Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Avalodu Vanavil
Avalodu Vanavil
Avalodu Vanavil
Ebook504 pages3 hours

Avalodu Vanavil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Mekala Chitravel
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466770
Avalodu Vanavil

Related to Avalodu Vanavil

Related ebooks

Related categories

Reviews for Avalodu Vanavil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Avalodu Vanavil - Mekala Chitravel

    1

    பகலின் ஒளியில் மலர்ந்து கிடந்த பூமியின் மீது இருள் அரக்கன் வேகமாக வந்திறங்கும் பின் மாலைப் பொழுது.

    கண்ணெதிரில் இறங்கிக் கொண்டிருந்த அந்த இருட்டையே பார்த்துக் கொண்டு மாளிகையின் முன்னாலிருந்த புல்வெளியில் உட்கார்ந்திருந்தாள் மானசா.

    அன்பே உருவாய் அழகே வடிவாய் வீட்டிற்குள் தென்றல் காற்றாய் வளைய வந்து கொண்டிருந்த அம்மா... அம்மா... புகைப்படமாகத் தொங்கி இன்றோடு இருபது நாட்களாகிவிட்டது.

    எல்லா அன்பு கட்டுக் காவலையும் மீறி அவளை அழைத்துக்கொண்டு போக எமனுக்கு இறுதி கட்டத்தில் தன்னை வெளிப்படுத்திட ரத்தப் புற்றுநோய் என்று ஒரு சாக்கு.

    தனக்கு வந்திருப்பது இந்த வியாதி என்று தெரிந்தும் கூட அம்மா கவலையே படவில்லை. வயதுக்கு வந்த மகளை உடன் வைத்திருக்கிறோமே என்கிற பதைப்புகூட அவளுக்கு வரவில்லை. மகளோடு தன்னரும் கணவர்கூட இருக்கும் தைரியும். சாவதற்கு முதல் நாள் மாலையில் நடந்தது மானசாவின் மனதில் படமாய் தெரிந்தது.

    அம்மா அவளை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு புன்னகையுடன் சொன்னாள்.

    மானசா... உன்னோடு நான் இல்லை என்கிற கவலையே உனக்கு வரக்கூடாது. பெறற்கரிய மனித தெய்வத்தை தந்தையாக பெற்றிருக்கிறாய் நீ. தாயாய் தந்தையாய் அவர் உன்னோடு இருக்கும் வரை உனக்கு எந்த பயமும் வேண்டாம். எந்த எதிரி எங்கிருந்து எப்படி வந்தாலும் அவன் தோற்றுப் போவது நிச்சயம்.

    கொஞ்ச நேரம் பேசியதற்கே மூச்சிரைத்தது. மானசா அம்மாவின் நெஞ்சை நீவி விட்டாள். அம்மா அவள் கையைப் பிடித்து நெஞ்சில் வைத்துக் கொண்டு, பயப்படாதே... ஒன்றும் ஆகாது என்றாள்.

    அந்த நேரம் பழச்சாறு நிறைந்த கோப்பையுடன் அப்பா வந்தார். என்ன ராஜேஸ்வரி அதிகம் பேச வேண்டாம் என்று டாக்டர் சொன்னதை மறந்து விட்டாயா?

    அதே டாக்டர்... இனிமேல் எந்த மருந்தாலும் பலனில்லை. வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய் விடுங்கள் என்று சொன்னாரே அதை நீங்கள் மறந்துவிட்டீர்களா?

    அம்மா சிரித்துக்கொண்டே சொன்னதைக் கேட்ட அப்பா, ராஜேஸ்வரி... இப்படியெல்லாம் பேசாதேம்மா... உனக்கு ஒன்றும் நடக்காது... நான் இருக்கிறேன் இல்லையா? என்று கண் கலங்கினார்.

    என்னங்க நீங்க? அழுதுக்கிட்டு? இன்னும் ஒரு நாளோ... இல்லை அதன் மறுநாளோ... எனக்கு உங்கக்கூடவும் மானசாகூடவும் நிறைய பேசணும்னு ரொம்ப ஆசையா இருக்குங்க.

    அதுக்கென்ன... தாராளமாப் பேசு... இந்த பழச்சாறை குடித்துவிட்டுப் பேசேன். உன் மகளிடம் என்ன வேண்டுமானாலும் பேசு. அதற்காக நாம் காதலித்ததையெல்லாம் மானசாகிட்டே சொல்லிடாதே.

    மானசா அதிர்ந்தாள். அப்பா... என்னப்பா இது? புதுக்கதையா இருக்கே... இத்தனை வருஷமா இது எனக்கு தெரியவே இல்லையே... அம்மா... என்ன கில்லாடி வேலையெல்லாம் செய்திருக்கே?... உன்னைப் பார்த்தால் இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு பாவம் போல இருக்கு... நீ என்னடான்னா... அப்பாக்கூட மரத்தை சுத்தி ஓடியாடி டூயட்டெல்லாம் பாடியிருக்கே... இத்தனை நாளா என்கிட்டே சொல்லாமலே மறைச்சிட்டே இல்லே?

    சும்மா இருடி குறும்புக்காரி... என்னங்க நீங்க அதையெல்லாம் இவகிட்ட போய் சொல்லிக்கிட்டு... எனக்கு வெட்கமா இருக்கு... அம்மா முகத்தை மூடிக் கொண்டாள்.

    உன்னை முதன் முதலில் லண்டன் மாநகரின் தேம்ஸ் நதிக்கரையில் இள ரோஜா வண்ணப் புடவையில் பார்த்து மயங்கினேனே. அப்போது கூட நீ இதைப்போலத்தான் வெட்கப்பட்டாய் ராஜேஸ்வரி. அடடா... ஒரு தேவதை போல நீ நின்றதும்... சிரித்ததும்... இதோ இப்போதும் கூட என் கண்ணில் படமாய் தெரிகிறது. அந்த நாள் எத்தனை சுகமானது... அப்பாவின் குரலில் காதலும் கனிவும் ததும்பின.

