Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavu Nayagi
Kanavu Nayagi
Kanavu Nayagi
Ebook308 pages1 hour

Kanavu Nayagi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஆண்கள் வர்க்கத்தையே வெறுக்கும் ஒரு நடிகைக்கு லட்சோபலட்சம் ஆண் விசிறிகள், ஆயிரக்கணக்கில் நலன்விரும்பிகள், சொடுக்கும் தூரத்தில் காரியதரிசிகள், ஆனால் ஆத்ம நண்பர்கள்? இந்த முரண் முதன்முதலில் துளிர்விடுவது வேண்டுமானால் அபிநயா பிரபலமான பின்பாக இருக்கலாம். அதன் வேர் எங்குவரை செல்கிறது என்று பார்த்தீர்களேயானால் அம்முவின் சாயலை அபிநயாவில் நீங்கள் பார்ப்பீர்கள். அரசியல் நீங்கலாக! ஆண்கள் பெரும்பான்மையாக இயங்கும் ஒரு துரையில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவதற்கு குந்தவையின் கம்பீரமும், பூங்குழலியின் வசீகரமும் மட்டும் இருந்தால் போதாது, பல நேரங்களில் நந்தினியின் ராஜதந்திரத்தையும் அது கோருகிறது. 'க்வீன்', 'தலைவி', 'அயர்ன் லேடி' இந்த மூன்று படங்களும் திரைக்கு வரும் முன்பே பட்டுக்கோட்டை பிரபாகரின் 'கனவு நாயகி' சுடச்சுட தினத்தந்தியில் தொடராக வெளிவந்து காத்திரமாக வாசகர் பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறது.
Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580100905536
Kanavu Nayagi

Read more from Pattukottai Prabakar

Related to Kanavu Nayagi

Related ebooks

Reviews for Kanavu Nayagi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavu Nayagi - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    கனவு நாயகி

    Kanavu Nayagi

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    முன்னுரை

    ஆண்கள் வர்க்கத்தையே வெறுக்கும் ஒரு நடிகைக்கு லட்சோபலட்சம் ஆண் விசிறிகள், ஆயிரக்கணக்கில் நலன்விரும்பிகள், சொடுக்கும் தூரத்தில் காரியதரிசிகள், ஆனால் ஆத்ம நண்பர்கள்? இந்த முரண் முதன்முதலில் துளிர்விடுவது வேண்டுமானால் அபிநயா பிரபலமான பின்பாக இருக்கலாம். அதன் வேர் எங்குவரை செல்கிறது என்று பார்த்தீர்களேயானால் அம்முவின் சாயலை அபிநயாவில் நீங்கள் பார்ப்பீர்கள். அரசியல் நீங்கலாக! ஆண்கள் பெரும்பான்மையாக இயங்கும் ஒரு துரையில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவதற்கு குந்தவையின் கம்பீரமும், பூங்குழலியின் வசீகரமும் மட்டும் இருந்தால் போதாது, பல நேரங்களில் நந்தினியின் ராஜதந்திரத்தையும் அது கோருகிறது. 'க்வீன்', 'தலைவி', 'அயர்ன் லேடி' இந்த மூன்று படங்களும் திரைக்கு வரும் முன்பே பட்டுக்கோட்டை பிரபாகரின் 'கனவு நாயகி' சுடச்சுட தினத்தந்தியில் தொடராக வெளிவந்து காத்திரமாக வாசகர் பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறது.

    1

    காற்றின் அலைக்கழிப்பால் வளைந்த கோடுகள் போல அங்குமிங்குமாக அசைந்து பெய்த மழை, முன் ஜாக்கிரதை ஆசாமிகளின் குடைகளைத் தாண்டி உள்ளேவந்து நனைத்தது. சகல குப்பைகளையும் சேர்த்துக்கொண்டு கிட்டத்தட்ட முழங்காலைத் தொட்டபடி ஓடிய பழுப்பு நீரில் சளக்சளக்கென்று நடந்தார்கள்.

    சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் தலையில் ஒரு மரக்கிளை விழுந்து அப்பளம் செய்திருக்க… அதை ஒரு தொலைக்காட்சி நபர் மழைக் கோட்டு போட்டுக்கொண்டு படம்பிடித்து தன் நேயர்களுக்கு மழையின் தீவிரத்தை ஐம்பது சதவிகிதம் அதிகப்படுத்திச் சொன்னார்.

    கிடைத்த இடங்களிலெல்லாம் ஒண்டிக்கொண்டு மழை நிற்கக் காத்திருந்தவர்களில் சிலர் தலையில் கர்ச்சீப் போட்டுக்கொண்டு டயர் வண்டிக் கடையில் மிளகாய் பஜ்ஜி வாங்கிக் கடித்தார்கள். பாதையோர பூக்கடைகளும், பழக் கடைகளும் பாலிதீன் போர்வை போர்த்தியிருந்தன.

    அந்தத் திரையரங்கத்தின் வாசலில் முப்பதடி உயரத்தில் நனைந்துகொண்டிருக்கும் அபிநயாவை உங்களுக்குத் தெரியும். பெட்டிக்கடைகளில் வாழைப்பழம், பீடிவாங்கும்போது புத்தக அட்டைகளில் தொங்குவதைப் பார்த்திருப்பீர்கள்.

    அனுமதித்த, அனுமதிக்காத அத்தனைச் சுவர்களிலும், மற்றும் மின்சாரப் பெட்டிகள், குப்பைத் தொட்டிகளில்கூட ஒட்டப்பட்டிருக்கும் போஸ்ட்டர்களில் அபிநயா ஒன்று காதலுடன் நாயகனைக் கட்டிப் பிடித்திருப்பாள். அல்லது கையில் துப்பாக்கி ஏந்தி முகத்தில் ரௌத்திரம் ஏந்தி உங்களைக் குறி வைத்திருப்பாள்.

    நீங்கள் வீட்டை விட்டே வெளியே வராதவர் என்றால் வீட்டுக்குள் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் வந்து உங்கள் பற்பசையில் உப்பு, புளி, காரம் எல்லாம் இருக்கிறதா என்று விசாரித்துவிட்டு, அப்படியே சேதாரமில்லாமல் ஏமாறாமல் தங்க நகை வாங்கச்சொல்லி, அதற்கு எந்த வங்கியில் கடன் வாங்க வேண்டுமென்றும் சொல்வாள்.

    விளம்பரங்களைக் கடத்தினீர்கள் என்றால் குட்டைப் பாவாடை அணிந்து நெற்றியில் புரளும் அழகான கூந்தலைப் புறங்கையால்தள்ளிவிட்டபடி, கால் மேல் கால் போட்டு கதைக்கு அவசியம் என்றால் (அல்லது புதிதாக கட்டும் பங்களாவுக்குப் பணம் போதவில்லை என்றால்) கவர்ச்சி காட்டுவேன் என்று பேட்டி கொடுப்பாள்.

    அப்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் இயக்குனரையும், சக கதாநாயகனையும் ஹாலிவுட் அளவிற்குப் பாராட்டுவாள்.

    சமீபத்தில் எப்போது சிரித்தீர்கள் என்றால்.. தன் பிறந்த நாளுக்கு அவள் சம்பாரித்த பணத்திலிருந்து அவளின் அப்பா வாங்கிப் பரிசளித்த சமீபத்திய மாடல் காரைப் பார்த்தபோதென்பாள். சமீபத்தில் எப்போது அழுதீர்கள் என்றால்… தெருவிலிருந்து தூக்கி வந்து புஜ்ஜி என்று பெயர் சூட்டி வளர்த்த நாய்க்குட்டி இறந்து போனதற்காக என்பாள்.

