Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நோக்கம்: உங்கள் ஆத்மாவின் உணர்ச்சிவயப்பட்ட பயணம். வாழ்க்கையை வேறுவித விழியாடியால் எவ்வாறு அனுபவிப்பது என்பதைக் கற்றல்
நோக்கம்: உங்கள் ஆத்மாவின் உணர்ச்சிவயப்பட்ட பயணம். வாழ்க்கையை வேறுவித விழியாடியால் எவ்வாறு அனுபவிப்பது என்பதைக் கற்றல்
நோக்கம்: உங்கள் ஆத்மாவின் உணர்ச்சிவயப்பட்ட பயணம். வாழ்க்கையை வேறுவித விழியாடியால் எவ்வாறு அனுபவிப்பது என்பதைக் கற்றல்
Ebook871 pages3 hours

நோக்கம்: உங்கள் ஆத்மாவின் உணர்ச்சிவயப்பட்ட பயணம். வாழ்க்கையை வேறுவித விழியாடியால் எவ்வாறு அனுபவிப்பது என்பதைக் கற்றல்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உங்களுக்கு வாழ்க்கையில் தொலைந்து விட்ட உணர்வா?  உங்கள் உணர்வுகள் சில நேரம் உங்களை அடக்குகின்றனவா?  கெட்டவை ஏன் ஏற்படுகின்றன என்ற வியப்பா?

பல்வேறு பின்னணி கொண்ட வாசகர்களுக்காக எழுதப்பட்ட இப்புத்தகம், எங்கள் வாழ்க்கையின் உணர்ச்சிவயப்பட்ட பயணத்தின் நோக்கத்தை உள-ஆத்ம கண்ணோட்டத்துடன் அலசி, "நான் ஏன் இங்கு இருக்கிறேன்?" என்

Languageதமிழ்
PublisherRick Lindal
Release dateOct 18, 2015
ISBN9780994072504
நோக்கம்: உங்கள் ஆத்மாவின் உணர்ச்சிவயப்பட்ட பயணம். வாழ்க்கையை வேறுவித விழியாடியால் எவ்வாறு அனுபவிப்பது என்பதைக் கற்றல்

Related to நோக்கம்

Related ebooks

Reviews for நோக்கம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நோக்கம் - Rick Lindal

    வாழ்க்கையின்சீவல்:சுயஉதவிப் பயணம் என்ற தலைப்பு கொண்ட இப்புத்தகத்தின் முதல் பதிப்புக்குக்கிடைத்த பாராட்டுக்கள்

    சாதனைகளும் சாகசங்களும் அடங்கிய ‘ரிக்கி’ (Rikki) உடையவாழ்க்கையின் புதிரான கதையை ‘லின்டல்’ (Lindal) அளிக்கிறார். மிகப்பிரயத்துடன் எழுதப்பட்ட இப்புத்தகத்தின் அணுகுமுறை புதிதாகவும், சுறுசுறுப்பான தாகவும் இருக்கிறது. இது ஓர் சிறந்த கதைப் புத்தகமாக மட்டும் அல்லாமல், இதனை வாசிப்பவருக்கு உளவியல் மற்றும் ஆன் மீக ரீதியான அறிவைப் புகட்டும் ஊடகமாகவும் உள்ளது. இந்த அற்புதமான கருத்துக்கள் தனித்தன்மை யுடன் கூடிய நுட்பமான விவரிப் புகளாகக் கோர்க்கப்பட்டு வாசகர்களைத் தன்னுடன் இட்டுச் செல் கின்றன பிரதானக் கதாபாத்தி ரங்களில் ஒன்றான ‘முதியஆத்மா’ வுடன் ரிக்கி நடத்தும் உற்சாகமான பரிமாற்றங்கள், உதவி நாடுவோருக்கு வழி நெடுக மிகவும் பொருத்த மானதாகவும், ஏற்ற தாகவும் இருக்கின்றன. ஓரளவு சுயச் சரிதை யாகவும், மீதி புனைப்பாகவும் உண்டாக்கப்பட்ட இந்நூல், துணிச்சலான ஆன்மா கொண்டவர்கள் படிக்க அற்புதமான ஒன்றாக இருக்கும்.

    Adam Crabtree - Transpersonal psychotherapist, and author of Multiple Man: Explorations in Possession and Multiple Personality, From Mesmer to Freud: Magnetic Sleep and the Roots of Psychological Healing, and Trance Zero: Breaking the Spell of Conformity.

    ஐஸ்லாந்து நாட்டின் தத்ரூபமான இயற்கை கொழிக்கும் பின்னணியில் ‘முதிய ஆத்மா’ என்ற பெயர் கொண்ட ஓர் ஆவியுடன் பரிமாறிக்கொண்ட வாழ்க்கையின் தத்துவம், மரணம் மற்றும் ஆத்மாவின் இயக்கம் பற்றிய உரை யாடலை Dr. லின்டல் பிணைத்திருக்கிறார். இதில் உளவியல் மற்றும் ஆன் மீக முன்னோடிகளின் ஞானம் முழு கேளிக்கையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஆத்ம வழிகாட்டிகள் மிக உண்மை யானவை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன், ஏனெனில், 10 வருடக் காலமாகக் கெவின்ரியர்சனின் மெய்மறதி ஊடகத்தினால் திருப்பி விடப்பட்ட அஹ்துன் ரி (Ahtun Re) என்ற பெயர் கொண்ட, விவேகமுடனும் தெளிவாகவும் பேசும் ஆத்மாவுடன் நான் உரை யாடியுள்ளேன். அஹ்துன் ரி (Ahtun Re) யிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பல விஷயங்கள் Dr. லின்டல் உடைய விவரணத்துடன் ஒத்திருக்கின்றன. இதை நான் மிகவும் பரிந்துரைக்கிறேன்.

    Walter Semkiw, MD. Author of Born Again: Reincarnation Cases Involving Evidence of Past Lives, with Xenoglossy Cases Researched by Ian Stevenson, MD., Return of the Revolutionaries: The Case for Reincarnation and Soul Groups Reunited, and Origin of the Soul and the Purpose of Reincarnation. Dr. Semkiw is also President of www.IISIS.net, an organization focused on objective evidence of reincarnation.

    இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு கட்டமை க்கப்படுள்ளது மற்றும் இதில் நாம் நம் யதார்தத்தை எவ்வாறு உண்டாக்கியுள்ளோம் என்பன போன்ற புரிந் துகொள்ள கடினமானவை களைக் கூட, ரிக் லின்டல் (Rick Lindal) மிக எளிதாக இப்புத்த கத்தில் புரியவைத்துள்ளார். ஒரு பாலகன் தன் இளமை பருவத்தி லிருந்து வாலிப வயது வரை கதை சொல்லுவதாக இவர் இந்தப் புத்த கத்தை வடிவமைத்துள்ளார். இந்தப் பாலகன் தொடர்பு கொள்ளும் முக்கிய வழிகாட்டியான முதிய ஆத்மா அவனுக்கு ஞானச் சொற்களை அளித்துத் தன் வாழ்வில் சொந்தமாக முடிவுகள் மேற் கொள்ள உதவுகிறது. இது ஒவ்வொருவரும் தனது பதின்ம வயதிலிருந்து மரணத்தின் சில நாட்கள் வரை கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நூலாகும்! இது உண்மையிலேயே நமது அறிவுக் கண்களைத் திறக்கச் செய்கிறது!. மறுவுலக வாழ்வை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், இது ஒரு சிந்தனையைத் தூண்டும் வாசிப்பாக அமைகிறது. ஒருவர் தனது வாழ்க்கையில் எதிர் கொள்ளவேண்டிய பல பிரச்சினைகளை இது கையாளுகிறது. எந்த வயதினரும் எளிதாகப் படிப்பதற்கு உகந்தது. இது விஷயத்தைச் சார்ந்தும், துல்லியமாகவும் மற்றும் மிகுந்த நிபுணத்துவத்துடன் எழுதப்பட்ட ஒன்று. நேராக பொருளுக்குச்செல்கிறது. இன்றைய பள்ளி நடை முறை களில் உள்ள கொடுமைப்படுத்துதலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து எழுதப்பட்ட இந்நூல், அனைத்து பள்ளி நூலகங்களிலும், பொது நூலகங்களிலும் வைக்கப்பட வேண்டிய ஒன்று. நீங்கள் இந்தப் புத்த கத்தைப் படித்து முடித்தபின் பல நாட்கள் , பல மாதங்கள் , ஏன், பல வருடங்கள் கழித்தும், இதைப்பற்றி ஆழமாக சிந்திக்கச்செய்யும் ஒரு சிறந்த அறிவுக்களஞ்சியம். வாழ்க்கையின் மிகப்பெரிய புதிர்களின் விடை காணப்படாத கேள்விகளை இது கவனத்திற்குள் கொண்டு வருகிறது. இப்புத்தகத்தை நாம் பல வருடங்கள் முந்தியே படித்திருந்தி ருக்கலாமே என தோன்றுகிறது. ஒரு சில புத்த கங்களே எங்களை இவ்வாறு கவர்ந்துள்ளன. நாம் இப்புத்த கத்தை மிகவும் பரிந்துரைக்கிறோம்

    Donald Pile and Ray Williams, Award-winning, Celebrity travel columnists who write for gay publications from coast to coast. You can email them at http://gaytravelersataol.blogspot.com

    நான் இப்புத்த கத்தை இரண்டு முறை படித்துவிட்டேன். மேலும் இதன் ஆசிரியரின் வலைப்பதிவையும் (Blog) படித்தேன். இப்புத்தகத்தின் கருத்துக்களை இப்பொழுது நான் நன்கு புரிந்து கொண்டேன். நிச்சயமாக, நான் மறுபிறவியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், மேலும் அதனை நம்பும் மக்களையும் எனக்குத் தெரியும். இருந்தாலும், எனக்கு இது முற்றிலும் புதிதாக இருந்தது. நான் இதை இரண்டாம் முறை வாசித்தது வேடிக்கை யாகத்தான் இருந்தது. எனது சுற்றுப்புறத்து மக்களிடம், மறுபிறவியில் அவர்களின் நம்பிக்கையைப்பற்றிக் கேட்டேன். பெரும்பாலானோர் அதனை நம்புவதாகவோ அல்லது அதனை நிராகரிக்க முடியாது என்றோ கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு பாலகன் வாலிபனாக வளரும் இக்கதையில், இக்கருத்து மிகவும் இலாவகமாக கொணரப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம். அவன் பிள்ளைப்பருவத்திலிருந்து கவனித்து வரும் தனது பாலியல் நாட்டத்தைப்பற்றி கவலை கொள்கிறான். இப்புத்தகத்தில் நான் கண்டறிந்த புதிரான கருத்து என்னவென்றால் ஓர் உயிர், அதாவது ஓர் ஆத்மாதன் அடுத்த மறுபிறவியைத் தேர்ந்தெடுப்பதாகும். இது என் எண்ணத்தில் இதுவரை தோன்றாத ஒரு புது விஷயமாக இருந்ததால் அது என் மனதில் முழுஅளவிலான புதிய சிந்தனைகளைத் தூண்டி விட்டது. இப்புத்தகம் நாள் முழுக்க என் சிந்தனையில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது - நோயினால் அவதிப்படும் மக்கள், யாருடைய கோபத்திற்கோ ஆளானவர்கள் , அல்லது யாருடனும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பே இல்லாத மன இறுக்கத்தினால் பாதிக்கப்பட்ட இளம் மக்கள் , அல்லது நாம் இயல்பான வாழ்க்கை என்று அழைக்கின்ற ஒன்றைப் பெறும் வாய்ப்பே இல்லாத மக்கள் ஆகியோரை சந்திப்பது என்று எனது நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறேன் - இக்கருத்தை ப்பற்றி யோசிப்பதே இவ்வாறான பிரச்சினைகளுடன் போராட உதவியாக உள்ளதை நான் கண்டறிந்தேன். குறைந்தபட்சம் இது எனது பிரச்சினைகளை சமாளிப்பதற்கு உதவியது. இப்புத்தகத்தைப்பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால் முழுமை யாகப் புரிந்துகொள்வதற்கு, நான் வாசித்ததைப்போல், நீங்களும் இதனை வாசிக்க வேண்டும். புதுப்பித்தல்: இது வேடிக்கையாக உள்ளது! முன்பு குறிப்பிட்ட சில சூழ்நிலை களின்போது இப்புத்தகம் என்னிடமே திரும்பி வருவதை கண்டிருக்கிறேன். அந்த சூழ்நிலைகளை சமாளிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருந்ததையும் கண்டறிந்தேன். உண்மையில் இது என் அறிவையும் சிந்தனையையும் வியாபித்துக்கொண்டது.

    Goodreads. Judy (bookgirlarborg)’s profile.

    Amazon – ல் மதிப்பாய் வுரை கள்:

    மூலம் : டோரோன் டோரீடர் (Toronto Reader)

    பல மாதங்களுக்கு முன்னர் இப்புத்தகத்தின் முதல் பிரதியை நான் வாங்கினேன். ஒரு முறை படித்துவிட்டு என் சினேகிதிக்கு கொடுத்தேன். அவள் தன் தாய்க்கு கொடுத்தாள் . நான் அதன் கருத்துக்களைப் பற்றியே சிந்தி த்துக் கொண்டிருந்ததால், அதனை மீண்டும் வாசிப்பது என்று முடிவுசெய்தேன். எனவே இரண்டாவது பிரதியை எனக்காகவும் மூன்றாம் பிரதியை பிறருக்காகவும் வாங்கினேன். மிகவும் சிக்கலான விஷயங்களையும் சுலபமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் நூலாசிரியர் கதையை வழங்கியுள்ளார்.

