Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Patchai Engey Ponathu?
Patchai Engey Ponathu?
Patchai Engey Ponathu?
Ebook173 pages1 hour

Patchai Engey Ponathu?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பச்சை எங்கே போனது? என்ற இந்த சிறுகதை தொகுப்பு அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் கண்டு கேட்டும் பழகிய நிகழ்வுகளின் பதிவு. வாசிப்பு பழக்கம் குறைந்து வரும் இக்காலத்தில் இதுபோன்ற எளிய சுவையான சிறுகதைகள் வாசிப்பவருக்கு மேலும் வாசிக்க உதவக்கூடும்.

Languageதமிழ்
Release dateNov 18, 2023
ISBN6580167710220
Patchai Engey Ponathu?

Related to Patchai Engey Ponathu?

Related ebooks

Reviews for Patchai Engey Ponathu?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Patchai Engey Ponathu? - N. Solaiyappan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பச்சை எங்கேப் போனது?

    (சிறுகதை தொகுப்பு )

    Patchai Engey Ponathu?

    (Sirukadhai Thoguppu)

    Author:

    ந. சோலையப்பன்

    N. Solaiyappan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/n-solaiyappan

    பொருளடக்கம்

    என்னுரை...

    1. கானல் நீர் காட்சிகள்

    2. வலிவு

    3. ஆயுசு 100

    4. ஈகோ

    5. கண்ணீர் பூக்கள்

    6. கனமழைவிடுமுறை

    7. டாக்டர். ஜான்.

    8. தென்றலும் தென்றலும் தென்றலே

    9. பச்சை எங்கேப் போனது?

    10. பேச்சு

    11. பொங்கும் மாக் கடல்

    12. பொய் பிம்பங்கள்

    13. போன் அழைப்பு

    14. வசந்த் ஹேப்பி மச்சி

    15. வடுக்கள் அழகாகட்டும்

    16. விஷம்

    17. கவிப்பெண்ணே

    என்னுரை...

    வாழிய வையகம்!

    வாழிய தமிழ்!

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய இரண்டாவது சிறுகதை தொகுப்பு. முதல் தொகுப்பான பார்பி பொம்மை சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்ற இரண்டு கதைகள் இரு கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இரண்டாவது சிறுகதை தொகுப்பையும் எனது நண்பர்களாகிய உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

    எனது முந்தைய வெளியீடான மண் உப்பு மற்றும் நார்த்தாமலை நாவல்களை வாசித்து கருத்துக்களும் ஆலோசனைகளும் கூறிய நண்பர்கள் இந்த சிறுகதை தொகுப்பையும் வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன்.

    பொதுவாக பிறர் எதை விரும்புகிறார்களோ அதனை எழுதும் போக்கினை நான் விரும்புவதில்லை. அதேபோல வாசிப்பவர்களுக்குப் புரியாமல் மிக இலக்கிய ஆளுமைகளுடன் எழுதுவதுமில்லை. காரணம் வாசிப்புப் பழக்கம் அருகிவரும் இக்காலத்தில் என்னால் எவரும் வாசிப்பினை கைவிடும் பாதகத்தை செய்வதில்லை என்று உறுதியுடனே எனது படைப்புகளை வாசிக்க மிக எளிதானதாக படைக்கிறேன்.

    எனது எல்லாப் படைப்புகளையும் வாசித்துக் கருத்துக்கூறும் திரு. எஸ்பி. இராஜேந்திரன், திரு. மனோகர் (மாவட்ட சமூக நலத்துறை), திரு. ஏ.எல். முத்துக்குமார் (அரசு உயர்நிலைப் பள்ளி, மிரட்டுநிலை, புதுக்கோட்டை.) எனது துணைவியார் திருமதி. தேவி ஆகிய அனைவருக்கும் எனது நன்றிகள்.

    இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் பெரும்பாலும் நண்பர்கள் குழு மாத இதழில் வெளிவந்தவை. ஒரு சில கதைகள் அவைகள் எழுதப்பட்டக் கருக்களுக்காக சிறு கண்டனங்களைக்கூடப் பெற்றவை. அக்கதைகளையும்கூட நண்பர்களாகிய உங்களுக்கு முன் வைக்கிறேன்.

    வாசித்துப் பாருங்கள். நிறைகளை விடுத்துக் குறைகளை என்னிடம் கூறுங்கள். பொருத்தமானவைற்றை பொருத்திப் பார்த்து எனது எழுத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முயல்கிறேன்.

    நண்பர்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறேன்.

    நன்றி வணக்கம்.

    ஓம் சாய் ராம்.

    நன்றியுடன்,

    ந. சோலையப்பன்,

    புதுக்கோட்டை.

    அலைபேசி 8248940633.

