Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Emmul Maraintha Karisal
Emmul Maraintha Karisal
Emmul Maraintha Karisal
Ebook848 pages4 hours

Emmul Maraintha Karisal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“கரிசல் மண்ணில் ஆரம்பித்து, கரிசல் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இந்நூல் அலசி ஆராய்கின்றது. புகழ்பெற்ற சமூகவியலாளர் எம்.என்.ஸ்ரீநிவாஸ் எழுதிய A Remembered Village என்ற நூலினை நினைவூட்டும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது”.

முனைவர் ஜோசப் துரைராஜ், ஆங்கிலப் பேராசிரியர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம். “வாழ்தல் வேண்டி புலம் பெயரும் மாந்தர் யாவரும் வாசிக்க வேண்டிய இன்றியமையாத நூல்”.

முனைவர் கோ.வீரகுமாரன், மேனாள் பேராசிரியர், கேரள வேளாண்மை பல்கலைக்கழகம். “வரலாறு மற்றும் வாழ்வியல் குறித்த எண்ணங்களை எழுத்தாக்கிவைப்பதே நாம் நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் அழியாச் சொத்து. இப்பணியினை செவ்வனே செய்திருக்கிறார் இந்நூலாசிரியர்”. எ.எஸ்.அம்மையப்பன், கிருத்துவ மருத்துவக் கல்லூரி (CMC), வேலூர். “ஆழமான ஆய்வினை அடிப்படையாகக் கொண்டிருந்தும், ஒரு நாவலை வாசிப்பது போல வாசிப்புச் சுவாரசியம் கொண்ட நூலாக விளங்குவது இதன் சிறப்பாகும்.

முனைவர் சுந்தர் காளி, மேனாள் தமிழ்ப் பேராசிரியர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம். “A go-to book to show how penetrating and detailing a participatory exploration can be, if carried out passionately. And it is astounding to notice the details” Dr.R.Ramesh, Associate Professor, National Institute of Rural Development, Hyderabad. “கிராமியச் சமூகவியல், கிராமியப் பொருளாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயன்தரத்தக்க ஒரு நூல். முனைவர் பி.முத்துராமன், கிராம சமூகவியலாளர், இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத்.

Languageதமிழ்
Release dateApr 27, 2024
ISBN6580177610905
Emmul Maraintha Karisal

Related to Emmul Maraintha Karisal

Related ebooks

Reviews for Emmul Maraintha Karisal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Emmul Maraintha Karisal - Dr. N. Narayanasamy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எம்முள் மறைந்த கரிசல்

    (ஒரு கரிசல் கிராமத்தின் வரலாறும் வாழ்வியலும்)

    Emmul Maraintha Karisal

    Author:

    முனைவர். ந. நாராயணசாமி

    Dr. N. Narayanasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/n-narayanasamy

    பொருளடக்கம்

    முன்னுரை

    வாழ்த்துரை

    மதிப்புரை

    அணிந்துரை

    அணிந்துரை

    பகுதி I சமூகப் பொருளாதாரப் பின்புலம்

    கரிசல் நிலம் : ஒரு பார்வை

    குடியேற்ற வரலாறு

    பகுதி II வாழ்வியல் கூறுகள்

    ஊரின் கட்டமைப்பு

    ஊரின் பொது ஆதாரங்கள்

    சாதி மற்றும் அரசியல்

    சமயம் (மதம்), சடங்குகள், சம்பிரதாயங்கள்

    பெண்களின் நிலை

    வேளாண்மை: நிலத்தைப் பண்படுத்துதல், உழுதல், உரமிடுதல்

    வேளாண்மை: விதைத்தல் மற்றும் பயிர்ப் பராமரிப்பு

    வேளாண்மை: அறுவடை செய்தல், சேமித்தல், சந்தையிடுதல்

    கரிசல் வேளாண்மையின் சிறப்பியல்புகள்

    கால்நடைகள்

    சுகாதாரம், உடை, உடல்நலம்

    உணவு முறைகள்

    பழக்க வழக்கங்கள்

    கல்வி

    விளையாட்டுகள்

    பொழுதுபோக்குகள்

    பகுதி III மாற்றங்கள் மற்றும் விழுமியங்கள்

    மாற்றங்கள்

    பின்னுரை (EPILOGUE)

    கலைச் சொற்கள்

    மேற்கோள் நூல்கள்

    பிற்சேர்க்கை

    இந்நூல்...

    ஊரை உண்டாக்கி, வளர்த்து, வாழ்வாதாரங்களைப் பெருக்கியதோடு பல தலைமுறையினருக்குச் செம்மையாக வாழும் வாழ்வியல் முறைகளைக் கற்றுக் கொடுத்து மறைந்த முன்னோர்களுக்கும்,

    ஊரில் தற்பொழுது வாழ்ந்துவரும் மக்களுக்கும்,

    ஊரிலிருந்து கடந்த ஐம்பதாண்டுகளில் இடம்பெயர்ந்து, இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு நகரங்களிலும், அயல்நாடுகளிலும் குடியேறி ஊரில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை நாள்தோறும் அசைபோடும் அனைத்து நெஞ்சங்களுக்கும்,

    விழுமியங்கள் நிறைந்த வேர்களைத் தேட முயற்சிக்கும் ஊரில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கும்,

    முன்னுரை

    கோபாலபுரம் எனது ஊர். அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில், கோவில்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு குக்கிராமம். இவ்வூர் புகழ் பெற்ற கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் இடைசெவல் என்னும் ஊருக்கு வடமேற்கே சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. முற்றிலும் கரிசல் நிலம் சூழ்ந்ததாய், வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டதாய், வானம் பார்த்த பூமியாய், உழைப்பையே மூலதனமாய்க் கொண்டதாய் அமைந்தது என்ற பெருமைக்குறியது எனது ஊர். இவ்வூர் நாடு விடுதலை அடைந்த காலகட்டத்தில் ஊரிலுள்ள அனைத்துக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கரிசல் வேளாண்மையே. எவ்வித போக்குவரத்து வசதிகளும், கல்விக் கட்டமைப்புகளும் இல்லாத காலகட்டத்திலும் கூடக் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டுமென்ற ஆர்வம் மக்களிடையே இருந்தது. பல இன்னல்களுக்கிடையே ஊரிலுள்ள சிலர் பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் முடித்தனர். முடிக்காதவர்களும் உண்டு.

    திட்டமிட்ட வளர்ச்சிப்பாதையில் நாடு பயணிக்கையில் ஊரிலும், ஊரைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. எனினும், வேளாண்மையே முதன்மையான வாழ்வாதாரமாக அமைந்திருந்தது. பிற வேலைவாய்ப்புகள் மிகக்குறைவு. ஊரில் மக்கள் தொகை உயர்ந்துகொண்டு சென்றது. வேளாண் உற்பத்தித் திறனில் மாற்றம் எதுவும் நிகழவில்லை. இருப்பதை வைத்து வாழ வேண்டும் என்ற நிலை. மக்களிடையே பணப்புழக்கம் இல்லை.

    எல்லா வேலைகளையும் ‘மனித சக்தி’ கொண்டே செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை. எனவே, வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் (ஆறு, ஏழு வயதுக்குப் பின்னர்) முதியவர் வரை அனைவரும் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி சென்றவர்கள் விடுமுறை நாட்களில் படிப்போடு அனைத்து வகையான வேளாண் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். அது மட்டுமின்றி, பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் அதிகாலையில் எழுந்து பெற்றோர்களுக்கு உதவியாக வீட்டைப் பெருக்குதல், கால்நடைகளுக்கு கூளம் இடுதல், தொழுவத்தில் சாணி அள்ளிக் குப்பைக் கிடங்கில் போடுதல், கிணற்றில் நீர் இறைத்தல், கம்பம்புல் குற்றுதல், மாவாட்டுதல், மாவரைத்தல் (திரிகையில்), பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல், கழிவுநீர்க் கால்வாய்களைச் சுத்தம் செய்தல் முதலான வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். பள்ளி முடிந்து வரும் மாலை வேளையிலும் வேலைகள் காத்திருக்கும். எனவே ஊரில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் அனைவருக்கும் வீட்டு வேலைகளிலும் காட்டு வேலைகளிலும் (விவசாய) நிறைந்த அனுபவம் கிடைத்தது.

    வேலை இருந்துகொண்டே இருக்கும். இருப்பினும், ஊரிலுள்ள அனைவரும் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை உள்ளூரில் கிடைக்கக் கூடிய ‘விலையில்லாப்’ பொருட்களைப் பயன்படுத்தி விளையாடி மகிழ்ந்தனர். விளையாட்டிற்குப் பஞ்சம் வந்ததில்லை. இவையன்றி, வாசித்தல், வானொலி கேட்டல், உரையாடுதல், பக்கத்து ஊரில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்தல்/கேட்டல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளில் ஈடுபடுத்தி வாழ்வை மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் ஆக்கிக் கொண்டனர். அருகிலுள்ள ‘நகரத்திற்கு’ அவசியமின்றி யாரும் போவது கிடையாது. அவர்களது வாழ்வு முழுவதும் ஊரைச் சுற்றியே இருந்தது. ஊருக்குள் கட்டுப்பாடு இருந்தது. ஊரில் வாழ்ந்த முதியவர்கள், பெரியவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மூலமாகக் கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான வழிகாட்டுதல் மற்றும் விழுமியங்கள் இளைய தலைமுறையினருக்குக் கிட்டின.