    "ஏன்... நீங்கள் மட்டும் என்னவாம்? சிகப்பு ரோஜா சொருகின வெள்ளை நிற சூட்டில் இளவரசரைப் போல எத்தனை கம்பீரமாய் நின்றிருந்தீர்கள்? உங்களைப் பார்த்த முதல் பார்வையிலேயே என்னையே உங்கள் காலடியில் சமர்ப்பித்து விட்டு அசைவை: மறந்து நான் நின்றதை இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது.

    நான் உங்களுக்கு வணக்கம் சொன்னதும், நீங்கள் மந்தகாசமாய் சிரித்தபடி பதில் வணக்கம் சொன்னதைக் கேட்ட போது எனக்கு தேனமிர்தம் குடித்தது போல இருந்தது... இப்போதும் நீங்கள் ராஜி... என்று என்னைக் கூப்பிடும்போதும் அதே நிலைதான்" அம்மாவின் குரலில் காதல் கரை புரண்டது.

    இத்தனை வருட திருமண வாழ்வில் உன்னிடம் ஏதாவது குறை கண்டுபிடிக்கலாம் என்று நினைப்பேன். ஆனால் நீ எந்த வாய்ப்பும் எனக்குக் கொடுத்ததே இல்லையே... எப்படி ராஜி உனக்கு அது சாத்தியமாயிற்று? அப்பா வியந்தார்.

    என்னை ஏதாவது கோபித்துக் கொள்வீர்கள். இல்லை முகமாவது சுளிப்பீர்கள் என்று நானும் கூட எதிர்பார்த்தேன். உங்களுக்கு இது எப்படி சாத்தியமாயிற்று?

    அம்மா எதிர் கேள்வி கேட்டுச் சிரித்தாள்.

    நாம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் உண்மைக் காதல்தான் இந்த அன்பான வாழ்க்கையைச் சாத்தியப்படுத்தியது ராஜி அப்பா சொன்னார்.

    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நான் பிறந்து வந்து உங்களையே தேடுவேன்... மீண்டும் மீண்டும் உங்களிடமே வந்து சேருவேன். உங்கள் காலடியிலேயே காலமெல்லாம் தவமிருப்பேன்...

    ராஜி... நானும் நீயே நினைவாக... நீயே உணர்வாக... நீயே வாழ்வாக அத்தனை பிறவிகளிலும் உனக்காகவே காத்திருப்பேன் கண் மலர் பூத்திருப்பேன்...

    அப்பாவும் அம்மாவும் தங்கள் காதல் நினைவில் உருகி தங்களுக்குள் பேசுவதைக் கண்ட மானசாவுக்கு மெய் சிலிர்த்துக் கண்கள் கலங்கின. அவர்களின் அந்த தெய்வீக நிலையைக் கலைத்துவிடாமல் வெளியே வந்தாள்.

    பங்களாவின் முன்புறத்தில் வானவில்லைக் கவிழ்த்துப் போட்டது போல நின்றிருந்த நிழற்குடையின் கீழே உட்கார்ந்தாள். அப்பாவும் அம்மாவும் காதலித்ததெல்லாம் அவளுக்குப் புதுசு. அதனால்தான் அவர்களிருவரும் அத்தனை அந்நியோன்யமாக இருக்கிறார்கள். அப்பாவின் விழியசைவைப் பார்த்து அம்மா காரியம் செய்வாள். அவள் முகம் பார்த்து அப்பா புரிந்து கொள்வார். இருவரும் அதிகம் பேசியதைக்கூட மானசா பார்த்ததில்லை.

    இத்தனைக்கும் மாதத்தில் பல நாட்கள் வீடு தங்க முடியாதபடி வேலைகள் அவரை வேட்டையாடிக் கொண்டிருக்கும். துணிக்கடையிலிருந்து பல்பொருள் அங்காடி வரை அவருடைய வியாபார சாம்ராஜ்யம் பறந்து விரிந்தது. வெளியூருக்கும் வெளிநாட்டுக்கும் பறந்துகொண்டே இருப்பார்.

    மானசாவின் படிப்புக்காக குடும்பம் சென்னையில் இருந்தது. சொர்க்கம் போன்ற அந்த மாளிகையில் அன்புக்கும், பாசத்துக்கும் குறைவே இல்லை. எப்போதும் இன்பத்தில் மிதக்கும் சந்தோஷக்கூடாக அந்த வீடு இருந்தது.

    ஆனால் அதில் பங்கெடுக்கத்தான் உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு யாரும் வருவதில்லை. உறவுகள் நமக்கு எப்போதும் உபத்திரமானவை. அதனால் அவைகளை நாம் ஒதுக்கிவிடலாம் என்று ஒரு முறை அப்பா சொன்னதிலிருந்து மானசா அதைப் பற்றி கவலை கொண்டதே இல்லை.

    அதைப்போலவே அப்பாவின் நண்பர்கள் என்றுகூட யாரும் வரமாட்டார்கள். அப்பா கைபேசியில் பேசும் போது ‘ஷர்மா, தம்புரான், கன்னா படேல்’ போன்ற சில பெயர்கள் காதில் விழும்.

    இவற்றைப் பற்றி மானசா எப்போதும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. அப்பாவும் அம்மாவும் அவளை கண்ணின் கருமணிபோல பார்த்துக் கொண்டார்கள்.

    பெண்ணாகப் பிறந்துவிட்டதால் எந்த வகையிலும் எதிலும் நீ குறைந்து விடக்கூடாது. எந்த நேரத்திலும் எதற்கும் நீ தயாராக இருக்க வேண்டும். எதிரி யாராக இருந்தாலும் பயப்படாமல் எதிர்த்து நிற்கவும், சமயோசிதமாகச் செயல்பட்டு அவர்களை ஜெயிக்கவும் வேண்டும். இந்த ரகுநாதன் மகளுக்கு எப்போதும் பயமே வரக்கூடாது என்று அப்பா சொல்வது வழக்கம்.

