை, படிப்பிற்காக பங்கா இழுத்தது, பாடநூலைச் சுமந்தது, பள்ளிக்கூடத்தைப் பெருக்கியது, உப்புச்சுரங்க, கரிச்சுரங்க வேலை, வீட்டுவேலை, விடுதியில் வேலை, கப்பலில் சுமைதூக்கும் வேலை, கல்லறுக்கும் வேலை, குடும்பக் கவலை, இடையில் ஏற்பட்ட துன்பங்கள், இல்லறத்தில் ஏற்பட்ட துக்கங்கள் என அப்பப்பா... புக்கர் கல்வி கற்க வேண்டும் என்ற வெறியில் அவர் அனுபவிக்காத வேலை இடைவேளை ஒன்றுதான். புக்கரின் வயதுவாரியாக இந்த வரலாற்றை ஆசிரியர் வரிசைப்படுத்தியிருப்பது மிகவும் சிறப்பு.

    இவ்வரலாற்றின் பல இடங்களில் ஆசிரியர் காந்தியடிகளின் வாழ்க்கையையும், புக்கரின் வாழ்க்கையையும் ஒப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது. உதாரணமாக காந்தியின் கடவுள் பக்தி, புக்கரின் பைபிள் பக்தி, இருபெருமக்களும் தம்மினமக்களுக்கு கல்வி அறிவைக் கொடுக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள், கல்வித் திட்டங்கள், இந்து முஸ்லீம் ஒற்றுமை, கறுப்பர் வெள்ளையர் ஒற்றுமையென பல பொருத்தங்கள் உள்ளன.

    வளர்வதற்கு அரசியலும், வளர்ந்துவிட்டால் அரசியலும் வருவது பொதுவான நிலை. புக்கரின் பேச்சாற்றலை விலைக்கு வாங்க வந்த அரசியல்வாதிகளிடம் என் ஆற்றல் அனைத்தையும் அடிமை மக்களை உயர்த்தவே பயன்படுத்துவேன் என்ற முடிவே அவரை முடிசூடா மன்னனாக்கியது. காந்தியும் அப்படித்தான் வாழ்ந்தார். மேலும் இப்புத்தகத்தில் பல சிறப்பான தமிழ் வார்த்தைகளை ஆசிரியர் பயன்படுத்தியிருப்பது அவரின் தமிழ்ப் பற்றிற்குச் சான்று.

    இவ்வரலாறு கதையோ, கற்பனையோ அல்ல. உண்மைகளே. இன்றைய உலகில் அடிமையென்ற நிலை அதிகம் இல்லாவிட்டாலும் மற்றெல்லா பிரச்சனைகளும் அப்படியே உள்ளது. நாம் ஒவ்வொருவரும் குறிக்கோளோடும், நம்பிக்கையோடும், ஊக்கத்தோடும் உழைத்து, நேர்மையோடு நடந்து, கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் புக்கர் தி. வாஷிங்டன் கல்வியில் புரட்சி செய்தது போல நாமும் நம் வாழ்வில் புரட்சி செய்யலாம், புகழ் பெறலாம் என்ற நம்பிக்கையை இப்புத்தகம் நமக்குக் கொடுத்துள்ளது. அதற்காக ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

    அன்புடன்

    ஜோசப் சேவியர்

    தலைவர்

    அடிலைட் தமிழ்ச்சங்கம்

    தெற்கு ஆஸ்திரேலியா.

    முனைவர் மதியழகி இலக்குவனார்,

    முன்னாள் முதல்வர்,

    இராஜேசுவரி வேதாசலம் அரசினர்

    Enjoying the preview?
    Page 1 of 1