Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அபூர்வ சங்கமம்
அபூர்வ சங்கமம்
அபூர்வ சங்கமம்
Ebook57 pages31 minutes

அபூர்வ சங்கமம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பதினாறு நாள் காரியங்களும் முடிந்து விட்டன.

திடமாக தேக்கு மரம் போல இருந்த துரை இப்படி போய்ச் சேருவான் என யாருமே அந்தக் குடும்பத்தில் எதிர்பார்க்கவில்லை! அதனால் அந்த அதிர்ச்சியிலிருந்து யாரும் மீளவும் இல்லை!

அக்கம், பக்கமும் நண்பர்களும்தான் ஏராளமாகச் செலவு செய்து அவனது இறுதி யாத்திரையை முடித்திருந்தார்கள்.

மேலதிகாரிகள் அன்றுதான் வீட்டுக்கு வந்தார்கள்.

சந்திரிகா ஒரு ஓரமாக நின்றாள்.

அவளுக்கு அனுதாபம் தெரிவித்த உயர் அதிகாரி, மேடம்... துரை எங்க பேக்டரில பத்து வருஷமா வேலை பாக்கறார். அவரோடஃபைனல் செட்டில்மென்ட் பணம் கிட்டத்தட்ட... ஒண்ணே கால் லட்சம் இருக்கு. சர்வீஸ் அதிகமாகலை! லோன் எடுத்திருக்கார். எல்லாம் போக இந்தத் தொகை வருது! இன்ஷ்யூரன்ஸ் தொகை அம்பதாயிரம் வரும்! எல்லாத்துக்கும் ஆன செக் உங்க பேர்ல போடப்பட்டிருக்கு! இந்தாங்க!"

வாங்கிக்கொண்டாள்.

"அப்புறம்! அவரோட வேலையை எக்ஸாக்டா நாங்க தரமுடியாது. ஆனா எங்க பேக்டரில உங்களுக்கு வேலை தர ப்ரொவிஷன் இருக்கு. உங்க பயோடேட்டா, சர்டிபிகேட்ஸ் எல்லாம் நீங்க தந்தா, சீக்கிரமா நாங்க ப்ரொஸீட் பண்ணுவோம்!"

"நாளைக்கே நான் அனுப்பி வைக்கறேன்!"

"நாங்க வர்றோம்மா!"

அவர்கள் புறப்பட்டுப்போய் விட்டார்கள்.

ருக்மணி அருகில் வந்தாள்.

"அண்ணி நான் புறப்படணும்! குழந்தையை அவர் கிட்ட விட்டுட்டு வந்திருக்கேன்!"

"சரி ருக்கு!"

அம்மாவின் அழுகை திடீரெனப் பெரிதானது!

ருக்மணி பதறி ஓடி வந்தாள்.

"ஏம்மா? என்னாச்சு?"

"நீயும் போயிட்டா, நானும் கௌரியும் வீதில தான் நிக்கணும்டி ருக்மணி!"

"உங்க ரெண்டு பேரையும் நான் எப்படிம்மா கூட்டிட்டு போக முடியும்? அவர் அனுமதி கேக்க வேண்டாமா?"

சந்திரிகா அருகில் வந்தாள்.

"ருக்கு... உன்னைக் கூட்டிட்டுப் போக யார் சொன்னது?"

"அண்ணி?"

"நீயும் கூட்டிட்டுப் போக வேண்டாம். அவங்க ரெண்டு பேரையும் வீதில நிறுத்திட்டு, நான் வேடிக்கை பார்ப்பேனா?"

"……."

"நீ புறப்படு! நாங்க மூணு பேரும் இந்த வீட்ல இருந்துப்போம்!"

மாமியார் அருகில் வந்தாள்.

"அது எப்படி முடியும்?"

"முடியும் அத்தே! அவரோட கம்பெனில எனக்கு வேலை நிச்சயமா கிடைக்கும். இந்த ஒண்ணே முக்கால் லட்சத்தை டெபாஸிட்டாப் போட்டா கிட்டத்தட்ட ரெண்டாயிரம் வட்டிக்குக் கிடைக்கும்!"

"சரிடீ! வீட்டு வாடகையே ஆயிரத்து நானூறு ரூபா போகுதே! தவிர கரண்ட் பில்லு! மூணு பேர் சாப்பிட வேண்டாமா?"

"சாப்பிடலாம் அத்தே! முதல்ல குடியிருக்க வீடும், கட்டிக்கத் துணியும் இருக்கில்லையா? எனக்கு நிச்சயமா வேலை கிடைக்கும்! அதுவரைக்கும் கடன் வாங்கிக்கலாம். அவரை இழந்தது துரதிருஷ்டம்தான். அதுக்காக இருக்கறவங்க தூக்கலயா தொங்கமுடியும்? சொல்லுங்க பாக்கலாம்!"

மாமியார் பேசவில்லை?

