Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kumbakonam Vakkil Part 2
Kumbakonam Vakkil Part 2
Kumbakonam Vakkil Part 2
Ebook470 pages3 hours

Kumbakonam Vakkil Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, ஒவ்வொன்றிற்கும் ஒரு சிக்கலை உருவாக்கி, அந்தச் சிக்கலை சிறிதளவு கூட சிக்கல் இல்லாமல் சிக்கலைத் தீர்த்து வைக்கும் பாணியே தனி.

வடுவூராரின் கதாபாத்திர படைப்புகளில் திகம்பரசாமியாரின் படைப்பு மிக மிக அபாரமானது; பிரசித்தி பெற்றது. திகம்பர சாமியார் என்ற திரைப்படம் வெளிவந்து நூறு நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக அந்நாளில் ஓடியது என்றால் இதன் பிரசித்தத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

பரபரப்பு குறையாமல், அந்த பரபரப்புக்கு என்று நிகழ்ச்சிகளைத் தொடுக்காமல், ஆபாசமில்லாமல், ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, அபத்தங்களைக் கொட்டாமல், முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை விறுவிறுப்பைக் குறைக்காமல், நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சியாக உருவாக்கி, புத்திசாலித்தனமாக, சாதுர்யமாக கதாபாத்திரங்களைப் பேச விட்டு, சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் எப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது... போன்ற அற்புதமான தகவல்களைச் சொல்லும் நாவல்கள்தான் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல்கள். இவருடைய கதைகளில் காதல் காட்சியும் வரும், கோர்ட் சீனும் வரும், போலீஸ் நடவடிக்கைகளும் வரும், மருத்துவரின் சேவையும் வரும் - இப்படி அநேகமாக எல்லாத் தரப்பு மனிதர்களின் மேன்மையைப் பற்றியும் சொல்வார்.

மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட ‘திகம்பர சாமியார்’ இவருடைய பாத்திரப் படைப்பு. திகம்பர சாமியாரின் அறிவு அளவிட முடியாதது. மிகவும் புத்திசாலியானவர். தன்னுடைய ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும், செயலிலும் பல்லாயிரக்கணக்கான அர்த்தங்களை யூகிக்க வைப்பார். இவருடைய ஒவ்வொரு நாவலும், ஒன்றை ஒன்று மிஞ்சி நிற்கிறது.

Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580131805507
Kumbakonam Vakkil Part 2

Read more from Vaduvoor K. Duraiswamy Iyangar

Related to Kumbakonam Vakkil Part 2

Related ebooks

Reviews for Kumbakonam Vakkil Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kumbakonam Vakkil Part 2 - Vaduvoor K. Duraiswamy Iyangar

    http://www.pustaka.co.in

    கும்பகோணம் வக்கீல் பாகம் 2

    Kumbakonam Vakkil Part 2

    Author:

    வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

    Vaduvoor K. Duraiswamy Iyangar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaduvoor-k-duraiswamy-iyangar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    13-வது அதிகாரம்

    14-வது அதிகாரம்

    15-வது அதிகாரம்

    16-வது அதிகாரம்

    17-வது அதிகாரம்

    18-வது அதிகாரம்

    19-வது அதிகாரம்

    20-வது அதிகாரம்

    21-வது அதிகாரம்

    22-வது அதிகாரம்

    23-வது அதிகாரம்

    24-வது அதிகாரம்

    25-வது அதிகாரம்

    26-வது அதிகாரம்

    பின்னுரை

    கும்பகோணம் வக்கீல்

    அல்லது

    திகம்பரசாமியார்

    (இரண்டாம் பாகம்)

