Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஸ்ரீ குரு சரித்திரம்
ஸ்ரீ குரு சரித்திரம்
ஸ்ரீ குரு சரித்திரம்
Ebook488 pages2 hours

ஸ்ரீ குரு சரித்திரம்

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

ஸ்ரீ தத்தாத்ரேயரின் வாழ்வின் நிகழ்வுகள் மற்றும் அருட் செயல்களை விளக்கும் ‘குரு சரித்ரா’ என்னும் நூலாக ஸ்ரீ சாயம் தேவனின் வழித்தோன்றலான ஸ்ரீ நாமதாரகன் என்பவர் ஓவி என்ற செய்யுள் வடிவில் மராத்தி மொழியில் இயற்றினார். இது குருவான சித்தருக்கும், சிஷ்யனான நாமதாரகன் எனப்படும் கங்காதர ஸரஸ்வதிக்கும் இடையே நடக்கும் சம்பாஷணை வடிவிலானது. ‘ஸ்ரீ குரு தத்தாத்ரேயரின்’ புகழ் பேசும் இந்த குரு சரித்திரத்தை தமிழ் பேசும் அனைத்து பக்தர்களிடம் எடுத்து செல்லும் ஒரு சிறு முயற்சியே இந்நூலாகும். இப்புத்தகம் ஸ்ரீ குரு தத்தாத்ரேயரின் மீது சிறந்த பக்தியும், நம்பிக்கையும் தோற்றுவிக்கும் வண்ணம் அமைய மும்மூர்த்திகளின் ஸ்வரூபமான அவரின் இணையடித் தாமரைகளையே இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன்.
‘ஸ்ரீ குரோ: பரதரம் நாஸ்தி
நாஸ்தி தத்வம் பரம் குரும்’
(ஸ்ரீ குருவைக் காட்டிலும் மேலானது ஏதுமில்லை. அவரினும் மேலான தத்துவமும் இல்லை).

Languageதமிழ்
Release dateDec 17, 2020
ISBN9788179507391
ஸ்ரீ குரு சரித்திரம்

Related to ஸ்ரீ குரு சரித்திரம்

Related ebooks

Related categories

Reviews for ஸ்ரீ குரு சரித்திரம்

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Excellent Book.
    One must be blessed to read this Grantham.

Book preview

ஸ்ரீ குரு சரித்திரம் - Bhanumathi Padmanabhan

1.  ஸ்ரீ குரு நரசிம்ம ஸரஸ்வதி

ஸ்ரீ குரு நரசிம்ம ஸரஸ்வதி காணுகாபுரத்தில் வசித்து வந்தபோது அந்த கிராமத்தின் புகழ் பல இடங்களிலும் பரவியிருந்தது. பலர் இவ்விடத்திற்கு வந்து குருவருள் பெற்றனர். குழந்தை வேண்டி வந்தவர்கள் பிறந்த குழந்தைக்கு குருவின் பெயரிலுள்ள ஸரஸ்வதியை தனது குழந்தையின் பெயரை ஒட்டி சூட்டி மகிழ்ந்தனர். ஸ்ரீ குருவிற்கு நாமதாரகன் என்ற சீடன் ஒருவனிருந்தான். அவன் ஏழ்மையினால் பரிதாபமான நிலையிலிருந்தாலும் குருவின் நாமத்தை இடைவிடாது ஜபித்த வண்ணமிருந்தான். பல்வேறு துன்பங்களினிடையிலும் காணுகாபுரம் செல்ல வேண்டும் என்ற ஆவலால், தூய்மையான மனதுடனும், உயர்ந்த எண்ணங்களுடனும் மனதை குருவின் திருவடிகளில் நிறுத்தி, தனது தேவைகளை மறந்து காணுகாபுரம் நோக்கித் தனது புனிதப் பயணத்தினை தொடங்கினான். ஸ்ரீ குருவின் பெயர் தாங்கி இருக்கும் தனக்கு குருவின் திருவடி தரிசனம் கிடைக்காது போனால், தான் உயிர்வாழ்வதில் பயனேதுமில்லை எனக் கருதினான். பாரிசக் கல்லினால் தொடப்படும் இரும்பு பொன்னாக மாறுகிறது. எனக்கோ உன்நாமமே பாரிசக்கல்லாகும். அது என் மனத்துள் இருக்கின்றது. குருவே, சதாசிவனே, சகல ஜீவராசிகளிடத்தும் கருணை புரியும் நீ எனக்கு அருள்புரிய மாட்டாயா?

