Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravugal
Uravugal
Uravugal
Ebook210 pages1 hour

Uravugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் படித்த புத்தகங்களைவிடவும் அதிகமாய் எனக்கு அறிவு புகட்டியவர்கள் மனிதர்கள். வாழ்க்கையில் விழுந்தும், எழுந்தும், நான் நடந்த பாதை இவர்களால் போடப்பட்டதுதான். எத்தனை அனுபவப்பட்டாலும் மனிதர்களுடன் பழகுவது என்பது எனக்கு ஆனந்தமாகத்தான் இருக்கிறது.

வெளித் தோற்றத்தை ஒதுக்கிவிட்டு, மனித உறவுகளின் சுபாவங்களை மட்டும் அலசினால் - அதன் விளைவுதான் இந்த ‘உறவுகள்’ மற்றபடி இதன்மூலம் யாரையும் புண்படுத்தவேண்டும் என்பது என் நோக்கமல்ல.

விருப்பு, வெறுப்பைத் தள்ளி வைத்துவிட்டு, ஒவ்வொரு உறவையும் ஒரு நல்ல புத்தகமாக எண்ணி படித்துப் பார்த்தால், எல்லா சொந்தங்களையும் நேசிக்கிற அளவு மனம் விசாலப்படும். இத்தனை அற்புதமான உறவுகளை சிருஷ்டித்த கடவுளுக்கு நன்றி சொல்லத் தோன்றும்.

- அனுராதா ரமணன்

Languageதமிழ்
Release dateJan 6, 2017
ISBN6580110001789
Uravugal

Read more from Anuradha Ramanan

Related to Uravugal

Related ebooks

Reviews for Uravugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravugal - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    உறவுகள்

    Uravugal

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    உறவுகள்

    முன்னுரை

    என் பிரியமான வாசகர்களுக்கு

    சாதாரணமாய் ஒருவீட்டில் பதினைந்து வயதுப்பெண் இருக்கிறாள் என்றால் - அவள் அவளாகவே சுதந்திரமாக வளர்வதில்லை. அம்மா, அத்தை, பாட்டி இப்படி தன்னைச் சுற்றியுள்ள நெருக்கமான உறவுகளிலிருந்துதான் அவளது குணமும், சபாவமும் எனக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

    அதுபோல் பல குடும்பங்களில் வயதான, மூப்பில் மனித பழுத்த, கனிந்த, வாழ்வின் இரண்டாவது குழந்தைப் பருவத்தில் உள்ள முதியோர்களை, சொந்த உறவுகளே புறக்கணிக்கின்ற விஷயத்தை என்னால் ஜீரணிக்க முடிவதில்லை. காரணம் - எங்கள் குடும்பத்தில் தாத்தா, பாட்டி, ஏன் - கொள்ளுப் பாட்டிகள் கூட ஒரு ராஜமாதாவுக்குரிய லட்சணங்களுடன் கம்பீரமாய் வாழ்ந்திருக்கிறார்கள்.

    ‘குழந்தைத்தனம் மாறாதக் கிழப்பறவைகளான பெரியவங்க இருக்கிறதே அழகுதான்’ - இப்படி நினைக்கும் படித்து எனக்கு, கட்டிடம் கட்டி முடித்தபின் - கட்டுமானமாக அளவு நிற்கும் சாரங்களைப்பிடுங்கி எறிவதுபோல முதியவர்களை சொந்த ரத்தங்களே கண்டு கொள்ளாமல் இருப்பதையும், அப்படியே எப்பொழுதாவது அத்தி பூத்தாற்போல் கணவரின் பெற்றோர் வந்து தங்கிவிட்டால் மருமகள்கள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வதையும், பல வீடுகளில் நடப்பதை பார்க்கையில் ‘நாளுக்கு நாள் பல குடும்பங்களில் பாசம் அற்றுப் போகிறதே’ என மனசு கனத்துப் போகிறது.