    வடுவூர் K. துரைசாமி ஐயங்கார், B.A.,

    13-வது அதிகாரம்

    சட்டைநாத பெருமாளுக்கும் பட்டைநாமம் சாத்தினார்

    ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றியது; சட்டைநாத பிள்ளை உள்ளே வருவதற்குள் தாம் ஏதாகிலும் தந்திரம் செய்து வெளியிற் போய்விடவேண்டுமென்னும் நினைவு திகம்பர சாமியாரது மனதில் உண்டாயிற்று. தாம் வெளியில் போகும் முன் சப்ஜட்ஜி தம்மைப்பற்றி சிறிதளவும் சந்தேகியாமல் இருக்க வேண்டுமென்னும் கவலைகொண்ட சாமியார் தமது மனக்குழப்பத்தையும், முகமாறுபாட்டையும் திறமையாக மறைத்துக் கொண்டவராய் புன்னகை பூத்த முகத்தோடு ஐயரை நோக்கி, நாளைக்கு வருவேன் என்று சொன்ன சட்டைநாத பிள்ளை இன்றைக்கே வந்து விட்டார் போல் இருக்கிறது. அவருடைய தம்பியின் கல்யாணம் இன்னமும் மூன்று நாட்களில் நடக்கப் போகிறது. தாமே நேரில் வந்து அதற்காகத் தங்களை அழைக்க வேண்டும் என்று அவர் சொன்னார். அதற்காகவே இப்போது அவர் வந்திருக்க வேண்டும் என்று கூறியவண்ணம் மெதுவாக எழுந்து ஜன்னலண்டை போய் நின்று கீழே பார்த்தார். சட்டைநாத பிள்ளையின் சாரட்டும், தம்மை ஏற்றிவந்த குதிரை வண்டியும் நின்று கொண்டிருக்கக் கண்டார்; சட்டைநாத பிள்ளை வாசலில் நின்று கொண்டிருந்தார்; மேலேயிருந்து சென்ற சேவகன் அப்போது அவரண்டையில் போய்ச் சேரவில்லை என்பதையும் உணர்ந்த சாமியார் ஐயரது பக்கம் திரும்பி, சரி; அவர் மாத்திரம் தனியாக வந்திருக்கிறார். பாக்கு வெற்றிலை பழம் முதலியவை எதுவும் காணப்படவில்லை. கல்யாண விஷயம் என்ன ஆயிற்றோ தெரியவில்லை, இந்த ஊர் வேலாயுதம் பிள்ளை தம்முடைய ஆள்களை ஏராளமாகத் திரட்டிக் கொண்டு போய் கும்பகோணத்தில் மறைந்திருப்பதாக ஒரு வதந்தி ஏற்பட்டு இருந்தது. அவர்கள் ஒரு வேளை பெண்ணை அபகரித்துக் கொண்டு வந்துவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை. பிள்ளையவர்களின் முகம்கூட வாட்டமடைந்து காணப்படுகிறது என்று கவலையோடு கூறினார். அதைக் கேட்ட ஐயர், அவ்வளவு பெரிய பட்டணத்தில் இவர்கள் அக்கிரமமாகப் பெண்ணை அபகரித்துக் கொண்டுவர முடியுமா? வக்கீல் அதற்குத் தகுந்த பந்தோபஸ்தோடு இருக்கமாட்டாரா? அந்த ஊரில் போலீசார் இல்லையா? நீங்கள் சொல்லுகிறபடி எதுவும் நடந்திருக்காது. அலங்காரத்தாச்சியின் விஷயம் வெளியானதைப் பற்றி ஒரு வேளை அவர் கவலை கொண்டிருப்பார். அதனால் அவர் முகம் வாட்டத்தைக் காண்பிக்கலாம் என்று கூறியவண்ணம் அவரும் தமது ஆசனத்தை விட்டு எழுந்து ஜன்னலண்டை போய்க் கீழே நோக்கினார். அப்போது சேவகன் வக்கீலிடத்தில் போய்ப் பேசியதையும், சட்டைநாத பிள்ளை வீட்டிற்குள் நுழைந்ததையும் இருவரும் கண்டனர். இன்னும் இரண்டொரு நிமிஷத்தில் வக்கீல் மேலே வந்து விடுவார் என்ற நினைவும் அச்சமும் சாமியாரது மனதில் எழுந்து வதைத்தன. அவர் ஐயரை நோக்கி, சரி; சட்டைநாதபிள்ளை தமது சொந்த சாரட்டிலேயே வந்திருக்கிறார். நானும் அதிலேயே போய்விடலாம். நான் ஏறிக்கொண்டு வந்த குதிரை வண்டி இனி தேவையில்லை. அவனுக்குச் சேரவேண்டிய கூலியைக் கொடுத்து அவனை அனுப்பிவிட்டு வருகிறேன் என்று கூற, ஐயர், சரி; அனுப்பிவிட்டு வாரும் என்றார். உடனே சாமியார் அவ்விடத்தை விட்டு சந்தேகத்திற்கு இடமின்றி மெல்ல வெளிப்பட்டு, படிகளுக்கு வந்து இரண்டு மூன்று படிகள் வரையில் சாதாரணமாக நடந்து அதன் பிறகு தடதடவென்று பாய்ந்து ஒரே நிமிஷத்தில் கீழே இறங்கினார்; மேன்மாடப் படிகள் முடிந்த இடத்தில் சட்டைநாதபிள்ளை எதிர்ப்பட்டார். சேவகன் சட்டைநாத பிள்ளையை உள்ளே அனுப்பிவிட்டு வீட்டின் வெளி வாசலிலேயே நின்றான். சட்டைநாத பிள்ளையிடத்தில் அதிகமாகப் பேசாமல் ஒரே வார்த்தையில் அவரை நிறுத்திவிட வேண்டுமென்றும், இல்லையானால், தாம் தப்பிப் போவதற்குள் தமது செய்தி வெளியாகி விடுமென்றும் நினைத்து சாமியார் தனிமையில் வந்த சட்டைநாத பிள்ளையைக் கண்டு குனிந்து சலாம் செய்து, ஐயா பிள்ளையவாள்! ஒரே ஒரு வார்த்தை; கொஞ்சம் நில்லுங்கள் என்றார். அவர் ஐயரிடத்திலிருந்து வந்ததிலிருந்து அவர் ஐயரது நண்பர் என்று யூகித்துக் கொண்ட சட்டைநாதபிள்ளை அவருக்குப் பதில் சலாம் செய்து அப்படியே நின்றார். உடனே சாமியார் அவரை நோக்கி, நான் ஐயரவர்களிடத்திலிருந்து வருகிறேன். கொஞ்ச நேரத்துக்கு முன் சேவகன் வந்து நீங்கள் வந்திருப்பதாகத் தெரிவித்தான். உங்களை அழைத்துக் கொண்டு வரும்படி, ஐயரவர்கள் உடனே உத்தரவு செய்தார்கள். இப்போது அவர்கள் மெத்தையின் மேல் இல்லை. பூஜை முடித்துக் கொள்வதற்காக, மெத்தையிலிருந்தபடியே, இரண்டாங் கட்டுக்குப் போயிருக்கிறார்கள். நான் இங்கே பகல் இரண்டு மணிக்கு வந்தேன். அப்போது இந்த ஊர் மிராசுதாரரான வேலாயுதம் பிள்ளை என்ற ஒருவர் வந்து ஐயரவர்களிடத்தில் பேசிக் கொண்டிருந்து, ஐந்து மணிக்கே புறப்பட்டுப் போனார். இந்நேரம் வரையில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். ஆகையால் ஐயரவர்கள் களைத்துப் போய் இருக்கிறார்கள். தாம் தலைநோவினால் வருந்துவதாக அவர்கள் சொன்னதன் மேல், அவர்களைப் பூஜைக்கு அனுப்பிவிட்டு நான் வந்தேன். தங்களிடத்தில் சாவகாசமாக நெடுநேரம் பேச வேண்டுமாம். ஆகையால், காலை சரியாக ஏழு மணிக்கு வந்துவிடும்படி தங்களுக்குச் சொல்லச் சொன்னார்கள். நாளையதினம் தங்களுடைய சுவீகார வியாஜ்ஜியம் ஒன்று விசாரிக்கப்படும் என்றும், தாங்கள் அதற்கு இருப்பீர்களாகையால் இப்போதே அவர்களைப் பார்க்க அவசரப்பட மாட்டீர்கள் என்றும் சொன்னார்கள் என்று தணிவான குரலில் கூறினார். உண்மை போலத் தோன்றிய அந்தச் சொற்களை சட்டைநாத பிள்ளை முற்றிலும் உண்மை என்றே நம்பினார். ஆனால் தமது பகைவரான வேலாயுதம் பிள்ளை ஐயரிடத்தில் வந்து பேசிக் கொண்டிருந்தார் என்ற செய்தி அவரது மனதில் மிகுந்த சஞ்சலத்தையும் சந்தேகத்தையும் உண்டாக்கியது. ஒருகால், சுவீகார வியாஜ்ஜியத்தைத் தமக்கு அநுகூலமாக முடிக்கும் பொருட்டு, ஐயருக்கு ஏதாவது பணம் கொடுப்பதற்காக வேலாயுதம் பிள்ளை வந்திருப்பாரோ என்ற நினைவு தோன்றியது. தாம் வருமுன் எப்போதும் சந்தோஷமாகத் தமக்கு பேட்டி கொடுக்கும் வழக்கத்திற்கு மாறாக, அன்று ஐயர் தம்மைப் போகும்படி சொல்லி அனுப்பியதும், அவர் மனது வேலாயுதம் பிள்ளையின் விஷயத்தில் மாறுபட்டிருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தியது. ஆகவே சட்டைநாத பிள்ளை ஒன்றையும் செய்ய அறியாமல், இரண்டொரு நிமிஷநேரம் கலங்கி அப்படியே நின்றார். வேலாயுதம் பிள்ளை வந்து பேசிய விஷயத்தில் அந்த சாயப்பு இன்னும் ஏதாகிலும் சங்கதி தெரிவிக்கக் கூடுமென்னும் எண்ணம் சட்டைநாத பிள்ளையின் மனதில் உதித்தது. ஆகையால், தாம் தந்திரமாக சாயப்புவிடத்தில் பேசி அவருக்குத் தெரிந்த எல்லா ரகசியங்களையும் கிரகிக்க வேண்டும் என்ற உறுதி செய்து கொண்டவராய் சட்டைநாத பிள்ளை சாமியாரை நோக்கி, சரி; அப்படியானால் நாளைக்கே வருகிறேன். தாங்கள் இந்த ஊர்தானா? இப்போது தாங்கள் எங்கே போகிறீர்கள்? என்றார். சாமியார், ஆம், நான் இந்த ஊர்தான். என் வீடு சுந்தரம் பிள்ளையின் பங்களாவுக்கு அப்பால் இருக்கிறது. நான் அங்கேதான் போகப்போகிறேன் என்றார்.

