Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rasathee
Rasathee
Rasathee
Ebook164 pages44 minutes

Rasathee

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் புதிய ஹாரர் நாவல் "ராசாத்தி". இது எழுத்தாளரின் நூறாவது நாவல்.

ராசாத்தியை ஜென்மங்களாய் துரத்தும் ஆவி. யார் அது? ஏன்? முந்தைய ஜென்மத்தில் நடந்தது என்ன? கொடூரமான ஆவிக்கு ராசாத்தி பலியாகிறாளா? காப்பாற்றப்படுகிறாளா?

நாவல் ஆரம்பம் முதல் இறுதி வரை வேறு எங்கும் அசையவிடாது படிக்க வைக்கும். பயப்பட வைக்கும். பரவசப்படுத்தும். ராசாத்தி எழுத்தாளரின் நூறாவது நாவல் மட்டுமல்ல அவருக்கு மற்றொரு மைல் கல் என்று தாராளமாக சொல்லலாம்.

பயப்படத் தயாரா?

நாவலிலிருந்து

"நான் கொடுத்த பலியை ஏற்றுக்கொண்டாயா இல்லையா என் முன்னே வா. வந்து சொல். நீ சொன்னால் தான் நான் நம்புவேன்."

அவன் ஆங்காரமாய் கத்த அப்பொழுதும் சிலை அவனை அமைதியாய் பார்த்தது.

உச்சகட்ட கோபம் அடைந்து தன் உள்ளங்கையை கத்தியால் குத்திக் கொண்டான். அந்த ரத்தத்தை அன்னம்மாவின் சிலை மீது வைத்தான்.

"சொல். இன்னும் நான் என்ன செய்ய வேண்டும் சொல் உனக்காக எது வேண்டுமானாலும் செய்கிறேன்."

திடீரென்று அவன் முன் அந்த உருவம் தோன்றியது. அதன் முகம் கோரமாக நாக்கில் இருந்து ரத்தம் வழிந்தது.

அதைப் பார்த்தவன் மகிழ்ந்தான்.

"அன்னம்மா இப்பொழுதாவது சொல் என் பலியை ஏற்றுக் கொண்டாயா? இல்லையா?"

"காளிங்கா உன் பலியை நான் ஏற்றுக்கொள்ளவில்லை."

"அம்மா"

"மீண்டும் மீண்டும் மிருகங்களை கொண்டுவந்து பலியிட்டால் என் கோபத்திற்கு நீ ஆளாக வேண்டியது வரும்."

"அம்மா"

"ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நான் சொன்ன திதியில் நான் சொன்ன நட்சத்திரத்தில் ஒரு வீட்டின் முதல் கன்னிப்பெண் எனக்கு பலியிட வேண்டும். அது மட்டுமே எனக்கு மகிழ்ச்சி. "

"நிச்சயம் செய்கிறேன் அன்னம்மா. வருகிற பௌர்ணமியன்று உனக்கு பலியிடுவதற்கு ஒருத்தியைப் பார்த்து வைத்திருக்கிறேன்."

"நீ யாரை சொல்கிறாய் என்பது எனக்குப் புரியும்."

"அன்னம்மா"

"சமீபத்தில் அங்கே என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா?"

அந்த உருவம் கேட்க காளிங்கன் தெரியாது என்று தலையசைத்தான்.

"என் வேட்டைக்கு நான் காத்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் இருவர் என்னைப் பார்த்து விட்டார்கள். அவர்களை விட்டுவிட்டால் அவர்கள் வேறு எங்காவது போய் என்னைப் பற்றி சொல்லி என் பலி உஷாராகிவிட்டால் நான் என்ன செய்வேன்?"

"அன்னம்மா"

"இருவரின் தலையையும் பற்றி தரையில் அடித்து கொலை செய்தேன். "

அன்னம்மாள் அதை சொல்லும் பொழுது அவள் கண்கள் காளிங்கனை வெறித்தன. அவர்கள் இறந்ததை அன்னம்மாள் மனதிற்குள் உணர்ந்து மகிழ்ந்தது அவனுக்குத் தெரிந்தது.

"காளிங்கா"

"சொல் அன்னம்மா நான் என்ன செய்ய வேண்டும்?"

"என் பலி தப்பிக்காது பார்த்துக்கொள்ள வேண்டும்."

"அதில் சந்தேகமே வேண்டாம் வருகிற பௌர்ணமியன்று அவள் பலியிடப்படுவாள்."

"முட்டாள்"

அன்னம்மா அவனை கோபமாய் பார்த்தாள்.

"ஏன் அன்னம்மா?"

"வருகிற பௌர்ணமி தினத்தில் ஏதாவது ஒரு கோவிலுக்கு அவள் சென்று பலியிடப்படும் நேரத்தில் கோவிலில் இருந்து விட்டால் அவள் தப்பித்து விடுவாள்."