    நம்மால் ஒரு தாய், தகப்பன், மாமியார், மாமனாரை அன்பாய் கவனிக்க முடியாதா என்ன? அந்தப் பக்குவத்தை இனியாவது கற்றுக்கொள்ள முயற்சிப்போம்.

    மரம் உள்ள வரையில் எப்படி இலையும், கிளையும், காயும், கனியும், விழுதும், விதையும் இருக்கிறதோ - அப்படி மனிதன் உள்ள வரையில் சொந்தங்களும், பந்தங்களும், உற்றார், உறவினரும் திரும்பத்திரும்ப இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.

    நான் படித்த புத்தகங்களைவிடவும் அதிகமாய் எனக்கு அறிவு புகட்டியவர்கள் மனிதர்கள். வாழ்க்கையில் விழுந்தும், எழுந்தும், நான் நடந்த பாதை இவர்களால் போடப்பட்டதுதான். எத்தனை அனுபவப்பட்டாலும் மனிதர்களுடன் பழகுவது என்பது எனக்கு ஆனந்தமாகத்தான் இருக்கிறது.

    வெளித் தோற்றத்தை ஒதுக்கிவிட்டு, மனித உறவுகளின் சுபாவங்களை மட்டும் அலசினால் - அதன் விளைவுதான் இந்த ‘உறவுகள்’ மற்றபடி இதன்மூலம் யாரையும் புண்படுத்தவேண்டும் என்பது என் நோக்கமல்ல.

    விருப்பு, வெறுப்பைத் தள்ளி வைத்துவிட்டு, ஒவ்வொரு உறவையும் ஒரு நல்ல புத்தகமாக எண்ணி படித்துப் பார்த்தால், எல்லா சொந்தங்களையும் நேசிக்கிற அளவு மனம் விசாலப்படும். இத்தனை அற்புதமான உறவுகளை சிருஷ்டித்த கடவுளுக்கு நன்றி சொல்லத் தோன்றும்.

    பத்திரிகையில் என் எழுத்துக்கான சித்திரங்களை வரையும்போது மட்டும் ஒவியர்கள் வர்ணங்களைத் தண்ணிர்விட்டுக் குழைப்பதற்குப் பதிலாக அன்பைக் கலந்து குழைத்து விடுகிறார்கள். ஒவியர் ராமுவும் அப்படியே. அவருக்கு என் நன்றி.

    ‘குமுதம் – சினேகிதி’ இதழில் ‘உறவுகள்’ என்கிற தலைப்பில் தொடர் கட்டுரையாக இதைப் பிரசுரித்த அதன் பொறுப்பாசிரியர் திருமதி. லோகநாயகிக்கு என் நன்றி.

    மறுபடியும், ஆனால் அழகிய நூல் வடிவில் ‘உறவுகள்’ உங்களுடன் உறவாடப் போகிறது என்பதை ஏதோ நினைக்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது. மனசு பரபரத்துப் போகிறது. முகப்போவியம் தீட்டிய ஒவிய நண்பர் திரு. மாருதிக்கு என் நன்றியை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

    சொந்தங்கள் விலை மதிக்க முடியாத சொத்துக்கள். தங்கம், வைரம், முத்து, பவளம் போல நவமணிகள். இதோ உங்கள் முன் வெல்வெட் துணியை விரித்து அதில் சிக்கல் பளிரிடும் மணிகளாக - உறவுகளின் சுபாவங்களை, நன்மையை, உயர்வை, தோஷம் கலந்திருந்தால் அதையும் சேர்த்துத்தான் கடை பரப்பியிருக்கிறேன்.

    மீண்டும் இப்படியொரு கடை விரிக்க உதவி அழகிய ஆரமாய் அவற்றைத் தொகுத்துத் தந்திருக்கும் என் உதவியாளரும், நல்ல நண்பருமான அருமை நண்பர் திரு. சர்ச்சில் பாண்டியனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றியும். இதை நேர்த்தியாய் அச்சிட்டு வெளியிட்ட பூம்புகார் பிரசுரத்துக்கு என்றும் என் நன்றிகள் உரித்தாகும்.

