Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இறப்பிற்கும் வாழ்விற்கும் இடையில்
இறப்பிற்கும் வாழ்விற்கும் இடையில்
இறப்பிற்கும் வாழ்விற்கும் இடையில்
Ebook542 pages3 hours

இறப்பிற்கும் வாழ்விற்கும் இடையில்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1990களில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் காலத்தைக் கடந்து நிற்கிறது. அந்தக் காலத்தில் இறப்புக்குப் பின்னர் ஒரு வாழ்வு என்ற இத்தகைய ஒரு கருத்தே பொது இடங்களில் பேசப்படாத, பயம் கலந்த ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போதோ மக்கள் ஒரு திறந்த மனதுடன் இதனைப் பற்றி பேசவும், இறப்புக்குப் பின்னர் அடையக்கூடிய இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும் ஆர்வம் கொண்டுள்ளனர். கடந்த பல வருடங்களில் என் முன்னர் வைக்கப்பட்ட பல கேள்விகளையும், பிற்பாடு பெற்ற புது விபரங்களையும் 2013ல் இந்தப் புத்தகத்தில் சேர்த்திருக்கிறேன். 1968ல் நான் முதன்முதலில் கண்டு எழுதிய இந்த விபரங்கள் இதுவரை முரண்படவோ, மறுக்கப்படவோ இல்லை. மறைந்து போன அறிவுகளைத் திரும்ப வெளிக் கொண்டுவரும் இந்தத் துறையில் எனது கடந்த நாற்பத்தைந்து வருடத் தொடர்ந்த தேடுதல்களால் புது விபரங்கள் வெளியாகிச் சேர்க்கப்பட்டுள்ளன.
--டோலோரெஸ் கேனன்

Languageதமிழ்
Release dateNov 30, 2021
ISBN9781005579074
இறப்பிற்கும் வாழ்விற்கும் இடையில்
Author

Dolores Cannon

Dolores Cannon is recognized as a pioneer in the field of past-life regression. She is a hypnotherapist who specializes in the recovery and cataloging of "Lost Knowledge". Her roots in hypnosis go back to the 1960s, and she has been specializing in past-life therapy since the 1970s. She has developed her own technique and has founded the Quantum Healing Hypnosis Academy. Traveling all over the world teaching this unique healing method she has trained over 4000 students since 2002. This is her main focus now. However, she has been active in UFO and Crop Circle investigations for over 27 years since Lou Farish got her involved in the subject. She has been involved with the Ozark Mountain UFO Conference since its inception 27 years ago by Lou Farish and Ed Mazur. After Lou died she inherited the conference and has been putting it on the past two years. Dolores has written 17 books about her research in hypnosis and UFO cases. These books are translated into over 20 languages. She founded her publishing company, Ozark Mountain Publishing, 22 years ago in 1992, and currently has over 50 authors that she publishes. In addition to the UFO conference she also puts on another conference, the Transformation Conference, which is a showcase for her authors. She has appeared on numerous TV shows and documentaries on all the major networks, and also throughout the world. She has spoken on over 1000 radio shows, including Art Bell's Dreamland, George Noory's Coast to Coast, and Shirley MacLaine, plus speaking at innumerable conferences worldwide. In addition she has had her own weekly radio show, the Metaphysical Hour, on BBS Radio for nine years. She has received numerous awards from organizations and hypnosis schools, including Outstanding Service and Lifetime Achievement awards. She was the first foreigner to receive the Orpheus Award in Bulgaria for the highest achievement in the field of psychic research. Dolores made her transition on October 18, 2014. She touched many and will be deeply missed.

Related to இறப்பிற்கும் வாழ்விற்கும் இடையில்

Related ebooks

Reviews for இறப்பிற்கும் வாழ்விற்கும் இடையில்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இறப்பிற்கும் வாழ்விற்கும் இடையில் - Dolores Cannon

    ஒளிநிலை ஜீவருடனான உரையாடல்கள்

    இறப்பிற்கும்

    வாழ்விற்கும்

    இடையில்

    டோலோரெஸ் கேனன்

    இறப்பிற்கும் வாழ்விற்கும் இடையில்

    (ஒளி உலகங்களில் நிகழ்வது என்ன?)

    ஒளிநிலை ஜீவருடனான உரையாடல்கள்

    ஆசிரியர்

    டோலோரெஸ் கேனன்

    தமிழாக்கம்: என். வேங்கடசுப்ரமணியன்

    ஒஸார்க் மௌண்டன் பப்ளிஷிங், Inc.

    த.பெஎண் 754, ஹண்ட்ஸ்வில், AR 72740-0754

    உரிமைப்பதிவு 1993 டோலோரெஸ் கேனன்
    எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. பதிப்பாளரின் எழுத்து வடிவிலான முன் அனுமதி இன்றி இந்தப் புத்தகத்தை முழுமையாக அல்லது பகுதியாக எடுத்தாள்வதோ, மின்னணுவியல், நிழற்படம் அல்லது கருவிகள் வாயிலாக அனுப்புவதோ அல்லது உபயோகப்படுத்துவதோ கூடாது. போட்டோ காப்பி, ஒலிப்பதிவு செய்தல், அல்லது திரும்பப் பெறும் அமைப்புகளில் பதிவிடுதல் போன்றவை கூடாது. இலக்கியக் கட்டுரைகளில், ஆய்வுகளில் சிறிய மேற்கோள்கள் எடுத்தாளப்படலாம்.
    முன் அனுமதி பெற, சுருக்க அல்லது தொடராக்கத்திற்கு அல்லது எங்கள் மற்ற நூல்களின் பட்டியலிற்கு கடிதம் மூலம் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
    அனுமதிகள் துறை,
    ஒஸார்க் மௌண்டன் பப்ளிஷிங் Inc.,
    த.பெ.எண் 754, ஹண்ட்ஸ்வில், AR 72740-0754
    வெளியீட்டாளர்:
    ஒஸார்க் மௌண்டன் பப்ளிஷிங், Inc.
    த.பெ.எண் 754, ஹண்ட்ஸ்வில், AR 72740
    800-935-0045 அல்லது 479-738-2348 fax:479-738-2448 WWW.OZARKMT.COM
    யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்காவில் அச்சிடப்பட்டது.
    ஓ மரணமே!
    கர்வப்படாதே!
    நீ ஒன்றும் பெரிதல்ல, உன்னைச்
    சிலர் வலிமையானது எனலாம்,
    சிலரோ பயமுறுத்துவது எனலாம்.
    ஆனால் அவ்வாறல்ல.
    உன்னைத் தூக்கி
    அப்பால் வீசிடுவோருக்கு,
    நீ இல்லவே இல்லை,
    பரிதாபத்திற்குரிய நீ
    ஒருபோதும் என்னைக்
    கொல்ல முடியாது.

