Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gopura Dharisanam
Gopura Dharisanam
Gopura Dharisanam
Ebook186 pages58 minutes

Gopura Dharisanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆர்.எம்.ஜி மிகவும் பரந்த மனம் உடையவர். எல்லோருக்கு உதவி செய்பவர்.
அவர் அப்பாவின் இரண்டாவது மனைவி வனஜாவின் மகன் யோகேஷ், சுயநலமாகவே வாழ்பவன். அவர்களை ஆர்.எம்.ஜி அவர் வீட்டிலேயே வாழ வைக்கிறார்.
ஆர்.எம்.ஜி யை சிறுவயதிலிருந்தே வளர்த்த மனோம்மா, அவர் மகன் ரவிக்குமார் அங்கேயே ஆர்.எம்.ஜி யின் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறான்.
ஆர்.எம்.ஜி ஒரு ஏழைப்பெண்ணை, திக்கித் திக்கிப் பேசும், திவ்யாவைத் திருமணம் செய்து கொள்கிறார்.
யோகேஷ், பணத்திமிர் பிடித்த தாரணியைத் திருமணம் புரிகிறான்.
தாரணியின் அம்மா, புவனா வீட்டில் கார் டிரைவராக வேலை பார்க்கும் தியாகு, ஆர்.எம்.ஜி யின் மாமனாரா என்று, புவனாவும் தாரணியும் அவரை அவமானப்படுத்துகிறார்கள்.
ஆர்.எம்.ஜி எல்லாம் தெரிந்தும், மனோம்மா புவனா குடும்பத்தைப்பற்றி எச்சரித்தும், குடும்ப ஒற்றுமைக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிறார்.
திவ்யாவும், தாரணியும் ஒரே நேரம் கர்ப்பமாகி, பிரசவத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதில் தாரணி பிரசவம் பிரச்சனையாகிறது.
அவள் குழந்தை இறந்துவிடுகிறது.
அவள் இனிமேல் குழந்தை பெற முடியாத நிலையில், மனோம்மாவுக்கும், நர்சுக்கும் தெரிய, தாரணியின் இறந்த குழந்தையை, திவ்யாவிடம் வைத்துவிட்டு, ஆர்.எம்.ஜி அவர் பெண் குழந்தையை, தாரணிக்குப் பிறந்ததென்று சொல்கிறார்.
திவ்யா இந்த உண்மை தெரியாமல் கலங்குகிறாள். அவள் பெற்ற குழந்தைக்கு, கௌதமி என்று பேர் வைக்கிறார்கள்.
கௌதமியை திவ்யா தூக்கிக் கொஞ்சமுடியாதபடி, தாரணி செய்கிறாள்.
ஒருநாள் சிறைக்குச் சென்று, ஆர்.எம்.ஜி ராமதுரை என்பவரைச் சந்திக்கிறார். அவர் சில விஷயங்களை ஆர்.எம்.ஜி யிடம் சொன்னார்.
அடுத்த சிலநாட்களில் சுகந்தி என்ற பெண்ணை, ஆர்.எம்.ஜி வீட்டிற்குக் கூட்டி வந்தார்.
அவள் வந்ததிலிருந்து பல பிரச்னைகள் வெடிக்க ஆரம்பித்தன.
சுகந்திக்கு பல மாப்பிள்ளைகள் பார்த்தும், திருமணமாகாத நிலையில், அவளை மனோம்மா மகன் ரவிக்குமாருக்கு, திருமணம் செய்து வைத்தார்.
ரவிக்குமாரோ யோகேஷிடம் சேர்ந்து கொண்டான். சுகந்தி ஆர்.எம்.ஜி சகோதரர் என்றால், அவனுக்கும் சொத்தைப் பிரித்துக் கொடுத்தால் தான், முதலிரவு என்று கூறினான்.
மனோம்மா அவனை மகன் என்றும் பாராமல் திட்டினாள்.
இப்படியான சூழ்நிலையில், ஆர்.எம்.ஜி அவர் குடும்பத்தினருடன் மனோம்மாவைக் கூட்டிக்கொண்டு, அந்த பங்களாவை விட்டு வெளியேறி, திவ்யாவின் அப்பா தியாகுவின் சாதாரணா வீட்டில் குடியேறினார்.
காலம் வளர்கிறது.
கௌதமி பெரியவளாகி திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. அதற்கு அவளைப் பெற்ற ஆர்.எம்.ஜி, திவ்யாவுக்கு அழைப்பு இல்லை.
கௌதமிக்கு, அவள் பெற்றோர்கள் ஆர்.எம்.ஜி, திவ்யா என்று தெரிந்தது.
அவள் என்ன முடிவு எடுத்தாள்?.
ஆர்.எம்.ஜி மீண்டும் செல்வந்தர் ஆனாரா?.
முதலிரவு அன்று சுகந்திக்குச் சொத்தைப் பிரித்துத் தரச்சொன்ன ரவிக்குமார் சொன்ன பதில் என்ன?.
எல்லோருக்கும் நல்லவனாய் வாழ்ந்த ஆர்.எம்.ஜி யின் கதை இது.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137706110
Gopura Dharisanam

