Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theerpu
Theerpu
Theerpu
Ebook100 pages43 minutes

Theerpu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100404158
Theerpu

Read more from Rajesh Kumar

Related to Theerpu

Related ebooks

Related categories

Reviews for Theerpu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theerpu - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    தீர்ப்பு

    Theerpu

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    அவர்கள் காத்திருந்தார்கள்.

    மொத்தம் நான்கு பேர், நெடுஞ்சாலை ஓரமாய் - ஒரு அடர்ந்த புளியமரத்துக்கு கீழே காரை - நிறுத்திவிட்டு - அதன் இடுப்பு பாகத்தில் நான்கு பேரும் சாய்ந்தபடி காத்திருந்தார்கள். மூன்று பேர்களின் உதடுகளில் சிகரெட் தொற்றி புகையாக மாறிக் கொண்டிருக்க ஒருவன் மட்டும் பீடாவை மென்று அவ்வப் பொழுது ரத்த ரத்தமாய் புளியமரத்தின் அடித்தண்டில் துப்பிக் கொண்டிருந்தான்.

    அது ஒரு நகர்ப்புற ஏரியா. சுற்றிலும் இருட்டு சோம்பல் தனமாகக் கவிழ்ந்து கொண்டிருக்க - தொலை தூரத்தில் தெரிந்த ஹவுஸிங் யூனிட்களில் வெளிச்ச ஜன்னல்கள் உற்பத்தியாக ஆரம்பித்தன.

    பரமேஷ்! ஒருவன் கூப்பிட்டான்.

    ம்...

    உனக்கு கிடைச்ச தகவல் சரியானது தானா?

    பக்கா கரெக்ட்...!

    கார்ல ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ஃப் ரெண்டு பேர் மட்டும் தானே?

    ஆமா...

    மத்தியானம் எத்தனை மணிக்குப் புறப்பட்டுப் போனதா சொன்னே?

    மூணு மணிக்கு...

    இப்ப மணி ஏழு...

    எந்த நிமிஷமும் அவங்க திரும்பலாம்...

    ஆமா...

    ரெண்டு பேரையும் சொருகிடலாமா...? இல்ல பெட்ரோல் ஊத்தி பஸ்பம் பண்ணிடலாமா?

    ஆழமா சொருகிட்டுப் போயிட்டே இருக்கலாம்... கத்தியில தான் சயனைட் தடவியிருக்கோமே...? கத்தி உள்ளே போனதுமே மீறினா ஒரு நிமிஷம்... இல்லேன்னா ரெண்டு நிமிஷம்... அதுக்கப்புறம் உயிர் ஒட்டிட்டு இருக்கப் போகுதா என்ன?

    ஒருவன் கையிலிருந்த கடைசி சென்டி மீட்டர் சிகரெட்டைச் சுண்டினான். கல்யாணமாகி பத்துநாள் தான் ஆகுது புருஷனும் பொண்டாட்டியும் ஒண்ணா ஒரே நேரத்துல பரலோகம் போறாங்க. யார்க்கு கிடைக்கும் இந்த பாக்கியம்...?

    சைமன்! அந்தப் பொண்ணை நீ பார்த்திருக்கியா?

    இல்ல...

    உருவிவிட்ட மாதிரி உடம்பு

    நீ எப்போ பார்த்தே...?

    போன வாரம் தேவி தியேட்டருக்கு காலைக் காட்சி சினிமாவுக்கு புருஷனோட வந்திருந்தா... பரமேஷ்தான் காட்டினான்...

    தீய்ஞ்ச கொள்ளிக்கட்டை நிறம். சோடா புட்டிக் கண்ணாடி, அவ இருக்கிற செண்பக நிறத்துக்கும் - உடம்புக் கட்டுக்கும் அவன் கொஞ்சம் கூட பொருத்தமே இல்லை... அவனுக்கு இருக்கிற ஒரே ப்ளஸ் பாயிண்ட் எக்கச் சக்கமான பணம்...

    ஆகாயம் தலைக்கு மேலே எங்கேயோ கிடுகிடுத்தது. காற்று சில்லென்று எல்லோரையும் அலம்பிக் கொண்டு போயிற்று.

    தியாகு...

    ம்...

    மழை வரும் போலிருக்கு...

    இது வெறும் ஊமை இடிதான்... மழை அவ்வளவு சீக்கிரத்துல வந்துடாது...

    இவரு... பெரிய வானிலை ஆராய்ச்சி ஆபீஸர்!

    பரமேஷ் கையமர்த்தினான்.

    ஏதோ கார் வர்ற சத்தம் கேட்குது! சைமன்! நீயும் தியாகுவும் ரோட்டுக்கு அந்தப் பக்கம் போயிடுங்க. நானும் லியாகத்தும் இந்தப் பக்கமா நிக்கிறோம். ஒயிட் அம்பாசிடர் கார் நெம்பர் ட்ரிபிள் ஃபைவ்...

    சைமன் சிரித்தான்.

    ஒவ்வொரு தடவையும் கார் நெம்பரையும் கலரையும் சொல்லணுமா? ஒரு வாட்டி சொன்னா போதாது...

    ர்ர்ர்ர்ர்ர்ர்...

    தொலைவில் சத்தம் கேட்டது.

    சைமனும் தியாகுவும் ரோட்டின் மறுபக்கத்தை நோக்கி ஓடினார்கள். பரமேஷ் பார்வையைத் திருப்பினான். வெள்ளை நிறக் கார் வருவது தெரிந்தது.

    *****

    2

    போர்டிகோவில் கார் நின்றிருக்க - சாரதாமணி வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு சொன்னாள். முக்தா! மழை பலமா வரும் போலிருக்கம்மா...

    ஏழு மாத கர்ப்பத்தை தாங்கி பம்மின வயிறோடு காருக்குப் பக்கத்தில் நின்றிருந்த முக்தா சிரித்தாள்.

    மழை வந்தா என்னம்மா? நானும் உன்னோட மாப்பிள்ளையும் மழையில நனைஞ்சுட்டா கோயிலுக்குப் போகப் போறோம் 'ஜம்'ன்னு கார்லதானே போறோம்.

    அசோக் சிரித்தான். அத்தே! இந்தக் காரை வேகமா ஓட்ட நினைச்சாலும் முடியாது. நீங்க மனசைப் போட்டு அலட்டிக்காமே... வீட்டை உள்பக்கமா தாழ் போட்டுக்கிட்டு - பாகவதம் படிச்சிட்டிருங்க. ஒரு மணி நேரத்துல நாங்க திரும்பிடறோம்...

    சாரதாமணி மறுபடியும் வானத்தைப் பார்த்துவிட்டு - கவலையாய் சொன்னாள்... "அந்த முருகன்

    Enjoying the preview?
    Page 1 of 1