Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஸ்ரீ ஸந்தோஷி மாதா ( பூஜையும் கதையும்)
ஸ்ரீ ஸந்தோஷி மாதா ( பூஜையும் கதையும்)
ஸ்ரீ ஸந்தோஷி மாதா ( பூஜையும் கதையும்)
Ebook124 pages29 minutes

ஸ்ரீ ஸந்தோஷி மாதா ( பூஜையும் கதையும்)

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

இன்று வாழ்க்கையின் உக்கிரம் மிக வேகமாக இருக்கிறது. என்றும் இல்லாத அளவுக்கு மக்களிடையே பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றன. பிரச்சினைகளின் பாதிப்பினால் கோபமும், ஆத்திரமும், ஆங்காரமும், அடுத்தவரைக் கண்டு இடையறாது பொறாமைப்படுதலும் மனிதர்களிடையே நடக்கின்றன. மனித மனம் வளர்வதற்கு தேவையான வழிகளைத்தான் ஸனாதன தர்மம் இடையறாது போதித்து வருகிறது. ஆரோக்கியமான மனம், அன்பான குணம் இவை இரண்டும் தான் மனித வாழ்வை சிறப்பிக்கும் என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது. இதற்காகவே ஹோமங்களும், யாகங்களும், பூஜைகளும் செய்வதற்குண்டான வழிமுறைகளை, கர்மாக்களை தலைமுறை தலைமுறையாக மக்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறது. நமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும் மனம் சந்தோஷமடையவும் சில பூஜைகள் இருக்கின்றன. ‘ஸ்ரீ ஸந்தோஷிமாதா பூஜை’ அப்படிப்பட்டது. எது சந்தோஷம் என்று உங்களை யோசனை செய்ய வைத்து அதை எளிதாக காட்டிக் கொடுத்து விடுவது. சக்தி உபாசகத்தின் ஓர் அம்சம் ஸ்ரீ ஸந்தோஷிமாதா பூஜை. வட இந்தியாவில் மிகப் பிரபலமான பூஜை, தென்இந்தியாவிலும் புத்தகங்களால் பரவியது. சக்தியை வழிபட்டால் ஆனந்தம் வரும். சந்தோஷம் வரும் என்று இந்த பூஜை சொல்லாமல் சொல்கிறது.

Languageதமிழ்
Release dateDec 17, 2020
ISBN9781005174927
ஸ்ரீ ஸந்தோஷி மாதா ( பூஜையும் கதையும்)
Author

Giri Trading Agency Private Limited

VISION - GIRI's Vision is to be a Premier Organization, Spreading Indian Culture & Tradition, firmly anchored to Value based living, with a view to enhance and impact the overall spiritual experience & Holistic growth of its partners globally.MISSION - GIRI's Mission is to Provide Opportunities to millions across the globe who have faith in Sanaathana Dharma by equipping them with products & services, through every possible modern resource.VALUES - Devotion | Compassion | Righteous Speech | Dedication | Love | Faith | Humility | Commitment | Sacrifice | Service | Honesty | Belief | Co-Operation | Truth | Opportunity | Enterprise | Initiative | Teamwork | Integrity | Peace | Leadership | Tradition & Culture | Mutual Respect | Simple living | Discipline | Ethical Living | HarmonyGIRI CORPORATE PROFILEGIRI strives for the betterment of life and the well-being of all. GIRI aims to promote the art of living as propounded in the Bhagavad Gita, Puranas, Vedas, Upanishads and other Hindu scriptures for Peace, Happiness, Abundance and the ultimate goal of mankind to be one with the Creator.GIRI is a household name for all Hindus in every walk of life – be it personal worship, cultural cause, leisurely listening and/or pure entertainment.GIRI is a Multi Crore company Run by 2nd Generation family members and evolved and established with a history of more than 60 years, operating a chain of 18 Retail Showrooms with various locations in Northern and Southern India.GIRI through its various outlets dispenses Books on Ramayana, Mahabharata, Bhagavad Gita, Vedas, Puranas, Upanishads, Philosophy, Yoga, Astrology, Ayurveda etc., Music - Carnatic & Hindustani Classical, Devotional Music in All Indian Languages, Other Genres of Music, Musical Instruments etc., Products for Worship like Pooja Articles & Malas, Idols of Deities, for Home,Temples, Public gatherings etc., Agarbathis, Gifts, Textiles and other related items also are an integral part of GIRI. Thus GIRI has carved a niche for itself.Further, its music software arm GITAA CASSETTES has produced contents in the classical, devotional and religious genres. It is a veteran that has created over 500 titles in Sanskrit, Tamil, Telugu, Malayalam, Kannada and English.ADD KIOSK - Anytime Digital Download Kiosk is committed to making great music experiences more accessible to all music fans. Be it the Physical Kiosk or the portal, www.addkiosk.in gives web users the power to legally download on-demand to a massive catalog of music from major and independent labels.ADD KIOSK is installed in all GIRI Showrooms and various musical cultural centres, and public places. You can download music, (videos, wallpapers and ebooks - coming soon) into CDs, Mobiles, USB devices and IPODs.GIRI’s Publications division has brought out several handy multilingual books dovetailing most of the Hindu mantras and hymns in printed form to assist all those who wish to get a feel of positive vibrations for the mind by individually reading them.This function is taken a step further by publishing KAAMAKOTI - a Tamil periodical containing articles that remind the devoted about India’s hoary traditions and the scientific basis of all her cultural practices.The company’s offsprings areGIRI’s Koluppadi - A Revolutionary Multi Purpose Rack Facility in Plastic.GIRI Fine Arts- Nurturing Young and Fresh Talents by providing them Opportunities to perform.Lakshmi Giri Charitable Trust - A Trust founded in the name of the Founder’s Wife for Philanthropic Activities.Even as the company gently reminds its clientele to find their ancient roots, it has kept pace with modernity. All its showrooms have computerised billing facilities. Its back-end offices have a computer terminal on every work station.The company’s motto is “Dharmo Rakshati Rakshitaha!” which means justice accords safety to those who protect it.