    1. கானல் நீர் காட்சிகள்

    வாட்ஸ்அப் பதிவு - 1

    எங்கே இரண்டு நாளா ஆளையேக் காணோம். 7.35 PM

    டூர் போயிருந்தேன். 7.36 PM

    டூரா? எந்த ஊருக்கு? 7.37 PM

    மூணாறு, கேரளா. 7.39 PM

    சொல்லவே இல்லை. 7.40 PM

    சாரி திடீர்னு முடிவாயிடுச்சு. 7.42 PM

    பரவாயில்லை, குடும்பம் எல்லாரும் போனீங்களா? 7.44 PM

    இல்ல... ப்ரெண்ஸோட போனேன். 7.46 PM

    பயங்கர ஜாலிதான், ட்ரிங்க்ஸ். 7.38 PM

    கொஞ்சம், ரொம்ப கொஞ்சம். 7.48 PM

    ஏன் குடும்பத்தை கூட்டிப் போகல. 7.51 PM

    அடுத்தவாரம் கூட்டிப் போகணும். 7.52 PM

    எதுல கூட்டிப் போவீங்க. 7.55 PM

    வீட்ல இன்னோவா இருக்கு, ஒரு ஷிப்ட் டிசையர் இருக்கு, ரெண்டுலேயும் தான். 7.57 PM

    நீங்க நான்கு பேரு தானே? 7.57 PM

    அண்ணன் குடும்பம் வரும், ஆமா நீங்க எங்கேயும் போகலையா. 7.57 PM

    ம்... நாங்களா? கூட்டிட்டி போயிட்டுதான் அடுத்த வேலை. 8.00 PM

    அப்படி சொல்லாதீங்க, சார்ட்ட சொல்லுங்க, மே மாத லீவுல குழந்தைங்க என்சாய் செய்யுங்க. 8.02 PM

    அட ஏன் சார்? சரி. பாப்பா டியூசன் முடிச்சிட்டு வந்துட்டா அப்புறமா லைன்ல வர்றேன். 8.03 PM

    ஓகேம்மா. 8.02 PM

    வாட்ஸ் அப் பதிவு - 2

    குட்மார்னிங், குட்மார்னிங் பிக்சர், சூப்பர். 9.10 AM

    எங்க மேனேஜர் அனுப்பிச்சான், அதான் பார்வர்ட் செய்தேன். 9.11 AM

    ப்ரொபைல் பிக்சர் மாத்திட்டீங்க போல, சூப்பரா இருக்கீங்க. 9.13 AM

    நேர்ல இன்னும் நல்லாயிருப்பேங்க, ஆனா உங்க அளவு வரமாட்டேன். 9.14 AM

    ச்சே... நான் ஒண்ணும் அவ்வளவு அழகில்லை. 9.15 AM

    சும்மா சொல்றீங்க, நீங்க சராசரி அழகில்லை. 9.17 AM

    சொல்லாடல் சூப்பர். 9.18 AM

    உங்கள் ப்ரொபைல் பிக்சர்ல மயங்கிதானே முகநூல் நண்பரானேன். 9.18 AM

    ரொம்ப புகழ்றீங்க சார். 9.19 AM

    உண்மையச் சொல்றேன். 9.20 AM

    உண்மையைச் சொன்னா உங்க முகத்துல தெரிஞ்ச கம்பீரம்தான் என்னை வலிய வந்து ரெக்யூஸ்ட் செய்ய வைத்தது. 9.22 AM

