Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கற்றுக் கொடு கண்மணி..!
கற்றுக் கொடு கண்மணி..!
கற்றுக் கொடு கண்மணி..!
Ebook99 pages54 minutes

கற்றுக் கொடு கண்மணி..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரவு சாப்பாட்டு மேஜைக்கு வந்தாள் சந்திரா. 

அப்பா, அம்மா இருவரும் இருந்தார்கள். 

"ஏன் சந்திரா ஒரு மாதிரி இருக்கே? உடம்பு சரியில்லையா?" அம்மா தான்  கேட்டாள். 

"ஆபீஸ்ல வேலை அதிகம்மா!" 

"முடியுலைனா லீவு போடேன்மா!" 

"இல்லைப்பா! வருஷக் கடைசி! லீவு போட்டா விடமாட்டாங்க! படுத்துத் தூங்கினா சரியாயிடும்!" 

"சந்திரா! நம்ம தரகர் வந்தார்!" 

நிமிர்ந்தாள் சந்திரா. 

"ரெண்டு மூணு நல்ல ஜாதகங்கள் கொண்டு வந்து தந்துட்டுப் போனார்!"

"சரிப்பா!" 

"உனக்கும் கல்யாணத்துக்கு பாத்துரட்டுமாம்மா?" 

அப்பா போன வருஷம் தான் ரிடையர் ஆனார். தனியார் ஒன்றில் பர்ச்சேஸ் ஆபீசராக வேலை பார்த்தவர். கவனமாக அம்மா குடும்பம் நடத்தியதில், நாலு காசு சேர்ந்திருந்தது. 

இரண்டும் பெண் குழந்தைகள். நன்றாகப் படிக்க வைத்து உத்யோகமும். கிடைத்து விட்டது. 

அப்பா ரிடையர் ஆனதும் மொத்தப் பணம், இன்ஷ்யுரன்ஸ் என்று கணிசமாக ஒரு தொகை வந்தது. 

இரண்டாகப் பிரித்து விட்டார். 

இந்திராவை சமீபத்தில் தான் கல்யாணம் செய்து கொடுத்தார். இதோ சந்திரா! அப்பாவுக்கு சொந்த வீடும், பென்ஷன் பணமும் இருப்பதால் அவர்களுக்கு அது தாராளம். 

கோடு போட்டு வாழ்ந்த குடும்பம். 

குழந்தைகளையும் அதே போல வளர்த்தார். 

"அம்மாடீ! உனக்கும் பாத்து முடிவு பண்ணிரலாமா?" 

"....!" 

"உன் மனசுல யாரையாவது நினைச்சுகிட்டு இருக்கியா?" அப்பா வெகு நாசுக்கு. சகலமும் கேட்டுத்தான் செய்வார். 

"இல்லைப்பா! அப்படி யாரும் இல்லை. உங்க இஷ்டப்படி நீங்க முடிவு பண்ணலாம். என் சம்பளம் கொஞ்ச நாள் கூட இந்த வீட்டுக்கு உபயோகப்படட்டும்னா, தள்ளிப் போடுங்க கல்யாணத்தை!" 

"அது நிரந்தரமாம்மா! காலா காலத்துல நடக்க வேண்டியது நடக்கணும்மா!'

அம்மா என்றைக்குமே அப்பாவுக்கு எதிர்ப்பேச்சு பேசமாட்டாள்! 

சந்திரா பச்சைக் கொடி காட்டி விட்டாள். 

இரவு படுத்தபோது உறக்கம் வரவில்லை... 

'ச்சே! சீனு மேல எத்தனை ஆழமாகக் காதல் வைத்திருந்தேன்? ஒரு நொடியில் அத்தனையும் கலைந்து போய்விட்டதே!' 

'யார் அந்த போட்டோக்களை அனுப்பினார்கள்?' 

'யாராக இருந்தால் என்ன?' 

'சீனு அதை மறுக்கவில்லையே!' 

'நிஜம்தான். சீனு ஒரு முன்னாள் அயோக்யன் என்பது நிஜம்தான்!' 

'அயோக்யன் என்ற வார்த்தை சரியா?' 

'ஏன் சரியில்லை? குடி, பெண் தொடர்பு, போதைப் பழக்கம் சகலமும் இருந்தால், அவன் யோக்கியனா?' 