    என்றென்றும் அன்புடன்

    அனுராதா ரமணன்

    உறவுகள்

    1

    உலகத்தில் எதுஎதற்கெல்லாமோ கல்லூரி வைத்து, டிகிரி, டாக்ட்ரேட், பி. ஹெச்டி என்றெல்லாம் பட்டம் கொடுக்கிறார்களே. அன்பாயிருப்பது எப்படி என்பதற்கு ஒரு பாட திட்டம் கொண்டு வந்து பட்டம் கொடுத்தால்தான் என்ன... குறைந்தா போய்விடும்?

    வெளி மனிதர்களிடம் பிரியமாய் - பாசமாய் பழகுவது இருக்கட்டும்... உறவுக்குள் - அதுவும் மிக நெருக்கமாய் பொழுது விடிந்து - பொழுது போனால் - இந்த முகத்தில்தான் விழிக்க வேண்டும்’ என்று சில உறவுகள் இருக்கிறது பாருங்கள்... மாமியார் - மாமனார் - மருமகள் - கணவன் - மனைவி - மகள் - மகன் என்ற மிக நெருக்க்க்க்கமான சொந்த பந்தம்... இதிலேயே, ‘அன்பு என்கிற வார்த்தைக்குப் பஞ்சம் வந்து - மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவது போல - மளமளவெனக் குறைந்து வருவதைப் பார்க்கும்போது...

    கண்ணதாசன் போல - ‘மாமி என்னடா - மனைவி என்னடா அவசரமான உலகத்திலே - என்று பாடவேண்டும் போலிருக்கிறது...

    போதாக்குறைக்கு தற்போதைய மெகா சீரியல்கள் வேறு. கொடுமைக்கார மாமியார்களையும், அழுமூஞ்சி மருமகள்களையும், எங்கேயிருந்தோ பரணிலிருந்து இறக்கி, தூசு தட்டி, பகல் நேரங்களில் வீட்டோடு ‘தேமே’ னென்று இருக்கும் பெண்களின் முன் உலவவிட்டு உசுப்பி விடுகிறார்கள்....

    மகாப் பெரிய மெகா பங்களாவில், திரும்பிய இடமெல்லாம் வாஷிங் மெஷினும், ஃபிரிஜ்ஜும் இன்ன பிற நவீன சாதனங்களும் இருக்க - மருமகள் லிப்ஸ்டிக் போட்டு ஐலைனர் கலையாமல் பிழியப் பிழிய அழுதபடி கிணற்றடியில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருப்பாள்...

    அட, டி. வி. யிலேதான் இந்தக் கொடுமை...

    இப்படிப்பட்ட காட்சியை - என் அம்மா காலத்தில் வெளிவந்த ‘சாந்த சக்குபாய்’ படத்தில் பார்த்தபோது - என் அம்மாவும், அம்மாவின் மாமியாரான என் பாட்டியும் அந்த ஒரு கணத்தில் மட்டும் தங்களது பிரத்யேக மனஸ்தாபங்களை எல்லாம் ஏறக்கட்டி விட்டு ஒற்றுமையாய் அழுதார்களாம்....

    இன்றைக்கம் கூட பல வீடுகளில் - மாமியார் -மருமகள் பனிப் போர் உள்ளூர நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை எனக்கு வரும் வாசகிகளின் கடிதங்களிலிருந்தும், நான் எடுத்த ரகசிய ‘சர்வே’யிலிருந்தும் தெரிய வந்தது.

    இதோ - நாலைந்து தினங்களுக்கு முன் ஒரு பெண் எல்ல போன் செய்துப் பேசினாள்.

    சொந்த அத்தைதாங்க மாமியார். அக்கம் பக்கத்துல இருக்கிற அத்தனைப் பேருக்கும் இவங்கதான் கே. ஆர். விஜயா - ஸ்ரீவித்யா மாதிரி. அத்தனை சாந்தம்... எனக்கு மட்டும் காந்திமதி - ஒய். விஜயா மாதிரி மூஞ்சியக் காட்டுவாங்க. அது ஏங்க?

