Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

EVEREST IN MIND (TAMIL)
EVEREST IN MIND (TAMIL)
EVEREST IN MIND (TAMIL)
Ebook290 pages1 hour

EVEREST IN MIND (TAMIL)

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குறைவாகப் பயணித்த சாலையே மாலாவத் பூர்ணாவால் அவளுடைய வாழ்க்கையின் நோக்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் பூர்ணா இந்த வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் முதல் ஆளில்லை. கடைசி நபரும் கிடையாது. பிறகு ஏன் அவளது பயணத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது? இந்தப் பாதையில் அவள் என்ன சாதித்தாள்? அவள் தன்னுடைய இளம் வயதை முன்னிறுத்தி எந்த அளவிற்குப் பெயர்

Languageதமிழ்
Release dateNov 20, 2022
ISBN9788195677375
EVEREST IN MIND (TAMIL)

Related to EVEREST IN MIND (TAMIL)

Related ebooks

Related categories

Reviews for EVEREST IN MIND (TAMIL)

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    EVEREST IN MIND (TAMIL) - Sudheer Reddy Pamireddy

    மலையேறுபவர்களின் எண்ணங்கள்

    மிக உயரமான மலை மற்றும் பள்ளத்தாக்கு இரண்டும் இயற்கையின் பகுதிகள். வாழ்க்கையில், அறிவும் மனிதத் திறமையும் அவசியம். மலையேறுதலில் அறிவு மற்றும் மனித திறன்கள் முக்கியம். சுதீர் ரெட்டி பாமிரெட்டி மலேசியாவிலிருந்து என்னை அழைத்து அவரது சமீபத்திய புத்தகம், 'எவரெஸ்ட் இன் மைண்ட்' ஆங்கிலப் பதிப்பைப் பற்றி எனது கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஒரு மலையேறுபவராக இந்தப் புத்தகம் படிக்கும் போது மிகவும் மகிழ்ந்தேன். மகிழ்ச்சியின் உணர்வுகள் என் இதயத்தை நிரப்பின.

    2013 முதல், 'டிரான்சென்ட் அட்வென்ச்சர்ஸ்' என்ற எங்கள் அமைப்பின் மூலம் நான் ஒரு பாறை ஏறுதல் மற்றும் மலையேறுதல் பயிற்சியாளராக இருந்தேன். மலையேறுதல் பற்றிய எண்ணங்கள் என் இதயத்தை நிறைத்தது. துல்லியமாகக் கூறவேண்டுமானால் பூர்ணா மற்றும் ஆனந்தின் தைரியமான எவரெஸ்ட் சிகரப் பயணத்தில் நான் ஒரு பகுதியாக ஆனேன். ஆபரேஷன் எவரெஸ்ட் 2014 என்று அதற்குப் பெயரிட்டோம். ஆரம்ப பயிற்சி நாட்களின் நாளிலிருந்து அவர்கள் பாதுகாப்பாக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு திரும்பும் வரை நான் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றேன். அந்த பயணம் பற்றிய எனது நினைவுகளும் சம்பவங்களும் எப்பொழுதும் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. வாழ்க்கையை மாற்றும் சம்பவங்களும் மனிதர்களும் மறக்க முடியாதவை.

    நான் குழந்தைகள் பயிற்சியாளராக இருந்த எட்டு மாதங்களில், நாங்கள் 'டிரான்சென்ட் அட்வென்ச்சர்ஸ்' மூலம் பல புதிய சிந்தனைகளை செயல்படுத்தினோம். கடினமான பயிற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் மாறினோம். ஆனந்தும் பூர்ணாவும் குறுகிய காலத்தில் அவர்களின் எவரெஸ்ட் சிகரப் பயணம் மூலம் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கித் திரும்பிப் பார்க்க வைத்தனர்பூர்ணா மற்றும் ஆனந்தின் பயணம் என் நினைவுகளில் ஒரு தனி இடம் பெற்றது. இருவரும் எவரெஸ்ட் சிகரம் மட்டுமல்லாது உலகின் மற்ற சிகரங்களையும் ஏறியவர்கள். அந்த நேரத்தில், அந்த அற்புதமான குழந்தைகளுக்கு நான் பயிற்சி அளிப்பதன் மூலம் உலக சாதனைகள் செய்து உலகை அசைக்கப் போகும் பயணத்தில் நானும் உள்ளேன் என்று எனக்கு அப்போது புரியவில்லை. இப்போது அவர்களின் தனித்துவத்துடன் அவர்கள் பெரிய ஆளுமைகளாக மாறிவிட்டதாக உணர்கிறேன்.

