Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karuvarai Muthal Kallarai Varai
Karuvarai Muthal Kallarai Varai
Karuvarai Muthal Kallarai Varai
Ebook190 pages34 minutes

Karuvarai Muthal Kallarai Varai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எனது கவிதைப் பயணம் 1984யில் நூலாக அரங்கேற்றம் என்ற தலைப்பில் பச்சையப்பன் கல்லூரி மாணவனாக இருந்தப்போது அரங்கேறியது. இடையிடையே கவிதை வடிவில் (உரைநடைவீச்சு) பலகாவிய நூல்களை வடித்திருந்தாலும் கவிதைக் காணப் பாடுபொருளைப் பயன்படுத்தி கவிதைகளை என்னால் எழுதமுடியவில்லை. ஆகவே இன்று உங்கள் முன்னால் ‘கருவறை முதல் கல்லறை வரை’ என்ற கவிதை நூலைப் படைத்துள்ளேன்.

Languageதமிழ்
Release dateApr 22, 2024
ISBN6580178411039
Karuvarai Muthal Kallarai Varai

Read more from S. Elumalai

Related to Karuvarai Muthal Kallarai Varai

Related ebooks

Reviews for Karuvarai Muthal Kallarai Varai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karuvarai Muthal Kallarai Varai - S. Elumalai

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கருவறை முதல் கல்லறை வரை

    Karuvarai Muthal Kallarai Varai

    Author:

    செ. ஏழுமலை

    S. Elumalai

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-elumalai

    பொருளடக்கம்

    ஆசிரியர் உரை

    அன்னை

    தந்தை

    குடும்பம்

    குழந்தை

    உறவு

    திருமணம்

    மனைவி

    இல்லறத்தில் இவள்

    கைப்பிடித்த கரம் எங்கே

    அழகு

    ஆடு மாடு

    பகை

    புதிய உலகம்

    மகனது புலம்பல்

    மரம்

    பூக்கள்

    பொய்

    இயற்கை

    அறிவியல்

    கல்விக் கூடங்கள்

    நூலகம்

    பூமி

    காற்று

    தமிழ்

    நிலம்

    காடுகள்

    மழை

    மண்

    சுற்றுச் சூழல்

    கிராமம்

    ஆலயம்

    பெற்றோரின் கதறல்

    நாடகம்

    சாதி

    ஆருடம்

    உலகம் உன் கையில்

    பெண்ணே! தமிழ்ப் பெண்ணே!

    கிராம மங்கை

    உழவன்

    கட்டடத் தொழிலாளி

    கற்க

    பகுத்தறிவு

    பட்டிக்காட்டுக் காதல்

    வறுமை

    புற்றுநோய்

    நட்பு

    இராணுவம்

    சிற்பி

    திரையுலகம்

    சலவைத் தொழிலாளி

    சவரத் தொழிலாளி

    பாதுகைத் தொழிலாளி

    குயவன்

    கூலி

    கிராமத்துச் சேவகன்

    செல்லம்மா

    பெண்ணே நீ கவனம் கொள்

    காலம்

    மீனவன்

    முதுமை நோய்

    கடவுளே நீயே சொல்

    பாலியல் வன்கொடுமை

    பிடி சாம்பல்

    மரணம்

    ஆசிரியர் உரை

    எனது கவிதைப் பயணம் 1984யில் நூலாக அரங்கேற்றம் என்ற தலைப்பில் பச்சையப்பன் கல்லூரி மாணவனாக இருந்தப்போது அரங்கேறியது. இடையிடையே கவிதை வடிவில் (உரைநடைவீச்சு) பலகாவிய நூல்களை வடித்திருந்தாலும் கவிதைக் காணப் பாடுபொருளைப் பயன்படுத்தி கவிதைகளை என்னால் எழுதமுடியவில்லை. ஆகவே இன்று உங்கள் முன்னால் 'கருவறை முதல் கல்லறை வரை' என்ற கவிதை நூலைப் படைத்துள்ளேன்.