    அதனாலேயே மானசாவுக்கு தற்காப்புக் கலைகளான கராத்தே, துப்பாக்கி சுடுதல் கற்றுக் கொடுத்தார். குதிரையேற்றம், கார் ஓட்டுதல், விரல் நுனியில் கணினி மட்டுமல்ல இசைக்கருவிகள் வாசிக்கவும் பயிற்சி அளித்தார்.

    இவற்றோடு பெண்களுக்கே உரிய சமையல் கலை, தையல் இவற்றிலும் மானசா சிறந்தவளாக்கப்பட்டாள்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் பிரஞ்ச், ஜப்பானிய மொழி ஆகியவற்றில் மானசாவுக்கு எழுதவும் படிக்கவும் தெரிய வைத்தார்.

    சர்வ வல்லமை படைத்த சகலகலா வல்லியாக மானசா உருவாகி இருந்தாள். அப்பா எதற்காக இதையெல்லாம் தனக்கு சொல்லிக் கொடுக்கிறார் என்பது தெரியாமலேயே மானசா எல்லாவற்றையும் ஐயம் தீர கற்றுக் கொண்டாள்.

    எல்லாமே சுகமாக நடந்து கொண்டிருந்தபோது தான் அம்மா இப்படி படுத்து விட்டாள். பெருமூச்சுடன் மானசா எழுந்தபோது, சின்னம்மா... உங்களை அம்மா கூப்பிடறாங்க என்று சொல்லிக்கொண்டு வள்ளி ஓடி வந்தாள். மானசா என்னவோ என்று பயந்து அவளோடு ஓடினாள்.

    மானசா... அலமாரியில் என்னுடைய திருமண பட்டுப் புடவை இருக்கே... அதை எடுத்துக்கொண்டு வா...

    அம்மா மந்தகாசமான புன்னகையோடு சொன்னாள்.

    மானசாவும் அப்பாவும், வேண்டாம் என்று மன்றாடி கெஞ்சினபோதும் பிடிவாதமாகப் பச்சைத் தண்ணீரில் குளித்தாள். பட்டுப் புடவையைக் கட்டி நகைகளையெல்லாம் போட்டுக்கொண்டு, தலை நிறைய பூ வைத்துக் கொண்டாள்.

    அப்பாவை அருகில் அழைத்து அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள். மானசாவை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு அவள் கையைப் பற்றிக் கொண்டாள்.

    ரொம்ப நிறைவான வாழ்வு வாழ்ந்திட்டேன்... ரொம்ப நன்றிங்க... மானசா... அடுத்த வார்த்தை வாயிலிருந்து வருமுன்னே அம்மா முடிந்து போனாள்.

    ஒரு காவியம் முடிந்து அசையா ஓவியம் போல தன் மடியில் கிடக்கும் தன்னன்பு மனைவியைப் பார்த்தார் ரகுநாதன். கிடைத்தற்கரிய பெரும் புதையலொன்று கண்ணெதிரே பறிபோனது போல மனம் உடைந்தார். பொற்சிலை போல பக்கத்தில் உட்கார்ந்து கதறி அழும் மகளைத் தொட்டார். ‘வேண்டாம்’ என்று தலையசைத்தார்.

    ரகுநாதன் மகள் அழக்கூடாது மகளே. அழுகை நம்முடைய குலத்துக்கே அவமானமானது. கோழைகளின் கை ஆயுதமான அழுகையை விட்டு ஒழித்துவிடு. எழுந்திரு. மகாராணி போல வாழ்ந்து முடிந்திருக்கும் உன் தாயை மிகவும் உன்னதமாக வழியனுப்ப ஏற்பாடு செய்யலாம் வா...

    தெளிவான வார்த்தைகளில் அப்பா பேசினதைக் கேட்ட மானசா விழி துடைத்து எழுந்தாள்.

    2

    அம்மாவின் காரியங்கள் முடிந்த மூன்றாவது நாள் மானசா இருட்டை வெறித்துக்கொண்டு மாடி பால்கனியில் உட்கார்ந்திருந்தாள். அப்பா அவளருகில் வந்து உட்கார்ந்தார்.

    என்னம்மா... அம்மாவின் நினைவில் தனியாக இருக்கிறாய். உன் அம்மா ஒப்புமை சொல்லமுடியாத உயர்வானவள். அதனால் நிச்சயம் ஒளிப்பிழம்பாய் நிரந்தரமாக மின்னும் வெள்ளி நட்சத்திரமாக மாறி வானில் ஜொலித்துக் கொண்டிருக்கிறாள். அதோ பார்... பளபள வென... மின்னி தன்னிடத்தைக் காட்டுகிறாள். மனதை ஒருமுகப்படுத்தி அவளைப் பார்... என்று கையை நீட்டிக் காட்டினார்.

    மானசா நிமிர்ந்து அவர் நீட்டிய திசையில் பார்த்தாள். ஒரு ஒற்றை நட்சத்திரம் அவர் சொன்னது போலவே ஜொலித்துக் கொண்டிருந்தது. அப்பா அவள் தலையை பாசத்தோடு வருடினார்.

    மானசா நான் காலையில் கிளம்புகிறேன். நீ மன தைரியத்தோடு இருக்க வேண்டும். உன் அம்மாவோடு சேர்ந்து உனக்கு செய்ய வேண்டிய காரியம் ஒன்றை நான் தனியாகச் செய்யும்படியான சூழ்நிலை வந்திருக்கிறது. அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்... மானசா அவர் சொல்வதிலுள்ள பொருள் புரியாமல் அவரைப் பார்த்தாள்.