கலியுகத்தில் மனிதர்களின் மேன்மைக்கான சாதனம் குரு நரசிம்ம ஸரஸ்வதியின் நாமம் ஆகும். முக்குணங்களின் வடிவும், அன்பின் கடலுமான தாங்கள் மன அமைதியற்ற எனக்கு நிம்மதி அருளவேண்டும். அனந்தா! நரஹரியே! விரைந்து வாருங்கள்! பெற்ற தாய் பிள்ளையைத் தள்ளுவதுண்டா? எம் குலதெய்வமே! ஏழ்மை என் வீட்டு வாயிலில் நிற்கின்றது. இதனால் துயருற்று என் ஆன்மா அலைக்கழிக்கப்படுகிறதே! பிறகு கருணைக் கடலென்ற பெயர் உனக்கு எவ்வாறு பொருந்தும். நீரே எமக்கு மோக்ஷ சாதனம்! நீரே மும்மூர்த்திகளின் திருவடிவம்! நீரே உலகினைக் காப்பவர்! நீரே தேவர்கள் உட்பட எல்லோருக்கும் எல்லாமும் அளிப்பவர். இதனால் ‘தாதாரன்’ எனப் பெருமையுடன் அழைக்கப்படுபவர். இப்படியிருக்கையில் உம்மையன்றி வேறு யாரை நான் கேட்பது? வேதங்களால் ‘பிரம்மஜ்ஞானம்’ என போற்றப்படும் உம்மைப் பற்றிய ஞானம் எனக்குச் சிறிதுமில்லை. ஆயின் சர்வஜ்ஞனான உமக்கு என் நிலை புரிந்திருக்க வேண்டுமே! சிறு குழந்தைக்குத் தன் பெற்றோரைப் பற்றிய அறிவு இல்லையென்பதால் காக்காது கைவிடுவரோ? யாரும் ஏதும் கேட்காது நீராகத் தருவதில்லை என்பது உமது கொள்கையா? அசுர வேந்தன் பலி உமக்கு மூவுலகினையும் கொடுத்த போதும் அவனை ஏன் பாதாளத்தில் அழுத்தினீர்? விபீஷணனுக்கு பொன் நகராம் இலங்கையைக் கொடுத்தீரே! அதற்கு மாறாக அவன் உமக்கு என்ன கொடுத்தான்? பாலன் துருவனுக்கு ‘நக்ஷத்திர பதம்’ கொடுத்ததற்கு அவன் பிரதியாக உமக்கு ஏதும் கொடுத்தானா? க்ஷத்ரியர்களை வேரோடு அழிக்க பரசுராமராக வந்து பிராம்மணர்களுக்கு இவ்வுலகைக் கொடுத்தீரே! அவர்களும் உமக்கு திரும்ப ஏதும் தரவில்லையே! உலகேழையும் காக்கும் உமக்குச் சிறு துரும்பான நான் என்ன கொடுக்க இயலும்? திருமகளே தங்களோடு இருக்கும்போது உமக்கு செல்வத்திற்கு ஏதும் குறையிருக்காதே! அப்படியிருந்தாலும் நான் ஏதாகிலும் கொடுத்தால்தான் என்னை நீர் காக்க முடியுமென்றால் ‘தாதாரன்’ என்ற பெயர் தங்களுக்குப் பொருந்தாதே! ஒரு வேளை எனக்குக் கொடுக்க உங்களிடம் ஏதுமில்லை என்றால் நீர் உலகிற்கெல்லாம் இறைவன் என எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என் போன்ற எளியவர் ஏதேனும் பிரதிபலனை எதிர்நோக்கி உதவி புரிவது இயல்பே ஆயினும், உலகம் யாவினுக்கும் அள்ளி வழங்கும் வள்ளலான நீர் இவைகள் யாவற்றிற்கும் அப்பாற்பட்டு விளங்குவதுதானே முறை! எந்த பிரதிபலனை எதிர்பார்த்து மேகங்கள் பொழிந்து, ஆறு, குளங்களை நிரப்புகின்றன? அது இயற்கையான ஒரு செயலல்லவா? நீர் ஏதேனும் மாற்றினை என்னிடம் எதிர்பார்த்தால் உமது வள்ளண்மை கேள்விக்குரியதாகி விடுமே! பின்பு எவ்வாறு காக்கும் கடவுளென உம்மைத் தொழுவது? உமக்கு எவ்விதம் தொண்டு புரிவதென நான் அறியவில்லை. தொழுவதற்கு தேவையான மன அமைதியும், தெளிவும் எனக்கு இல்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் என் குடும்பம் தலைமுறைகளாக உமது பக்தர்களாக இருந்து வருகின்றனர் என்பதுதான்.

எந்தன் மூதாதையர் செய்த வழிபாடுகளும், தோத்திரங்களும் உமது மலரடிகளில் குவிந்து கிடக்கின்றன. பெற்றோர்கள் செய்யும் நன்மைகள் பிள்ளைகளைக் காக்கும் என்பது உலக வழக்கு. எனவே என்னைக் காப்பது உமது பொறுப்பாகும். எனது மூதாதையரின் வழிபாடு என்னும் செல்வம் உன்னிடத்தில் உள்ளதால் என்னைக் காப்பதன் வாயிலாக அந்தக் கடனிலிருந்து நீர் விடுபடலாம். அவ்வாறு இல்லையெனில் நான் கற்றறிந்தோரிடம் சென்று நீதி கேட்க வேண்டும். ஆயின் ஐயனே! எனக்கு அதில் சிறிதும் உடன்பாடில்லை.

நான் உமது அடிமை. உமக்குச் சமமானவர்களை நீர் சோதிக்கலாம். அரக்கர்களைத் தண்டிக்கலாம். பக்தனான பிரகலாதன் போன்றவர்களுக்கு உதவி புரியலாம். என் போன்ற அடிமையிடத்து நீர் கடுமை காட்டுவது முறையல்லவே!