ருக்மணி புறப்பட்டுப் போய் விட்டாள்.

LanguageEnglish
Release dateFeb 24, 2024
ISBN9798224620852
அபூர்வ சங்கமம்

Related to அபூர்வ சங்கமம்

Related ebooks

Marriage & Divorce For You

View More

Related articles

Reviews for அபூர்வ சங்கமம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அபூர்வ சங்கமம் - Devibala

    1

    எதிர்பாராமல் அது நடந்து முடிந்துவிட்டது.

    அந்தக் குடும்பத்தில் யாருமே அதை எதிர்பார்க்கவில்லை!

    துரை நன்றாகத்தான் இருந்தான். நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக எந்த நேரமும் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு மாரடைப்பு வரும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா?

    முதல் நாள் இரவு வரை நன்றாகத்தான் இருந்தான். வழக்கம் போல மூன்று சப்பாத்தி என சாப்பிட்டு, பால் குடித்தான். பத்து மணி வரை டிவி பார்த்தான். பிறகு வந்து படுத்தான். உடனே வழக்கம் போல உறங்கியும் போனான்!

    காலை நாலரைக்கு சந்திரிகா எழுந்து வீட்டு வேலைகளைத் தொடங்கி விட்டாள்.

    துரைக்கு ஏழு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டாக வேண்டும்!

    ஏழரைக்கு பேக்டரியில் ‘பன்ச்’ செய்தாக வேண்டும்!

    அஞ்சரை மணிக்கு சந்திரிகா அவனை எழுப்பினாள்

    ஷேவ் பண்ணிக்க வேண்டாமா?

    வந்துட்டேன்!

    பல் தேய்த்து விட்டு வந்து, அவள் தந்த காபியைக் குடித்த பின், ஷேவ் செய்யத் தொடங்கிய நிமிடம், மாரில் சுருக்கென ஒரு வலி புறப்பட்டது!

    முதலில் அதைப் பொருட்படுத்தாமலே லேதரைக் குழைத்து முகத்தில் சீராகத் தடவத் தொடங்கினான்.

    ரேஸரை முகத்தில் வைத்த நிமிடம் அடுத்த சுருக்.

    இது சுள்ளென்று சற்று பலமாகவே இருக்க,

    ‘ஏன் மாரை வலிக்கணும்? ஒரு மாதிரி மூச்சைப் பிடிப்பதைப் போலிருந்தது.’

    நெஞ்சு முழுக்க, தொண்டையிலிருந்து தொடங்கி, அதிவேகமாக ஒருவித எரிச்சல் படரத் தொடங்க,

    வலி அதிகமாகி, நெஞ்சின் மையத்தில் ஒரு பாறையை வைத்ததைப்போல பாரம் அதிகமாக, வியர்வை தொடங்கி விட்டது.

    உள்ளே குக்கர் விசிலடிக்கத் தொடங்கி விட்டது.

    சந்திரிகா...!

    குரல் கொடுத்தான். அவனுக்கே அது கேட்கவில்லை!

    சந்திரி... உன்னைத்தான்!

    அவள் மிக்ஸியில் சாம்பாருக்கு அரைத்துக் கொண்டடிருந்தாள்.

    ஷேவ் பண்ண முடியாமல், அப்படியொரு வியர்வை முகம் முழுக்க உண்டாகி வேதனை கொடுக்க,

    தடுமாறிப்போய் சோபாவில் வந்து உட்கார்ந்தான்.

    சந்திரிகா வெளியே வந்தாள்.

    என்ன இது? ஷேவ் பண்ணாம இங்கே வந்து ஒக்காந்துட்டீங்க?

    பேச்சே இல்லை!

    அருகில் வந்தாள்.

    ஏன் உங்களுக்கு இப்படி வேர்த்திருக்கு?

    அவன் முகம் ஒரு மாதிரி கோணிக் கொண்டு, வலியில் துடிப்பதைப் பார்த்ததும், அலறி விட்டாள் சந்திரிகா.

    அத்தே! சீக்கிரம் எழுந்து வாங்களேன் அவர் என்னவோ மாதிரி இருக்கார்!

    மாமியாரை உலுக்கினாள்.

    நாத்தனார் கௌரியும் எழுந்து விட்டாள்.

    அண்ணி! பார்த்தா ஹார்ட் அட்டாக் மாதிரி இருக்கு!

    வாயை மூட்றி! அம்மா அதட்ட,

    சந்திரிகா பக்கத்து ஃபிளாட் கதவைத் தட்டினாள்.

    அந்த மனிதர் வந்து விட்டார்.

    பத்தே நிமிடங்களில் தீப்பற்றிக் கொண்டதைப் போல ஆகிவிட்டது.

    சடுதியில் கூட்டம் சேர்ந்து விட்டது.

    யாரோ ஆட்டோவுக்காக ஓடினார்கள்.

    ஆட்டோ வந்து

    Enjoying the preview?
    Page 1 of 1