Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நீயே எந்தன் உயிராவாய்...
நீயே எந்தன் உயிராவாய்...
நீயே எந்தன் உயிராவாய்...
Ebook71 pages24 minutes

நீயே எந்தன் உயிராவாய்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டிபன் சாப்பிட்டுவிட்டு படுக்கையில் விழ... பாழாய்ப் போன பழைய நினைவுகள் வசந்தனைப் பாடாய்ப் படுத்தியது! 

சிவபதியின் சொந்த ஊர், ஈரோடு!

படித்து முடித்தவுடன்... தனது நண்பன் சம்பத்தோடு சேர்ந்து 'ரியல் எஸ்டேட்' பிசினஸ் செய்ய... 

அது ஒரு நேரம் லாபத்தையும்... பல நேரம் நஷ்டத்தையும் கொடுக்க... 

அதனால், இருவரும் கிடைத்த லாபத்தில்... ஊட்டியில் அருகருகே சகாய விலையில் வந்த காபி, தேயிலை எஸ்டேட்டை வாங்கிப் போட்டு... அங்கே குடியேறினர்! 

சிவபதிக்கு பார்வதியைத் திருமணம் முடிக்க... வசந்தன் பிறந்தான்...! 

சிவபதியின் தங்கை கல்யாணியை சம்பத் விரும்ப... நண்பனுக்கே மணமுடித்து வைத்தார்.

கல்யாணிக்கு ப்ரியா பிறந்தாள்!

ஐந்து வயது வசந்தனிடம்... குழந்தை ப்ரியாவைக் கொண்டு வந்து காட்டி... 

"வசந்த்... குட்டிப் பாப்பா பாருடா! இந்தக் குட்டிப் பாப்பா யாரு தெரியுமா...? நாளைக்கு வளர்ந்து... பெருசாகி... உன்னைக் கட்டிக்கப் போறவள்!" 

பார்வதி சொல்ல... 

அந்த ஐந்து வயதில்... வசந்தனின் இதயத்தில்... ப்ரியாவின் மேலான காதல் விதை தூவப்பட்டது! 

"உன் முறைப் பொண்ணு!"

"உன் பொண்டாட்டி! உனக்கு சொந்தமானவள்!"

"உன் தேவதை!"

"நெஞ்சுக்குள்ளே வச்சு பத்திரமா பார்த்துக்கணும்!"

"பள்ளிக்கூடத்துல பசங்க இவளை அடிக்காம பார்த்துக்கணும்!" 

இப்படி சொல்லிச் சொல்லியே வளர்க்கப்பட்டான்!

ப்ரியா அழுதாள்... வசந்தன் கலங்கிப் போவான்!

ப்ரியா பட்டினி கிடந்தால்... வசந்தனும் சாப்பிட மாட்டான்!  

ப்ரியாவிற்கு பத்து வயதான போது... அவளுடைய தாய் கல்யாணி விஷசுரம் வந்து இறந்து போனாள்! 

அதன் பிறகு, அத்தை பார்வதியே தாயாகி தாங்கிக் கொள்ள... தாயின் இறப்பு... ப்ரியாவை அவ்வளவாய் பாதிக்கவில்லை! 

குறிப்பிட்ட பருவ வயது வந்ததும்... வசந்தனுக்கு ப்ரியாவின் மேல் வைத்த அன்பும், பாசமும், அக்கறையும் குழைந்து, கலந்து, நேசமாய் உருவெடுத்தது! 

வசந்தன் பட்டப்படிப்பு படிக்க கோயம்புத்தூர் சென்றான்! 

அப்போது ஏற்பட்ட பிரிவால்... ப்ரியாவின் மேல் வைத்தக் காதலில் இன்னும் அழுத்தம் கூடியது! 

அவளைப் பிரிந்து இருக்க முடியாமல் தவித்தான்... தத்தளித்தான்... 

அதன் விளைவாய் ஒவ்வொரு வார விடுமுறை நாட்களிலும் ஊட்டிக்கு தவறாமல் வந்தான்! 

படிப்பு முடிந்ததும் எஸ்டேட்டைப் பார்த்துக் கொண்டான்! 

ப்ரியா பட்டபடிப்பு படிக்க கோவை சென்றாள். 

அப்போது இருவருக்கும் சரியான பருவ வயது என்பதால் வசந்தன் போலவே ப்ரியாவும் தன் இணையைப் பிரிந்து இருக்க முடியாது தவித்து, துவண்டு போனாள்! 

