Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காதல் ராஜ்ஜியம் உனது
காதல் ராஜ்ஜியம் உனது
காதல் ராஜ்ஜியம் உனது
Ebook115 pages40 minutes

காதல் ராஜ்ஜியம் உனது

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மறுநாளும் இதே கதைதான் நடந்தது.
 'ஒவ்வொரு மனிதனையும் ஒரு வித ஒளி சூழ்ந்து நிற்கிறது.
 அவன் எதைத் தொட்டாலும், அவனுடைய இயல்பின் ஒரு கூறு, அதாவது அவனுடைய குணம் அந்தப் பொருளில் பதிகிறது. ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் அவனது குணம் ஒரு பௌதிக சக்தி போல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.'
 விவேகானந்தரின் இந்தக் கூற்றை அடிக்கடி அவளுடைய எம்.டி. மகேந்திரன் சொல்லிச் சொல்லிச் சம்யுக்தாவைப் பாராட்டுவார்.
 "சம்யுக்தா... உன்கிட்ட கொடுக்கற ஒவ்வொரு வேலையிலும் உன் குணம் பிரதிபலிக்குதும்மா! உன்னோட எளிமை, நிதானம், பொறுமை, அழகு, அறிவு...! எல்லாமே அந்த வேலையோட வெற்றியில் தெரியுது. உரிய நேரத்துக்குள்ள நீ முடிச்சுக் கொடுத்ததால கம்பெனிக்கு புதுப்புது ஆர்டர் கிடைச்சிருக்கு. இன்னைக்கும் உனக்கொரு வேலை வைத்திருக்கேன். முடிச்சுக் கொடுத்துட்டுப் போறியாம்மா?"
 "கண்டிப்பா சார்!"
 எம்.டி.மகேந்திரனின் பாராட்டு அவளை உற்சாகப் படுத்தியதில் நேரம் போவதே தெரியாமல் ஆழ்ந்திருந்தாள் வேலையில்.
 அனைவரும் அலுவலகம் முடிந்து போய்விட்டனர். ராஜேஷைத் தவிர அவன் மட்டும் எதை எதையோ கிளறிக் கொண்டிருந்தான்சம்யுக்தா அதைக் கவனிக்கவே செய்தாள். ஆனால் நேற்றுப் போல் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போகக் கூடாது என நினைத்தாள். நான் எதற்கு இவனுக்குப் பயந்து கொண்டு போக வேண்டும். இப்படி நினைத்தவள் ப்யூனை அழைத்தாள்.
 அவள் ப்யூனை அழைத்ததுமே ராஜேஷ் திரும்பினான்.
 "என்ன... இன்னைக்கும் வேலையா? ஒரு மணி நேரம் ஆகுமா?" என்றான்.
 அவள் பதிலேதும் கூறாமல் வெறுமனே 'ம்...' என்றாள்.
 "ஒரு காபி வேணும். அவ்வளதுதானே! அதுக்கெதுக்கு ப்யூனைக் கூப்பிடணும். கீழேதான் கேண்டீன். வாங்களேன்... ரெண்டு பேரும் போய் காபி குடிச்சிட்டு வரலாம். சீட்டிலேயே உட்கார்ந்திருக்கிங்களே... ஒரு ரிலாக்ஸாயிருக்குமில்லை..." என்று சிரித்தான்.
 "நான் ப்யூனைக் கூப்பிட்டது காபி வாங்கி வர்றதுக்கு இல்லை," என்று கூறினாள். அதே சமயம்! ப்யூன் வந்தான்.
 "என்னம்மா?"
 "இந்தா... இந்த ஃபைலைக் கொண்டு போய் எம்.டி. மேஜையில வை," என்று ஒரு கோப்பை எடுத்து நீட்டினாள்.
 அவன் சென்றதும் மறுபடியும் தன் வேலையில் ஆழ்ந்தாள்.
 ராஜேஷ் எழுந்து அவளுடைய மேஜைக்கருகே வந்தான். இரு கைகளையும் மேஜைமீது ஊன்றியவாறே...
 "நான் வேணா உங்களுக்கு உதவி செய்யட்டுமா? சீக்கிரம் வேலை முடிஞ்சா நீங்க சீக்கிரம் வீட்டுக்குப் போகலாமே!"
 "ஒரு வேலையும் இல்லைன்னாலும் வீட்டுக்குப் போகாம இப்படி மத்தவங்களுக்கு உதவணும்னு நினைக்கிறீங்களே... உண்மையிலேயே உங்களுக்குப் பெரிய மனசுதான்!" வேண்டுமென்றே நக்கலாகச் சொன்னாள்

LanguageEnglish
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223512981
காதல் ராஜ்ஜியம் உனது

Related to காதல் ராஜ்ஜியம் உனது

Related ebooks

Marriage & Divorce For You

View More

Related articles

Related categories

Reviews for காதல் ராஜ்ஜியம் உனது

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காதல் ராஜ்ஜியம் உனது - R.Sumathi

    1

    அலுவலகத்திற்கு வந்ததுமே ராஜேஷின் விழிகள் அலைபாய்ந்தன. வரிசையாக அமர்ந்து ஒழுங்காக வேலை செய்ய வேண்டிய ஊழியர்கள் அங்கங்கே நின்று பேசிக் கொண்டிருந்ததிலிருந்து தான் லேட்டாக வரவில்லை என்ற நிம்மதி பரவியது.

