Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அதிரும் உதிரம்
அதிரும் உதிரம்
அதிரும் உதிரம்
Ebook184 pages46 minutes

அதிரும் உதிரம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூரணி பஸ்ஸினின்றும் இறங்கி அந்த மல்லிகைப் பந்தல் கிராமத்தின் புழுதி மண்ணை மிதித்தபோது பதினோரு மணி வெய்யில் பின்னங்கழுத்தை தீயாய் சுட்டது.
 அந்தப் பிரம்மாண்டமான ஆலமரத்துக்குக் கீழே இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒரு கிழவியை நெருங்கினாள்.
 "பாட்டி... ஊருக்குள்ளே போகணும்ன்னா இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்...?"
 அந்தக் கிழவி திரும்பி நின்று கையைக் காட்டினாள்.
 "அதோ... தூரத்துல ஒரு ஓட்டு வீடு தெரியுதே!"

ஆமா..."
 "அதுதான் ஊரோட ஆரம்பம்." என்றவள் பூரணியை ஏற இறங்க பார்த்தாள்.
 "நீ யாரு அம்மிணி... ஊருக்குப் புதுசா...?"
 "ஆமா... இப்பத்தான் முதல் தடவையாய் வர்றேன்..."
 "இந்த ஊர்ல உனக்கு வேண்டியவங்க யாராவது இருக்காங்களா...?"
 "வேண்டியவங்க யாரும் இல்லை பாட்டி. நான் இந்த கிராமத்துக்கு வந்ததே காளி மல்லிகாம்பாள் கோயில்ல ஒரு வேண்டுதலை நிறைவேற்றத்தான்..."
 "ஆத்தா கோயிலுக்கு வந்தியா... உனக்கு எந்த ஊரும்மிணி...?"
 "மெட்ராஸ்..."
 "பட்டணத்திலிருந்து வர்றியா...? பார்க்க லட்சணமா 'செவச் செவ'ன்னு இருக்கே...! இப்படி வேகாத வெய்யில்ல தனியா வந்து இருக்கியேம்மா... துணைக்கு யாரையாவது கூட்டிட்டு வந்து இருக்கலாமில்ல...?"
 "காளி மல்லிகாம்பாள் இருக்கிறப்ப என்ன பயம் பாட்டி...?"
 "அப்படிச் சொல்லு... என்ர ராசாத்தி... அந்த ஆத்தா இந்த ஊர்ல இருக்கப் போய்த்தான் ஊரை எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும் பச்சைப்பசேலுன்னு இருக்கு. எளநீ சாப்பிடறியாம்மிணி...?"
 "ம்... குடு பாட்டி..."
 "சாப்பிட்டு பாரு... நாய்க்கர் தோப்பு எளநீ தண்ணியில் சர்க்கரையை கரைச்சமாதிரி தொண்டை வரைக்கும் இனிக்கும்."
 கிழவி சொல்லிக் கொண்டே ஒரு இளநீர் காயை எடுத்து அருவாளால் லாவகமாய் சீவ ஆரம்பித்தாள். பூரணி அந்தக் கேள்வியைக் கேட்டாள்:
 "இந்தப் கிராமத்துக்கு மல்லிகைக் பந்தல்ன்னு பேர் வர என்ன காரணம் பாட்டி?"

