Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நான் ராஜா நீ என் ரோஜா!
நான் ராஜா நீ என் ரோஜா!
நான் ராஜா நீ என் ரோஜா!
Ebook252 pages1 hour

நான் ராஜா நீ என் ரோஜா!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் காதலி இறந்துவிட்டதால் அவளது பிரிவை தாங்க முடியாது, திரும்ணமே வேண்டாம் என்றிருக்கும் நாயகன்... சில சூழ்நிலையால் திருமணத்தை தவிர்க்கும் நாயகி. இவ்விருவரும் கடைசி வரை நண்பர்களாக இருக்கலாம் என்று தங்களுக்குள் டீல் போட்டு கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இறுதியில் என்ன நடந்தது??? என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்
நன்றி

Languageதமிழ்
PublisherSaiLakshmi
Release dateMar 9, 2024
ISBN9798224220984
நான் ராஜா நீ என் ரோஜா!

Related to நான் ராஜா நீ என் ரோஜா!

Related ebooks

Related categories

Reviews for நான் ராஜா நீ என் ரோஜா!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நான் ராஜா நீ என் ரோஜா! - சாய்லஷ்மி நாவல்ஸ்

    அத்தியாயம் : 1

    அந்தி சாய்கிற மாலை பொழுதில், கடற்கரை ஓரத்தில் உள்ள மரப்பெஞ்சில் சாய்வாக சரிந்தபடி, வாய்க்குள் மதுவை ஊற்றிக் கொண்டிருந்தான் ராஜா அருணாச்சலம்.

    பார்ப்பதற்கு இருபத்திஐந்து வயதை கடந்த இளைஞனாகவும், ஆறு அடி உயரத்துடனும், உயரத்திற்கு ஏற்ற எடை கொண்டவனாகவும் இருந்தான்.

    மதுப்பாட்டிலில் இருந்த மொத்த மதுவையும் வயிற்றுக்குள் ஊற்றிவிட்டு சந்தோஷமாக கண்களை மூடியவன், ‘நீ என் பேபீடா!!!’ எனக் கூறிவிட்டு, அவனது நெற்றியில் ஒரு பெண் முத்தமிடுவதை நினைத்துப் பார்த்து மகிழ்ந்தான்.

    பேபீ...

    ம்ம்ம்...

    நீ எங்க இருக்க???

    அந்த கேள்விக்கு பதில் கூறாது, இதழோரம் சன்னமாய் சிரித்தபடி, சட்டென்று அந்த பெண், அவனின் கண்களிலிருந்து மறைந்துவிட்டாள்.

    பேபீ... என்ற அழைப்போடு கண்களை திறக்க முடியாமல், அதாவது அந்த சொர்க்கத்தில் இருந்து நான்  வர மாட்டேன் என்று கெஞ்சி கொண்டிருந்த கண்களை விடாப்பிடியாக மிரட்டி... பணிய வைத்துக் கண்களைத் திறந்தவன், தட்டுத்தடுமாறி எழுந்து அவளைத் தேடினான்.

    சற்று தூரத்தில் தென்ப்பட்ட ஒரு பொண்ணை பார்த்து,  அவளாக இருக்ககூடும் என எண்ணியவாறு, பேபீ... எனக் கத்தி அழைத்தபடி அருகே விரைந்தான்.

    கையில் மது பாட்டிலோடு கத்தி கொண்டு வந்தவனைப் பார்த்துவிட்டு, அந்த பெண் பயந்து கூச்சலிட ஆரம்பித்தாள்.

    அப்பெண்ணின் அருகில் நின்றிருந்த ஆடவன் ஒருவனோ, அந்த பெண்ணிற்கு உதவ நினைத்து ராஜாவைப் பிடித்து நிறுத்தினான். 

    ராஜாவோ, தன் பேபீயை பார்க்காவிடமால் தடுக்க இவன் யார்? என்ற எண்ணத்தில், அந்த ஆடவனை ஆக்ரோஷமாக  தாக்க தொடங்கினான்.

    அவ்விருவரும் சண்டையிட ஆரம்பிக்கவும், அந்த பெண், ‘ஹெல்ப்... ஹெல்ப்’ என்று பயந்தடித்து கொண்டு கத்தி கூச்சலிட்டாள்.

    அவர்கள் அருகில் வேகமாக ஆட்கள் ஓடி வந்தனர். ராஜாவைப் பார்த்துவிட்டு, அவனை பிடித்து நிறுத்த நினைத்தனர்.