"புரிகிறது. அது நடக்காமல் கவனமாய் இருக்கிறேன்."

"வேண்டாம்"

"அன்னம்மா "

"சொல்"

"எனக்குப் புரியவில்லை."

"அதற்கான ஏற்பாட்டை நான் செய்து விட்டேன்."

"என்ன ஏற்பாடு?"

"அவள் வீட்டை துஷ்ட ஆவி ஒன்று கண்காணிக்கிறது. அவளை எச்சரிக்க முயன்ற கோடாங்கியை அது கொன்றுவிட்டது."

"அவளுக்கு சந்தேகம் வரவில்லையா?"

"துஷ்ட ஆவி கோடாங்கியைக் கொன்றதைக் கண்ட ஆந்தை பயந்து அலறியிருக்கிறது. விவரமானவர்கள் என்றால் புரிந்திருப்பர். பாவம் அவளுக்கு நடந்தது என்னவென்று புரிவதற்கு ஒரு ஜென்மம் வேண்டும்."

***



 

Languageதமிழ்
Release dateSep 10, 2021
ISBN9798201408374
Rasathee
Author

Gavudham Karunanidhi

Gavudham Karunanidhi penned more than seventy fictions in crime, horror and family genres. All his novels are getting well received by the readers from all over the world. Residing in Kerala, India he continues his contribution to the literary world along with teaching as a professor in an leading Engineering College in Kerala.

Related to Rasathee

Related ebooks

Related categories

Reviews for Rasathee

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rasathee - Gavudham Karunanidhi

    கவுதம் கருணாநிதி

    1

    திரையரங்கத்தில் நீண்ட பெல் அடித்தது.

    படம் முடிந்து மக்கள் அனைவரும் வெளியே வந்தால் கூட்டம் அதிகமாகும் சைக்கிளை எடுப்பதற்கு சிறிது நேரம் காத்திருக்க வேண்டி வரும். யோசித்த செல்லமுத்து தன்னுடன் இருந்த கந்தனை அழைத்தான்.

    கந்தா

    ம்

    எந்திரிச்சு வா

    இரு இன்னும் படம் முடியல.

    சைக்கிள் எடுக்கமுடியாது. வா போலாம்..

    ம்

    கந்தன் எழுந்தான் இருவரும் அவசரமாக வெளியே வந்தனர். செல்லமுத்து டோக்கன் கொடுத்து விட்டு சைக்கிளை வெளியில் எடுத்தான். காற்று  குளிராக அடித்தது. மழை வரும் போலிருக்க செல்லமுத்து வானத்தைப் பார்த்தான்.

    கந்தா

    ம்

    சீக்கிரம் ஏறு மழை வர்றதுக்குள்ள வீட்டுக்குப் போயிடலாம்

    கந்தன் ஏறிக்கொள்ள செல்லமுத்து சைக்கிளை மிதித்தான்.

    படம் எப்படி இருந்துச்சு? சைக்கிள் மிதித்தபடி செல்லமுத்து கேட்க கந்தன் ஒன்றும் சொல்லாமல் சிரித்தான்.

    ஏண்டா ?

    வீட்ல நிம்மதியா தூங்கியிருக்கலாம். தூக்கம் வரலைன்னு செகண்ட் ஷோவுக்கு வந்தது தப்பாயிடுச்சு. பயங்கர போர் படம்.

    ஏன் கந்தா? படம் நல்லாத்தானே இருக்கு?

    நம்ம எந்த காலத்தில் இருக்கோம்? இப்ப வந்துட்டு பேய் பிசாசு பூதம் மந்திரம்னு காதுல பூ சுத்துறாங்க.

    ம் பேய் நம்பிக்கை இல்லையா உனக்கு?

    சுத்தமா இல்ல. உனக்கு?

    இதுவரைக்கும் இல்ல இனிமே எப்படின்னு தெரியாது.

    இனிமே தெரியாதுன்னா என்ன அர்த்தம்?

    ஒருவேளை பேய் நம்ம முன்னாடி நேராக வந்து நான் இருக்கேன்னு சொன்னா நம்பித்தாளே ஆகணும்?

    செல்லமுத்து சொல்ல கந்தன் சிரித்தான்.

    எதுக்கும் கீழே பார்த்துப்போ பாம்பு ஏதாவது இருந்துடப் போகுது.

    இந்த ரோட்டுக்கு ஒரு லைட் போடணும்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டோம் யாரும் காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறாங்க

    "இந்த ரோடுஅந்தளவுக்குப் புழக்கம் இல்லப்பா. அப்புறம் எப்படி லைட் போடுவாங்க?

    பார்த்துப்போ காட்டுப்பாதை வரப்போகுது."

