Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மார்ச் ஆறு - இரத்த ஆறு
மார்ச் ஆறு - இரத்த ஆறு
மார்ச் ஆறு - இரத்த ஆறு
Ebook181 pages45 minutes

மார்ச் ஆறு - இரத்த ஆறு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜெர்மன் மிலிடெரி டெக்னாலஜி - மேட் இன் தைவான்’ என்ற வார்த்தைகளைப் பார்த்ததும் விஷ்ணுவின் மூளையில் ஒரு அலாரம் அடித்தது. ஏ.சி. சூர்யமூர்த்தியை ஏறிட்டான்.
“ஸார்...! இது ஏதோ ராணுவம் சம்பந்தப்பட்ட விவகாரமாய் இருக்கும் போலிருக்கு. மொதல்ல கொலையுண்ட இந்த பிரம்மபுத்ரனோட பயோடேட்டா என்னான்னு பார்க்கணும். அவரோட செல்போன் எங்கே...?”
“விஷ்ணு! நான் இந்த ரூமுக்குள்ளே எண்ட்டர் ஆனதுமே மொதல்ல செல்போனைத்தான் தேடினேன். கிடைக்கலை. ஹோட்டல் ரிக்கார்ட்ஸில் அவரோட சொந்த ஊர் மும்பைன்னு சொல்லி ஒரு அட்ரஸ் கொடுத்துஇருந்தார். அந்த அட்ரஸில் ஒரு லேண்ட்லைன் போன் நெம்பரும் இருந்தது. அந்த டெலிபோன் எண்ணுக்கு டயல் பண்ணிப் பார்த்த போது ரிங் போயிட்டேயிருந்தது. யாரும் அட்டெண்ட் பண்ணலை. மும்பை போலீஸீக்குத் தகவல் கொடுத்து அந்த அட்ரஸில் போய்ப் பார்க்கும்படி இன்ஸ்ட்ரக்க்ஷன் கொடுத்து இருக்கேன். பட் அங்கேயிருந்து இன்னும் பதில் வரலை...”
ஃபாரன்ஸிக் அதிகாரி பசுபதி குறுக்கிட்டார். “ஸார்! இந்த வாய்ஸ் ட்ரான்ஸ்மீட்டரோட டெக்னாலஜி என்னான்னு எனக்குத் தெரியும். சொல்லட்டுமா... ஸார்?”
“ப்ளீஸ்”
“ஸார்...! தீப்பெட்டி அளவில் கைக்கு அடக்கமாய் இருக்கிற இந்த வாய்ஸ் ட்ரான்ஸ்மீட்டரை சுருக்கமாய் V.T. ன்னு சொல்லுவாங்க. இந்த V.T. யில் ஏதேனும் ஒரு சிம்கார்டைப் பொருத்தி யார்க்கும் தெரியாமே ஒரு இடத்துல மறைச்சு வெச்சுட்டா உலகத்தோட எந்த மூலையில் இருந்தும் யார் ஃபோன் பண்ணினாலும் அதாவது அந்த எண்ணுக்கு மொபைல் ஃபோன் மூலமாய் டயல் செய்தா இந்த V.T. இருக்கும் இடத்தில் ரிங்டோன் வராது. மாறாய் ஃபோன் செஞ்சவங்களுக்கே ஒரு ரிங் சவுண்டு மட்டும் கேட்கும். அதுக்கப்புறம் V.T. இருக்கிற இடத்திலிருந்து குறிப்பிட்ட தூர சுற்றளவில் என்ன பேசிக்கிறாங்கன்னு தெளிவாய் கேட்க முடியும். 5 மணி நேரம் பாட்டரி சார்ஜ் நீடிக்கும். பேசினாத்தான் சார்ஜ் டவுணாகும்.
ஏ.சி.யும் விஷ்ணுவும் அந்த ஃபரான்ஸிக் ஆபீஸரை வியப்பாய்ப் பார்த்தார்கள்.
“அப்படீன்னா கொலை செய்யப்பட்ட பிரம்மபுத்ரன் இந்த அறைக்குள்ளே இருக்கும்போது அவர் என்ன பேசறார்ன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக யாரோ இங்கே இந்த வாய்ஸ் ட்ரான்ஸ்மீட்டரைப் பொருத்தியிருக்காங்க..?”
“எஸ்... ஸார்...! அப்படித்தான் யூகம் பண்ண வேண்டியிருக்கு...!” ஃபாரன்ஸிக் ஆபீஸர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த அறைக்கதவைத் திறந்து கொண்டு ஹோட்டல் மானேஜர் பிலிப்ஸ் தயக்கமாய் உள்ளே வந்தார். ஃபுல் சூட் தரித்து உயரமாய் இருந்த பிலிப்ஸ் அந்த நிமிடம் வியர்த்துப் போயிருந்தார். ஏ.சி. அவரை ஏறிட்டார்.
“என்ன மிஸ்டர் பிலிப்ஸ்...! மும்பை போலீஸ்கிட்ட இருந்து ஏதாவது தகவல் வந்ததா?”