ஒரு சிறு குழந்தை அறியாமையால் தனது தாயைத் திட்டினாலும், அடித்தாலும் தாய் அதனைப் பொருட்படுத்துவதில்லை. அவள் குழந்தைக்கு புத்திமதி கூறுவாள். தாய் கோபம் கொண்டால் குழந்தை தந்தையிடம் அடைக்கலமாகும். தந்தை கோபம் கொண்டால் தாயிடம் அடைக்கலம் தேடும். ஆயின் எனக்குத் தாயும், தந்தையும் நீரே ஆவீர். நீரே என்னிடம் கோபம் கொண்டால் நான் யாரிடம் செல்வேன்? நீர் ‘தீனரக்ஷகன்’ என போற்றப்படுகிறீர். எனவே உமது குழந்தையான என்னை இவ்வுலகத் துன்பங்களிலிருந்து காக்க வேண்டும். புராணங்கள் உம்மை ‘அன்பின் திருவுரு’ எனப் போற்றுகின்றன. பிறகு என் பிரார்த்தனைகள் ஏன் செவிடன் காதில் ஓதியது போலானது என எனக்குப் புரியவில்லை. பெருமைக்குரியவரே! என் குறைகளைக் கேட்டால் கல்லும் கசிந்துருகுமே! உமது செவிகளில் மட்டும் ஏன் விழவில்லையோ அறியேன்!" என கங்காதர ஸரஸ்வதி குருவை நோக்கி நிந்தாஸ்துதி செய்து கொண்டிருக்கும்போது ஸ்ரீ குருவானவர், பாலூட்டும் நேரம் தனது கன்றை நோக்கி ஓடிவரும் பசு போன்று நாமதாரகனை அடைந்தார். அவரைக் கண்டதும் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, அவரது திருவடிகளில் படிந்திருக்கும் தூசுகளைத் தன் நீண்ட கேசத்தால் துடைத்து, அவரது திருவுருவை தனது இதயத்தாமரையில் வைத்து ‘ஷோடசோபசார பூஜை’ என்னும் 16 வகை உபசாரங்களுடன் வழிபட்டான்.

ஸ்ரீ குருவின் திருவுருவை ஆன்மாவில் பதித்துக் கொண்ட நாமதாரகன் எல்லையற்ற மகிழ்வோடிருந்தான்.

Å

2.  குருபக்தியின் மேன்மை

ஸ்ரீ குருவின் நினைவுகளோடு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருந்த நாமதாரகன், நடந்து களைப்புற்றதால் ஒரு மரத்தடியில் இளைப்பாற அமர்ந்து, அப்படியே உறக்கத்திலாழ்ந்தான். அவன் கனவில் தோன்றிய யோகீஸ்வரரான ஸ்ரீ குரு தனது நீண்ட கேசத்தை ஜடாமுடியாக முடிந்து கொண்டிருந்தார். இடையில் புலித்தோலையும், பீதாம்பரத்தையும் அணிந்து கொண்டிருந்தார். உடல் முழுவதும் விபூதி பூச்சினால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இத்தெய்வீகத் திருவுரு, நாமதாரகன் அருகில் அமர்ந்து அவனது நெற்றியில் விபூதி பூசி ஆசி கூறி அபயமளித்தார்.

கனவு கலைந்து விழித்துக் கொண்ட பின்பும் அக்கனவு தோற்றுவித்த இனிய உணர்வு அவனை ஆட்கொள்ள, கனவில் கண்ட திருவுருவை எண்ணியவாறே மீண்டும் நாமதாரகன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

சிறிது தூரமே நடந்த நாமதாரகன் தன் கனவில் கண்ட திருவுரு எதிர்திசையிலிருந்து தன்னை நோக்கி வருவதைக் கண்டான். அவரைப் பணிந்த அவன், முனிவருள் சிறந்தவரே! என்னை மேலெழுப்புங்கள்! அஞ்ஞான இருளகற்றும் உங்கள் தரிசனத்தால் என் பாவங்கள் தொலைந்தன! என்னைக் காக்கவே வந்தீர்களா? தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்! தங்களின் திருநாமம் யாது? தயை கூர்ந்து எனக்குச் சொல்லுங்கள் என வினவினான்.

நாமதாரகனின் இந்த அன்பான வேண்டுதலைக் கேட்ட துறவி அவனை அன்புடன் நோக்கி, நான் சித்தன். மூவுலகங்களிலும் சஞ்சரிப்பவன். இவ்வுலகோரால் நன்கு அறியப்பட்ட நரசிம்ம ஸரஸ்வதி எந்தன் குரு. அமரஜா சங்கமத்திலுள்ள காணுகாபுரத்தில் மும்மூர்த்திகளின் அம்சமான இவர் வசிக்கின்றார். பக்தர்களின் துயர் துடைக்கவும், முனிவர்களுக்கு மோக்ஷம் நல்கவுமே இந்த அவதாரம் நிகழ்ந்துள்ளது. கருணைக் கடலான இவர் மக்களின் விருப்பங்கள் யாவற்றையும் நிறைவேற்றுபவர். ஆரோக்யம், செல்வம், மகிழ்ச்சி என எல்லாமும் கொடுக்க வல்லவர். இவரது பக்தர்கள் ஏழ்மையை அறியாதவர்கள். பர மற்றும் அபர ஞானத்தினை எளிதில் அடைந்தவர்கள்.

குருவின் மஹிமையை சித்தர் சொல்லக் கேட்ட நாமதாரகன், ஐயனே! தாங்கள் கூறியபடி குருவின் பெருமை உலகறிந்த ஒன்று! பல தலைமுறைகளாக எங்கள் குடும்பமும் குருவினை வழிபட்டு வருகின்றது. ஆயினும் வாட்டும் வறுமையும், துரத்தும் துன்பமும் என்னை விட்டு நீங்கவில்லை! என்னைக் காக்க வந்திருக்கும் நீரே எனது ஐயங்களைக் களைய வேண்டும்!

