Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Alameluvin Aasai
Alameluvin Aasai
Alameluvin Aasai
Ebook125 pages40 minutes

Alameluvin Aasai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் பெயர் கீதா மதிவாணன். பிறந்து வளர்ந்த ஊர் பொன்மலை, திருச்சி. திருமணத்துக்குப் பின் சென்னையில் சில வருடங்கள் வசித்த பின் தற்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்துவருகிறேன். கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், இலக்கியப் பகிர்வுகள், புகைப்படங்கள் என்று பலவற்றையும் பகிர்ந்துவருகிறேன். மஞ்சரி, தினமலர் பெண்கள் மலர், அக்ரி டாக்டர், பூவுலகு போன்ற பத்திரிகைகளிலும் வல்லமை, நிலாச்சாரல், அதீதம், பதிவுகள் போன்ற இணைய இதழ்களிலும் என்னுடைய படைப்புகள் வெளியாகியுள்ளன. ஹென்றி லாசன் எழுதிய ஆஸ்திரேலிய காடுறை கதைகளின் மொழிபெயர்ப்பான ‘என்றாவது ஒரு நாள்’ என்னும் என் சிறுகதைத் தொகுப்பு அகநாழிகை பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற சங்கத்தமிழ் மாநாட்டு மலரில் நான் எழுதிய இலக்கியக் கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. பறவை கூர்நோக்கலும் இயற்கைசார் புகைப்படங்கள் எடுத்தலும் பொழுதுபோக்குகள்.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580117602017
Alameluvin Aasai

Read more from Geetha Mathivanan

Related to Alameluvin Aasai

Related ebooks

Reviews for Alameluvin Aasai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Alameluvin Aasai - Geetha Mathivanan

    http://www.pustaka.co.in

    அலமேலுவின் ஆசை

    Alameluvin Aasai

    Author:

    கீதா மதிவாணன்

    Geetha Mathivanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/geetha-mathivanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அலமேலுவின் ஆசை

    2. அப்பு

    3. பத்திரப்படுத்தப்படும் சிறகுகள்

    4. கற்பூரம்

    5. ஆங்காரியும் கோணங்கியும் இடையிலொரு அம்புஜவல்லியும்

    6. கிருஷ்ணவேணி

    7. அது அவன் தவறில்லை!

    8. ஒரு வானவில் போலே…

    9. காய்க்காத மரம்

    10. இரண்டில் ஒன்று

    1. அலமே

    லுவின் ஆசை

    கொல்லைப்புறத் தாழ்வாரத்தில் கழிவறை அருகில் படுக்கை போடப்பட்ட பிறகு வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதே அலமேலுவுக்குத் தெரியவராமல் போயிற்று. இன்று அதிசயமாய் உள்ளேயிருந்து கருவாட்டுக் குழம்பின் மணம் மூக்கைத் துளைக்க, மூடியிருந்த போர்வையை மெல்ல விலக்கினாள், அந்த மூதாட்டி.

    ம்ம்ம்........ஆழமாய் மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றினாள். நல்ல வாசனை! அலமேலுவுக்கு நாவில் நீரூறியது. அந்த சுகத்திலேயே மனம் காற்றாடியென உயரே எழ முற்பட, நூலை சட்டென்று அறுப்பதுபோல் ரஞ்சனியின் குரல் கேட்டது.

    கஞ்சி!

    ஒற்றைச்சொல்! கூடவே 'ணங்'கென்ற சத்தத்துடன் கிண்ணம் வைக்கப்பட்டு, மேலெழும்பிச் சிதறிய துளிகளில் ஒன்று, படுத்திருந்த அலமேலுவின் உதட்டோரம் தஞ்சமடைந்தது. அலமேலு அலுப்புடன் கண்களை மூடிக்கொண்டாள். மூடிய இமைகளின் வழியே கண்ணீர் வழிந்தோடியது. அவசரமாக போர்வையின் ஓரத்தால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். ரஞ்சனி பார்த்துவிட்டால் வேறுவினையே வேண்டாம். ஒரு போர்க்களத்தையே உருவாக்கி விடுவாள்.