    தன்னை நோக்கி வந்த அனைவரையும் காரணமின்றி வெறித்தனமாக தாக்க ஆரம்பித்தான் ராஜா.

    அவனது ஆட்டம் தாங்காமல், சட்டென்று, ஒரு ஐந்து பேர் சேர்ந்து அவனை அடக்க முனைந்தார்கள். அச்சமயம் ஹோட்டல் உதவியாளன் ஒருவன் வந்து, அவர்கள் இடையே புகுந்து, இவர் ரொம்ப பெரிய கோடிஸ்வரர். இவரை ஒன்றும் செய்யாதீர்கள் என்று கெஞ்சி கூத்தாடியவாறு, அவர்களிடம் கூறி, படாதபாடுப்பட்டு ராஜாவின் அறையை நோக்கி, அவனை அழைத்துச் சென்றான்.

    என் பேபீயை காணோம்??? என்று கத்தினான் ராஜா.

    சார்... யாரை சார் தேடுறீங்க???... சார்??? என்று உதவியாளன் குரல் கொடுக்க,

    பேபீயை எ...ன் பேபீயை நான் பா...ர்க்க...ணும். ஒரு பாட்டில் கொண்டுவா??? அறைக்குள் வந்ததும், தன்னை தாங்கியிருந்தவனை தள்ளிவிட்டுக் கத்தினான்.

    ராஜாவின் ஆர்ப்பாட்டம் தாங்க முடியாது ஓடிச் சென்று அவன் கேட்ட மதுபாட்டிலை கொண்டு வந்து கொடுத்தான் உதவியாளன்.

    பாட்டிலில் இருந்த மதுவை முழுவதுமாக  காலி செய்துவிட்டு, கண்களை  மூடியவன், பேபீ நீ வா... என்னால நீ இல்லாம இருக்க முடியல... பேபீ... என்று இரவு முழுவதும் பிதற்றி கொண்டிருந்தான்.

    மறுநாள், ஹாய் டாடி!!!... அவங்க நம்ம காண்ட்ராக்ட்க்கு ஒத்துக்கிட்டு சையின் பண்ணிட்டாங்க. வந்த வேலை சக்சஸ்!!!... என்று தந்தையிடம்அலைபேசியில் கூறினான்.

    மறுபக்கம், அப்படியா??? என்று ஆச்சரியமாக கேட்காமல் நிதமானமாக கேட்டார் அவனது தந்தை அருணாச்சலம்.

    எஸ் டாடி!!!... இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கு ஃபேக்ஸ் வரும். ஆபீசுக்கு போனதும் ரிசீவ் பண்ணிக்கங்க... அவரிடமிருந்து பாராட்டை எதிர்ப்பார்த்தபடி பேசி கொண்டிருந்தான்.

    சரி!!!...

    அப்...புறம் அவங்க ஒரு கன்ஃபர்மேஷன் லெட்டர் கேட்டாங்க டாடி... நாராயணன் சார்ட்ட சொல்லி அவங்க கம்பெனிக்கு ஒரு கன்ஃபர்மேஷன் லெட்டர் அனுப்ப சொல்லுங்க... இந்த வியாபாரம் ஒப்பந்தமானதில் எவ்வளவு பெரிய தொகை நம் அலுவலகத்திற்கு லாபம் வர போகிறது  என்ற சந்தோஷத்தில் தந்தையிடமும் அந்த சந்தோஷத்தை எதிர்ப்பார்த்துப் பேசி கொண்டிருந்தான்.

    நாராயணன் இல்ல!!!...

    ஏன்???... அவர்க்கு என்னாச்சு டாடி? ஒரு நாள் கூட ஆபீசுக்கு லீவு போடமாட்டாரே??? என்று ஆச்சரியமாக அவன் கேட்கவும்,

    நாராயணன் ரெண்டு நாள் முன்னாடி இறந்து போயிட்டாரு!!!... என்றார் ஏதோ விரக்தியாக...

    ராஜாவிற்கு அவரின் வார்த்தையை நம்ப முடியவில்லை. சற்று அதிர்ச்சியாக, டாடி!!!... அவரு... நல்லாத்தான இருந்தாரு? என்று நலிந்த குரலில் கேட்டான்.

    நல்லாத்தான் இருந்தாரு திடீர்னு ஹார்ட் அட்டாக் போயிட்டாரு!!!...