    மூலம்: பெட்டர் பிரெய்ன் பெட்டர் லைஃப்

    என்ன அற்புதமான புத்தகம்! சேத் மற்றும் விக்டரின் அறிவு போதனைகளை சுலப மாக அடைய ரிக் லின்டல் கையாண்ட முறையை நான் நேசிக்கிறேன். விதிக்கும் சுயவிருப்பத்திற்கும் இடையே யான உறவு முறை கையாளப்பட்டவிதமானது, நான் இது வரை எதிர் கொண்டதில் சிறப்பானதாக விளங்குகிறது. நான் அடிப்படை நம்பிக்கை போதனைகளை அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கிறேன். நான் ரிக்கியின் சொந்த வாழ்க்கைப்பயணத்தையும் அவன் வெற்றிகளையும் படித்து மகிழ்ந்தேன். அவைகளை குறிக்காமலும், அடிகோடிடாமலும் வாசித்தேன். வாசித்து முடித்தவுடன் உண்மையில் எனக்கென்று பேசப்பட்டதாக உள்ள போதனைகளை கவனயீர்ப்பு செய்ய மீண்டும் படிக்கத் தொடங்கினேன். தன்னை ஓர் உளநிலை ஆன் மீக வளர்ச்சிப்பாதையில் செல்வதாக அறிபவர்களுக்கு இப்புத்த கத்தை நான் வெகுவாக பரிந்துரைக்கிறேன்.

    மூலம் : Dr. Ronald Filler

    Associate Professor of Psychology, Rider University

    Dr. லின்டல் எழுதிய வாழ்க்கையின் சீவல் மனங்கவரும் தெளிவுடன் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. இப்புத்தகம் வாழ்க்கையைப் பூர்த்தி செய்யும் பாதையின் ஆழ்ந்த நுண்ணறவை அளிப்பதுடன் ஒரு மகிழ்விக்கும் கதையாகவும் விளங்குகிறது. இது நிச்சயமாக வாசிப்பதற்கு சிறந்த ஒன்று, பொழுதுபோக்கும் மெய்யறிவும் நிறைந்தது. அதிக பயனளிக்கும் வாழ்க்கையை தேடும் யாவருக்கும் நான் இப்புத்தகத்தை மிகவும் பரிந்துரைக்கின்றேன். நான் ரிக் (Rick) உடைய அடுத்த பிரசுரத்தை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    அமேசான் கின்டில் (Amazon Kindle) : மதிப்பாய்வுரைகள்

    மூலம் : ஸ்டீஃபெ ன் ஆர்ம்ஸ்ட்ராங் (Stephen Armstrong)

    உங்கள் வாழ்க்கையைப்பற்றிய படத்தையோ அல்லது நாடகத்தையோ நீங்கள் பார்த்தால் அது எவ்வாறு இருக்கும் என்று என்றைக்காவது நீங்கள் யோசித்து வியந்ததுண்டா? இது உங்கள் வாழ்க்கையில் மீண்டும் நடப்பவற்றை கவனிப்பதற்காக அல்ல. ஆனால் மற்ற பாத்திரங்களும் சூழ்நிலைகளும் எவ்வாறு உங்களைக் கவர்ந்தன, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பங்கள் எவ்வாறு உங்களைப் பாதித்து தற்போதைய நிலைக்கு உங்களை ஆளாக்கியுள்ளன என்பதைக் காண வேண்டுமா? ஓர் இயக்குனருடைய பார்வையில் உங்களையும் பிறரையும் நீங்கள் எவ்வாறு தொடர்புபடுத்துகிறீர்கள் என்பதை இப்புத்தகம் காட்டும். உங்களிடமிருந்து தற்காலிகமாக நீங்களே வெளியேறி, உங்களுடைய பல்வேறு அடுக்குகளை அனைத்து கோணங்களிலிருந்தும் காணவும், நீங்களும் உங்களின் அனுபவங்களும் எவ்வாறு கதையை எழுதுவதற்கு ஒன்றுக்கொன்று ஒத்துப்போகின்றன என்பதை அறியவும் இப்புத்தகம் அனுமதிக்கிறது, இதையே நாம் வாழ்க்கை என்று அழைக்கிறோம். நீங்கள் இன்னும் ஒரு படி மேலே உயர்ந்து நான் யார் என்பதை உணர்ந்து அனுபவிக்க இது ஊக்கமளிக்கிறது. நீங்கள் எழுத்தாளர், இயக்குனர், நடிகர் மற்றும் பார்வையாளராக மாறிவிட்டீர்கள்.

    மூலம் : ஃப்ராங்க் எம் வால்டன் (Frank M Walton)

    என்னவொரு வெளிப்பாடு! இந்தப் புத்தகத்தை என்னுடன் பகிர்ந்து கொண்ட Dr. லின்டலுக்கும் எனக்கும் ஒரு பரஸ்பரமான நட்பு உள்ளது. இதன் அட்டைப்படமும் அதன் தலைப்பும் மற்ற புத்தகங்கள் (அதாவது ஆன் மீகம், வழக்கமாக புத்த மத அல்லது கிழக்கத்திய சிந்தனை கொண்டவை) என்னைக் கவரும் அளவிற்கு எடுப்பானதாக இல்லை. இரண்டு மாதங்களாக அது எனது படுக்கையின் பக்கமேசையில் கிடந்தது. அதன்பின்னர் என் நண்பரும் ஊர் திரும்பினார். குறைந்தது மேலோட்டமாகவாவது சிறிது புரட்டிப்பார்த்துவிட்டுத் திருப்பிக்கொடுக்க நினைத்தேன். நான் தாமதமாகப் படிக்கத் துவங்கியிருந்தாலும், விரைவிலேயே அது மேலீடாகப் புரட்டிப்பார்க்க இயலாத ஒரு புத்தகமாக எனக்குத் தோன்றியபோது வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ச்சியை நான் உணர்ந்தேன். அதன் சில பகுதிகளை அடிகோடிடவும், மீண்டும் படிக்கவும் மற்றும் உட்கிரகிக்கவும் செய்யவேண்டியிருந்தது. சுருக்கமாகச் சொன்னால், இது வாழ்க்கையின் கையேடு. இது 30 ஆண்டுகளுக்கு முன்பே எனக்குக் கிடைத்திருக்க வேண்டும். நாம் இங்கே ஏன் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள எடுத்துக்கொண்ட நேரத்தை இது நிச்சயமாக சேமித்திருக்கும். நீங்கள் என்றைக்காவது வாழ்க்கையின் மர்மத்தைப்பற்றி யோசித்திருந்தால், இப்புத்தகத்தில் அளிக்கப்பட்டுள்ள பயணத்தைப் பற்றி நீங்கள் குறைந்த அளவேனும் ஆராய்ந்து அறிவதற்கு உங்களுக்கு நீங்களே கடமைப்பட்டுள்ளீர்கள். அநேகமாக, நான் இதுவரை ஆன்மீகத்தைப் பற்றிப் படித்தவற்றிலேயே மிக முக்கியமான இலக்கியப்படைப்பாகும்.