    தே! உனக்கு என்ன கேடு வந்திச்சு? எழவு விழுந்த வீடு மாதிரி எப்பவும் மூக்கச் சிந்திகிட்டு இருந்தா வீடு விளங்கின மாதிரிதான். நாலு பேர் பார்த்தா என்னைத்தான் ஆகாதவள்னு நினைப்பாங்க! நோயும் பாயுமாகிப்போனாலும் என்னை நோகடிக்கிறதுல மட்டும் எந்தக்குறையும் இல்லை.எல்லாம் நான் வந்த வழி.காலம் பூராவும் சீக்காளியோட மாரடிக்கணும்னு என் தலையில் எழுதியிருக்கு...

    இப்படி எவ்வளவோ! எல்லாவற்றையும் கேட்டாகிவிட்டது. அந்தக் கடவுளுக்கும் கருணையில்லையே! காலாகாலத்தில் அழைத்துக் கொள்ளவேண்டாமா? இந்தப் பூமிக்குப் பாரமாக இன்னும் எத்தனை நாள் வைத்திருக்கப் போகிறானோ?

    மனம் புலம்பியது. ஆற்றாமை அலைக்கழிக்க, பசித்த வயிறு அவளை எழுந்து உட்கார வைத்தது.

    பக்கத்தில் ஆறிப்போன கஞ்சி! அதைக் கஞ்சியென்றும் சொல்வதற்கில்லை. பழைய சோற்றை மிக்சியில் அரைத்து கஞ்சியென்று தருகிறாள். சிலநாள் உப்புக் கரித்து வாயில் வைக்க வழங்காது; அதற்குப் பரிகாரமாக மறுநாள் உப்பில்லாக்கஞ்சி கிடைக்கும்.

    அலமேலுவுக்கு விதவிதமாக சாப்பிட ஆசைதான். அதிலும் அசைவ சமையல் என்றால் மிகப்பிரியம். கொஞ்ச காலமாகவே இந்த பாழாய்ப்போன வயிற்றுக்கு எதுவுமே ஒவ்வ மாட்டேன் என்கிறது. எதைச் சாப்பிட்டாலும் வயிற்றுப்போக்கு வந்துவிடுகிறது. எழுந்து நடமாட இயலாத நிலையில் இரண்டொருதரம் கழிவறைக்குப் போகும் வழியிலேயே அசுத்தம் செய்துவிட்டாள். அவ்வளவுதான்! ரஞ்சனி பேயாய் மாறிவிட்டாள். இன்ன பேச்சு என்றில்லை; அதற்குப் பயந்துதான் பத்தியமாயிருக்க முடிவெடுத்து கஞ்சி போதுமென்று மருமகளிடம் கேட்டுக்கொண்டாள். அவளுக்கும் வசதியாயிற்று. ஒரு நாளைக்கு வைத்து மூன்று நாட்களை ஓட்டிவிடுகிறாள். பின்னே? அலமேலு குடிக்கும் கால் தம்ளர் கஞ்சிக்காக ஒவ்வொரு வேளையும் புதிதுபுதிதாகவா தயாரிக்க முடியும்?

    அதுமட்டுமல்ல; படுக்கையும் கொல்லைப்புறம் போடப்பட்டுவிட்டது. நிலைமை இன்னும் மோசமாகி, தெருவுக்குத் தள்ளப்படுவதற்குள் கடவுள்தான் கருணைகாட்ட வேண்டும்.

    கஞ்சியை வாயருகில் கொண்டுபோகும்போதே குமட்டிக்கொண்டு வந்தது. ஒரு துண்டு நாரத்தையோ, எலுமிச்சையோ இருந்தால் குடித்துவிடலாம். ரஞ்சனியிடம் கேட்க பயமாயிருந்தது. தருகிறாளோ, இல்லையோ, ஒரு பாட்டம் வசைபாடி முடித்துவிடுவாள்.

