Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பன்னிரு ஜோதிர்லிங்கங்ள்
பன்னிரு ஜோதிர்லிங்கங்ள்
பன்னிரு ஜோதிர்லிங்கங்ள்
Ebook110 pages36 minutes

பன்னிரு ஜோதிர்லிங்கங்ள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘பன்னிரு ஜோதிர்லிங்கங்கள்’ என்னும் இப்புத்தகத்தில் ஒவ்வொரு ஜோதிர்லிங்கங்களின் அமைவிடமும், ஆலய அமைப்பும், ஸ்தல மகிமையும், சிறப்புகளும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. வரைபடத்தில் ஜோதிர்லிங்க ஸ்தலங்களின் அமைவிடமும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateFeb 13, 2021
ISBN9788179506042
பன்னிரு ஜோதிர்லிங்கங்ள்

Read more from R Ponnammal

Related to பன்னிரு ஜோதிர்லிங்கங்ள்

Related ebooks

Related categories

Reviews for பன்னிரு ஜோதிர்லிங்கங்ள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பன்னிரு ஜோதிர்லிங்கங்ள் - R Ponnammal

    முன்னுரை

    அன்பான நெஞ்சங்களுக்கு,

    வணக்கம் பல. தொடர்ந்து எங்களது பக்தி நூல்களுக்கு வரவேற்பு கொடுக்கும் மகிழ்ச்சியில் ‘பன்னிரு ஜோதிர் லிங்கங்கள்’ என்ற இந்நூலை வெளியிட்டிருக்கிறோம். திங்கட் கிழமைகள், அமாவாசை, மாதப்பிறப்பு, பௌர்ணமி, கிரஹணம், ஜாதகத்தில் சந்திரன் 6, 8, 12-ம் இடங்களில் இருந்தாலோ, சந்திராஷ்டம தினங்களிலோ இதைப்படித்தால் (எந்தப் பகுதியாயிருப்பினும்) தோஷங்கள் விலகி சந்தோஷங்கள் தேடிவரும். பிரதோஷ காலங்களில் படிப்பது வெகு விசேஷம். திதி நாட்களில் தாம்பூலம், பழம், தேங்காயோடு இந்நூலைத் தானம் செய்தால் பிதுர்க்களின் ஆசி கிட்டும். சிவ அபசாரம் நீங்கி, சிவப்பிரசாதம் கிடைக்கும். தலை சுற்றல் குணமாகும். எதிரிகள் பற்றிய அச்சம் தொலையும். ஐப்பசி மாதம் பிறந்தவர்கள் படித்தால் சூரியனின் ஆசி பெறலாம். வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களையும் தரிசனம் செய்த புண்ணியம் பெற வைக்கும் பொக்கிஷம் இது.

    அன்புடன்

    ஆசிரியர் ஆர். பொன்னம்மாள்

    Å

    பதிப்புரை

    ஆதிஅந்தமில்லா அருட்பெருஞ்ஜோதி என்று மாணிக்கவாசகர் போற்றும் சிவபிரானின் வடிவான ஜோதிர்லிங்கங்களை மனதால் நினைத்தாலே கோடி ஜன்ம பாபங்களும் அழியும் எனும்போது கண்ணாரக் கண்டால் அதன் பலனை சொல்லவும் வேண்டுமோ?

    ஜோதியானது எவ்வாறு சுற்றிலும் பிரகாசத்தை தருகிறதோ அவ்வாறே ஜோதிர்லிங்க வழிபாடும் நம்முள் ஞானமென்னும் ஜோதியை பிரகாசிக்கச் செய்யும்.

    நம் அன்றாட வாழ்வில் பன்னிரெண்டு என்னும் எண்ணிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. மாதங்கள் பன்னிரெண்டு, நம்முடைய ராசிக்கட்டங்கள் பன்னிரெண்டு, சிறப்புமிக்க ஜோதிர்லிங்கங்களின் எண்ணிக்கையும் பன்னிரெண்டு. இதில் இரண்டு ஸ்தலங்கள் தென்னிந்தியாவிலும், மீதமுள்ள பத்து ஸ்தலங்கள் வடஇந்தியாவிலும் உள்ளன.

    ‘பன்னிரு ஜோதிர்லிங்கங்கள்’ என்னும் இப்புத்தகத்தில் ஒவ்வொரு ஜோதிர்லிங்கங்களின் அமைவிடமும், ஆலய அமைப்பும், ஸ்தல மகிமையும், சிறப்புகளும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. வரைபடத்தில் ஜோதிர்லிங்க ஸ்தலங்களின் அமைவிடமும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

    இப்புத்தகத்தை திறம்பட எழுதித்தந்த ஆன்மீக எழுத்தாளர் திருமதி. ஆர். பொன்னம்மாள் அவர்களுக்கு கிரி நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

    அனைவரும் இப்புத்தகத்தைப் படித்து இறையருள் பெற எல்லாம் வல்ல ஜோதிஸ்வரூபனை வேண்டி பிரார்த்திக்கிறோம்.

    - பதிப்பகத்தார்.

