Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

திருக்குறள்
திருக்குறள்
திருக்குறள்
Ebook423 pages1 hour

திருக்குறள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கும் உலகப் பொதுமறையான ‘திருக்குறள்’ என்னும் பொக்கிஷத்தை இவ்வுலகிற்கு அளித்தவர், தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
நட்பு, அரசியல், மனைமாட்சி, கல்வி, ஒழுக்கம், ஒற்றறிதல் என பல விஷயங்களை தனித்தனி தலைப்புகளில் 133 அதிகாரங்களாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து பத்து குறள்களாக மொத்தம் 1330 குறள்களில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும், வளமான சமுதாயத்திற்கு வழிகாட்டும் விஷயங்களென்பது இவ்வுலகோர் ஒத்துக் கொண்ட விஷயம்.
பைபிளுக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் ‘திருக்குறள்’ என்று புள்ளி விவரம் சொல்லும் தகவலே இந்நூலின் உயர்வுக்குச் சான்று.

Languageதமிழ்
Release dateJan 28, 2021
ISBN9788179500859
திருக்குறள்

Related to திருக்குறள்

Related ebooks

Related categories

Reviews for திருக்குறள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    திருக்குறள் - Radha Murali

    1. அறத்துப்பால்

    பாயிரம்

    1. கடவுள் வாழ்த்து

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

    பகவன் முதற்றே உலகு.   1

    அனைத்து எழுத்துக்களும் அகரத்தை ( ‘அ’ என்ற எழுத்தை) முதலாகக் கொண்டுள்ளதைப் போல உலகம் முழுமையும் ஆதி பகவானாகிய கடவுளையே முதன்மையாகக் கொண்டு இயங்குகிறது.

    கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

    நற்றாள் தொழாஅர் எனின்.   2

    எவ்வளவு தான் ஒருவன் அறிவு பெற்றிருந்து அனைத்து நூல்களையும் கற்றறிந்தாலும் இறைவனின் திருவடிகளை வணங்கும் இறை பண்பு இல்லாதிருந்தால் அவன் கற்ற கல்வியினால் எந்தப் பயனும் இல்லை.

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

    நிலமிசை நீடுவாழ் வார்.   3

    நமது மனமாகிய மலரில் வீற்றிருக்கும் இறைவனின் பெருமைமிக்க திருவடிகளை எவர் இடைவிடாமல் தியானிக்கிறாரோ அவர் இவ்வுலகில் இன்பமாக நீடூழி வாழ்வார்.

    வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

    யாண்டும் இடும்பை இல.   4

    விருப்பு, வெறுப்பு இல்லாத இறைவனின் திருவடிகளை எப்போதும் நினைப்பவருக்கு எங்கும், எப்போதும் துன்பமில்லை.

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.   5

    உயிரினங்களின் சுவாச இயக்கம், ரத்த ஓட்டம், ஜீரண அமைப்பு போன்ற அனைத்தும் உடலின் உட்புறம் இருளில்தான் நடைபெறுகிறது. அவற்றை செம்மையாக இயக்கும் இறைவனின் புகழை நன்கு புரிந்து கொண்டு விருப்பு, வெறுப்பில்லாமல் வாழ்பவருக்கு பேரின்பமான வீடுபேறு அமையும்.

    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

    நெறிநின்றார் நீடுவாழ் வார்.   6

    இறைவன் ஐம்பொறிகளால் ஏற்படும் ஆசைகளை அறவே அழிப்பவன். அவன் காட்டிய பொய்யற்ற நல்ல ஒழுக்க நெறியில் செல்பவர், இவ்வுலகில் நிலைத்த வாழ்வு பெறுவர்.

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

    மனக்கவலை மாற்றல் அரிது.   7

    உவமை கூற இயலாத இறைவனுடைய திருவடிகளைச் சேர்ந்தவர்களால் மட்டுமே மனக்கவலைகளிலிருந்து மீண்டு வர முடியும். மற்றவர்களுக்கு அது இயலாத காரியம்.

    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

    பிறவாழி நீந்தல் அரிது.   8

    அறக்கடலாக விளங்கும் இறைவனுடைய திருவடிகளைச் சேர்ந்தவர்கள் அல்லாத பிறரால் பொருள், இன்பம் என்னும் பிற கடல்களைக் கடந்து கரை சேர முடியாது.

    கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

    தாளை வணங்காத் தலை.   9

    ஐம்புலன்களோடு அவைகளை உணரும் அறிவும், மனமும் ஆகிய ஏழு அறிவுகளும் இருப்பினும் எட்டு குணங்களையுடைய இறைவனின் திருவடிகளை வணங்காதவரின் தலையால் எந்தப் பயனுமில்லை.

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

    இறைவன் அடிசேரா தார்.   10

    கடவுளது திருவடிகளை மனதில் இருத்தி எப்போதும் நினைப்பவரால் மட்டுமே பிறவியாகிய இப்பெருங்கடலை நீந்திக் கடக்க முடியும். மற்றவரால் கடக்க இயலாது.

    E

    2. வான் சிறப்பு

    வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

    தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று.   11

    மழை பெய்வதாலேயே இவ்வுலகம் செழிக்கிறது. ஆதலால், மழை அனைத்து உலக உயிர்களுக்கும் அமிர்தம் போன்றது என்பதை உணர வேண்டும்.

    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

    துப்பாய தூவும் மழை.   12

    உண்பதற்கு வேண்டிய உணவுப் பொருட்களை விளைவிக்க உதவுவதுடன் உண்பவர்களுக்கு தானும் ஒரு உணவாக அதாவது பருகும் நீராக இருப்பதுவும் மழையேயாகும்.

    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

    உள்நின்று உடற்றும் பசி.   13

    வானிலிருந்து பெய்யும் மழை பெய்யாமல் பொய்த்தால், அகன்ற இவ்வுலகத்து உயிர்களைப் பசி நிலைத்து நின்று வருத்தும்.

    ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்

    வாரி வளம்குன்றிக் கால்.   14

    உணவுப் பொருட்களை உண்டாக்கவல்ல மழை பொய்த்து பெய்யாது நாட்டில் வளம் குன்றினால் உழவர் ஏறெடுத்து உழுதும் பயனில்லையாதலால், உழவுத்தொழிலை மேற்கொள்ள மாட்டார்.

    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

    எடுப்பதூஉம் எல்லாம் மழை.   15

    பெய்யாமல் மக்கள் வாழ்வை கெடுக்கவல்லது மழை. அவ்வாறே வளம் கெட்டு வறட்சியில் தவிப்பவருக்கு உற்ற துணையாய் பொழிந்து காப்பதும் மழையேயாகும்.

    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

    பசும்புல் தலைகாண்பு அரிது.   16

    வானிலிருந்து சிறு மழைத்துளி விழாமல் உலகில் ஒரு பசும்புல் தலையெடுப்பதையும் காண இயலாது.

    நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

    தான்நல்கா தாகி விடின்.   17

    கடலிலிருந்து நீரை முகர்ந்து செல்லும் மேகம், திரும்பவும் மழையாக மாறி கடலிடம் சேராமல் இருந்தால் அந்த கடலும் வளம் குன்றியதாகிவிடும்.

    சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.   18

    மழை பெய்யாமலிருந்தால், இந்த உலகில் தேவர்களுக்கு நடக்கும் திருவிழா மட்டுமின்றி, தினசரி வழிபாடும் நடைபெறாது.

    தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

    வானம் வழங்கா தெனின்.   19

    வானம் மழையை வழங்காவிடில் நாம் பிறருக்கு செய்யும் தானமும் நமக்காக செய்யும் தவமும் செய்ய இயலாது போகும்.

    நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

    வான்இன்று அமையாது ஒழுக்கு.   20

    நீர் இல்லையென்றால் யாராலும் உலகில் வாழ முடியாது. அந்த நீரோ மழையில்லாமல் கிடைக்காது.

    E

    3. நீத்தார் பெருமை

    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

    வேண்டும் பனுவல் துணிவு.   21

    ஆசைகளைத் துறந்து ஒழுக்கமாக வாழ்ந்த மேன்மக்களின் பெருமையே சிறந்தவற்றுள் சிறந்தது என்று நூல்கள் போற்றிச் சொல்கின்றன.

    துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.   22

    ஆசைகளைத் துறந்தவர்களின் பெருமையை அளவிட்டுக் கூறுதல் என்பது, உலகில் இதுவரை பிறந்து இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது போன்றதாகும்.

    இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

    பெருமை பிறங்கிற்று உலகு.   23

    பிறப்பு - இறப்பு, இன்பம் - துன்பம் போன்ற இரட்டைகளின் கூறுபாடுகளையும், தன்மைகளையும் எவனொருவன் ஆராய்ந்து அறத்தை மேற்கொள்கிறானோ அவனது பெருமையே உலகில் உயர்ந்ததாகும்.

    உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

    வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.   24

    ஐம்பொறிகளாகிய யானையை மன உறுதி என்னும் அங்குசத்தால் அடக்குபவன் வீடுபேறடைவது மட்டுமல்லாமல் இவ்வரிய ஞானமார்க்க மானது உலகில் அழியாது செழிப்பதற்கு ஒரு விதை போன்றவனாவான்.

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

    இந்திரனே சாலும் கரி.   25

    ஐந்து புலன்களால் ஏற்படும் ஆசைகளை அழித்தவனுடைய பெருமைக்கு தேவர்களின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்றாவான்.

    செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

    செயற்கரிய செய்கலா தார்.   26

    செய்வதற்குக் கடினமான காரியங்களைச் செய்பவர்களே பெரியவர்கள். செய்ய இயலாதவர்கள் சிறியர்.

    சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்

    வகைதெரிவான் கட்டே உலகு.   27

    சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் என்று சொல்லப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில்தான் இவ்வுலகமானது அடங்கியுள்ளது.

    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

    மறைமொழி காட்டி விடும்.   28

    பயன் தரத்தக்க மொழிகளில் வல்லமையுடைய சான்றோரின் பெருமையை, உலகில் அழியாமல் இருக்கும் அவரது மறைமொழிகளால் அறியலாம்.

    குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி

    கணமேயுங் காத்தல் அரிது.   29

    நல்ல குணங்கள் எனப்படும் மலையின் மீது ஏறி நின்ற சான்றோர் ஒரு கணநேரம் கூட சினத்தை தன்னுள் வைத்துக் கொள்ளமாட்டார்கள்.

    அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

    செந்தண்மை பூண்டொழுக லான்.   30

    உலகில் உள்ள எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர். அவரே அந்தணர் எனப்படுவர்.

    E

    4. அறன் வலியுறுத்தல்

    சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

    ஆக்கம் எவனோ உயிர்க்கு.   31

    அறமானது சிறப்பைத் தரும், செல்வமும் தரும். ஆதலால் இத்தகைய அறத்தைவிடச் சிறந்த உயர்வு வேறு இல்லை.

    அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

    மறத்தலின் ஊங்கில்லை கேடு.   32

    உலகில் உள்ள உயிர்களுக்கு நன்மை தரும் விஷயம் அறத்தைவிட வேறில்லை. அந்த அறத்தை மறப்பதைவிட தீயதும் வேறில்லை.

    ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

    செல்லும்வா யெல்லாஞ் செயல்.   33

    ஒருவன் தான் செல்லும் இடங்களில் எல்லாம் இடைவிடாமல் தன்னால் முடிந்தவரையில் அறச்செயலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

    ஆகுல நீர பிற.   34

    ஒருவன் தன் மனத்தில் மாசு இல்லாதவனாக இருப்பதே சிறந்த அறமாகும். மனத்தூய்மை இல்லாமல் செய்யப்படும் எந்த வேலையும் வெறும் ஆடம்பரமாகத்தானிருக்கும். அதனால் பயன் ஏதுமில்லை.

    அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

    இழுக்கா இயன்றது அறம்.   35

    பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் இந்த நான்கு குற்றங்களையும் விலக்கி தொடர்ந்து நடத்தப்படுவதே அறமாகும்.

    அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது

    பொன்றுங்கால் பொன்றாத் துணை.   36

    நாம் இப்பொழுது இளமையாகத்தானே இருக்கிறோம். முதுமையில் பார்த்துக் கொள்ளலாமென எண்ணாது தினமும் அறத்தை செய்தல் வேண்டும். அந்த அறமானது நாம் அழியும் காலத்திலும் அது அழியாமல் நமக்கு துணையாக வரும்.

    அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.   37

    அறத்தை செய்வதால் கிடைக்கும் பலன் இத்தகையதாயிருக்கும் என்று எதைக் கொண்டும் நாம் உணர்த்த வேண்டியதில்லை. பல்லக்கில் பயணிப்பவர்களையும் அதை தூக்கிச் செல்பவனையும் பார்த்த மாத்திரத்திலேயே அறியலாம்.

    வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

    வாழ்நாள் வழியடைக்குங் கல்.   38

    அறம் செய்யாமல் ஒரு நாளும் இருந்ததில்லை என்று சொல்லுமாறு ஒருவன் அறம் செய்தால் அச்செயலே அவன் திரும்ப பிறக்க வரும் வழியை அடைக்கும் கல்லாகும்.

    அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

    புறத்த புகழும் இல.   39

    அறவழியில் வாழ்வதனால் வரும் பயனே இன்பமாகும். அறமற்ற வழியில் வருவன எல்லாம் இன்பமும் அல்ல. புகழ் தருவனவும் அல்ல.

    செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

    உயற்பால தோரும் பழி.   40

    ஒருவன் வாழ்நாளில் செய்யத்தக்கது அறம். செய்யாமல் நீக்க வேண்டியது, தீய செயல்கள்.

    பாயிரம் முற்றிற்று.

    E

    இல்லறவியல்

    5. இல்வாழ்க்கை

    இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

    நல்லாற்றின் நின்ற துணை.   41

    மனைவியுடன் இல்லறத்தை மேற்கொண்டு வாழ்பவன்தான், பிள்ளைகள், பெற்றோர்கள், உறவினர்கள் என்ற மூவருக்கும் நல்ல வழியில் சிறந்ததொரு துணையாயிருப்பான்.

    துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

    இல்வாழ்வான் என்பான் துணை.   42

    துறவியர், வறியவர் மற்றும் தன்னிடம் வந்து இறந்தவர் இம்மூவருக்கும் (துறந்தவர், வறியவருக்கு வேண்டியதைக் கொடுத்தும் இறந்தவருக்கு நீர்க்கடன் முதலியவற்றைக் கொடுப்பதால்) இல்லறத்தைக் கடைபிடித்து வாழ்பவனே துணையாவான்.

    தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.   43

    தென்புலத்தார் (பித்ருக்கள்), தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் எனப்படும் இந்த ஐவரிடத்தும் செய்ய வேண்டிய அறத்தை அறநெறி தவறாமல் செய்வது சிறந்த கடமையாகும்.

    பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.   44

    பொருள் சேர்க்கும் போது பழிக்கு அஞ்சி நல்வழியில் சேர்த்து, அதைச் செலவழிக்கும் போது பிறருக்கும் பகுத்துக் கொடுத்து வாழ்பவனின் வம்சம் ஒருபோதும் அழிவதில்லை.

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

    பண்பும் பயனும் அது.   45

    ஒருவனது இல்வாழ்க்கை அன்பும் அறனும் கொண்டதாக விளங்குமானால், அவையே அவ்வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.

    அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்

    போஒய்ப் பெறுவது எவன்.   46

    ஒருவன் தன் இல்வாழ்க்கையை அறநெறியில் நடத்துவானாகில், அவனால் வேறு வழியில் சென்று பெறத்தக்கது என்னதான் உள்ளது? (எதுவும் இல்லை).

    இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

    முயல்வாருள் எல்லாம் தலை.   47

    இல்வாழ்க்கையை அறவழியில் நடத்துபவனே, பரம்பொருளை அடைய முயற்சி செய்பவர்களுக்கெல்லாம் முதன்மையானவனாவான்.

    ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

    நோற்பாரின் நோன்மை உடைத்து.   48

    பிறரையும் அறவழியில் செல்லச் செய்து, தானும் அறவழியில் நடப்பவரின் இல்வாழ்க்கை, தவம் செய்பவரை விட மேன்மை படைத்த வாழ்க்கையாகும்.

    அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

    பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.   49

    அறம் என்று சிறப்பித்துப் பேசப்படுவது இல்வாழ்க்கையே ஆகும். அதிலும் பிறர் பழிக்கும்படி குற்றம் ஏதும் இல்லாமல் இருந்தால் அது மேலும் நன்மை தரும்.

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

    தெய்வத்துள் வைக்கப் படும்.   50

    அறத்துடன் கூடி வாழ வேண்டிய முறைப்படி இவ்வுலகில் வாழ்பவன், வானின் கண் உள்ள தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.

    E

    6. வாழ்க்கைத் துணைநலம்

    மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.   51

    இல்வாழ்க்கைக்குத் தேவையான நற்பண்புகள் கொண்டு, தன் கணவனது பொருள் வளத்திற்கு ஏற்றபடி வாழ்க்கை நடத்துபவளே சிறந்த வாழ்க்கைத் துணை ஆவாள்.

    மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

    எனைமாட்சித் தாயினும் இல்.   52

    இல்லற வாழ்க்கைக்குத் தகுந்த நல்ல பண்புகள் மனைவியிடம் இல்லை என்றால், ஒருவனது வாழ்க்கையில் வேறு எத்துணைச் சிறப்புகள் இருந்தும் அதனால் எந்த பயனுமில்லை.

    இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

    இல்லவள் மாணாக் கடை.   53

    ஒருவனுக்கு நல்ல குணமிக்க மனைவி அமைந்துவிட்டால் அவனுடைய வாழ்க்கையில் அவனுக்கு கிடைக்காததுதான் என்ன? (அனைத்தும் கிடைக்கும்) ஆனால் அவளோ மாறாக இருந்தால் வாழ்வில் அவனிடம் இருப்பதுதான் என்ன? (ஒன்றுமிருக்காது).

    பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

    திண்மையுண் டாகப் பெறின்.   54

    இல்வாழ்வில் கற்பென்னும் மன உறுதி மனையாளிடம் இருக்குமானால் அதைவிட பெருமையான விஷயம் வேறு என்ன உள்ளது?

    தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

    பெய்யெனப் பெய்யும் மழை.   55

    பிற தெய்வம் எதையும் தொழாமல், கணவனையே தெய்வமாகத் தொழுபவள் ‘பெய்’ என்று சொன்னால் மழை பெய்யும்.

    தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

    சொற்காத்துச் சோர்விலாள் பெண்.   56

    கற்பு நெறி தவறாது தன்னைக் காத்துக் கொண்டு, தன் கணவனின் நலனையும், குடும்பத்திற்கு நலம் தரும் புகழையும் காத்து உறுதி தளராது சோர்வடையாமல் இருப்பவளே சிறந்த மனையாள்.

    சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்

    நிறைகாக்குங் காப்பே தலை.   57

    பெண்களை சிறை வைத்து காவல் காப்பதால் என்ன பயன்? அவர்கள் தங்களைத் தாங்களே மனவடக்கத்தால் காவல் காத்துக் கொள்வதே சிறந்தது.

    பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

    புத்தேளிர் வாழும் உலகு.   58

    பெண்டிர் இத்தனை சிறப்புக்களையும் பெற்றிருந்தால் தேவர்கள் வசிக்கும் மிகச்சிறந்த வானுலகையே பெறுவர்.

    புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

    ஏறுபோல் பீடு நடை.   59

    புகழைக் காக்க விரும்பும் குணவதியை மனைவியாக அடையப் பெறாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் பெருமையாக நடக்க இயலாது.

    மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்

    நன்கலம் நன்மக்கட் பேறு.   60

    இல்வாழ்க்கைக்கு மங்கலம் தருவது மனைவியின் நல்ல பண்பே ஆகும். அந்த இல்வாழ்வுக்கு அணிகலனாக இருப்பது நன் மக்கட்பேறு.

    E

    7. மக்கட்பேறு

    பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

    மக்கட்பேறு அல்ல பிற.   61

    அறிவு நிறைந்த நன் மக்களைப் பெறுவதைத் தவிர ஒருவன்தான் பெறுவதற்கரிய பேறு என்று எதையும் நினைப்பதில்லை.

    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

    பண்புடை மக்கட் பெறின்.   62

    பழி இல்லாத நற்பண்புள்ள குழந்தைகளை ஒருவன் பெற்றால், அவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைகளின் பயனாகிய துன்பங்கள் வந்து சேரா.

    தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

    தம்தம் வினையான் வரும்.   63

    தமது குழந்தைகளே தமது செல்வம் என்று அறிஞர்கள் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளவாறே செல்வமாக இருப்பது அவரவர் செய்த நற்பயனாலேயே அமையும்.

    அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

    சிறுகை அளாவிய கூழ்.   64

    தமது குழந்தைகளின் சிறிய கைகளால் அளையப்பெற்ற உணவு, பெற்றோருக்கு அமிர்தத்தை விட இனியதாகும்.

    மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.   65

    நமது குழந்தைகளின் உடலைத் தொடுதல் நமது உடலுக்கு இன்பத்தைத் தரும்; அவர்களது மழலையைக் கேட்டல் செவிக்கு இன்பம் தரும்.

    குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

    மழலைச்சொல்

    Enjoying the preview?
    Page 1 of 1