வந்தது ஸார்.”
“என்ன தகவல்?”
“விஞ்ஞானி பிரம்மபுத்ரன் இந்த ஹோட்டல்ல ரூம் எடுக்கும் போது ஹோட்டல் ரிக்கார்ட்ஸுக்கு அவரோட நேட்டீவ் ப்ளேஸான மும்பை அட்ரஸைக் கொடுத்திருந்தார். மும்பை போலீஸ் இப்போ அந்த அட்ரஸுக்குப் போய்ப் பார்த்தபோது வீடு பூட்டியிருந்திருக்கு ஸார். பூட்டின வீட்டை போலீஸ் திறந்து பார்த்தப்ப வீடு தூசியும் நூலாம் படையுமாய் குப்பை மேடு மாதிரி இருந்திருக்கு. வீடு ரொம்ப நாளாய் - அதாவது கிட்டத்தட்ட ஒரு வருஷ காலம் பூட்டி வெச்சிருந்தாத்தான் அப்படியொரு நிலைமை ஏற்பட்டிருக்கும்ன்னு சொன்னாங்க ஸார்...

Languageதமிழ்
Release dateJan 11, 2024
மார்ச் ஆறு - இரத்த ஆறு

Related to மார்ச் ஆறு - இரத்த ஆறு

Related ebooks

Reviews for மார்ச் ஆறு - இரத்த ஆறு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மார்ச் ஆறு - இரத்த ஆறு - ராஜேஷ்குமார் ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அன்புடன் ராஜேஷ்குமார்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    கோயமுத்தூரிலிருந்து செல்போன் சிணுங்குகிறது!

    அன்பான வாசக நெஞ்சங்களுக்கு! வணக்கம்.

    நாட்டில் உள்ள எவ்வளவோ பிரச்னைகளுக்கு நடுவில் நாள்கள் நழுவிக் கொண்டு இருக்கின்றன. மேற்கு வங்காளத்திலும், சட்டீஸ்கர் மாநிலத்திலும் மாவோயிஸ்ட்கள் ரயில் கவிழ்ப்பு விளையாட்டை நடத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிப்பதின் மூலம் தங்களை வெற்றி வீரர்களாகக் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றி தமிழ் நாட்டில் உள்ள சில மாபாவிகள் மலைக்கோட்டை ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தையே குண்டு வைத்து தகர்த்து இருக்கிறார்கள். யார் செய்த புண்ணியமோ ரயில், விபத்திலிருந்து தப்பித்துக் கொண்டது. இப்படி நாட்டையே அச்சுறுத்தும் நாசகார வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க - இந்தியப் பொருளாதாரத்திலும் பெரும் நெருக்கடி. பணவீக்கம் இரண்டு இலக்க எண்ணிக்கைக்குப் போய்விட்டது. பங்குகள் சறுக்கிக் கொண்டு இருக்கின்றன. தங்கத்தின் விலையோ உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு பெண்களைப் பெற்றவர்களைப் பார்த்து பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. ஏழை என்றாலும் சரி, பணக்காரர்கள் என்றாலும் சரி அவரவர் தகுதிக்கு ஏற்ப பெண்களுக்கு நகை போட்டுக் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது நமது கலாசாரமாகிவிட்டது. தங்கத்தின் விலை எவ்வளவுதான் உயர்ந்தாலும் சரி; மக்கள் சில விநாடிகள் அந்த விலையைப் பார்த்து மலைத்துவிட்டு பிறகு சகஜமாகி நகைக் கடைகளுக்குப் போய் தங்கம் வாங்குவது வாடிக்கையாகிவிட்டது. மற்ற பொருட்கள் எல்லாம் விலை உயர்ந்தால் மக்கள் அதன் தேவையைக் குறைத்துக் கொள்கிறார்கள். பருப்பின் விலை கிலோ 100 ரூபாய் என்றால் நம்முடைய பெண்கள் பின்வாங்கி விடுவார்கள். பருப்பே இல்லாமல் சாம்பார் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு நாளிதழ், ஒரு வார இதழின் விலை 1 ரூபாய் உயர்ந்தால் கூட பத்திரிகைகளை வாங்குவதை நிறுத்தி விடுகிறார்கள். சினிமா பார்ப்பது பிடிக்கும் என்றாலும் தியேட்டரில் கட்டணம் அதிகம் என்பதால் அந்தப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் தங்கத்தின் விலை எவ்வளவுதான் உயர்ந்தாலும் சரி; பெண்கள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் நகைக்கடைகளுக்கு போய்க் கொண்டு இருக்கிறார்கள். தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில்தான் தங்கத்தின் மீதுள்ள மோகம் உயர்ந்துகொண்டே போகிறது. இப்படிப்பட்ட மோகம் பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது அல்ல என்கிறது உலக வங்கி. பணத்தைக் கொட்டி தங்கத்தை வாங்கி அதை பீரோவில் வைத்து பூட்டிக்கொள்வதால் அந்த முதலீடு அப்படியே ஒரே இடத்தில் ஸ்தம்பித்துப் போய்விடுகிறது. மாறாக தங்கம் வாங்குவதற்கு பதிலாக அந்தப் பணத்தைக் கொண்டு நிலத்தை வாங்கினால் அதில் வீடு கட்டலாம். வீடு கட்டுவதின் மூலம் ஒரு சிலர்க்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. கட்டிடப் பொருள்களை வாங்கப் பணம் செலவிடப்படுகின்றது. தங்கம் வாங்கும் பணத்தை விளை நிலத்தில் முதலீடு செய்தால் விவசாயம் செழிக்கும். அதை வைத்து உணவு உற்பத்தியைப் பெருக்க முடியும். இல்லாது போனால் அந்தப் பணத்தை வைத்து ஒரு பிசினஸ் செய்தால் லாபம் பார்க்கலாம். ஒரு நாட்டின் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் பணம் சுழன்று கொண்டே இருக்க வேண்டும். பணம் ஓரிடத்தில் தேங்கிவிட்டால் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பாதிப்பு உண்டாகும்.

