Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Abarnavin Nagalkal
Abarnavin Nagalkal
Abarnavin Nagalkal
Ebook157 pages59 minutes

Abarnavin Nagalkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1. தான் விரும்பும் அழகியின் குளோன் வேண்டும் என்று பணக்கார இளைஞன் விக்ரம் ஜெனிடிக் இன்ஜினியரிங் படித்த நிலாவைக் கேட்கிறான்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட மனித குளோனிங்கை நிலா செய்தாளா? அபர்ணாவின் நகலை விக்ரமிடம் அவள் ஒப்படைத்தாளா?

2. அழகான 19 வயது கோடீஸ்வரியான அப்சராவை "தா உயிரைத் தா" என்று ஒரு பாடல் மயக்கி எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. இறுதியில் அப்சரா என்னவானாள்?

3. தங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில் வளவனும் செம்பியனும் அரசியலையும் ஆன்மீகத்தையும் தேர்வு செய்யக் காரணமென்ன?

4. இந்தியாவின் பாராளுமன்றக் கட்டிடத்தை வான் வழியாகத் தாக்க நடக்கும் சதியை இந்திய உளவுத்துறை "ரா" வைச் சேர்ந்த அருணும் ப்ரீத்தி குப்தாவும் "காக்கும் கரங்களாக" எவ்வாறு முறியடிக்கிறார்கள்?

5. அழகான பெண்களைப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் இந்திர பூபதி நடத்திய "இன்டர்வியூ"வில் அவரே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மரணத்திற்கு யார் காரணம்?

6. இச்சாதாரி பாம்புகளின் கதையைக் கூறும் "நாகலட்சுமி"

7. சந்தேகப்படும் கணவனிடம் மனோ வதை படும் "நல்லதோர் வீணை" வானதியின் முடிவு என்ன?

8. பெண்களையும் குழந்தைகளையும் கடத்தும் கும்பலை பிடிக்கும் "ஆபரேஷன் சக்தி" என்ற தீபாவின் சாகசம்.

9. "ஊஞ்சல்" மூலம் தங்களைக் கொலை செய்தவர் யார் என்று லதாவின் குழந்தை மற்றும் மாமியாரின் ஆவிகள் எப்படிக் காட்டிக் கொடுக்கின்றன?

10. ஒரு மழை நாளில் ஓடும் ரயிலில் நடந்தது என்ன?

இன்னும் சுவாரஸ்யமான மற்றக் கதைகளையும் படியுங்கள். என்னுடைய அடுத்த புத்தகங்களை ஆவலுடன் எதிர்பார்ப்பீர்கள்.

அன்புடன்,

லீலா ராமசாமி

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580172610559
Abarnavin Nagalkal

Related to Abarnavin Nagalkal

Related ebooks

Reviews for Abarnavin Nagalkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Abarnavin Nagalkal - Leela Ramasamy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அபர்ணாவின் நகல்கள்

    Abarnavin Nagalkal

    Author:

    லீலா ராமசாமி

    Leela Ramasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/leela-ramasamy

    பொருளடக்கம்

    அணிந்துரை

    1. அபர்ணாவின் நகல்

    2. தா... உயிரைத் தா...

    3. காக்கும் கரங்கள்

    4. இலக்கை நோக்கி...

    5. இன்டர்வியூ

    6. நாகலட்சுமி

    7. நல்லதோர் வீணை செய்தே...

    8. சோதனை

    9. ஆபரேஷன் சக்தி

    10. வல்லமை தாராயோ

    11. உஞ்சல்

    12. ஓடும் ரயிலில் ஒரு மழை நாளில்...

    13. நான் நீ இல்லை

    14. தோகையாள்

    15. கண்ணி

    அணிந்துரை

    பத்திரிகைகளிலும், முகநூல் பக்கங்களிலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் சிறப்பாக எழுதி வரும் சகோதரி லீலா ராமசாமி அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு நகல் கிடைக்கப் பெற்றேன்.

    தலைமை ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாளராகவும் இருந்த காரணத்தினால் தற்கால இளைஞர்களின் மனநிலையை நன்கு அறிந்தவராக இருக்கிறார். பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இவர்களின் கதைகள் அமைந்திருப்பது சிறப்பு.

