Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathaiyin Kathai
Kathaiyin Kathai
Kathaiyin Kathai
Ebook209 pages1 hour

Kathaiyin Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதில் இடம் பெற்ற யாவையும் கற்பனையே! என்பதுதான் முதல் கற்பனை! என்பார் லா.ச.ரா. ஒரு சின்ன பொறியாவது உண்மையிலிருந்துதான் கதை என்ற ஒன்று தோன்றியிருக்க வேண்டும் அப்படி என்னுடைய கதைகள் எதிலிருந்து தோன்றியது என்பதுதான் இந்த கதையின் கதை. இது புதுமையாகவும் இருக்கட்டுமே. என்ற எண்ணமும் கூடதான்.

Languageதமிழ்
Release dateSep 11, 2023
ISBN6580130210060
Kathaiyin Kathai

Related to Kathaiyin Kathai

Related ebooks

Reviews for Kathaiyin Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathaiyin Kathai - La.Sa.Ra. Saptharishi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கதையின் கதை

    (சிறுகதைகள்)

    Kathaiyin Kathai

    (Sirukathaigal)

    Author:

    லா.சா.ரா. சப்தரிஷி

    La.Sa.Ra. Saptharishi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/la-sa-ra-saptharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. பாப்பா

    2. பிரசவம்

    3. பொய்யாக இறக்கிறேன்

    4. மீண்டும் ஒரு காதல் கதை

    5. எனது உயிர் நண்பனே!

    6. அன்புள்ள சிநேகிதிக்கு...

    7. நன்றி

    8. பயம்

    9. சிப்பி

    10. காதல் எனும் துரோக நதி

    11. பசி

    12. பூரணி

    13. பாசம் ஒரு பாவ நதி

    14. பஞ்சு மாமா

    15. மியாவ்...வ்

    16. மீண்டும் ஜனனி

    17. அன்னாகன்னி கரீனா

    முன்னுரை

    இந்தக்கதையில் இடம் பெறும் சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே என்பதுதான் இந்தக்கதையின் முதல் கற்பனை.

    விஞ்ஞானக் கதைகளும் எதிர்காலக் கதைகளுக்கும் வேணுமானால் இது பொருந்தலாம் ஆனால் எந்தக்கதைக்கும் ஒரு ஆதார ஸ்ருதி இருந்தே ஆகவேண்டும்... அதனை வளப்படுத்தி ஒரு உருவுக்குக் கொண்டுவரலாமே தவிர முழுக்கக் கற்பனையில் அந்தரத்தில் எதுவுமே இல்லாததை அலங்காரம் செய்வதெப்படியாம்.

    எப்போதும் அப்பாவுடன் நான்! அப்பாவுடன் சர்ச்சையானாலும்... சண்டையானாலும்... சமாதானமானாலும். உரையாடலானாலும்... அப்பா எங்கு சென்றாலும் (பாத்ரூம்ப் தவிர... அனுமதித்திருந்தால் அதற்கும் தயாராகத் தானிருந்தேன்) (இப்படியாகத்ததான் அரவிந்தன் திருப்பூர் கிருஷ்ணனுக்கு இருந்தார்) அதனால் எல்லாருமே நான் என்றைக்காவது எழுத்தத் தொடங்குவேன் அல்லது எழுதுவேன் என்று நினைத்தார்கள் சொன்னனர்கள்!

    நானும் அந்த மிதப்பில் எழுதாமல் இருந்தேன் திடீரென்று ஒருநாள் சாவியில் வேலையிலிருந்த என் தம்பி, சாவி இதழை என்னிடம் தந்து நமட்டுச் சிரித்தான்... பிரித்தால் நாங்க முதுகெலும்பு இல்லாதவங்க சார் கதை வந்திருந்தது படம் உமாபதி. எழுதியது லா.ரா. சந்திரசேகர்

    அடடா! தூங்கிட்டேனே! ஆமை ஜெயித்துவிட்டதை காலம் மறக்காதே!