    இதெல்லாம் நிஜமான அபிநயா அல்ல. திரைக்காக ஒப்பனை செய்யப்பட்ட முகம் போலவே திரையுலக வழிமுறைகளாக வர்த்தகத் தந்திரமாக ஒப்பனை செய்யப்பட்ட பேட்டிகள், மற்றும் அலங்கரிக்கப்பட்ட பொய்கள் உருவாக்கிய போலி அபிநயா.

    நிஜ அபிநயாவை இதோ பார்க்கலாம்.

    படப்பிடிப்புத் தளத்தில் கேமிராவும், விளக்குகளும், மடியில் வசனக் காகிதத்துடன் இயக்குனரும், சிகரெட் பிடித்தபடி கதாநாயகனும் இன்னும் நூற்று முப்பது தொழிலாளர்களும் காத்திருக்க.. வேகமாக வந்தான் தோளில் துண்டு போட்ட உதவி இயக்குனர். என்னய்யா? வர்றாங்களா? என்றார் இயக்குனர் ராகவன்.

    தூங்கறாங்க, எழுப்புனா கோபப்படுவாங்க..ன்னு மேனேஜர் சொல்றார் சார்.

    வீட்டுக்குப் போய் தூங்கச் சொல்லுங்க. நான் புறப்படறேன் என்று விருட்டென்று எழுந்தான் கதாநாயகன் இனியவன்.

    இனியவன்… உக்காருப்பா. நீ வேற பிரச்சினை பண்ணாத என்று அவன் கையைப் பிடித்து உட்காரவைத்தார் தலையில் முக்கால்வாசி முடி கொட்டிப் போயிருந்த இயக்குனர் ராகவன்.

    வரிசையா அஞ்சிபடம் ஓடுச்சின்னா அதுக்கு இந்த ஆட்டம் ஆடுவாளா? இவ துணை நடிகையா இருந்தப்பவே நான் ஹீரோ ஆயிட்டேன் சார்.

    மெதுவா... மெதுவா பேசுப்பா.

    என்னை விடுங்க. எவ்வளவு பெரிய மூத்த இயக்குனர் நீங்க… அறுபது படம் செஞ்சிருக்கிங்க. உங்களுக்காவது மரியாதை குடுக்க வேணாமா? அன்னிக்கும் இதே மாதிரி காலையில் ஒம்போது மணிக்கு வர வேண்டியவ பனிரெண்டு மணிக்கு வந்தா. ஒரு எல்லை இருக்கு சார்.

    புரியுதுப்பா. இன்னும் நாலே நாள்ல மொத்தப் படப்பிடிப்பும் முடிஞ்சிடுது. இந்த சமயத்துல விவகாரம் வேணாம்.

    இப்படில்லாம் எதுக்கு சார் சமாதானப்படுத்திக்கிறிங்க? உணவு இடைவேளை எல்லாருக்கும் ஒரு மணி நேரம்தான். அது முடிஞ்சி மேற்கொண்டு ஒரு மணி நேரமாச்சி. இவ பாட்டுக்கு கேரவன்ல தூங்கிட்டிருந்தா எப்படி சார்?

    கொஞ்சம் அமைதியா இருப்பா. இப்போ அபிநயா ஜெயிக்கிற குதிரை. அவ நடிச்ச படமெல்லாம் வசூல்ல சக்கைப் போடு போடுது. ரெண்டு வருடத்துக்கு கால்ஷீட் இல்ல. ஆறு படம் பண்ணிட்டிருக்கா.

    இதெல்லாம் நிரந்தரம் இல்ல சார். இந்த மாதிரி திமிரா ஆட்டம் போட்ட பல பேரை இந்தத் திரை உலகம் பார்த்துடுச்சி சார். நீங்க தயாரிப்பாளரை வரச்சொல்லுங்க முதல்ல. நான் பேசறேன். இன்னிக்கு ஒரு முற்றுப் புள்ளி வெச்சாகணும் சார்.

    அவர்ட்ட நான் பேசிட்டேன். அனுசரிச்சிப் போங்க சார்... படம் நின்னுடக் கூடாதுன்றார். இருபது கோடிக்கு மேல இறக்கியிருக்கார் தம்பி. அவர் கவலையையும் பாக்கணுமில்ல?