Related to Gopura Dharisanam

Related ebooks

Reviews for Gopura Dharisanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gopura Dharisanam - Karaikudi Narayanan

    http://www.pustaka.co.in

    கோபுரத் தரிசினம்

    Gopura Dharisanam

    Author:

    காரைக்குடி நாராயணன்

    Karaikudi Narayanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/karaikudi-narayanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    1

    ராஜசேகர் அறக்கட்டளை.

    கல்வி, மருத்துவம், திருமணம், கோயில் என்று ஆர்.எம்.ஜி வீட்டில், விருந்துடன் நிதி அளிப்பது, அன்றாடப் பழக்கம்.

    ஆர். முத்துகணேசன் தான் ஆர்.எம்.ஜி.

    அவன் அப்பா ராஜசேகர், சாதாரண நிலையிலிருந்து விடிய, விடிய உழைத்துச் சேர்த்த பணம்.

    ஆர்.எம்.ஜி இன்வெஸ்ட்மெண்ட், ரியல் எஸ்டேட், மெட்ரிகுலேஷன் பள்ளி, கல்யாண மண்டபம் இப்படி பலப்பல.

    அவன் வீட்டு வாசலில், அவன் ஆசிரியர் தமிழண்ணல் அவனுக்கு அன்புப் பரிசாகத் தந்த, மரப்பலகை. அதில் எழுதப்பட்ட மூதுரை.

    நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)

    எல்லார்க்கும் பெய்யும் மழை.

    இதைப் படித்தவர்கள், இது ஆர். எம். ஜிக்காக எழுதப்பட்ட பாடல் என்று பேசிச் செல்வார்கள்.

    பல உதவிகளுக்கு வந்தவர்கள் அவனைப் பாராட்டிப் போனார்கள்.

    டேபிள் நிறைய காபி டம்ளர்கள் இருந்தன.

    மனோம்மா காபி.

    மனோரமா அம்மாவைத்தான் ஆர்.எம்.ஜி மனோம்மா என்று கூப்பிட்டான்.

    மனோம்மா காபியுடன் வந்தாள்.

    முத்து எத்தனை காபி குடிப்பே, இது ஏழாவது காபி. இனிமே கேட்டா தரமாட்டேன். சாப்பிடுற நேரம் இது.

    அந்த வீட்டில் 50 ஆண்டுகளாக வேலை பார்க்கும், மனோரமாவை ஆர்.எம்.ஜி ஒரு தாயாக நினைத்தான்.

    மனோரமாவின் பேரன் ரவிக்குமாரும், அங்கேயே படித்து அங்கேயே வளர்ந்தான்.

    கிட்டத்தட்ட ஆர்.எம்.ஜியும், ரவிக்குமாரும் ஒரே வயதினர் தான்.

    ரவிக்குமார் ஆர்.எம்.ஜியின் பஸ் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்க்கிறான். அவன் சம்பளத்தை, ஆர்.எம்.ஜி மனோம்மாவிடம் கொடுத்துவிடுவான்.

    ரவிக்குமார் பஸ் கம்பெனிக்குப் புறப்படத் தயாரானான்.

    வாசலில் வன்னியன் சூரக்குடி கோயில் குருக்கள், சங்கரராமன் ஆட்டோவில் வந்து இறங்கினார்.

    ரவிக்குமார் அவரை வரவேற்று, உட்கார வைத்துவிட்டு, மனோம்மாவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.

    மனோம்மா, அவருக்குக் காபி கொண்டுவந்து தந்தாள். அவரைக் கும்பிட்டாள். அவர் அவளுக்கு விபூதி பிரசாதம் தந்தார். நெற்றியில் இட்டுக் கொண்டாள்.

    சாமி, வீட்ல எல்லாரும் சௌக்கியமா?

    அம்பாள் மீனாட்சி கைங்கர்யம். எல்லாம் நல்லபடியா நடக்குது.