    சட்டைநாத பிள்ளை புன்னகை தவழ்ந்த முகத்தோடு, சரி நானும் சுந்தரம் பிள்ளையின் பங்களாவுக்குத்தான் போகிறேன். தாங்கள் என்னுடைய சாரட்டிலே வந்தால், தங்களுடைய வீட்டில் விட்டுப் விட்டுப் போகிறேன் என்றார்.

    அதைக் கேட்டு நன்றியறிதல் பிரகாசித்த முகத்தோடு காணப்பட்ட போலி சாயப்பு, என்னுடைய குதிரைவண்டி வாசலில் நிற்கிறது. தங்களுக்கு அசௌகரியமாக இல்லாவிட்டால், தங்களுடைய விருப்பம் போலவே செய்கிறேன். என்னுடைய வண்டியை அனுப்பி விடுகிறேன் என்றார்.

    சட்டைநாத பிள்ளை, எனக்கு அசௌகரியம் ஒன்றுமில்லை. தங்களோடு போவது சந்தோஷகரமாக இருக்கும் என்றே அப்படிச் சொன்னேன். வாருங்கள் போவோம் என்றார். உடனே இருவரும் அந்த வீட்டை விட்டு வெளியிற் சென்றனர். சாமியார் குதிரை வண்டிக்காரனண்டை போய் அவனுக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு, திண்ணைக்கு அருகில் நின்ற சேவகனிடத்தில் நெருங்கி, சட்டைநாத பிள்ளை திரும்பவும் காலை 7 மணிக்கு வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார் என்று ஐயரிடம் சொல்லும்படி மிருதுவான குரலில் கூறி, அவனிடத்தில் ஒரு ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு, சாரட்டண்டையில் வந்தார். அதற்குள் சாரட்டில் ஏறி ஒரு பக்கமாக ஒதுங்கி உட்கார்ந்திருந்த சட்டைநாத பிள்ளை, தமது பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளும்படி சாமியாரை வேண்ட, அவர் ஏறி அப்படியே உட்கார்ந்து கொண்டார். வண்டியும் உடனே புறப்பட்டது. சாமியார் கடைசியாக ஒரு முறை மேன்மாடத்தை நோக்கி ஐயர் ஜன்னலண்டையில் நிற்கக் கண்டார். ஆனால் சட்டைநாதபிள்ளை அப்போது மேன்மாடத்தைப் பார்க்கவில்லை. ஆகையால் சாமியார் தமது முகத்தை இப்புறம் திருப்பிக் கொண்டார். அடுத்த நிமிஷம் சாரட்டு ஐயரது திருஷ்டிக்கு மறைந்து போய்விட்டது. வேண்டுமென்றே சாரட்டை மெல்ல ஒட்டிய சட்டைநாதபிள்ளை சாமியாரிடத்தில் பேசத் தொடங்கி, மிராசுதார் வேலாயுதம் பிள்ளை வந்து ஐயரிடத்தில் பேசிக் கொண்டிருந்ததாகச் சொன்னீர்களே. அப்போது தாங்கள் எங்கே இருந்தீர்கள்? என்றார்.

    அதைக் கேட்ட சாமியார், சட்டைநாத பிள்ளை தம்மை ஆழம் பார்க்கிறார் என்பதை உணர்ந்து கொண்டவராய், "நான் அப்போது அடுத்த அறையில் உட்கார்ந்திருந்தேன். அவர்கள் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுவீகார வியாஜ்ஜியம் என்ற சொல் மாத்திரம் அடிக்கடி காதில் விழுந்தது. அதன் விவரம் எதுவும் விளங்கவில்லை என்றார். அதைக் கேட்ட சட்டைநாத பிள்ளையின் சஞ்சலமும் கவலையும் அதிகரித்தன. அவர் இரண்டொரு நிமிஷநேரம் பேசாமலிருந்த பிறகு அதைப்பற்றிக் கவலைப்படாதவர் போலக் காண்பித்துக்கொண்டு, சரிதான்! அவருடைய கட்சியிலிருந்துதான் நாளைக்கு நான் பேசப்போகிறேன். அவர் இன்றைக்கு ஐயரிடத்தில் வந்து பார்க்காமல் இருந்துவிடப் போகிறாரே என்று நான் கவலை அடைந்து இருந்தேன்; நல்ல வேளையாக அவர் வந்து பார்த்து விட்டார். நான் இனி ஐயரைக் காலையிலேயே பார்க்கலாம். இப்போது அவசரம் இல்லை. ஆனால் வேலாயுதம் பிள்ளை இன்றைக்குப் பணம் கொடுப்பதாகச் சொல்லி இருந்தார். ஐயரிடத்தில் ஏதாவது பணம் கொடுத்தாரா? அதைப் பார்த்தீர்களா!" என்று நயமாக வினவினார்.