'திருந்தி விட்டதாகச் சொல்லவில்லையா?' 

'மேற்படி பழக்கங்கள் உள்ளவன், திருந்தியதாகக் கதை உண்டா?'

'வேதாளம் ஒரு நாள் பழையபடி முருங்கை மரம் ஏறிவிட்டால்?'

'வேண்டாமே!'

'சரியான நேரத்தில் தெய்வம் என்னைத் தட்டி எழுப்பி விட்டதே!'

'அது போதும்!'

சற்று நேரத்தில் உறங்கிப் போனாள் சந்திரா. 

LanguageEnglish
Release dateFeb 24, 2024
ISBN9798224798902
கற்றுக் கொடு கண்மணி..!

Related to கற்றுக் கொடு கண்மணி..!

Related ebooks

Marriage & Divorce For You

View More

Related articles

Related categories

Reviews for கற்றுக் கொடு கண்மணி..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கற்றுக் கொடு கண்மணி..! - Devibala

    1

    "அவசரமா ஏன் வரச் சொன்ன சந்திரா?"

    நிமிர்ந்து அவனை ஊடுருவிப் பார்த்தாள் சந்திரா.

    நீயும், நானும் எத்தனை காலமாப் பழகறோம் சீனு?

    கிட்டத்தட்ட ஒரு வருஷமா!

    எனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுனு உனக்குத் தெரியாதா சீனு?

    களவு!

    அதை உன்னால இப்பச் சொல்ல முடியுமா சீனு?

    அவன் குரலில் காதல் இல்லை. சற்றே வேகம் இருந்தது. சன்னமாக மூச்சிரைத்தது.

    மெலிதாக வியர்த்தது.

    சீனு அருகில் வந்து மெல்ல அவள் கைகளைப் பிடித்தான்.

    படக்கென உதறினாள் சந்திரா.

    இதெல்லாம் வேண்டாம் சீனு!

    உன் கோபத்துக்கு என்ன காரணம் சந்திரா? நான் தெரிஞ்சுகலாமா?

    உன்னை நான் ஏன் காதலிக்கறேன் சீனு?

    கேள்வி புரியலை!

    எதைப் பார்த்து உன்னை நான் காதலிக்கத் தொடங்கினேன்?

    நீயே சொல்லு!

    நம்ம முதல் சந்திப்பே ஒரு கோயில்ல ஆரம்பமாச்சு. கூட்டமான பிரதோஷ நாள்ள, என் கழுத்துச் செயினை ஒருத்தன் அறுத்துகிட்டு போகப் பார்த்தப்ப, அவனைப் புடிச்சு உதைச்சிட்டு, செயினை நீ மீட்டுத் தந்தே! உன் நெத்தில இருந்த விபூதி... நெஞ்சுல இருந்த நேர்மை, பாசாங்கு இல்லாத வார்த்தைகள் இதெல்லாம்தானே எனக்குப் பிடிச்ச சங்கதிகள்?

    ஆமாம்!

    உனக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லைனு நீயே சொல்லியிருக்கே!

    இப்பவும் அதைத்தான் சொல்றேன் சந்திரா?

    யூ... ஸ்டாப் இட் சீனு! யு அர் எ லயர்!

    சந்திரா... என்ன சொல்ற நீ?

    ஒரு வருஷம் கழிச்சு உன்னைப் பத்தின பல அதிர்ச்சிகள் எனக்கு இப்பத்தான் கிடைச்சிருக்கு!

    புரியலை!

    உனக்குக் குடிப்பழக்கம் உண்டு. நண்பர்கள் கூடச் சேர்ந்தா, எந்த எல்லைக்கும் போகக் கூடியவன் நீ. போதை மருந்து, பெண் தொடர்பு எதையும் நீ விட்டவன் இல்லை!

    நிறுத்து சந்திரா! என்ன பேசிட்டே போற?

    ஆதாரமில்லாம நான் பேசலை!

    ஆதாரம்?

    இதோ! ப்ரெண்ட்ஸ் கூட நீ உட்கார்ந்து குடிக்கற போட்டோ!

    சடாரென கைப்பை திறந்து ஒரு கவரை எடுத்து குறிப்பிட்ட ஒரு புகைப்படத்தை எடுத்தாள்.