    ஜான் டோன் (1573-1631)

    மரணம்--ஸானெட் கவிதை
    Frame1

    Glossary of Terms as Translated

    அருஞ்சொற்கள் விளக்கத் தொகுதி

    அடிப்படைகள் - Elementals
    அமர்வுகள் - Sittings
    அமைப்பு - Pattern
    அலைமாலை, நிறமாலை - Spectrum
    அலைவீச்சுநிலை - Frequency
    ஆசிரியர் - Author
    ஆயுள் காப்பீடு - Insurance
    ஆழ்மன உணர்வுகள் - Intuitive Feelings
    ஆழ்மனம் - Psychic
    இயேசு - Jesus
    ஒளிஉலகத் தளங்கள் - Spiritual Planes
    கணப்புப்பிறை - Fire Place
    சுய ஒளி - Aura
    சொர்கம் - Paradise
    துருவ ஒளி - Aurora Borealis
    பயனாளி - Subject
    பறக்கும் தட்டு - UFO
    பிசாசுகள் - Ghosts
    போல்டர்கைஸ்ட் - Poltergeist
    மரணவிளிம்பு அனுபவம் - Near Death Experience
    மனஉறக்க நிலை - Deep Hypnosis State
    முப்பரிமாணக் காணொலி - Hologram
    மேல்நிலை சொர்கம் - Heaven
    வரைபட மேலீடு - Map Overlay
    வாகனம் - Vehicle
    ஜீவர்கள் – Spirits

    அத்யாயம் 1

    ஓர் இறப்பு அனுபவம்

    'கூடவே கூடாது. இறந்த ஜீவர்களுடன் பேசுவதாவது. அவ்வாறெல்லாம் தொடர்பு கொள்ளவே கூடாது' என்பதே எனது மதம் சார்ந்த வட்டார நண்பர்களின் மறுப்புக் குரலாக இருந்தது. அது உண்மையாக இருக்கலாம் என்றாலும் நான் அவ்வாறு நினைக்கவில்லை. ஒரு வேறுபாடு என்னவென்றால், எந்த இறந்தவர்களிடம் நான் பேசுகிறேனோ, அவர்கள் அனைவரும் இப்போது மீண்டும் பிறந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வாழும் ஒருவரின் கடந்த பிறவிகளை ஆய்வு செய்பவராகவே நான் இருந்தேன். 'முற்பிறவி ஆய்வாளர்' என்று கூறலாம். கடந்த பிறவிகளின் நிகழ்வுகள் மற்றும் வெளிப்படும் சரித்திரக் குறிப்புகளை ஒப்பிட்டு ஆராய்வது என்பது மன ஆராய்ச்சித் துறையின் ஒரு சிறப்பான பகுதி.

    காலத்தில் பின்னோக்கிச் சென்று என்னால் ஒருவரின் கடந்த காலப் பிறவிகளுடன் உண்மையாகவே பேச முடியும் என்பதைப் பலராலும் நம்பவே முடியவில்லை. ஆனால் எனக்கு இது மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அது மட்டுமின்றி எளிதில் இயல்பாக அது எனக்குக் கைவந்தது. இந்த அற்புதமானதோர் வேலையில் எனது சாதனைகளை விவரித்துப் பல புத்தகங்கள் எழுதி உள்ளேன்.

    பல மன ஆய்வாளர்களுக்கு முற்பிறவிகள் சார்ந்த ஆய்வுகள் கைக்கு எட்டாதவையாகவே இருந்தன. ஏன் இவ்வாறு என்பது எனக்குப் புரியவில்லை. ஒருவேளை தெரியாத ஒன்றில் மூக்கை நுழைப்பானேன் என்ற எச்சரிக்கை உணர்வாகவும் இருக்கலாம். உறுதியாகத் தெரிந்த ஒன்றை மட்டும் செய்தால் போதும் என்றும் நினைத்திருக்கலாம். ஒரு சமயம் இவர்களில் ஒருவர் மட்டும் என்னிடம் காதோடு இரகசியம் போலச் சொன்னார் -- அவர் ஒருவரைக் குழந்தைப் பருவம்வரை மனதளவில் கொண்டு சென்று விட்டாராம். பெரியதோர் சாதனையைப் புரிந்துவிட்ட பெருமிதம் அவர் குரலில் தொனித்தது.

    நான் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அவரிடம் கூறினேன், 'ஓ. அதுவரை போய்விட்டீர்களா? நல்லது. ஆனால் அங்கிருந்துதான் நான் என் வேலையையே தொடங்குகிறேன்.'

    நிவாரணத்திற்காகக் கடந்த பிறவிகளின் நினைவுகளை ஆராயும் மற்ற நிபுணர்கள் கூட ஒரு பயத்துடனேயே பணி செய்கிறார்கள். ஒருவரைக் காலத்தில் பின்னோக்கி எடுத்துச் செல்கிறார்கள். அவர்களின் கடந்த மரணகாலம் மற்றும் அதன் பின்னர் மீண்டும் பிறக்கும் வரையிலான காலம் (பூமியில் அவர்கள் இறந்துவிட்டவர்களாய் நினைக்கப்படும் காலம்) முதலியவற்றை கடந்து செல்லும்போது வசிய உறக்கத்திலிருக்கும் நோயாளிகளின் புற உடலுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற அச்சம் அவர்களிடம் அதிகமாக உள்ளது. அதிலும் கடந்த காலப் பிறவிகளின் துயர அனுபவங்கள் கூடுதலாகத் தென்படும்போது அந்த நிபுணர்கள் பதட்டமாகி விடுகின்றனர்.

    ஆயிரக் கணக்கான இத்தகைய சூழ்நிலைகளைக் கையாண்டிருக்கிறேன். எவ்வளவு துயரமான கடந்தகால அனுபவங்களும், மரண அவஸ்தைகளும் கூட நோயாளிகளின் புறஉடலுக்குப் பாதிப்பைத் தராது என்பது எனக்குத் தெரியும். என்னுடைய வழிமுறைகள் மிகவும் பாதுகாப்பானவை. நோயாளிகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்பட வழியே இல்லை. அவ்வாறில்லாவிட்டால் இத்தகைய முயற்சிகளிலே நான் இறங்கியிருக்க மாட்டேன். நோயாளிகளின் பாதுகாப்பிலே நான் மிகுந்த எச்சரிக்கை எடுத்துக் கொள்கிறேன்.