நாமதாரகனின் இவ்வேண்டுகோளைக் கேட்ட சித்தர், குருவின் அருள் வேறுபாடின்றி யாவருக்கும் ஒன்று போலவே கிட்டும். அவரே உலகின் காப்பாளர்! அவரை அண்டிய எவருக்கும் ஏழ்மை என்பது இருப்பதில்லை! கடவுளர்கள் யாவரும் அவரின் பக்தர்களைச் சரணடைகின்றனர்! இவர்கள் காலத்தையும் (காலன்) வெல்லக் கூடியவர்கள். அந்த பரமாத்மாவை வழிபட்ட பின்னும் நீ உன்னை ஆதரவற்ற ஏழையென உணர்ந்தால் அதற்குக் காரணம், உனக்கு முழுமையாக குருவினிடம் நம்பிக்கை இல்லாமையே ஆகும். குருவே மூன்று புருஷார்த்தங்களின் இருப்பிடம். ஒரே மனதினனாய் அவரையே உனது காக்கும் கடவுளாய் வழிபட வேண்டும். ஹரியும், ஹரனும் கோபப்பட்டால் ஸ்ரீ குரு உன்னைக் காத்து ரக்ஷிப்பார். ஆயின் ஸ்ரீ குருவின் அதிருப்திக்கு ஆளான ஒருவனை மும்மூர்த்திகளாலும் காக்க இயலாது என்பதை அறிவாயாக!

ஸ்ரீ குருவின் அற்புத குணங்களை செவிமடுத்த நாமதாரகன், என் ஐயத்தைப் போக்கியருள வேண்டும் ஐயனே! மும்மூர்த்திகளும் ஒரே வடிவுதாங்கி குருவாக ஏன் அவதரிக்க வேண்டும்? ஈசனும், திருமாலும் கோபித்துக் கொண்டாலும் ஸ்ரீ குரு நம்மைக் காப்பார் என்று கூறினீர்களே! அது எவருடைய சொற்கள்? இதற்கான ஆதாரம் யாது? எனத் தெளிவுபடுத்தி எனக்கு மேலும் ஸ்ரீ குருவின் பால் திடபக்தி ஏற்பட அருள்புரியுங்கள்! என காலில் பணிந்து வேண்டி நின்றான்.

நாமதாரகனின் சொற்களைக் கேட்டு மகிழ்வுற்ற சித்தர், உந்தன் வினாக்களுக்கு நான் வேதத்தை ஆதாரமாகக் கொண்டு பதிலுரைக்கிறேன். கவனமாகக் கேட்பாயாக! என கூறத் தொடங்கினார்.

முதலில் நான்முகனின் முகங்களிலிருந்து நான்கு வேதங்கள் தோன்றின. பின்பு பதினெட்டு புராணங்கள் தோன்றின. இவற்றுள், ‘பிரம்ம வைவர்த புராணம்’ எல்லோரும் அறிந்த ஒன்று. பிரம்மனால் கூறப்பட்ட கதைகளான இதனை இப்போது நான் உனக்குக் கூறுகின்றேன். இது நாரணனின் அவதாரம் என போற்றப்படும் வேத வியாசரால் முனிவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது.

ஒரு சமயம் சதுர்யுகங்களின் முடிவில் ஏற்பட்ட மஹாபிரளயத்தில் உலகங்கள் யாவும் நீரில் மூழ்கின. அப்போது திருமால் ஓர் ஆலிலை மீது சிறு குழந்தை வடிவெடுத்து அந்நீரின்மேல் மிதந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மீண்டும் இவ்வுலகைத் தோற்றுவிக்கும் எண்ணம் தோன்றியது. உடனே அவரது சேதனா சக்தி விழித்து அவரது உந்தியில் ஓர் தாமரையாகப் பூத்தது. அதன் நடுவில் பிரம்மா வீற்றிருந்தார். அவர் நாற்புறமும் ஆர்வத்தோடு நோக்கவும் அவருக்கு நாற்புறங்களிலும் முகங்கள் தோன்றின. இதனால் ‘நான்முகன்’ என அழைக்கப்பட்டார். விஷ்ணுவின் இருப்பினை உணராத நான்முகன் நாற்புறங்களிலும் யாரும் காணப்படாததால் தானே உயர்ந்தவர், உறுதியானவர் என எண்ணத் தலைப்பட்டார். அவரின் எண்ணங்களை அறிந்த விஷ்ணு தமது இருப்பை உணர்த்த, தாமே இவ்வுலகங்களுக்கு இறைவன் எனவும், பிரம்மாவைப் படைத்ததும் தாமே ஆதலால், தம்மை வணங்குமாறு கூறவும் நான்முகனும் மனதார இறைவனை பலவாறு துதித்தார். இதனால் மனம் மகிழ்ந்த திருமால் இவ்வுலகைப் படைக்குமாறு பிரம்மாவிற்கு ஆணையிட்டார். இதைக் கேட்ட நான்முகன், கடவுளர்க்கெல்லாம் கடவுளே! படைப்புத் தொழில் பற்றி நான் ஏதுமறியேன்! அதைக் கண்டதும் இல்லை! எனவே இம்மாபெரும் செயலைச் செய்ய எனக்கு அறிவும், ஆற்றலும் நல்க வேண்டும் என்று பணிவோடு விண்ணப்பித்தார். அவரின் வேண்டுதலை செவிமடுத்த விஷ்ணு, நான்முகனின் முகங்களிலிருந்து நான்கு வேதங்களைத் தோற்றுவித்து அதை அவருக்குக் கொடுத்தார். அநாதியான இந்த வேதத்தில் படைப்புக்குத் தேவையான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. குருவின் மறுவுருவான இவற்றின் துணை கொண்டு படைப்புத் தொழிலைத் தொடங்கு என ஆணையிட்டார்.