    ம்

    செல்லமுத்து காட்டுப்பாதையில் திரும்பினான். கொஞ்சதூரம் போயிருப்பான். ஏதோ ஒரு வெளிச்சம் தூரத்தில் இருக்க திகைத்தான். வெளிச்சம் புதிதாக இருக்கிறது. என்னவாக இருக்க முடியும்?

    கந்தா

    ம்

    அங்கு ஒரு வெளிச்சம் தெரியுது உனக்குத் தெரியுதா?

    தெரியுது ஆனா என்ன அது வெளிச்சம் இங்கே?

    சற்று அருகில் போக ஒரு பெண்ணின் உருவம் வெள்ளை நிறத்தில் பளீரென்று அவன் முகத்தில் அறைந்தது.

    செல்லமுத்து அதிர்ந்தான். சட்டென்று பிரேக் போட்டு சைக்கிளை நிறுத்தினான்.

    கந்தா வார்த்தைகள் பயமாய் வெளிப்பட்டன.

    ம்

    அங்க என்னமோ இருக்கு.

    ஆமா முத்து கந்தனின் குரலும் நடுங்கியது.

    "இப்ப என்ன பண்ணலாம்?

    ஏதும் கண்டுக்காம சைக்கிளை மிதிச்சுடலாமா?

    அது தாண்டித் தான் போகணும்

    ஒண்ணு செய்யலாமா?

    சொல்லு

    திரும்பிப் போயிடலாம்.

    திரும்பிப்போறதா எங்க?

    தியேட்டர்க்கே போயிடலாம். விடியட்டும். விடிஞ்சதுக்கப்புறம் வீட்டுக்குப் போகலாம்

    கந்தன் சொன்னது செல்லமுத்துக்கு சரியான யோசனையாகத் தான் தோன்றியது.

    ஆனால் எங்கே போய் தங்குவது தியேட்டரிலா?  தியேட்டரில் தங்க விடமாட்டார்கள். எங்காவது இரண்டு மணிநேரம் அல்லது மூன்று மணிநேரம் நின்று கொண்டிருக்க வேண்டும்.

    ஆபத்துக்கு பாவமில்லை. துணிந்து போய் விடலாமா?

    செல்லமுத்து சைக்கிளில் ஏறினான்.கந்தன் திகைப்பாய் பார்க்க செல்லமுத்து சொன்னான்.

    கந்தா ஏறு ஒரே அழுத்து அழுத்திடலாம்

    கந்தன் ஏறி அமர செல்லமுத்து சைக்கிளை அழுத்தினான்.

    அந்த வெள்ளை நிற உருவம் முதுகு காட்டியபடி இருக்க அதைக் கடக்க முயன்ற அந்த நொடியில் அந்த உருவத்தின் மீது வைத்திருந்த கவனம் அவனை சாலையின் குறுக்கே இருந்த சிறிய கல்லைக் கவனிக்க விடாது செய்ய சைக்கிள் அதன் மீது ஏறியிறங்க பேலன்ஸ் தவறியவன் சைக்கிளோடு கீழே விழுந்தான். கந்தன் உடன் விழுந்தான். சத்தம் கேட்ட அந்த உருவம் திரும்பியது.

    ***

    மழை பெய்து கொண்டிருந்த ஒரு ராத்திரி நேரம்.

    காத்தான் உறங்கிக்கொண்டிருக்க ராசாத்திக்கு உறக்கம் கலைந்திருந்தது.

    மழை சடசடவென்று கூரையில் விழுந்த சத்தம் அவளை எழுப்பி விட்டது.

    அருகில் உறங்கிக்கொண்டிருந்த அப்பாவைப் பாவமாய் பார்த்தாள்.

    பாவம் அப்பா. எனக்காக படாதபாடு படுகிறார். என்னை ஒரு நிலைக்குக் கொண்டு வரவேண்டும் எனும் ஆசையில் கிடைத்த வேலை எல்லாம் செய்து களைப்பாக வீட்டுக்கு வருவதால் உறங்கும் போது அவ்வளவு எளிதில் எழ மாட்டார்.

    காத்தானுக்கு நன்றாகப் போர்த்திவிட்ட ராசாத்தியை அந்த சத்தம் கவனத்தை ஈர்த்தது.

    என்ன சத்தம் அது? மழையின் சத்தம் அந்த சத்தத்தை இன்னதென்று கண்டறிய இயலாமல் அவளைத் தொல்லைப்படுத்த அவள் புறக்கணித்து உன்னிப்பாகக் கேட்டாள். இது மூச்சுவிடும் சத்தம்.

    யாரோ வெளியில் இருக்கிறார்கள். யாராக இருக்கும்? இந்த அர்த்தஜாம நேரத்தில் இங்கே வந்திருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?.