    அவர்கள் தங்கள் குறுகிய கால மலையேறுதல் பயணங்களால் உலகின் கவனத்தை ஈர்த்தனர். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றாலும் வலியின் சுமையை சுமந்து, அவர்கள் தங்கள் மனதில் ஞான விளக்கை ஏற்றி வைத்தனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மின்னல் வேகத்தில் நகர்த்தினர். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைத்தால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் திறமையை நூற்றுக்கு நூறு நிரூபிப்பார்கள் என்பதை நிரூபித்தார்கள். இப்போதும் கூட, முழு நிகழ்வுகளையும் நான் ஒரு கனவு போல் உணர்கிறேன். ஆசிரியர், சுதீர் ரெட்டி பாமிரெட்டி, இந்த புத்தகத்தை எழுதுவதில் கவனம் மற்றும் அசாதாரண அர்ப்பணிப்புக் கொண்டிருந்தார். முதலில் இருந்து பயணத்தின் இறுதி நாள் வரை, அவர் குழந்தைகளுடன் இருந்ததைப் போல் பயணத்தை ஒவ்வொரு விவரத்துடன் வெளிப்படுத்தினார். அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் அவர் இந்தப் புத்தகத்தை ஒரு கவிதையாக வழங்கியுள்ளார். ஆச்சரியம் என்னவென்றால், அவர் இந்த மலையேறுதல் பயணத்தில் நடந்த நிகழ்வுகளை நிமிடம் தவறாமல் குறிப்பிட்டுள்ளார். நூலாசிரியர் பெற்றோரின் பயிற்சி, தேர்வு, அன்பு மற்றும் பாசம் ஆகியவற்றையும், அவர்களின் அச்சங்கள், அவர்கள் தங்கள் முதல் அடியை எடுத்து வைக்கும் போது அனைவரையும் மிஞ்சும் அச்சங்கள் மற்றும் தோல்விக்கான வாய்ப்புகள் எல்லாவற்றையும் தெளிவாக விளக்குகிறார். இமயமலையின் வளிமண்டலம், அங்கு வரக்கூடிய ஆபத்துகள் அங்குள்ள தாவரங்கள் மற்றும் மலையேறுபவர்களின் வாழ்க்கையில் ஷெர்பாக்களின் பங்கு, அவர்களின் நம்பமுடியாத இயல்பு, எவரெஸ்ட் பயணத்தின் மொத்த அனுபவம் ஆகியவற்றை முழுமையானதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் வாசகர்களுக்கு அளிக்க ஆசிரியர் முயற்சித்தார்.

    சுதீர் ரெட்டி இந்த புத்தகத்தை தனிப்பட்ட சிந்தனை செயல்முறையுடன் வழங்கிய ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். இந்த புத்தகத்தை உண்மையைத் தேடி ஒரு பெரிய நோக்கத்துடன் தொடங்கி ஒரு தெளிவான பார்வையுடன் அதை முடித்தார். இந்நூலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மனித நேயத்துடன் ஆசிரியர் வடிவமைத்துள்ளார். சரித்திர வடிவில் பொறிக்கப்பட்ட கதை பிரமிக்க வைக்கிறது. டாக்டர் அம்பேத்கரின் கனவு, எஸ்.ஆர் சங்கரனின் செயலில் உள்ள உத்வேகம்,  முனைவர் ஆர்.எஸ்.பிரவீன் குமார் அவர்களின் முயற்சி ஆகியவற்றை ஆசிரியர் மிக நன்றாக விவரித்தார். சமூகத் தன்னார்வ அமைப்புகளின் மாறிவரும் சிந்தனைகளைத் தெளிவாக விவரித்தார்.

