Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaaththiyaaramma
Vaaththiyaaramma
Vaaththiyaaramma
Ebook59 pages18 minutes

Vaaththiyaaramma

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By P.T. Samy
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466480
Vaaththiyaaramma

Related to Vaaththiyaaramma

Related ebooks

Related categories

Reviews for Vaaththiyaaramma

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaaththiyaaramma - P.T.Samy

    7

    1

    "மஞ்சுளாம்மா! உங்களை அழைத்து வரும்படி ஹெட்மாஸ்டர் ஐயா சொன்னார்," என்று பியூன் கூறியதும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த மஞ்சுளா, எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டு தலைமை ஆசிரியரின் அறைக்கு வந்தாள்.

    வாத்தியாரம்மா மஞ்சுளா கலியாணம் செய்து கொள்ளாத கன்னிப் பெண்தான். ஆனால் அந்த அம்மாளுக்கு வயது மட்டும் முப்பது ஆகிவிட்டது. இருந்தாலும் இளமையின் வேகம் கொஞ்சமும் குறையாதவளைப் போல் காட்சியளித்தாள்.

    அவள் தன்னை ஆடம்பரமாக அலங்காரம் செய்து கொண்டிருக்கவில்லை. இளம் நீல நிறத்தையுடைய நூல் புடைவையும், சாதாரண வெள்ளை ஜாக்கெட்டும் அவளுடைய சதைப் பிடிப்பான உடலைத் தழுவி நின்றன. முகத்தில் சாதாரணமான அமைதி குடி கொண்டிருந்தது.

    சாந்தமே உருவாய் நின்று கொண்டிருக்கும் அந்த அமைதியின் உருவத்தை நிமிர்ந்து பார்த்த தலைமை ஆசிரியர் அவளிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு, உங்களுக்கு உத்தியோக உயர்வு கிடைத்திருக்கிறது! என்று சொன்னார்.

    உத்தியோக உயர்வா? எனக்கா? - மஞ்சுளா அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. பட்ட பாட்டுக்கேற்ற பலன் கைமேல் கிடைக்கும்போதுதானே ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடைவார்கள்.

    அதுவும் நீங்கள் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள ஒரு பள்ளிக்குத் தலைமை ஆசிரியர்.

    மஞ்சுளா மிகுந்த ஆவலுடன் உறையைக் கிழித்து உள்ளே இருந்த கடிதத்தை எடுத்துப் படித்தாள். உடனே அவளுடைய முகத்தில் அதிருப்தியை உண்டு பண்ணும் சலனம் படர்ந்தது.

    அதைக் கவனித்த தலைமை ஆசிரியர், ஏன்... உங்கள் முகம் என்னவோ போலாகிவிட்டது? தலைமை ஆசிரியை உத்தியோகம் பிடிக்கவில்லையா? என்று கேட்டார்.

    பதவி உயர்வின் மூலம் மாணவர்களுக்கு அதிக சேவை செய்யலாம் என்பது உண்மைதான். ஆனால் என்னைச் சென்னைக்கு மாற்றியிருக்கிறார்களே என்றுதான் யோசிக்கிறேன்.

    மஞ்சுளாவின் குரல் கரகரத்தது.

    ஏன்...! செங்கல்பட்டைவிடச் சென்னை எவ்வளவோ மேலான இடமாயிற்றே. கல்வித் தரத்திலும் சென்னை உயர்ந்தே இருக்கிறது.

    நீங்கள் சொல்லுவது உண்மைதான், ஆனால் சென்னையை நான் அறவே விரும்பவில்லை. இங்கேதான் எனக்கு ஓரளவு நிம்மதியும் அமைதியும் இருக்கிறது.

    சென்னையில் ஏன் இந்த அமைதியும் நிம்மதியும் கிடைக்காது என்று சொல்லுகிறீர்கள்?

    அது எனக்குப் புதிய இடம். எப்பொழுதும் பழகிய இடம்தானே நல்லது. பழகியவர்களின் மத்தியில் பொழுது போக்குவதில்தான் எனக்கு நிரந்தரமான அமைதி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

    உங்கள் சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் மேலதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டியது உங்கள் கடமை.

    அதன் பிறகுதான் தலைமை ஆசிரியரிடம் முட்டாள்தனமாகப் பேசிவிட்டோமே என்று நினைத்து வருந்தினாள் மஞ்சுளா.

    அவர் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்? தன் மீது அவர் வைத்திருக்கும் அபிமானம் வீணாகியிருக்கும்.

    உண்மைதான் ஸார், சென்னை எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நான் இப்படிப் பேசியது தப்பு. அதை நினைத்து உளம் வருந்துகிறேன். கடமையைச் செய்வதற்கு எந்த இடமாக இருந்தால் என்ன?

    மஞ்சுளா கடிதத்தை மடித்து உறையினுள் வைத்து விட்டுத் தன்னுடைய

    Enjoying the preview?
    Page 1 of 1