    எத்தனையே நூல்களை எழுதிய எனக்கு இந்தக் கவிதை நூல் ஏதோ ஓர் சுகத்தினை எனக்குத் தருகின்றது. இந்த நூல் வெளிவர ஊக்கமும் ஆக்கமும் தந்த எனது மனைவி திருமதி பானு ஏழுமலை அவர்கட்கும் இனிய நண்பர் பேராசிரியர் முனைவர் கெ. இரவி அவர்கட்கும், கவிஞர் ம. இரவிபாரதி, கவிஞர் கா.கி. முருகானந்தம், கவிஞர் பூவை செங்குட்டுவன் மற்றும் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இப்படிக்கு

    செ. ஏழுமலை

    அன்னை

    அன்னை அன்னை என்றால்

    அன்பு மொழிப் பெருகும்

    அன்னை இல்லை என்றால்

    ஏது இந்த உருவம்

    கருவறையின் கோயில் நீ

    காணுகின்ற தெய்வம் நீ

    பெருமைமிக்க பூமிப் போல்

    பொறுமைக் கற்ற வேதம் நீ

    உடல் மெலிந்தப் போதிலும்

    உயிர்த் துடித்தப் போதிலும்

    கருவறையில் எனைச் சுமந்து

    காத்துநின்ற அன்னை நீ

    உதிரமதை நல் உணவாக்கி

    நல் உருவமாய் எனையாக்கி

    கருவறையில் எனைக் காத்து

    களிப்புடனே பெற்றவள் நீ

    சுகம் அல்லா பிரசவத்தை

    உடல் வலிதனை மறந்து

    எனைப் பெற்றதால் பூரித்து

    சுகப் பிரசவமெனக் கொண்டவள் நீ

    பூமியில் விழுந்தப் பிள்ளையைப்

    பூமியே குத்தும் என்று

    பச்சிளம் குழந்தை என்று

    கைகளையே பாயாக்கிக் கொண்டவள் நீ

    ஒட்டடையும் ஓர் பூச்சி

    பட்டால்பட்டுக் குழந்தைக்கு நோகுமெனப்

    பக்குவமாய் ஆடைப் போர்த்துப்

    பகலிரவாய் காத்தவள் நீ

    உதிரத்தைப் பால் ஆக்கி

    உறக்கத்தைத் தானம் செய்து

    பகலிரவாய் பால் ஊட்டி

    பனியாய்க் காத்தவள் நீ

    தளிர்நடையைக் காணும் வரை

    தளராமல் சேவை செய்து

    கிளிமொழியைக் கேட்கும் வரை

    கண்கொட்டாமல் பார்த்தவள் நீ

    தத்தி தத்தி நடைக்கையிலே

    தத்தி மண்ணில் வீழ்கையிலே

    இடிபோலே மனம் விழுந்து

    இருகை நீட்டி போத்தியவள் நீ

    அன்னை என்ற வார்த்தைதனை

    அம்மா என்று அழைக்கையிலே

    அம்மா அம்மா என்று

    அணைத்து முத்தமிட்டவள் நீ

    உணவு உண்ண மறுக்கையிலே

    ஓடி ஓடி பின்சுழன்று

    பேதையாய் பல நடிப்புச்செய்து

    பாலண்ணம் தந்தவள் நீ

    காலமெனும் நதி வெள்ளத்தில்

    கனியாய் மொழிப் பேச

    கல்விச் சாலை சேர்ப்பிக்க

    கண்ணீர்விட்டு அனுப்பியவள் நீ

    ஆணென்றாலும் பெண் என்றாலும்

    தன் அளவுக்குமேல் வளர்ந்திட்டாலும்

    கண்ணே கண்ணே என்றே

    காத்திடும் தெய்வத்தாய் நீ

    அம்மா அம்மம்மா நீ

    வாழ வைத்த தெய்வம் நீ

    தன்னலம் இல்லா வானம்போல்

    தனியான ஆலமரம் நீ

    அன்னை அன்பின் அன்னையே

    எனக்காக உனைத் தொலைத்தாய்

    உனக்கா உனைத் தொலைத்தில்லை

    அணையாத அன்பின் ஊற்றேநீ

