Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pappavirkku Bhagavatham
Pappavirkku Bhagavatham
Pappavirkku Bhagavatham
Ebook196 pages31 minutes

Pappavirkku Bhagavatham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கண்ணபிரானின் அவதாரக் காதையை, எளிமையாகவும், வளமாகவும், வழியாகவும், பேருண்மையின் வடிவாகவும், மனக்கலக்கத்தையும், சூழும் மாய அஞ்ஞான இருளும் போக்கும் அற்புத மந்திரமாகவும், ஒவ்வொரு நாளும் புலனம் வழியே என் பெயரனுக்குச் சொன்னதை, நான் வாசகர்களாகிய உங்களுக்கு 22 அத்தியாயங்களில் இந்தப் புத்தகத்தில், வழங்கி இருக்கிறேன். பகவானின் ஜனனம் முதல், மதுராபுரி விஜயம் வரை, இப்புத்தகத்தில், சொல்லப்பட்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateMay 4, 2024
ISBN6580178511059
Pappavirkku Bhagavatham

Related to Pappavirkku Bhagavatham

Related ebooks

Reviews for Pappavirkku Bhagavatham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pappavirkku Bhagavatham - P.V. Rajakumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பாப்பாவிற்குப் பாகவதம்

    மதுரா விஜயம்

    Pappavirkku Bhagavatham

    Mathura Vijayam

    Author:

    பொ.வெ. இராஜகுமார்

    P.V. Rajakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pv-rajakumar

    பொருளடக்கம்

    மதிப்புரை

    என்னுரை

    வாசகர் கடிதம்

    1. கண்ணன் சரித்திரம் இனிமை

    2. எட்டாவதாகப் பிறந்த அமிர்தம்

    3. கோகுலம் நோக்கிப் பயணம்

    4. யமுனை வழிவிட - நடந்தான் வாழி நாரணன்

    5. யோகமாயா தரிசனம்

    6. கோகுலத்தில் கொண்டாட்டம்

    7. கம்சனின் கலக்கம்

    8. பூதனை

    9. புயலாக வந்த திருணாவர்த்தன்

    10. கண்ணன் வாயைத் திறந்தான்

    11. உரலில் கட்டுண்ட தாமோதரன்

    12. பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

    13. வத்ஸாசுரனும் பகாசுரனும்

    14. பிரம்மனின் விளையாட்டு

    15. பலராமனின் வல்லமை

    16. காளிங்க நர்த்தனம்

    17. பாவை நோன்பும், ஆங்கிரச வேள்வியும்

    18. இந்திரனின் ஜாலம் - கோவர்த்தன மலை-

    19. கண்ணனின் ராச லீலை

    20. கம்சனின் தனுர் யாகம்- அக்ரூரரின் தரிசனம்

    21. மதுரா விஜயம்- கம்ச வதம்

    22. பிரிந்தவர் கூடினர்

    நூலாசிரியர், கவிஞர் பொ.வெ.இராஜகுமார் எழுதிய பிற நூல்கள்

    மதிப்புரை

    பாப்பாவிற்கான ‘கடவுட் பாப்பாவைப்’ பற்றி பொ.வெ. இராஜகுமார், எழுதியுள்ள தெவிட்டாத நூல். இந்த நூலின் கதாநாயகனாகிய தெய்வக் குழந்தை - கவிஞரே கூறுவதுபோல, -

    ‘உன்னைத் தோற்றுவித்தவன்

    உன்னைவிட்டு அகலாதவன்

    உன்னுள் ஒளியாய் இருந்து,

    உன்னை வழிநடத்திடுவான்.’

    ஆம், அந்தத் தெய்வக்குழந்தை வழிநடத்திட, இந்த அற்புதக் காவியம் மலர்ந்துள்ளது.