    என்ன டாடி???... இவ்வளவு கேஷுவலா சொல்றிங்க? விஷயத்தைச் சொல்லிருக்கலாம்ல... நான் கெளம்பி வந்திருப்பேனே???  ஏன் யாருமே எங்கிட்ட  சொல்லல? என்று ஆதங்கப்பட்டான்.

    நீ மனுஷங்களை மதிப்பனு தெரிஞ்சிருந்தா... சொல்லிருக்கலாம்... ஆனா... நீதான் குடிச்சிட்டு போதையில தலைகால் புரியாம... எவனவன் கூடவோ மிருகம் மாதிரி சண்டை போட்டுட்டு இருந்திருக்கிறீயே??? அதான்... உங்கிட்ட விஷயத்தை சொல்ல வேணானு சொல்லிட்டேன் இவ்வளவு நேரமும், அமைதியாக பேசி கொண்டிருந்தவர், சற்று குரல் உயர்த்தி பேசினார்.

    அருணாச்சலத்தின் கடைசி வார்த்தையில் பேரதிர்ச்சிக்கு உள்ளானான் ராஜா. டா...டி!!! என்று  அதிர்ச்சியாக தட்டுதடுமாறி அழைத்தான்.

    அவனிடம் பேச பிடிக்காதவர்போல சட்டென்று அருணாச்சலம் அழைப்பைத் துண்டித்துவிட்டார். அவர், அழைப்பை துண்டித்ததும் கோபமாக அலைபேசியை மஞ்சத்தில் எறிந்தவன், ‘அப்பாவுக்கு எப்படி விஷயம் தெரிந்தது?’ என யோசித்தவாறு  மஞ்சத்தில் கிடந்த மதுபாட்டிலை கோபத்தில் தள்ளிவிட்டு யோசனையாக மஞ்சத்தில் அமர்ந்தான்.  அவன் தள்ளிவிட்ட வேகத்தில் பாட்டில் போய்ச் சுவற்றில் மோதிச் சுக்குநூறாய் உடைந்தது.

    ‘நம்மை பற்றி யார் சொல்லியிருப்பார்கள்? ட்ரைவர் சொல்லிருப்பானா? அவன் அப்பாவிடம் பேச கூடப் பயப்படுவனே??? அவன் சொல்ல வாய்ப்பில்லை. அப்படியென்றால் என்னை பற்றி... அப்பாவிடம் யார் வற்றி வைத்திருப்பார்கள்?’ என்று தீவிரமாக யோசித்தான்.

    ‘அப்பாவுடைய தொழில் நண்பர்களில் யாரோ ஒருவர்தான் என்னை நேற்று பார்த்திருக்க வேண்டும். அவர் மூலமாகத்தான் அப்பாவிற்கு விஷயம் தெரிந்திருக்க வேண்டும்!!!’ என்று எண்ணி கொண்டான்.

    ‘எத்தனை நாள்தான் அவர்க்குத் தெரியாமல் நடந்து கொள்ள முடியும்? எப்படியும் ஒருநாள் விஷயம் அவருக்குத் தெரியத்தானே போகிறது? அது இன்று தெரிந்துவிட்டது அவ்வளவுதான்!!!" என்று அடுத்த நொடியே விஷயத்தை இலகுவாக எடுத்துக்கொண்டான்.

    தன் குடிப்பழக்கம் அப்பாவிற்கு தெரிந்துவிட்டதே??? என்ற அதிர்ச்சித்தான் அவனுக்கு தோன்றியதே தவிர, அவருக்கு விஷயம் தெரிந்ததனால் தன்னைப் பற்றி கவலைப்படுவாரே? வருத்தப்படுவாரே? என்று ராஜா எண்ணவில்லை.

    அவனைப் பொறுத்தவரை அவனுடைய பேபீ... குடித்த பின்னர்தான் கண்ணிற்கு தெரிவாள். அவளைப் பார்ப்பதற்காக குடித்து கொண்டிருக்கிறான் அவ்வளவுத்தான்!!!...  ஆனால் மதுவை விரும்பி அவன் குடிக்கவில்லை. அவளை மறக்க முடியாமல் குடித்தான்.