பிறகு பிரம்மா படைக்கும் தொழிலைத் தொடங்கினார். முதலில் (வியர்வையிலிருந்து பிறக்கும்) ஸ்வேதஜா என்பவற்றையும், பின் அண்டஜா (முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை) என்பவற்றையும், அதன்பிறகு ஜாரஜா (குட்டி போட்டுப் பால் கொடுப்பவை) என்பவற்றையும், இறுதியில் உத்பீஜா (பூமியைப் பிளந்து மேலெழுபவையாகிய மரம், செடி, கொடி) என்பவற்றையும் படைத்தார். பிறகு இறைவனின் ஆணைப்படி பூவுலகம், ஸ்வர்கம், பாதாளம் ஆகியனவும் படைத்தார்.

அதன் பிறகு நிர்குண பிரம்ம உபாஸகர்களான சனகாதி முனிவர்களையும், சகுண பிரம்ம உபாஸகர்களாகிய மரீசி முதலான ரிஷிகளையும் படைத்தார். பின் கிருத, திரேதா, துவாபர, கலி என்னும் தனித்தன்மைகள் கொண்ட நான்கு யுகங்களையும் படைத்து, அவர்களை ஒவ்வொருவராக பூமிக்குச் சென்று அங்கு வாழும் மக்களிடையே தங்களின் தனித்தன்மையைக் கொண்டு தாக்கத்தை உண்டாக்குமாறு ஆணையிட்டார்.

முதலில் கிருத யுகமானது புறப்பட்டது. நேர்மை, பக்தி, ஞானம், வைராக்யம் போன்ற தன்மைகளைக் கொண்ட இப்புருஷன் யஜ்ஞோபவீதம் எனப்படும் முப்புரி நூலைத் தரித்து, ருத்ராக்ஷ மாலை மற்றும் கங்கணங்களை அணிந்திருந்தான். இவன் பிரம்மனைப் பணிந்து, ஐயனே! நீர் என்னை பூவுலகுக்குச் சென்று எனது தனித்தன்மையை மக்களிடையே பரவச் செய்ய வேண்டும் எனக் கூறினீர். ஆயின், இவ்வுலக மக்கள் உண்மையற்றவர்களாயும், நன்றி மறந்தவர்களாயும், ஒருவரை மற்றவர் தாழ்த்தியும், இகழ்ந்தும் பேசுகின்றவராய் இருக்கின்றனர். இத்தகைய துன்மார்கம் என்னால் பொறுக்க இயலவில்லை! பிறகு இம்மக்களிடையே என் பண்புகளைக் கொண்டு ஒரு தாக்கத்தை நான் எவ்வாறு உண்டாக்குவேன்? என வினவினான். பிரம்மனும் அவனிடம், உந்தன் உயர்ந்த குணங்களைக் கொண்டு இவ்வுலகில் நிலையான நல்ல மாற்றத்தை ஏற்படுத்த இயலாது! எனினும் நீ மனம் கலங்காது குறிப்பிட்ட காலம் வரை அங்கு உன் கடமையைச் செய்வாயாக. அதன்பின் அடுத்த யுகத்தினை நான் விரைவாக அனுப்புகிறேன் என்று கூறினார்.

கிருத யுகமும் நான்முகன் ஆணைப்படி நடக்கலாயிற்று. அதன் காலம் முடிந்ததும் அடுத்து திரேதா யுகம் புறப்பட்டது. இப்புருஷன் மிகவும் வலிமைமிக்கவனாக கையில் ஓர் கோடாரி மற்றும் வேள்வி செய்வதற்கான பொருள்களோடு வந்தான். இந்த யுகத்தில் கடமையாற்றுவது முதன்மையாகக் கருதப்பட்டது. வேள்விகள் நிகழ்த்தப்பட்டன. இச்சமயத்தில் இறைவன் விஷ்ணு, ராமனாக அவதரித்து உத்தம குணங்கள் நிறைந்த புருஷோத்தமனாக இந்த யுகத்தின் தன்மைகளை சுருக்கி வாழ்ந்து காட்டினார்.

அடுத்து துவாபர யுகம் புறப்பட்டது. இப்புருஷன் தன் கைகளில் முறையே கத்தி, சூலம் மற்றும் வில், அம்பு ஆகியவற்றை ஏந்தியிருந்தான். வேறுபட்ட இரு பண்புகளான கொடூரம் மற்றும் கருணை, அன்பு மற்றும் கடுமை ஆகியவை சமமாகப் பெற்று விளங்கினான். நன்மையும், தீமையும் சரிசமமாகப் பெற்ற இவன் பூமிக்கு வந்த சமயம் பகவான் நாராயணன், ஸ்ரீ க்ருஷ்ணனாக அவதரித்து, உலகில் அநீதியை எவ்வாறு எதிர்ப்பது எனக் காண்பித்தான்.

துவாபர யுகம் முடியும் தருவாயில் பிரம்மா, கலியுகத்தை அனுப்ப எண்ணி கலி புருஷனை அழைத்தார். இவன் கொடுமையான அரக்க குணம் கொண்டவனாகவும், பேய் போன்ற தோற்றம் கொண்டவனாயும், தர்மத்திற்கு புறம்பான கீழ்த்தரமான பாடலைப் பாடிக் கொண்டு, கொடூரமாயும் சண்டை சச்சரவுகளை விரும்புபவனாய், வெறுக்கத்தக்கவனாய், ஒரு கையால் பிறப்புறுப்பினையும், மற்றொரு கையால் நாவையும் பிடித்துக் கொண்டு தடுமாறிய வண்ணம் நான்முகன் முன்பு வந்தான்.

