Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பம்பர் குற்றங்கள்
பம்பர் குற்றங்கள்
பம்பர் குற்றங்கள்
Ebook110 pages40 minutes

பம்பர் குற்றங்கள்

By JDR

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புதன் கிழமையின் மாலை 5-30 மணி.
 சேது சுப்பிரமணியைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கல்லூரிலிருந்து பழவூர் நோக்கி போய்க்கொண்டிருந்தான்.
 "நம்ம திட்டம் எல்லாம் சரியா இருந்தும் எனக்கு என்னவோ ரொம்ப உதறலா இருக்குது சுப்பிரமணி..." என்றான் சோமு.
 சுப்பிரமணியும் உள்ளுக்குள் பயந்துகொண்டிருந்தான். எனினும் அதை வெளிக்காட்டாமல் சிரித்தான். "இதுல பயப்பட என்ன இருக்குது சேது... தைரியமா இரு. வரும் போது நா செயினோட வர்ரேன்..."
 பழவூரை நெருங்கினார்கள்.
 சூரியன் மேற்கில் படுத்துக்கொண்டதால் வெளிச்சம் குறைந்துவிட்டிருந்தது. மெயின் ரோட்டிலிருந்து பழவூரின் உள்ளே செல்ல மண் பாதை இருந்தது. மண் பாதையில் மெயின் ரோட்டுக்கும் ஊருக்கும் நடுவில் ஒரு சின்ன பாலம் இருந்தது. சுற்றிலும் பொட்டல் காடு.
 சைக்கிள் கேரியரிலிருந்து குதித்த சுப்பிரமணி, சேதுவுக்கு 'டாட்டா' காட்டினான்.
 சுப்பிரமணி கையில் ஒரு சின்ன துணிப்பை வைத்திருந்தான். அதில் ஒரு கருப்புத் துணியும், ஒரு பிச்சுவாக் கத்தியும் அடக்கியிருந்தான். சட்டை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வெள்ளை சட்டையே அணிந்திருந்தான். மண் பாதையில் நடந்து பாலத்தை அடைந்தான். அடைந்து மஞ்சுளாவுக்காகக் காத்துக்கொண்டிருந்தான்.
 வானம் ஒளியிழந்துவிட, பூமி இருண்டு போனது. பழவூர் மண்பாதையில் ஆள் நடமாட்டம் முழுவதும் நின்று போயிருந்தது. மெயின் ரோட்டில் பஸ்கள் போவதும் வருவதும் மட்டும் புகைபிம்பமாய் தெரிந்ததுமேற்கிலிருந்து. ஒரு பஸ் ஒளிப்புள்ளிகளோடு வந்து நின்று, பின் கிழக்கு நோக்கி நகர்ந்தது.
 சுப்பிரமணி உஷாரானான்.
 'மஞ்சுளா டீச்சர் வருகிறாளா? அவள் மட்டுமே வர வேண்டுமே...' என்றது அவன் எண்ணம்.
 வந்தது மஞ்சுளா டீச்சர்தான். விளையாட்டு விழாவை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்தாள். தனியாக வந்து கொண்டிருந்தாள்.
 சுற்றும்முற்றும் பார்வையைச் சுழற்றிய சுப்பிரமணி, யாரும் தென்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, கருப்புத் துணியைத் தன் முகத்தில் மூக்கையும், வாயையும் மறைக்கும் வண்ணம் கட்டிக்கொண்டு, முகமூடி திருடனானான்.
 பிச்சுவாவை எடுத்துக்கொண்டு தயாரானான். மஞ்சுளா நெருங்கி வரவும், பிச்சுவாவைப் பிடித்த கையைத் தன் தலைக்கு மேல் உயர்த்தினான்.
 மஞ்சுளா சுப்பிரமணியை மிக நெருங்கியதும்தான் கவனித்தாள். அலற வாயைத் திறந்து சத்தம் வராமல் தவித்தாள். பயத்தில் நடுநடுங்கினாள்.
 சுப்பிரமணி குத்திவிடுபவன் போல பாவலா காட்ட, மஞ்சுளா அலறினாள்.
 "ஐயோ, கொன்னுடாத... என்னை கொன்னுடாத... இந்தா..." என்றவள் தன் கைப்பை, நகைகள் எல்லாவற்றையும் கழற்றி நீட்டினாள். "குத்திடாதே... என்னை விட்டுரு. ஐயோ, ஐயோ... ஐயையோ..."
 "ஷ்... கத்தாதே..." என்று மிரட்டினான் சுப்பிரமணி.
 கப்சிப் ஆன மஞ்சுளா தன்னையும் மீறி, தான் கத்தி விடக் கூடாதே என்பதற்காக கையால் வாயைப் பொத்திக் கொண்டாள்.
 "நா குற்றம் செய்யணும்ங்கிறதுக்காக உன்கிட்ட திருட வரல. ரொம்ப அத்தியாவசியத்துக்காத்தான் திருடறேன். அதனால் எனக்கு ஒரே ஒரு செயின் மட்டும் போதும். மத்தத நீயே கழுத்துல போட்டுக்க..." என்றான் சுப்பிரமணி தன் குரலை மாற்றிக்கொண்டுமஞ்சுளா 'நிஜம் தானா' என்பதுபோலப் பார்த்தாள்.
 "போலீஸ் கீலீஸ்னு போனே, தொலைச்சுக் கட்டிடுவேன்..." என்று ஒரு மிரட்டல் விட்ட சுப்பிரமணி, ஒரு செயினை மட்டும் எடுத்துக்கொண்டான். பிறகு பொட்டல் காடு நோக்கி ஓடுவது போல பாவலா செய்து மஞ்சுளா பார்வைக்கு மங்கியதும் ரோட்டுக்கு வந்தான். முகமூடியை அவிழ்த்தான். ரோடு வெறிச்சென்றிருந்தது. சுப்பிரமணி வெள்ளை சட்டையை கழற்றினான். உள்ளே கருப்பு பனியன் அணிந்திருந்தான். பொருள்களைப் பையில் வைத்துக்கொண்டு சேதுவுக்காகக் காத்திருந்தான்.
 சேதுவின் உருவம் ரோட்டில் சைக்கிளோடு தோன்றியது.
 "சுப்பிரமணி..." என்று மெல்ல குரல் கொடுத்துப் பார்த்தான் சேது.
 சுப்பிரமணி பதிலுக்கு, "நான் தான் வா..." என்றதும் சைக்கிளோடு சுப்பிரமணியை நெருங்கினான்.
 "வெற்றியா?"
 "வெற்றி... வா இனிமே ஊர்ல போய் பேசிக்கலாம்..."
 சேது சைக்கிளை ஓட்ட, சுப்பிரமணி கேரியரில் தொற்றிக்கொண்டான்.
 அவன் மனதில் விஷவித்து விழுந்தது.
 'கொள்ளையடிப்பது இவ்வளவு எளிதானதா? பணம் சம்பாதிப்பது இவ்வளவு லேசான விவகாரமா?'
 மஞ்சுளா டீச்சர் - போலீசுக்குப் போகவில்லை. உயிராசை!
 சுப்பிரமணியும் ராமுவும் மதுரைக்குச் சென்று, (கடன் வாங்கித்தான்) அந்த நகையை விற்றார்கள். அது ஐந்து பவுன் இருந்தது. சுளையாய் எட்டாயிரம் கிடைத்தது.