    மொத்தத்தில், ஊரில் பிறந்து வளர்ந்த அனைவருக்கும் குழந்தைப் பருவத்திலிருந்தே விழுமியங்கள் நிறைந்த பட்டறிவு அனுபவமும் (experiential learning), மற்றும் படிப்பறிவு அனுபவமும் (academic learning) ஆகியவை சரியான விகிதத்தில் ஒரு சேரக் கிடைத்தன. இது ஒரு நீண்ட நெடிய பசுமையான, மறக்கவொண்ணா அனுபவம்; நெஞ்சை விட்டு அகல மறுக்கும் அனுபவம்; ஊனுடன் கலந்து விட்ட நினைவுகள்; வாழ்நாள் முழுவதும் மனதில் அசைபோடத்தக்க இனிய அனுபவங்களின் திரட்டு.

    இத்தகைய அனுபவங்கள் நமது இன்றைய தலைமுறையினருக்குக் கிட்டவில்லை. படிப்பதற்காகவும், வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காகவும் பெரும்பாலான குடும்பங்கள் ஊரை விட்டு இடம் பெயர்ந்துவிட்டன. ஊர் ஏறக்குறையக் கைவிடப்பட்டது போன்ற நிலை. பெரும்பாலான வீடுகள் காணாமல் போய்விட்டன. நீண்ட, நெடிய விழுமியங்கள் செறிந்த வரலாற்றினைக் கொண்ட இனம், நகர்ப்புறங்களிலும், பிற நாடுகளிலும் கரைந்தும் மறைந்தும் போய்விட்டன.

    அவ்வாறு கரைந்து போனவர்கள் அனைவரும் ஊரையும்,உறவுகளையும் மறக்கவில்லை; நினைவுகளை இழக்கவில்லை. ஊரில் பெற்ற தங்கள் அனுபவங்களை மனதிற்குள் அடிக்கடி அசை போடுகின்றனர். எவற்றையோ இழந்தவர்கள் போலத் தடுமாறுகின்றனர். அதே சமயத்தில், தாங்கள் பெற்ற அனுபவங்களை அடுத்த தலைமுறையுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் அவர்களிடம் தென்படுகிறது. அதில் ஆர்வமும் காட்டுகின்றனர். அதன் விளைவாகச் சில குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ‘குடும்பங்கள் சந்திக்கும் விழா’ நடத்துகிறார்கள். ஊரிலுள்ள அனைவரும் ஊரில் நடக்கும் நிகழ்வுகளில் (சான்று: குடமுழுக்கு) குழந்தைகளுடன் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். எனினும் அவை மிகக் குறுகியகாலச் சந்திப்புகள். அவற்றால் ஏற்பட்ட விளைவுகளை ஆவணப்படுத்தியதில்லை. இளைய தலைமுறையினருக்கும் ஊருக்குமுள்ள தொடர்பு அறுந்துவிட்டது. முன்னோர்களின் வரலாறு, வாழ்வாதாரங்கள் மற்றும் வாழ்வியல் முறைகள் குறித்துப் புரிதல் இல்லாமல் போய்விட்டது.

    இத்தகைய சூழலில், நாம் நமது ஊரின் வரலாற்றினை, ஊரில் வாழ்ந்த வாழுகின்ற மக்களின் வாழ்வியல் கூறுகள், வாழ்வியலில் ஏற்பட்ட படிப்பினைகள், துன்பங்கள், துயரங்கள், சவால்கள் அவற்றை எதிர்கொள்ள மக்கள் எடுத்த முன்னெடுப்புகள், வாழ்வியலில் ஏற்பட்ட மாறுதல்கள், மாறுதல்களுக்கான காரணங்கள் ஆகியவற்றை ஏன் பதிவு செய்யக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அது மட்டுமின்றி வேரினை அறியா விழுதுகளாக நாம் நம்முடைய வாழ்வினைச் சுருக்கி, வாழ்ந்து, மறைவது ஒரு வாழ்வியல் பிழையாகும்¹. அத்தகைய பிழைதனை இழைக்காமல், நமது சந்ததியினருக்கு அவர்களது முன்னோர்கள் குறித்துப் போதிய தடயங்களை விட்டுச்செல்வது நமது கடமை என்பதை உணர்ந்தேன். மேலும், இது ஒரு உள்ளூர் வரலாறு. ஓரினத்தவரைப் பற்றிய பதிவு. வரலாற்றைக் கீழிலிருந்து எழுதத் தொடங்குவது என்பதே இன்று அறிவுலகத்தின் கொள்கையாகும்² எனக் கூறுகிறார் பேராசிரியர் தொ. பரமசிவன். இத்தகைய பதிவுகள் வரலாற்றில் ஒளிந்து கிடக்கும் இருண்ட மூலை முடுக்குகளை வெளிச்சமிட்டுக் காட்டும். எனவே இந்நூலை எழுத விழைந்தேன்.

    இந்த நூல் வரலாறு, இனவியல், சமூகவியல் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இளமையில் பெற்ற அனுபவத்தின் வாயிலாகப் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மட்டும் நூலை எழுதுவது சாத்தியமாகாது. நூலும் முழுமை பெறாது. கூடுதல் தகவல், தரவுகள் தேவைப்பட்டன. தகவல் சேகரிப்பதற்கு, குறிப்பாக ஊரக ஆய்விற்குக் கடந்த நாற்பது ஆண்டுகளாக மக்கள் பங்கேற்பு ஆய்வு முறைகள் பெரிதும் பின்பற்றப்படுகின்றன. இந்த ஆய்வுமுறையின் கீழ், மக்களே ஆய்வாளர்களாக மாறும் சூழ்நிலையை உருவாக்கி, அவர்களே தரவுகள் மற்றும் தகவல்களைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து, அவற்றைப் பகிர்வதற்கான உரிய நடவடிக்கைகளை களத்தில் எடுக்கவேண்டும். இம்முறையின் அடிப்படைத் தத்துவம், ஒரு கிராமத்தைப் பொருத்தவரை அக்கிராமத்தில் வாழும் மக்களுக்கு, தவழும் குழந்தைகள் முதல் வாழ்க்கையின் இறுதிக் காலத்திலுள்ள முதியவர்கள் வரை கிராமத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்கும். அவர்களைப் பற்றிய சித்திரம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் மிக ஆழமாகப் பதிந்திருக்கும்³ என்பதாகும்.

    ஊரின் வரலாறு, ஊரில் நடந்த முக்கிய நிகழ்வுகள், தெருக்கள், வீடுகளின் அமைப்பு, ஊரிலுள்ள பொது ஆதாரங்கள், இயற்கை வளங்கள், வாழ்வாதாரங்கள், ஊர் மக்களுடைய சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சூழல், ஊர் மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள், இடர்ப்பாடுகள், சவால்கள், அவற்றை எதிர்கொள்ள அவர்கள் மேற்கொண்ட உத்திகள், வழிமுறைகள் முதலான தரவுகள்/தகவல்களை ஊரில் வாழும் மக்கள் நன்றாக அறிந்திருப்பர். மொத்தத்தில், ஊரைக் குறித்த அனைத்துத் தகவல்களும், தரவுகளும் குழந்தைகள் உட்பட ஊர் மக்களிடையே பொதிந்து கிடக்கின்றன. அதில் ஆய்விற்கு வேண்டிய தரவுகளை வெளிக்கொணர மக்கள் பங்கேற்பு ஆய்வு முறைகளில் சிலவற்றைக் கையாண்டேன். அவை:

    * துணைத்தரவுகளைச் சீராய்வு செய்தல் (Review of secondary sources of data)

    * ஊரின் வரலாறு மற்றும் பல்வேறு காலகட்டங்களில் ஊரில் நடந்த முக்கிய நிகழ்வுகள் (Time line)

    * நேரடியாகப் பார்த்தல் (Direct observation)

    * சமூக வரைபடம் (Social mapping)

    * குழுப் பேட்டி காணல் (Group interview)

    * தொடர் பேட்டி காணல் (Chain of interviews)

    * அன்றாட வேலைகள் (Daily routine)

    * முடிவெடுப்பதில் மக்களின் பங்கு (Decision making matrix)

    * ஆதாரங்கள் மீது அணுக்கமும் கட்டுப்பாடும் (Access and control over resources)

    * ஊரில் நடந்த மாறுதல்கள் (Trend change)

    * செவிவழி வரலாறு (Oral history)

    மேற்கூறிய முறைகள் மூலம் பெறப்பட்ட தரவுகள் இந்நூலை எழுதுவதற்குப் பெரிதும் உதவியாக இருந்தன.

