Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indira, Chandra, Mantra!
Indira, Chandra, Mantra!
Indira, Chandra, Mantra!
Ebook132 pages43 minutes

Indira, Chandra, Mantra!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குழந்தைகளுக்கான கதைகளில் தேவதை, பூதம், அரக்கன்... என்றெல்லாம் வருவது சகஜம். ஆனால், பள்ளிச் சிறுவர்களான இந்திராவுக்கும் சந்திராவுக்கும் மந்திரா என்ற தேவதையின் உதவி கிடைக்கிறது என்று தொடங்கும் கதை, அறிவியல், சமூகப் பொறுப்பு... என்ற தளத்தில் அற்புதமாகப் பயணிக்கிறது!

இந்திராவுக்கும் சந்திராவுக்கும் கென்யாவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் எதிர்பாராத விதமாக பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்தப் பிரச்னைக்குப் பின்னால் சில கொடிய சுயநலவாதிகள் இருப்பது தெரியவருகிறது. தங்களைக் காப்பாற்றும்படி தேவதை மந்திராவின் உதவியை நாடுகிறார்கள். மந்திராவின் உதவியுடன் இந்திராவும் சந்திராவும் தப்பித்தார்களா? கொடியவர்கள் சிக்கினார்களா? அறிவியல் தகவல்களுடன் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் செல்லும் இந்த நாவலை, படிக்க ஆரம்பித்தால் இடையில் நிறுத்த இயலாது!

Languageதமிழ்
Release dateMay 18, 2024
ISBN6580158911157
Indira, Chandra, Mantra!

Related to Indira, Chandra, Mantra!

Related ebooks

Reviews for Indira, Chandra, Mantra!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indira, Chandra, Mantra! - Kalki Kuzhumam

    இந்திரா, சந்திரா, மந்திரா

    ஜெயந்தி (கல்கி ராஜேந்திரன்)

    ஓவியம்: லலிதா

    https://kalkionline.com/

    அச்சு அசல் ஓவியங்களுடன் கல்கி களஞ்சிய வெளியீடு

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இந்திரா, சந்திரா, மந்திரா

    Indira, Chandra, Mantra

    Author:

    ஜெயந்தி (கல்கி ராஜேந்திரன்)

    Jeyanthi (Kalki Rajendran)

    Illustrations:

    லலிதா

    Source :

    கல்கி களஞ்சியம் 2013

    Publisher:

    கல்கி குழுமம்

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalki-kuzhumam

    பொருளடக்கம்

    உங்களுடன் ஒரு நிமிடம்!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    உங்களுடன் ஒரு நிமிடம்!

    குழந்தைகளுக்கு எழுதுவது என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்னுடைய முதல் படைப்பே சிறுவர்-சிறுமியருக்காக எழுதப்பட்டதுதான். சிறுகதையாக ஆரம்பித்து, நெடுங்கதையாக வளர்ந்து, கடைசியில் தொடர்கதையாக ‘ஜில் ஜில்’ என்ற சிறுவர் பத்திரிகையில் பிரசுரமானது!

    கல்கி பத்திரிகையில் பணியாற்றியபோது குழந்தைகளுக்காகவும் பல்வேறு புனை பெயர்களில் அவ்வப்போது எழுத நேர்ந்தது. தமிழ், ஆங்கில கோகுலம் பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறேன். ஆனால் இதுதான் புத்தகமாக வெளிவரும் எனது முதல் சிறுவர்களுக்கான கதை.

    ‘இந்திரா, சந்திரா, மந்திரா!’ என்ற தலைப்பில் கோகுலத்தில் தொடர்கதை எழுத ஆரம்பித்த சமயம் ஆங்கிலத்தில் ஹாரி பாட்டர் நாவல்கள் மிகப் பிரபலமடைந்திருந்தன. குழந்தைகளுக்கு ஒரு மாயமந்திர லோகத்தை அந்த நாவல்கள் சிருஷ்டித்துத் தந்தன. மந்திர சக்தி என்பது சுவாரஸ்யமானது என்றாலும் முழுக்க முழுக்க கற்பனையே. அத்துடன் சிறுவர்களுக்கு அறிவுப்பூர்வமாகவும் சிலவற்றைச் சொன்னால் சுவையுடன் பயனும் சேருமே என்பதாகக் கருதி இந்தக் கதையை எழுதினேன். இதற்காக வனவிலங்குகள் பற்றிய பல நூல்களைப் படித்து சுவாரஸ்யமான தகவல்களைச் சேகரித்தேன். அவை இந்தக் கதையில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன.