    தனி ப்பட்ட ஆய்வு விமர்சன ங்கள்

    மூலம் : ஆட்ரீ ஜால்லி (Audrey Jolly)

    வாழ்க்கையின் சீவல் புத்தகத்தை நான் விரும்பிபடித்தேன். இது மனதைத் தொடுகின்ற, எளிதில் அடையத்தக்க, பயனுள்ள தகவல்களைக் கொண்டது. மேலும் இதில் குட்டிச்சாத்தான் மற்றும் முதிய ஆத்மா போன்ற கற்பனைப் பாத்திரங்களும் உள்ளன. இந்தக்கதையில் உட்பொதிந்துள்ள சில கருத்துக்கள் மிகவும் ஆழமானதாகவும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் உள்ளன. நான் எதிர்பார்த்துக் காத்திருந்த பதில்கள் இந்த புத்தகத்தில் வெளிப்பட்டிருப்பதைக் கண்டறிந்தேன். வாரவிடுமுறையில் இதை என்னுடன் எடுத்துச் சென்றிருந்தபோது, நான் நீடிக்கப்பட்ட சாகச சாதனைகள் புரிய சென்றதுபோல் உணர்ந்தேன். நான் மிகவும் பரிந்துரைக்கும் ஒரு மகிழ்ச்சி கரமான வாசிப்பு இது!

    மூலம் : பீட்டர் பில்லார்ட் (Peter Billiaert)

    இது அறிவிப்பது போன்றே வாழ்க்கையின் சீவல் ஒரு சுயஉதவிப் பயணம்தான். ரிக் லின்டல் தனது வாழ்க்கை யின் அனைத்து விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் அவ்வாறு செய்ததால், நான் என்னுடைய வாழ்கையின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது. அடிப்படை நம்பிக்கைகள் என்றால் என்ன என்பதை நான் இப்பொழுது அறிந்து கொண்டேன். கடந்த காலத்தில் பதவித்திறனே எனது உந்து சக்தியாகப் பாவித்து நான் போராடிக்கொண்டிருந்தேன். அனைவரையும் விட சிறந்து விளங்க முனைந்து கொண்டிருந்தேன். ஆனால் இப்போது, எனது தனித்தன்மையும் மற்றும் மற்ற வர்களுக்கு என்னால் அளிக்கப்படும் மாற்றுச் சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவை தான் முக்கியமே தவிர பதவித்திறன் சக்தி இல்லை. இப்புத்தகம் என் எண்ணத்தை முடிந்த வரை திறந்துவிட்டது. இது ஒவ்வொரு வாலிபரும் படிக்க வேண்டிய அற்புதமான புத்தகம். நம்மைப் போன்றுதான் அவர்களும், தாங்கள் யார் என்பதையும் மற்றும் நாம் உணர்ந்த, உணர்ந்து கொண்டிருக்கும் பயங்கள், நடுக்கங்கள் அனைத்துடனும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பாலியல் கொடுமைப்படுத்துதல், சோகதற்கொலை எண்ணங்கள் பற்றிய பயம், துயரம் ஆகியவற்றுடன் போராடிக்கொண்டிருந்தால் இப்புத்தகத்தை வாசியுங்கள் . இது நீங்களும் ஒரு தனித்தன்மை யானவர் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் என்று நான் நம்புகிறேன். அநேகமாக, இனி நான் என்னுடைய முதிய ஆத்மாவை கூர்ந்து கவனிப்பேன். இது படிக்க சுலப மான அற்புதமான ஒரு புத்தகம். இது என்னைப்போலவே உங்களையும், நீங்கள் அறிந்திராத ஒரு பரி மாணத்திற்குள் கொண்டுசெல்லும் என்று நம்புகிறேன்.

    மூலம் : மாரீன் கோல்ட்ஸ்டீன் (Maureen Goldstein)

    ரிக், உங்கள் புத்தகம் இந்த காலகட்டத்திற்கு மிகவும் ஏற்றது என்று நான் நினைக்கிறேன். முப்பரி மாண வாழ்க்கையின் ஒரு இயல்பான நீட்டிப்பாக பலபரி மாண உணர்வினை ஏற்படுத்தும் ஓர் அற்புதமான வழியை நீங்கள் கொண்டுள்ளீர்கள் , மேலும் ரிக்கியின் எழுச்சியூட்டும் பயணம் மூலமாக, நாம் நமது சொந்த விழிப் புணர்வுடன் இருப்பதற்கான ஓர் வாய்ப்பு கிடைக்கிறது. இது ஒரு தேவதைக்கதை போன்று இருந்தாலும், கற்பனையைக் காட்டிலும் அதிக உண்மை யுள்ளதாய் இருக்கிறது. நாம் வழக்கமாக எதிர் கொள்ளும் புலனுணர்வு அளவுகோலை மீறிப் பாயும் உள்ளார்ந்த சாதனையை மகிழ்வுடனும் அறிவார்வத்துடனும் வசப்படுத்தியிருக்கிறீர்கள். இப்புத்தகம் எழுதியதற்கு நன்றி .

    நோக்கம்

    உங்கள் ஆத்மாவின் உணர்ச்சிவயப்பட்ட பயணம்

    வாழ்க்கையை வேறுவித விழியாடியால் எவ்வாறு

    அனுபவிப்பது என்பதைக் கற்றல்

    ரிக் லின்டல், Ph.D.

    மொழி பெயர்ப்பு: நயீம் சையத்

    சரிபார்த்த வர்: சாய் கிருத்திகா

    பதிப் புரிமை © 2016 மூலம்: ரிக் லின்ட ல்.

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. பதிப் புரிமை சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட முக்கிய ஆய்வு மற்றும் குறிப்பிட்ட பிற வியாபார ரீதியில்லாத பயன்பாடுகளில், சுருக்கமாக மேற் கோள் காட்டுவதைத்தவிர இப்பிரசுரத்தை முழுமை யாகவோ , பகுதியாகவோ , பதிப்பாளரின் எழுத்தினால் அளிக்கப்பட்ட அனுமதியின்றி எந்த வடிவத்திலும், இயந்திரநகல் எடுக்கவோ, ஒலி, ஒளி மூலமாக அனுப்புவதோ , மின்னணு சார்ந்த முறைகளாலும், இயந்திர முறைகளாலும் பரிமாற்றம் செய்யயவோ கூடாது. அனுமதி கோரிக்கைகளுக்கு, அனுமதி ஒருங்கிணைப்பாளர் கவனத்திற்கு எனக் குறித்து, பதிப்பாளரின் கீழ்க்கண்ட விலாசத்திற்கு அனுப்பவும்:

    Rick Lindal/Lindal Publishing Co.