    கரிசல் நிலம் குறித்த ஆய்வைத் தொடங்குவதற்கு முன்னர் கரிசல் நில எழுத்தாளர்களில் ‘முன்னத்தி ஏர்’ என அழைக்கப்படும் புகழ்பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கடிதங்கள் ஆகியவற்றை ஆழமாகப் படித்தல் அவசியம் எனக் கருதினேன். ஏனெனில், அவர் ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கரிசல்வாழ் மக்களுடைய வாழ்வியலின் பல்வேறு பரிமாணங்களை அக்குவேர் ஆணிவேராக முழுவதும் அலசியவர். அத்தகையவரின் படைப்புகளின் வாசிப்பு ஆய்விற்குச் சரியான அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கடந்த நாற்பது ஆண்டு காலமாக அவர் எழுதிய புதினங்கள், கதைகள், கட்டுரைகளைப் படித்துவருகிறேன். எனினும் இந்நூலைத் தொடங்குவதற்கு முன்னர் ‘மறுவாசிப்பு’ அவசியம் எனக் கருதினேன். எனவே, மீண்டும் வாசித்தேன். அவரது எழுத்துகள் குறித்துப் பிற எழுத்தாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் எழுதியுள்ள திறனாய்வுக் கட்டுரைகளைப் படித்தேன். அவர் கரிசல் வாழ் மக்களின் வரலாறு மற்றும் வாழ்வியல் குறித்துக் கூறிய கருத்துகளை நூல் முழுவதும் ஆங்காங்கே மேற்கோள்களாகப் பதிவுசெய்துள்ளேன். மேலும், பிறிதொரு புகழ்பெற்ற எழுத்தாளரான சோ. தர்மன் எழுதிய சில புதினங்களை (சூல், வெளவால் தேசம், கூகை) படித்து, அதில் பொருத்தமான கருத்துகள் சிலவற்றைத் தேவையான இடங்களில் மேற்கோள்களாக காட்டியுள்ளேன்.

    அது மட்டுமின்றி, ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், எனது மூத்த சகோதரி முனைவர் சுசிலா ராஜாராம், கோவில்பட்டி வட்டாரத்தில் வாழும் கம்மவார் இனத்தின் வரலாறு மற்றும் பண்பாடு குறித்துப் பல்கலைக்கழக மானியக் குழு நிதி உதவியுடன் ‘குறு ஆய்வு’ (minor research) ஒன்றை நடத்தியுள்ளார். ஆய்வின் முடிவுகளை அவர் பதிப்பிக்கவில்லை. நல்வாய்ப்பாக ஆய்வறிக்கையின் கையெழுத்துப் பிரதி (manuscript) முழுமையாகக் கிடைத்தது. அந்த ஆய்வறிக்கையில் ஊரின் வரலாறு குறித்தும், கம்மவார் பின்பற்றிய சமயம், சடங்குகள் குறித்தும் மிகத்தெளிவாகப் பதிவிட்டுள்ளார். அவரின் ஆய்வறிக்கையின் சில பகுதிகளைக் குறிப்பாக ஊரின் வரலாறு, சமயம், சடங்குகள் ஆகியவற்றை இந்நூலில் சிறிது மாற்றங்களுடன் சேர்த்துள்ளேன்.

    மூன்று பகுதிகளை உள்ளடக்கிய இந்நூல் பத்தொன்பது அத்தியாயங்கள் கொண்டது. முதல் பகுதியில் இரண்டு அத்தியாயங்கள் உள்ளன. முதல் அத்தியாயத்தில் கரிசல் மண் தோன்றிய விதம், கரிசல் மண்ணின் கூறுகள், சிறப்பியல்புகள், தென் மாவட்டங்களில் கரிசல் மண்ணின் பரப்பளவு, கரிசல் மண்ணைக் கம்மவார் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இரண்டாவது அத்தியாயத்தில் ஆந்திராவிலிருந்து தெலுங்கு பேசும் மக்கள் புலம்பெயர்ந்த சூழல், அதற்கான காரணங்கள், அதிலும் குறிப்பாகக் கம்ம இனத்தவர் புலம் பெயர்ந்த வரலாறு, அவர்களுக்கு ‘கம்மா’ என்ற பெயர் வரக் காரணங்கள், தென் தமிழகத்தில் அவர்கள் எவ்வாறு குடியேறினர் என்பது குறித்துப் பதிவிடப்பட்டுள்ளது.

    இரண்டாவது பகுதி, நான்காவது அத்தியாத்தில் தொடங்கி பதினெட்டாவது அத்தியாயத்தில் முடிகிறது. இப்பகுதியில் 1950, 1960, மற்றும் 1970-களில் கோபாலபுரம் கிராமத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் கூறுகள் குறித்து மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தியாயம் மூன்றில் ஊரின் தோற்றம், அமைப்பு, வீடுகள், மக்கள்தொகை ஆகிய செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன. நான்காவது அத்தியாயத்தில் ஊரின் பொது ஆதாரங்கள் (பொதுச் சொத்துகள்) பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஊரில் சாதிய அமைப்பு, அரசியல், சமயம் (மதம்), சடங்குகள், சம்பிரதாயங்கள், பெண்களின் நிலை முதலானவை ஐந்து, ஆறு, ஏழு ஆகிய அத்தியாயங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பின்னருள்ள ஐந்து அத்தியாயங்களில் (8, 9, 10, 11, 12) நிலத்தைப் பண்படுத்துதலிருந்து தொடங்கி, விளைபொருட்களைச் சந்தைப்படுத்துதல் வரையுள்ள அனைத்து வேளாண் நடவடிக்கைகளும், கரிசல் வேளாண்மையின் சிறப்பியல்புகளும் வேளாண்மைக்கு ஆதாரமாக விளங்கும் கால்நடைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பதின்மூன்று மற்றும் பதினான்காவது அத்தியாயங்களில் உள்ளூர் மக்களின் சுகாதாரம், ஆடைகள், உடல்நலம், உணவு மற்றும் பிற பழக்க வழக்கங்கள் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் பின்னர் வரும் மூன்று அத்தியாயங்களில் (16, 17, 18) ஊரின் கல்வி நிலை குறித்தும், ஊரில் வாழ்ந்த குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை (ஆண், பெண் உட்பட) விளையாடிய பல்வகையான விளையாட்டுகள் குறித்தும், மக்களின் பொழுதுபோக்குகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

    இறுதிப் பகுதியிலுள்ள பத்தொன்பதாவது அத்தியாயம் கோபாலபுரத்தின் இன்றைய நிலையைச் சித்தரிக்கிறது. ஊர் மக்களின் வாழ்வாதாரத்தில், சமூகப், பொருளாதார பண்பாட்டுக் கூறுகளில் என்னென்ன மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன என்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. விழுமியங்கள் பின்னுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்நூலை உருவாக்குவதில் பல்வேறு கால கட்டங்களில் பலர் உறுதுணையாக நின்றனர். இந்நூலைத் தொடங்கி முடிக்கும் வரை ஒவ்வொரு நிலையிலும் ஆக்கமும், ஊக்கமும் அளித்தவர் என் இல்லாள் முனைவர் சு.விஜயேஸ்வரி. நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் அவர் மிக ஆழமாக வாசித்து, ஆக்கப் பூர்வமான விமர்சனங்களை முன்வைத்து, எனது கல்வி மற்றும் ஆய்வுப் பயணத்தில் உந்து சக்தியாகத் திகழும் என் அன்பு மனைவிக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

    எனது கல்விப் பயணத்தில் உறுதுணையாக நின்ற எனது மூத்த சகோதரி முனைவர் சுசீலா ராஜாராமின் ‘கோவில்பட்டி வட்டாரக் கம்ம இனத்தவரின் வரலாறு மற்றும் பண்பாடு’ குறித்தெழுதப்பட்ட குறு ஆய்வுக் கட்டுரை இந்நூலை எழுதுவதற்கு உதவியாக இருந்தது. நூலை ஒரு வரி விடாமல் முழுமையாக வாசித்து, கூர்நோக்கி, விட்டுப்போன தகவல்களையும் நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி, ஆங்காங்கே வினாக்கள் எழுப்பி, நூலில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகள், தகவல்கள், நிகழ்வுகள் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை (trustworthiness) குறுக்காய்வு (triangulation) செய்வதற்குப் பெரிதும் உதவியுள்ளார். மேலும் நூலில் தென்பட்ட இலக்கணப் பிழைகளை மிகுந்த கவனத்துடன் திருத்திக் கொடுத்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்நூலைப் படித்துத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட முனைவர். ஜோசப் துரைராஜ் (பேராசிரியர், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்), முனைவர். பி. முத்துராமன் (இந்திய நெல் ஆராய்ச்சிக் கழகம், ஹைதராபாத்), முனைவர் சுந்தர் காளி (மேனாள் பேராசிரியர், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்), எனது முன்னாள் மாணவர் முனைவர் ஆர். ரமேஷ் (இணைப்பேராசிரியர், தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம், ஹைதராபாத்), முனைவர். கோ. வீரகுமாரன் (பேராசிரியர், ஓய்வு, கேரளா வேளாண்மைப் பல்கலைக்கழகம்), முனைவர். எஸ். மணிவேல் (பேராசிரியர், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்) ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆராய்ச்சிப் பணிகளில் மிக நீண்ட காலமாக என்னுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் முனைவர் எஸ்.மணிவேல் இந்நூலுக்கு வேண்டிய தரவுகளைச் சேகரிக்க உறுதுணையாக நின்றார். அன்னாருக்கு எனது மனமார்ந்த நன்றி.

    நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சில நிகழ்வுகளுக்கு மதிப்புக் கூட்டும் (value addition) வண்ணம் பொருத்தமான கோட்டோவியங்களை வரைந்து வழங்கிய ஓவியர் திரு. ஜீவா, (கோவை) அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நூலில் இடம்பெற்றுள்ள மற்ற படங்களை வரைந்து கொடுத்த திரு. எஸ்.ஸ்ரீகோவர்த்தன கிருஷ்ணன் (எஸ்டேட் அலுவலர்), முனைவர். எம்.முத்துக்குமார் (உதவிப் பேராசிரியர்), திரு. பசுபதி (ஆராய்ச்சி உதவியாளர்), முனைவர். பி. பாஸ்கர் (உதவிப் பேராசிரியர்) ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    இந்நூலை எழுதத் தொடங்கியதிலிருந்து ஊரைக் குறித்து நான் எழுப்பிய கேள்விகளுக்கு மிகவும் பொறுமையாகப் பதிலளித்தும், தன்னிச்சையாகவும் பல தகவல்களைத் தந்து உதவிய எனது சகோதரர்கள் (Cousin Brothers), திரு. ரெ. சீனிவாசராகவன், திரு. ரெ. ஜெயச்சந்திரன், திரு. ரெ. கோவிந்தராஜன், திரு. அ. அரங்கசாமி (ஆசிரியர்), திரு. ச. அரங்கசாமி (பண்ணை), திரு.சீ.திருவேங்கட ராமானுஜம் ஆகியோருக்கும் எனது மனங்கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    ஊர் குறித்து எனக்கெழுந்த ஐயங்கள் மற்றும் வினாக்களுக்குப் பொறுமையாகப் பதிலளித்துதவிய திரு. சீ. புருஷோத்தமன் அவர்களுக்கு நன்றி.

    ஊரில், மக்கள் பங்கேற்பு முறைகளைப் பயன்படுத்தித் தரவுகள் சேகரிக்கும்பொழுது, அதில் மிக ஆர்வமுடன் ஈடுபட்டு மிகவும் பொறுமையுடன் வேண்டிய தரவுகளைச் சேகரித்துக் கொடுத்த என் ஊர் மக்கள் அனைவருக்கும் நன்றி.

    இந்நூலிற்கு சிறப்பானதொரு வாழ்த்துரை வழங்கிய கிராமியப் பொருளாதாரம் மற்றும் கூட்டுறவியலில் தடம் பதித்துவரும், ஒரு கவிஞராக மறு அவதாரம் எடுத்துவரும், நான் மிகவும் மதித்துப் போற்றும் கல்வியாளர் முனைவர் வே.குழந்தைசாமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

    இந்நூலிற்கு நல்லதொரு மதிப்புரை வழங்கி சிறப்பித்த ஆங்கிலப் பேராசிரியரும், தமிழில் செறிந்த அறிவும், ஆழமான ஈடுபாடு உடையவரும், மனித உரிமைகள் ஆர்வலரும், உயர்கல்வி மேலாண்மையில் நிபுணருமான எனது இனிய நண்பர் பேராசிரியர். இராஜா முத்திருளாண்டி அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்நூலை கூர்நோக்கி, புதிய கோணத்தில் அணுகி, ஆய்வு முறைகளின் அடிப்படையில் இந்நூல் மற்ற தொடர்புடைய நூல்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கிறது என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டி, மிகவும் பொருத்தமான அணிந்துரை வழங்கிய எனது நண்பரும், சமூகவியல் விற்பன்னருமான முனைவர் இரா. குமரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழ்ப் பேராசிரியரும், நாட்டுப்புறவியல் மற்றும் மரபியல் ஆராய்ச்சியில் நீண்டகாலம் ஈடுபட்டுவருபவருமான எனது நண்பர் முனைவர் ஒ.முத்தையா மனமுவந்து இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். அவருக்கு எனது நன்றி உரித்தாகுக.

    இந்நூலைத் தொடர்ந்து தொய்வில்லாமல் எழுத ஆக்கமும், ஊக்கமும் அளித்த எனது மைத்துனர் திரு. ஆர்.பி.எஸ்.தேவராஜ் அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நூலை எழுதும் பொழுது, அவ்வப்பொழுது எழுதும் வேலை எந்த அளவில் இருக்கிறதென ஆர்வம் காட்டியும், நூலை வெளியிடுவதற்குத் தேவையான முயற்சிகள் எடுத்தும் உதவிய எனது மகன் நா.விஷ்ணு பிரசாத்திற்கும் எனது மருமகள் வி.அபிநேத்ராவிற்கும் நன்றி. எழுதிக் கொண்டிருக்கும் பொழுது ‘என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்’, என அவ்வப்பொழுது கண்டிப்புடன் மிரட்டும் எனது பேத்தி வி.மீராவிற்கு நன்றி. அவளுடன் வந்து, எழுதும் பொழுது எழுதுகோலைப் பறித்து விளையாடி நான் ஓய்வெடுப்பதற்கு உதவிய எனது பேரன் வி.கபீருக்கும் நன்றி.

    நூலின் கையெழுத்துப் பிரதியை தொடக்கம் முதல் இறுதி வரை சலிக்காமல் கணிணி அச்சு செய்து கொடுத்த திரு. ஆர். சரவணனுக்கு நன்றி.

    இந்நூலினை மின் பதிப்பாகவும் அச்சுப் பதிப்பாகவும் நன்முறையில் வெளியிட்ட புஸ்தகா டிஜிட்டல் மீடியாவின் இயக்குநர் முனைவர் ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

    01.02.2024

    ந. நாராயணசாமி

    பேராசிரியர் (ஓய்வு)

    காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்

    காந்திகிராமம்

    ***

    ¹பாகை இறையடியான் காலத்தோடு கரையும் கதை சொல்லிகள் My Vikatan, டிசம்பர், 2022.

    ² பரமசிவன்.தொ, அழகின் அசைவு, காலச்சுவடு, 2022, ப.397.

    ³ அழகர்சாமி.கு, ‘காடாறு மாதம்’ (கு.அழகர்சாமியின் கதைகள், தொகுப்பாசிரியர்: கி.ராஜநாராயணன்),சாகித்ய அகாதெமி, புதுதில்லி, 2017, ப.387.

    வாழ்த்துரை

    முனைவர் வே. குழந்தைசாமி

    ‘குமார விஜயம்"

    45 ஜெகதீச நகர், கோவை – 641007

    எமது கல்லூரி மாணவப் பருவத்தில், எனது இளவலும், ஆசிரியப்பணியில் சம காலத்தவரும், சிறந்த சிந்தனையாளரும், உயர் கல்விப் புலத்தில் பல சாதனைகள் படைத்துத் தடம் பதித்தவருமான,பேராசிரியர் முனைவர் ந. நாராயணசாமி அவர்கள் தற்போது, ஒரு சமூக வரலாற்று ஆய்வாளராக, நுண்ணியல் நோக்கில், தமிழில் கரிசல் நிலம் சார்ந்த தனது ஊரின் வரலாற்றையும் வாழ்வியலையும், எம்முள் மறைந்த கரிசல் என்ற தலைப்பில் ஒரு நூலாகப் படைத்திருப்பது, போற்றுதற்குரிய ஒரு பணி.

    தனது ஊரின் பெரும்பான்மை மக்களான தனது சொந்த இனக்குடியான (Ethnic Community),கம்மவார் சமூகத்தின் வரலாற்றையும், வாழ்வியலையும், ஒரு ஆய்வாளர் என்ற நிலையில், சார்பற்ற அணுகுமுறையில், புலம்பெயர்வு, வரலாறு, சமுதாய அமைப்பு மற்றும் வாழ்வியல் கூறுகளை இயல்பாகவும், விரிவாகவும், விளக்கமாகவும், தரவுகள் (data) அடிப்படையில், வாசிப்போரை ஈர்க்கும் வண்ணம் வழங்கியிருப்பது நூலாசிரியரின் முதிர்ந்த ஆய்வறிவிற்குச் சான்று பகர்கின்றன.

    ‘புலப்புல வண்ணத்த புள்" என்னும் பழமொழிக்கேற்ப மனிதர் உட்பட அனைத்து உயிரினங்களும், நிலத்தின் தன்மைக்கேற்றவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்வது என்பது இயற்கை நியதி. புலப்பெயர்வும் அது போன்றதே. மாடுகள் மேய்ச்சல் இருக்கும் திசைநோக்கிச் செல்வதும், மாந்தர்கள் வாழும் வாய்ப்புகளைத் தேடிச் செல்வதும் காலங்காலமாய் நிகழ்ந்துவந்துள்ளது.

    அவ்விதத்தில், தாம் முன்னர் வாழ்ந்த கரிசல் பின்புலத்தை நினைவில் ஏந்தி, அக்காலச் சமூக அரசியல் காரணங்களுக்காகத் தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்த கம்மவார் இன மக்களில் பெரும்பான்மையோர், கரிசல் நிலங்களையே வாழ்விடங்கலாகத் தேர்வு செய்ததோடு, புதிய அரசியல் சமூகச் சூழலுக்கேற்றவாறு, தங்களை தகவமைத்துக் கொண்டனர். அத்துடன்:

    * எளிமையில் செம்மை

    * உழைப்பில் உறுதி

    * சமூக ஒற்றுமை

    * பிற சமூகத்தினரிடம் சுமூக உறவு

    * மரபுகளைப் பேணுதல்

    உள்ளிட்ட பல நல்லியல்புகளை வாழ்க்கை நெறிகளாகக் கடைப்பிடித்தனர்.