    அதைக் கேட்ட சாமியார் நகைப்பை அடக்கிக் கொண்டார். தம்மால் ஏமாற்றப்படும் போதே, சட்டைநாத பிள்ளை தம்மை ஏமாற்ற முயன்றது, சாமியாருக்கு வேடிக்கையாகத் தோன்றியது. பணம் கொடுத்ததை நான் நேரில் பார்க்கவில்லை. ஆனால், ஐம்பதினாயிரம்? என்று ஐயர் கேட்ட குரல் உண்டாயிற்று. ஆம் என்று வேலாயுதம் பிள்ளை பதில் சொன்னார். பிறகு பவுன்கள் ஓசைப்படுவது போல கலகலவென்று சத்தம் உண்டாயிற்று. உடனே ஐயர் பீரோவைத் திறந்து அவற்றை எடுத்து வைத்துப் பூட்டிய ஓசையும் கேட்டது. அவ்வளவுதான் எனக்குத் தெரிந்தது. அதற்குமேல் அதிகமான விவரம் ஒன்றும் தெரியவில்லை, அதைப்பற்றி நான் ஐயரவர்கள் இடத்தில் கேட்பதும் அநாகரிகமல்லவா? என்றார்.

    சட்டைநாத பிள்ளை, ஆம் ஆம்: தாங்கள் அதைப்பற்றிக் கேட்பதே சரியல்ல. போகட்டும். வேலாயுதம் பிள்ளை பணம் கொடுத்து விட்டார் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. இனி கவலை இல்லை என்றார். இனி கவலை இல்லை என்று சட்டைநாதபிள்ளை தமது வாயால் மாத்திரம் சொன்னாரேயானாலும் அவரது மனதில் அப்போது தோன்றி வருத்திய கவலைகளும், நினைவுகளும் விவரிக்கக் கூடாதனவாக இருந்தன. தமக்கு அந்தரங்கமான நண்பர் போல அது வரையில் நடித்து வந்த ஐயர் சுவீகார வியாஜ்ஜியத்தில் தமது பகைவனிடத்தில் பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை நினைக்க நினைக்க சட்டைநாத பிள்ளையின் மனம் பதறியது. லஞ்சம் வாங்குகிற உத்தியோகஸ்தர்களுக்குப் பணமே பெரிது. ஆகையால் அப்படிப்பட்டவர்கள் நண்பர்களைக் கூட மதியாமல் வஞ்சித்து விடுவார்கள் என்று நினைத்தவராய், அவர் அந்த நினைவிலேயே தமது மனதை செலுத்திய வண்ணம் சாரட்டை ஓட்டினார். சுந்தரம் பிள்ளையின் பங்களா அருகில் வந்துவிட்டது என்பதைக் கண்ட சாமியார் சட்டைநாத பிள்ளையை நோக்கி, ஐயா! என்னை இவ்விடத்திலேயே விட்டு விடுங்கள். எனக்கு இங்கே கொஞ்சம் அலுவல் இருக்கிறது. அதைப் பார்த்துக்கொண்டு நான் கால்நடையாகவே வீட்டுக்கு போய் விடுகிறேன் என்றார். அவரிடத்தில் அதற்கு மேல் அறிந்து கொள்ளக்கூடிய செய்தி ஒன்றும் இல்லை என்று நினைத்த சட்டைநாத பிள்ளை உடனே வண்டியை நிறுத்தினார். சாமியார் கீழே இறங்கி, ஐயா! நான் போய்விட்டு வருகிறேன். தங்களுக்கு நிரம்பவும் சிரமம் கொடுத்தேன். மன்னிக்க வேண்டும். சலாம் என்று உபசார வார்த்தை கூறி சலாம் செய்தார். சட்டைநாத பிள்ளையும் பதில் சலாம் செய்துவிட்டு, தமது சாரட்டை ஓட்டிக் கொண்டு மிகுந்த கலக்கமும் பதைபதைப்பும் விசனமும் அடைந்த நிலைமையில் சுந்தரம் பிள்ளையின் மாளிகையை நோக்கிச் சென்றார்.

    சிறந்த புத்திமான்களான ஐயரையும் சட்டைநாத பிள்ளையையும் ஒரு நொடிக்குள் தாம் ஏமாற்றி வந்துவிட்டதைக் குறித்து தமக்குள் மிகுந்த சந்தோஷத்தையும் பூரிப்பையும் அடைந்த சாமியார் விசையாக நடந்து வேலாயுதம் பிள்ளையின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

    அப்போது இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது. வேலாயுதம் பிள்ளையும், நடராஜ பிள்ளையும் சாப்பிடாமல் சாமியாரது வருகையை எதிர்பார்த்தவர்களாய் உட்கார்ந்திருந்தனர். அப்போது திடீரென்று தங்களுக்கு முன்னால் வந்து நின்ற ஒரு சாயப்புவை அவர்கள் கண்டு திடுக்கிட்டுத் திகைப்படைந்தனர். சந்தோஷத்தினாலும், புன்னகையாலும் மலர்ந்திருந்த சாமியாரது முகத்தை நோக்கிய வேலாயுதம் பிள்ளை, ஐயா! தாங்கள் யார் என்பது தெரியவில்லையே! என்றார்.

    அதைக் கேட்ட சாமியார் கலகலவென்று நகைத்த வண்ணம் தமது தலைப்பாகை லுங்கி முதலிய துருக்க சின்னங்களை விலக்கத் தொடங்கி, ஒரு நிமிஷத்தில் தமது சொந்த உடையில் தோன்றி நான் யாரென்பது இப்போது தெரிகிறதா? என்றார். விவரிக்கவொண்ணாத வியப்போடும் திகைப்போடும் அவரது மாறுதலைக் கவனித்துக் கொண்டிருந்த வேலாயுதம் பிள்ளை, நடராஜ பிள்ளை ஆகிய இருவரும் அப்படியே பிரமித்துப்போய், என்ன வேஷமையா இது? உண்மையில் யாரோ சாயப்பு என்றல்லவா நாங்கள் நினைத்து விட்டோம்! என்று ஆச்சரியத்தோடு கூறினர்.

    சாமியார்:- நீங்கள் மாத்திரமா ஏமாறினீர்கள். சப்ஜட்ஜி, சட்டைநாதபிள்ளை, சேவகர்கள் முதலிய எல்லோரும் என்னைக் கண்டு ஏமாறிப்போனார்கள் - என்றார்.