    நான் மட்டும் தயாரிப்பாளரா இருந்தா இவளை பாதி படத்துலயே தூக்கிப் போட்ருப்பேன். நடிகைக்கா சார் பஞ்சம்?

    சிரித்தார் ராகவன்.

    என்ன சார் சிரிக்கிறிங்க?

    ஒரு படம், ரெண்டு படம் தாண்டறதுக்குள்ளே பல பேர் காணாமப் போயிடறாங்க. இவ நாப்பது படம் செஞ்சிட்டா. தமிழ் நாட்டுல ஆயிரத்தி இருநூறு ரசிகர் மன்றம் வெச்சிருக்கற நடிகை.அவளோட மார்க்கெட்டைக் குறைச்சி மதிக்க முடியாது தம்பி நான் நிறைய பார்த்துட்டேன். அதனாலதான் எருமை மாட்டு மேல மழை பேய்ஞ்ச மாதிரி பொறுமையா இருக்க முடியுது.

    படப்பிடிப்புத் தளத்திற்கு வெளியில் வரிசையாக நின்றிருந்த சொகுசு பஸ்கள் போலிருந்த கேரவன் வாகனங்களில் ஒன்றுக்குள் அபிநயாவுக்கு ஒப்பனை டச்சப் செய்துகொண்டிருந்தார் ஒப்பனையாளர் வரதன்.

    அவருக்கு முகம் கொடுத்தபடி காதில் அணிந்திருந்த ப்ளூடூத் மூலம் அலைபேசியில் பேசினாள் அபிநயா.

    கடைசியா என்ன சார் சொல்றிங்க?

    இப்போ கொஞ்சம் கஷ்டம்மா. புரிஞ்சுக்கோ. நீ டப்பிங் பேசி முடிச்சிட்டேன்னா… வியாபாரம் பண்ணி கைக்கு பணம் வந்ததும் உனக்கு செட்டில் பண்ணிடுவேன் என்றார் தயாரிப்பாளர் குமரேசன் எதிர்முனையில்.

    எனக்கு ஒரு வயசுலயே காது குத்தி கம்மல் போட்டுட்டாங்க சார். என் முகத்தைப் போட்டு முதல் விளம்பரம் குடுத்த அன்னிக்கே முழு வியாபாரமும் முடிச்சி அந்தப் பணத்துல ரெண்டு படத்துக்கு பூஜை போட்டுட்டிங்க. வளவளன்னு பேசாதிங்க. எனக்கு மிச்சப் பணத்தை செட்டில் செஞ்சாதான் டப்பிங் பேசுவேன்.

    உன் குரல்லதான் படம் வரணும்னு எந்த அவசியமும் இல்ல. வேற ஒருத்தரை பேசச் சொல்லி படத்த முடிச்சிடுவேன்.

    முதல் படத்துலேர்ந்து எனக்கு நானேதான் பேசிட்டிருக்கேன். தமிழ்ப் பொண்ணு சார். ஒப்பந்தத்துலயும் நான் தான் பேசுவேன்னு போட்ருக்கேன். அதை நீங்க மீறினா நான் சங்கத்துக்குப் போவேன். கோர்ட்டுக்கும் போவேன்.

    ஒரே ஒரு வார்த்தை சொல்றேன் அபிநயா.

    சொல்லுங்க சார்.

    என்னைப் பகைச்சுக்காதே!

    பரவால்ல சார்… உங்களைப் பகைச்சிக்கிட்டா என்னதான் ஆகும்னு நானும் தெரிஞ்சிக்கறேனே... வைங்க போனை என்றாள் ஆத்திரமாக.

    கேரவனை விட்டு வெளியே வந்து படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த அபிநயா நேராக இயக்குனர் ராகவனிடம் வந்து, மன்னிச்சிடுங்க சார். நேத்து ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் ஒரு தெலுங்கு படத்துல நடிச்சேன். அதான் தூங்கிட்டேன் என்றாள்.