    காலத்திற்கேற்ப விஞ்ஞான யுக்திகளைப் புகுத்திக் கதை நகர்த்துதல் அவருக்கு எளிதாக வாய்க்கிறது. ‘அபர்ணாவின் நகல்கள்’ கதையில் குளோனிங் ஆராய்ச்சிகளில் ஏற்படும் எதிர்மறை பக்கங்களைச் சொல்லி எச்சரித்திருக்கிறார். அதன் நுட்பங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு இருந்தால் மட்டுமே இது போன்ற கதைகளை எழுத இயலும்.

    ‘மனிதனுடைய மனமே சப்தங்களினால் ஆனதுதான். புலன்களிலேயே மனதிற்கு மிகவும் நெருக்கமானது செவிப்புலன்தான்’ - இதை வைத்துக்கொண்டு ஒரு மர்ம கதையை நேர்த்தியாகப் பின்னி இருக்கிறார் லீலா அவர்கள்.

    இவர் ஒரு கவிதாயினியாகவும் இருப்பதால் வர்ணனைகள் வானவில் வர்ணங்களாக வந்து ஒளிர்கின்றன.

    மேற்கு வானில் ஆழ்ந்த ஆரஞ்சு வண்ண நெருப்பு பந்து ஒன்று, கருஞ்சாம்பல் மேகக் கூட்டங்களில் விளிம்புகளைத் தாண்டி தீப்பிடித்துக்கொண்டது……

    ரயிலும், மழையும் வேகத்தில் ஒன்றுக்கொன்று நீயா நானா என்று போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன

    போன்ற வர்ணனைகள் இவருடைய எழுத்திற்கு அழகு சேர்க்கின்றன.

    கதாபாத்திரங்களுக்குப் பெயர் சூட்டுவது ஒரு கலை ; செம்பியன், வளவன், தொல்காப்பியன், பூவிழி, தேன்மொழி போன்ற தமிழ்ப் பெயர்கள் இவர்களுடைய கதையில் பாத்திரங்களாக உலவுவது, அழகு!

    இவர் ஒரு மனவளகலைப் பேராசிரியராகவும் பணியாற்றியதால், அதன் தாக்கத்தைப் பல கதைகளில் காண முடிகிறது. அதன் மூலம் மனித மனங்களின் வினோத பிம்பங்களை இவரால் ‘ஆடி’ போல எடுத்துக்காட்ட முடிகிறது.

    நூல் அணிந்துரை, கதைச் சுருக்கங்களின் கோர்வையாக அமைந்து வாசகர்களில் சுவாரஸ்யத்திற்குத் தடைக் கல்லாக அமைந்து விட கூடாது என்பது என் எண்ணம்.

    லீலா ராமசாமி அவர்களிடமிருந்து மேலும் பல புதினங்கள் வித்தியாசமான பாணியில் வரப்போவது திண்ணம் என்பதை இந்த தொகுப்பு கட்டியம் கூறுகிறது. சகோதரி, எழுத்து உலகில் எல்லா உயரங்களையும் எட்ட எனது வாழ்த்துக்கள்.

    நட்புடன்,

    இந்திரநீலன் சுரேஷ்

    1. அபர்ணாவின் நகல்

    செய்திஅலை டிஜிட்டல் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு வென்ற சிறுகதை.

    வாசலில் பெரிய வெளிநாட்டுக் கார் வந்து நின்றது.

    மிஸ் நிலா இருக்காங்களா?

    வெளியே வரவேற்பில் கேட்டுக் கொண்டிருந்த அந்தச் செழிப்பான இளைஞனை என் அறையின் கண்ணாடிக் கதவின் வழியே பார்த்தேன்.

    வரவேற்பில் இருந்த பெண் என் அறையைக் காட்ட அவன் என் அறையின் கதவைத் தட்டி நின்றான்.

    கம் இன்

    உள்ளே வந்தவனுக்கு என் எதிரிலிருந்த நாற்காலியைக் காட்டினேன். அழகன்.

    நான் விக்ரம்.

    நல்லது. என்ன விஷயமா வந்திருக்கீங்க?

    மிஸ் நிலா! நீங்க ஜெனிடிக் எஞ்சினியரிங் படிச்சவர்னு கேள்விப்பட்டேன்.

    ஆமா.