    ஆர்.எம்.ஜி குளித்துவிட்டு, தலையைத் துடைத்தபடி வந்தான். அவனுக்கும் கோயில் பிரசாதத்தைத் தந்தார்.

    சாமி, கடவுள் காரியம் எல்லாம் ஒன்னும் குறையில்லையே?

    தம்பி, உங்க பாட்டனார் சேதுபதிராஜாவோட, சிவகங்கை சமஸ்தானம் இருக்குறச்சே கட்டுன கோயில். ஆனா யாருமே இங்கே வர்றதில்லே. நாங்க பரம்பரையா அம்பாளுக்கு சேவகம் பண்றோம். எனக்கு 90 வயசாகுறது. கைங்கர்யத்தை விடமுடியலே. இப்போ என் புள்ளை சுப்ரமணியன் தினமும் 9 கிலோமீட்டர், சைக்கிள்ல போய் கோயில்ல விளக்கேத்திட்டு வர்றான். நீங்க உங்க பரம்பரை கௌரவம் போயிடக்கூடாதுன்னு, அந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் பண்ணுனதுக்கு அப்புறம் தான் சுபிட்சமே வந்தது. நீங்க நன்னாருக்கணும்.

    ரொம்ப சந்தோஷம். உங்களை மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம் அவசியம் வேணும். இன்னும் என்ன செய்யணும். சொல்லுங்க செய்யுறேன்.

    நிறைய பேரு, தர்மத்தை விளம்பரமாக்கி வியாபாரமாக்குறா. நீங்க அப்படியில்லை. இதை நான் சொல்லலை. ஊரே சொல்லுது. 150 ரூபாய்க்கு சன்னிதானத்துல ட்யூப்லைட் போட்டுட்டு, அதை உபயம்னு அவா குடும்பத்துப் பேரு அத்தனையும் எழுதுறா. கல்யாணப்பத்திரிக்கை, நம்ம காசுல அடிக்குறோம். அதுல பிரஸ்காரன் அவன் பேரைப் போட்டுக்குறான்.

    சாமி இது விளம்பர யுகம். ஒரு அமைச்சர் யார் வீட்டு மஞ்ச நீராட்டு விழாவுக்கோ வந்தா, அதுக்கு விளம்பரம். ஒரு நடிகன் படம் ரிலீசானா, அதுக்கு வெடி போட்டு அமர்க்களம். வெயில் காலத்தில ரெண்டு பானையில தண்ணி வச்சா, அதுக்கு தாரை, தப்பட்டை, தம்பட்டம்.

    தம்பி நீங்க சொல்றது உண்மைதான். ஆனா உங்களை நினைக்குற போதெல்லாம், எனக்கு தோன்றதெல்லாம் அந்தக் கீதையில கண்ணன் சொன்னது தான். எவன் பலாபலன்களை எதிர்பாராமல், தன்னைப் போன்றே மற்றவர்களை நினைத்து உதவுகின்றானோ, அவனுள் நான் காணப்படுவேன்

    சாமி, சாதாரணமா பழம்பஞ்சாங்கம், வயசாயிடுச்சு, லேட்டஸ்ட்டா இல்லை, அது இதுன்னு சொல்லிடுறாங்க. ஆனா, திருக்குறள், மகாபாரதம், கீதை, ராமாயணம் இதுல சொல்லாததையா, நாம புதுசா சொல்லப்போறோம்.

    நல்லாச் சொன்னீங்க தம்பி. எனக்குப்படுறதைச் சொல்றேன். தப்பா எடுத்துக்காதீங்கோ.

    மனோம்மா குருக்களுக்கு ஏதோ சைகை காட்டிவிட்டு, காபி டம்ளரை எடுத்துப்போனாள்.

    தம்பி தர்மம்ங்குற பேர்ல ஏமாந்திடாதீங்க.

    மனோம்மா ஹாலில் சுவர் ஓரமாக நின்று, குருக்கள் சொன்னதைக் கேட்டுத் தலையாட்டினாள்.

    சாமி, அள்ளிக்கொடுத்து ஆனந்தப்படுறவன் அதிர்ஷ்டசாலி. சேத்துவச்சிட்டு செத்துப்போறவன் துரதிர்ஷ்டசாலி. உங்களுக்குத் தெரியாதது இல்லை, பணம் இருந்தாத்தான் அவனை இந்த உலகமே மதிக்குறது. அப்படி பணம் இருந்தாத்தான் இந்த சமூகம் மதிக்கும்னா, அந்த மானம் கெட்ட பணம், எனக்கு வேண்டாம்.