    நடராஜ:- அப்படியானால், சட்டைநாத பிள்ளையும் இங்கே தான் இருக்கிறாரா?

    சாமியார்:- ஆம்; ஒரு நாழிகைக்கு முன்புதான் அவர் கும்பகோணத்திலிருந்து வந்தார்; நாளைக்கு நடக்கப் போகும் விசாரணைக்காக வந்திருக்கிறார்.

    வேலா:- அப்படியானால், வடிவாம்பாளை அழைத்துக் கொண்டு வருவதற்கு இதுதான் நல்ல தருணம். அவள் இருக்கும் இடத்தை கண்ணப்பா கண்டுபிடித்தானோ இல்லையோ. அதுதான் சந்தேகம்.

    நடராஜ:- அது இருக்கட்டும். நீர் போய்வந்த விவரமென்ன? சப்ஜட்ஜியும் சட்டைநாத பிள்ளையும் ஏமாறிப்போனார்கள் என்றீரே; எப்படி ஏமாறினார்கள்?

    சாமியார்:- அந்த விவரங்களை எல்லாம் நீங்கள் இப்போது கேட்க வேண்டாம்; நான் எல்லா விவரங்களையும் விரிவாக உங்கள் இடத்தில் சொல்லக்கூடிய சமயம் சமீபகாலத்தில் ஏற்படும். அப்போது நான் சொல்லுகிறேன். இந்த சப்ஜட்ஜி சட்டைநாதபிள்ளை முதலியோரை சிறைச்சாலைக்கு அனுப்பத் தேவையான எழுத்து மூலமான ருஜுக்கள் என்னிடத்தில் அகப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அவற்றை நான் அதிசீக்கிரத்தில் உபயோகப்படுத்தப் போகிறேன். உங்களுடைய வியாஜ்ஜியம் நாளையதினம் உங்களுக்கு விரோதமாக முடிவடைந்து விடும் என்பது நிச்சயம். ஆனால் அப்பீலில் அதை மாற்றுவது என்னுடைய பொறுப்பு. நீங்கள் இந்த நியாய ஸ்தலத்தில் இதன் பொருட்டு அதிகச் செலவு செய்ய வேண்டாம். நாளையதினம் இந்த வியாஜ்ஜியம் முடிவடையும் வரையில் சட்டைநாத பிள்ளை இங்கேயே இருப்பார் என்று நினைக்கிறேன். நான் விடிய ஜாமத்துக்கு இவ்விடம் விட்டுப் புறப்பட்டு விடியற்காலம் கும்பகோணம் போய்ச் சேரவேண்டும். இந்த வக்கீல் வருவதற்குள், என்னால் ஆன முயற்சி செய்து குழந்தை வடிவாம்பாளை அழைத்துக் கொண்டு வந்து விட வேண்டும். நீங்கள் ஒரு வண்டிக்கு மாத்திரம் உடனே ஏற்பாடு செய்யுங்கள்.

    வேலா:- சரி; அப்படியே செய்கிறேன். உம்மைத்தான் நாங்கள் மலைபோல் நம்பி இருக்கிறோம். குழந்தையைக் கொணர்ந்து கண்ணப்பாவுக்குக் கலியாணம் செய்து வைப்பதும், இந்த வியாஜ்ஜியத்தை அப்பீலில் ஜெயப்படுத்தி வைப்பதும் உம்மைச் சேர்ந்த பொறுப்பு.

    சாமியார்:- ஈசுவரன் செயல், நானா செய்கிறவன்? தோன்றாத் துணைவனாக இருந்து, எல்லாவற்றையும் நடத்திவைக்க அவன் இருக்கிறான்; நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்னொரு விஷயம் உங்களிடத்தில் கேட்க விரும்புகிறேன்; குழந்தை வடிவாம்பாள் இங்கே இருந்தபோது, அவளுடைய ஆடை ஆபரணங்களை வைத்துக் கொள்ளுவதற்கு அவள் பிரத்தியேகமாக ஏதாவது பெட்டி வைத்துக் கொண்டிருந்தாளா? அவளிடத்தில் சட்டைநாத பிள்ளை பற்றிய முக்கியமான சில கடிதங்கள் இருந்தன. அந்தக் கடிதங்கள் அவளுடைய பெட்டியில் இருக்கின்றனவா, அல்லது, அவள் அவைகளை மடியிலேயே வைத்துக் கொண்டிருந்தாளா என்பது தெரியவேண்டும் - என்றார்.

    அப்போது, ஒரு புறத்தில் நின்று அந்த சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த திரிபுர சுந்தரியம்மாள் உடனே பேசத் துவக்கி, அவளுக்குத் தனியாக ஒரு பெட்டி கொடுத்திருந்தேன். அதன் திறவுகோலை அவள் ஓர் ஆணியில் மாட்டி இருக்கிறாள் என்றாள்.

    வேலா:- அப்படியானால் நீரே போய் அந்தப் பெட்டியைத் திறந்து பாரும் - என்றார்.

    உடனே சாமியார், அவர்களால் காட்டப்பட்ட ஒரு பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்த கடிதங்களை எடுத்து, அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்குக் கொணர்ந்து, இந்தக் கடிதங்களைப் படித்துப் பாருங்கள் என்று வேலாயுதம் பிள்ளையை நோக்கிக் கூற, அவர் அவைகளை வாங்கி விளக்கின் வெளிச்சத்தில் படித்தார். நடராஜ பிள்ளை, திரிபுர சுந்தரியம்மாள் ஆகிய இருவரும் அதை உற்றுக் கேட்டனர். அவற்றின் விஷயம் என்ன என்பதை உணர்ந்தவுடனே அம்மூவரும், சட்டைநாதபிள்ளை அப்படியும் செய்வானோ என்ற வியப்பும், அவனைத் தொலைக்கக்கூடிய ஆதாரம் தம்மிடம் இருப்பதைப்பற்றி ஒரு வகையான மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    சாமியார்:- இந்தக் கடிதங்கள் என்னிடத்தில் இருக்கட்டும். சமயத்தில் உபயோகப்படுத்த வேண்டும் - என்றார்.

    வேலா:- சரி; நீரே வைத்துக் கொள்ளும் - என்றார்.