    கண்ணனிடத்தே, அளவற்ற அன்பு கொண்டவர், திருக்குருகூர் நம்பியாம், நம்மாழ்வார், அந்தக் கண்ணனுடைய ஒளிபொருந்திய உத்சாகம் கண்ணனைக் கவின் கவிதை வடிவில், வடிக்க வேண்டும் என்ற பேராவல்- அவை அனைத்தும், ஒன்று சேர்ந்து, கவிஞர் பொ.வெ. இராஜகுமார், கைவண்ணத்தில், ‘பாப்பாவிற்குப் பாகவதமாக’ நம் கைகளில், தவழ்கிறது.

    ‘கண்ணன் கழலினை எண்ணும் மனமுடையீர்,

    எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணனுமே!’

    நாரணனின் இந்தப் பாகவதப் புராணத்தில், கண்ண பிரானின் ஆரம்பகால வாழ்க்கையை எழிலுற விளக்குகிறது. இது, எழில்மிக்க தெய்விகக் குழந்தையின் எழில்மிக்க காவியம்.

    நம்மாழ்வார் திருவாய்மொழி போன்ற கிரந்தங்களை மதுரகவி ஆழ்வார், மதுரை மாநகரத்தில், பாடிக் கொண்டு, சென்றபோது, அங்கிருந்த அறிஞர்கள், உங்களது பிரபந்தம் சங்கப் பலகையில் ஏறிற்கு? என்று அவமதித்தனர். மிக்க வருத்தத்துடன், தமது குருவான நம்மாழ்வாரிடம் சொன்ன போது, நம்மாழ்வார்,ஒரே ஒரு பாசுரம் மட்டும் எழுதி, இதைக் கொண்டுபோய் சங்கப் பலகையில் வையுங்கள் என்றார். மதுரகவியாழ்வார், அங்ஙனமே, அந்த ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு போய், சங்கப் பலகையில் வைத்தவுடன், மீதிக் கவிதை நூல்கள் எல்லாம் தள்ளப்பட்டு, இந்தப் பாடல் மட்டுமே மேலே நின்றது.

    இந்த நிகழ்வு உணர்த்துவது போல, கண்ணன் என்னும் திருநாமம் ஒலிக்கப்பட்டவுடன், இறைவன் கழலினையே, நேரே அடையலாம். இந்தக் கண்ணன் தெய்விக வாழ்க்கையை தொகுத்து வழங்குவது, சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பாகவத புராணம். கடினமான இந்தப் புராண நூலின் நிகழ்வுகளை, மிக எளிய முறையில், குழந்தைக் கண்ணனின் திரு வாழ்வைக் குழந்தைகளும் ரசிக்கும்படி, எளிமையும், அழகும் பொருந்த அளித்துள்ளார் கவிஞர் பொ.வெ. இராஜகுமார்,

    ‘தமர் உகந்தது எப்பேர், அப்பேர்’ என்று ஆழ்வார் கூறுகிறார். அதாவது, நாம் எந்தக் பெயரை உவந்து அழைத்தாலும், அந்தப் பெயரில் அவன் குடிகொள்வான்.

    ஆயிரத்தெட்டு சஹஸ்ர நாமங்களில் அழைக்கும் போது, நம் இதயத்தே தோன்றும் பெருமாள், எனது கண்ணன்;

    ‘மாதவனைக்,கேசவனைத் திங்கட் திருமுகத்து சேயிழையாய் வந்திறைஞ்சி,’-

    என் அன்புக்குரிய கிருஷ்ணனே

    என்று அழைக்கும்போது, கண்ணன் வந்து அணையும், அழகிய குழந்தைக் காவியமாக வடித்துள்ளார், கவிஞர் பொ.வெ. இராஜகுமார்.

    ‘உடல்மிசை உயிரனெக் கரந்து எங்கும் பரந்துளன்’ என்கிறது பிரபந்தம்.

    எங்கும் பரந்து இருப்பினும், எங்கும் மறைந்து இருப்பவன், அவனைக் கட்கிலி என்று குறிப்பிடுகிறது. ‘கட்கிலி’ என்றால் ஊனக்கண்களுக்குத் தெரியாதவன் என்பது பொருள். அந்தக் கட்கிலியைக் காணவேண்டுமெனில், அவனே ஞானக்கண் அருள வேண்டும்.