    பூர்ணா மற்றும் ஆனந்த்தின் பயிற்சியாளர் சேகர் பாபு, விங் தளபதி ஸ்ரீதரன், யோகா ஆசிரியர் ஏ.ஆர்.ஜே.வேணுகோபாலாச்சார்யா,  பூர்ணாவுக்குத் துணையாக இருந்த பனாவத் சுரேகா, (ஏனெனில் அவளுக்கு பதின்மூன்று வயதுதான்), ஆசிரியர் ரல்லபாண்டி ஸ்ரீலதா, டார்ஜிலிங்கில் உள்ள HMI இன் பாட இயக்குநர் ரோஷன் கஹத்ராஜ் ஆகியோர் சித்திரமாக நம் முன்வைக்கப்பட்டது ஆசிரியரின் கடின முயற்சியைக் குறிக்கிறது.

    பழங்குடியினர் மற்றும் காடுகளில் வசிப்போரின் குழந்தை வளர்ப்பு முறைகள் பூர்ணாவின் குழந்தைப் பருவ விவரிப்பு மூலம் வாசகர்களின் இதயங்களில் படம் பிடித்துக் காட்டப்பட்டது. இந்தியா மற்றும் பஞ்சாரா பழங்குடியினரின் வரலாற்று நிகழ்வுகளை விவரிப்பதில் ஆசிரியரின் வரலாற்றுக் கண்ணோட்டம், ஆராய்ச்சி மற்றும் முடிவுகள் இந்த புத்தகத்தில் வாசகர்களுக்கு தெரியும்.

    ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி அளித்தேன். அவர்களில் பலர் எவரெஸ்ட் சிகரத்தில் மற்றும் உலகின் பிற சிகரங்கள் பலவற்றில் ஏறினர். ஒரு பயிற்சியாளராக எனது பங்கினை நுணுக்கமான விவரித்துள்ளார் நூலாசிரியர். இதன்மூலம் ஆசிரியருக்குள் ஒரு பயிற்சியாளர் இருப்பதை உணர்ந்தேன். ஆச்சர்யம் என்னவென்றால், ஆசிரியர் ஒவ்வொரு பாத்திரமாக உருமாறி இதை எழுதியதைப் போல் உள்ளது.

    நான் சுதீர் ரெட்டி பாமிரெட்டியிடம் நேரிலோ தொலைபேசியிலோ சந்தித்ததும் இல்லை உரையாடியதும் இல்லை. ஆனால் அவர் என் பயிற்சி முறைகளை மற்றும் எனது ஊக்க உரைகளைத் தொண்ணூறு சதவிகிதம் பொருந்தக்கூடிய அளவுக்கு எழுதியுள்ளார். இந்நூலைப் படிப்பவர்கள் ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும், நிச்சயமாகப் பெறுவார்கள். அவர்களின் அர்ப்பணிப்பு, மற்றும் இதயத்தின் திறன் அதிகரிக்கும். எழுத்தாளர் எவரெஸ்ட் பயணத்தின் இலக்கில் தன்னை மூழ்கடித்தார். அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

    இந்நூலின் ஆசிரியர் கதை மற்றும் படைப்பாற்றலுடன் இணைந்த தனது முதிர்ந்த நடையால் என் நினைவைப் புதுப்பித்துள்ளார். இது சாத்தியமில்லாததை அடைய வாசகர்களுக்குத் தன்னம்பிக்கையின் தீப்பொறியைத் தூண்டும் என்று நான் நம்புகிறேன். எழுத்தாளர் இந்த இலக்கை அடையச் செய்வார் என்று நம்புகிறேன். இந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியரை மனதார வாழ்த்துகிறேன்.

    பரமேஷ் குமார் சிங்.

    பாறை ஏறுதல் மற்றும் மலையேறுதல் பயிற்சியாளர்

    ஹைதராபாத், தெலங்கானா, இந்தியா

    நுண்ணறிவு அனுபவம்

    -குறைவாகப் பயணித்த சாலையே மாலாவத் பூர்ணாவால் அவளுடைய வாழ்க்கையின் நோக்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் பூர்ணா இந்த வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் முதல் ஆளில்லை. கடைசி நபரும் கிடையாது. பிறகு ஏன் அவளது பயணத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது? இந்தப் பாதையில் அவள் என்ன சாதித்தாள்? அவள் தன்னுடைய இளம் வயதை முன்னிறுத்தி எந்த அளவிற்குப் பெயர் மற்றும் புகழ் அடைந்தாள்? அவள் வாழ்க்கையின் இலக்கு என்ன? வாழ்க்கையில் அவளுக்கு நிலையான ஆதரவாக இருந்தது யார்? எதற்காக அவர்கள் அவள் பயணத்தில் இருந்தார்கள்? ஏன் பூர்ணாவை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்?