    அடுத்த ஆறுமாதங்களில் நான் ஒரு கதை எழுதிக்கொண்டு ‘அஸ்வினி’க்குப் போனேன். ஆசிரியை ‘இந்துமதி’ மேடம். நீங்களும் பட்டுக் கோட்டைப் பிரபாகரும் என்னை முதல் முதலில் சந்தித்ததை மறக்கவே முடியாது என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார்.

    ஒருகதை எழுதிக்கொண்டு வந்திருக்கேன்.

    அந்தக்கவரை வலது கையில் வாங்கி இடது கைக்கு மாற்றி மேஜையில் வைத்தபோது வலது கை என்ன செய்ததென்று கவனிக்கவில்லை ஆனால் அந்த கையில் நாலு பத்து ரூபாய் நோட்டு இருந்தன.

    என்னத்துக்கு?

    சன்மானம்!

    படிச்சுப்பாக்கவே இல்லையே

    லாசரா மகன் எழுதினதை ஏன் படிச்சுப்பாக்கணும்? நேரடியா வாசகர்கள் படிப்பாங்க!

    அடடா! அது சன்மானமில்லை, பரிசுமில்லை, பாராட்டு.

    முன் கதைச்சுருக்கம்

    அது பெரிய்ய காவியக்கதை அல்ல. ஒரு சாதாரணனின் எப்போதுமான முதல் கதைதான்...

    லேடீஸ் கிளப்பே கதியாய் இருக்கும் அம்மா சீட்டாட்டமே உயிராயிருக்கும் அப்பாவின் இரண்டு குழந்தைகளில் முதல் குழந்தையை எப்போதும் பாப்பா எவ்வளவு அழகாயிருக்கு பாரு நீகூட பாப்பாவாயிருக்கும்போது அழகாத்தான இருந்தே இப்பிஞ்சு வயசுல அழகழிஞ்சு போயிட்டே... என நெகெட்டிவாக பேசிக்கொண்டிருக்கும் பெற்றோரால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை தனக்கு நேர்ந்த கதி பாப்பாவுக்கும் நேரக்கூடாதென...

    ஒருநாள் பாப்பாவைக் காணாமல் க்ளப்பிலும் சீட்டாட்டத்திலும் திளைத்தவர்கள் சாயங்காலமாய் ஞாபகம் வந்து தேடும்போது அக்கா குழந்தை பாப்பாவை ஃப்ரிட்ஜிலிருந்து எடுக்கிறது... அவர்கள் அதிர்ந்து போகிறார்கள் அக்கா சொல்கிறாள் நீதானம்மா ஃப்ரிட்ஜ்ஜுல வெச்சதெல்லாம் மாறாம அப்படியே இருக்கும்ன்னு! நான்தான் இப்படிஆயிட்டேன் பாப்பாவாவது அதே அழகோட இருக்கட்டுமேன்னுதான்...

    இதற்கு மூன்று ஆதார ஸ்ருதிகள்

    (1) 1981ல் பங்களூரில் என் மாமா வீட்டிற்கு போயிருந்தபோது நான் பார்த்த ஃப்ரிஜ்சாச்சர்யத்திலிருந்து மீளநாளாயிற்று... தக்காளிக்காய் பழுத்த பிறகும் பால் உறைந்து தயிர் ஆனபிறகும் அதை ஃப்ரிஜ்ஜில வைத்த மாமியிடம் ஏன் அதை அப்படியே வைக்கவில்லை என்று கேட்டதற்கு அப்படியே வெச்சா அப்படியே தானிருக்கும் உறைஞ்சப்புறம் வெச்சாத்தானே தயிராவே இருக்கும்.

    (2) லண்டனில் ஒரு அம்மாவிடம் குழந்தை கேட்கிறது இந்த தங்கச்சிப் பாப்பா எப்படிம்மா பொறந்தது?

    அம்மா தொப்பையில தூங்கிண்டு இருந்தது கத்தியால தொப்பைய கிழிச்சு பாப்பாவை வெளியில் கொண்டுவந்தாங்க.