    பரவால்லம்மா... உன் வசனம் பார்த்துக்கறியா?

    அதுக்கு முன்னாடி.. இனியவன் என்னை திமிர் பிடிச்சவ அது இதுன்னு பேசினாராமே. அவர் எங்கிட்ட மன்னிப்பு கேக்கணும் சார் என்றபடி இனியவனை முறைத்தாள்.

    புகையும் சிகரெட்டுடன் எழுந்து உதடுகள் துடிக்க அவளைப் பார்த்து, ஆமாம். அப்படித்தான் சொன்னேன். மன்னிப்பெல்லாம் கேக்க முடியாது. இப்ப என்ன செய்யணும்ங்கறே. என்றான் இனியவன்.

    2

    அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஒரு நாற்காலியில் அமர்ந்து கையைக் கட்டிக்கொண்டாள் அபிநயா.

    தன் வழுக்கை மண்டையைத் தடவிக்கொண்ட இயக்குனர் ராகவன் அவளிடம் வந்து கெஞ்சலாக, ஏற்கெனவே நேரம் போயிட்டிருக்கும்மா... வேலை பார்ப்போமே… பாரும்மா… எத்தனைபேர் காத்திருக்காங்க என்றார்.

    சார்... நான் பதில் சொல்ல வேண்டியது தயாரிப்பாளருக்கும், இயக்குனர் உங்களுக்கும்தான். தாமதமா வந்ததுக்கு காரணமும் சொல்லி மன்னிப்பும் கேட்டுட்டேன். இவருயாரு என்னைப்பத்தி விமரிசனம் செய்றதுக்கு.

    ஏதோ தெரியாம சொல்லிட்டார். விட்ரும்மா.

    அதுக்குதான் சார் மன்னிப்பு கேக்கச் சொல்றேன்.

    கொஞ்சம் தள்ளி தன் காரில் சாய்ந்து நின்றபடி சிகரெட் பிடித்த இனியவனிடம் ஓட்ட நடையில் வந்தார் ராகவன்.

    தம்பி... அவ பிடிவாதம்தான் உனக்குத் தெரியுமே... நேரம் போயிட்டிருக்கு. இன்னிக்கு இந்தக் காட்சியை முடிச்சாகணும்.

    அதுக்கு?

    ஒரே ஒருவார்த்தைஸாரி சொல்லிட்டாமுடிஞ்சது.

    தாமதமா வந்ததுக்கு உங்ககிட்ட ஸாரி சொன்னா. எங்கிட்ட சொன்னாளா சார்? அதெல்லாம் சொல்ல முடியாது சார் என்ற இனியவன் போனில் தயாரிப்பாளரின் எண்ணைப் போட்டான்.

    பக்கத்து படப்பிடிப்புத் தளத்தில் செய்தி சேகரிக்க வந்த முன்னணிப் பத்திரிகையின் நிருபர் ராஜராஜன் வடையை அவசரமாக மென்றபடி இங்கு வந்து சேர்ந்தார்.

    பாதி பானையை வைத்துக் கட்டினதுபோல வயிறு தள்ளியிருக்க... பேண்ட் மிகவும் அபாயகரமாக வழுக்கி இடுப்பில் தொங்கியது. கண்ணாடிக்குக் கயிறு கட்டி கழுத்தில் மாலை போல போட்டிருந்தார். தோளில் தொங்கிய தோல் பை உப்பலாக இருந்தது.

    பழச்சாறு பருகியபடி அலைபேசியில் சினிமா விமரிசனங்கள் படித்துக் கொண்டிருந்த அபிநயாவிடம் வந்து அவராகவே ஒரு நாற்காலி இழுத்துப் போட்டுக்கொண்டு, என்னம்மா கண்ணு பிரச்சினை? என்றார்.

    வேகமாக அங்கு வந்த ராகவன், ராஜராஜன் சார்... கொஞ்சம் தயவுசெய்து எந்திரிச்சிப் போறிங்களா? எதாச்சும் வம்புக்குன்னே அலையாதிங்க. என்றார்.