தினம் தினம் மணிக்கணக்காய் ப்ரியாவிடம் செல்போனில் பேசுவான், வசந்தன். 

"ப்ரியா குட்டி... எப்படிடா இருக்கே...? நல்லாயிருக்கியா..." 

"ம்... நீங்க…?"

"ப்ரியா... உன்னைப் பிரிஞ்சி என்னால் இருக்கவே முடியலடா!" என்று வசந்தன் உருகுவான். 

"எனக்கு உங்களைப் பிரிஞ்சி இருக்க முடியலே, அத்தான்!" என்று மருகிப் போவாள், ப்ரியா. 

"ப்ரியா... தினம் ஊட்டி வந்துட்டுப் போகக் கூடாதா?" 

"எப்படி முடியும், அத்தான்? பயணத்துலேயே பொழுது போயிடும்! படிக்க வேணாமா...?" 

"படிச்சி என்னடா செய்யப் போறே? வேலைக்கா போகப் போறே?" 

"இல்லைதான்! உங்களைக் கட்டி குடும்பம் நடத்தி... குழந்தைங்க பெத்து... அதுங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க... வெறும் பன்னிரெண்டாம் வகுப்பே போதும்தான்! பெத்தவங்க நான் படிக்கணும்ன்னு விரும்பறாங்களே, அத்தான்?" 

"நாட்களை சபிச்சிகிட்டே... நான் காலத்தைத் தள்ளிடறேன்! நீ படிப்பை முடிச்சதும் நம்ம ரெண்டு பேருக்கும்... உடனே திருமணம் தானே?"

"பின்னே உங்களுக்கு இருபத்தைந்து! எனக்கு இருபது! நீங்களும் நல்லா பிசினஸ் செய்து கோவையில சேகோ பேக்டரி ஒண்ணு வாங்கிப்போட்டு இருக்கீங்க! தொழிலை எப்படி செய்வது? எப்படி லாபம் ஈட்டுவதுன்னு தெரிஞ்சிகிட்ட உங்களுக்கு அடுத்தது திருமணம்தானே!" 

 

 

Languageதமிழ்
Release dateFeb 27, 2024
ISBN9798224042548
நீயே எந்தன் உயிராவாய்...

Related to நீயே எந்தன் உயிராவாய்...

Related ebooks

Reviews for நீயே எந்தன் உயிராவாய்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நீயே எந்தன் உயிராவாய்... - R.Maheswari

    1

    ஊட்டி!

    குளிர்ச்சியான, மயக்கும் மாலைப்பொழுது!

    அந்த மிகப் பிரம்மாண்டமான பங்களா, வெளிச்சத்தில் மின்னியது! சுற்றிலும் மதிற்சுவர் எழுப்பி... பரந்த தோட்டத்திற்கு... மத்தியில்... அரண்மனையமைப்பில், பங்களா கட்டப்பட்டிருந்தது!

    சந்தன மல்லிகை, ஜாதி மல்லிகை பூக்களின் நறுமணமும்... மார்கழி மாதத்து மாலை நேர மிதமான பனிக்காற்றும், தென்றலும் கை கோர்த்துக் கொண்டு பங்களா முழுக்க கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தது!

    மிகப்பெரிய கேட் திறக்க... அந்த வெளிநாட்டுக் கார் வந்து போர்டிகோவில் நின்றது!

    கார் கதவைத் திறந்துக் கொண்டு... அவன் மிக அம்சமாய் இறங்கினான்!

    ஆறடிக்கு மேலான நெடுநெடு உயரம்...!

    பரந்து விரிந்த தோள்கள்...!

    கட்டுமஸ்தாவான உடல்வாகு...!

    களையான முகம்...!

    தீட்சண்ய பார்வையை வெளிப்படுத்தும் காந்தக் கண்கள்...!

    எடுப்பான நாசி...!

    அடர்த்தியான மீசை...!

    அழுத்தமான உதடுகள்...!

    வரிசைத் தவறாத வெண்ணிறப் பற்கள்...!

    மோவாயில் சிறிய அழகிய குழி என்று பேரம்சமாய் இருந்தான்!

    தமிழகத்தின் தென்மாவட்ட வர்த்தக உலகில் கொடிகட்டி பறக்கும் பிசினஸ்மேன்!

    ‘அவன்...?’