    திருமால் தன்னைக் காண அருளும் கண்கள், கவிஞர் பொ.வெ. இராஜகுமார், போன்று, கவிஞரிடம், உள்ளே ததும்பிப்பொங்கும் கவிதை நூல்கள்-

    உலக மக்கள் அனைவரையும் அழைத்துக் கூறுகிறது வேதம்,

    ‘இங்கே பாருங்களேன்! எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறீர்களே!’ என்று அழைத்துச் சொல்கிறது. இதையே ஆண்டாளும்,

    ‘வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரியைகள் கேளீரோ!’-

    நான் சொல்லும் கண்ணன் லீலையைச் சற்றுக் கேட்டுதான் பாருங்களேன்! ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கலாம், என்று அழைக்கிறாள்.

    இதையே வேதமும் சொல்கிறது, ‘பவிஷ்ணு கர்மாணி பஸ்யதே!’

    ‘எல்லோரும் பாருங்கள்! இந்தக் கண்ணன் செய்யும் லீலைகளை’ - என்று ஆண்டாளும், வேதமும் கூறுவது போன்று, இக்கால குழந்தைகட்கு, ஏற்றபடி, கவிஞர் பொ.வெ. இராஜகுமார், வந்து பாருங்களேன் என்று அழைக்கிறார்.

    கோபியர்கள், குழந்தைக் கண்ணனுக்கு, பல்வேறு மலர்களாலும், நகைகளாலும், அலங்கரித்துப் பார்த்து மகிழ்வது போல, பல்வேறு கவிதை மலர்களால் அழைத்து மகிழ்கிறார், கவிஞர்.

    போத்தண்ணா தமது பாகவதத்தில் கூறுகிறார்,

    "எம்பெருமானை ஆராதிக்கிற கை தான் கை!

    அவனை நினைக்கிற நினைவு தான், நினைவு!

    அவன் புகழ் கேட்கும் செவிதான் செவி!"

    நாமம் ஆயிரம் ஏற்று நின்ற நாராயணன், நமக்காக, இங்கே, இந்த ‘பாப்பாவிற்குப் பாகவதமாக’ உருப்பெற்று வந்துள்ளான்.

    சின்னக் குழந்தை தாயிடம் பாலுண்ணும். தாய் பத்தியமாக இல்லாவிடில், குழந்தையின் ஆரோக்கியம் கெடும். அதற்காகத் தாய் பத்திய உணவை உண்கிறாள்.

    கண்ணனது பாகவதக் கதைகளும், கவிதைகளும் அவன் பொருட்டாக ஏற்பட்டவை அல்ல. நாம், உணர்ந்து, மகிழ்ந்து அவனை சேவிப்பதற்காக ஏற்பட்டவை. அவன் ஏந்திக் கொண்டுள்ள ஆயுதங்கள், நம் இடுக்கண்களைக் களைவதற்காக அவன் தரித்துக் கொண்டு உள்ளான். பகவானே, நம் போன்ற பக்தர்களை அடைந்து, ‘பாப்பாவிற்குப் பாகவதம்’ போன்ற கவிதைகளைப் பார்த்து ஆனந்தமுறுகிறான். நாமும் அவனின் திருவடி நீழலில், ஆனந்தமுறுகிறோம்.

    கண்ணன் அவதாரம் சீர்மை மிக்கது.அவனுடன் சேர்ந்து திருடும் தொழில்கள் கூட உயர்நிலை பெறுகின்றன-

    "ஏலாய்! பொய்கள் உரைப்பானை

    இங்கே போகக் கண்டீரே!"

    என்று அவன் உணர்த்தும் பொய்கூட ஒரு அழகு என்ற இத்தகைய பெருமை உடைய இளம் கண்ணனின் குழவிப் பருவத்தின் பல்வேறு நிகழ்வுகளை, மனம் கவரும்படி, யாத்துள்ள கவிஞர் பொ.வெ. இராஜகுமாருக்கு எல்லாச் சிறப்பும் உரித்தாகுக!

    Enjoying the preview?
    Page 1 of 1