    ராஜா வீட்டை அடைந்ததும், அருணாச்சலம் அவனிடம் பேசவே இல்லை.  ஏன் அவன் முகம் பார்ப்பதையே தவிர்த்தார். அவனை பார்க்க நேர்ந்தால் கூட, முகத்தைத் திருப்பிக்கொண்டார்.  எதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பேச நேர்ந்தாலும், வீட்டில் வேலை செய்யும் பெண்மணி கற்பகத்தின் மூலமாகவும், அலுவலகத்தில் அவனுடைய தனிப்பட்ட உதவியாளன் கண்ணன் மூலமாகவும்,  அருணாச்சலமிடமிருந்து ராஜாவிற்கு விஷயம் சென்றடைந்தது.

    இப்படியாக ஒரு வாரம் கடந்தது.

    தந்தை தன்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை என்ற காரணத்தை ஒரு காரணியாக வைத்துக் கொண்டு, ஹெட்ஹவுஸிலே தங்க ஆரம்பித்தான்.

    இரவு முழுவதும் மதுவின் துணையோடு, பேபீ... பேபீ என்று பிதற்றி கொண்டிருந்தான்.

    நாளாக... நாளாக அவனின் குடிபழக்கம் அதிகமானதை அறிந்த அருணாச்சலம், தொழில் விஷயங்களை தவிர வேறு எதைப் பற்றியும் மற்றவர்கள் மூலமாக கூட... அவனிடம் பேசவில்லை.

    எப்பொழுதும் அன்பை மட்டுமே வெளிக்காட்டுகிற தந்தை, இப்போது வெறுப்பை காட்டுவது அவனுக்குச் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது. அந்த வருத்தத்தையும் மதுவின் துணையோடு கடந்து கொண்டிருந்தான்.  கொஞ்ச நாளில் கோபம் குறைந்து தந்தை இயல்புக்கு திரும்பிவிடுவார் என்று நம்பிக்கை கொண்டிருந்தான்.

    அன்று அலுவலகத்தில் அருணாச்சலத்துடன் இன்னொருவர் பேசிக் கொண்டிருந்தார். அச்சமயம், அவரது அலுவலக அறைக்குள் நுழைந்த ராஜா, அவ்விருவரையும் பார்த்துவிட்டு, சாரீ டாடி!!!... நான் அப்புறம் வர்றேன் எனக் கூறிவிட்டு நகர முயன்றான்.

    ரவி!!!... மீட் மை சன் ராஜா அருணாச்சலம்  நண்பர் ரவீந்திரனுக்கு மகனை அறிமுகம் செய்து வைத்துவிட்டு மகனிடம், என் நண்பன் என்றும் அறிமுகம் செய்து வைத்தார் அருணாச்சலம்.

    ஹாய்!!!... அங்கிள் என்று ராஜா கை நீட்டவும்,

    அவனின் கையை பற்றிக் கொண்டவர், உன் அப்பாவை சின்ன வயசில் பார்க்கிறதை போல இருக்கப்பா என்றார் ரவீந்திரன்.

    சிரித்த முகமாக, தந்தையை பார்த்தபடி, எல்லாரும் அப்படித்தான் சொல்வாங்க   என்றான் ராஜா.

    அருணாச்சலமோ... அவனை முறைத்துப் பார்த்தார்.

    ரவீந்திரனிடம் ஓரிரு வார்த்தை பொதுவாக பேசிவிட்டு ராஜா நகரவும், பையனை நல்லா வளர்த்திருக்கடா. நான் பொண்ணை  பெத்து வச்சிட்டு கவலைப்பட்டுட்டு இருக்கேன். எனக்கு ஒரு மகன் இல்லாம போச்சு!!!... என்று சலித்து கொண்டார்.

    உனக்கு எவ்வளவு பணம் வேணும்ன்னாலும் நான் தர்றேன்டா. நீ எனக்குத் திருப்பிக் கொடுக்க வேணா. சும்மா பையன் இல்லை அப்படி இப்படினு பொலம்பாத. ஏற்கனவே உனக்கு உடம்பு சரியில்லனு சொல்ற? வீணா கவலைப்பட்டு உடம்பை கெடுத்துக்காத. ஆமா... உன் பொண்ணு எப்படி இருக்கா? நல்லாயிருக்காளா???

    மரம், செடி, கொடி, பறவைனு வளர்த்திட்டு இருக்காடா. இல்லன்னா... வீடு முழுக்க படமா வரைஞ்சு வைக்கிறா. ஒரு நல்ல சம்மந்தம் வந்ததுடா அந்த பையனை கட்டிக்க மாட்டேன்னு அடம்பிடிச்சிட்டா என்றார் சலிப்பாக

    ஏன்டா??? மாப்பிள்ளையைப் பிடிக்கலையா?