Read more from Giri Trading Agency Private Limited

Related to ஸ்ரீ ஸந்தோஷி மாதா ( பூஜையும் கதையும்)

Related ebooks

Related categories

Reviews for ஸ்ரீ ஸந்தோஷி மாதா ( பூஜையும் கதையும்)

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஸ்ரீ ஸந்தோஷி மாதா ( பூஜையும் கதையும்) - Giri Trading Agency Private Limited

    பதிப்புரை

    ஸ்ரீ ஸந்தோஷி மாதா பூஜையும், கதையும் என்ற இப்புத்தகம் எமது வெளியீடுகளில் மிகவும் முதன்மையானது.

    ஸ்ரீ ஸந்தோஷி மாதா பூஜை திருமணம் நடைபெறவும், கணவன்-மனைவி ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழவும், ஸகல ஐஸ்வர்யங்களும் பெறவும் செய்ய வேண்டிய பூஜையாகும்.

    இப்புத்தகத்தை வாங்கிப் படித்து பூஜை செய்து பயனடைந்தவர்கள் எமது நிறுவனத்துக்கு தங்களது அனுபவங்களையும்,

    இப்பூஜை மூலம் தாங்கள் பெற்ற வெற்றிகளையும் அவ்வப்போது கடிதம் மூலம் தெரியப்படுத்தி வருகிறார்கள். இப்பூஜை மூலம் வாழ்க்கையில் வெற்றிகளைப் பெற்ற அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வட இந்தியாவில் ஸ்ரீ ஸந்தோஷி மாதாவுக்கு பல கோயில்கள் இருக்கின்றன. ஆனால், தென்இந்தியாவில் சென்னை - விருகம்பாக்கத்தில் ஒரு கோயிலும், திருச்சியில் ஒரு கோயிலும் மட்டுமே உள்ளன. இப்புத்தகத்தை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் எமது ‘கிரி’ நிறுவனத்தின் ஸ்தாபகர்கள் திருமதி. லக்ஷ்மி கிரி - திரு. டி.வி.எஸ்.கிரி அவர்களை இந்நூலில் நினைவுகூர்ந்து, இப்புத்தகத்தின் மின்பதிப்பை (Ebook) பக்தர்களுக்கு வழங்குகிறோம். மேலும் மேலும் இதுபோன்ற புத்தகங்களை வெளியிடுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் ஆன்மீக அன்பர்களுக்கு எமது நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.

    - பதிப்பகத்தார்.

    ï

    வாழ்த்துரை

    யோகிராம்சுரத்குமார்

    இன்று வாழ்க்கையின் உக்கிரம் மிக வேகமாக இருக்கிறது. என்றும் இல்லாத அளவுக்கு மக்களிடையே பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றன. பிரச்சினைகளின் பாதிப்பினால் கோபமும், ஆத்திரமும், ஆங்காரமும், அடுத்தவரைக் கண்டு இடையறாது பொறாமைப்படுதலும் மனிதர்களிடையே நடக்கின்றன.