    PO Box 361 Grafton PO

    Grafton, Ontario, K0K 2G0

    Canada

    www.thepurpose.ca

    புத்தக வடிவமைப்பு: © 2015 Balajiselvadurai, India

    உறை படத்தலைப்பு : Best friends

    நிழற்படக் கலைஞர் : Gulli Vals, Reykjavik, Iceland

    நிழர்பட முகப்பு தளம் : https://www.flickr.com/photos/gullivals/

    ஃபேஸ் புக்: https://www.facebook.com/pages/Gulli-Vals-

    Photography/445697422136520

    உறை வடிவமைப்பு : Jim Bisakowski. bookdesign@shaw.ca

    அனுப்பாணைத் தகவல் :

    மொத்த விற்பனை : பெருநிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் பிற மொத்த

    கொள் முதல்களுக்கு சிறப்பு தள்ளுபடியுண்டு. விவரங்களுக்கு: மேற்கண்ட

    விலாசத்தில் Special Sales Department- ஐ அணுகவும்

    நோக்கம் : உங்கள் ஆத்மாவின் உணர்ச்சிவயப்பட்ட பயணம்

    வாழ்க்கையை வே றுவித விழியாடியால் எவ்வாறு அனுபவிப்பது என்பதைக் கற்றல்

    Rick Lindal, Ph.D. – 2nd ed.

    மொழிபெயர்ப்பு : நயீம் சையத் - http://Translation.Shaadmaani.Net

    மின்னஞ்சல்: Translation@Shaadmaani.Net

    சரிபார்த்தவர்: சாய் கிருத்திகா

    மின்னஞ்சல்: saikrithika.s@gmail.com

    caseC ISBN 978-0-9937904-8-5

    பொருளடக்கம்

    ஆசிரியரைப்பற்றி

    ஒப்புரை

    முன்னுரை

    பாகம் I

    முகவுரை

    ஆன்மீகப் பரிமாணம்

    அத்தியாயம் 1

    பிரச்சினை சிறுவன்

    பண்ணை லாக்ஜாமோட்

    கோடை நாட்கள்

    பேய்ப்பிரதேசம்

    மற்றொரு பரிமாணம்

    உங்கள் இயல்பான வாழ்க்கையின் நோக்கம்

    அத்தியாயம் 2

    கோடை மகிழ்ச்சியும், ஆவிகளும்

    பூ கொல்லாவின் கதை

    அத்தியாயம் 3

    ஹோலார் பண்ணை

    காதலும் பாலியலும்

    பாகம் II

    அத்தியாயம் 4

    கட்டவிழ்கும் பிரபஞ்சம்

    உடலின் அத்தியாவசிய அம்சங்கள்

    நீ உண்டாக்கிய உன் யதார்த்தம்

    அத்தியாயம் 5

    அடிப்படை நம்பிக்கைகளும் உன் யதார்த்தின் மீது அதன் விளைவுகளும்

    விதியும் கட்டவிழகும் நல்லிணக்கமும்

    தன்னிச்சை என்ற சுயவிருப்பம்

    தனித்தன்மை

    செயல் - வினை

    அறிவாற்றலின் முரண்பாடு

    முதுமை யுறுதல்

    மரணம்

    ஆவிகள்

    அத்தியாயம் 6

    விழித்துக்கொள்வதற்கான அழைப்பு

    வெளியே வருவதும், பாலியலும்

    அத்தியாயம் 7

    மனதின் உணர்வு நிலைகளும் உன் யதார்த்ததின் மீது அவற்றின் விளைவுகளும்

    அன்பு

    பயமும் கவலையும்

    கோபம்

    மன அழுத்தம்

    அத்தியாயம் 8

    குற்ற உணர்வு

    அதிகாரம்

    வெறுப்பு

    அன்பு தோன்றுதல்

    உன் உள்ளார்ந்த இயற்கையைப் பற்றி கற்றல்

    அற்புதமான அரங்கம்

    பாகம் III

    அத்தியாயம் 9

    தீவினை வழியில்

    சொற்பொருள் விளக்கம்

    தீயசெயல்களின் உதாரணங்கள்

    தீவினையுடன் என் சொந்த தூரிகை

    தீவினை அவசியமா?

    தீவினை எப்படி புலப்படுகிறது?

    அத்தியாயம் 10

    தீவினை வழியில் (இது எப்படி தோன்றுகிறது)

    நனவு நிலையின் இயற்கை குணம்

    வசியப்படுத்தும் புராணங்களின் வசீகரம்

    உத்வேகமும் உள்ளுணர்வும்

    இலட்சியமான, வெறிததனமான நடத்தை மற்றும் தீவினை

    அத்தியாயம் 11

    மரணத்தை நெருங்கி

    பிரார்த்தனையும் பொறுப்பும்

    படிக்க பரிந்துரைக்கப்பட்டவை

    பின் இணைப்பு - A

    கொடுமைக்காரன், பணிந்தவன் மற்றும் மன்னிப்பு

    இப்புத்தகம், எழுத்தாளரும் கவிஞருமான (1951) என் சகோதரர் (Tryggvi V. Lindal) ட்ரிக்வி V. லின்டல்-க்கு சமர்பிக்கப்பட்டது

    ஆனந்த தேவி

    இளநிற முடி உடையாள்

    நெத்தியின் குறுக்கு வழியாய்

    (அவள் சிங்காரிக்கவில்லை, அவள் அறிவாள்

    தான் நேசிக்கப்படுவதை)

    சுவஸ்தம் முகம் பிரகாசிக்க

    வீற்றிருந்தாள் பிரதானஸ்தானத்தில்

    சகித்தாள் கடுந்துயரங்களையும் ஆனால் சற்றே

    அவளின் புன்முறுவல் எளிமை யானது

    ஆனால் அழகானது, ஏனெனில்

    அவள் அப்படித்தான்.