LanguageEnglish
PublisherPocket Books
Release dateDec 16, 2023
ISBN9798223222330
பம்பர் குற்றங்கள்

Related to பம்பர் குற்றங்கள்

Related ebooks

Crime Thriller For You

View More

Related articles

Related categories

Reviews for பம்பர் குற்றங்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பம்பர் குற்றங்கள் - JDR

    ւebook_preview_excerpt.html[n#~A6 r[`vq(  %9WYx +c%6F;Uxm^+Oln.?j2q.'5M*l*x5TgzsXz U_=-?}3' *lih;8V`سkc~GoΊO6v~ݏ79gYv`AoKܑĉ8#yF㯏,X@Y˴AZ=G keB Be)tg}k^h,.薝|nR}0ITC :i=;V5i$ (ۃ_\G $]xE 9%P#swƲTzy\\#Vxt"ed,$5YkkI h8vZpuQ1.h;fgޘ/=S%I"hQnX=4EI B'ӘTN֣IPs5Df%!<Q=z]b2iا1g׌r5 ߄#+MQvi&Z8.__;$A2n"%x>^W18.!!{i=x!`oO[(*k hƸV*muԄYC=$o2 . Cv~#3٬#W=nK8' xdBX.;~Ug"Sx;-)o)dP[ȀgemLaަ -A$銺G8N]>,@)W ΍".j碌GZ"' 8׃|c642 zrrdqwL2D]HB#mlt vۭ*r7DGAÔ>+Պ(JqE:]YpBRm kZx\= QJ>MtWXWVƝܷ1\JV$H ?1SOك, Cl̸)m|VWħJ__BYFIVfQq5 +qur *PcKv.u!q+s+h+0V =T` ֲFZ9ϖc 5=-{i¦a~HTfMs{0hwedV"{"Z_~fWH[>g Ġˋ-w +raHOWF L/Sw=#%#i2A5,/"k6ĈiE$j}ǙJmp>AlcgDbYFYmW&ح`y,5x\|&NߏF5uחk [Q`kof!S _1^Lx(U6q/ҸnZj.[w1T츺ld%l-p IN=u|Qar 6)յz˵2YL ʨt(SK`d{_̀Lˋp$.8hIv3;6|_TMnpź#*B'n.P7y⟮ a.ƕ%U" Xc=9W:!J)[;&kzhYMO^4H5sM+Tju6;cZ9=&G6u@;BA17\7P ]e:8IZ."r <0FsM<:7{GhH@EZ_)tŋ)..Xm7rQ/Osgwr@Œ$rb _9I&Z%eۻxO :<қ|PGj H[ٳ 3Ҁ*<{Z"3YTgT9JB z/~Cٌ:y6,&OŤ:nͿw\!/y=@}^iUrwc&TOX'xt>D]ȅlU6쩞t%N;3\%2p0_a0B-3OG⏌??9h{4#<4}܀ŴzuFg ͭ 5D0|Ji<7-;,a1Bףwk9\xE5ӡ6x .3qݼT7vr-?P\(UmuER>afNWY7ωC_xZ,iBPM 5w:͙fc T{p,I`C58RJsgF7gGx  b4
    Enjoying the preview?
    Page 1 of 1