    வம்பு நடந்தா அதை மக்களுக்குச் சொல்றதுதான் எங்க வேலை. வம்பு நடக்காம பார்த்துக்கங்க சார். படம் வெளியாகற சமயம் மட்டும் எங்களைப் பார்த்தா தெய்வம் மாதிரி தோணும். மத்த நேரத்துல கொசுவை விரட்ற மாதிரி விரட்றிங்களே. என்று காட்டமாக பதில் சொன்னவர் மீண்டும் அபிநயா பக்கம் திரும்பி, நீ சொல்லு கண்ணு என்றார்.

    பிரச்சினை சரியாகிட்டா விட்ரலாம் சார். சரியாகலைன்னா நானே உங்களுக்குப் போன் பண்ணி செய்தி என்னன்னு சொல்றேன். இப்ப நீங்க புறப்படுங்க என்றாள் அபிநயா.

    இப்படிப் பதமா சொன்னா போயிட்டுப் போறேன்' என்று கிளம்பிய ராஜராஜன் மரத்தடியில் வட்டமாக நின்று கிசுகிசுத்துக்கொண்டிருந்த உதவி இயக்குனர்கள் பக்கம் வந்து, என்னடா பிரச்சினை? நீங்களாவது சொல்லித் தொலைங்களேன்டா? படப்பிடிப்பு ஏன் நடக்கலை?" என்று அவர்களின் வாயைக் கிளறத் துவங்கினார்.

    இப்போது அபிநயாவின் போன் ஒலிக்க எடுத்துப் பார்த்து, வணக்கம் சார். சொல்லுங்க என்றாள்.

    இப்பதான் இனியவன் பேசுனார். இயக்குனர் ராகவனும் பேசுனார். இனியவன் உன்னைப் பத்திப் பேசுனது தப்புதான்ம்மா… ஆனா அவன் உன்னைவிட சீனியர். மன்னிப்புக் கேக்கறதெல்லாம் வேணாம். அவனைத் தண்டிக்கிறேன்னு நீ என்னை தண்டிச்சிடாதம்மா... அவனுக்கு வேற வழில பாடம் கத்துக் குடுக்கலாம். என்வார்த்தையை நம்பு. இப்ப நடிச்சிக் குடுத்துடும்மா… ப்ளீஸ்… என்றார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேணுகோபால்.

    உங்க வார்த்தைக்காக ஒத்துக்கறேன் சார். அப்பறம் நேத்தே என் கணக்குல பணம் போடறேன்னு சொன்னிங்க. இன்னும் கணக்குல வரலையே சார்.

    அப்படியா? ஆபீஸ்ல சொல்லிருந்தனே… மறந்துட்டானுங்க போலிருக்கு. எல்லாம் வெத்துப் பசங்க. பைசாவுக்குப் பிரயோஜனமில்லம்மா… நாளைக்குக் காலையில் பண்ணிடறேன்ம்மா.

    அபிநயா போனை உதவிப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு எழுந்து இயக்குனரிடம் வந்து, என் வசனம் என்ன சார்? என்றாள்.

    ஆங்காங்கே ஓய்வாக உட்கார்ந்திருந்த தொழிலாளர்கள் அனைவரும் சுறுசுறுப்பானார்கள்.

    ராகவனிடம் இனியவன் வந்து நின்றான். பாரும்மா. உன் கணவன் ஆஃபீசுக்குப் போறேன்னு போனவன் தலைவலின்னு பாதிலயே திரும்பிட்டான். நீ கரிசனமா காபி போட்டுக் கொடுத்து தைலம் தேய்ச்சி விடறே.

    நான் ரெடி சார் என்றாள் அபிநயா.