    சாயங்காலம் வேலைக்குப் போய்விட்டு வந்த அம்மா பெட்ரூமைப் பாத்து அதிர்ந்து போனாள்... மல்லாக்க பாப்பா பெட்ஷிட்டில் ரத்தவட்டம் அக்கா கையில் கத்தி.

    அம்மா நீ பொய்சொல்றே... பாப்பா தொப்பையில பாப்பாவே இல்லேம்மா.

    (3) குழந்தைகளிடம் முடிந்தவரை உண்மையைப் புரியுமாறு சொல்ல வேண்டும்.

    1. பாப்பா

    சுந்தரராமன், சிட்டி மார்க்கெட்டிலிருந்து, வீட்டிற்குள் பையுடன் நுழைந்தான். இன்று ஞாயிற்றுக்கிழமை. ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமையும் சிட்டி மார்க்கெட்டிலிருந்து காய்கறி வாங்கிவந்து ரகவாரிய்ப் பிரித்து ப்ளாஸ்டிக் கவரில்போட்டு ஃப்ரிட்ஜில் அடுக்கி வைத்துவிடுவான் சுந்தரராமன். அவன் மனைவியும் வேலைக்குப் போவதால், தினமும் காய்கறிக்கடைக்குப் போக முடியாதாகையால் இந்த ஏற்பாடு. இன்னும் கேட்டால் இதற்காகவே ஃப்ரிஜ் வாங்கினான். சைவம். மேலும் குடிகாரனில்லையாகையால் ஃப்ரிஜ்ஜின் உள்ளே முழுவதும் காய்கறியும், முட்டை வைக்குமிடத்தில் எலுமிச்சம் பழங்களும் தானிருக்கும்.

    அவன், அவள், ஏழுவயது சௌமியா, ஆறுமாதப் பாப்பா மொத்த குடும்பத்திற்கும் அரைஅரை கிலோ வாங்கினால்கூட போதும்.

    அவன் களைப்புடன் ஃப்ரிஜ் அருகே வந்து திறந்து காய்கறிகளை அடுக்கினான். குறைந்திருந்த குழியில் இரண்டு எலுமிச்சம் பழங்களை வைத்தான். கறிவேப்பில்லையைப் பால் கவரில் போட்டு ஓரமாய் வைத்தான். தக்காளிப் பழங்களை சின்னக்கூடையுடன் ஃப்ரிஜ்ஜுக்குப் பக்கத்தில் வைத்து கதவை மூடிவிட்டுத் திரும்பினான். சௌமியா நின்று கொண்டிருந்தாள்.

    ஏம்ப்பா, எல்லாத்தையும் அதுக்குள்ளே வச்சுட்டு தக்காளியை மட்டும் வெளியிலே வெக்கறே?

    சௌமியா, இங்கே வா. அப்பாவைத் தொந்தரவு பண்ணாதே. என்ன, தொணதொணன்னு கேள்வி வேண்டிக்கிடக்கு? இந்தாங்கோ, குழந்தையைப் பிடிங்கோ, காப்பி கொண்டு வர்றேன்.

    ‘ணங்’ என்று அவன் கையில் குழந்தையைத் திணித்தாள்.

    பாப்பா (கார்த்திக்கை அவர்கள் கூப்பிடுவது அப்படிதான்.) நல்ல கனம். சுருட்டைமுடி. பூனைக்கண்கள். நிறத்தில் ஆப்பிளை அவமதித்தான். பயங்கர விஷமம். நீஞ்சி நீஞ்சியே எல்லாவற்றையும் இழுத்துக் கவிழ்ப்பான். சுந்தரராமனின் சட்டையை நனைத்துவிட்டு மூக்குச் சளியால் சிரித்துக் கொண்டிருந்தான். அதுவும் அழகாய்த்தானிருந்தது.

    சௌமியா, பாப்பாவைப் பார்த்தியாடி எவ்வளவு அழகாயிருக்கான். நீயும் இருக்கையே?