    அவனுடைய அலைபாய்ந்த விழிகள் நேராகச் சம்யுக்தாவின் இருக்கையை நோக்கிப் பாய்ந்தன. இருக்கை காலியாகயிருந்தது. அவள் இன்னும் வரவில்லை. அவளுக்குப் பக்கத்து இருக்கைதான் அவனுடையது. வந்து அமர்ந்தான். மறுபடியும் அவளுடைய இருக்கையின் மீதே பார்வை பரவியது.

    அவளுடைய பஞ்சு போன்ற உடலைத் தாங்கிய இருக்கை, சாய்ந்து கொள்ளும் முதுகுப்பகுதி, கைகளை ஊன்றி எழுதும் மேஜை, லாவகமாக எடுத்துப் பேசும் தொலைபேசி...

    இப்படி ஒவ்வொன்றாக அவனுடைய பார்வை அவற்றின் மீது படர்ந்தது... வருடியது.

    அவள் அமரும் அழகு, சாயும் அழகு, எழுதும் அழகு, பேசும் அழகு...

    அழகுதான், அவள் மட்டுமல்ல! அவளுடைய ஒவ்வொரு செய்கையும்தான்.

    அவள் வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்தே... இல்லை, அவளைப் பார்த்த கணத்திலிருந்தே அவன் இப்படித்தான் ஆகிவிட்டான். அவளைப் பார்ப்பதற்காகவே தனக்கு இங்கே வேலை கிடைத்திருக்கிறதோ என்றெல்லாம் பைத்தியம் போல் நினைக்கத் தொடங்கிவிட்டான். அவனுடைய ஆழ்நிலை தியானத்தை அந்தக் காலடியோசை மெல்லக் கலைத்தது. நிமிர்ந்தான்.

    நிலவு சிரித்தது, சிக்கனமாக.

    சம்யுக்தா. மெல்லிய புன்முறுவல், அவ்வளவுதான். ஆனால் அந்தப் புன்முறுவலில் மனம் ஆயிரம் மின்னல்களை உற்பத்தி செய்து உள்ளேயே அனுபவிக்கிறது.

    முறுவலுக்கே மூளைக்குள் இத்தனை பட்டாம் பூச்சிகள் பறக்கிறதென்றால், முல்லைப் பற்களைக் காட்டி அவள் சிரித்து வைத்தால் என்னாகும்? அவள் அவனைக் கடந்தது தென்றலொன்று கடந்ததைப் போல்தான் இருந்தது.

    ஆனால் மெல்லிய வியர்வை கழுத்திலும் நெற்றியிலும் பரவியது.

    கைக்குட்டை எடுத்துத் துடைத்துக் கொண்டான்.

    குட் மார்னிங் சார்!

    குழல் இனிது யாழ் இனிது என்று கூறுபவர்கள் கேட்க வேண்டும் இவள் குரலை.

    ஓரிரு வார்த்தைக்கே இத்தனை இனிமையென்றால் ஒரு சில மணி நேரம் அவள் அருகே வந்தமர்ந்து அன்பாகப் பேசினால்... அவளுடைய காலடியில் விழுந்து விடாதா அவன் மனம்! வரம் பெற்ற பக்தனைப் போல் பதில் குட்மார்னிங் சொல்லக்கூடத் தோன்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    சம்யுக்தா என்ன அழகு! இதோ இருக்கையில் ஒரு பூச்செண்டை வைத்ததைப் போல் அமர்ந்தாள்.

    அளவான சதைப் பற்றோடு அளவான உயரம். பரந்து விரிந்த கரிய கூந்தல்.

    சந்தன நிறம், வட்ட முகத்தில் வரைந்து வைத்த விழிகள், அழகான மூக்கு, சாயமேற்றப்படாத சாதாரண உதடுகள், நெற்றியில் சின்னஞ் சிறிய பொட்டு, காதில், விரலில் மாட்டிக் கொண்டிருந்ததை எடுத்துப் போட்டுக் கொண்டதைப் போல், சிறிய வளையம், கழுத்தில் நூலிழை போன்ற தங்கச் சங்கிலி, கையில் ஒற்றை வளையல். எளிமையானவள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் தோற்றம்.