    உன்னை சகலகலாவல்லியாக உருவாக்கியதே அந்த மிகப் பெரிய காரியத்துக்குத்தான். வல்லாண்மை கொண்ட எதிரிகளை வெல்லுவதற்குத்தான்... அதைப்பற்றி பிறகு சொல்லுகிறேன். இந்த முறை நான் திரும்ப வரும்போது ஒரு நல்ல முடிவோடு வருகிறேன். நீ கவலைப்படாமல் இரு..."

    ஆகட்டும்ப்பா... நீங்கள் சீக்கிரம் திரும்பி வாருங்கள். அம்மா இல்லாத வெறுமை அதிகமாக இருக்குப்பா.

    அப்பா தலையசைத்தார்.

    ஆனால் அப்பா பத்து நாட்களாகியும் திரும்பவில்லை. நாள் தவறாமல் கைபேசியில் பேசுபவர் பேசவே இல்லை. மானசா முயற்சி செய்த போதெல்லாம் தொடர்பு கிடைக்கவில்லை என்கிற பதிலே கிடைத்தது. மானசாவுக்குள் பயம் பந்தாய் உருண்டது.

    இப்போது கூட, இந்த இருட்டில் உட்கார்ந்து கொண்டு அப்பா, அம்மா இருவரையும்தான் நினைத்துக் கொண்டிருந்தாள். அம்மா எங்கே போயிருப்பாள்? வானத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

    அம்மா எத்தனை பாசமானவள்? அவள் சூட்டை அள்ளிக் கொட்டும் சூரியனாகி இருக்க முடியாது. உடலில் களங்கமும் மாதத்தில் ஒரு நாள் மறைந்து இருளாகும் நிலவாய் இருக்க முடியாது... அப்பா சொன்னது போல நட்சத்திரமாகத்தான் வானில் ஜொலித்துக் கொண்டிருப்பாள்...

    நினைக்கும்போதே நெஞ்சம் விம்மி தண்ணீராய் வழிந்தது. நெஞ்சில் பாதியும் மடியில் மீதியுமாய் விழுந்து புடவையில் வட்ட வட்ட ஈரத் தடங்களாய் பதிந்தது.

    சின்னம்மா இங்கேயா இருக்கீங்க? உங்களை வீடெல்லாம் நாங்க தேடித் திரிஞ்சிக்கிட்டிருக்கேன். இருட்டு நேரத்தில் இங்கே எதுக்கும்மா? உள்ளே வாங்க...

    வள்ளியின் குரல் கேட்டதும் மானசா கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள். அம்மா இல்லாத வீட்டுக்குள் போகவே அவளுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் எழுந்தாள்.

    பட்டுப் புடவையில் தலை நிறைய பூவும் நெற்றி நிறைய குங்குமமுமாய் அம்மா ஆளுயரப் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள். வள்ளி ஏற்றி வைத்திருந்த வெள்ளி குத்து விளக்குகளின் தீபச் சுடரொளி முத்து போல எரிந்து கொண்டிருந்தது. மானசா அதையே பார்த்தாள்.

    ‘போன மாதம் இன்னேரம் இப்படியெல்லாம் நடக்குமென்று யாராவது நினைத்திருப்பார்களா? தெய்வம் விதித்த நியதியை யாரால் அழிக்க முடியுமா? இல்லை... மாற்ற முடியும் என்றாவது நினைக்க முடியுமா? என்ன மனித வாழ்க்கை?’

    மானசா திரும்பவும் அழுதாள். வள்ளி தானும் கூடவே அழக் கிளம்பினாள். கொஞ்ச நேரம் கழித்து முகம் துடைத்துக்கொண்ட வள்ளி சொன்னாள்.

    "நீங்க இப்படியே வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கறதை எங்களால கண் கொண்டு பார்க்க முடியலை சின்னம்மா... நம்ம அம்மா உங்களுக்கு மட்டுமா அம்மா? எங்களுக்கும்தான் அம்மா.

    வேலைக்கு வந்து பதினைந்து வருஷமா கை நிறைய அள்ளி அள்ளி எங்க வயிறு குளிர அன்னமிட்ட அன்னலஷ்மி அவங்க. எங்களுக்கும் உங்க மாதிரியே வருத்தம் இருக்கும்மா. யாருக்கு யார் ஆறுதல் சொல்றதுன்னு கவலைப்பட்டே தவிச்சுக்கிட்டிருக்கோம்.

    இதோ... மூணு நாளா நீங்க சாப்பிடாம இருக்கீங்க. நாங்களும் யாரும் சாப்பிடலை. எங்களால முடிஞ்சது அவ்வளவுதாம்மா..." வள்ளி திரும்பவும் அழக்கிளம்பினாள்.

    மானசாவுக்கு திக்கென்றது. மூன்று நாளாகவா சாப்பிடாமல் இருக்கிறார்கள்? தனக்கு மட்டும்தான் அம்மாவை இழந்த இழப்பின் வலி என்று நினைத்தது எத்தனை பேதமை... அம்மா எல்லோருக்கும் தாயாய் அமுதூட்டி இருக்கிறாள். வள்ளிக்குத் திருமணம் செய்து வைத்ததே அவள்தான்... காவல்கார கார்மேகத்தின் மகனைப் படிக்க வைத்து வேலை வாங்கிக் கொடுத்ததும் அம்மாதான். அவருடைய மகளுக்கு சீர் செய்து திருமணம் செய்து வைத்ததும் அம்மாதான்...

    இப்படி அம்மா எல்லா இடத்திலும் இங்கிருப்பவர்கள் எல்லோருடைய வாழ்விலும் நீக்கமற நிறைந்து விட்டிருக்கிறாள். உறவு என்று. இல்லாமல் எல்லோரிடமும் இயைந்து வாழ்ந்திருக்கிறாள். தன்னால் இவர்கள் சாப்பிடாமல் இருப்பது அம்மாவை அவமானப்படுத்துவது போலத்தான். அவள் அன்னலஷ்மியல்லவா?