    ஏம்பா, நான் அழகாயில்லையா? என்று பரிதாபமாக கெஞ்சியபடி கேட்டாள், சௌமியா பாப்பா

    அழகாயிருந்தே இவன் வயதில். வயசாக வயசாக மூஞ்சிலே குழந்தைத் தனமும் போய், அழகும் போய் அசிங்கமாயிட்டே. இப்போ பார், உங்கம்மா உன்னைவிட அசிங்கமாயிருக்கா. காரணம் என்னன்னா...

    அம்மா அவனை முறைத்துக்கொண்டே தோளை முகவாயால் இடித்தாள், அவன் பயந்து போனான், சரி, இப்போ நான் உங்கம்மாவைவிட எவ்வளவு அசிங்கமாயிருக்கேன், பார் காரணம் என்னன்னா... உங்கம்மாவைவிட எனக்கு வயசு ஜாஸ்தியோன்னா... அவள் பக்கம் திரும்பி திருப்தியா? என்றான்.

    அப்போ வயசானா அசிங்கமாயிடுவாளா அப்பா?

    சரி, கேள்வி கேட்டது போதும்... அந்த தக்காளிலே ஒண்ணை எடுத்துண்டு விளையாடப் போ.

    மறந்தே போச்சே. எம்ப்பா தக்காளியை மட்டும் வாங்கின அடுத்த நாள் ஃப்ரிஜ்ஜுக்குள் வைக்கிறே? சௌமியா கேட்டாள்.

    ஏய் சௌமியா...

    எப்பா அவ கரெக்ட்டாத்தானே கேக்கறா நான் சொல்றேன். நம்ப எதை எப்படி இதுக்குள்ளே வைக்குறோமோ அது அது அப்படியே இருக்கும். தக்காளி இப்போ முழுசா பழமாகலையோ இல்லையோ இதை இப்படியே வெச்சா நாளைக்கும் இப்படியே தானிருக்கும். அப்புறம் எப்படி சாப்பிடறது? நாளைக்கு பழமானப்புறம் வெச்சா பழமாவே இருக்கும். சாப்பிடறதக்கும் நல்லாயிருக்கும். இவ்வளவுதான். இதுக்குப் போய் ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டுண்டு இருக்கையே?

    குழந்தைகிட்டே லெக்ச்சர் அடிச்சது போதும். இன்னிக்கு மத்யானம் எங்கள் லேடீஸ் கிளப்பிலே ‘உதிரிப்பூக்கள்’ சினிமா காட்டறாளாம். இவனையும் எடுத்துண்டுபோனா அழுது அழுது மானத்தை வாங்கிடுவான். ஒரு காரியம் கவனிக்க முடியாது. இது நான் பாக்காத படம் வேறே. இவனை வெச்சுண்டு சமாளிச்சுப் பாருங்கோ. லீவுதானே! அழாமே இருந்தான்னா இனிமே உங்ககிட்ட வாராவாரம் விட்டுடுவேன். சமையல் மேடை மேலே பால் பவுடர் டப்பா இருக்கு. அழும்போது அதைக் கரைச்சுத் குடுத்துட்டா அழமாட்டான். நான் சொல்லிண்டே போறேன். சரின்னு தலையாட்டக் கூடாதா?

    ‘சரி’ என்று தயைாட்டினான், (அப்பா! ஒழிஞ்சா! மத்யானம் நிம்மதியாய் சீட்டாடலாம்)

    மத்தியானம் ஆயிற்று.

    போய்ட்டு வர்றேன். அப்படி அடங்காமல் ரொம்ப அழுதான்னா கிளப்புக்கு கொண்டுவந்து விட்டுடுங்கோ. பால் கொடுக்க மறக்க வேண்டாம்.

    போய்விட்டாள்.