    இளந்தைகள் ஏதும் இல்லை

    பெற்றோர்கள் இறந்ததில்லை

    அவள்கை விடப்படவும் இல்லை

    அவள் நினைக்கிறாள்

    அனைத்தும் இதுபோன்றே இருக்கும் என்று,

    உண்மையில் அப்படித்தான்;

    மர்ம மான தேவையினால்

    காலையில் அவள் உலா வருவாள்

    கவலையின்றி இக்கோடையின் காலைப்பொழுதில்

    கற்பனையின் வரம்புகள்

    மக்கள் இருத்தலை நிறுத்திடுவர்

    அதன் ஆழத்தை எவரும் அறியார்;

    மறைந்தவர் யாரும் மறு இடத்தில் தோன்றார்

    இல்லாத ஒன்று இருப்பதாக இயலுமோ என்று

    அதனை உருவாக்கிக்காண

    கடினமென்று உணர் கிறோம்…

    அவ்வாறே, நாம் ஏதேனும்நகரங்களுடனும்,

    வனங்களுடனும், உறவுக்களுடனும்

    நம்மைப்போல் தோன்றும்

    விந்தை யானதை அறிந்து நேசித்தோம்;

    இவற்றை விட்டுவிடுவது கடினம் என நாம் கண்டோம்

    மண்ணுடன் அவ்வாறு கலந்துவிட;

    உடலும், உயிரும் - இரண்டும்;

    நாள வழி ஊட்டத்தை வசை பாட

    சொட்டு நீர் தாங்கி தலைமாட்டில்

    மரணத்தின் நிஜத்தை செவிலிமேல் பழி போடும்.

    Tryggvi V. Lindal. A Poet of Icelandicd. Gutenberg ltd: Reykjavik, 2007.

    (A book of poetry translated by the author from Icelandic into English)

    ஆசிரியரைப்பற்றி

    Dr. ரிக்லின்டல் (Dr. Rick Lindal) டோரான்டோ பல்கலைக்கழகத்திலிருந்து (University of Toronto) உளவியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும் (B.Sc., Psychology) ஒன்டாரியாவிலும், கனடாவிலும் (Ontario, Canada) உள்ள குயெல்ப் பல்கலைக்கழகத்தி லிருந்து (University of Guelph) உளவியலில் முதுநிலைப் பட்டமும் (Master’s in Psychology) பெற்றார். இளமைப்பருவத்தினரில் உள்ள உணர்வுதாக்கங்களைப் (emotional responsiveness in adolescents) பற்றி அவர் ஆராய்ந்து கொண்டிருக்கும்போதே , இங்கிலாந்தில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்திலிருந்து உளவியலில் முனைவர் (Doctorate) பட்டம் பெற்றார். தொடர்ந்து அவர் இளம் வயதினருக்கான இளைஞர் காவல் சிறையில் பணிபுரிந்தார். அதன்பின் 1986-ம் ஆண்டு கனடாவுக்குத் திரும்பினார். இங்கு டோரான்டோவில் உள்ள மவுன்ட் சினாய்மருத்துவமனையில் (Mount Sinai Hospital, Toronto) எய்ட்ஸ் (AIDS) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை நிபுணராகப் (Therapist) பணிசெய்யத் தொடங்கும் முன்னர், ஒன்டாரியாவிலுள்ள (Ontario) கிட்சனர்-வாட்டர்லூ மருத்துவமனையில் (Kitchener-Waterloo Hospital) மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கான நலத்திட்டத்தை நடத்தினார். ‘90-ம் ஆரம்பத்தில் அவர் தனியாக மருத்துவப்பயிற்சி செய்யத் தொடங்கினார். இங்கு இருத்தலியல் உளவியல் சிகிச்சை மற்றும் கடந்தகால மற்றும் இடைக்கால வாழ்க்கையில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு சிகிச்சையளிக்கும் நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்றார். இவர் தற்சமயம் கனடாவின் ஒன்டாரி யாவில் உள்ள பவுமான்வில்லெ, கோபர்க் மற்றும் கிராஃப்டொன், முதலிய நகரங்களில் தனியாக மருத்துவப்பயிற்சி செய்துவருகிறார். (www.dr-ricklindal.com)

    ஒப்புரை

    இப்புத்தகத்தின் பக்கங்களில், எனது முதல் நூலான வாழ்க்கையின் சீவல் - சுய உதவிப்பயணம் என்பதன் ஒரு விரிவாக்கப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பை காணலாம். இப்பதிப்பு, சிக்கிக்கொண்ட இவ்வுலகில் செழித் தோங்குவதற்கான ஒரு நடை முறை கண்ணோட்டத்துடன் 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப்பதிப்பு ஒரு புதியப்பெயருடன், முந்திய பதிப்பின் அனைத்து அம்சங்களுடனும், ஆங்காங்கே திருத்தங்கள் , மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய அத்தி யாயங்களை இணைத்து, மேலும் முந்திய பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்மீகம்/இருத்தலியல் கருத்துக்கள் முழுமைபடுத்தப்பட்டு மறு வெ ளியீடு செய்யப்படுகிறது. இது ஐஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் ஏர்லென்டர் ஹரால்ட்ஸ்ஸன் (Dr. Erlendur Haraldsson, Professor Emeritus of Psychology, University of Iceland), அவர்கள் எழுதிய புதிய முன்னுரையுடன் பிரசுரிக்கப்படுகிறது.

    என்னிடம் உளப்பிணி சிகிச்சை பெறும் பொழுது என் முதல் பதிப்பை வாசித்து உணர்வு மீட்புக்கு உதவி பெற்ற என் வாடிக்கை யாளர்கள் மற்றும் எனது புத்தகத்தை வாசித்தபின் பலரையும் என்னிடம் சிகிச்சைக்காகப் பரிந்துரைத்த மனநல வல்லுனர்கள் ஆகியோரால் இந்தப்பதிப்பு ஊக்குவிக்கப்பட்டது.

    புதிய பிரசுரத்தின் திருத்தப்படவிருந்த நகலை படித்து ஊக்கமளித்ததுடன், மதிப்புவாய்ந்த பரிந்துரை களையும் வழங்கிய பீட்டர் பில்லியார்ட் (Peter Billiaert) அவர்களுக்கு எனது சிறப்பு நன்றி . முடிவில்லாத அன்பு கொண்ட எனது அருமை நாய்களான லோகி, தார் (Loki and Thor) இருவருக்கும் நன்றி. முடிவில், சிறிதும் குறைவில்லாமல் நான் பல மணி நேரம் என் கணினி (Computer) முன் அமர்ந்து தட்டெழுத்திட்ட பொழுது பொறுமையுடன் சகித்துக்கொண்டு எனக்கு ஆதரவு அளித்த என் கணவர் ஜான் வேன்பேகல் (John Van Bakel) அவர்களுக்கு நன்றி .