    மேலே குறிப்பிட்டது போல எந்த இடத்தைக் கையாள மற்ற நிபுணர்கள் தயங்குகிறார்களோ, அதுவே எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. ஆம், அது ஒரு அற்புதமான இடைவெளி நேரம். மரணத்திற்குப் பின், ஆனால் மீண்டும் பிறப்பதற்கு முன் உள்ள இடைப்பட்ட நிலை. அங்கிருந்து பெறப்படும் அறிவு மற்றும் செய்திகள் மனிதகுலத்துக்கு மிகவும் பயன்தரத் தக்கவை என்பது என் கருத்து. இதன் மூலம் இறப்பிற்குப் பயப்பட வேண்டியதில்லை என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள். மரண அனுபவம் ஏற்கனவே நமக்கு அறிமுகமான ஒன்றுதான் என்பது மரணத் தறுவாயில்தான் தெரியும். அது மிகவும் பழக்கமான ஒன்று என்பதும் புரியும். நாம் பலமுறை அதனை அனுபவித்து வெளியேறி இருக்கிறோம். வெளியேறிய பிறகுதான் தெரிந்த, அறிமுகமான, பலமுறைகள் வந்து சென்ற மிகவும் பழக்கப்பட்ட ஒரு இடத்திற்குத்தான் வந்திருக்கிறோம் என்பதை உணர்வோம். அதனையே சொந்த இடம், சொந்த வீடு என்று அழைக்கின்றனர்மக்கள் பிறப்பையும் இறப்பையும் இயல்பான, இயற்கையான, ஜீவனின் முன்னேற்றத்திற்கான, ஒரு வழியாகவே காண்பார்கள் என நம்புகிறேன். இந்தச் சுழலை நாம் பலமுறைகள் அனுபவித்திருக்கிறோம். இறப்பிற்குப் பின்னரும் ஒளியின் மற்ற தளங்களில் அவரவர்களுக்கென ஒரு வாழ்வு உள்ளது. இப்போதைய உலக வாழ்க்கையைப் போலவே, ஏன் இன்னும் அதிக உண்மையாகவே, அதுவும் உணரப்படும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஒரு சமயம் தன்னை உணர்ந்து ஒளி பெற்றிருப்பதாகக் கருதிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்தேன். நான் கண்டறிந்த சில உண்மைகளை அவருக்கு விவரிக்க முயன்றேன். இறப்பு என்பது எவ்வாறிருக்கும் என்பது பற்றியும் அதன் பின் செல்லும் தளங்களைப் பற்றியும் நான் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன் என்று அவரிடம் கூறினேன். அவர் மிகுந்த ஆச்சரியத்துடன் 'நாம் எங்கே செல்வோம் சொர்கத்திற்கா, நரகத்திற்கா அல்லது பாவக்கழிவகற்றி தூய்மைப்படுத்தும் இடங்களுக்கா' என்று வினவினார்.

    நான் ஏமாற்றமடைந்தேன். இவைதான் அவர் அறிந்தவை என்றால் அவர் நினைக்கிற அளவு அவர் ஒளி பெறவில்லையோ என எண்ணினேன்.

    இவை அல்ல என்று சிறிது எரிச்சலுடன் பதிலளித்தேன். 'அப்படியானால் மிக மோசமான அழுக்குக் குவியலில் கிடப்போமா?' என்றார் அவர்.

    இப்படியாக இந்தப் புத்தகத்தை எளிதில் புரியும் வண்ணம் எழுத வேண்டுமானால், நான் இந்த அறிவினைப் பெறுமுன் எந்த இடத்தில், எந்த நிலையில் இருந்தேனோ அங்கிருந்து துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். இது எளிதான காரியமல்ல. ஆனாலும் அவசியமான ஒன்றுஅறிவை, மேலும் ஒளியைத் தேடிச் செயலாற்றுபவர்களுக்கு எளிதில் புரிய வேண்டுமானால், அதனை நான் செய்தே ஆகவேண்டும். அவர்களுக்குப் புரியும் வண்ணம், அவர்கள் தற்போது உணரும் நிலையிலிருந்தே துவங்கிட வேண்டும். மெல்ல மெல்ல உணர வைத்துப் புரிதலை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களால் எதிர்கால பயங்களின்றி இப்போதைய வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து பயன் பெற முடியும்.

    பலருக்கும் 'மரணம்' என்ற சொல்லே கேட்க விரும்பாததாக, முடிந்த ஓர் முடிவாக, நம்பிக்கையை அழிப்பதாக உள்ளது. மரணம் என்பது அவர்களுக்கு ஓர் இருளான, குழப்பமான சூழலையே கண்முன் நிறுத்துகிறது. அவர்கள் அறிந்திருக்கிற இப்போதைய திட உலகிலிருந்து அவர்களை வலிந்து வெளியேற்றி துன்பக் கடலில் மரணம் ஆழ்த்திவிடும் என்பதாகவே நினைக்கிறார்கள். வாழ்வின் பல அம்சங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதுபோலவே மரணமும் தெரியாத ஒன்று. மர்மமான ஒன்று. கட்டுக்கதைகளும் மூட நம்பிக்கைகளும் கலந்த ஒன்று. எனவே அதனைக் கண்டாலே, அதன் பெயர் கேட்டாலே அனைவரையும் அச்சம் ஆட்கொள்கிறது. ஆனாலும் அனைவரும் அதனை எதிர்கொண்டே ஆகவேண்டும். தவிர்க்க இயலாது. மரணம் என்ற எண்ணத்தை முழுவதுமாக மனதைவிட்டு விலக்கவே அனைவரும் நினைக்கிறோம். ஆனாலும் உடல் என்பது மிகவும் தற்காலிகமானது, காலவெள்ளத்தில் மறைய வேண்டியது என்பது மறுக்கமுடியாத உண்மை.

    பின் என்னதான் நடக்கிறது? நாம் என்று இப்போது உணர்ந்திருக்கும் ஒன்று உடலுடன் அழிந்து விடுகிறதா? அதோடு அனைத்தும் முடிவிற்கு வந்து விடுமா? இல்லை என்றால் அதற்குப் பிறகும் ஒரு அழகான கிடைத்தற்கரிய வாழ்க்கை உண்டா? தேவாலயங்கள் நல்லவர்களுக்கும் நேர்மையாளர்களுக்கும் சொர்கம் கிடைக்கும் என்றும், தீமையாளருக்கும் தாழ்ந்தோருக்கும் நரகம்தான் என்றும் போதிப்பது சரியாகவே இருக்கலாம். பலரும் இதன் உண்மைத்தன்மையை அறிய ஆர்வமாகவே இருப்பார்கள். நானும் அளவிடமுடியாத ஆர்வத்துடன் விடைகாண முயன்று கொண்டிருக்கிறேன். இறுதியில் என்ன நடக்கும் எனக் கவலைப்படுவதை விடுத்து, அன்பும் மகிழ்ச்சியுமாக வாழ்ந்தால், நமது வாழ்வே மிக எளிதான ஒன்றாக மாறிப்போகும். இது உறுதி.