    "நான் என்ன சமைச்சாலும் பிடிக்காது... என் பிள்ளைய ஒரு நாள் கூடத் தூக்கி வச்சிட்டதில்லே... அப்படியே நான் தூக்கி வச்சிட்டாலும், ‘பிள்ளை மடி சூடு கண்டுட்டு சுணங்கிச் சுணங்கி அழும்’னு அடுத்த வீட்டம்மா கிட்ட சாடையாச் சொல்லுவாங்க. இதுவே - பொண்ணு வயித்துப் பேத்திய - கங்காரு கணக்கா - மடியிலேயே கட்டிட்டு அலையறாங்க. இதுவும் பேரப்புள்ள... அதுவும் பேரப்புள்ளதானே... அது ஏங்க,...?

    இந்தப் பெண் இப்படி என்றால் - இன்னொரு படித்த - வேலைக்குப் போகும் பெண்ணின் குமுறல் இப்படி...

    மேடம். என் ஹஸ்பெண்ட் அஞ்சுவருஷம் அமெரிக்காவுல வேலை பார்த்தார். அதை வச்சுத்தான் நான் கழுத்தையே நீட்டினேன். இப்ப என்னடான்னா, அம்மாவுக்கு உடம்புக்கு முடியலே... நாம பக்கத்துல இருக்கணும்... பாவம் அம்மா’ன்னு உருகி வழிஞ்சு மெட்ராஸ்லேயே வந்து செட்டிலாயிட்டார். ஆன மட்டும் சொல்லிப் பார்த்துட்டேன். கேட்கலையே. ஆனா, சும்மா சொல்லக்கூடாது மேடம். அறுபத்தி மூணு வயசுக்கு எங்க மாமியார் - தர்பூசணிப் பழம் மாதிரி ‘கிண்’ணுன்னுதான் இருக்கா. இருக்கிற நிலையைப் பார்த்தா - நான்தான் மேல் லோகத்துக்கு விசா வாங்கிடுவேன் போல இருக்கு…

    படித்த - படிக்காத, வேலைக்கு போகிற - போகாத எல்லாப் பெண்களுக்குள்ளேயும் மாமியார் என்பவள் - வயிற்றெரிச்சலை உண்டு பண்ணக்கூடிய அமிலமாகத்தான் இருக்கிறார்.

    என்ன... கொஞ்சம் படித்த, நாகரீகமான இடங்களில் குடுமிப்பிடி சண்டை இல்லை... ஆனாலும் எதோ ஒரு படத்தில் மனோரமாவும், சுகன்யாவும் கறுவிக் கொள்வதைப் போல - ஒருவர் குடலை உருவி மற்றவர் மாலையாகப் போட்டுக் கொள்ளவும், முதுகெலும்பைக் கழற்றி ஒட்டியாணமாய் மாட்டிக் கொள்ளவும் மனசுக்குள் உறுமல்... செருமல் இருக்கத்தான் செய்கிறது...

    இதற்கு என்ன காரணங்க?

    மாமியாரிடம் மருமகளுக்கும் - மருமகளிடம் பொ மாமியாருக்கும் அன்பில்லாததுதான் காரணம்... இருங்க. அங்கே, யாரோ ‘களுக’கெனச் சிரிக்கிறார்கள்.

    மாமியார் + மருமகள் + அன்பா...

    என்னாம்மே... யார் கிட்ட வந்து காது குத்தறே...

    ‘கொண்டு வந்தால் தந்தை...

    கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்...

    சீர் கொண்டு வந்தால் தங்கை...

    கொலையும் செய்வாள் பத்தினி...

    உயிர் காப்பான் தோழன்...’

    இந்தத் தூக்குத்தூக்கி வசனத்துல - கடோசியா ரெண்டு வார்த்தைகளை வுட்டுட்டாங்க.... அது, திருப்தியே இல்லாதது மாமியார். முறைத்துக் கொண்டே இருப்பது மருமகள்.

