Viral Nuniyil Inaiyathalam
By Guhan
()
About this ebook
Read more from Guhan
Musolini Rating: 0 out of 5 stars0 ratingsRAW Rating: 5 out of 5 stars5/5Ulavu Ranigal Rating: 0 out of 5 stars0 ratingsCorporate Saamiyargal Rating: 0 out of 5 stars0 ratingsIruvar: M.G.R vs Karunanidhi Uruvana Kathai Rating: 0 out of 5 stars0 ratingsSherlock Holmessin Saagasa Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsMuthuramalinga Thevar Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsMarilyn Monroe Rating: 0 out of 5 stars0 ratingsJ.J: Tamizhagathin Irumbu Penmani Rating: 0 out of 5 stars0 ratingsPeriyar Rasigan Rating: 0 out of 5 stars0 ratingsCredit Card Rating: 0 out of 5 stars0 ratingsUlaga Cinema Rating: 0 out of 5 stars0 ratingsCinema! Cinema!! - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsPena Thirudan Rating: 5 out of 5 stars5/5Harshad Mehta Ennum Pana Saathan Rating: 0 out of 5 stars0 ratingsHitler - Oru Nalla Thalaivan Rating: 0 out of 5 stars0 ratingsSherlock Holmessin Ninaivu Kurippugal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Viral Nuniyil Inaiyathalam
Related ebooks
Tamil Inaiya Chitrithazhgal Rating: 0 out of 5 stars0 ratingsMennulagam Rating: 0 out of 5 stars0 ratingsWindows 7 Rating: 4 out of 5 stars4/5உங்கள் வணிக இணையதளத்தை எவ்வாறு உருவாக்குவது: தமிழில் ஒரு வழிகாட்டி Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2023 Rating: 0 out of 5 stars0 ratingsOli Pookkum Malai... Rating: 0 out of 5 stars0 ratingsIni Nitham Yutham Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsSanketha Selaavani Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Thuligal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsPayanulla 100 Inaiyathalangal Rating: 0 out of 5 stars0 ratingsPuthumai Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsPuthumai Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsArabic Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsவிஷுவல் பேசிக் டாட் நெட் Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Panathil Nadantha M.G.R Noottrandu Vizhakkal Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Nimisham Rating: 2 out of 5 stars2/5Kabaddi... Kabaddi! Rating: 0 out of 5 stars0 ratingsThottral Jaippai Rating: 5 out of 5 stars5/5Varamaga Nee Varavendum Rating: 5 out of 5 stars5/5Saatchigal Illaiyadi Papa! Rating: 5 out of 5 stars5/5Sollungal Seyyapadum Rating: 0 out of 5 stars0 ratingsThulli Sellum Megam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Viral Nuniyil Inaiyathalam
0 ratings0 reviews
Book preview
Viral Nuniyil Inaiyathalam - Guhan
http://www.pustaka.co.in
விரல் நுணியில் இணையதளம்
Viral Nuniyil Inaiyathalam
Author:
குகன்
Guhan
For more books
http://www.pustaka.co.in/home/author/guhan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
விரல் நுணியில் இணையதளம்
இணையதளம் - இன்னும் சில விபரங்கள்
புதிய இணையக்கணக்கு ஐகானை உருவாக்கு
விருப்ப வலைப்பக்கங்கள் (Favourites)
ஈ-மெயில் ஒரு அறிமுகம்
இணையதளத்தில் மற்ற சேவைகள்
இணையத்தளத்தில் விளம்பரமும், வியாபாரமும் (e-commerce)
இன்டர்னெட் திருடர்கள் ஜாக்கிரதை!!
இலவச இணையதள பக்கம்
இணையதளத்தில் ஒரு தேடல்
இணையதளத்தில் தமிழில் எழுதுவது!!
விரல் நுணியில் இணையதளம்
உலகத்தை திறந்து பார்க்க மனிதனின் அறிய கண்டுப் பிடிப்பு தான் 'இணையத்தளம்'. இன்று பல வீட்டில் கணினி ஒரு அங்கமாவே மாறிவிட்டது. அலுவலகத்தில் கணினி இயக்க தெரியாதவர்களை கைநாட்டுக்காரன் போல் தான் பார்க்கிறார்கள். வரிசையில் காக்க வைத்த அரசாங்க அலுவலகங்கள் கூட கணினி இயக்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படிப்பட்ட கணினியில் இணையத்தளம் என்ற மந்திர சாவியின் சேவை இல்லை என்றால் அந்த கணினி கண்ணில்லாத ஓவியம் தான்.
இணையத்தளத்தில் வங்கி சேவை, தேர்வு மதிப்பெண், செய்திகள், பங்கு சந்தை வணிகம் என்று பல தகவல்கள் கிடைக்கின்றன. நம்மால் தகவலும் கொடுக்க முடிகின்றன.
இணையதளம் என்பது ஒரு கணினியை இன்னொரு கணினியுடன் தகவல் பரிமாறிக் கொள்ள இணைப்பது. முதன் முதலில் இதை அமெரிக்காவில் இரண்டு பல்கலைக்கழத்தின் இடையே தகவல் பரிபாறிக்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அந்த பல்கலைக்கழத்தின் தகவல் பரிமாறும் முறை விரைவாகம், அவர்களின் வேலைக்கு உதவியாகவும் இருந்தது. பிறகு, நாளடைவில் இணையதளம் அசுரவளர்ச்சி அடைந்து அது இல்லாமல் பல தொழில் நடத்த ம்டுஇயாத நிலையில் இருக்கிறோம்.