    வனவிலங்குகளுக்கு உலகெங்கும் ஏராளமான சரணாலயங்கள் உள்ள போதிலும் அந்தச் சரணாலயங்களிலேயே பல மிருகங்கள் கொடிய மனிதர்களால் கொல்லப்படுகின்றன; சிறைபிடிக்கப்படுகின்றன என்று தெரியவந்தது. அத்தகைய கொடிய சுயநலவாதிகளைக் கைது செய்ய இந்திராவும் சந்திராவும் மந்திராவின் ஒத்துழைப்புடன் எவ்வாறு உதவுகிறார்கள் என்பதே கதை.

    ஜாலியாகப் படித்துப் பாருங்கள். இதில் பரீட்சை ஏதும் வைத்து, உங்களை யாரும் சிரமப்படுத்தப் போவதில்லை அல்லவா!

    சென்னை-20

    20.09.2013

    கல்கி ராஜேந்திரன்

    (ஜெயந்தி)

    1

    மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் திருச்சியுடன் நிற்காமல், தொடர்ந்து தஞ்சைக்கும் பின்னர் கும்பகோணத்துக்கும் சென்றது. அங்கே அக்காவும் தம்பியுமான இந்திராவும் சந்திராவும் ரயிலைவிட்டு இறங்கி, பிளாட்ஃபாரத்தில் நின்றனர். அவர்களை அதிக நேரம் காக்க வைக்கவில்லை நந்தகோபால். ரயில் பெட்டி எண் அவருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்ததால் வெகு சீக்கிரம் அவர்களை அணுகி, ஹை! குட்மார்னிங்’ என்றார். வெல்கம்!"

    மாமா! என்று பாசத்துடன் அழைத்து, அவரைக் கட்டிக்கொண்டான் சந்திரா. அவர் வலக்கரத்தை இறுகப் பற்றிக்கொண்டாள் இந்திரா.

    நீங்கதான் பேராசிரியரா? என்று அவரை நெருங்கி டிக்கெட் பரிசோதகர் கேட்டார்.

    எஸ்! புரொஃபஸர் நந்தகோபால் என்று தம் பெயர் குறிப்பிட்டு அறிமுகம் செய்துகொண்டார் குழந்தைகளின் மாமா. "இவன் என் மருமகன் சந்திரா; இவள் மருமகள் இந்திரா. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு என்னோடு இருக்க வந்திருக்காங்க.

    தெரியும்; சென்னை எக்மோர்ல இவங்களை ரயிலேற்றி விட்ட இவங்களோட அப்பா, ‘குழந்தைகளைக் கொஞ்சம் கவனிச்சுக்குங்க’ என்று கேட்டுக்கொண்டார். உங்ககிட்ட பத்திரமா ஒப்படைச்சுட்டேன் என்ற டிக்கெட் பரிசோதகர், இந்திராவிடமும் சந்திராவிடமும் கை அசைத்து விடைபெற்றுச் சென்றார்.

    போகலாமா? பெட்டி ரொம்ப கனமா? என்று கேட்டார் நந்தகோபால்.

    நோ! நோ! என்று ஆளுக்கொரு சிறு பெட்டியைத் தூக்கிக்கொண்டு நந்தகோபாலைப் பின்பற்றி நடந்தார்கள் இந்திராவும் சந்திராவும்.