    - இப்படிச் சொல்வது காதில் விழுகிறது.

    இன்னமும் சொல்லப் போனால், மைலாப்பூர் வாசகி மீனா சுப்ரமண்யம் இரைந்தே சொல்கிறார்.

    நீங்க என்ன செஞ்சாலும் திருப்தியே அடையாத ஜென்மம்னா அது... அமிருதத்தையே கொண்டு போய் கொடுத்துப் பாருங்களேன்...என்னது. என்னமோ அடி நாக்கு வரைக்கும் கசப்பா கசக்கறதே என்று சொல்லும் போன தீபாவளிக்கு மெனக்கெட்டு, ராதா சில்க்ஸ்லே இருந்து புளியங்கொட்டை கட்டம் போட்டு, கறுப்புல ருத்திராட்ச பார்டர் போட்டுப் புடவை எடுத்துண்டு போயிருக்கோம்... நுனி விரலாலே கூடத் தொடலையே... ‘எதுக்கு இத்தனைக் காசைக் கொட்டி வாங்கினே... பொறிப் பொரியாப் பூப் போட்டு ஒரு கார்டன் ‘வெரைலி’ வாங்கித் தந்தாக் கூடப் போதுமேயின்னு அலட்சியமா ஒரு பதில்... கார்டன் கட்டிக்கற வயசா இதுக்கு? வாங்கித் தந்தா - சும்மாத்தான் இருப்பாளா... அப்படியே, என்னையும் அவரையும் கிழிச்சுத் தோரணம் கட்டியிருக்க மாட்டா..."

    ‘புஸ் புஸ்’ என்ற ரயில் இன்ஜின் கணக்காய் புகைந்தபடி மீனா சொன்ன போது புன்னகைத்தேன்...

    மீனா... உன் மாமியாருக்கு என்ன வயசு?

    ஏன். அறுபத்தியாறு…

    இத்தனை வருஷத்துல என்ன மாதிரிப் புடவைங்க எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கீங்க?

    ஏன்... எதுவும் குறையலே... தர்மாவரம், காஞ்சி புரம், ஆரணி, சுங்குடி, தேவேந்திரா - தர்மேந்திரான்னு ஒண்ணும் பாக்கியில்லே...

    அது சரி... அந்த கார்டன் வெரைலி.

    போதுமே... அதை வாங்கிக் கொடுத்துட்டு, என்னை வசவு வாங்கிக் கட்டிக்கச் சொல்றீங்களா?

    பொறு... புடவை வாங்க, உன் மாமியாரையும் அழைச்சிட்டுப் போவியா?

    கூத்துத்தான். தானும் எதுவும் வாங்க மாட்டா... நம்மையும் எதுவும் எடுக்க விட மாட்டா... கழுத்துல கல்லைக் கட்டிட்டு சமுத்திரத்துலக் குதிக்கறதும் – என் மாமியாரை இழுத்துட்டு ஷாப்பிங் போறதும் ஒண்ணுதான்...

    மாமியாரின் - தப்பு - மாமியார் என்கிற அறுபது வயசுக் குழந்தையின் ஏக்கம் எனக்குப் புரிந்தது.

    அதற்குத் தேவை - ருத்திராட்ச பார்டர் போட்ட புளியங்கொட்டை கட்டம் போட்ட புடவை இல்லை...

    தன் வயசுக் காலத்தில் கட்டாத - புது ரகமானப் புடவை... பெரிசு பெரிசாய் டிசைன் போட்டுக் கட்ட வயசு தடுக்கிறது. அதனால் பொறிப் பொறியாய் பூப்போட்ட சேலையை மனசு கேட்கிறது.

    அது மட்டுமல்ல... புடவை வாங்குகிற சாக்கில், மகன் - மருமகள் - பேரக்குழந்தைகளுடன் மைலாப்பூர், பாண்டி பஜார் என்று

    Enjoying the preview?
    Page 1 of 1