    முற்பிறவி ஆய்வுகளை நான் தொடங்கும்போது, இத்தகைய கேள்விகளுக்கு எனக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. எனக்குச் சரித்திரம் மிகவும் விருப்பமானது. ஆகவே காலத்தில் பின்னோக்கிச் சென்று பல்வேறு கால கட்டங்களைச் சார்ந்த சரித்திரப் பாத்திரங்களுடன் உரையாடுவது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. கடந்த காலப் பின்னணியில், அவர்கள் கண்முன்னால், அவர்தம் வாழ்க்கை விரிந்து அவர்களுக்கு உண்மையானதோர் வாழும் உணர்வை அளித்துக் கொண்டிருக்கும்போதே, அவர்களுடன் உரையாடித் தெரிந்து கொள்வது மிக்க மகிழ்வை அளித்தது. ஆழ்மனதிலிருந்து அவர்கள் அறியாமலேயே தங்கள் வாழ்வை விவரித்தார்கள். அத்துடன் அப்போது உடனிருந்த மற்றவர்களின் விபரங்களும் தெரிய வந்தன. இவற்றில் சற்றும் எதிர்பாராத ஒரு அடிப்படை ஒற்றுமை இருந்தது. இவற்றை நான் மற்றவர்கள் பார்வைக்காகப் புத்தகங்களாக எழுத எண்ணினேன்.

    இந்தக் கட்டத்திலே எதிர்பாராமல் ஒரு நிகழ்வு வெளியானது. அதிலே பல புதிய கோணங்களிலான விரிவுகள் என் பார்வைக்கு, ஆராய்ச்சிக்குக் கிடைத்தன. அது இறப்புக்கும் மறுபடி மீண்டும் பிறப்புக்குமான ஒரு இடைநிலை. பூமியிலே இறந்து இந்த வாழ்விலிருந்து மறைந்து விட்ட ஒரு நிலை. எங்கே இறந்தபின் ஜீவர்கள் சென்றடைகிறார்களோ அந்த அற்புத நிலை.

    முதன்முதலாக இறந்தோர் வாழும் உலகின் கதவுகள் வழியாக ஒரு நாள் எதிர்பாராமல் எட்டிப் பார்த்தது இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது. ஒரு பயனாளியை (subject) கடந்த பிறவிகளுக்கு எடுத்துச் செல்ல முயன்று கொண்டிருந்தேன். சென்ற பிறவியின் மரணநிலையை என் கைகளிலே அவர் எட்டியிருந்தார். அனைத்தும் விரைவாக நொடிப்பொழுதில் நிகழ்ந்தது. ஆகவே எந்த முன்னேற்பாடுகளும் என்னால் செய்து கொள்ள நேரமில்லாமல் போயிற்று. என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை என்னால் முழுவதுமாக உணர முடியவில்லை. என் கணிப்புக்கு அப்பாற்பட்டதாக அது இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்துவிட்டபடியால் என்னால் அதனை நிறுத்தவும் முடியவில்லை. உடலிலிருந்து வெளிவந்துவிட்ட அவர் உணர்வு, மேலேயிருந்து தன் உடலைக் காண முடிந்தது. எல்லா இறந்த நிலை உடல்களைப் போலத்தான் தன் உடலும் தென்படுவதாக அவர் கூறினார். அவருடைய உணர்வுநிலை சிறிதும் மாறுபடாமல் அப்படியே இருந்ததை நான் அதிசயத்துடன் கவனித்தேன். இது மிகவும் முக்கியமானது. மரணம் தனது உணர்வை மாற்றிவிடும் என்று பலர் அச்சம் கொள்கிறார்கள். தனது உறவினர்களும் மரணமடையும்போது அவ்வாறே வித்யாசமாக, இனங்கண்டு கொள்ள முடியாதவாறு, மாறிவிடுகின்றனர் என்றும் எண்ணுகிறார்கள். தெரிந்திராத ஒன்றைப் பற்றிய அச்ச உணர்வே இது. இல்லாவிடில் பிசாசுகளைப் பற்றியும் ஆவிகளைப் பற்றியும் மனிதர் அஞ்சுவதேன்? மரண நிகழ்வு நமது பிரியமானவர்களையும் தீயவராக, அச்சத்திற்குரியவராக, மாற்றிவிடும் என்று தவறாக நினைக்கிறோம்.

    ஆனால் அவ்வாறு ஒருவருடைய தன்னுணர்வு எந்த மாற்றத்தையும் அடைவதில்லை என்பதை நான் கண்டறிந்தேன். சிற்சில சமயங்களில் சில தற்காலிக குழப்பங்களை எதிர்கொள்ள நேரிடினும், ஆதாரமான தன்னுணர்வு அப்படியேதான் இருக்கிறது.

    ஓ. இப்போது மனஉறக்கத்திலிருக்கும் என் பயனாளி சென்ற பிறவியில் மரணமடைந்துவிட்டார். இந்தப் பிறவிக்கு இன்னும் வரவில்லை. அப்படியானால் இடைப்பட்ட நிலையில் உள்ளார். ஆச்சர்யம்! அவருடன் என்னால் பேச முடிகிறது. அற்புதம்! எனக்குள் விடை காண முடியாமல் நான் வியந்து கொண்டிருந்த பற்பல கேள்விகள் தன்னால் விடைதேடி எழும்பிக் கொண்டிருந்தன. பலவற்றுக்கு விடைகளும் கிடைத்தன.

    இதன் பிறகு இவ்விதமான நிலைமைக்கு மனஉறக்கத்தில் ஆழ்ந்து செல்ல முடிந்த பற்பல பயனாளிகளிடமும் நான் ஆய்விற்காக இதே கேள்விகளை மறுபடி மறுபடிக் கேட்டு விடைகளைக் குறித்துக் கொண்டேன். இந்தப் பதில்களிலே பயனாளிகளின் மத நம்பிக்கைகள் அல்லது நம்பிக்கையின்மை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எந்த மதமாயினும் பதில்கள் ஒன்றுபோலவே இருந்தன. வார்த்தைகள் வேறுபட்டாலும், கருத்து ஒன்றுதான். இதுவே ஒரு செய்தியாகும் நிகழ்வுதான்.