    ஆமா!!!...

    வேற மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டியது தான???

    நாலைஞ்சு மாப்பிள்ளையைப் பார்த்துட்டேன்டா... எதுவும் செட்டாக மாட்டிங்கிது. நல்ல மாப்பிள்ளை கெடைச்சா பேசாம பிஸ்னஸையும் அவரையே பார்த்துக்க சொல்லிட்டு, நான் ரெஸ்ட் எடுக்கலாம்னு இருக்கேன். இவ கல்யாணமே வேணானு பிடிவாதம் பிடிக்கிறா. உனக்குத் தெரிஞ்சு ஒரு நல்ல மாப்பிள்ளை இருந்தா சொல்லுடா? வாஞ்சையாக கேட்டார்.

    சரிடா சொல்றேன்!!!

    அ...அப்புறம் உன் பையனுக்கு எதுவும் கல்யாணம் பண்ற ஐடியாவுல இருக்கியா? என் பொண்ணை வெளியில கட்டி கொடுக்கிறதுக்கு பதிலா... உன் பையனுக்கு கட்டி தரலாம்னு நான் நெனைக்கிறேன் . உன் ஐடியா என்ன??? ராஜாவைப் பார்த்ததும், நேராக விஷயத்திற்கு வந்தார் ரவீந்திரன்.

    அவரின் கேள்வியில் சந்தோஷமடைந்த அருணாச்சலம், என் பையனுக்கு நான் கல்யாணம் பண்ற ஐடியாவுலத்தான் இருக்கேன்டா. ஆனா... அவன் கல்யாணம் பண்ற ஐடியாவுல இல்ல. காரணம் லவ்!!! என்று கண்களை விழித்தார்.

    இதனாலத்தான் பல குடும்பம் அழியுது என்று,  சற்று எரிச்சலுடன் கூறினார்.

    அவன் காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ண சந்திச்சிருக்கான். அவளை ஆத்மார்த்தமா விரும்பிருக்கான். ஆனா... அந்த பொண்ணு இறந்திட்டாளாம். இவன் இன்னும் அவளை மறக்க முடியாம  குடிச்சிட்டு இருக்கான்டா. கல்யாணம் வேணானு சொல்றான். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவன் கேட்க மாட்டின்கிறான். என்ன பண்றதுனு தெரியாம நான் முழிச்சிட்டு இருக்கேன்!!!... கவலையாக கூறினார் அருணாச்சலம்.

    அதுக்காக காலம்புறா அந்த பொண்ணை நினைச்சிட்டு இருந்திட முடியுமா???

    செல்லமா வளர்த்த பையன் கண் முன்ன இப்படி குடிச்சிட்டு இருக்கிறதை பார்க்க முடியலடா. அவனை எப்படி சரி பண்றதுனு எனக்குத் தெரில

    இப்படியாக இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் ரவீந்திரன் பொண்ணுக்கும், ராஜாவிற்கும் திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள்.

    இவள்தான்டா என் பொண்ணு ரோஜா!!! ஒரு கவரை நீட்டினார் ரவீந்திரன்.

    கவரை திறந்து பெண் புகைப்படத்தைப் பார்த்த அருணாச்சலம், ராஜா... ரோஜா பெயர் பொருத்தமே ரொம்ப நல்லாயிருக்கே!!!... பொண்ணு பார்க்க... மஹாலஷ்மியாட்டம் இருக்காடா.  ஆனா... இவங்க ரெண்டு பேரையும் எப்படி நாம கல்யாண பந்தத்துல இணைக்கிறது? சந்தேகமாய் கேட்டார்.

    உடனே சில யோசனைகளை கூறினார் ரவீந்திரன்.

    சரிடா!!!... நீ சொன்னது போலவே பண்றேன்  என்று உற்சாகமாக பேசினார் அருணாச்சலம்.

    ‘நாம ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்னு சொல்வாங்க. நாம பணத்தை வாங்கிட்டு போலானு நினைச்சா, பணத்தை கொடுக்கிற சாமியே சொந்தமாக போகுது. இனி, நம்ம காட்டுல மழைத்தான். ஆனால்...  இந்த ரோஜாவை எப்படி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறது?’ என்ற புலம்பலோடு வீட்டிற்கு விரைந்தார் ரவீந்திரன்.