    அந்தப் படிப்புக்கும் பியூட்டி பார்லருக்கும் என்ன சம்பந்தம்?

    எதுக்குக் கேக்குறீங்க?

    நீங்க குளோனிங் ஆராய்ச்சியில ஈடுபட்டவர். திடீர்னு அதை விட்டுட்டு பியூட்டி பார்லர்ல இறங்கிட்டீங்க

    இட் இஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ். உங்களுக்கு என்ன வேணும்? என் நேரத்தை வீணாக்காதீங்க.

    உங்க நேரத்துக்குப் பத்துக் கோடி குடுக்கலாம்னு இருக்கேன்.

    இது என்ன புது ரீல்?

    இண்டஸ்ட்ரியலிஸ்ட் பாண்டியனின் ஒரே மகன் நான். எனக்கு அபர்ணா வேணும்.

    நீங்க தப்பான இடத்துக்கு வந்திருக்கீங்க. நீங்க கேக்க வேண்டியது அபர்ணாகிட்ட.

    இப்ப இருக்குற அபர்ணாவின் அழகோட ஒரு புது அபர்ணா, ஐ மீன் அவளோட நகல், அவளோட குளோன் வேணும்.

    ஏன் தலையைச் சுத்தி மூக்கைத் தொடணும்? அவ கிட்ட கேட்டாலே ‘எஸ்’ சொல்வாளே!

    அவ நிறைய பேருக்கு ‘எஸ்’ சொல்லிட்டா. அதனால அவ வேணாம். புதுசாப் பிறந்த அபர்ணா வேணும்.

    இந்தியாவுல மனிதக் குளோனிங் தடை செய்யப்பட்ட ஒண்ணு. அப்படியே இருந்தாலும் அந்தப் புதுசாப் பிறக்கற அபர்ணா வளர்ந்து வரும் போது உங்களுக்கு வயசாகி இருக்கும்.

    எனக்கு இன்னும் அஞ்சு வருடங்கள்ல புது அபர்ணா கிடைக்க மாட்டாளா?

    குளோனிங்னு சினிமாவுல காட்டுற மாதிரி மந்திரம் போல கொஞ்ச நாள்லயே நடக்கற விஷயமில்லை. இதுவும் மற்ற மனிதக் குழந்தைகள் போலவே முறையா ஒரு பெண்ணின் கருப்பையிலிருந்து பிறந்து வளரணும். அதனால டைம் எடுக்கும்.

    யோசிங்க நிலா. உங்க பயோடெக்னாலஜி இதுக்கும் ஏதாவது வழி வச்சிருக்கும். அட்வான்ஸா இதோ ஒரு கோடிக்கு செக்.

    தடை செய்யப்பட்ட ஒரு காரியத்தைச் செஞ்சி ஜெயிலுக்குப் போக நான் தயாரா இல்லை. உங்க செக்கை எடுத்துட்டுப் போங்க

    இந்தப் பொன்னான வாய்ப்பைத் தவற விட்டதுக்குப் பின்னாலே நீங்க வருந்தக்கூடாது! செக் நாளை வரை இங்கேயே இருக்கட்டும். அது வரை யோசிங்க.

    விக்ரம் சென்று விட்டான்.

    ***

    முட்டாளா நீ? தானா வர்ற பத்துக் கோடியை யாராவது விடுவாங்களா? ஏற்கனவே உனக்கு இந்தக் குளோனிங் சோதனையில நிறைய அனுபவம் இருக்கு. சோதனைக்கு வேண்டிய சகல வசதிகளையும் செலவையும் விக்ரம் பாத்துக்குவான். நமக்குப் பத்துக் கோடி சுளையா வர்றதை ஏன் வேணாங்கறே?

    இல்லே வினோத்! விக்ரம் நாய்க்குட்டிக்கோ பூனைக்குட்டிக்கோ குளோன் கேக்கலை. அவன் அபர்ணாவின் நகல் கேக்கறான். மனிதக் குளோனிங் சட்டத்துக்குப் புறம்பானது. எங்க புரொஃபசர் மனிதக் குளோனிங் செய்ததைக் கண்டு பிடிச்சதாலே அவர் இப்போ ஜெயில்ல இருக்கார்! அதனாலதான் நான் இந்த பியூட்டி பார்லர் ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு இருக்கேன். நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி புது வாழ்க்கையைத் தொடங்கும் கனவுல இருக்கேன்.