    என்ன வள்ளி இது? மூணு நாளாவா சாப்பிடாம இருக்கீங்க? குரலில் கொஞ்சம் கோபத்தைக் காட்டினாள்.

    அம்மாதானேம்மா எங்களுக்கு தெய்வம்? அவங்களுக்கு மிஞ்சி என்னம்மா சாப்பாடு பரிசு? பத்து நாளாகியும் ஐயாவும் இன்னும் வரலையேம்மா... கலகலன்னு தெய்வக் களையோட இருந்த வீடு... எந்தப் பாவி கண்ணு பட்டுதோ தெரியலியே... அவன் நல்லா இருப்பானா? கார்மேகம் சபித்தார்.

    "இந்தாங்க. இப்படியே பேசினா சின்னம்மாவுக்கு கஷ்டம்தான் அதிகமாகும். சின்னம்மா... உங்களுக்கு நாங்க மூணு பேரும் இருக்கோம்மா. உங்களுக்காக உயிரை வேணுமானாலும் தரத் தயாரா இருக்கோம்.

    நீங்க இப்படி முகம் வாடிக்கிடக்கிறதை எங்களால தாங்க முடியலியேம்மா... மனம் தேறிக்குங்கம்மா. ராத்திரியாவது ஏதாவது சாப்பிடுங்கம்மா. வள்ளி நீ போய் விறுவிறுன்னு சமையல் செய்... அம்மா சாப்பிடுவாங்க..." என்று வள்ளியின் கணவன் மாடசாமி அவளை விரட்டினான்.

    அடுத்த அரை மணி நேரத்தில் சூடான சாப்பாடு மேசை மீது தயாராக இருந்தது. வள்ளி பரிவுடன் பரிமாற மானசா சாப்பிட்டு முடித்தாள்.

    வள்ளி... முதலில் நீங்க மூணு பேரும் சாப்பிடுங்க. நான் கொஞ்சம் காற்றாட வெளியில் உட்கார்ந்திருக்கிறேன்... என்று சொன்னவளை வள்ளி இடைமறித்தாள்.

    அம்மா வீட்டுக்கு முன்னாலேயே உட்காருங்க. செடி பக்கமா இருட்டில் உட்கார வேண்டாம்.

    கொஞ்ச நேரம் உலாவினதும் கொஞ்சம் தெம்பாக இருந்தது. கைபேசி ஒலி கூப்பிட்டது. எண்களைப் பார்த்ததும் மனம் சந்தோஷத்தில் துள்ளியது. அப்பா. அப்பாதான் கூப்பிடுகிறார்.

    ஹலோ... மானசா... எப்படிடா இருக்கே? அப்பாவை முதலில் மன்னிச்சிடுடா. வேலை அதிகமா இருந்ததாலே உன்கூட பேச முடியலை. நான் முக்கியமான வேலையா இருக்கறதால் என்னுடைய நெருங்கிய நண்பர் ஷர்மாவை வீட்டிற்கு அனுப்பி இருக்கேன். நீ அவரோடு உடனே புறப்பட்டு வா... எனக்கு உன்னைப் பார்க்கணும் போலிருக்கு... வருகிறாயா?

    மானசா துடித்துப் போனாள்.

    என்னப்பா இப்படி பேசறீங்க? எனக்கு பயமா இருக்கேப்பா...

    பயம் எதுவும் வேண்டாம். ஷர்மாவோடு புறப்பட்டு வா...

    கைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    மானசாவுக்கு குழப்பமாக வந்தது. ஷர்மா என்பவர் எப்படி இருப்பார்? அவரோடு கிளம்பி எங்கே போக வேண்டும்? அப்பா எங்கே இருக்கிறார்? அவர் உடல் நலம் நன்றாக இருக்கிறாரா? மீண்டும் அப்பாவைக் கூப்பிட்டாள். ஆனால் கைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    அவள் மேலும் குழம்பாமல் ஒரு ஆள் வாயிற்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்.

    வணக்கம் மேடம்... ஷர்மா ஐயா வெளியில் காரில் இருக்காங்க... உள்ளே வர உங்க அனுமதியைப் பெற்று வர என்னை அனுப்பினாங்க.

    ‘அப்பா இப்போதுதான் ஷர்மாவோடு புறப்பட்டு வா என்று கைபேசியில் சொன்னார். அதற்குள் ஷர்மா என்று ஒருவர் வந்து வெளியில் நிற்கிறாரே... பார்க்கலாம் அவர் எப்படி இருப்பார் என்று... ஆனால் இத்தனை நாகரீகமான அணுகுமுறை கொண்டவர் அப்பாவின் நண்பராகத்தான் இருக்க முடியும்...’

    புன்னகையுடன், வரச் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு வள்ளியைக் கூப்பிட்டுக் காபி தயாரிக்கச் சொன்னாள். கார்மேகம் வேகமாக ஓடி வெளிக் கதவைத் திறந்ததும் அழகான வெளிநாட்டுக்கார் உள்ளே நழுவி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினவரைப் பார்த்தாள்.

    வடநாட்டவரின் சாயலில் அப்பாவின் வயதை ஒத்தவர். உயர்ந்த ரகத் துணியில் ஷெர்வாணி. கை விரல் களில் பளிச்சிட்ட வைர வைடூரிய மோதிரங்கள். தங்க சங்கிலியிட்ட வெளிநாட்டு கைகடிகாரம்.

    வணக்கம் மானசா... நான் உன் அப்பாவின் நண்பர் ஷர்மா. அப்பாவிடமிருந்து உனக்கு அழைப்பு வந்ததா?

    ஆமாம் அங்கிள். அப்பா இப்போதுதான் கூப்பிட்டாங்க. விவரம் சொன்னாங்க.