    எந்த ஒரு குடியேற்ற சமுதாயத்திலும், இருவழிப் பண்பாட்டுப் பரிமாற்றம் இயல்பாய் நிகழும். தாம் குடியேறிய தமிழ் மண்ணில், வேர்களைப் பதிக்கும் வண்ணம், அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களில் தமிழ் மக்களோடு இணைந்து தங்கள் பங்களிப்பை நல்கியதும், கல்வி, வணிகம், தொழில் முனைப்பு ஆகிய துறைகளில் தாம் முன்னேறியதோடு நாட்டின் முன்னேற்றத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இச்சமூகத்தினர் நல்கியுள்ளனர்.

    அதுபோன்றே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் மண்ணில் செழித்தோங்கிய வைணவ மரபால் ஊக்கம் பெற்று ஆழ்வார்கள் மற்றும் இராமனுஜர் உள்ளிட்ட வைணவ பெரியோர்களைப் பின்பற்றித் தமிழ் நாட்டின் வைணவ அடையாளமாக, இச்சமூகத்தினர் திகழ்கின்றனர் என்றால் அது மிகையாகாது.

    ஒரு இனக்குடி என்பது பேரளவுச் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பதால், ஒவ்வொரு இனமும், தனது தனித்த சிறப்பியல்களைப் பேணுவதும், தகைசால் பொது இயல்புகளை ஏற்றுக் கொள்வதுமே சமுதாய வளர்ச்சிக்கும், சமூக உறவுக்கும் ஏற்றதாக அமையும்.

    நூலாசிரியர் குறிப்பிடும் கோபாலபுரத்துக் கிராமச் சமுதாயத்தில், குடும்ப அமைப்பில் பெண்களின் நிலை, கல்வி வாய்ப்பு, வேளாண் நடைமுறை, வானம் பார்த்த வேளாண்மையில் எதிர்ப்படும் இன்னல்கள் போன்றவை அனைத்து ஊர்களுக்கும், சமுதாயத்தினருக்கும் பொதுவான இயல்புகள். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே", என்ற நன்னூலசிரியரின் கூற்றுக்கேற்ப, காலத்துக்கொவ்வாத பழமையைநீக்குவதும், நிலைத்த விழுமியங்களைப் பேணுவதும், மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுமே சமுதாய வளர்ச்சிக்கு உகந்த அணுகுமுறையாகும்.

    அந்த வகையில், பேராசிரியர் முனைவர் ந. நாராயணசாமி அவர்களின் நுண்ணாய்வு நூல் (Micro-Study) குறிப்பிட்ட ஊர் அல்லது சமூகத்தின் வாழ்வியலை ஆவணப்படுத்துவது மட்டுமன்றி, பொதுவாக சமுதாய முன்னேற்றத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் வழிகாட்டும் என்பது திண்ணம். சீரிய முயற்சியால் உருவான இந்த அரிய படைப்புக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். சமூகவியலாளர்கள், ஊரக வளர்ச்சித்துறையினர் மற்றும் ஆய்வாளர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும்.

    15.02.2024

    முனைவர் வே.குழந்தைசாமி

    மதிப்புரை

    இராஜ முத்திருளாண்டி

    அகம் அருவுகம்

    அன்பு நகர், திருச்சி-12

    நெடுநாள் நட்பினர், காந்தி கிராம பல்கலைக்கழக (GRI) முன்னைப் பதிவாளர், பேராசிரியர் முனைவர் ந.நாராயணசாமி அவர்கள் தனது அண்மைப் படைப்பான ‘எம்முள் மறைந்த கரிசல்’ என்ற வித்தியாசமான நூலுக்கு மதிப்புரை வழங்கிட வேண்டுமென ஒருநாள் வைகறையில் நட்புரிமையுடன் அலைபேசிப் பணித்தார்.

    அக்கணத்து உரையாடல் நிறைவுறும் முன்னரே, முதன்மைக் காரணங்கள் மூன்று சிந்தையில் முன்வந்து எனை உந்த எத்தயக்கமுமிலாது அப்பணியேற்க இசைந்தேன்.

    அது இதோ.

    எனது தயக்கமிலா இசைவின் முதலாவது காரணமாக முந்தி வருவது ஒரு ‘தன் வரலாற்றுக் காரணம்’. வாங்க...கால எந்திரப் பயணத்தில் நாற்பத்தியிரண்டாண்டுகளுக்கு மேல் பின் சென்று மீள்வோம்.

    தென்னகப் பல்கலைக் கழகங்களின் தாய்ப் பல்கலைக் கழகமான சென்னைப் பல்கலைக் கழகத்தில், இரண்டு கல்லூரிகளிலிருந்து (அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, ஆத்தூர், பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி, திருச்சி) தொடர்ந்து கல்விப் பேரவைக்கு (Academic Council) ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறாண்டுகள் (Two terms) பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இளமைத் துடிப்பும், கல்லூரி ஆசிரியர் இயக்க ஈடுபாடும், பயனுறு புதியன படைக்கும் வேட்கையும் ததும்பியோடிய அக்காலத்தில் - சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக டாக்டர் மால்கோம் எஸ் ஆதிசேஷையா, டாக்டர் ஜி. ஆர். தாமோதரன், டாக்டர் சாந்தப்பா ஆகியோர் தலைமையேற்றிருந்த கல்விப் பேரவையில் -மாணவர்-ஆசிரியர் நலன், கல்வி மேம்பாடு, உயர் கல்விக் களத்தில் புதியன விளைவிக்கக் கருத்துருக்கள் எனப் பரந்துபட்ட தளங்களில், ஆகக் குறைந்ததாக எனது பத்துத் தீர்மானங்களாவது முன்மொழிந்து விவாதிக்கப்படாமல் அக்காலத்தில் சென்னைப் பல்கலைக் கழகக் கல்விப் பேரவைக் கூட்டங்கள் நடைபெற்றதே இல்லை என்பதைப் பல்கலைக் கழகக் கல்விப் பேரவை ஆவணங்கள் காட்டும்.

    அதேகாலத்தில், திருச்சிராப்பள்ளி மண்டலப் பொறியியல் கல்லூரி (Regional Engineering College, -REC, now NIT) நிறுவப்பட்ட காலம் முதலே, முதல்வராகவும் திருச்சி REC யின்அடையாள முகமாகவும் விளங்கிவந்த பேராசிரியர் பி.எஸ். மணி சுந்தரம் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். கல்விப் பேரவையில் எனது செயல்பாடுகளை - ஒவ்வொரு பேரவைக் கூட்டத்திலும் சரஞ்சரமாக நான் முன்மொழியும் தீர்மானங்களை - அவர் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறார் போலும்.

    திருச்சியில் 1982ல் பாரதிதாசன் பல்கலைக் கழகம் தோற்றுவிக்கப் பட்டபோது பேராசிரியர் பி.எஸ். மணிசுந்தரம் அவர்கள் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். எனக்குத் தெரிவிக்காமலேயே அவர் தமிழக அரசுக்கு எழுதிப் பல்கலைக் கழகத்தில் நான் முதல் துணைப் பதிவாளராக அயற்பணியில் (On Deputation) பணியாற்ற ஆணை பெற்றுவிட்டார்.

    அரசாணை வந்த பின்னர் அவரைச் சந்தித்து விவரம் அறியச் சென்றபோது, அதுவரை கல்லூரியில் கற்பித்தல் நிலையிலேயே பணியாற்றி வந்திருந்த எனக்கு பல்கலைக்கழக நிர்வாகப் பணி சரிப்பட்டுவருமா? நம்மை விரும்பித் தேர்ந்து கொண்ட துணைவேந்தருக்கும், புதிதாக நிறுவப்பட்டிருக்கும் பல்கலைக் கழகத்திற்கும் புதிய பணியில் முழுமையாகத் துணை நிற்க இயலுமா என்ற தயக்கங்கள் எனக்குள் அச்சமயம் அடர்ந்திருந்தன என்பது உண்மை. ஆனால், நுழையும் போதே, முன்கூட்டியே எனது மனநிலையை அறிந்திருந்தவர் போல, எப்போதும் தப்பாது தனது இதழ்ப் பல்லக்கில் உலாவரும் புன்னகையுடன் எனை வரவேற்று, அச் சந்திப்பின் தொடக்கத்திலேயே, ஒரு கோப்பை (File) என்னிடம் நீட்டினார். இது கடந்த ஆறாண்டுகளாகச் சென்னைப் பல்கலைக் கழகக் கல்விப் பேரவையில் நீ முன்வைத்த தீர்மானங்களின் தொகுப்பு. நீ என்னென்ன காரியங்களுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விடாது குரல் கொடுத்து வந்தாயோ அவைகளை இந்தப் புதிய பல்கலைக் கழகத்தில் சுதந்திரமாகச் செயல்படுத்தலாம். உனக்கு எனது முழு ஆதரவும், இடையூறற்ற வழிகாட்டலும் எப்போதும் இருக்கும். இந்தச் சவாலை ஏற்றுக்கொள் என்றார். என் தயக்கம் ஒதுங்க அன்பு நிறைத்து, ஆறுதலுமளித்து. அப் பெருமகன் அப்படித்தான் என்னை அரவணைத்து ஆட்கொண்டார்.