    இப்புத்தகத்தின் அடிப்படை கருத்துக்கள் # ஜேன் ராபர்ட்ஸின் திஸேத் மெடீரியல், (Jane Roberts, The Seth Material) இருத்தலியல் தத்துவ ஞானி டாக்டர் விக்டர் ஃப்ரான்கெல் (Dr. Victor Frankl) எழுதிய குறிப் புகளில் இருந்தும் மற்றும் நீல் டொனால்ட் வால்ஷின் (Neale Donald Walsch’s trilogy) ட்ரைலாஜி, கான்வர்சேஷன் வித்காட் -அன் அன்கா மன் டயலாக்(-Conversation with God – An Uncommon dialogue) மற்றும் மைக்கேல் நியூட்டனின் (Michael Newton) புத்த கமான ஜர்னீ ஆஃப் ஸோல்ஸ் அண்ட் டெஸ்டினீ ஆஃப் ஸோல்ஸ் (Journey of Souls and Destiny of Souls) ஆகியவற்றி லிருந்து சேகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் மேலே குறிப்பிட்டுள்ளவர்களின் பணி மற்றும் ஒரு சிகிச்சை வல்லுநராக ஆசிரியரின் பணி ஆகியவற்றின் 30 ஆண்டுகால அனுபவத்தின் ஒரு தொகுப்பாகும். இதன் காரணமாகவே , இந்த ஆசிரியர்களைப் பற்றி இப்புத்தகக் கருத்துக்களுக்கு வெளியே குறிப்பிடும் பயம் காரணமாக புத்தகத்தினூடேயே ஆங்காங்கே மேற்கோள் காட்டியுள்ளேன். இதைச் சொல்வதனால், அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களை இப்புத்தகம் முழுவதும் காணலாம். என் 30 ஆண்டு கால சிகிச்சைப் பயிற்சியில் என் கருத்து கட்டமைப்பை கவர்ந்த அவர்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அவர்களுடைய தனிப்பட்ட படைப்புகள் என்னால் பரிந்துரைக்கப்பட்டு, இப்புத்தகத்தின் இறுதியில் படிப்பதற்கு உகந்ததாக காட்டப்பட்டுள்ளன .

    முன்னுரை

    Erlendur Haraldsson, Ph.D.

    எர்லென்ட ர் ஹரால்ட ்ஸன் Ph.D.,

    ரிக் லின்டல் Ph.D., ஐஸ்லாந்து நாட்டின் ரீக்ஜாவிக் என்ற நகரத்தில் பிறந்தார். அவர்தன் சிறுவயதுப் பருவத்தை ஐஸ்லாந்து நாட்டின் வட பகுதியில் லாக்ஜாமோட் (Lakjamot) என்ற இடத்தில் இருக்கிற தன் சித்தப்பாவின் பண்ணையிலும், தன் இளமைப்பருவத்தை தென் பகுதியில் உள்ள லாகார்டல் ஷோலார் (Laugardalsholar) என்ற பண்ணையிலும் கழித்தார். தொலைவாக உள்ள இந்த நாட்டில் பிறந்த மற்ற குழந்தைகளைப் போல் Dr. லின்டலும் அந்நாட்டின் கிராமப்புற பாட்டுக்களும், தேவதைக்கதைகளையும் கற்றறிந்தார். மேலும், ஆவி, இறந்தோருடன் உரையாடல், தொடர்பு போன்ற பொது விஷயங்களில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். தன் இளமைப்பருவத்தில், ரிக் ஆன் மீக உளவியலைப் பற்றி ஆராய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்த ஆர்வமே இவரைப் பல அரிய நூல்களை வாசிக்கச் செய்ததுடன், கனடாவில் உள்ள டோரோன்டோ, குஎல்ப், கனடாவின் காலி்கர போன்ற பல்கலைக்கழகங்களில் உளவியலைப் பற்றிப் படிப்பதற்கு அடிகோலியது. அதன்பின்னர் அவர் இங்கிலாந்தில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி ஆய்வினை முடித்தார்.

    கல்வி கற்கும் காலத்திலும், அந்த முப்பது ஆண்டு கால கட்டத்திலும் Dr.லின்டல் பல சிகிச்சை நுட்பங்களைக் கற்றறிந்தார். அதில் தனிப்பட்ட, குடும்ப மற்றும் குழுக்கள் சார்ந்த எண்ணற்ற சிகிச்சை நுட்பங்கள் அடங்கும். அவர் சிறைச்சாலை , மருத்துவமனை மற்றும், சமூக அமைப் புகளில் உளவியலாளராக பணியாற்றியுள்ளார். தற்சமயம் கனடாவின் டோரோன்டோ நகருக்கு அருகில் தனியாக மருத்துவத் தொழில் செய்து பணியாற்றி வருகிறார்.

    சமீபத்திய ஆண்டுகளில் அவருடைய மனநோய் சிகிச்சை, நோயாளிகள் தங்களின் உயிர் வாழ்தல் மற்றும் வாழ்க்கையின் நோக்கம் பற்றிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் அவற்றைப் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றில் உதவுவதை நோக்கமாகக்கொண்டிருக்கிறது. இத்தகைய சிகிச்சை முறை இருத்தலியல் மற்றும் ஆன்மீகப் பிரச்சினைகளை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்துவதாக உள்ளது. சிகிச்சைக் காலகட்டத்தில், பின்னோக்கு சிகிச்சை நுட்பங்கள் (regression techniques) கையாளப்படுகின்றன . இந்த சிகிச்சை முறைகளின்போது, நோயாளி ஆன்மீகப்பரிமாணத்தில் பிரவேசித்த பின்னர், தன்னுடைய முந்தைய ஜென்மத்தையும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த மரண அனுபவத்தையும் மற்றும் அந்த ஜென்மத்தின்போதான அவரின் செயல்பாடுகளையும் நினைவுகூர்வதற்காகப் பெரும்பாலும் பின்னோக்கு சிகிச்சை நுட்பங்கள் (regression techniques) பயன்படுத்தப்படுகின்றன. ஆன் மீகப்பரிமாண பூமியில் அவதரிப்பதற்கு முன் இருந்த ஆன்மீகப்பரிமாணத்தின் ஆய்வு சில நோயாளிகளுக்கு உதவியாக இருந்தது என்று Dr. லின்டல் என்னிடம் கூறுகின்றார். ஏனெனில் இதன் மூலமாகத்தான், அவர்கள் தற்போதைய அவதாரத்தில் உருவெடுத்த காரணத்தை நினைவுக்கு கொண்டுவர முடிகிறது. இந்த இருத்தலியல்/ஆன்மீக ஆய்வுகள் நோயாளிகளின் இருப்பு உணர்வை விரிவிபடுத்தி, தனது தற்கால வாழ்க்கையின் நோக்கத்தை உணரச்செய்கிறது.