    ‘வசந்தன்!’

    அவனுக்கு தெரிந்ததெல்லாம் இந்த பத்து வருடத்தில் உழைப்பு... உழைப்பு... உழைப்பு மட்டும்தான்!

    அவனின் கடும் போராட்டமும்... முயற்சியும்... வெறிகொண்ட உழைப்பும்தான்... அவனை உச்சிக்கு கொண்டு வந்து விட்டது!

    கணநேரமும் சிந்தனையில் வேறெந்த நினைப்பும் இல்லாமல்... வர்த்தகம் ஒன்றே குறியாய் வளைய வரும் அவன்... இரத்தமும், சதையாலும் ஆன மனிதனானாலும்... இரும்பாய் இறுகிப் போயிருக்கும், இயந்திர மனிதன்!

    அப்படி அவன் இயந்திர மனிதனாய் வலம்வர காரணம்... ஒரு பெண்!

    அவன் இப்படி பெரும் கோடீஸ்வரனாய் உச்சிக்கு வருவதற்கு காரணமும், அப்பெண்தான்!

    அவள் அப்படி அவனுக்கு என்ன செய்தாள்?

    உதவி செய்தாளா...? உற்சாகப்படுத்தினாளா...? ஊக்கப்படுத்தினாளா...?

    ம்கூம்... அதெல்லாம் எதுவும் இல்லை!

    கொடுத்தாள்... தோல்வியைப் பரிசாய்க் கொடுத்தாள்!

    அந்தத் தோல்விதான் அவனுடைய வெற்றியின் படிகட்டுகள்!

    தோல்வி என்றால் எப்படிப்பட்ட தோல்வி?

    தொழிலில் தோல்வியை ஏற்படுத்தினாளா என்றால் இல்லை!

    ஒவ்வொரு மனிதனின் இளமைப்பருவ வாழ்க்கையில் வரமாய் வரும்... காதலில் தோல்வியைத் தந்தாள்!

    அந்தத் தோல்விதான் இன்று அவனை விஸ்வரூபம் எடுக்க வைத்துவிட்டது!

    ஏகப்பட்ட தேயிலை, காபி தோட்டங்கள்... ஸ்பின்னிங் மில்கள்... சேகோ பேக்டரிகள்... மார்டன் ரைஸ்மில்கள்... கன்ஸ்ட்ர க்ஷன்ஸ் என்று கோடிகளில் வர்த்தகம் செய்கிறான்!

    அவன் வர்த்தகம் விரிந்து பரவாத இடமில்லை! அவன் தொட்டதெல்லாம் துலங்கியது! லாபத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தது!

    பங்களாவிற்குள் நுழைய தாய் பார்வதி வரவேற்றாள்! தந்தை சிவபதியும் தாயின் அருகில் அமர்ந்திருந்தார்.

    வாப்பா... உட்கார்! என்ன களைப்பா தெரியறே? ஆபீஸ்ல வேலை அதிகமா, வசந்த்?

    ம்... கோயம்புத்தூர் ஆபீஸுக்கு விசிட் போனேம்மா!

    நீ போய் முகம் கழுவி, உடை மாத்திட்டு வா! காபி கொண்டு வரேன்!

    வசந்த் பருத்தியிலான இரவு உடைக்கு மாறி ஹாலுக்கு வர... அம்மா காபியை வழங்கினாள். அவன் குடித்து முடித்ததும் ஆரம்பித்தாள்.

    வசந்த்... தரகர் வந்துட்டு போனாரப்பா!

    எதுக்கு? என்று கோபமானான், வசந்தன்.

    தரகர் எதுக்கு வருவார்? விருந்தாடிட்டுப் போகவா வருவார்? நாலஞ்சி நல்ல வரன்களைக் கொண்டு வந்திருக்கார்! பொண்ணுங்க ஒவ்வொண்ணும் அழகுல தேவதைங்க! அத்தனையும் அழகு, படிப்பு, நல்ல குடும்ப பாரம்பரியம்ன்னு வந்திருக்கு!

    தரகர்களை உள்ள விடாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்! கேட்க மாட்டீங்களாம்மா...? என்று வசந்தன் கோபத்தோடு கேட்க...

    எதுக்கு அம்மா மேல கோபப்படறே? அவ ஆசைப் படறது தவறா...? நியாயமில்லாததா...?

    Enjoying the preview?
    Page 1 of 1