    1979ல் துவங்கி பல நூற்றுக் கணக்கான பயனாளிகள் இந்த மரண நிலைக்குச் சென்று, உணர்ந்துமீண்டிருக்கின்றனர். கடந்த மரணத்தின்போது விதம் விதமான முறைகளில் அவர்கள் இறப்பைத் தழுவியிருந்தனர். விபத்துகளால், துப்பாக்கி குண்டுகளால், கத்திக்குத்துக்கு ஆட்பட்டு, நெருப்பில் அகப்பட்டுதற்கொலையால், தலை துண்டிக்கப்பட்டு, நீரிலே மூழ்கி என்று பலவிதங்கள். ஒருவர் அணுக்கதிர் வீச்சுத் தாக்கத்தால் கூட இறந்திருந்தார். (இதனை 'ஒரு ஜீவன் ஹிரோஷிமாவை நினைவு படுத்திக் கொள்கிறது' என்ற எனது புத்தகத்தில் பதிவிட்டுள்ளேன்). இயற்கையாகவும் பலர் மரணத்தைத் தழுவியிருந்தனர். இதயக் கோளாறுகள், பல்வேறு நோய்கள்வயோதிகம், காரணமேயில்லாமல் உறக்கத்திலேயே என்று வெவ்வேறு காரணங்கள். பல்வேறு விதங்களில் மரணமுற்றிருந்த போதும் அவைகளுக்கிடையில் சில ஒற்றுமைகளும் காணக்கிடைத்தன. மரணம் எவ்வாறு நிகழ்ந்த போதிலும் அதன் பின்னர் நிகழ்ந்தவை ஏறக்குறைய ஒன்றாகவே இருந்தன. 'உண்மையாகவே மரணத்தைக் கண்டு அஞ்சவே தேவையில்லை' என்ற முடிவிற்குத்தான் என்னால் வரமுடிந்தது. மரணத்தின்போது என்ன நிகழ்கிறது என்பதும், அப்பால் உள்ளவை பற்றியும் நமது உள்மனம் அறிந்தே இருக்கிறது. நாம் பலமுறை அந்த அனுபவங்களை மீண்டும் மீண்டும் அடைந்திருக்கிறோம். மரணத்தை மற்றும் அது கடந்த நிலை பற்றிய இந்த ஆய்வுகள், உயிர் என்ற இருப்பு நிலை எப்படிக் கொண்டாடப்படுகிறது என்பதனை வெளிப்படுத்தக் கண்டேன். அது களையில்லாத ஒரு வறண்ட பாலைவனமல்ல. அதிக உயிரோட்டமுள்ள, மிகவும் அற்புதமான ஒரு மறு உலகம்.

    இறப்பிற்குப் பின்னரே நாம் உண்மையான அறிவைப் பெறுகிறோம். உடலைத் துறக்கும்போது ஏதோ ஒன்று நமக்குள் நிகழ்கிறது. புத்தம்புதுக் கோணத்தில் நமது அறிவு விரிவடைகிறது. இதனால் நாம் நமது பௌதிக உடலினுள் பலவிதத்திலும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறோம் என்பது தெரிகிறது. பௌதிக உடல் விலகுவதால் நாம் நினைத்துப் பார்க்கக் கூடியவற்றுக்கும் மேலாகப் பலவற்றை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. மேலான ஒரு அறிவுத் திறன் வாய்க்கிறது. மரணம் தாண்டிய ஒளிநிலை ஜீவருடன் பேசியபோது, பற்பல குழப்பமான வினாக்களுக்கும் விடைகாண முடிகிறது. மனித குலத்தினால் படைப்பின் துவக்கத்திலிருந்தே அறிய முடியாத, மிகச் சிக்கலான கேள்விகளுக்கும் விடைகள் கிடைத்தன. விடைகள் அந்தந்த ஒளிநிலை ஜீவர்களின் உள்வளர்ச்சிக்கு ஏற்ப அமைந்திருந்தன. சில ஜீவர்கள் மற்றவர்களைவிட அதிகப்படியான அறிவுடன், நாம் புரிந்துகொள்ளும் விதமாகத் தெளிவாக விளக்கும் திறனைப் பெற்றிருந்தனர். அவர்கள் என்ன அனுபவங்களை அடைந்தார்கள், வெளிப்படுத்தினார்கள் என்பதை அவர்கள் வாயிலாகவே விளக்க முற்படுகிறேன். அவ்விதமாகப் பல ஒளிநிலை ஜீவர்களால் வெளிப்படுத்தப் பட்டவைகளின் தொகுப்பாகவே இந்தப் புத்தகம் அமைகிறது.

    பொதுவாக இறப்பின்போது பலராலும் உணரப் படுபவைகளை இங்கு விவரிக்கிறேன்.

    இறக்கும் தருவாயில் முதலில் மிகவும் குளிரான ஒரு உணர்வு. பின் உடலை விட்டுப் பிரிந்து உடலின் அருகாமையில் இருந்து தன் உடலைத் தானே நோக்குவது. தனது நிலையைத் தான் அற்புதமாக உணரும்போது ஏன் அருகிலுள்ளோர் சோகமாக இருக்கின்றனர் என்று வியப்பது.ஒரு மகிழ்வான நிறைவான உணர்வு. அச்சமற்ற நிலை.

    ஒரு 80 வயதுப் பெண்மணி வயோதிகத்தால் இறக்கும்போது தான் உணர்ந்ததை வெளிப்படுத்தினார். பொதுவாக அனைத்து இறப்பு உணர்வுகளும் இதுபோன்றே அமைந்திருக்கிறது. அவருடனான உரையாடல் கீழே.

    (புத்தகம் நெடுகிலும் ஆசிரியரே பயனாளிகளைக் கேள்விகள் கேட்கிறார். பயனாளிகள் பதில் சொல்கிறார்கள். ஆகவே கேள்விகள் 'கே' என்றும் பதில்கள் 'ப' என்றும் குறிப்பிடப் பட்டுள்ளன).

    கே. நீங்கள் நீண்ட காலமாக வாழ்ந்திருக்கிறீர்கள். இல்லையா?

    ப. ஆமாம். வயதாகிவிட்டது. என்னால் மெதுவாகத்தான் நடக்க முடிகிறது. நேரம் எடுக்கிறது. (முனகல்) எதுவும் மகிழ்ச்சியாக இல்லை. மிகச் சோர்வாக உள்ளது.

    மிகவும் சுகமில்லாத ஒரு நிலையில் அவர் தன்னை உணர்ந்ததால் அவரை இன்னும் முன்னோக்கி, இறந்து முடித்த ஒரு நிலைக்கு, நகர்த்தினேன். அப்போது அவருடைய முழு உடலும் ஒரு முறை தூக்கிப் போட்டது. ஆனால் அவர் முகத்தில் இப்போது புன்னகை. அவர் குரல் முன்போல் இல்லாமல் உயிரோட்டத்துடன், சக்தியுடன் காணப்பட்டது. 'நான் மிகவும் லேசாகக் கனமில்லாமலும் அதிக விடுதலையாகச் சுதந்திரமாகவும் என்னை உணர்கிறேன்' என்று மகிழ்ச்சியுடன் கூவினார் அவர்.

    கே. உங்களால் உங்கள் உடலைக் காண முடிகிறதா?