    ஒருவேளை திருடனாக இருப்பானோ? நினைத்தவளுக்கு அந்த வேளையிலும் புன்னகை வந்தது. இங்கே எடுத்துப் போவதற்கு என்ன இருக்கிறது. என்னை எடுத்துப் போனால் தான் உண்டு. நினைத்தவள் திடுக்கிட்டாள்.

    ஒருவேளை வந்தவனின் உத்தேசமும் அப்படி இருந்தால்? ராசாத்தி சட்டென்று எழுந்தாள். விளக்கைப் போட்டால் வெளியில் இருப்பவன் உஷார் ஆகி விடுவான். அவனுக்கு மறக்க முடியாத பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறேன்.

    அடுப்பைப் பற்றவைத்து பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்தாள்.

    நீர் கொதித்தது. ராசாத்தி மெல்ல கதவருகில் சென்றாள். ஒரு காதை கதவில் வைத்து கேட்க இப்பொழுது மூச்சுவிடும் சத்தம் நன்றாகக் கேட்டது.

    இப்போது என்ன செய்வது கதவைத்திறந்து யார் என்று பார்க்கலாமா அல்லது அவன் கதவைத் தட்டும் வரை காத்திருக்கலாமா?

    யோசித்தாள்.

    அப்பாவை எழுப்ப முயற்சிக்கலாம். அதுதான் உத்தமம்.

    குரல் கொடுத்தால் வெளியில் இருப்பவன் உஷாராகிவிடுவான்.

    அப்பாவை உலுக்கினாள். அவர் மெல்ல அசைந்தார். எழவில்லை.

    இனி அப்பாவை எழுப்பிப் பயனில்லை.

    ராசாத்தி நினைத்த அதே நேரத்தில் கதவை வெளிப்புறம் இருந்து அவன் பிறாண்டும் சத்தம் கேட்டது.

    ராசாத்தி உஷாரானாள்.

    கொதித்த தண்ணீரை எடுத்துக் கொண்டாள்.

    கதவைத் திறந்து அவன் மேல் ஊற்றிவிட வேண்டியது தான். முடிவெடுத்தவள் பாத்திரத்தைக் கையில் பிடித்தபடி கதவின் அருகில் சென்றாள்.

    ஒரு நிமிடம் யோசித்தாள். பயமாக இருந்தது. ஏதாவது தப்பு நடந்து விட்டால்? எதற்கும் பயப்படாதே ராசாத்தி உன்னைக் காப்பாற்ற வேறு யாரும் வர மாட்டார்கள்.  உன்னை நீ காப்பாற்றிக்கொண்டால்தான் உண்டு.

    மனம் சொல்ல காளியம்மனை வேண்டிக்கொண்டு கதவை சட்டென்று திறந்தாள். திகைத்தாள்.

    அவன் ஒரு கோடாங்கி. அவன் கண்கள் அவள் மேல் நிலைத்தன.

    அம்மா தண்ணி

    அவன் எழ முடியாமல் கிடக்க சட்டென்று தம்ளரில் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க வாங்கிக் குடித்தான். அவளை பாவமாய் பார்த்தான்.

    ஐயோ ஐயோ கத்தினான்.

    ராசாத்தி அவனை பயத்துடன் பார்க்க

    தாயி அழைத்தான்.

    அவள் மௌனமாகப் பார்க்க

    அவன் வந்துட்டான் தாயி உன்னைத் தேடி வந்துட்டான் தாயி. எங்கயாவது போய் உயிர் பொழச்சுக்க தாயி

    சொன்னவன் பெருமூச்சு விட்டான். விழிகள் மூடிக்கொண்டன.

    ராசாத்தி பயமாய் பார்த்தாள். அழைத்தாள்.

    அய்யா

    பதிலில்லை.

    மெல்ல கோடாங்கியின் தோளைத் தொட அவரின் உயிரற்ற உடல் சரிந்து விழுந்த அதே வேளையில் ஆந்தை ஒன்று பயங்கரமாய் அலறியது.

    2

    காளியம்மன் கோவில்.

    அய்யா எனக்கு ரொம்ப பயமா இருக்குங்கய்யா. என் பொண்ணுக்கு ஏதாவது நடந்திடுமா? கோடாங்கி சொன்னதா கேள்விப்பட்டதில் இருந்து மனசு சரியில்லங்கய்யா

    காத்தான் கோவில் பூசாரியிடம் இடைவிடாமல் புலம்பிக் கொண்டிருக்க பூசாரி சமாதானப்படுத்தினார்.

    யாரோ ஏதாவது சொன்னா அப்படியே நடந்திடுமா?

    இல்லங்கய்யா அந்த கோடாங்கி இதுவரை சொன்னது எல்லாமே நடந்திருக்கு.

    "அது

    Enjoying the preview?
    Page 1 of 1