    பெற்றோருடன் சென்னையில் வசித்து வந்த அவர்கள், வருஷத்துக்கு ஒரு தடவையாவது விடுமுறை சமயம் மாமா வீட்டுக்கு வந்து சில நாட்கள் தங்குவார்கள். நந்தகோபால் - ராதா தம்பதிக்குக் குழந்தைகள் கிடையாது. இவர்கள் மீது அன்பைச் சொரிந்தார்கள். இந்திரா-சந்திராவுக்கு அடுத்தபடியாக நந்தகோபாலின் அன்பையும் பாசத்தையும் ஈர்த்தது தாவர இயல். கும்பகோணம் கல்லூரி ஒன்றின் தாவர இயல் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், நகர எல்லைக்கு அப்பால், சற்று தூரத்தில் அளவான, ஆனால் வசதியான சொந்த வீட்டில் வசித்து வந்தார். வீட்டைச் சுற்றிலும் பரந்த தோட்டம் உண்டு. பின்புறம் ஒரு கண்ணாடி வீடு கூட அமைத்து, பல அபூர்வமான செடி கொடிகளை வளர்த்து வந்தார். இரண்டு தோட்டக்காரர்களையும் வேலைக்கு அமர்த்தியிருந்தார். கல்லூரி பேராசிரியருக்கு உரிய சம்பளம் தவிர, பூர்விகச் சொத்தும் ஓரளவு இருந்ததால் அவரால் தமது தாவர இயல் ஆர்வத்தை இவ்வாறு வளர்த்துக்கொள்ள முடிந்தது.

    காரில் வீடு நோக்கிச் செல்லும் போது, மாமா, புதுசா என்ன செடி வளர்க்கிறீங்க? என்று கேட்டாள் இந்திரா.

    அதை இப்போ சொல்லமாட்டேன்; சர்ப்ரைஸ்! என்றார் நந்தகோபால். குழந்தைகளின் ஆவல் வளர்ந்தது.

    என்ன டிபன்? என்று கேட்டான் சந்திரா. அவனுக்கு ஏற்கெனவே பசிக்க ஆரம்பித்துவிட்டது!

    ஆப்பமும் தேங்காய்ப்பாலும் உங்களுக்காக மாமி ஸ்பெஷலா பண்ணியிருக்கா என்ற நந்தகோபால், ஐயோ! மறந்துபோய்ச் சொல்லிட்டேனே! மாமி உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தணும்னு இருந்தா என்றார்.

    நாங்க ஆச்சர்யப்பட்டு நடிச்சுடறோம் என்றான் சந்திரா.

    உங்களோட ரகசியத்தை மட்டும் காப்பாற்றி, மாமியோட ரகசியத்தை உடைச்சு விட்டுட்டீங்க என்று குற்றம் சாட்டினாள் இந்திரா.

    ரொம்பக் கஷ்டப்பட்டு அயல்நாட்டிலிருந்து தருவிச்ச ஒரு செடி என்று புதிர் போட்டார் நந்தகோபால். சென்னை, கஸ்டம்ஸ்ல ‘ஏன், எதுக்கு’ன்னு ஆயிரம் கேள்வி கேட்டுப் படுத்தி எடுத்துட்டான்!

    ஒரு பூச்செடி கொண்டுவர அத்தனைக் கெடுபிடியா?

    அப்படி அலட்சியமா பேச முடியாது. சில செடிகள் காடு மாதிரி பரவி வளரும். அவற்றைக் கட்டுப்பாட்டில் வைப்பது பெரும்பாடாகிவிடும். வேறு சில செடிகள் போதைப் பொருட்கள் உருவாக்க உதவும். விஷத்தன்மை உள்ள செடிகளும் உண்டு. இதுபோன்ற பல காரணங்களால் அரசாங்கம் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.

    பேசிக்கொண்டே வீட்டை அடைந்துவிட்டார்கள். ராதா மாமி அவர்களைக் கட்டி அணைத்து முத்தமிட்டு வரவேற்றார். சீக்கிரம் குளிச்சுட்டுவாங்க. இட்லி-சாம்பார் சூடா இருக்கு என்றார்.

    குழந்தைகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ராதா மாமிக்கு ஏமாற்றம் அளிக்காமல் நடந்துகொள்ளத் தீர்மானித்தனர்.

    அவர்களுடைய அம்மாவுக்கு இந்திராகாந்தி என்ற

    Enjoying the preview?
    Page 1 of 1