    பாரதிதாசன் பல்கலைக்கழகக் துணைப்பதிவாளர் (கல்வி) என்ற பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளுமுன் (1982 அக்டோபர்) துணைவேந்தருடனான எனது முதல் சந்திப்பில் நிகழ்ந்த இவ் உண்மையை, இத்தனை ஆண்டுகள் கடந்து, இங்கே நண்பரின் நூல் முகப்பில் நின்று பொதுவில் பகிர்கிறேன்.

    பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பணியிற் சேர்ந்த மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே காந்தி கிராமப் பல்கலைக் கழகத்திலிருந்து (GRI) தேர்வுச் சீர்திருத்தங்கள் குறித்த (National Workshop on Examination Reforms) தேசியப் பணியரங்கிற்கான அழைப்பும், தொடர்ந்து உயர்கல்வியுடன் விரிவாக்கப் பணிகளை இணைத்தல் (Linking Extension with  Higher Education) குறித்த அழைப்பும் வந்தன. அச்சமயத்தில், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பதிவாளரது பல பொறுப்புகளும் எனக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் கூடுதலாகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்பும் (Controller of Examination) என்னிடம் வழங்கப்பட்டிருந்ததால், ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்று பல்கலைக் கழக இலட்சிய முழக்கத்தை உருவாக்கி (இம் முழக்க உருவாக்கத்தில் எனது பங்கும் உண்டு) தேர்வுச் சீர்திருத்தங்கள் பலவற்றைப் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்தக் கருத்து வளர்த்திருந்த துணைவேந்தர் அவர்கள் என்னை அந்த இரு பணியரங்குகளிலும் கலந்துகொண்டு பயன் பெற்று வந்து பணிதொடரப் பணித்தார்.

    புதிய பணியில், உள் உறையும் தயக்கங்களோடு தவழ்ந்து கொண்டிருந்த எனக்குக் காந்தி கிராமப் பல்கலைக் கழகம் நோக்கிச் சென்ற பயணத்தால் - அங்கு தங்கியிருந்த ஒருவார காலத்தில்-எனை ஒத்த இளைஞர்கள் (எனைப் போன்றே பெரிதான நிர்வாக முன் அனுபவங்கள் பெற்றிருக்காத) சிலர் துணைவேந்தர் பேராசிரியர் மு.அறம் அவர்களுக்குச் செயலராக, பல்கலைக் கழக நிதி அலுவலராக, துணைப் பதிவாளராக, நாட்டு நலப்பணி ஒருங்கிணைப்பாளராகத் துணைவேந்தர் அறம் அவர்களது சீரிய வழிகாட்டலில் மகிழ்வோடும், புதிய பணி கற்றலில் ஒருவருக்கொருவர் உற்ற துணையாகவும் உற்சாக வலம் வந்து கொண்டிருந்ததைக் கண்டுணர வாய்த்தது.

    ‘பள்ளம் பாய் வெள்ளமென’ நான் அந்த இளைஞர் குழுவினரோடு இணைந்தேன். இயல்பான, மகிழ்வுநிறை தினச் சந்திப்புகள், உரையாடல்கள், மாலை நேரப் பயணங்கள், பகிர்வுகளால் மலர்ந்தது புது நட்பு வட்டம். அந்த GRI நட்பு வட்டத்தின் நாயகர்- பல்கலைக்கழகத்தைச் சூழ்ந்தமைந்துள்ள பல கிராமங்களில் விரிவாக்கச் செயல்பாடுகளை, அப்பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்ட அலுவலராக ஆர்வமுடன் மேற்கொண்டிருந்த பேராசிரியர் நாராயணசாமி அவர்கள், நேயமுகங்காட்டி, நெஞ்சிற்கு நெருக்கமாகி இன்றுவரை தொடர்ந்துவரும் நட்பினர்.

    அவரது கரிசல் கிராமத்து வரலாற்றை உள்ளடக்கிய நூலுக்குக் காந்தி கிராமத்தில் ‘அற்றைத் திங்கள்’(1982) முதல் எம்மிருவருக்குள்ளும் கிளைத்து வளர்ந்துவரும் நட்புறவுசெறிய எனது மதிப்புரையை அன்பு கருதி அவர் வேண்டியதைப் பெருமிதமாக நான் கருதுவதே முதலாவது உந்துதல்.

    இரண்டாவது உந்துவிசைக் காரணம்: பேராசிரியர் நம்மாழ்வார் நாராயணசாமி அவர்களது கிராமத்தின் பெயர்.

    மாணவப் பருவத்திலிருந்தே எந்த ஒரு இடத்தின் பெயரை, உச்சரிக்கும்போது மட்டுமல்ல - பயில் தொறும் நூல் நயம்போல - உள்ளத்தே நினைக்குந்தொறும் எனக்குள் உவப்பேற்றும் ஒரு இடத்தின் பெயரே அது.

    யாரும் அண்டாத, விரோதிகளாலும் விரும்படாத கரிசல் பூமியான (அத் 1)கோவில்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள சிறிய குக்கிராமம்.அவருடையது. (பார்க்க:நூலாசிரியர் முன்னுரை) (விக்கிப்பீடியாவில் திருநெல்வேலி மாவட்டக் கிராமங்கள் பட்டியலில் ‘க’ வரிசையில் இவர் கிராமப்பெயரில்லையே! ஏன்? ஆராயனும்.)

    இன்றுவரை மாறாது எனக்குள் வற்றாத உவப்பு நிறைக்கும் இடமோ பூமித் தமிழர் யாவரும் அண்ட விரும்பும் இடம்; விரோதிகளாலும் கனவிலும் அலட்சியப்படுத்திக் கடந்துவிட இயலாத ‘பேரிடம்’!.

    பூமி எவ்வகையாயினும் பிறந்த மண் அல்லவா? பேராசிரியர் நாராயணசாமி அவர்கள் தான் பிறந்து வளர்ந்த கரிசல் பூமியின் நெடிய பசுமையான நெஞ்சை விட்டு அகல மறுக்கும்- ஊனுடன் உதிரத்துடன் கலந்துவிட்ட-நினைவுகளில் (நூலாசிரியர் முன்னுரை) நிறைய நனைந்து வாழ்நாள் முழுவதும் மனதில் அசைபோடும் இனிய அனுபவங்களின் திரட்டு ஆக இந்தக் கனமான கவனங்கொள்ள உரிய நூலை உங்கள் முன் கொண்டு வரும்போது நூலின் முகப்பில் நின்று தமிழ் வாசகர்களை முகமன் கூறி வரவேற்க எனக்கு வாய்த்த மகிழ்வூற்று.

    மதிப்புரை எழுதியளிக்க இசைவு தர மூன்றாவதாக உந்திய காரணம்: நானும் நூலாசிரியரைப் போலவே ஒரு எளிய கிராமத்தான் என்பதாகும். எளிய காரணம் என்றாலும் ஆல்வேரன்ன வலு நிறைந்தது. நூலாசிரியருக்குவாழ்வதற்குத் தேவையான விழுமியங்கள் ( முன்னுரை) பலவற்றை வழங்கியது போலவே, எமது பூவனத்துப் புழுதி மண்ணும், எமது பூர்வ குடும்ப மரபுகளும் எனக்கும் வழங்கியுள்ளன என மனநகர்தலின்றி நான் நம்புகிறேன்.