நெட்வொர்க்
'தனி மரம் தோப்பாகாது' என்பது போல் தனி கம்ப்யூட்டர் பெரிய பலன் அளிக்காது. கம்ப்யூட்டர் இதர கம்ப்யூட்டரோடு இணைந்தால் தான் அதிக பயன் அடைய முடியும். கம்ப்யூட்டர்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதை 'நெட்வொர்க்' என்கிறோம்.
இண்டர்நெட் என்றால் என்ன?
நெட்வொர்க்குகளை ஒன்றோடு ஒன்று இணைப்பதை இண்டர்நெட் என்கிறோம்.
இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்கள்
இண்டர்நெட் ஒரு ஹைவே ரோட் போன்றது. கம்ப்யூட்டர், இண்டர்நெட் சேவை
வைத்திருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சாதி, மதம், கருப்பு, வெள்ளை, ஏழை, பணக்காரன் என்ற பேதம் எல்லாம் கம்ப்யூட்டருக்கும், இண்டர்நெட்டுக்கும் கிடையாது. யார் வேண்டுமானாலும் நுழையலாம். பயன்படுத்தலாம்.
காரணம், இண்டர்நெட் யார் கட்டுப்பாட்டிலுமில்லை. நிர்வகிப்பவர்களும் யாருமில்லை. இண்டர்நெட்டை நிர்வாகம் செய்ய ஒரு அமைப்போ கிடையாது. யாருக்கும் சொந்தமும் இல்லை.
கிளையன்ட் மற்றும் செர்வர்
ஒரு துணி கடை போகுறீர்கள். எனக்கு சிவப்பு கலர் துணி வேண்டும் என்று கடைக்காரனிடம் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இப்போது நீங்கள் தான் ‘கிளையன்ட்’. உங்கள் வேண்டுக்கோளுக்கு இணங்க கடைக்காரர் சிவப்பு துணியை எடுத்து போடுகிறார். இப்போது இவர் தான் 'செர்வர்'.
துணி வாங்கிய பிறகு கடைக்காரர் துணியின் விலையை 400 என்கிறார். இப்போது இவர் 'கிளையன்ட்'. அவர் சொன்ன விலையை கொடுத்துவிட்டு துணியை வாங்குகிறீர்கள். இப்போது நீங்கள் 'செர்வர்',
இணையதளம் போதுவாக ‘கிளையன்ட் மற்றும் செர்வர்’ அடிப்படையில் தான் இயங்குகிறது.
இணையதளம் - இன்னும் சில விபரங்கள்
ஹோஸ்ட்
இணையதளத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை 'ஹோஸ்ட்'. இது ஒரு வார்த்தை தான். ஆனால், இரண்டு அர்த்தங்களாக பயன்படுத்தப்படுகிறது.
முதல் அர்த்தம். இணையதளத்தில் இணைந்துள்ள ஒரு கம்ப்யூட்டரை ஹோஸ்ட் என்று சொல்லுவார்கள். யாஹூ நிறுவனத்தின் கம்ப்யூட்டரில் இருந்து ஃபைலை டவுன்லோடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இதில் உங்கள் கம்ப்யூட்டரும், யாஹூ கம்ப்யூட்டரும் ஹோஸ்ட் தான்.
இரண்டாவது அர்த்தம். ஒரு கம்ப்யூட்டரை ஒருவர் மட்டும் பயன்படுத்தலாம். அல்லது பலர் ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம். அப்படி மல்டி யூசர் பயன் படுத்தும் கம்ப்யூட்டரை தான் ஹோஸ்ட் என்று சொல்லுவார்கள்.
வெப் பிரௌசர்
தெரிந்த உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டும். எப்படி செல்லலாம்... பைக், ஆட்டோ, பஸ், கார், இல்லை என்றால்.... நடராஜா சர்வீஸ். இப்படி எதில் வேண்டுமானாலும் செல்லலாம். இல்லையா...! அது போல தான் இணையதள பக்கத்தை பார்ப்பதும்
நான் ஒரு இணைய பக்கத்தை பார்க்க வேண்டும். என்னிடம் கணினி, மோடம், பிராட்பேண்ட் இணைப்பு எல்லாம் இருக்கு... என்னால் இணைய பக்கத்தை பார்க்க முடியுமா....? கண்டிப்பாக முடியாது. இணைய பக்கங்களுக்கு உங்களை அழைத்து செல்ல வெப் பிரௌசர் உங்கள் கணினியில் இருக்க வேண்டும். அதாவது உங்களை உறவினர் வீட்டுக்கு செல்ல உதவும் வண்டி போல் இணைய பக்கங்களை கொண்டு செல்ல வெப் பிரௌசர். அவ்வளவு தான்.
வண்டியில் எப்படி பைக், கார், பஸ் என்று பல வகைகள் இருக்கிறதோ