    தங்கத்தின் விலை இப்போது சவரன் ரூ. 14ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இதை இரண்டாண்டுகளுக்கு முன்பு இருந்த விலைக்கு அதாவது சவரன் ரூ 10 ஆயிரத்துக்குக் கொண்டு வர முடியும். அதற்கு நமது பெண்கள் மனது வைக்க வேண்டும். தங்கத்தின் விலையைக் குறைப்பது பெண்களின் கையில்தான் இருக்கிறது. தேவை குறைந்தால் விலையும் குறையும். அதன் காரணமாக சப்ளையும் குறையும். நாட்டில் உள்ள எல்லாப் பெண்களும் ஒரு இரண்டு மாத காலத்துக்கு நகைக்கடைகள் பக்கம் போகாமல் - ஒரு கிராம் தங்கம் கூட வாங்காமல் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தங்கத்தின் விலை தடாலடியாக ரூ. 10 ஆயிரத்துக்கு வந்து நிற்கும்.

    பெண்ணைப் பெற்றவர்கள் கல்யாணத்தின் போது நகைகளுக்கு செலவிடும் பணத்தை ஒரு வங்கியில் டிபாசிட் செய்து அதை பெண்ணுக்கு தரலாம். வட மாநிலங்களில் இப்போதெல்லாம் இதைத்தான் செய்துகொண்டு இருக்கிறார்கள். டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் உள்ள கோடீஸ்வர வீட்டுப் பெண்கள் பேருக்கு ஒன்றிரண்டு நகைகளைத்தான் அணிகிறார்களே தவிர நம் தென்னிந்தியப் பெண்களைப் போல் உடம்பையே மறைக்கிற அளவுக்கு நகைகளைப் போட்டுக் கொள்வது இல்லை.

    தங்கம் விலை உயர்வதற்கு இன்னொரு காரணம். தற்போது ஆன் - லைன் மூலம் தங்கம் வர்த்தகம் செய்யப்படுவதுதான். அரசு இந்த ஆன் - லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு தங்கத்தின் விலை முழம் ஏறி சாண் வழுக்கிக் கொண்டு இருக்கிறது. தங்கத்தின் விலை உயரும் போது ஒரு கிராம்க்கு 300, 400 என்று உயர்ந்து விடுகிறது. குறையும் போது ஒரு கிராம்க்கு 10, 20 என்று குறைகிறது. இப்படி ராக்கெட் வேகத்தில் தங்கம் உயர்வதற்குக் காரணம், நம்முடைய தங்க மோகம்தான். இந்த மோகம் குறையும் போதுதான் தங்கத்தின் விலையும் குறையும். இல்லாவிட்டால் 2011 இறுதிக்குள் தங்கம் சவரன் ரூபாய் 20 ஆயிரத்தைத் தொட்டுவிடும். ஒரு லட்ச ரூபாயை நகைக்கடைக்கு எடுத்துச் சென்றால் 5 சவரன் மட்டுமே வாங்கிக் கொண்டு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    சரியா சொன்னீங்க ஸார்!

    போன்ல யாரு?

    சேலம் ரவிச்சந்திரன் ஸார்...! உங்க கருத்துதான் என்னோட கருத்தும் ஸார். ‘தங்கத்தோட விலை அதிகமாயிடுச்சே... அதிகமாயிடுச்சே’ன்னு புலம்பறதை விட ‘நம்மகிட்டே புன்னகை இருக்கு... எதுக்கு தேவையில்லாத பொன் நகை?’ என்கிற விழிப்புணர்வு நம்ம தாய்க்குலத்துக்கு வந்துட்டா நம்ம பொருளாதாரம் வளரும். எந்த வீட்டிலும் கஷ்டம் இருக்காது ஸார்...

    Enjoying the preview?
    Page 1 of 1