    ப. ஓ. அந்த வயதான உடலையா கேட்கிறீர்கள்? அது கீழே கிடக்கிறது. நான் இவ்வளவு கேவலமான உடலிலா இருந்தேன்? மிகக் குறுகிச் சுருங்கி இருந்திருக்கிறேனே. அது தேய்ந்து கிழிந்து போன ஒன்று. (மகிழ்ச்சியான குரலில்) இப்போது நான் நன்றாக உள்ளேன். இங்கு வந்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    அவர் சற்று முன் கூறியதற்கும் இப்போது வெளிப்படுத்தியதற்கும் எத்துணை வித்யாசம் என்று எண்ணி எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

    கே. அந்த உடல் சுருங்கிச் சருகாகிப் போய் விட்ட ஒன்றுதான். அதில் ஆச்சரியமில்லை. பலவருடங்கள் உலகில் வாழ்ந்து இருக்கிறதல்லவா? இங்கே மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றீர்களே? எங்கே இருக்கிறீர்கள்?

    ப. நான் ஒளியிலே இருக்கிறேன். ஊ........ நன்றாக உள்ளது. நான் அமைதியாகவும் அறிவு மிகுதியாகவும் உணர்கிறேன். இப்போது எனக்கு எதுவுமே தேவையாக இருக்கவில்லை.

    கே. இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?

    ப. என்னை ஓய்வெடுக்குமாறு அவர்கள் கூறுகிறார்கள். எனக்கு நிறைய செய்திட ஆவலாக உள்ளது. ஓய்வெடுக்க நான் விரும்பவில்லை.

    கே. விருப்பமில்லா விட்டாலும் ஓய்வெடுக்க வேண்டுமா?.

    ப. நான் இன்னும் வளரவும், கற்கவும் விரும்புகிறேன். ஒரு இடத்தில் கட்டுப்பட்டு ஓய்வெடுக்க விருப்பமில்லை.

    நான் மிதப்பதுபோல உணர்கிறேன் என்பதைத் தவிர வேறு எந்த பதிலும் அவரிடமிருந்து அப்போது பெறமுடியவில்லை. அவருடைய வெளிப்பாடு மற்றும் சுவாசத்தால் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த ஓய்வறைக்குச் சென்றாலே 'இடையூறில்லா ஆழ்ந்த உறக்கத்திற்கு என்னை விட்டுவிடுங்கள்' என்ற எண்ணம் பிறந்து விடும். அவரை இப்போது நாம் தொந்தரவு செய்ய வேண்டாம். அவரிடமிருந்து எந்த பதிலும் வராது. அப்படியே வந்தாலும் புரியாதபடி குழறலாக இருக்கும். இத்தகைய ஒரு சிறப்பான ஓய்வெடுக்கும் இடத்தைப் பற்றி இந்தப் புத்தகத்தில் இன்னொரு இடத்தில் பார்க்க இருக்கிறோம்.

    *****

    இதோ இன்னொரு பெண். தனது குழந்தைப் பிறப்பு அனுபவத்தை மனஉறக்கத்தில் மறுபடி உணர்கிறார். அவரது உடல் அசைவுகளும் சுவாச முறையும் குழந்தை பிறப்புக்கு அவர் தயாராவதைச் சொல்கின்றன. இது எப்போதும் நிகழும் ஒன்று. நமது உடலும் மனதைப் போன்றே நினைவுகளைக் கொண்டிருக்கும். அவருக்கு உபாதை உணர்வுகளைத் தரக்கூடாது என்று நான் கவனமாக அவரை மனஉறக்கத்தில், குழந்தை பிறந்த பின் இருந்த ஒரு நிலைக்கு, நகர்த்தினேன்.

    கே. என்ன குழந்தை பிறந்து விட்டதா?

    ப. இல்லை. சிக்கலாகி விட்டது. குழந்தை வெளிவரவேயில்லை. நான் மிகவும் சோர்ந்து போய் உடலைவிட்டு வெளியேறி விட்டேன்.

    கே. அது என்ன குழந்தை என்பதை அறிவீர்களா?

    ப. இல்லை. தெரியாது. அதனால் எந்த உபயோகமுமில்லை.

    கே. உங்கள் உடலைப் பார்க்க முடிகிறதா?

    ப. ஆம். காண்கிறேன். ஆனால் அனைவரும் சோகமாக இருக்கின்றதையும் பார்க்கிறேன்.

    கே. இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?

    ப. நான் ஓய்வெடுக்கப் போகிறேன். அதன்பின் திரும்புவேன். நான் இங்கு சிறிது இருக்க வேண்டும். நான் ஒளியில் இருக்கிறேன். மிக அமைதியுடன் ஓய்வாக இருக்கிறது.

    கே. அந்த ஒளி எங்கே உ;ள்ளது என்று கூறமுடியுமா?

    ப. எங்கே எல்லாம் அறிவாக, தெரிந்த ஒன்றாகவே உள்ளதோ அங்கேஎல்லாம் தூய்மையாக எளிமையாக உள்ளது. தூய்மையான முழு உண்மை இங்கே உள்ளதுநம்மைக் குழப்ப, உலகின் பொருட்கள் இங்கே இல்லை. உலகில் உண்மை உள்ளது. ஆனால் குழப்ப மிகுதியால் நம்மால் அந்த உண்மையைக் காண முடிவதில்லை.

    கே. மறுபடி திரும்புவேன் என்று கூறினீர்கள். அதனை எவ்விதம் அறிந்தீர்கள்?

    ப. நான் மிகச் சோர்வாக இருந்தேன். நான் வலியைத் தாங்கியிருக்க வேண்டும். இன்னும் திடமாக வலி தாங்க நான் பழகிட வேண்டும். அந்த அளவு சோர்வாக திடமின்றி இருந்திராவிட்டால், நான் அங்கேயே இருந்திருப்பேன். இப்போது வலியில்லை என்பது மகிழ்ச்சியே. ஆனால் நான் திரும்பியாக வேண்டும். வலிதாங்கி, அதனிலிருந்து விடுபட்டு நான் முழுமையடைய வேண்டும். உலகின் எல்லா வலிகளிலிருந்தும் நான் விடுபட்டேயாக வேண்டும்.

    கே. மனிதனுக்கு வலி ஏற்படுவது இயற்கைதான். ஆனால் உடலிலிருக்கும்போது வலி தாங்குவது மிகக் கடினம். இப்போது நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து அதனை எவ்விதமான வேறுபாட்டுடன் காண்கிறீர்கள்? அது உங்களுக்கான ஒரு பாடமே என்று நினைக்கிறீர்களா?