    கருவாட்டுக் குழம்பின் வாசம் மீண்டும் காற்றுவாக்கில் வந்தது. எத்தனை நாளாயிற்று, இதுபோன்றதொரு வாசனை பிடித்து! அலமேலுவுக்கு சிரிப்பு வந்தது. கண்ணும், காதும் கொஞ்சங்கொஞ்சமாய் செயலிழந்து வரும் சமயத்திலும், இந்த மூக்கும், நாக்கும் என்னமாய் சுறுசுறுப்புடன் இயங்குகின்றன.

    அலமேலுவுக்கு கருவாட்டுக்குழம்புடன் சோறுண்ணும் ஆசை மூண்டுவிட்டது. கூடவே அவள் அம்மாவின் நினைவும் வந்துவிட்டது. அம்மா வைக்கும் கருவாட்டுக்குழம்பு தேனாய்தான் இனிக்கும். அவள் கைப்பக்குவத்தை அனுபவித்துச் சாப்பிட அவள் அப்பாவுக்குதான் கொடுப்பினையில்லாமல் போய் விட்டது.அம்மா எதைச் செய்தாலும் அது ருசிக்கும். கருவாட்டுக்குழம்பு வைப்பதில் கைதேர்ந்தவள். கருவாட்டுத்துண்டங்களுடன்கத்திரிக்காய், வாழைக்காய், பரங்கிக்காய் என்று கண்ணில், கையில் தட்டுப்படும் காய்களையெல்லாம் குழம்பில் சேர்த்துவிடுவாள். சோறு வடித்து முடிந்ததும் விறகை வெளியில் இழுத்து அணைத்துவிட்டு குழம்புச்சட்டியை தணலிலேயே விட்டுவிடுவாள்.

    சமையல்தான் முடிந்துவிட்டதே, சோற்றைப்போடுவாள் என்று பார்த்தால் அதுதான் நடக்காது. அழுக்குத்துணி மூட்டையுடன் ஆற்றங்கரைக்குக் கிளம்பிவிடுவாள். அவள் மட்டுமா? அலமேலுவையும் கூட்டிக்கொண்டுதான். கூட்டிக்கொண்டு என்றும் சொல்லமுடியாது. கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டுதான் போவாள். போகுமுன் சிறிது நல்லெண்ணெயும், விளக்கெண்ணெயும் லேசாக சூடுபடுத்தி உச்சந்தலையில் வைத்து சூடுபறக்கத் தேய்த்துவிடுவாள். அம்மா தேய்க்கும் சுகத்தில் தூக்கம்சொக்கும்.

    உச்சி வெயிலில் சூடான ஆற்றங்கரைப்படிக்கட்டில் உட்கார வைத்து, வடித்த கஞ்சியில் ஏற்கனவே தயாராக கரைத்து வைத்திருக்கும் அரப்புத்தூளை அவள் தலையில் தேய்க்கத்துவங்குவாள். அலமேலுவின் 'கண்ணு எரியுதே, கண்ணு எரியுதே' என்ற பாட்டு அவள் காதில் விழுந்ததாகவே காட்டிக்கொள்ளமாட்டாள். தானும் குளித்துமுடித்து, துணி துவைத்து வீட்டுக்கு வரும்போது பசியில் வயிறு கபகபவென்று பற்றியெரியும்.

    வந்ததும் முதல் வேலையாக ஒரு கிண்ணத்தில் சோற்றைப்போட்டு, அகப்பையால் குழம்பை அள்ளி அதில் இட்டுப் பிசைவாள். நீரெல்லாம் சுண்டிப்போய் வெறும் கண்டங்களாக கருவாடும் காய்களும்தான் கிடக்கும். தூக்கமும், பசியும் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றையொன்று மிஞ்ச விழையும் பொழுதில் பெரியபெரிய கவளங்களாக சோற்றை உருட்டி வாயில் திணிப்பாள். அரை மயக்கத்தோடு உண்ணும்போதும் அது அமுதமாய்த் தோன்றும்.

    Enjoying the preview?
    Page 1 of 1