என்னம்மிணி! உனக்கு அந்தக் காரணம் தெரியாதா...? தெரிஞ்சிருக்கும்ன்னு நினைச்சேன். ஒவ்வொரு சித்திரை மாசமும் பௌர்ணமி அன்னிக்கு ஆத்தாவுக்கு ஊர் பூராவும் பொங்கல் வெப்பாங்க. ஆத்தாவை அலங்காரம் பண்ணி தேர்ல வெச்சு ஊர் மொத்த ஜனமும் இழுத்து வரும். அந்தத் தேரு வர்ற வீதி பூராவும் மல்லிப்பூவால பந்தல் போட்டிருப்பாங்க. ஊரே ரெண்டு நாளைக்கு மூச்சடைக்கிற மாதிரி மணக்கும்."
 "கேட்கும்போதே சந்தோஷமாய் இருக்கு பாட்டி."
 "கேக்கறப்பவே இவ்வளவு சந்தோஷப்படறியே... நேர்ல பார்த்தியான்னா தொறந்த வாயை மூடமாட்டே..."
 சீவிய இளநீரை வாங்கி சிறிது சிறிதாய் - சிந்தாமல் - குடித்துவிட்டு அந்தக் கிழவியை புன்னகையோடு பார்த்தாள்.
 "பாட்டி... நீங்க சொன்ன மாதிரியே இளநீர் ரொம்பவும் இனிப்பாய் இருந்தது." சொன்னவள் ஐம்பது ரூபாய் நோட்டொன்றை நீட்டினாள்.
 "இது எதுக்கு?" என்றாள் கிழவி.
 "குடிச்ச இளநீர்க்கு காசு கொடுக்க வேண்டாமா?"
 "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்மிணி. எங்க கிராமத்துக்கு முதல் தடவையா வந்திருக்கே... அதுவும் ஆத்தா கோயிலுக்கு ஏதோ ஒரு வேண்டுதலை நிறைவேத்த வந்து இருக்கே... உன்கிட்டே காசு வாங்கலாமா?"
 "இது உன்னோட வியாபாரம் பாட்டி..."
 "இருக்கட்டும்... அடுத்த தடவை வந்து எளநீ குடிக்கும்போது பணம் குடு... நான் வாங்கிக்கறேன். இப்ப நீ கோயிலுக்கு போ அம்மிணி... பனிரெண்டரை மணிக்கெல்லாம் கோயில் நடை சாத்திடுவாங்க."
 "ரொம்பவும் நன்றி பாட்டி."
 பூரணி கிழவியிடம் விடைபெற்றுக் கொண்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள். சற்றுத் தொலைவில் தெரிந்த ஓட்டு வீட்டையே பார்த்தபடி நடந்தாள். வெய்யில் இப்போது அவ்வளவாக உறைக்கவில்லை

LanguageEnglish
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223544340
அதிரும் உதிரம்

Related to அதிரும் உதிரம்

Related ebooks

Crime Thriller For You

View More

Related articles

Related categories

Reviews for அதிரும் உதிரம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அதிரும் உதிரம் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    எடிட்டர் ஏரியா

    தாயுமானவன் பாலகுமாரன்

    பாலகுமாரன் ஒரு பிரம்மாண்டம், அதிசயம்; அற்புதம்.

    காதலையும் கடவுளையும் தன் எழுத்தால் வசப்படுத்தியவர்.

    ஆயிரம் படங்களுக்கு வசனம் எழுதியவர்களெல்லாம் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் வசனங்கள் மக்கள் வாழ்க்கையில் பேசப்படவில்லை. ஆறு ஏழு படங்களுக்கு மட்டுமே வசனம் எழுதினார் பாலகுமாரன். அவர் எழுதிய வசனங்கள் மக்களின் வாழ்க்கையில் - வார்த்தைகளில் - குடிகொண்டது. சில வசனங்கள் அரசியலையே புரட்டிப் போட்டது. ஆனாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டவராகவும் ஆன்மிகத்திற்கு சப்போட்டராகவும் வாழ்ந்தார்.

    இறக்கும் தறுவாயிலும் ‘இறந்து விடுவோம்’ என்று வருத்தப்படவில்லை. ‘எழுதாமல் புறப்படுகிறோமே’ என்றுதான் ஏங்கினார்.

    சீரான வாழ்க்கை; சிறப்பான குடும்பங்கள். அருமையான குழந்தைகள் தான் கௌரி, சூர்யா.