    Å

    பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களின் இருப்பிடங்கள்

    12_Jyotirlingas_Map.JPG

    பன்னிரு ஜோதிர்லிங்கங்கள்

    1. ஸ்ரீ ஸோமநாதேஸ்வரர்

    2. ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர்

    3. ஸ்ரீ மஹாகாளேஸ்வரர்

    4. ஸ்ரீ ஓங்காரேஸ்வரர்

    5. ஸ்ரீ பீமசங்கரர்

    6. ஸ்ரீ நாகேஸ்வரர்

    6A. ஸ்ரீ நாகேஸ்வரர் (ஔண்டா)

    7. ஸ்ரீ விஸ்வேஸ்வரர்

    8. ஸ்ரீ திரியம்பகேஸ்வரர்

    9. ஸ்ரீ வைத்தியநாதர்

    9A. ஸ்ரீ வைத்தியநாதர் (பர்லி)

    10. ஸ்ரீ இராமேஸ்வரர்

    11. ஸ்ரீ கேதாரேஸ்வரர்

    12. ஸ்ரீ குசுமேஸ்வரர்

       ஸௌராஷ்ட்ரே ஸோமநாதம் ச

          ஸ்ரீசை’லே மல்லிகார்ஜுனம் |

       உஜ்ஜயின்யாம் மஹாகாளம்

          ஓங்காரம் அமலேச்’வரம் ||   

       பரல்யாம் வைத்யநாதம் ச

          டாகின்யாம் பீமச’ங்கரம் |   

       ஸேதுபந்தே து ராமேச’ம்

          நாகேச’ம் தாருகாவனே ||

       வாராணஸ்யாம் து விச்’வேச’ம்

          த்ர்யம்பகம் கௌதமீதடே |

       ஹிமாலயே து கேதாரம்

          குச்’மேச’ம் ச சி’வாலயே ||   

       ஏதானி ஜ்யோதிர் லிங்கானி

          ஸாயம் ப்ராத: படேந்நர: |   

       ஸப்த ஜன்ம க்ருதம் பாபம்

          ஸ்மரணேன வினச்’யதி ||

    இந்த ஸ்தோத்திரத்தை காலையும், மாலையும் ஜபித்தால் பன்னிரு ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்த பலன் கிடைக்குமென சிவபுராணம் உரைக்கின்றது. இந்தப் பன்னிரு ஜோதிர்லிங்கங்கள் அமைந்த வரலாற்றை இனி பார்ப்போம்.

    Å

    நந்திகேஸ்வர லிங்க மகிமை

    ஒரு சமயம் நைமிசாரண்யத்திலுள்ள முனிவர்கள் சூதமுனிவரிடம், ஜோதிர்லிங்கங்கள் உருவான விதத்தையும், அதன் மகிமையையும் விளக்கி அருளுமாறு வேண்ட, சூதரும் ஜோதிர்லிங்கங்களின் மகிமைகளை அறிவதற்குமுன், நர்மதா நதிக்கரையிலுள்ள மலைகளின் மேல் அமைந்துள்ள பல லிங்கங்களில் அதிமுக்கியமானதும், கோடி ப்ரஹ்மஹத்தியை அழிக்கக் கூடியதுமான நந்திகேஸ்வரரின் மகிமையை பற்றி முதலில் கூறுகிறேன் அறிந்து கொள்ளுங்கள் என்று நந்திகேஸ்வரலிங்க மகிமையிலிருந்து பன்னிரு ஜோதிர் லிங்கங்களின் விருத்தாந்தங்களையும் கூறத் தொடங்கினார்.

    நர்மதை நதி தீரத்தில் கர்ணகி என்றொரு நகரம் இருக்கிறது. அப்பட்டணத்தில் வசித்து வந்த ஒருவன், காசி யாத்திரை போக விருப்பம் கொண்டான். அதனால் அவனுடைய இரு புதல்வர்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி தன் மனைவியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். காசியை அடைந்த அந்த பிராமணன் சில காலம் அங்கேயே தங்கி இருக்க விரும்பினார். அவ்வேளையில் ஒரு நாள் அவரது உயிர் பிரிந்தது. இதைக் கேள்விப்பட்டு வருந்திய மனைவி தானும் வாழ விருப்பப்படாவிட்டாலும், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பிருந்ததால் அவர்கள் நலனுக்காக உயிர்வாழ வேண்டியிருந்தது. பிள்ளைகள் நல்லவிதமாய் வளர்ந்தனர். அவர்களுக்கு நல்ல இடத்தில் மணம் முடித்து வைத்தாள். காலம் உருண்டோடியது. மெல்ல மெல்ல அவளது தேகம் இளைக்கத் தொடங்கியது. நடக்கவும் முடியாத நிலையிலிருந்த அவள் தனது அந்திமக்காலம் நெருங்குவதை உணர்ந்தாள். தாய் படும் வேதனையை உணர்ந்த புதல்வர்கள் அவளிடம், அம்மா! ஏதாவது மனக்குறை இருந்தால் தெரிவியுங்கள். கட்டாயம் நிறைவேற்றி வைக்கிறோம் என்றனர்.

    செல்வங்களே! உங்கள் தந்தை காசியில் தான் இறந்தார். காசியில் இறந்தால் மோட்சம் கிட்டும் என்பார்கள். உங்கள் தகப்பனாருக்கு மோட்சம் கிடைத்தது. எனக்கு அந்தப் பாக்கியம் இல்லை. இறந்த பிறகு என் அஸ்தியையாவது கங்கையில் சேர்ப்பீர்களா? என்று கேட்டாள்.

    மூத்த மகன் சுவாதன், "அம்மா, நிச்சயமாக நான்

    Enjoying the preview?
    Page 1 of 1