    ஆனால் அது மற்றவர்களின் பார்வைக்குத்தான். ராஜேஷின் பார்வையிலோ அவள் நிமிடத்திற்கொரு அலங்காரமும், நேரத்திற்கொரு கோலமும் கொண்டு வளைய வந்தாள். அழகைக் கண்டவன் ஆசை கொண்டவன் காதலில் விழுந்தவன் கவிஞனாவான் என்பதுதான் இலக்கிய மரபு.

    இவனோ -

    மேக்கப் மேன் ஆனான். எளிமையான அந்த முகத்திற்கு கற்பனையில் ஒப்பனை செய்து கொண்டேயிருந்தான்.

    புருவம் திருத்தினான், வெறுமையான விழிகளுக்கு மையிட்டான். கன்னங்களில் சிவப்புத் தெரிய பவுடர் போட்டான். உதட்டில் சிவப்பேற்றினான். பக்கத்திலேயே திருஷ்டிப் பொட்டு வைத்தான். நெற்றியில் திலகமிட்டு மீதத்தை நெற்றி வகிட்டில் இழுத்தான். சுடர் விடும் ஜிமிக்கிகளைக் காதில் போட்டான். கைநிறையக் கண்ணாடி வளையல்கள் இட்டு அவற்றைக் கலகலத்து ஒலிக்கவிட்டான். விரல்களில் மோதிரங்கள் பதித்து நகங்களில் பவழத்தின் நிறம் பூசினான்.

    ஆஹா! எத்தனை அழகு! அதிசயித்தான்.

    மேடம்... உங்களை எம்.டி. கூப்பிடுறார்! ப்யூன் வந்து சொன்னதும் சட்டென்று எழுந்தாள் சம்யுக்தா.

    கோப்புகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு செல்ல யத்தனித்த போது யதேச்சையாக ராஜேஷின் பார்வை விழவே திடுக்கிட்டாள். அவனுடைய ஆழமான பார்வை அகற்றிக் கொள்ள முடியாத நிலை அவளை முகம் மாற வைத்தது. - அவசரமாக எம்.டி.யின் அறையை நோக்கிச் சென்றவள் வேண்டுமென்றே அவனைக் கவனித்தாள். அவன் இன்னும் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான். ராஜேஷ் மேஜை டிராயரைப் பூட்டிவிட்டு எழுந்தான். கிட்டத்தட்ட அனைவரும் போய்விட்டிருந்தனர். கடிகாரத்தைப் பார்த்தாள் சம்யுக்தா. மணி ஐந்தரை. எம்.டி.அவசரமாக முடிக்கும்படி கொடுத்திருந்த வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.

    தலையை வலிப்பதைப் போலிருந்தது. எப்படியும் இந்த வேலையை முடிக்க ஒரு மணி நேரமாவது ஆகும்.

    ப்யூனை அழைத்தாள். சூடாக ஒரு காபி கொண்டு வரச் சொன்னாள்.

    என்னம்மா... வீட்டுக்குப் போற நேரத்துல காபி கேட்கறீங்க?

    அவன் தலையைச் சொறிய... அவள் நெற்றியைப் பற்றிக் கொண்டாள்.

    ப்ச்! ஒரு மணி நேர வேலை இருக்கு. அதான் ஒரு கப் காபி கொண்டு வரச் சொல்றேன்.

    சரிம்மா. ப்யூன் நகர... வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்த ராஜேஷ் ஒரு நிமிடம் நிதானித்து ப்யூனை அழைத்தான்.

    என்ன சார்?

    எனக்கும் ஒரு கப் காபி வாங்கிட்டு வாப்பா.

    ஏன் சார். உங்களுக்கும் ஏதாவது வேலையிருக்கா?

    ஆமாம்ப்பா.

    சரி சார். அவன் நகர், சம்யுக்தா முகத்தில் எரிச்சல் படர, அதைக் காட்டிக் கொள்ளாமல் வேலையைத் தொடர்ந்தாள்.

    காபி வந்தது. பருகிவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.

    அவன் தன்னுடைய பையிலிருந்து ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தான். படிக்கத் தொடங்கினான். அதைக் கவனித்த அவளுக்கு முகம் இன்னும் இறுகியது.

    சட்டென்று எழுந்தாள், கையிலிருந்த கோப்பை மடக்கி எடுத்துக் கொண்டு - எம்.டி.யின் அறைக்குள் நுழைந்தாள்.

    என்னம்மா... வேலை எதுவரை முடிஞ்சிருக்கு?

    ஸாரி சார், பாதிதான் முடிஞ்சிருக்கு. உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா நான் இதை வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் செய்து எடுத்துட்டு வரட்டா?

    தாராளமாக!

    தாங்க்யூ சார்! வெளியே வந்தாள். இன்னும் சில கோப்புகளை எடுத்துக் கொண்டு ஹேண்ட் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு வேகமாக

    Enjoying the preview?
    Page 1 of 1