    ப. ஆம். அதனைக் கற்பேன். என்னால் எதனையும் செய்ய முடியும். சில நேரம் கொஞ்சம் தாமதமாகும். நான் இன்னும் வலிமையாக இருந்திருந்தால் நன்கு சமாளித்திருப்பேன். சிறுவயதில் ஏற்பட்ட நோயால் என் மனதில் அதிகளவு பயம் உண்டாகியிருந்தது. அதனால் என்னால் தாங்க முடியாது என்ற எண்ணம் உண்டாகியது. அதன் விளைவே வலியைச் சமாளிக்க முடியாதோ என்று கைவிட வைத்து விட்டது. வலி. மேலான உணர்வின் நிலையில் நம்மை ஒளிக்குத் திருப்பிவிட்டால் வலி என்பது அங்கே இல்லை. வலி என்பது ஒரு பாடமே. மனித உடலில் வலி தோன்றினால் பதறி விடுகிறோம். உடனே அதனைப் போக்க வெளியே எத்தனிக்கிறோம். வலியிலிருந்து நம்மைப் பிரித்து ஆழ்ந்து உள்ளே பொறுமையுடன் சென்றால் வலியை நாம் தாண்டிவிட முடியும்.

    கே. வலி ஏற்படுவதற்கு நோக்கம், குறிக்கோள் உண்டா?

    ப. வலி என்பது ஒரு கற்றுக் கொடுக்கும் சாதனம். சிலசமயம் மக்களை எளிமையாக்கும். கர்வம் கொண்ட ஒரு திமிரான ஜீவனை வலி அதன் தாக்கத்தால் மென்மையாக்கி விடும். வலியை ஒருவன் தாண்டியாக வேண்டும்அதனையும் அதுவே கற்பிக்கும். சில சமயம் வலியை முழுதுமாக அறிந்து கொண்டாலே, ஏன் அது வந்துள்ளது என்பதைப் புரிந்தாலே, அதன் தாக்கம் குறையும்.

    கே. நீங்கள் கூறினாற் போலவே, வலி ஏற்பட்டுவிட்டால் மக்கள் பதட்டமடைந்து தங்களால் அதனைச் சமாளிக்க முடியாது என்றே நினைக்கிறார்கள்.

    ப. அவர்கள் மிகவும் தங்களையே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மிகக் குறுகிய வட்டமாகி விட்டது. சொந்த விருப்பங்களையும் இப்போதைய எண்ணங்களையும் விட்டு உயர்ந்து, ஒரு ஆன்மீக உயர் உணர்விற்கு மாறிக் கொண்டால், வலி தாங்கி உயர முடியும். வலியை ஒரு பாதுகாப்பாகவே, ஒரு தப்பிக்கும் வழியாகவே பலர் மாற்றி அமைத்துக் கொண்டுவிட்டனர். இது ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. வலி என்பதுதான் என்ன? நீ அதை அனுமதிக்காவிடில், அதனால் உன் உள்ளே நுழைய முடியாது. அடிபட்டு விடுவோமோ என்ற பயமே வலியை அனுமதித்து விடுகிறது. அதற்கு சக்தி தருகிறதுதேவையே இல்லை. அதனை உள்ளே அனுமதிக்கவோ சக்தியளிக்கவோ கூடாது. மனிதனின் உயர்மனம் வலியை அனுமதிப்பது இல்லை.

    கே. மக்கள் வலியைத் தன்னைவிட்டுத் தனியாகப் பிரித்திடல் இயலுமா?

    ப. மனம் வைத்தால் முடியும். ஆனால் மனம் வைப்பதேயில்லை மற்றவர் அனுதாபம் தேடி அல்லது சொந்தத் தண்டனை என்று பலவாறும் எண்ணி விடுகிறார்கள். வேடிக்கையான மனிதர்கள். ஒவ்வொரு மனிதருக்கும் இது புரியும். ஆர்வத்துடன் பயின்றால் இது முடியாத ஒன்றல்ல. தாங்களாகவேதான் முயன்று கற்றிடல் வேண்டும். வலி தாண்டிட இதோ ஒரு எளிமையான வழி என்று கூறினால் அவர்களால் நம்பிக்கை வைக்க முடியாது. இது உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமே.

    கே. மக்கள் இறப்பு என்றாலே பயமடைகிறார்கள். அது நிகழும்போது எவ்விதம் உள்ளது எனக் கூறமுடியுமா?

    ப. நல்லது. நான் உடலில் இருந்தபோது கனமாய் இருந்தது. என்மீது ஒரு அழுத்தம் நிலவியது. ஒரு சங்கடமாக, வருத்தம் தரத் தக்கதாக இருந்ததுஇறப்பின் பிறகு அந்த அழுத்தம், சங்கடம் விலகிவிடுகிறது. மிக ஓய்வாக இருக்கிறது. மக்கள் தங்கள் பிரச்னைகள் எனும் பாரத்தை எப்போதும் சுமந்து திரிகிறார்கள். இறப்பு ஒரு விடுதலையை, மாறுதலைத் தருகிறது. பிரச்னைகள் எனும் பாரத்தை பிடுங்கிப் போட்டுவிடுகிறது. மக்கள் அப்பாடா என்று மிக லேசாக அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடிகிறது. அது ஒரு அற்புதமான நிலை மாற்றம்.

    கே. இறப்புக்குப் பின் என்ன ஆகிவிடுமோ என்று பயப்படுகிறார்கள் என்று ஊகிக்கிறேன்.

    ப. அது தெரியாத ஒன்றைப் பற்றிய வீணான அச்சம். மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். பயப்படத் தேவையில்லை.

    கே. ஒருவர் இறக்கும்போது என்ன நடக்கிறது?

    ப. உடலை விட்டு விலகுகிறார்உயர்ந்து வந்து இந்த ஒளி உலகை அடைகிறார்.

    கே. ஒளி உலகை அடைந்தவர் என்ன செய்கிறார்?

    ப. அனைத்தையும் முழுமையாக, செம்மையாக ஆக்கிக் கொள்கிறார்.

    கே. ஒளிஉலகை விட்டு விலகவேண்டி வருபவர் எங்கு செல்லக் கூடும்?

    ப. மீண்டும் பூமிக்குத்தான்பிறவிக்குள் செல்ல வேண்டும்.

    கே. காலத்திடையே இவ்வாறு பேசிக்கொள்ளுதல் வித்யாசமானது அல்லவா? அது முறையானதா?

    ப. காலம் என்பதற்கு இங்கு பொருளே இல்லை. இங்கு நேரம் என்பதே இல்லை. எல்லாம் ஒன்றேதான்,

    கே. இவ்வாறு இன்னொரு தளத்திலிருந்து பேசுவது உங்களுக்கு தொந்தரவாக அமையுமா?

    ப. ஏன் அவ்விதம் அமைய வேண்டும்?

    கே. அவ்விதம் இருக்குமோ என நினைத்தேன். தொந்தரவு தர விரும்பவில்லை.

    ப. இந்த எண்ணம் உங்களைத்தான் தொந்தரவு செய்கிறது. என்னை அல்ல.