இவனுடைய இக்கோலத்தைக் கண்டு அதிசயித்த பிரம்மா, நீ இவ்வாறு வருவதன் காரணம் என்ன? என வினவவும், கலியானவன் நான் இவ்விரண்டு உறுப்புகளின் சக்தியால் இவ்வுலகை என் வழிக்கு மாற்றுவேன். இவ்விரு உறுப்புகளையும் அடக்குபவர் மட்டுமே என்னை வெற்றி கொள்ள இயலும். எங்கும், எதற்கும் எனக்கு பயம் என்பது கிடையாது. நற்செயல்களைத் தடுத்து மனம் போனபடி திரிதல் என் இயல்பு. ‘பேரின்பம்’ போன்ற விஷயங்களை நான் நம்புவதில்லை. உறக்கமும், சண்டைச் சச்சரவுமே எனது வாழ்வு. பிறர் பொருளை அபகரிப்பவனும், விபசாரம் செய்பவனும் எனது உறவினர். நடுநிலைமையற்றவன், பொறாமை மற்றும் செயற்கைத் தன்மையோடிருப்பவன் எனது உயிர் நண்பர்கள். துறவிகள் போல் நடிப்பவனும், பிறரை ஏமாற்றிப் பிழைப்பவனும் என் வாழ்நாள் நண்பர்கள். தெய்வ நம்பிக்கை, நன்னடத்தை மற்றும் நற்குணங்கள் நிரம்பியவன் எனது பரம விரோதி ஆவான்.

இவ்வாறு கலி தன்னைப் பற்றிக் கூறக் கேட்ட நான்முகன், ஓ கலியே! கழிந்த யுகங்களில் மனிதர்கள் நீண்ட ஆயுளைப் பெற்றிருந்ததால் தெய்வபக்தி, தவம் மற்றும் அனுஷ்டானங்களுக்கு அதிக காலத்தை செலவிட்டு முக்தி அடைந்தனர். ஆயின் உனது யுகத்தில் சராசரி மனிதனின் வயது 100 வருடங்கள் மட்டுமே! எனவே இக்குறுகிய காலத்தில் இவர்கள் தெய்வபக்தி மற்றும் அனுஷ்டானங்கள் வாயிலாக முக்தியடைய இயலும். நீ இத்தகைய நல்லவர்களை விட்டு விலகி இருத்தல் வேண்டும் என்று கூறினார்.

கரம் குவித்து வணங்கிய கலி, ஐயனே! நீங்கள் குறிப்பிட்டவர்கள் எனது பரம விரோதிகள். மேலும் 500 வேறுபட்ட உலகங்களிலும் பாரதம் புண்ய பூமியாகும். அங்கே நான் காலடி வைத்ததுமே முறியடிக்கப்படுவேன்! எவ்வாறு நான் அங்கு போவேன்? என வினவினான்.

அதற்கு நான்முகன், நீ மனதை குழப்புகின்ற காலாத்மாவின் துணைகொண்டு அங்கு செல்க! இது மனிதனின் தெய்வபக்தி மற்றும் நன்னடத்தைகளை அழிக்கக் கூடியது எனக் கூறவும், கலி மேலும் கூறலானான். ஐயா! என் விரோதிகளின் தன்மையினை அறிக! சிவ, ஹரி நாமங்களை ஜபிப்பவனும், தெய்வ பக்தியும், நன்னடத்தை கொண்டவனும், என்னைக் கடும் வேதனைக்கு உட்படுத்துபவன். கங்கைக் கரையில் வாழ்பவர்களும், காசி யாத்திரை போன்ற புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்பவரும், ஏழைகளுக்கு தானம் கொடுப்பவரும், புராணக் கதைகளைக் கேட்பவரும், பேசுபவரும் எனக்கு எதிரிகள். இயற்கையிலேயே அமைதியானவரும், அன்பான இதயம் கொண்டவரும், பெருந்தன்மை மிக்கவரும், தீனர்களுக்கு உழைப்பவரும், கொடைத்தன்மை உடையவரும், கடவுளை தியானிப்பவரும் எனக்கு மரண பயத்தை உண்டாக்குபவர். இவ்வுலக இன்பங்களில் மூழ்கியிருப்பவர்களும், தெய்வ நிந்தனை செய்பவரும், சுயநலம் மிக்கவரும் எனக்கு உற்ற தோழர்கள். இந்த்ரியங்களை வென்றவனும், ஹரி, ஹர த்யானம் செய்பவனும், ராக த்வேஷங்களைக் கடந்தவர்களும், ஞானிகளும் எனக்குக் கவலையைக் கொடுப்பவராவர். இவர்களைக் கண்டு நான் அஞ்சுகிறேன் இவ்வாறு கலி புருஷன் கூறியதும் பிரம்மாவானவர், உனது அபரிமிதமான சக்தியால் நீ பூவுலகில் நுழைந்த கணத்திலிருந்தே மக்கள் உன்னை பின்பற்றத் தொடங்குவர். ஒரு சில ஞானவான்கள் உனது சக்தியை எதிர்க்கக்கூடும். அவர்களுக்கு நீ உதவுவாயாக! எனவும், கலியானவன் இயற்கையில் நான் கொடிய சுபாவம் உடையவன். அதர்மவானான நான் தர்ம மார்க்கத்திலுள்ளவர்களை எங்ஙனம் அடையாளம் காண்பது? அவர்களின் பாதையிலிருந்து நான் விலகியிருக்க வழி ஒன்றை தாங்களே கூற வேண்டும் என விண்ணப்பித்தான்.