    மனித மனம் வளர்வதற்கு தேவையான வழிகளைத்தான் ஸனாதன தர்மம் இடையறாது போதித்து வருகிறது. ஆரோக்கியமான மனம், அன்பான குணம் இவை இரண்டும் தான் மனித வாழ்வை சிறப்பிக்கும் என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது. இதற்காகவே ஹோமங்களும், யாகங்களும், பூஜைகளும் செய்வதற்குண்டான வழிமுறைகளை, கர்மாக்களை தலைமுறை தலைமுறையாக மக்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறது.

    நமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும் மனம் சந்தோஷமடையவும் சில பூஜைகள் இருக்கின்றன.

    ‘ஸ்ரீ ஸந்தோஷிமாதா பூஜை’ அப்படிப்பட்டது. எது சந்தோஷம் என்று உங்களை யோசனை செய்ய வைத்து அதை எளிதாக காட்டிக் கொடுத்து விடுவது. சக்தி உபாசகத்தின் ஓர் அம்சம் ஸ்ரீ ஸந்தோஷிமாதா பூஜை. வட இந்தியாவில் மிகப் பிரபலமான பூஜை, தென்இந்தியாவிலும் புத்தகங்களால் பரவியது.

    சக்தியை வழிபட்டால் ஆனந்தம் வரும். சந்தோஷம் வரும் என்று இந்த பூஜை சொல்லாமல் சொல்கிறது. இந்த ஸ்ரீ ஸந்தோஷி மாதா பூஜை வழிபாட்டு புத்தகத்தை தங்களுடைய வெளியீடாக கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.

    இப்புத்தகம் வெகுவிரைவில் ஐநூறாவது மறுஅச்சு என்ற இடத்தை அடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனையும், என் சத்குரு நாதன் யோகிராம் சுரத்குமார் அவர்களையும் மனமுருக பிரார்த்தித்துக் கொண்டு இவர்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

    என்றென்றும் அன்புடன்

    balakumaran_signature.TIF

    பாலகுமாரன்

    80/4 வாரன் சாலை

    மயிலாப்பூர்

    சென்னை - 600 004

    ï

    ஸ்ரீ ஸந்தோஷி மாதா

    ஸ்ரீ ஸந்தோஷிமாதாவிற்குரியது வெள்ளிக்கிழமை. இவ்விரதம் ஏற்பவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் ஸ்ரீ ஸந்தோஷிமாதாவிற்கு பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்தவுடன் கதையைப் படித்து ஆரத்தி செய்த பிறகு எல்லோருக்கும் தீர்த்தம், கடலை, வெல்லம், ப்ரஸாதம் விநியோகம் செய்ய வேண்டும்.

    பூஜைக்கு வேண்டிய பொருட்கள்

    1.    மஞ்சள் பொடி

    2.   குங்குமம்

    3.   சந்தனம்

    4.    பூமாலை

    5.   உதிரிப்பூக்கள்

    6.   வெற்றிலை, பாக்கு

    7.   ஊதுபத்தி

    8.   சாம்பிராணி

    9.   பஞ்சு (திரிக்காக)

    10.   நல்லெண்ணெய்

    11.   கற்பூரம்

    12.   வெல்லம்

    13.   மாவிலை

    14.   அரிசி

    15.   தேங்காய்

    16.   கலசம்

    17.   வஸ்த்ரம்

    18.   அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)

    19.   கோலப் பொடி/ அரிசி மாவு

    20.    கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

    மாற்றுப் பொருள்கள்

    பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமல் இருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப் பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை

    வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம் முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம் உபயோகிக்கலாம்.

    வரலக்ஷ்மீ வ்ரத பூஜையைபோல் ஒரு கும்பத்தை அலங்கரித்து, மாவிலை, தேங்காய் வைத்து, கலசத்தையே ஸ்ரீ ஸந்தோஷி மாதாவாகக் கருதி அதில் பூஜை செய்ய வேண்டும்.

    kalash_only.tif

    பூஜைக்குத் தேவையான நிவேதன பதார்த்தங்கள்

    உப்புக் கடலை, வெல்லம், முந்திரி பாயசம்

    ï

    பூர்வாங்க பூஜைகள்

    1. கணபதி த்யானம்

    இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

    ganpat_dyan.tif
    Enjoying the preview?
    Page 1 of 1