    *****

    அடுத்த உதாரணம் ஒரு சிறிய ஒன்பது வயதுப் பெண். அவளை மன உறக்கத்திலாழ்த்தி முதல் முதலாகப் பேசவைத்தபோது அந்தப் பிறவியில் அவள் 1800களில் இருந்தாள். பள்ளிச் சுற்றுலாவிற்காக ஒரு வைக்கோல் வண்டிப் பயணம் செய்து கொண்டிருந்தாள். சுற்றுலாவிற்கான இடத்தில் ஒரு அழகிய ஓடை உண்டு. பலரும் அதில் நீந்தி மகிழ எண்ணிச் சென்று கொண்டிருந்தனர். அவளுக்குத் தண்ணீர் என்றாலே பயம் அதனால் அவளால் நன்றாக நீந்த முடியாது. மற்ற பிள்ளைகள் இதனை அறிந்தால் கேலி செய்வார்களே என்று பயந்தாள். சில பிள்ளைகள் தூண்டில் வைத்து மீன் பிடிக்கத் திட்டமிட்டனர். அவளும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு விடலாம் என எண்ணிக் கொண்டாள். அப்போதுதான் அவளுக்கு நீந்துவது என்றால் பயம் என்பதனை மற்றவர் அறிந்து கொள்ள மாட்டார்கள். இவ்வாறான நினைவுகளே அவளை அந்தப் பயணத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க விடாமல் செய்து கொண்டிருந்தது.

    இன்னும் வயதேறிய ஒரு காலகட்டத்திற்கு, அதிலே ஒரு முக்யமான தினத்திற்கு, அவளை நகர்த்தினேன். ஆனால் அவள் கூறியதோ 'நான் பூமியிலேயே இல்லை. ஒளிஉலகில் ஆனந்தமாக உள்ளேன்' என்றாள். எனக்கு இது ஆச்சரியத்தைத் தந்தது.

    கே. என்ன நடைபெற்றது?

    ப. அப்போது என்னால் நீந்த முடியவில்லை. நீரில் மூழ்கி விட்டேன். இருள் என்னைச் சூழ்ந்தது. எனது மார்பினுள் எரிச்சல் படர்ந்தது. நான் உடனே இந்த ஒளிக்கு வந்துவிட்டேன். பின்னர் எந்தக் கவலையுமில்லை.

    கே. அந்த ஓடை மிக ஆழமானது என நினைக்கிறாயா?

    ப. இருந்திருக்காது. நான் பயந்தேன். பயத்தால் முழங்கால்கள் பின்னிக் கொண்டன. என்னால் நிற்க முடியவில்லை. நான் மேலும் பயந்தேன்.

    கே. எங்கிருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரிகிறதா?

    ப. நான் எப்போதுமே இருக்கிறேன். (அவள் குரல் குழந்தைக் குரலாக ஒலித்தது).

    கே. உன்னுடன் எவரேனும் இருக்கிறார்களா?

    ப. அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். மிகச் சுறுசுறுப்பாக என்ன செய்ய வேண்டுமென்று திட்டமிடுகிறார்கள். என்ன நடைபெறுகிறது என்பதை அறிய முயல்கிறேன்.

    கே. இந்த இடத்திற்கு எப்போதேனும் நீ சென்றுள்ளதாக நினைக்கிறாயா?

    ப. ஆம். இங்கு சூழ்நிலையில் அமைதி நிலவுகிறது. ஆனால் நான் திரும்பியாக வேண்டும். எனக்குள் இருக்கும் பயத்தைப் போக்கியாக வேண்டும். பயம் நம்மை உறைய வைத்துவிடும். அதை நாம் பூமிக்கு எடுத்து வருகிறோம். அங்கே அந்த சிற்றோடையில் ஆழம் அதிகமிருக்கவில்லை. எனது பயத்தால் ஆழம் அதிகமாக இருக்கிறது என நினைத்துவிட்டேன். உண்மையில் நமது சூழ்நிலை நாம் பயப்படுவதுபோல அவ்வளவு மோசமில்லை. சமாளிக்கலாம். (குரல் இப்போது பண்பட்டு உறுதியாக இருந்தது). மனிதனுக்குள்ளே இருக்கும் அழிவிற்கான ஒரு மிருகம் பயம். பூமியில் பலரையும் இது ஆட்டுவித்து அழிவுப்பாதையில் தள்ளிவிடுகிறது. அது கீழான மனதில் அல்லது வெளி மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு ஒட்டுண்ணி. உள்ளே நாம் பாதிப்பில்லாமல்தான் எப்போதும் இருக்கிறோம்.

    கே. மனிதர்கள் பயத்தினாலேயே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறார்களா?

    ப. ஆம். அதுவேதான். பயத்தினால் நாமே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம். மற்றவர்கள் பயப்படுவதைக் கண்டு 'ஐய... இது சிறிய விஷயம். இதற்கு ஏன் அஞ்ச வேண்டும்? இது அவ்வளவு பெரிய விஷயமே இல்லையே. ஏன் இதற்குப் போய் பயம் கொள்ள வேண்டும்? என நினைக்கிறோம். ஆனால் நமக்கு என்று ஒரு சூழ்நிலை வரும்போது நமது அறிவு வேலை செய்யாது. அதிலேயே முழுகிவிடுகிறோம். பயம் நம்மை முழுவதுமாக ஆட்கொண்டு படாதபாடு பட வைக்கிறது. ஆகவே நாம் மற்றவர்களிடம் ஆதரவாக இருந்து அவர்கள் பயத்தைத் தெளிவிக்க முயற்சி செய்ய வேண்டும். இதுவே நமக்குள் மாற்றங்களைக் கொணர்ந்து மேலும் பயத்தைப் பற்றிய புரிதலை அதிகரிக்கும். நமக்கு பயம் வரும்போது பயனளிக்கும்.

    கே. இது நன்றாகவே உள்ளது. மனிதனின் மிகப் பெரிய பயம் இறப்பதற்குத்தான் அல்லவா?

    ப. ஆம். அப்படித்தான். அது ஒரு மிகப் பெரிய பயமாகத்தான் உள்ளது. நினைத்து நடுங்குகிறார்கள். ஆனால் மரணம் ஒன்றும் மோசமில்லை. மிகவும் எளிதே. எல்லா குழப்பங்களுக்கும் ஒரு முடிவு வந்து விடுகிறது. ஆனால் நாம் மறுபடி அனைத்தையும் அதேபோல உண்டாக்கிக் கொண்டு விடுகிறோம்.

    கே. என்றால் மக்கள் ஏன் பூமிக்குத் திரும்ப வர நினைக்கிறார்கள்?

    ப. பூமிச் சுற்று

    Enjoying the preview?
    Page 1 of 1