    காரிலிருந்து ஆள் உயர ரோஜாப்பூ மாலை கொண்டு வரப்பட்டது. அம்மாவின் படத்திற்கு அதை அணிவித்த ஷர்மா, என்னை... மன்னித்து விடுங்கள் அண்ணி... என்று இந்தியில் முணுமுணுத்தார்.

    அவரை உட்காரச் சொன்ன மானசா, வள்ளி கொண்டு வந்த காபியை அவரிடம் நீட்டினாள். காபியை வாங்கிக்கொண்டு ‘நன்றி’ சொன்ன ஷர்மா நிதானமாகக் குடித்தார். பிறகு கை கடிகாரத்தைப் பார்த்தார்.

    தாமதமில்லாமல் இப்போதே புறப்பட்டால்தான் காலை பத்து மணியளவில் உன் அப்பா இருக்கும் இடம் போய் சேரலாம். வேகமாகப் புறப்பட வேண்டும் மானசா.

    அவருடைய குரலுக்கு பணிந்த மானசா உள்ளே போய் மூன்று நாட்களுக்கு வேண்டிய துணிகளையும், பொருட்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

    அதைப் பார்த்துக்கொண்டிருந்த வள்ளி அவளை சைகை செய்து உள்ளே கூப்பிட்டாள். சின்னம்மா இவரு யாரு? இதுவரைக்கும் நம்ம வீட்டுக்கு வந்ததே இல்லையே... நீங்க என்னடான்னா அவரு கூப்பிட்டதும் தனியா கிளம்பிப் போறீங்களேம்மா. துணைக்கு நானும் கூட வரேன். ஐயாவும் இல்லாதப்ப உங்களை இவர் கூட எப்படிம்மா அனுப்பறது? வேணாம்மா,

    அவளுடைய வார்த்தைகளைப் புரிந்து கொண்ட ஷர்மா புன்னகைத்தார். இதோ பாரும்மா... நானும் உங்கய்யாவும் பள்ளிக்கூடத்திலிருந்து கல்லூரி வரை ஒண்ணாவே படிச்சவங்க. அவர்தாம்மா உங்க சின்னம்மாவை அழைச்சுக்கிட்டு வரச் சொன்னார். நம்பி தைரியமாக உங்க சின்னம்மாவை என் கூட அனுப்பும்மா.

    அதுக்கில்லீங்கய்யா... துக்கம் நடந்த வீடு... எங்க ஐயாவும் இல்லை... முன்னபின்ன பார்க்காத உங்களை நம்பி எங்க சின்னம்மாவை எப்படிங்க அனுப்பறது? எங்களுக்கு இஷ்டமில்லைங்கய்யா. தப்பா எடுத்துக்காதீங்க... வள்ளி கையெடுத்துக் கும்பிட்டாள்.

    அப்பாதான் இந்த ஷர்மா அங்கிள் கூட புறப்பட்டு வரச் சொல்லி போனில் சொன்னாங்க. அதுதான் நான் கிளம்பினேன் வள்ளி. எனக்கு ஒண்ணும் ஆகாது. நீ பயப்படாதே... மானசா சொன்னதும் வள்ளி கொஞ்சம் யோசித்தாள்.

    சரிம்மா... ஐயாவே வரச் சொன்னாருன்னு சொல்லிட்டீங்க. அதை மறுத்து நான் சொல்ல முடியாது. இருந்தாலும் ரொம்ப கவனமா இருங்கம்மா. ஐயா, எங்க சின்னம்மாவை உங்களை நம்பிதான் அனுப்பறோம். போய் சேர்ந்ததும் போன் செய்யுங்கம்மா.

    உங்களைப் போன்ற உதவியாளர்கள் கிடைத்திருப்பது மிகவும் அதிர்ஷ்டம். ரகுநாதன் எப்போதும் அதிர்ஷ்டக்காரன்தான். மானசாவை பத்திரமாகத் திருப்பி அனுப்புகிறேன்.

    சின்னம்மாவோடு ஐயாவையும் அனுப்புங்கைய்யா... வீடே விரிச்சிட்டுக் கிடக்கிறது...

    பதிலாக தலையசைத்த ஷர்மா, மானசாவோடு காரில் ஏறினார். கார் புயலாய் சீறிப் பறந்தது.

    3

    கார் நிறுத்தப்படுவது உணர்ந்து மானசா கண்களைத் திறந்தாள். பொழுது விடிந்து கொண்டிருந்தது. இரவு காரில் ஏறி உட்கார்ந்ததும் தன்னையுமறியாமல் தூங்கிவிட்டது புரிந்தது. ஷர்மா அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

    குட்மார்னிங் மானசா... இந்த உணவு விடுதியில் குளித்து காபி குடித்து விட்டுப் புறப்படலாம். இறங்கி வாம்மா.

    மானசா அவர் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டாள். தனியறை அவளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. குளித்து முடித்து உடை மாற்றி காபி குடித்து தயாரானவளிடம் முகமதியப் பெண்கள் அணியும் கறுப்பு நிற அங்கியை ஷர்மா நீட்டினார்.

    மானசா எதுவும் கேட்காமல் மறுக்காமல் இதை போட்டுக்கொள். உன் முகம் அங்கே யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாது.

    எதற்கு என்று கேட்க விரும்பினாலும் மறுத்துப் பேசாமல் மானசா அதை வாங்கி அணிந்து கொண்டாள்.

    காரில் போகும் போது எதிர்பட்ட பலகைகளில் தெரிந்தவை மலையாள எழுத்துக்கள்... ‘அப்பா எதற்காக கேரளாவுக்கு வந்திருக்கிறார்? நம்முடைய வியாபாரங்கள் எதுவும் கேரளாவில் இல்லையே... அப்பாவிடம் நேரில் கேட்டால்தான் இந்தக் குழப்பமெல்லாம் தீரும்.’ பார்வையைச் சுற்றிலும் நழுவவிட்டாள்.