    சாமியார் உடனே தமது தஸ்தாவேஜு மூட்டையை அவிழ்த்து அதற்குள் அந்தக் கடிதங்களையும் வைத்துக் கட்டிக் கொண்டார். அப்போது திரிபுரசுந்தரியம்மாள் போஜனம் செய்வதற்கு நாழிகை ஆகி விட்டது என்று நினைப்பூட்ட, சாமியார், வேலாயுதம் பிள்ளை, நடராஜ பிள்ளை ஆகிய மூவரும் உடனே எழுந்து தமது போஜனத்தை முடித்துக் கொண்டவர்களாய் தாம்பூலம் தரித்துக் கொண்டனர். அப்போது, கால் நாழிகை நேரம் வரையில் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த சாமியார் மற்றவரை நோக்கி, சரி; இப்போது பத்துமணி ஆகிறது. நீங்கள் படுக்கைக்குப் போங்கள். நான் துரைத்தனத்தாருக்கு ஒரு மனு தயாரிக்கவேண்டும்; நான் இந்த மேஜையில் உட்கார்ந்து எழுதிவிட்டுப் படுத்துக் கொள்ளுகிறேன். ஆனால், வண்டிக்கு மாத்திரம் சொல்லியனுப்பிவிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள் என்றார். நடராஜ பிள்ளை உடனே எழுந்து தமது படுக்கைக்குச் சென்றார். வேலாயுதம் பிள்ளை தமது வேலைக்காரனை அழைத்து விடிய ஜாமத்திற்கு ஒரு வண்டி தயாராக இருக்க வேண்டும் என்று கூறி ஏற்பாடு செய்தபிறகு, தமது படுக்கைக்குச் சென்றார். திரிபுர சுந்தரியம்மாள் வேலைக்காரி முதலியோரும் தமது போஜனத்தை முடித்துக்கொண்டு சயனிக்கச் சென்றனர். திகம்பர சாமியார் தனியாக நாற்காலியில் உட்கார்ந்திருந்து, ஐயரால் கொடுக்கப்பட்ட கடிதத்தைப் பிரித்துப் படித்தார். அவரது முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. பக்கத்தில் இருந்த மேஜையின் மேல் அவர் தமது காகித மூட்டையை அவிழ்த்து அவற்றை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகப் படித்த பின்னர், காகிதத்தையும் இறகையும் எடுத்து இங்கிலீஷில் அடியில் வருமாறு ஒரு மனு தயாரிக்க ஆரம்பித்தனரர்.

    சென்னை துரைத்தன அதிகாரியான மாட்சிமை தங்கிய கவர்னர் துரை அவர்கள் சமுகத்துக்கு, தஞ்சை ஜில்லா மன்னார் கோவில் மிராசுதார் வேலாயுதம் பிள்ளையவர்களின் வீட்டில் இருக்கும் திகம்பர சாமியார் என்ற பெயர் கொண்ட பரதேசியாகிய நான் நிரம்பவும் வணக்கமாகச் செய்து கொள்ளும் விக்ஞாபனம்.

    மகாப்பிரபுவே!

    பிறருக்கு உபயோகப்படும் பொருட்டே மனிதர் சரீரமெடுத்து இருக்கிறார்கள் என்பது ஹிந்து மதத்தின் முதன்மையான கொள்கை. அதன்படி ஒவ்வொரு மனிதனும், தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழக் கடமைப்பட்டிருக்கிறான். அந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே, ஒவ்வொரு தேசத்தின் ராஜாங்கமும் அமைக்கப்பட்டு இருக்கிறது. பொது ஜனங்களின் பொருளைப் பறித்துத் திரட்டிப் பங்கு போட்டுக் கொள்ளவும், அதைக் கொண்டு எவருக்கும் கிடைக்காத பரம ஆனந்த போகமும் அநுபவிக்கவுமே ராஜாங்கத் தலைவரும், மற்ற உத்தியோகஸ்தர்களும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை என்பதும், பொது ஜனங்கள் தத்தம் மனப்போக்குக்கும் நிலைமைக்கும் தக்கபடி ஒவ்வொரு துறையில் இறங்கி சுயேச்சையாகப் பொருளீட்டி தரும் சாஸ்திர முறைப்படி பெண்டு பிள்ளைகளோடு இருந்து சுகமாக வாழ்க்கை நடத்துவதில் அவர்களுக்குத் தேவையான சௌகரியங்களைச் செய்து கொடுக்கவும், எளியோரை, வலியோர் துன்புறுத்தாமலும், ஒருவர் பொருளுக்கும் தேகத்துக்கும் உரிமைகளுக்கும் பிறரால் எத்தகைய தீங்கும் நேராமல் தடுப்பதற்கும் ராஜாங்கத்தார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் கவர்னர் துரையவர்களுக்குத் தெரிந்த விஷயங்கள் ஆகும். மனிதருடைய பொருளைக் காப்பாற்றும் பொருட்டு சிவில் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன; நியாயாதிபதிகளும் வக்கீல்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறே மனிதருக்கு தேக சம்பந்தமாகவும், பொருள் சம்பந்தம் ஆகவும் எவ்விதத் துன்பமும் நேராமல் இருப்பதற்கு பல கிரிமினல் சட்டங்களும் இருக்கின்றன; அவற்றை நடத்தி வைக்க, போலீசார் என்றும், ஜட்ஜிகள் என்றும் பல உத்தியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உத்தியோகஸ்தர்கள் புண்ணியம் சம்பாதிக்க விரும்பினாலும், மோட்ச பதவிக்குச் செல்ல விரும்பினாலும், அவர்கள் உலகத்தைத் துறந்து காஷாயம் வாங்கிக் கொண்டு காட்டுக்குச் சென்று தவம் செய்ய வேண்டுமென்னும் அவசியமே இல்லை; அவர்கள் தங்களுடைய பெண்டு பிள்ளைகளை விட்டுவிட வேண்டுமென்பது இல்லை; கோவில் குளம் சத்திரம் முதலியவை கட்ட வேண்டும் என்பதில்லை; தண்ணீர் பந்தல் தருமம், அன்னதானம் முதலியவை செய்ய வேண்டுமென்பதில்லை. அவர்கள் தங்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றி, நீதிநெறி வழுவாமல் ஒழுகி, ஜனங்களுடைய நன்மையிலேயே கண்ணுங் கருத்துமாக இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு இகலோகத்திலேயே சுகம் உண்டாவதன்றி, பரலோகத்திலும் மோட்சம் பலிதமாகும். குழந்தைகள் தமது பெற்றோரிடத்தில் சென்று சலுகை சொல்லிக்கொண்டு, தங்களுடைய குறைகளை விலக்கிக் கொள்வது போல, ஜனங்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களைத் தெரிவித்துக்கொள்ளவும், நிவர்த்தி செய்து கொள்ளவும் சாதனமாக ஏற்படுத்தப்பட்டுள்ள போலீசாரும் நியாயாதிபதிகளும் தங்களது கடமைகளை அசட்டை செய்பவராகவும், லஞ்சம் வாங்குவோராகவும், ஒருவருடைய நட்பைக் கருதி, பிறருக்குத் துன்பம் செய்வோராகவும் இருந்தால் அது வேலியே பயிரை அழிப்பது போன்றதாகும்.