    பெரியப் பதிவு, கூடுதலான புகிழச்சி. 9.23 AM

    உண்மைதான் சார். 9.24 AM

    தயவு செய்து பதிவுகளை அன்றாடம் அழிச்சிடுங்க. 9.25 AM

    நான் ஒரு பெண். நான் சொல்ல வேண்டியது. யு வார் எ ஜென்டில்மேன். 9.26 AM

    ஆபிஸ் கிளம்பியாச்சா? 9.27 AM

    ஆன் த வே பஸ். 9.28 AM

    ஓக்கே, மதியம் கூப்பிடுறேன். 9.29 AM 9.30 AM

    ஓக்கே, பை. 9.31 AM

    வாட்ஸ் அப் பதிவு – 3

    கவிதை சூப்பர். 8.45 PM

    சார் நான் எழுதினதில்லை. படித்தது. 8.46 PM

    இருந்தாலும் அழகா பதிவிட்டிருந்தீங்க. 8.48 PM

    எல்லாத்துக்கும் பாராட்டுவீங்களா? 8.49 PM

    எல்லாரையும் பாராட்டலாமே. ஒண்ணும் தப்பில்லம்மா. 8.49 PM

    வெறும் வார்த்தைதானே. 8.50 PM

    அதில்லைம்மா, நான் அருகிலில்லை, இல்லைன்னா தினந்தோறும் பரிசளிப்பேன். 8.51 PM

    ம்... பெரிய கம்பெனி ஓனர். செய்ய வேண்டியதுதான். 8.52 PM

    பெரிய பணக்காரன் இல்லைன்னாலும் செய்வேன். 8.53 PM

    என்ன கம்பெனி? 8.53 PM

    கிரைண்டர் கம்பெனி. 8.54 PM

    ஒரு நூறுபேர் வேலைப் பார்ப்பாங்களா? 8.56 PM

    இருநூற்றி ஐம்பது பேர். 8.56

    அடேயப்பா, பெரிய கம்பெனிதான். 8.57 PM

    அதை விடுங்க, நைட் என்ன டிபன்? 8.57 PM

    பூரியும், கிழங்கும். இரண்டும் சாப்பிட்டு அதுங்க ரூமுக்கு போயிடுச்சுங்க. 8.59 PM

    சார்? 8.59 PM

    பேங்க் மேனேஜர், கேம்ப் போயிருக்கார். சேலம். 9.01 PM

    எத்தனை நாள்? 9.03 PM

    இரண்டு நாள். 9.04 PM

    ரொம்ப கஷ்டமில்லை உங்களுக்கு? 9.04 PM

    அதொண்ணுமில்லை அவங்க இருந்தாலும், இல்லாட்டியும் ஒண்ணுதான். 9.06 PM

    ஏன்? 9.06 PM

    இங்கே இருந்தா போதையில பத்து மணிக்கு வருவார். ஷு கூட கழட்டாம பெட்ல விழுந்துடுவார். 9.08 PM

    சாரி, உங்கள் சோகங்களை கிளறுறேன். 9.08 PM

    இல்லை சார், யார்கிட்டயும் பகிர்ந்துக்கவே முடியல, கடவுள் புண்ணியத்துல நீங்க கிடைச்சீங்க. 9.11 PM

    ஓக்கே. 9.11 PM

    உங்களுக்கு ஒண்ணும் டிஸ்டர்ப் இல்லையே சார். 9.13 PM

    நோ. நோ. ஒரேயொரு டிஸ்டர்ப்தான். 9.14 PM

    என்ன? 9.15 PM

    சார் வேணாமே ராஜ்ன்னே கூப்பிடலாமே? 9.15 PM

    நீங்க சுதான்னு கூப்பிடறதா இருந்தா. நானும் ராஜ்னு கூப்பிடறேன். 9.16 PM

    சுதா, சொல்ல சொல்ல இனிக்குது. 9.17 PM

    ராஜ், என்னைய இந்த மாதிரி மகிழ்வூட்டியது யாருமே இல்லிங்க. 9.19 PM

    ம்... வாழ்க்கையில ஒரே ரசனையுள்ள இரண்டு பேரை ஆண்டவன் இப்படித்தான் பிரிச்சுப்போடறான். 9.20 PM

    உங்க மனைவியும் படத்துல அழகாய்த்தானே இருக்காங்க. 9.21 PM

    அவளும் சுமாரான அழகுதான். ஆனா என்னை மாதிரி பிஸினஸ்ல இருக்கறவங்களுக்கு வீட்டுக்குப் போனா ரிலாக்ஸ் வேணும். ஆனா கிடைக்காது. புகார் பட்டியல்தான் நீளும். சாரி, நீளமான பதிவு. 9.4 PM

    அது ஒண்ணும் பிரச்சனையில்லை. ஆனா ரொம்ப வேகமா பதிவிடுறீங்க. 9.26 PM

    நன்றி, சாப்பீட்டிங்களா? 9.27 PM

    இன்னும் இல்லை ராஜ். சாப்படவே பிடிக்கல. 9.29 PM

    சார் இல்லாம கஷ்டமா இருக்கா? 9.30 PM

    நீங்க வேறங்க. அவரு இல்லைன்னாதான் புல்லா சாப்பிடுவேன் நல்லா தூங்குவேன். 9.32 PM

    அப்புறமென்ன. 9.32 PM

    என்னமோ தெரியல. ஆபீஸ்லயும் நிம்மதியில்லை. 9.33 PM

    ... 9.34 PM

    பதிவுல இருக்கீங்களா? 9.36 PM

    இருக்கேன்மா, உங்க சோகங்களை கிளறிவிட்டு வேதனைப் படுத்தறேனோன்னு வருத்தப்படறேன். 9.38 PM

    அட நீங்க வேற ராஜ் உங்கள்கிட்ட பரிமாறிக்கிட்ட பின்னாலதான் ஓரளவு ரிலாக்ஸா இருக்கேன். என் சோகம் சொல்லி உங்களைத்தான் ரொம்ப டிஸ்டர்ப் பண்றேன். 9.41 PM

    ச்சே அதெல்லாம்மில்லை. நீங்க வாங்கற சம்பளத்துல என்கிட்ட பத்து பேரு வேலை பார்க்கிறான். நீங்க எனக்கு பக்கத்து ஊரா இருந்தா இதை விட நல்ல போஸ்ட்ல உங்கள அமர்த்தி எங்கூடவே வச்சிருப்பேன். 9.45 PM

    அதாவது வச்சிப்பீங்க அப்படித்தானே? 9.47 PM

    "ஐய்யையோ, நான்

    Enjoying the preview?
    Page 1 of 1