    அரைமணிநேரம் பாப்பா அவனுக்கு விளையாட்டு காண்பித்தது. ஞாயிறின் சோம்பேறி நண்பர்கள் வந்துவிடவே, சௌமியாவிடம் பாப்பாவைக் கொடுத்துவிட்டு, சீட்டு விளையாடப் போனான். கால் மணி நேரம் ஆனது. சமையலறையில் ஏதோ சப்தம் கேட்கவே, சுந்தரராமன் எழுத்து உள்ளே போனான்.

    ஃப்ரிஜ் அருகே சௌமியா நின்று கொண்டிருந்தாள்.

    உன்னை ஃப்ரிஜ்கிட்டே எல்லாம் போகப்படாதுன்னு சொல்லியிருக்கேனோல்லியோ?

    ஒண்ணும் இல்லேப்பா. ஃப்ரிஜ் கதவு சரியா ‘லாக்’ ஆகமாட்டேங்கறது. கொஞ்சம் அழுத்தி மூடேன்.

    அறைந்து மூடினான்.

    ***

    சீட்டில் ஏகப்பட்ட லாபம். இந்த மாசக்கடைசிக்கு வேட்டைதான், பாப்பாவுக்கு இரண்டு பால்டப்பா வாங்கி, மீதி எனக்கு ஹார்லிக்ஸ்கூட வாங்கலாம் என்று நினைத்துக்கொண்டே வாட்சைப் பார்த்தான்.

    மணி ஐந்தரை ஆயிற்று.

    எழுந்திருங்கடா, அவ பத்ரகாளி, சீட்டு விளையாடறதைப் பார்த்தால் லபலபன்னு கத்துவா. அப்புறமா அடுத்த ஞாயிறு நானே அங்கு வர்றேன்.

    சௌமியா

    பதிலில்லை

    சௌ...மி...யா...வ்

    ‘எங்கே போய்ட்டா அவ’, கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாப்பா ஞாபகம் வந்தது. அடடா, பால் கொடுக்கச் சொன்னாளே. ‘சௌமியா கொடுத்தாளோ என்னமோ தெரியல்லையே. அவ வந்தா அவ வாயிலே வேறு புகுந்து புறப்படணுமே’ என்று சலிப்புடன் எண்ணிக் கொண்டிருக்கையில்...

    அவள் வந்தாள்.

    பாப்பா அழாம இருந்தானா? முதல் கேள்வியே இதுதான். மனதிற்குள் ‘யாருக்குத் தெரியும்?’ என்று நினைத்துக்கொண்டு இருந்தான் என்றான்.

    பாப்பா எங்கே

    இத்தனை நேரம் நான்தான் வெச்சிண்டுருந்தேன் கையிலேயே (பாப்பாவுக்கு சீட்டு என்று இன்னொரு பேர் உண்டோ?) சௌமியா எடுத்துண்டு போனாள். போய் கூட்டிண்டு வர்றேன்.

    எதிர்வரிசையில் இரண்டு வீடுகளில் நுழைந்து வெளியேறினான். மூன்றாவது வீட்டிலிருந்தாள்.

    பாப்பா எங்கேடி?

    என்னோட வாப்பா, காட்டறேன் நேரே வீறுநடை போட்டுக்கொண்டு நடந்தாள்.

    அம்மா வந்தாச்சாப்பா?

    வந்தாச்சு, பாப்பா எங்கே? சொல்லித் தொலையேன்.

    காமிக்கிறேன்னு சொன்னேனோல்லியோ. பாப்பா என்னை மாதிரி அசிங்கமா ஆகாதுப்பா. எப்படி, சொல்லு பாப்போம்.

    அது இருக்கட்டும். சனியனே, முதல்லே பாப்பாவைக் காட்டு

    பின்னால் கையைக் கட்டிக்கொண்டு பெருமிதத்துடன் அடிமேல் அடிவைத்து தலையை நிமிர்த்தியபடி, அழுத்தமாய் நடைபோட்டபடி ஹாலுக்குள் நுழைந்தாள். சுந்தரராமனும் நுழைந்தான். டைனிங்

    Enjoying the preview?
    Page 1 of 1