    வெள்ளைத் துறைமுகம் என்ற ஆயிரத்து ஐந்நூறு பக்க நாவலை எழுதி விட்டார். அதிலும் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என நினைத்தார். அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்து மத இதிகாசம் ஒன்றின் முதல் பாகத்தை முடித்து விட்டார்.

    கடைசியாக நமக்குத்தான் தொடர்ந்து மூன்று புதினங்களைத் தந்தார்.

    ஒருமுறை ராஜேஷ்குமாரைப் பார்த்து, ‘ராஜேஷ்குமார்...! ஆச்சர்யமய்யா... நீ எழுத்து மிஷின். என்னால முடியாது. இல்ல... உன்னைத்தவிர எவனாலயும் முடியாது.’ என வெளிப்படையாகப் பாராட்டியவர் பாலகுமாரன்.

    எனக்கும் அவருக்குமிடையே ஒருவித தனி பந்தமுண்டு. என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘அசோகா... நீ ஒருத்தன்தான்டா இந்த நாவல் உலகில் நிக்கற. அதற்குக் காரணம் உன் உழைப்புதான்டா’ என்று சொல்லத் தவறமாட்டார்.

    அண்மையில் அவரின் நினைவாஞ்சலி கூட்டத்திற்கு பார்வையாளராக சென்றிருந்தேன். பலர் பேசினார்கள்; சிலர் உளறினார்கள். அதில் அவரின் வாசகர் ஒருவர் பேசினார், ‘பாலகுமாரன் அண்ணா எதை எழுதினாலும் அதைக் காலையில் என்னிடம் படிக்கக் கொடுத்து மாலையில் வாங்கிச் செல்வார்’ என்று. இதைவிடப் புளுகுமூட்டை வேறு ஒன்று இருக்காது. அவர் பல ஆண்டுகளாக டேப்பில் தான் பேசுவார். அதை அவரின் உதவியாளர்கள் டைப் செய்வார்கள். அவர் எவ்வளவு பெரியவர்...! தன் எழுத்தை இவரிடம் கொடுத்துப் படிக்கக் கூறுவாராம்! இதைக் கேட்டு அந்தக் கும்பல் ரசிக்கிறது.

    இன்னும் ஒரு எழுத்தாள நண்பர், பாலகுமாரன் தன் புத்தகங்கள் வெளியிடப்படும் ஒவ்வொரு முறையும் அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து தருவாராம். இவர் கூறுவாராம், ‘ஏன் பாலா... நான்தான் படிக்கறதே இல்லையே. அப்புறம் ஏன் தர்றீங்க?’ என்று.

    இப்படி நடந்திருக்கும் என்பதில் ஒருதுளி அளவுகூட உண்மையிருக்காது. ஒருவேளை அப்படி இவரை மதித்து அவர் தந்திருந்தாலும் அதை இப்படியா அவரின் நினைவாஞ்சலி கூட்டத்தில் பேசுவார்கள்!?

    யார் என்ன சொன்னாலும் எங்கள் பாலகுமாரனின் புகழ் ஆண்டாண்டு காலம் நிலைத்து இருக்கும். அவரின் எழுத்து தமிழ் இருக்கும் வரை இருக்கும்.

    அவரின் உடையார் நாவல் எதிர்காலத்தில் இதிகாச காப்பியப் படைப்புகளில் ஒன்றாக மாறிவிடும். அப்போது கம்பன், வரிசையில் அண்ணன் பாலகுமாரன், ‘சுவாமிகள்’ என்ற அடைமொழியோடு வாழ்வார்.

    லவ்வுடன் – அதாங்க... அன்புடன்

    ஜி.அசோகன்

    ராஜேஷ்குமாரின் முகநூல்

    அன்பான வாசக உள்ளங்களுக்கு!

    வணக்கம்!