பிரம்ம தேவரும், "காலம் மற்றும் போரும் உருவமற்ற உனது உதவியாளர்கள். உனக்கு அணுக்கமானவர்கள். புண்யவான்கள் உனது பகைவர்கள். அவர்கள் உனது கொடுமையை எதிர்த்து உன்னை வெற்றி கொள்வர். இத்தகையவர் ஈசனோடு ஒன்றிக் கலப்பர். ஆயின் பெரும்பான்மை மக்கள் உனது கொடுமையை எதிர்க்க வல்லமையற்று உன்னால் ஆட்கொள்ளப்படுவர்.

இச்சொற்களைக் கேட்ட கலி, ஓ அறிவிற் சிறந்தவரே! தவயோகியரின் தன்மைகளையும், அவர்களுக்குரிய சின்னங்களைப் பற்றியும் எனக்குக் கூறுங்கள் எனக் கேட்டான். பிரம்மாவும், கலியே! கவனமாகக் கேள்! நேர்மையோடும், தைரியத்தோடும் வாழ்பவர்களிடம் உனது சக்தி பயனற்றுப் போகும். ஹரிஹரனிடம் பக்தி பூண்டவர், காசியில் வசிப்பவர், குருவிற்குப் பணிவிடை செய்வோர், தாய் தந்தையரைப் பேணிப் பாதுகாப்பவர், பிராம்மணர்களுக்குச் சேவை புரிபவர், காயத்ரி, பசு மற்றும் துளசி வழிபாடு செய்வோர் ஆகியோர் உன்னால் தீண்டப்பட மாட்டார்கள். மேலும், குரு சேவை, புனித கிரந்தங்கள் படித்தல், கேட்டல், குரு வழிபாட்டினை குல வழக்கமாகச் செய்தல், நன்னடத்தை, தெய்வ வழிபாடு ஆகியன கொண்டோரை நீ துன்புறுத்தக் கூடாது என்பது எனது கட்டளையாகும்! என்று கூறவும், கலியும் அவரைப் பணிந்து, ஐயா! குரு என்ற சொல்லின் பொருள் மற்றும் உட்கருத்து யாது? அவரின் வடிவம் எத்தகையது? அவர் யார்? என்பவற்றை தெளிவாக எனக்கு உரைப்பீராக! என வேண்டினான்.

இதற்கு பிரம்மாவானவர், "குரு என்ற சொல்லிலுள்ள ‘கு’ என்ற எழுத்து சித்தியளிக்கும். ‘ரு’ என்ற எழுத்து பாவங்களைப் போக்கும். எனவே பிரம்மா, விஷ்ணு, சதாசிவனின் உண்மையான ஓர் வடிவே ‘குரு’ ஆவார்.

‘கணேசோ’ வாக்னினா யுக்தோ விஷ்ணுனா

- ச ஸமன்வித -

வர்ணத்வயாத்மகோ மந்த்ர சதுர்வர்க பலப்ரதா’

‘குரு’ என்னும் இரண்டெழுத்து மந்திரம் கணேசர், அக்னி மற்றும் விஷ்ணு ஆகியோரின் பெயர்களை உள்ளடக்கியுள்ளது. இரு கூட்டெழுத்துடனான இது அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேரினையும் கொடுக்கவல்லது.

குரு: பிதா குருர்மாதா குருதேவோ பர:சி’வா

சி’வருஷ்டே குருஸ்த்ராதா குரோருஷ்டே ந கச்’சன ||

பொருள்: குருவே அன்னை, தந்தை, அந்த சிவபெருமானுமாவார். சிவன் கோபம் கொண்டால் குரு காப்பாற்றுவார். ஆயின் குரு கோபம் கொண்டால் யாராலும் காக்க இயலாது.

குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு குருதேவோ மஹேச்’வர:

குருஸாக்ஷாத் பரம்தத்த்வம் தஸ்மாத் குரும் உபாச்’ரயேத் ||

பொருள்: குருவே பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரர் மற்றும் பரதத்வம். எனவே குருவை சரண் அடைய வேண்டும்.

ஹரௌ ப்ரஸன்னேபி ச வைஷ்ணவா ஜனா:

ஸம்ப்ராப்தயந்தே குருபக்திமவ்யயம் |

குரௌ ப்ரஸன்னே ஜகதாம் அதீச்’வர:

ஜனார்தனஸ்துஷ்யதி ஸர்வஸித்தித: ||

பொருள்: தன்னைப் போற்றும் அடியவர்களிடம் மகிழ்ச்சி கொள்ளும் இறைவன் அவர்களுக்கு ஓர் ஸத்குருவைக் காட்டி அவரிடம் பக்தியும் அருள்வான். ஆயின் குரு மகிழ்ச்சி அடைந்தால்தான் உலக நாதனான இறைவனையே அடைவிப்பார்.

குரும் பஜன் சா’ஸ்த்ரமார்கான் ப்ரவேத்தி

தீர்த்தம் வ்ரதம் யோகதாபாதி த்ருமான் |

ஆசார வர்ணாதி விவேக யஜ்ஞான்

ஜ்ஞானம் பரம் பக்தி விராக யுக்தம் ||

பொருள்: குருவைப் பூஜித்தால் ஒருவர் தீர்த்த யாத்திரை, விரதங்கள், யோகம், தவம், தர்மம், வர்ண ஆசாரம், விவேகம், வேள்வி, ஞானம், பரம பக்தி, வைராக்யம், ஆகியன செய்வதாலுண்டாகும் பலன்கள் யாவற்றையும் பூரணமாகப் பெறலாம்.