    நோக்கம் (The Purpose) என்ற இந்த புததகத்தில்: உங்கள் ஆத்மாவின் உணர்ச்சி வயப்பட்ட பயணம். வாழ்க்கையை வேறுவிதவிழியாடியால் எவ்வாறு அனுபவிப்பது என்பதைக் கற்றுக்கொள்வதற்கு, Dr. லின்டல் சிக்கலான கோட்பாடுகளை , ஒரு சாதாரண பாமரமனிதனும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் வழங்கியுள்ளார். இப்புத்தகத்தின் பக்கங்களுக்குள் உலகளாவிய பார்வையில், ஜேன் ராபர்ட்டின்சேத் மெட்டீரியல், (Jane Robert’s Seth Material), நீல் டொனால்ட் எழுதிய வால்ஷ்ஸ் கான்வர்சே ஷன் வித் காட், (Neale Donald Walsch’s Conversation with God), Dr. மைக்கேல் நியூட்டனின் ஜர்னீ ஆப்தி ஸோல்ஸ் அண்ட் டெஸ் டினீ ஆப் தி ஸோல்ஸ், (Dr. Michael Newton’s Journey of the Souls and Destiny of the souls), போன்ற எழுத்துப் படைப்புகள், மற்றும் விக்டர் ஃப்ராங்கல் (Victor Frankl’s) விரிவாக எழுதிய இருத்தலியல் சிந்தனை மற்றும் உளப்பிணி சிகிச்சை முறை கள் ஆகியவற்றின் அடிப்படையில் தன் கருத்துக்களைச் சமர்பித்துள்ளார்.

    இந்த புத்தகத்தில் சமர்பிக்கப்பட்ட அடிப்படைக் கருத்துக்களின் சுருக்கம் : (1) ஒவ்வொரு மனிதனின் உணர்வு நகரிலையும் (consciousness) ஒரே நேரத்தில் ஆன் மீகப்பரிமாணம், இப்பூமி இரண்டிலும் இருக்கிறது. ஆன் மீகப்பரி மாணத்தில் குடியிருக்கும் உணர்வு நிலையை ‘உயர்-ஆத்மா’ எனவும், அது தன் உள்ளுணர்வால் தன்னுடைய ஒரு பகுதியை உலகில் உயிராக அல்லது ஆத்மாவாக வழி நடத்தி, மனிதனின் உடலை ஆட்கொண்டு வாழ்நாளின் போது அதனைப் பேணி பாதுகாத்து வருகிறது. (2) நமது உணர்வு நிலை ஒருபோதும் மரணிப்பதில்லை, மற்றும் (3) நமது உடல் மரணித்தவுடன் நாம் நமது உயர் இருப்புநிலையை அறிந்துகொள்கிறோம். (4) நமது ஆயுட்காலம், இயல்பு இல்லமான ஆன்மீகப் பரிமாணத்திலிருந்து உலகிற்கான ஒரு வரையறுக்கப்பட்ட பிரயாணம் ஆகும். அது சரீரநிலை பரி மாணத்திலும், இடம், நேரம் என்ற பருநிலைப் பரி மாணத்திலும் நிலைகொண்டிருக்கும். (5) முக்கியமான அனைத்து நிகழ்வுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு நாம் சரீரரீதியாக உருவெடுக்குமுன், நம்மால் செயல்படுத்தப்படுகின்றன (அதாவது, நமது உயர்-ஆத்மாவினால்). (6) இப்பூமியில் நமது அவதரிப் புகளின் முக்கிய நோக்கம் நாம் எதிர்மறை உணர்வுகளை முதலில் அனுபவிக்க வேண்டியதேயாகும். ஏனெனில், நமது உயர்-ஆத்மா இந்த எதிர்மறை உணர்வுகளை ஆழமாக அனுபவிக்க இயலாது. காரணம், உயர்-ஆத்மா தன் கவனத்தை ஆன்மீகப்பரிமாணத்தில் தான் செலுத்துகிறது, மற்றும் (7) இந்த அனுபவங்களினால் தான் நமது உயர்-ஆத்மா ஆன் மீகமாக மாற்ற மடைந் து வளர்கிறது, (8) ஒவ்வொரு தனி ப்பட்டவரும் தன் செயல்களுக்கு பொறுப்பாளி ஆவார், ஏனெனில் தமது வாழ்நாளின் அனைத்து அனுபவங்களுக்கும் அவர் தான் சிற்பி. (9) ஒரு தெய்வீக சவால் அல்லது முரண்பாடானது அவதரிக்கும் அனைத்து ஆத்மாக்களின் மீதும் திணிக்கப்பட்ட ஒன்றாகும். எனினும், அந்தச் சவாலானது வாழ்நாள் முழுவதும் எதிர்மறை உணர்வுகளின் முழுமையான அழுத்தத்தை அனுபவிக்கவேண்டும் என்பதால், இந்த மனி தப்பிறவிதன் அனுபவங்களின்விளைவால் உண்டான தீவிர உணர்வுகளால் தன்னையோ, மற்றவரையோ கொல்லக்கூடாது.

    இப்புத்தகத்தில் இன்னும் எண்ணற்ற விஷயங்கள் இருத்தலியல், ஆன்மீக கருத்துக்களின் அடிப்படையில் அர்பணிக்கப்பட்டுள்ளன. இப்புத்தகத்தின் பிற்சேர்க்கையிலும், இணையதளத்திலும் இன்னும் பல விஷயங்கள் ஆராயப்பட்டு ஆர்வ முள்ள வாசகர்களுக்காக சமர்பிக்கப்பட்டுள்ளன.

    Dr. லின்டல் உடன் பேசுகையில், எவ்வாறு ஒரே சமயத்தில் தன் நோயாளிகளுக்கு (அதாவது, இருத்தலியல் / ஆன் மீக கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடிந்த அல்லது அவர்களில் சிலருக்காவது) ஓர் ஒருங்கிணைந்த உலகப்பார்வையை வழங்குவது என்பதை விவரித்தார். உளவியலாளர்கள் நோயாளிகளை குணப்படுத்தும் பொழுது பொதுவாகப் பயன்படுத்தக்கூடிய உளவியல் நுட்பங்களால் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான சிறப்பான வாய்ப்பு கிடைக்கிறது. அவருடைய அனுபவத்தில், ஆய்வு நோக்கமற்ற, அர்த்தமற்ற, ஆன் மீகமற்ற ஓர் உளவியல் சிகிச்சையானது, நீண்டகாலப்பயனை அளிக்காது.

    இந்த உரையில் ஒருங்கிணைந்த ஆய்வறிக்கை என்னவென்றால், எதிர்மறை உணர்வுகளில் முழுமையான வெளிப்பாடுதான் உடல் இருத்தலின் முக்கிய நோக்கமாகும். அதே நேரத்தில், அபரிமிதமான உணர்வுகளால் நமக்கோ அல்லது மற்றவருக்கோ நமது சவால் தீங்கிழைக்கக் கூடாது. இந்த கண்ணோட்டத்தோடு, ஒரு வாழ்க்கை, இப்புத்தகத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1