    ***

    அந்த ஐஸ்க்ரீம் கடையில் வாடிக்கையாளர்களுக்கு மெனு கார்ட் நீட்டி அவர்கள் கேட்கும் ஐஸ்க்ரீம் மற்றும் நொறுக்குத் தீனி அயிட்டம்களை பில் போட்டு நீட்டப்படும் கடன் அட்டையை இயந்திரத்தில் செலுத்தி தொகை அடித்து அவர்கள் பக்கம் திருப்பிவைத்து அவர்கள் எண் டைப் செய்ததும் வெளியே வரும் துண்டுச் சீட்டைக் கிழித்துக் கொடுப்பதை மின்னல் வேகத்தில் செய்துகொண்டிருந்தான் ஆனந்தன்.

    அவன் தோளில் கை வைத்தான் சக ஊழியன் திவாகர்.

    ஆனந்த், இன்னிக்கு சீக்கிரம் போகணும்னு சொன்னியே... நீ கிளம்பு. நான் பார்த்துக்கறேன் என்ற திவாகரை தன் நாற்காலியில் அமரவைத்து இறங்கிக்கொண்ட ஆனந்தன் மதிய உணவு கொண்டு வந்த டிஃபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் கொண்ட சிறிய பை, மற்றும் ஓரமாக வைத்திருந்த ஹெல்மெட் எடுத்துக் கொண்டு கடையைவிட்டு வெளியே வந்தான்.

    போன் எடுத்து, அமுதா நான் புறப்படறேன். இன்னும் பத்து நிமிடத்துல உன் கடையில் இருப்பேன். புறப்படத் தயாரா இரு என்றுவிட்டு தன் ஸ்கூட்டரைக் கிளப்பிப் புறப்பட்டான்.

    ஐந்து தளங்கள் கொண்ட குளிரூட்டப்பட்ட அந்த பிரம்மாண்டமான ஜவுளிக்கடையில் பெண்களுக்கான மூன்றாவது மாடியில் விற்பனைப் பெண்கள் ஒரே மாதிரியான டிசைனில் புடவை உடுத்தி மார்பில் பெயர் வில்லை குத்தியிருந்தார்கள்.

    அமுதா தன் சூபர்வைசர் நந்தினியிடம் வந்தாள்.

    புறப்படறியாம்மா? என்றாள் நந்தினி.

    ஆமாம் மேடம்.

    எந்த ஊர்லேர்ந்து வர்றாங்கன்னு சொன்னே?

    சென்னைதான் மேடம்.

    மாப்பிள்ளை என்ன செய்றாரு?

    பாத்திரக் கடை வெச்சிருக்காரு மேடம்.

    நாளைக்கு நல்ல செய்தி சொல்லணும். போய்ட்டு வா கை குலுக்கி அவள் அனுப்பிவைக்க.. அமுதா கடைக்கு வெளியில் சாலையில் காத்திருந்த ஆனந்தனின் ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டாள்.

    ஸ்வீட், காரம், பால் பாக்கெட், பூ, பழம் எல்லாம் வாங்கிட்டேன். உனக்கு புருவம் திருத்திக்கணும்னு சொன்னேல்ல? போறப்ப செஞ்சிட்டுப் போயிடலாமா அமுதா? வண்டியை ஓட்டியபடியே கேட்டான் ஆனந்தன்.

    பரவால்லண்ணா.

    "முதல்லயே போட்டோ அனுப்பி அவங்களும் பாத்தப்பறம்தான் நேர்லவர்றாங்க. அதனால அநேகமா அமைஞ்சிடும் அமுதா. நான் ஆசைப்பட்ட மாதிரியே உள்ளூர்லயே மாப்பிள்ளை அமையப் போறதுல

    எனக்கு ஏகப்பட்ட சந்தோஷம்."

    ஆமாண்ணா.

    என்ன குரல் டல்லா இருக்கு.

    கொஞ்சம் பயமா இருக்குண்ணா.

    என்ன பயம்!

    "ஒரு பெரிய விஷயத்தை அவங்ககிட்ட நீ மறைச்சிருக்கியே? அதை நினைச்சாதான்

    Enjoying the preview?
    Page 1 of 1