    மலைப் பிரதேசம்... மழையை மடியில் சுமந்து இதோ வந்து விடுவேன்... என்று கருமேகங்கள் புரளும் மலைக் கூட்டங்கள். தூரங்களில் மலையருவிகள் வெள்ளிக் கோடுகளாய் தெரிந்தன. ரப்பர் மரத் தோட்டங்கள். கீச் கீச் என்று கத்திக்கொண்டு பறக்கும் பெயர் தெரியாத பறவைகள்.

    மானசா... இன்னும் பத்தே நிமிடங்களில் அரண்மனையை அடைந்து விடுவோம். அங்கே எப்பேர்ப்பட்ட இடி உன் தலையில் விழுந்தாலும் நீ வாயைத் திறக்கக்கூடாது. என்னைத் தேடக்கூடாது. நீ மிக மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது... கொஞ்சம் ஏமாந்து இசகு பிசகாக நடந்து கொண்டாலும் காரியங்கள் யாவும் கெட்டு விடும். அவர்கள் உன்னை அடையாளம் கண்டு கொள்வார்கள். அதன் பிறகு எல்லாமே அனர்த்தம்தான்.

    மானசாவுக்கு ஷர்மா மீது சின்ன அதிருப்தி ஏற்பட்டது. ‘என் அப்பாவைப் பார்க்கப் போகும்போது எதற்கு இத்தனை ‘கவனம்? இவர் நிறைய பயம் காட்டுகிறார். இதற் கெல்லாம் பயப்படுபவளா நான்?’ மானசா மனதுக்குள் எரிச்சல் வந்தது.

    அரண்மனைக்கு வெகு தூரத்திலேயே மானசா இறக்கி விடப்பட்டாள். மெல்ல நடந்து அதன் அருகில் சென்றவள் அரண்மனையின் முகப்புத் தோற்றத்தைக் கண்டு மிரண்டு போனாள். அத்தனை விஸ்தாரமாக அற்புதமாக இருந்தது.

    அதன் எதிரில் மாபெரும் மக்கள் கூட்டம். ஆனால் சத்தமிடாத அமைதிக் கூட்டம். மகிழ்வற்ற முக மலர்ச்சியற்றக் கூட்டம். ஆயிரம் கார்களுக்கு மேல் நின்றிருந்தும் ஆரவாரம் எதுவும் இல்லை. பூமாலைகள் மலைமலையாய் குவிந்து கிடந்தன.

    மானசா சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்து ஷர்மாவைத் தேடினாள். அவர் கண்ணில் படாமலே மறைந்து விட்டிருந்தார். என்னவோ மனதுக்குள் ஒரு பதைப்பாகவே இருந்தது. சமாளித்துக்கொண்டு, கொட்டிக்கிடந்த ரோஜா இதழ்கள் மீது கால் வைத்துப் படியேறினாள். பதினெட்டுப் படிகள் ஏறினதும் பெரிய தர்பார் கண்ணில் பட்டது.

    அதன் எல்லா பக்கங்களிலும் ஆளுயர வெள்ளி குத்து விளக்குகளும், தங்கக் குத்து விளக்குகளும் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. சந்தனமும், அகிலும் கலந்த நறுமணப் புன்னகை லேசாக வந்து கொண்டிருந்தது. மத்தியில் மலர்க் குவியலில் உயரமான படுக்கை. அதன் அருகில் யாரும் செல்லமுடியாதபடி தடுப்பு போடப்பட்டிருந்தது.

    நிமிர்ந்து பார்த்த மானசா, இடி விழுந்த மரமாய் அசைவற்றுப் போனாள். அந்த மலர் படுக்கையில்... அங்கே... அரசருக்கான உடையில் படுத்துக் கிடப்பது... மானசாவின் கண்கள் மூடி மூடித் திறந்தன. மூச்சு விடுவது கூட முரசமாய் காதில் எதிரொலித்தது.

    ‘அது... அது... அப்... அப்பா... அப்பாவா?’ மூளை முற்றிலும் கட்டுப்பாடு இழந்தது. ‘அந்த மகாராஜா அவளுடைய அப்பா ரகுநாதன்தான்.’ ஷர்மாவால் கொடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகள் வலுவிழந்தன. தொண்டையில் குழியில் காற்றுப் பிரளயமாய் மோதி மோதி குரல் சண்ட மாருதமாய் வெளிவரத் துடித்தது.

    அப்பா... என்று கத்த யத்தனித்தாள்.

    கை சொடக்கிடும் சத்தம் கேட்டது. நிமிர்ந்தாள். ஷர்மா எதிர்ப்புறமாக நின்று உதட்டில் கை வைத்து எச்சரித்தார். போ... போய்... விடு என்று சைகை காட்டினார்.

    மாட்டேன் என்று தலையசைத்தாள்.

    அப்பா... என்று கத்திவிட வாயைத் திறந்தாள். அவளருகில் வந்த அரண்மனை பணியாள், பீபி... கொஞ்சம் நகர்ந்துக்கறீங்களா? முதலமைச்சர் வர இருக்கிறார் என்று பணிவாகக் கூறினார். வேறு வழியில்லாமல் மானசா நகர்ந்தாள். திமிறிய அழுகையை அப்படியே உள்ளேத் தள்ளி திரும்பி புயலாய் படியிறங்கி வெளியே வந்தாள். தலை தெறிக்க அந்த மலைப்பாதையில் ஓடக் கிளம்பினாள்.

    பெற்று, பெயரிட்டு வளர்த்து பெருமை தந்த பெற்ற தகப்பனை, ‘அப்பா’ என்று கூப்பிட முடியாத கொடுமைக்காக ஓடினாள். இது எந்த இடம்? இங்கே என் அப்பா யார்? இங்கிருக்கும் இந்த மக்கள் கடல் எந்த வகையில் அவருக்கு உறவு? ஒன்றுமே புரியாத நிலையில் ஓடினாள்... ஓடினாள்... ஓடிக்கொண்டே இருந்தாள்.

