Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சூஃபி தத்துவ கதைகள்
சூஃபி தத்துவ கதைகள்
சூஃபி தத்துவ கதைகள்
Ebook42 pages42 minutes

சூஃபி தத்துவ கதைகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சூஃபி என்ற வார்த்தை அரபி மொழியிலுள்ள வார்த்தை. சூஃபி தத்துவம் என்பது காலதேச வர்த்தமானங்களை கடந்தது..

சூஃபி கதைகள் ஒரே ஒரு கருத்தையோ, தத்துவத்தையோ மட்டும் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படையாகத் தெரிவதையும் தாண்டி, நுட்பமாக அவை உணர்த்தும் கருத்துகள் அபாரமானவை...

Languageதமிழ்
Publisherkalai
Release dateMay 25, 2021
ISBN9798201621056
சூஃபி தத்துவ கதைகள்
Author

kalai Selvan

I’m a author of Kids stories,health and lifestyle and Romance. My love: - On friendship, love, lust, relationship, enmity, man, woman, nature, politics and the world .I’m father of two kids, but I’ve also been a Engineer, a typographer, a Photographer. But I love Travelling to look like a gypsy  -kalaiselvan

Read more from Kalai Selvan

Related to சூஃபி தத்துவ கதைகள்

Related ebooks

Reviews for சூஃபி தத்துவ கதைகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சூஃபி தத்துவ கதைகள் - kalai Selvan

    சூஃபி  ஓர் அறிமுகம்

    ஒரு சூஃபி எந்த மதத்தை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். விழித்துக்கொண்ட எந்த மனிதனும் சூஃபிதான். ஹிந்துமதத்தின் அத்வைதத்துக்கும் பௌத்தத்தின் ஜென்னுக்கும் மிக நெருக்கமாக உள்ளது சூஃபித்துவம்.

    ஒரு சூஃபியின் பயணம் இரண்டு தளங்களில் இயங்குகிறது.அது உடல் பயணமாகவும்(PHYSICAL TRAVEL) ஞானப்பயணமாகவும்(MYSTIC TRAVEL) அமைகின்றது.

    ஒரு பயணி, பயணித்து தனது இலக்கான சேர வேண்டிய இடத்தை அடைவது போல ஒரு சூஃபியானவன் தனது ஞானப் பயணத்தால் சூஃபிய படிநிலை ஞானத்தை அடைகின்றான்.

    பயணம் எந்த ஒரு சாதாரண மனிதனையும் கூடப் புடம் போட்டுவிடும் வல்லமை கொண்டது. பயணத்தின் புதிய இடம், புதிய பண்பாடு, புதிய வடிவங்கள், புதிய மனிதர், புதிய அனுபவம் என்று பல புதுமைகளை சந்தித்து மானிடர்கள் புதிய சிந்தனைத் தளத்திற்கு செல்கின்றனர்.

    சூஃபி என்ற வார்த்தை அரபி மொழியிலுள்ள வார்த்தை. சூஃபி தத்துவம் என்பது காலதேச வர்த்தமானங்களை கடந்தது..

    சூஃபி கதைகள் ஒரே ஒரு கருத்தையோ, தத்துவத்தையோ மட்டும் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படையாகத் தெரிவதையும் தாண்டி, நுட்பமாக அவை உணர்த்தும் கருத்துகள் அபாரமானவை

    சூஃபி இசையின் முக்கிய நோக்கமே தன்னிலை மறந்து இறைஅனுபவத்தில் இரண்டற கலப்பதேயாகும். கர்நாடக இசை எப்படி இறைவனை அடைவதையே தனது ஆதார நோக்கமாக கொண்டதோ அதேபோல்தான் சூஃபி இசையும். ஆனால் கர்நாடக இசை சுருதி மற்றும் தாளம் போன்ற இலக்கண விதிமுறைகளுக்கு உட்பட்டது. ஆனால் சூஃபி இசையில் இதுபோன்ற இலக்கண விதிமுறைகள் இல்லை. அது தியான நிலைக்குள் மனதை கொண்டு சென்று பிரபஞ்ச வெளியில் இரண்டற கலக்கும் ஒரு பயணம்.

    ஞெ (NYE) எனப்படும் குழல் இசை சூஃபி இசையின் அடிப்படை நாதம். தேவாலயத்தில் இசைக்கப்படும் ஆர்கன் இசைப்போல, கர்நாடக இசையில் இசைக்கப்படும் இசைக்கருவி. சூஃபிமார்கள் உலகம் முழுக்க பயணம் மேற்கொண்டு இஸ்லாத்தை பரப்பியபோது இந்த சூஃபி இசை அந்தந்த நாட்டு கலைவடிவத்தை உள்வாங்கிக்கொண்டு பல்வேறு பிரிவுகளில் விரிந்தது. இந்தியாவில் கஜலாகவும் கவாலியாகவும் திரிபடைந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1