    எக்கவலையும் முளைவிடாப் பருவத்தே எம்மூர்ப் புழுதி மண்ணில் (தெருக்களில் மந்தையில், குளக்கரையில், குளத்தில்- அத் 17 )அங்கமெலாம் புரள, அகமகிழ்ந்து, நண்பர்களுடன் (நூலாசிரியர் கிராமத்தில் போலவே கால் தூக்கிக் கணக்கப் பிள்ளை, செதுக்கு முத்து, பச்சைக்குதிரை, பம்பரம், கிட்டிப்புள், நொண்டி, நுங்கு வண்டி, சிறுபெண் பிள்ளைகளுடன் அவ்வப்போது சேர்ந்து கிளித்தட்டு, தாயம், தட்டாங்கல்/சொட்டாங்கல், பல்லாங்குழி, குலை குலையாய் முந்திரிக்காய்- பார்க்க:அத் 17)விளையாட்டுகள்; அதன்பின் எமது பிள்ளையார் கோவில் முன்னுள்ள அல்லி பூத்து நீர்மறைத்திருக்கும் ஊரணியில் ஒருபுறம் உள்ளூர் எருமைகள் சர்வ சுதந்திரமாக நீந்திக் குளித்துக்கொண்டிருக்க, சற்றருகே ‘சளைத்தாமோ பார்’ என நாங்கள் ‘கூற்றின் வாகன’த்திற்குச் சவால் விட்டு, அவ்வூரணியின் இக்கரையும் அக்கரையும் எல்லை கண்டு, (அடையாளமாக இக்கரை அல்லி ஒன்றும் அக்கரை அல்லி ஒன்றும் தண்டோடு பறித்து தலைக்குமேல் தூக்கிக்காட்டிக்கொண்டே நீந்தி) மீண்ட, இளம் பருவத்து நீச்சல் அனுபவங்களும் (வீட்டிற்குத் தெரியாமல் தான்); ஊருணியில் கும்மாளம் போட்டது வீட்டிற்குத் தெரிந்தால் உதை சர்வ நிச்சயம் என்பதால், நீந்திக் கரையேறிக் கைகால் முகமெலாம் மீண்டும் புழுதியைச் சந்தனமாய் அப்பிக் கொண்டு, விளக்கேற்றும் முன்பாக ஒழுக்க புத்திரனாய் இல்லம் திரும்பியது; வீட்டில் கைகால் முகங்கழுவி விளக்கேற்றும்போது வேழமுகத்து வாழ்த்துப்பாடிப், ‘பிரசாதமாக’ (அதாவது ஒரு கையளவே) சர்க்கரை விரவிய சுண்டல் அல்லது பொரி கிடைத்து மென்ற பின், சிம்னி விளக்கருகே (நூலாசிரியர் படத்துடன் விளக்கியிருப்பது போன்றது) பாட்டி உடனமர்ந்து அறிவோம் நன்றாக, குரு வாழ்க, குருவே துணை" என மும்முறையோதித் தினப் படிப்பும் எழுத்தும் தொடங்கியது எனக் கல்லூரி வாழ்க்கைக் காலம்வரை-நூலாசிரியரது கிராமம் போலவே எங்ளூருக்கும் மின் வசதி 1962ல் தான் கிடைத்தது- பூரண கிராமியச் சூழலில் முளைத்து வளர்ந்து, சர்வ ஆனந்தமாய் வாழ்ந்த கிராமத்தான் நானும் என்பது மூன்றாவது உந்துதல்.

    சரி, சரி, நூலுக்கு மதிப்புரை வழங்கக் காரணங்கள் பற்றியே இவ்வளவு நீட்டி முழக்க வேண்டுமா என அலுத்துக்கொள்ள வேண்டாம். ‘காரணம் இன்றிக் காரியம் இல்லை’, ‘காரண குருவே காரிய குரு’ என்பன போன்ற வாழ்வியல் சூத்திரங்களை வளர் பருவத்திலேயே, செவியும் சிந்ததையும் நிறைக்க மூத்தோர்களால் வழங்கப்பட்ட பழமொழிகள் சூழ் கிராமத்தானல்லவா நான்?. ஆகவே பொறுத்து உடன் வருக.

    தொடர்ந்து, நூலாசிரியர் படைத்துள்ள நூல்வகை தொடர்பான முன்வரலாற்றுச் செய்திகளை ஒரு பறவைப் பார்வை பார்த்து மேற் செல்வோம்

    II

    இந்தியாவில், தெக்கணப் பகுதியில் - குறிப்பாகத் தெலுங்கு பேசப்பட்ட பகுதிகளில் - காகத்தியர் ஆட்சிக்காலத்தில் (1158–1323), கிராம ஆவணங்களைப் பராமரித்தல், வரிவசூலிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு கிராமத்திலும் கிராம கர்ணம் (Village Karanam) என்ற அலுவலர் நியமிக்கப்பட்டிருந்தார். அந்த அலுவலர்கள் தத்தமது நிர்வாகப் பொறுப்பிலிருந்த கிராமம் குறித்த பலவகையான விவரங்களையும் (அந்தக் கிராமத்தின் சூழல், மக்கள் எண்ணிக்கை, சாதிவாரி எண்ணிக்கை, ஆண்-பெண் பகுப்பு விவரம், கால்நடைகள் விவரம், பயிரிடும் நிலப்பரப்பு, பயிரிடப்படும் பயிர்கள், பொது, தனிப்பட்ட நீர் ஆதார விவரங்கள், மக்களது பழக்க வழக்கங்கள், அதீத நம்பிக்கைகள், வழிபாட்டுமுறைகள், விழாக்கள், உணவு, உடை, விவசாயக் கருவிகள், வண்டிகள் பற்றிய குறிப்பு முதலிய அனைத்து விவரங்களும்) நேரில் கண்டறிந்து சேகரித்து ஆவணப்படுத்தும் வழக்கம் உறுதிப்படுத்தப்பட்டது.

    அந்நடைமுறை காகத்தியர் காலத்துக்குப் பின்னர் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களாலும் மேற்கொள்ளப்பட்டுப் பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் அவ்வாறு ஒவ்வொரு கிராமத்தைப்பற்றியும் கிராமக் கணக்காளர்கள் ( கர்ணம்) சேகரித்து வைத்த ஆவணம் ‘கைபீது’ அல்லது ‘கைபியாத்கள்’ (Kaifiyats) என்று அரபுமொழிமூலம் வந்த பெயர் பெற்றது. தெக்கணத்தை ஆட்சி செய்த சுல்தான்கள் காலத்தில் இப்பெயர் வழக்கத்திற்கு வந்திருக்கலாம்.

    சுல்தான்களுக்கு முன்பே தெலுங்கு பேசப்பட்ட பகுதிகளில் ‘தண்டக்காவிலே’/ ‘காவிலே’ (Dandakavile or Kavile) என்ற பெயரிட்டு கிராமத்தின் சூழல், நிலவரம், கிராம வரி விதிப்பு, வரி வசூல் கணக்கு, அறிக்கை, செய்தி(circumstances, account, statement, report, particulars, story, and news.) என்ற பல விவரங்களைப் பதிவு செய்து வந்திருக்கின்றனர். இவ்வாறு விவரங்கள் சேகரித்துப் பதிவு செய்யும் வழக்கம் தெலுங்கில் மட்டுமல்ல, தமிழ், மலையாளம், கன்னடம், என்ற திராவிட மொழிகளிலும், மராத்தி, ஏன் சமஸ்கிருதத்திலும் கூடப் பரவியது.

    தலைமுறை தலைமுறையாக இவ்வாறு தொடர்ந்து நேரில் கண்டறிந்து சேகரிக்கப்பட்ட கைபீது / ‘கைபியாத் (Kaifiyats) கிராமத்தில் அவ்வப்போது நிகழும் மாற்றங்களுக்கேற்ப நீக்கல், சேர்த்தல், திருத்தங்கள் மூலம் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆங்கிலேய ஆட்சிக் காலத்து அலுவலர்களால்‌ திரட்டப்பட்ட கைபீது களிலிருந்து சேகரிக்கப்‌ பெற்றவைகளின் மூலம் தற்போதுள்ள ஊர்களின்‌ பெயர்கள்‌ இதே பெயரில்தான்‌ அந்நாளில்‌ வழங்கப்பெற்றனவா? அல்லது அவற்றுக்கு வேறு பெயர்‌ இருந்தனவா? என்பது பற்றியும்‌, அவ்வூர்களில்‌ வாழ்ந்த மக்கள்‌ பழக்கவழக்கம்‌ பற்றியும்‌ அறிந்து கொள்ளப் பெரிதும்‌ உதவும்,

    இத்தகைய கைபீதுகள்/கைபியாத்கள் இந்தியக் கிராமங்கள் குறித்த- கிராம அலுவலர்களால் நேரடியாகப் பலகாலங்களில் சேகரிப்பட்டிருந்த- பலவகைப்பட்ட விவரங்களைத் தருவதாலும், அந்தந்தக் கிராமத்திலேயே ( at the miniature level) ஆவண விவரங்களை மேற்பார்வையாளரோ பிற அலுவலர்களோ அல்லது வரலாற்று ஆய்வாளர்களோ சீராய்வு செய்து நிரூபணம் (Verification) பெற்றுக் கொள்ள இயலும் என்பதாலும், இந்த வகைத் தகவல் பொக்கிஷத்தின் முக்கியத்துவம் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்தில் நன்கு உணரப்பட்டது. இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரலாக (Surveyor General of India) நியமிக்கப்பட்ட கர்னல் காலின் மெக்கன்ஸி என்பவர் (Colin Mackenzie, 1754-1821) கிட்டத்தட்ட நாற்பதாண்டுக் காலம் (1780-1820) பெரிதும் முயன்று, நாட்டின் பல பகுதிகளில் தனது அலுவலர்கள் மூலம் தேடிச் சேகரித்துத் தொகுத்துப் பகுத்துத்தான் இறப்பதற்கு ஒருஆண்டிற்குமுன் மெக்கன்ஸி மேனுஸ்கிரிப்ட்ஸ் (Mackenzie Manuscripts) என்று அறியப்படும் இந்தியக் கிராமங்கள் குறித்த பற்பல விவரங்களடங்கிய மிக அரிய வரலாற்று ஆவணத்தொகுப்பை உருவாக்கினார். வரலாற்று ஆய்வில் மெக்கன்ஸி மேனுஸ்கிரிப்ட்ஸ் ஒரு அதி முக்கிய ஆவணமாக இன்றளவும் கருதப்பட்டு வருகிறது...