இவ்வாறு குரு மகிமைகளை பிரம்மா கூறக் கேட்ட கலி, ஐயனே! சாதாரண மானுடனான குரு எவ்வாறு கடவுளுக்கு நிகராக இயலும் என்பதனை எனக்கு விளக்குங்கள் எனக் கேட்டான். பிரம்மாவும், "ஓ கலியே! குருவைத் தவிர முக்திக்கு வேறு வழியேதும் கிடையாது!

குரும் வினா: ச்’ரவணம்

பவேத் கஸ்யாபி சா’ஸ்த்ரஸ்ய

ச்’ரவணம் தத் குதோ பவேத் ||

பொருள்: குரு இல்லாது சாஸ்த்ரங்கள் எதையும் கற்க இயலாது. சாஸ்திரங்களைக் கேட்பதால் மட்டுமே மனிதன் இப்பிறவிச் சுழலிலிருந்து விடுபட இயலும். ஞான ஒளிக்கு குருவே ஆதாரமாகையால் குருவைச் சரணடைந்தும், அவருக்கு சேவை செய்தும் சித்தி அடையலாம் என்று கூறியபின் கதை ஒன்றையும் கூறினார்.

கோதாவரி நதிக்கரையில் பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களுள் ‘வேததர்மா’ என்ற முனிவரும் ஒருவர். இவரிடம் பல மாணவர்கள் குருகுல வாசம் செய்தவாறு வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றைப் பயின்று வந்தனர். ஒரு சமயம் குருவானவர் அவர்களை அழைத்து, என் மீது அன்பும், மரியாதையும் இருக்குமானால் நான் சொல்வதைக் கேட்பீர்களாக!’ என்று கூறவும் மாணாக்கர்கள், ஐயனே! தாங்கள் எங்களைக் கரையேற்றவே அவதரித்திருக்கிறீர்கள்! தாங்கள் எது சொன்னாலும் கேட்போம். இல்லையெனில் நரகம் புகுந்து இடர்பட்டு அஞ்ஞான இருளில் மூழ்கிவிடுவோம். முக்தி என்பது எப்போதும் கிட்டாது. இதனாலேயே வேதங்கள் குருவை ‘தாரகன்’ என இயம்புகின்றன என்று கூறவும் மகிழ்ந்த குரு, எனது முற்பிறப்பில் நான் மிகப்பெரிய பாவங்களைச் செய்திருக்கிறேன். எனது தவம் மற்றும் வழிபாடுகளால் பெருமளவும் பாவம் குறைந்த போதும் இன்னும் அனுபவித்துக் கழிக்க வேண்டிய பாவங்கள் உள்ளன. இவை எனது மோக்ஷ மார்க்கத்திற்குத் தடையாக இருப்பதால் இவற்றை இப்பிறவியில் நான் அனுபவித்துவிட நிச்சயித்திருக்கிறேன். அதற்கு நான் காசிக்குச் சென்று, பல நோய்களை வரவழைத்துக் கொள்வேன். அது சமயம் என்னை பாதுகாக்க உங்களுள் யாரேனும் ஒருவர் மனமுவந்து என்னுடன் வரவேண்டும்" எனவும் மாணவர்களுள் சாந்தீபகன் என்பவன் உடனடியாக குருவுடன் செல்ல சம்மதித்தான். மேலும் அவன் தனது குருவிற்கு வரப்போகும் துன்பங்களைத் தானே மனமுவந்து ஏற்பதாகவும் கூறினான். எனினும் வேததர்மா அதனை மறுத்துவிட்டார். தானே துன்பங்களை அனுபவிக்காவிட்டால் மீண்டும் பிறக்க நேரும் என்பதால் தனக்கு உதவியாக 21 ஆண்டுகள் தன்னைப் பாதுகாக்க தன்னுடன் இருக்க வேண்டும் எனவும் கூறித் தன்னுடன் காசிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சென்று மணிகர்ணிகையில் மூழ்கி விஸ்வநாதரைத் தரிசித்தபின் வேததர்மா தனது உடலில் தொழுநோயை வரவழைத்துக் கொண்டார். கண்களும் குருடாகிப் போயின. நாட்கள் செல்லச் செல்ல நோய் முற்றி புண்களில் கிருமிகள் மொய்த்தன. சீழ் வடிந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. சாந்தீபகன் கண்ணும் கருத்துமாய் குருவிற்கு பணிவிடை செய்து கொண்டிருந்தான். நோய்க் கொடுமையால் உண்டான குருவின் கோபதாபங்களையும் ஏச்சு பேச்சுகளையும் ஒரு பொருட்டாகக் கொள்ளாது விஸ்வநாதரின் தரிசனத்திற்காகக் கூட கோவிலுக்குச் செல்லாது அயராது பணிவிடை செய்தான்.

‘ந தீர்த்த யாத்ரா ந ச தேவயாத்ரா

ந தேஹ யாத்ரா ந ச லோக யாத்ரா |

அஹர்நிச’ம் ப்ரஹ்ம ச’ரீர பூத்யா

குரும் ப்ரஸன்னோஹி ஸேவ்யமன்யத் ||

பொருள்: உண்மையான மாணவன் குரு சேவையிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறான். அவன் தீர்த்த யாத்திரை, கோயிலுக்கு செல்வது, புனித யாத்திரை, மஹான்களின் தரிசனம் போன்ற முக்தி தரும் எதையும் விரும்புவதில்லை.

தன்னுடைய சுகத்தைக் கருதாமல் ஊண் உறக்கமின்றி இரவும், பகலும் குருவின் சேவையிலேயே தன்னை அர்ப்பணித்த அந்த உயர்ந்த மாணவனாகிய சாந்தீபகனின் தொண்டில்

Enjoying the preview?
Page 1 of 1