    பூர்ணாவின் மலையேறுதல் பயணம் பல அறியப்படாத உத்வேகங்கள், உயிர் கொடுக்கும் முதன்மையான சக்திகள், சிந்தனை இலக்கு மற்றும் சாதனையாளகளின் செயல்முறை, அவர்களின் உடல், மன நிலைகள் ஆகியவற்றின் ஊடே நம்மைப் பயணிக்க வைக்கிறது. அவளுடைய வாழ்க்கையை அறிந்த பிறகு மட்டுமே நம்மால் இதை உணர முடியும். இயற்கை என்பது காதல் மற்றும் புரிதலை அனுபவிப்பதற்கான ரகசியம். ஒரு சிலருக்கு மட்டுமே இந்த ரஹஸ்யம் கை வந்த கலையாகிறது. இறுதியாக, ஒரு நபரின் எண்ணங்கள், கருத்துகள், நம்பிக்கைகள், மற்றும் அனுபவங்களே அவர்களின் தேர்வுகள் மற்றும் நீக்குதல்களை செய்கின்றன. மனிதர்களிடையே, விசித்திரமான ஒரு சாரார் உள்ளனர். இவர்கள் ஆபத்தான பயணங்களுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். அவர்களின் பயணம் அவர்களின் ஆன்மாவின் கட்டளையின்படி நகர்கிறது. அது அவர்களின் தெளிவான மனசாட்சியும் கூட. அவர்களது மிகுந்த எச்சரிக்கையும் விழிப்புணர்வும் அவர்களை இயற்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், உலகின் ஒரு பகுதியாகவும் பின்னர்

    தங்களின் ஒரு பகுதியாகவும் ஆக்குகின்றன.

    இருந்தாலும் எவரெஸ்ட் பயணம் என்பது இடையில் உள்ள நூற்றுக்கணக்கான இடையூறுகளைத் தாண்டிய மிகப்பெரிய சிகரத்தின் உச்சி. எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்வது எளிதல்ல. 8,848.86 மீட்டர் உயரத்தில், காற்றழுத்தம் முப்பது சதவீதமாகக் குறைகிறது மற்றும் வெப்பநிலை மைனஸ் அறுபது செல்சியசாகக் குறைகிறது. பலமாக வீசும் காற்றின் முன்னால் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும் சவாலான பணி.

    மகிழ்ச்சி என்கிற உணர்வு மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. நூற்றுக்கணக்கான மரபுகள் மகிழ்ச்சியை சோகத்திலிருந்து பிரிப்பதில்லை ஆனால் அவற்றின் வெளிப்பாடு நேரம் மற்றும் அனுபவத்தைப் பொறுத்து மாறுபடும். இன்றைய தலைமுறை மேம்போக்கான சிந்தனைகளால் உள்ளே உள்ள மகிழ்ச்சியை அறியாமல் இருக்கிறது.

    நம் இருப்பு மற்றும் நோக்கம் பற்றிய முதன்மையான கேள்விக்கான பதிலுக்கான தேடல் நம்மை எந்த தடையையும் கடந்து வாழ்க்கையில் எந்த சவாலையும் சந்திக்க வைக்கிறது. கடக்கும் தடைகள் மற்றும் அவற்றின் நிலைகள் அவற்றைக் கடந்த பிறகு நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. வாழ்க்கையின் நோக்கம் தெரியவில்லை என்றால் நம்மிடம் இருக்கும் செல்வமும் அமைதியும் நமக்கு ஒரு நிறைவைத் தராது. உத்வேகம் ஒரு உந்து சக்தி. வாழ்க்கையில், இலக்கை நோக்கி எடுக்கும் படிகள் அடைந்த இலக்கை விட முக்கியத்துவம் வாய்ந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1