    புகைமண்டலத்துக்கு மத்தியில் விஸ்கி டம்ளர் சகிதம் நண்பர்களுடன் சீனு...

    போதையில் அரைகுறையாகத் திறந்த விழிகள்...

    கையில் சிகரெட்...

    சீனு பேசவில்லை...

    இதையும் பாத்துடு சீனு!

    மற்றொரு படத்தை வெளியே எடுத்தாள்.

    அதில் சீனுவைச் சுற்றி பல பெண்கள்...

    ஒருத்தி மடியில் சீனு ஒய்யாரமாகப் படுத்துக் கிடந்தான்.

    கொண்டா அதை இப்படி!

    எதுக்கு சீனு? இந்தப் படங்களெல்லாம் பொய்னு சொல்கிறயா சீனு?

    அவன் பேசவில்லை.

    ச்சே! உன் மேல நான் உயிரையே வச்சிருந்தேனே சீனு! எங்கக்கா கல்யாணம் முடிஞ்சு, போன மாசம் தான் லைன் க்ளியர் ஆச்சு. நம்ம காதலை கூடின சீக்கிரம் எங்கப்பாகிட்ட சொல்லணும்னு நினைச்சுகிட்டிருந்தேன். நல்ல காலம் நான் பிழைச்சேன்!

    சந்திரா! உன்கிட்ட நான் சில விளக்கம் கேக்கணும்!

    என்ன?

    இந்த போட்டோக்கள்?

    எனக்கு ரிஜிஸ்டர் தபால்ல நேத்து முன்தினம் வந்தது, ஆபீசுக்கு!

    யார் அனுப்பினது இதை?

    அதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை! ஆதார பூர்வமா உன் சுயரூபம் அப்பட்டமா வெளில தெரியுதா இல்லையா?

    ஸோ, நீ நம்பிட்டே!

    இத்தனை தெளிவாப் பார்த்த பின்னாலும் நம்பலைனா எப்படி?

    என்னைப் பேசவிடுவியா?

    .........!

    இதை அனுப்பினது யார்னு தெரியலை! ஆனா என்னை உன்னோட இணைய விடாம யாரோ தடுக்கறாங்க. யாருக்கோ நம்ம காதல் பிடிக்கலை!

    அவள் பேசவில்லை.

    இது உண்மைதான் சந்திரா!

    சப்பாஷ்!

    இரு சந்திரா! அவசரப்படாதே! என்னை முழுக்கப் பேச விடு!

    உண்மைன்னு உன் வாயால ஒப்புக்கிட்ட பின்னால பேச ஏதாவது இருக்கா சீனு?

    இருக்கு சந்திரா! இப்ப என் பேச்சைக் கேக்காம நீ .போயிட்டா, வாழ்நாள் முழுக்க வருத்தப்பட வேண்டி வரும். ப்ளீஸ்!

    …....!

    இது உண்மைதான். எப்ப? உன்னைக் காதலிக்கத் தொடங்கறதுக்கு முன்னால வாழ்க்கைல எந்தப் பிடிப்பும் இல்லாம இருந்தேன். எனக்கு யாரும் இல்லை! நான் தனி மனுஷன்னு உனக்குத் தெரியும். உறவு, பாசம்னு எந்தப் பிடிமானமும் இல்லாம நான் இருந்தப்ப, நண்பர்கள் மூலமா எல்லாப் பழகிட்டேன். தாறுமாறா இருக்கத்தான் செஞ்சேன். எப்ப உன்னைப் பார்த்தேனோ, அப்ப முதல் புது மனுஷனா நான் மாறிட்டேன் சந்திரா!

    இதை நான் நம்பணுமா?

    அது உன் இஷ்டம். உன் நேர்மையான குணமும், வெளிப்படையான பேச்சும் எனக்குப் பிடிச்சுப் போக, என் கெட்ட பழக்கங்களை உதறிட்டு வாழறது எனக்குக் கஷ்டமா இருக்கலை? ஒரு பெண்ணோட காதல் இதை சாதிச்சிருக்கேனு நான் சந்தோஷப்பட்டேன்!

    அப்படியா?

    "இதை நீ நம்பணும் சந்திரா! அந்த நண்பர்களை எல்லாம்

    Enjoying the preview?
    Page 1 of 1