    கிட்டத்தட்ட பண்டைத் தெலுங்குப்பிரதேசத்தில் வழக்கத்திலிருந்த ‘தண்டக்காவிலே’ ‘காவிலே’ (Dandakavile or Kavile)என்ற ஆவணம் போலவே -

    அரபிய மொழிவாயிலாக வந்த 18 ஆம் நூற்றாண்டு "கைபீது’/’கைபியாத் ‘ (Kaifiyats) போலவே –

    தனது கிராமத்துக் கரிசல் நிலம், குடியேற்ற வரலாறு, ஊரின் கட்டமைப்பு, கிராமப் பொது ஆதாரங்கள், வேளாண்மை, கால்நடைகள், சமய, சமுதாய, பொருளாதார, அரசியல் நிலவரங்கள், அக்கிராம மக்களது சுகாதாரம், உடை, உணவு, விளையாட்டு, பொழுது போக்குப் பழக்கங்கள் என்ற அனைத்து விவரங்களையும் பல வகையில் முயன்று சேகரித்து இந்நூலில் உட்பொதித்து வழங்கியிருப்பதால் -

    ஒரு மிகச்சிறிய கிராமமான தனது ஊருக்கெனப் பதிவு செய்யப்பட்ட வரலாறு இல்லை என்று விடாது உள் அலையும் தன் கவலையைப் போக்கும் நோக்குடன் -

    வாய்மொழி வரலாற்றின் படி, ஆரம்பத்தில் ஏழு குடும்பங்கள் மட்டுமே இருந்த சுமார் முன்னூறு ஆண்டுகளான தனது கிராமத்திற்கு ‘மெக்கன்ஸியின் மேனுஸ்கிரிப்ட்’ (Mackenzie Manuscripts) போன்ற அதி முக்கியமான –

    நம்மாழ்வார் நாராயணசாமி கைபீது ஆவணமாக-’ வரலாற்றுக் கொடையளித்திருக்கிறார் என்ற எனது மதிப்பீட்டை இங்கு மகிழ்ந்து பதியனிடுகிறேன்.

    நூலின் பல இடங்களில் தனது ஊரை ஒரு சிறிய குக்கிராமம் (முன்னுரை), தொடக்கத்தில் ‘ஏழு மண்வீடுகள் மட்டுமே உள்ள குக்கிராமம்,’ "ஒரு மிகச் சிறிய கிராமம்’ எனக் கவலையோடும் கரிசனத்தோடும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ஆறுதலளிக்கும் வகையில் இதோ சில தகவல்கள்:

    * ஆந்திரப் பிரதேச மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நூலாசிரியர் ஊர்ப்பெயரிலேயே, ஒரு மண்டலம் உள்ளது. நூலாசிரியர் ஊர்ப்பெயரிலேயே ஆந்திர சட்ட மன்றத்துக்கான தொகுதியும் (ராஜ முந்திரி மக்களவைத் தொகுதியில்) உள்ளது. இது தற்போது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. (நூலாசிரியர் தொகுத்தளிக்கும் குடியேற்ற வரலாறுடன் (அத்தியாயம் 2) இந்த ஊர்ப்பெயர் தொடர்புள்ளதா எனப் பார்க்கனும்.)

    * நூலாசிரியரது ஊர்ப் பெயரில், ‘ஊழியன்’ என்ற இதழில் (25-1-1935) ‘சிறுகதை மன்னன்’ எனச் சிலரால் சிலாகிக்கப்படும் புதுமைப்பித்தன் அருமையானதொரு சிறுகதை எழுதியிருக்கிறார்.

    * ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கோழிகள், ஆடுகளைப் பலியிட்டுத் திருமங்கலம் அருகே, இப்பெயருள்ள கிராம முனியாண்டி கோயில் ‘அசைவ அன்னதான திருவிழா’ பெயர் பெற்றது.

    * இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நூலாசிரியர் ஊர்ப் பெயரில் ஒரு ஊராட்சி இருக்கிறது.

    * திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்திலுள்ள நூலாசிரியர் ஊர்ப் பெயருள்ள கிராமத்தில் (அஞ்சலகக் குறியீட்டு எண் 606703) புகழ்பெற்றிருக்கும் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளது.

    * சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் நூலாசிரியர் ஊர்ப் பெயரில் (அஞ்சலகக் குறியீட்டு எண் 636115) ஒரு ஊராட்சி உள்ளது.

    * கடலூர் மாவட்டம், கம்மாபுரம் வட்டத்தில் (புவனகிரி சட்டமன்ற தொகுதி) இப்பெயரில் ஒரு கிராமம் (அஞ்சலகக் குறியீட்டு எண் 606003) இருக்கிறது.

    * விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இதே ஊர்ப்பெயருள்ள கிராமம் ஒன்று இருக்கிறது.

    * கோவை தெற்கில் நூலாசிரியர் ஊர்ப்பெயரிலிலுள்ள, பகுதியில்தான் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் உள்ளன.

    இன்னும் பல இடங்கள் உள்ளன. ஆனாலும் நூலின் இடச்சுருக்கம் கருதி இங்கே இப்பட்டியலை நிறுத்திக் கொள்கிறேன்.

    மேற்காண்பனவற்றின் மூலம், நூலாசிரியரது கிராமப்பெயர், சென்னையில் தமிழினத் தலைவரது இருப்பிடத்தால் தமிழகமெங்கும் யாவரும் அறிந்த இடமாக இருப்பதும் -

    கூடுதலாகத் தமிழகத்தின் பல நகர்ப்புறப் பகுதிகளும், மாவட்டங்களிலுள்ள பழைய ஊர்களும் நூலாசிரியர் ஊர்ப் பெயரில் இருப்பதன் மூலம், இப்பெயர் ஏதோ ஒருவகையில்- மேலும் ஆராய்ந்து அறியப்பட வேண்டிய காரணத்தால் - பரவி நிற்கிறது என்றறிகிறோம்.

    பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழகம் ஊரும் பேரும் (பழனியப்பா பிரதர்ஸ், முதற்பதிப்பு, 1946) நூலுக்குத் திரு.வி.க. அவர்கள் அளித்துள்ள (16-7-1946 நாளிட்ட ) முதற் பதிப்புக்கான முன்னுரையில் "வாழ்க்கைக்கு பல துறைகள்‌ தேவை. அவற்றுள்‌ ஆவி போன்றவை ‘ஊரும்‌ பேரும்’. ஊரும்‌ பேரும்‌ வாழ்க்கையை இயக்கி வளர்ப்பன என்று கூறல்‌ மிகையாகாது. ஊர்ப்‌ பேரால்‌ உலகம்‌ இயங்கல்‌ வெள்ளிடைமலை. ஊர்ப்‌ பேரே உலகம்‌; வாழ்க்கை; எல்லாம்‌ எல்லாம்‌," என்று ஊரின் பெயர் முதன்மையை உணர்வு பொங்கக் குறிப்பிட்டிருப்பார்.

    ஊர்ப்பெயரின் முதன்மை போற்றும் விதமாகத்தான் புகழ்பெற்ற ஆளுமைகள் பலர் ( பெரியார் ஈ.வெ.ரா, திரு.வி.க, தஞ்சை மருதகாசி, பட்டுக்கோட்டை அழகிரிசாமி, காருகுறிச்சி அருணாசலம், மதுரை பொன்னுசாமி சகோதரர்கள்) தம் பெயரின் முன் ஊர்ப் பெயரை இணைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டுள்ளார்கள் போலும்.

    ஊர்ப் பெயர்களை ஆராய்வதன்வழி திராவிட மக்களின் குடியேற்றத்தை அறியலாம் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் டி.பாலகிருஷ்ணன் நாயர். இடப்பெயர்கள் இனக்குழுக்களின் குடியேற்றங்களின் பரம்பரைகளைக் காட்டுவதோடு, புலப் பெயர்வுகளின் காலத்தை அறிந்துகொள்வதிலும் உதவுகின்றன. என ஆய்வாளர்கள் கருதுகின்றனர் (பார்க்க: McDavid, R.I. (1958). Linguistic Geographic and Toponymic Research. Names (6): 65–73.)

    தனது கிராமத்தின் எத்தனையோ விவரங்களை அரிது முயன்று, நுட்பம் நிறைந்த ஆய்வுமுறையில் சேகரித்து, கம்மவர் பற்றிய கதைகளும் கோர்த்து (பக் 29-31) அளித்துள்ள நூலாசிரியர், ‘ஊர்ப்‌ பேரே உலகம்‌; வாழ்க்கை; எல்லாம்‌ எல்லாம்‌’ எனத் திரு.வி.க போற்றும் முதன்மை வாய்ந்த ஊர்ப் பெயர்க் காரணமும், கதையேதுமிருந்தால் அதையும் கூடத்தேடி அளித்திருக்கலாம். (தமது ஊர்ப் பெயருக்கான காரணம் கண்டறிந்து இந்நூலில் பதிவிட்டிருந்தால் முன் மகிழ்வுப் பதியனுடன் கூடுதலாக இங்கு ஒரு மலர்ச்செடியும் நட்டிருப்பேன்.)

    III

    இடங்களின் பெயர்கள், அவற்றின் தோற்றம், பொருள், பயன்பாடு, வகைப்பாடு என்பவை பற்றி ஆய்வு செய்வது ‘இடப்பெயர் ஆய்வு’

    Enjoying the preview?
    Page 1 of 1