    2. நிற்க, நான் இங்கிலீஷ் பாஷை பயின்று, பி.ஏ. என்ற பட்டம் பெற்றவன். ஆனால் எனக்குப் புராதனமான சொத்துகள் ஏராளமாக இருந்தமையாலும், மேலும் பொருள் தேடவேண்டுமென்னும் ஆசையை நான் கொள்ளாதவன். ஆகையாலும், எவ்வித உத்தியோகத்தையும், வேறு வகையான பொருள் தேடும் துறையையும் நான் நாடவில்லை. என்னிடமிருந்த பொருளைக் கொண்டும், என் தேகத்தைக் கொண்டும் நான் மற்றவருக்கு உபயோகப்பட்டு வந்தேன். சமீப காலத்தில் நான் புண்ணிய ஸ்தலங்களுக்கு எல்லாம் சென்று, பலவகையான ஊர்களையும் மனிதர்களையும், அவரவர்களுடைய நடவடிக்கை வேறுபாடுகளையும், குணா குணங்களையும் கண்டேன். நான் சந்நியாசியாக, இந்தத் தஞ்சை ஜில்லாவில் பல ஊர்களுக்கும் சென்றபோது, பெருத்த பதவியிலுள்ள சில உத்தியோகஸ்தர்கள் லஞ்சம் வாங்குவதும், விபசாரம் செய்வதும், அதனால் அநியாயத் தீர்மானம் எழுதுவதும், லஞ்சம் கொடுப்பது, மோசம். நம்பிக்கைத் துரோகம், வழிப்பறி, கலகம் பலவந்தப் புணர்ச்சி முதலிய அக்கிரமங்கள் செய்வதும் தற்செயலாக எனக்குத் தெரியவந்தன. அத்தகைய அக்கிரமங்களைக் கண்டு பொறாத நான் என் சுயபுத்தியைக் கொண்டும், யூகத்தைக் கொண்டும் அவ்விஷயங்களில் மேன்மேலும் கவனம் செலுத்தி, அவைகள் உண்மையில் நடக்கின்றன என்பதை ருஜுப்படுத்தக் கூடிய எழுத்து மூலமான பல ஆதாரங்களைச் சம்பாதித்து என் வசத்தில் வைத்துக் கொண்டிருக்கிறேன். இவர்கள் போல இன்னமும் எத்தனை உத்தியோகஸ்தர்கள் அக்கிரமம் செய்பவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுடைய அநியாயச் செயல்களால் எத்தனை ஜனங்களுக்கு எவ்விதமான துன்பங்கள் நேர்ந்து வருகின்றனவோ என்பதை நினைக்க நினைக்க என் மனம் பதறுகிறது. செலவு செய்யச் செய்யக் குறைந்து அழிந்து போகக்கூடிய என்னுடைய பணச் செல்வத்தை வைத்துக் கொண்டு நான் இதுவரையில் தான தருமம் செய்ததைக் காட்டிலும், தொடக்கத்திலிருந்தே நான் ஒரு போலீஸ் உத்தியோகஸ்தனாக நியமனம் பெற்றிருந்தால், எத்தனை ஜனங்களின் கொடுமைகளை நான் விலக்கி இருக்கலாம், எத்தனை அக்கிரமங்களைத் தடுத்திருக்கலாம், எவ்வளவு புண்ணியம் சம்பாதித்திருக்கலாம் என்றும், அந்தத் துறையில் பரோபகாரமாக வேலை செய்வது எடுக்க எடுக்கக் குறையாத செல்வத்தைப் போன்றதல்லவா என்றும் நினைத்து என் மனம் நிரம்பவும் வருந்துகிறது.

    3. நான் கண்டு பிடித்திருக்கும் ரகசியமான குற்றங்களில் பலர் சம்பந்தப்படுகிறார்கள். ஆனாலும், அவையாவற்றிற்கும் முக்கியமான ஒரே ஒரு மனிதன் மூலகாரணமானவனாய் அமைந்திருக்கிறான். அவன் மிகுந்த நெஞ்சழுத்தம் உடையவன்; அவனைச் சித்திரவதை செய்வதனாலும், அவன் அந்தக் குற்றங்களை தான் செய்ததாக ஒப்புக் கொள்ளக்கூடியவனல்லன். எனக்கு ஒரு தந்திரமான முறை தெரியும். அதனால், எதற்கும் தடுமாறாத திடமனதுடைய குற்றவாளியையும் தடுமாறச் செய்து, அவன் உண்மையை உள்ள படியே ஒப்புக் கொள்ளும்படி செய்யலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்தத் தந்திரத்தை போலீஸ் உத்தியோகஸ்தர் ஒவ்வொருவரும் உணர்ந்து கையாளுவார்களானால், வெளிப்படுத்தக்கூடாத பெருத்த குற்றங்களை எல்லாம், குற்றவாளிகள் தாங்களே ஒப்புக்கொள்ளும்படி செய்துவிடலாம் என்பது நிச்சயம். நிற்க, போலீசார் குற்றவாளிகளை அடித்தார்கள், மிரட்டினார்கள், வற்புறுத்தினார்கள், இம்சித்தார்கள் என்ற பழிக்கும், பொய்சாட்சி தயாரித்தார்கள், உடந்தைக் குற்றவாளிகளைத் தயாரித்தவர்கள் என்ற அவதூறுக்கும் ஆளாக மாட்டார்கள்.