    ‘வியாபாரி என்கிற பாவனையில் தன்னோடு இருந்த தன் தகப்பன் இப்படி ஒரு பேரரசனா? இத்தனை மேன்மையான வாழ்வில் இருந்தவரா?’ என்கிற பிரமிப்பு நீங்காமலே ஓடினாள்.

    எனக்குதான் எதுவும் தெரியவில்லை. என் அம்மாவுக்காவது இது ஏதும் தெரியுமா? இல்லை அவளுக்கும் எதுவும் தெரியாதா? அப்பா... என்னிடம் பொய்யா சொல்லியிருந்தீர்கள்? ஏனப்பா... இப்படி உண்மைகளை மறைத்து விட்டீர்கள்?’

    அந்தக் கூட்டம் முழுவதும் திரும்பிப் பார்க்கும் விதமாக, இவர்தான் என் அப்பா. நான் அவருடைய ஒரே மகள்... என்ற உண்மையை உரக்கக் கூவி கத்திக் கதறி அழுது புரள முடியாத கையாலாகாததனத்துக்காக ஓடினாள். எத்தனை தூரம் ஓடினாளோ தெரியவில்லை. நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தாள்.

    பக்கத்தில் மாருதி ஜென் வண்டி ஒன்று வந்து நின்றது. ஓட்டுனர் கீழே இறங்கி ஒரு துண்டு சீட்டை நீட்டினான்.

    ‘இதைப்போலவே ஒவ்வொரு நூறாவது கிலோ மீட்டரிலும் வெவ்வேறு கார்கள் வரும். கடைசியில் ஹெலிகாப்டர் காத்திருக்கும். அதில் உன்னுடைய இருப்பிடம் சென்றுவிடு.

    எக்காரணம் கொண்டும் உன் முகத்தை யாரிடமும் காட்ட வேண்டாம். புயலாய் கிளம்பிப் போய்விடு...’

    அதற்குமேல் யோசிக்காத மானசா சட்டென காருக்குள் பாய்ந்தாள். கார் தானாக ஓடுவது போல வேகம் எடுத்தது. மானசாவின் மனமெல்லாம் ரணமாக வலித்தது.

    ‘என்னைப்போல அதிர்ஷ்டக்காரி இல்லை என்று நினைத்து இறுமாந்திருந்தேனே... என்னைவிட துரதிருஷ்டக்காரி யார் இருக்க முடியும்? முதலில் அம்மாவை இழந்து... இப்போது அப்பாவையும் இழந்து... தத்தளிக்கிறேன். அந்த ஷர்மா எப்படி ஆளாக இருந்தாலும் என் அப்பாவின் முகத்தை கடைசியாகப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

    அவர் வரவில்லை என்றால் என் அப்பா வெளியூரில் இருக்கிறார். ஏன் இன்னும் வரவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டே காலமெல்லாம் காத்திருக்க வேண்டியதுதான்.’ வழி எங்கும் நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டே பயணத்தைத் தொடர்ந்தாள். எது எப்படியென்றாலும் கடிதம் சரியான வழிகாட்டியாக இருந்தது. அதன்படியே பயணித்து வீட்டிற்குள் மறுபடி நுழைந்த போது ஏதோ மர்மப் படத்தில் நடித்துவிட்டு வந்தது போலிருந்தது.

    அலுப்பும் களைப்புமாய் உள்ளே வந்தவளைப் பார்த்த வள்ளி கவலைப்பட்டாள். அழைத்துக்கொண்டு போன ஆளைக் காணவில்லை.

    வாடகைக்காரில் வந்து இறங்கின மானசாவிடம் எதுவும் பேசவில்லை. மானசாவை தொல்லை செய்யவில்லை. படுக்கையில் விழுந்ததுதான் தெரியும். மீண்டும் கண் விழித்தபோது மறுநாள் மாலை ஆகிவிட்டிருந்தது. மானசா எழுந்து குளித்து விட்டு கூடத்தில் உட்கார்ந்து அம்மாவின் படத்தைப் பார்த்தாள்.

    அப்பாவும் நீயும் திட்டம் போட்டு என்னை ஏமாத்தி விட்டீங்களாம்மா? அப்பாவைப் பற்றி உனக்குத் தெரியாதா? அப்பாவின் இடம் அதுதான்னா... நாம ரெண்டு பேரும் ஏன் இங்கு இருந்தோம்? என்னிடம் எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் இப்படிப் போய் விட்டீர்களே... இனி என் கதி என்ன? எனக்கு யார் துணை? இனி நான்... நான் என்ன செய்வது? படிப்பதா... இல்லை வயிற்றுப் பாட்டுக்கு வேலை செய்வதா? இந்த வீடாவது நமக்குச் சொந்தமா? அதுவும் இல்லையா?

    தன்னிரக்கத்தில் துக்கம் பீறிட வாய்விட்டு அழுதாள். காரணம் புரியாமல் வள்ளியும் அவளோடு சேர்ந்து கொண்டாள். அழுது முடித்து முகம் கழுவித் துடைத்துக்கொண்டு சூடாக காபி குடித்து முடித்தபோது கார்மேகம் வந்தார்.

    சின்னம்மா, அன்னிக்கு ஷர்மான்னு ஒருத்தர் வந்தாரில்லே? அவர் வந்திருக்காரும்மா. உள்ளே அனுப்பட்டுமா?

    ஒரு விநாடி, வேண்டாம். பார்க்க இஷ்டமில்லைன்னு சொல்லிடுங்கன்னு சொல்ல நினைத்தாள். மறுவிநாடியே அதை மாற்றிக் கொண்டாள். ‘அப்பாவைப் பற்றி

    Enjoying the preview?
    Page 1 of 1