    வழக்கம்போல தனக்கு பிடித்த மெல்லிய இசையை ஒலிக்கவிட்டு, தன்னுடைய அறைக்குள் எதையோ வரைந்து கொண்டிருந்த ரோஜா, தந்தையின் வருகையைக் கண்டதும், கண்டும் காணாதது போல இருந்தாள். சில வருடங்களாக அவரிடம் பேசுவதையும் ஏன் அவரின் முகத்தைப் பார்ப்பதையும் தவிர்த்தாள்.

    அவள் முன்னே ஒரு சில காகிதங்களை விட்டெறிந்தார் ரவீந்திரன். "இதுதான் உன் அப்பாவோட நெலைமை. பத்து கோடி கடன்ல மாட்டிட்டு முழிச்சிட்டுருக்கேன். அந்த கடனாலத்தான் உனக்குச் சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கலானு நெனைக்கிறேன். நாளைபின்ன... கடங்காரன்  நம்ம வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணும்போது, எவனாவது நீ கடனை திருப்பிக் கொடுக்கிற வரை உன் பொண்ணை நான் வச்சிக்கிறேன்னு சொல்லிட கூடாதுல!!!... 

    அதுக்காகத்தான் பணம், நகைனு எதுவும் வேண்டா... உன் பொண்ணு அழகுக்காக... அவளை கட்டிக்கிறேன்னு சொன்னவனை உனக்கு மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்தேன். நீ அது இதுனு காரணம் சொல்லி வந்தவனை விரட்டிட்ட..."

    விபரம் தெரிந்த நாளிலிருந்து அவரின் இப்படியான வார்த்தைகளை கேட்டு கேட்டு, மனமுடைந்து போனவளுக்கு தற்போது அவரின் கீழ்தரமான வார்த்தைகள் பெரிதாய் மனதை பாதிக்கவில்லை.  அவர் சொல்வதை கேட்டும் கேட்காதது போலவும், வரைவதில் கவனத்தை செலுத்தினாள் ரோஜா.

    இப்ப... நான் பார்த்திருக்கிற இடம் நல்ல இடம். என் ஸ்கூல் ப்ரெண்ட் அவன். என்னைக்கோ... அவனுக்கு நான் பண்ண சின்ன உதவிக்காக... இன்னைக்கு பத்து கோடியை எதையும் கேட்காம அப்படியே நாய்க்கு பிஸ்கட்டை தூக்கி போடுற மாதிரி தூக்கி போட்டுட்டான். அவன் மனுஷனே இல்ல தெய்வம்!!!

    ‘நல்ல மனுஷன் உங்களுக்கு எப்படி ப்ரெண்டா இருப்பான்???’ என்று மனதிற்குள் எண்ணி கொண்டாள் ரோஜா.

    நாந்தான்!!!... அவன் மகனைப் பார்த்துட்டு, என் பொண்ணை உன் வீட்டு மருமகளா ஏத்துக்கிறீயானு கேட்டேன். உன்னை பத்தி எதுவும் கேட்காம என் ப்ரெண்ட்ஷுப்க்காக... உன்னை மருமகளா ஏத்துக்கிறேன்னு சொன்னான்

    அவரின் வார்த்தைகள் ரோஜாவிற்கு அலட்சியமாக இருந்தது. அவசியமில்லாதது போலவும் தோன்றியது.

    "ஆனா... அவன் மகன் இன்னொரு பொண்ணை விரும்பினானாம். அந்த பொண்ணு செத்து போச்சாம். அந்த பொண்ணை மறக்க முடியாம குடி பழக்கத்துக்கு அடிமையாகிட்டானாம். உன் பொண்ணால என் பையனை அந்த பொண்ணு இழப்பிலிருந்து மீட்டு கொண்டு வர முடியுமானு கேளுடா. அவளால முடியும்ன்னா இந்த கல்யாணத்தை வச்சுக்கலாம். இல்லன்னா... நாம எப்பவும் நண்பர்களாகவே இருக்கலாம்னு சொல்லிட்டான்.

    என் ப்ரெண்ட்டோட கம்பெனி, வீட்டு அட்ரஸ், அவன் பையன் டிடைல்ஸ் எல்லாம் இந்த டைரில இருக்கு. நீயே பார்த்துட்டு ஒரு முடிவெடு. இப்பவும் நீ தேவையில்லாம பிடிவாதம் பிடிச்சிட்டு இருந்தன்னா...

    Enjoying the preview?
    Page 1 of 1