    "நம்ம புது வாழ்க்கையைப் பத்துக் கோடியோட தொடங்குனா எப்படி இருக்கும்னு யோசிச்சிப் பாரு நிலா!

    இந்தியாவுலதானே மனிதக் குளோனிங் தடை செய்யப் பட்டிருக்கு? அதுக்குத் தடையில்லாத வேற நாட்டுல போயி அதைச் செஞ்சி முடிச்சுட்டு வரலாமே!"

    அப்போ சீனாவுக்குத்தான் போகணும். அங்கேதான் எங்க புரொஃபசருக்குத் தெரிஞ்ச சீன புரொஃபசர் வாங்லீ இருக்கார்.

    அப்போ புரொஃபசர் வாங்லீ கிட்ட பேசு. அபர்ணாவோட திசுக்களுக்கு ஏற்பாடு பண்ணு. நான் சீனா போறதுக்கு ஏற்பாடு பண்றேன்.

    நான் புரொஃபசர் வாங் லீயுடன் பேசினேன். மனிதக் குளோனிங் செய்வதற்கு அவருடைய சம்மதத்தைப் பெற மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

    அடுத்த வாரத்தில் எனது அழகு நிலையத்துக்கு வந்த அபர்ணாவின் உடல் செல்கள் அவளறியாமலேயே சேகரிக்கப்பட்டன.

    எல்லாச் செலவுகளையும் விக்ரம் ஏற்றுக்கொள்ள நானும் வினோத்தும் அபர்ணாவின் பாதுகாக்கப்பட்ட திசுக்களுடன் சீனா ஏர்லைன்ஸில் பறந்து பெய்ஜிங் விமான நிலையத்தில் இறங்கினோம்.

    ***

    வாங்லீயின் ஆராய்ச்சிக் கூடம். அங்கே அபர்ணாவின் குளோனுக்கான ‘கரு’ உருவாக்கப்பட்டது.

    அந்தக் ‘கரு’ ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படும் வரை அது இன்குபேட்டரில் சீரான வெப்ப நிலையில் வைக்கப்பட்டது.

    மூன்றாம் நாள்.

    வாடகைத் தாய் ஏற்பாடு செய்துவிட்டு இன்குபேட்டரிலிருந்து சோதனைக் குழாய்களை எடுத்துப் பார்த்த எங்களுக்கு வியப்பு!

    ஒவ்வொரு சோதனைக் குழாயிலிருந்த தனித்த கருச்செல்லும் மகாபாரத காந்தாரியின் கரு நூறாகப் பிரிந்ததைப் போல ஆறாகப் பிரிந்து இருந்தன.

    அதில் ஒன்றை வாங்கிப் பார்க்கத் தமது கையை நீட்டினார் வாங்லீ. அவருடைய விரலில் அங்கிருந்த கம்பி குத்தி சிவப்பு முத்துப் போல் ரத்தத் துளி வெளிப்பட்டது.

    அந்த ஒரு துளி ரத்தம் அந்தச் சோதனைக் குழாயினுள் விழுந்து திசு வளர்ப்புத் திரவம் இளஞ்சிவப்பாகியது.

    இப்போது நாம் ஆறு வாடகைத் தாய்களைத் தேட வேண்டும்.

    என்று சொல்லிக்கொண்டே அக்குழாயைப் பார்த்தார் புரொஃபசர் வாங்லீ. என்ன ஆச்சரியம்! திசு வளர்ப்புத் திரவம் படிப்படியாக நிறமற்ற திரவமாக மாறிக் கொண்டிருந்தது.

    இதெப்படி சாத்தியம் புரொஃபசர்? ஒரு கருச்செல் எப்படி ஆறு கருச்செல்களாயின?

    நேற்றிரவு இன்குபேட்டரில் திடீரென்று அதிக மின்சாரம், அல்லது வெப்பநிலை மாற்றத்தால் ஒரு கருமுட்டை ஆறு கருமுட்டைகளாகப் பிரிந்திருக்கலாம். என் கவலை இப்போது அது இல்லை.

    வேறென்ன?

    இந்தக் குழாயில் விழுந்த என் ரத்தத் துளி எங்கே?

    ஆம்;

    Enjoying the preview?
    Page 1 of 1