    4. ஆகையால், மாட்சிமை தங்கிய கவர்னர் துரையவர்களுக்கு நான் வணக்கமாகச் செய்துகொள்ளும் மனு யாதென்றால், தங்களுக்கு சௌகரியப்படக்கூடிய அதிசீக்கிரமாக ஒரு தினத்தில் தங்களுடைய தரிசனம் எனக்குக் கிடைக்கும்படி உத்தரவு தர தயவு செய்தால் அன்று நான் நேரில் ஆஜராகி என்னிடத்தில் எழுத்து மூலமாகக் கிடைத்துள்ள ஆதாரங்களைக் காட்டி, போலீசார் அனுசரிக்க வேண்டிய சில முக்கியமான வழிகளையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நிற்க, இனி நான் இவ்விதமான அக்கிரமங்களைக் கண்டு பிடிப்பதிலும், அவற்றை என் வாழ்நாட்களையெல்லாம் கழிக்க வேண்டுமென உறுதி செய்து கொண்டிருக்கிறேன். அதற்கு அநுகூலமாக என்னை ஒரு போலீஸ் அதிகாரியாக நியமிப்பதானாலும், அதற்கு நான் இணங்குகிறேன். ஆனால் எனக்கு சம்பளம் முதலிய எவ்விதமான பிரதிபலனும் தேவை இல்லை. யாவற்றையும் துறந்த சந்நியாசிக்கு உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம். ஆகையால், என்னுடைய தேவைகள் மிகவும் சொற்பமே ஆகும்.

    ஆகையால், யாவற்றிற்கும் தங்களுடைய மேலான உத்தரவை ஆவலோடு எதிர்பார்க்கும்

    வணக்கமான ஊழியன்

    திகம்பர சாமியார்

    என்று எழுதி முடிக்கப்பட்ட கடிதத்தை சாமியார் நகலாக வைத்துக் கொண்டு, நல்ல சுத்தமான வேறொரு காகிதத்தில் அதைத் தெளிவாக எழுதி, ஓர் அசல் தயாரித்து, அதை மடித்து ஓர் உறைக்குள் சொருகி, வாயை ஒட்டி மேல் விலாசம் எழுதினார். அப்போது கடிகாரத்தில் இரவு ஒரு மணி ஆகி இருந்தது. தாம் விடியற்காலம் மூன்று மணிக்கு, கும்பகோணத்திற்குப் புறப்பட எண்ணியிருந்தமையால், தாம் அவ்வளவு நாழிகைக்குப் பிறகு நித்திரை செய்வது தவறென நினைத்தவராய், அவர் விளக்கைத் தணித்து வைத்து விட்டுக் கண்களை மூடிக்கொண்டு நாற்காலியிலேயே சாய்ந்திருந்தார். இது இங்ஙனமாக, அன்றிரவு சாமியாரால் ஏமாற்றப்பட்ட சட்டைநாத பிள்ளையும், சப்ஜட்ஜியும் என்ன செய்தார்கள் என்பதைக் கவனிப்போம்.

    14வது அதிகாரம்

    கடப்பாரையை ஜீரணிக்க சுக்குக் கஷாயம்

    சுந்தரம் பிள்ளையின் பங்களாவிற்குச் சென்ற சட்டைநாத பிள்ளையின் மனம் மிகவும் வருந்தியது. ஐயருக்குப் பிரதிவாதியிடத்தில் லட்சம் ரூபாய் வாங்கி, அதைத் தாமே அபகரித்துக் கொண்டவராதலால், தமது கட்சிக்காரிக்கு அபஜெயம் உண்டாகக் கூடாது என்பது அவரது விருப்பம். நிற்க, தமது பகைவரான வேலாயுதம் பிள்ளையை தண்டிப்பதற்கும் அது ஒரு முக்கியமான சாதனம் என்று அவர் நினைத்திருந்தார். வேலாயுதம் பிள்ளைக்கும் சப்ஜட்ஜிக்கும் நட்பு உண்டாகி இருந்தால், தமது அயோக்கியமான நடத்தைகளை எல்லாம் ஐயர் அவரால் அறிந்து கொண்டிருக்கக்கூடும். ஆதலால் ஐயர் இனி தம்மீது அருவருப்படைந்து விடுவாரோ என்றும், அதனால் தமது நட்பிற்கும் தாம் அவரது பெயரால் அடிக்கும் பகற்கொள்ளைகளுக்கும் ஹானி உண்டாகி விடுமோ என்றும் பெரிதும் கலக்கம் அடைந்தவராய் சட்டைநாதபிள்ளை சுந்தரம்பிள்ளையின் பங்களாவிற்குள் நுழைந்தார். அவருக்கும் ஐயருக்கும் ஏற்பட்டிருக்கும் அந்தரங்கமான சம்பந்தம் சுந்தரம் பிள்ளைக்கு அவ்வளவாகத் தெரியாது இருந்தமையால், அன்று நடந்த காரியங்களை வக்கீல் அவரிடத்தில் வெளியிடாமல், சாதாரணமாக வருபவர் போலவே காணப்பட்டார்.

    சுந்தரம் பிள்ளை வழக்கப்படி அவரை அன்பாக வரவேற்று உள்ளே அழைத்துக் கொண்டு போய், ஒரு சோபாவில் உட்கார வைத்து, அவரது வண்டியையும் குதிரையையும் ஒப்புக்கொள்ளும்படி ஓர் ஆளை அமர்த்திவிட்டு உள்ளே வந்தார். முதல்நாளில் அவர் வடிவாம்பாளைப் பெட்டி வண்டியில் வைத்துக்கொண்டு போன பிறகு என்ன நடந்தது என்பதை அறிய ஆவல் கொண்டிருந்த சுந்தரம் பிள்ளை, அப்புறம் ஏதாவது விசேஷம் உண்டா! பெண் ஜாக்கிரதையாக உங்கள் வசத்தில் இருக்கிறாளா என்றார். சட்டைநாத பிள்ளை, "அப்புறம் ஒரு விசேஷமும் நடக்கவில்லை; நீடாமங்கலத்துக்கு சமீபத்தில் நாங்கள் போனபோது பின்புறத்தில் எங்களுக்குப் பின்னால் சில வண்டிகள் வரிசையாக வந்தன. ஆனால் அந்த வண்டிகள் நீடாமங்கலம் ரயிலடி வரையிலேதான் வந்தன; அதற்கு அப்பால் வரவில்லை. ஒருகால் ரயிலுக்கு யாராவது அவசரமாக வந்திருக்கலாம். எங்களை ஒருவரும் தொடர்ந்து வரவில்லை என்றே நான் நினைக்கிறேன். பெண்ணை மிகவும் ரகசியமான

    Enjoying the preview?
    Page 1 of 1