    ஆர்.எம்.ஜி கொஞ்சம் கோபப்பட்டதைக் கேட்ட மனோம்மா, ஒன்றும் தெரியாதவள் போல உள்ளே போனாள்.

    சரி, நான் உங்க நேரத்தை வீண் பண்ணலே. வந்த காரியத்தைச் சொல்லிட்டுப் புறப்படுறேன்.

    சொல்லுங்க.

    நம்ம கிராமத்தைச் சேந்தவா இடுகாட்டுக்குச் செத்தவாளைத் தூக்கிண்டு போக, மத்தியில சிலபேரு வழிவிட மாட்டேங்குறா. ரயில்வே பாலத்தில இறக்கி, ஆத்துக்குள்ள நடந்து போகவேண்டியிருக்கு. யாரைக் குத்தம் சொல்றதுன்னு புரியலே.

    நான் என்ன பண்ணனும்?

    அமரர் ஊர்தி ஒன்னு வாங்கிக் கொடுத்தா, நன்னாருக்கும்.

    இவ்வளவு தானே, உடனே ஏற்பாடு செய்யுறேன்.

    அந்த ஊர்தியிலதான் நானும் சீக்கிரம் போகணும்.

    சாமி அப்படியெல்லாம் சொல்லாதீங்க. உங்களை மாதிரி பெரியவங்க, ஒவ்வொரு வீட்டுக்கும், நாட்டுக்கும் ரொம்ப அவசியம்.

    போன் ஒலித்தது.

    மனோம்மா எடுத்தாள்.

    முத்து, அவசர உதவிக்கு 101 அழைக்கிறது.

    ஆர்.எம்.ஜி போனை வாங்கி, பேசினான்.

    தம்பி நான் சேதுசுந்தரம் பேசுறேன்.

    சொல்லுங்க சார்.

    எங்க கல்யாண மண்டபத்துக்கு, இப்போ நல்ல சீசன். அது உங்களால தான் கெடுது.

    என்னாலயா, எப்படி?

    என் கல்யாண மண்டபத்துக்குப் பக்கத்திலே, நீத்தார் நினைவு விடுதின்னு இனாமாக் கட்டிக்கொடுத்து இருக்கீங்கள்ல.

    ஆமா.

    அதுல தினமும் ஒரு பொணம் வருது. எப்படி என் கல்யாண மண்டபம் லாபத்திலே நடக்கும்

    நீத்தார் நினைவு மண்டபத்தை, எப்பவோ நான் கட்டிக் கொடுத்திட்டேன். அது தெரிஞ்சுதானே நீங்க பக்கத்து இடத்தை விலைக்கு வாங்கிக் கல்யாண மண்டபம் கட்டுனீங்க.

    கல்யாண சீசன்ல, அங்கே பொணம் வரக்கூடாதுன்னு ஒரு நிபந்தனை விதிச்சா, நல்லா இருக்கும்.

    ஆர்.எம்.ஜி சிரித்தான்.

    கல்யாணத்தைத் தள்ளி வச்சுக்கலாம். சாவைத் தள்ளி வைக்க முடியுமா? அதோட, கல்யாணத்துக்கு மண்டபம் கெடைக்கலேன்னா கோயில்ல கூட, கல்யாணம் பண்ணிக்கலாம். சாவுக்கு யாரு இடம் கொடுப்பாங்க. அதனால தான், தெருவுல போட்டுத் தூக்குறாங்க. சாவுகிராக்கின்னு சொல்றது சரியாத்தான் இருக்கு.

    அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நம்ம எல்லாரும் ஒரு நாள் சாகத்தான் போறோம்.

    நான் கோர்ட்டுக்குப் போவேன்.

    எங்கே வேணும்னாலும் போங்க. எல்லாத்துக்கும் மேல ஆண்டவன் கோர்ட்டுன்னு ஒன்னு இருக்கு.

    ஆர்.எம்.ஜி கோபமாக போனை வைத்தான்.

    ***

    ஆர்.எம்.ஜி பஸ் கம்பெனியில் பத்து பஸ்கள் ஓடின.

    அன்று அங்கு சம்பள பட்டுவாடா.

    ரவிக்குமார் கண்டக்டர்களுக்கும், டிரைவர்களுக்கும் சம்பளத்தைக் கொடுத்தான்.

    செண்பகராமன்

    Enjoying the preview?
    Page 1 of 1