    தாயே அன்னையெனும் நீ

    மண்ணைவிடப் பொறுமை உனக்கு

    இந்தப் பரந்த மண்டலம் விடப்

    பரந்த மனம் உனக்கு

    தாயே உனதன்பு வற்றியதில்லை

    ஒரு பொழுதும் வெறுத்ததில்லை

    நித்தம் நிதம் எமைக்காத்தாய்

    நீதானே அன்பின் பாடம்

    தாயே என்கடன் செய்தாலும்

    எதை எதையோ கொடுத்தாலும்

    பெற்றகடன் நான் தீர்க்க

    புவிமீது ஒன்றும் இல்லை

    அம்மா உனக்கு விண்ணப்பம்

    உனைப் பிரிந்து நான்வாழேன்

    நான் இருந்தும் நான்வாழேன்

    பின் எப்படித்தான் வாழ்வது

    என்தாயே உனை இழ்ந்து

    நான் வாழேன் வாழேன்

    மரணமே என்னை ஏற்றுக்கொள்

    நான் மறுபடியும் கருவாக.

    தந்தை

    குடும்பத் தலைவன் இவன்

    குலத்தையே பேணிக் காப்பவன்

    குலமகளோடு குடும்பம் பேணி

    நலம் காக்கும் நாயகனிவன்

    தந்தை என்ற ஆட்சியே

    அன்பை உள் மறைத்து

    அதிகாரம் ஆள்பவன் போல்

    குடும்பம் நெறிப்பதும் நாயகனிவன்

    இல்லறம் இனிது பேன

    நல்லறம் வழி நடந்து

    பொருள் தேடும் வேந்தனிவன்

    பொறுமை மிக்க தலைவனிவன்

    கடமை வழி நடந்து

    கண்ணீரில்லா குடும்பம் நடத்த

    கண்ணீர்ச் சிந்த உழைப்பவன்

    கடமை உணர்வின் சீலனிவன்

    எதையும் எதிர்பாரா ஏணிப்போல்

    எவரையும் ஏற்றிடும் படியைப்போல்

    பட்டம் பறக்க உதவும் நூலைப்போல்

    பாடுபடும் பெரும் தியாகியவன்

    கஷ்டம் பல வந்தாலும்

    தாலிக்கட்டி மனைவியுடன்

    கடுகளவு கஷ்டம் சொல்லி

    மலையளவு மகிழ்வுடனே வாழ்பவனிவன்

    பிள்ளைகல் பல கற்க

    தெருக்கல்லாய் உழைத்திடவும்

    திடமான மனம் கொள்பவன்

    தகப்பன் என்ற சாமியிவன்

    உடல் உழைத்து நின்றாலும்

    உருக் குலைந்து போனாலும்

    பெத்த மனம் பித்துயென்று

    பேணுகின்ற பேதை இவன்

    அன்புக்குப் பிள்ளைகள் என்று

    ஆலமரம் போல் காப்பான்

    என்ற மனம் இல்லாது

    கடன் செய்யும் சேவகனிவன்

    கடும் நோய் தாக்கினாலும்

    கண்களில் நீர் மல்கினாலும்

    கண்மணி பிள்ளைகள் என்றும்

    கணம்தோரும் காப்பவன் இவன்

    உண்டி இல்லாத போதும்

    உறக்கம் இல்லாத போதும்

    அண்டிப் பிழைக்கலா மென்றும்

    அண்டாத தந்தை இவன்

    என் கடமை ஏதோசெய்தேன்

    என் பிள்ளைகட்கு ஏதோசெய்தேன்

    பார்போற்ற அவர்கள் வாழட்டுமென்று

    பரந்தமனம் கொண்ட தலைவனவன்

    கூன் குனிய தானுழைத்துக்

    குருதி வற்றப் பாடுபட்டு

    வேர்வை சொட்ட உடலுழைத்துக்

    குடும்பவேராக நின்றவன் இவன்

    தன் மக்கள் பிரிந்தபோதும்

    தனிக்குடித்தனம் சென்ற போதும்

    என்மக்கள் வாழட்டும் என்று

    இதயம்

    Enjoying the preview?
    Page 1 of 1