Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Deadline
Deadline
Deadline
Ebook93 pages42 minutes

Deadline

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateApr 11, 2020
ISBN6580100404887
Deadline

Read more from Rajesh Kumar

Related to Deadline

Related ebooks

Related categories

Reviews for Deadline

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Deadline - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    டெட் லைன்

    Deadline

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நாவலுக்குள் நுழையும் முன் இதைப் படியுங்கள்

    எட்டு வருட ஜெயில் தண்டனையை அனுபவித்துவிட்டு நியுயார்க் சிறையிலிருந்து விடுதலையாகிறான் வில்பர்ட். சுதந்திரக் காற்று சுகமாக இருந்தாலும் இனி மேற்கொண்டு என்ன செய்வது... எங்கே செல்வது...? என்ற கேள்விக்குறிகள் அவன் கண் முன்னே பெரிய கவலைக் குறிகளாய் வந்து நிற்கின்றன.

    மனைவி ஜெனிஃபரின் ஞாபகம் அவனைத் தாக்கியது. அவளுடன் சந்தோஷமாய்க் கழித்த தேனிலவு நாட்கள் அவன் நெஞ்சில் மோதுகின்றன. கூடவே அந்த மோசமான நாளும் நினைவுக்கு வருகிறது. அவன் கண் முன்னே நிகழ்ந்த மூன்று கொலைகளையும் அதன் விளைவாய் ஜெயில் சுவர்க்குள் அடைபட்டதையும் நினைத்துப் பார்க்கிறான்.

    போலீஸ் அவனைப் பிடித்துச் செல்கிற போது மனைவி ஜெனிஃபர் அவனைப் பார்த்துக் காறி உமிழ்ந்து விட்டுப் போன காட்சி பளிச்சென்று மனசுக்குள் அப்படியே நின்றிருந்தது. இனி வீட்டுக்குப் போனால் அவள் வரவேற்கமாட்டாள் என்பது நிச்சயமாய்த் தெரிந்தது. இருந்தாலும் ஒரு நப்பாசையில் அவளுக்கு டெலிஃபோன் செய்கிறான். தான் ஜெயிலிலிருந்து விடுதலையாகி விட்ட விபரத்தை அவளுக்குத் தெரிவிக்கிறான். மறுமுனையில் ஜெனிஃபரிடமிருந்து வந்த பதில் அவனை ஆச்சரியப்படுத்துகிறது. அவன் இன்று விடுதலையாவது தெரியும் என்றும், அவன் வரவைத்தான் ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகவும் சொல்லுகிறாள்.

    வில்பர்ட் மகிழ்ச்சியுடன் டாக்சி பிடித்து ஃப்ளாட்டுக்குப் போகிறான். அங்கே தன்னுடைய வீட்டில் தன்னுடைய ஸ்தானத்தில் ஜெனிஃபருடன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்க்கிற மைக்கேல் என்பவன் இருப்பதைப் பார்க்கிறான். அந்த மைக்கேல், வில்பர்ட் வந்திருக்கும் செய்தியைச் சொல்லி ஜெனிஃபரைக் கூப்பிடுகிறான்.

    வேலைக்குக் கிளம்புகிற அவசரத் தோரணையோடு ஜெனிஃபர் வருகிறாள். வராந்தா மூலையில் வில்பர்ட்டுக்குச் சொந்தமான பொருட்களை மொத்தமாய்க் கட்டி வைத்திருப்பதாகவும், அதை எடுத்துக் கொண்டு போகத்தான் அவனை வரச் சொன்னதாகவும் சொல்கிறாள்.

    வில்பர்ட்டுக்குள் கோபம் பீறிடுகிறது. ஜெனிஃபரையும் மைக்கேலையும் திட்டி வாக்குவாதம் செய்கிறான். மைக்கேல் அவனை வெளியேறுமாறு எச்சரிக்கிறான். தொடர்ந்து வில்பர்ட் வாக்கு வாதம் செய்தபடி இருக்கவே மைக்கேல் அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறான். வில்பர்ட்டின் பொருட்கள் அடங்கிய பையைத் தூக்கி எறிகிறான். கதவைச் சாத்துகிறான். வில்பர்ட் ஆத்திரத்தோடு கதவைத் தட்டுகிறான். அதற்குள் ஜெனிஃபர் ஃப்ளாட் செக்யூரிட்டி கார்டுகளுக்கு இன்ட்டர்காம் செய்ய அவர்கள் வந்து வில்பர்ட்டை அந்த அப்பார்ட்மென்ட் காம்பவுண்டை விட்டே விரட்டியடிக்கிறார்கள்.

    பார்க்கில் உட்கார்ந்து மைக்கேல் தூக்கியெறிந்த பையிலிருந்த பொருட்களை ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்க்கிறான் வில்பர்ட். அந்தப் பையில் அவனுடைய கம்ப்யூட்டர் என்ஜினியரிங் பட்டம் சர்டிஃபிகேட்களும் இருக்கின்றன. வேலை தேடுவதென்று தீர்மானிக்கிறான். ஜெயிலுக்குப் போனவன் என்று தெரிந்தால் யார் வேலை கொடுப்பார்கள்... என்ற சிந்தனை அவனைக் கவலையில் ஆழ்த்துகிறது. பையில் பாங்க் பாஸ் புத்தகம் இருந்தது. அதில் சொற்ப சேமிப்பும் இருந்தது. அந்தப் பணத்தை ட்ரா செய்து முதலில் ஒரு வாடகை அறை பிடிக்க வேண்டுமென்று தீர்மானம் செய்கிறான். பார்க்கை விட்டு வெளியே வந்தபோது அவனை ஒரு பெண் தோளைத் தொட்டுத் திருப்புகிறாள்.

    ''நீங்கள் வில்பர்ட்தானே...?'' என்று கேட்கிறாள். தலையசைத்த வில்பர்ட்டுக்கு அவளை யார் என்று தெரியவில்லை . அவள் தன் பெயர் டாஃப்னி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு - வில்பர்ட் படித்த அதே காலேஜில் படித்ததாகவும் கோல்டு மெடலிஸ்ட்டான வில்பர்ட்டை காலேஜில் படிக்கிற நாட்களிலேயே நன்கு தெரியும் என்றும் சொல்கிறாள். இப்போது அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று விசாரிக்கிறாள். வில்பர்ட் தான் வேலை தேடுவதாகச் சொன்னபோது ஆச்சரியமடைகிறாள். வில்பர்ட் தான் ஜெயிலுக்குப் போன விபரங்களை

    Enjoying the preview?
    Page 1 of 1