    இன்றைக்கு நான் உங்களிடம் சொல்லப்போகும் விஷயம் நான் ஒரு பத்திரிக்கையில் படித்த விஷயம்தான். அந்த விஷயம் ஒரு கட்டுரையாகக் கொடுக்கப்பட்டு இருந்தது. கட்டுரையின் தலைப்பு ‘ஆறுதலும் தேறுதலும்’. அந்தக் கட்டுரையின் சாராம்சம் என்ன என்று பார்ப்போம்.

    நாம் மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வது வேறு. தேறுதல் சொல்வது வேறு. ஆறுதல் பலராலும் சொல்ல முடியும். தேறுதல் சொல்லத்தான் ஆள் இல்லை. தேறுதல் சொல்ல முதலில் ஆறுதலில் இருந்து மீள வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேறுதல் கூறி அவரை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வது தான் மிக முக்கியமான தேவை. தேறுதல் சொல்பவர்களையே பலரும் நினைவில் வைத்து இருப்பார்கள். ஒருவரது வாழ்க்கையை ஏற்றத்துக்குக் கொண்டு போகும் தேறுதல் வார்த்தைகளே மருந்தாகி மனதில் நம்பிக்கையை துளிர்க்க வைக்கிறது.

    மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களைப் பார்க்க தினமும் ஏராளமானவர்கள் செல்கிறார்கள். நோயாளிகள் எப்படிப்பட்ட நோயின் தாக்கத்தில் சிக்கியிருந்தாலும் சரி, அவர்களிடம் நம்பிக்கை தரும் நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும். மருத்துவமனை சூழ்நிலை அவர்களை மனரீதியாக பாதிக்க வைத்து இருக்கும். அப்போது எதிர்மறை சிந்தனைகள் அவர்களுக்குள் எட்டிப் பார்க்கும்.

    எப்போதும் நல்ல வார்த்தைகளைப் பேசுவது ஒரு கலை. இந்தக் கலை கைவரப் பெற்றவர்கள் சக்தி நிறைந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் செல்லும் இடமெல்லாம் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் பரவிக் கொண்டே இருக்கும். இந்த பிரபஞ்சத்தில் நல்ல சக்திகள் சுழன்று கொண்டிருக்கின்றன. அந்த நல்ல சக்திகள் நம்முடைய நல்ல எண்ணங்களுக்குக் கட்டுப்பட்டு நம்மை நோக்கி வரும். நம்மிடம் இருந்து வெளிப்படும் நல்ல வார்த்தைகள் அந்த சக்திகளைப் பலப்படுத்தும். பிறகு அது செயலாகும். இதுவே பிரபஞ்ச இயக்கம். நாம் எப்போதும் மனதை மகிழ்ச்சிப்படுத்தும் நல்ல எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். அபசகுனமான - எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும். அப்படி பேசினால் அந்த நல்ல வார்த்தைகளுக்கு உண்டான பலன் காலப்போக்கில் கிடைக்கும்.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மகான் ஒளிந்து இருக்கிறார். அப்படி ஒளிந்து இருக்கும் அவர் நாம் பேசும் நல்ல வார்த்தைகள் மூலமாகத்தான் வெளிப்படுகின்றார். நம் மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால் நாமும் ஒரு மகான்தான். அதேபோல் நாம் பேசும் எதிர்மறை வார்த்தைகளுக்கும் பிரபஞ்சத்திலிருந்து மோசமான சக்தி கிடைக்கிறது. அந்த மோசமான சக்தி பலம் பெறும் போது அது செயலாக மாறி பல துன்பங்களுக்கு வழி வகுக்கின்றது.

    முற்காலத்தில் ரிஷிகள், சித்தர்கள் எல்லோரும் இப்படித்தான் செயல்பட்டார்கள். அவர்கள் எப்போதும் நல்லதையே நினைத்தார்கள். அவர்கள் ஏதாவது பேச ஆரம்பிப்பதற்கு முன் மந்திரங்களைச் சொன்னார்கள். மந்திரங்களுக்கும் நல்ல சொற்களுக்கும் இடையில் ஒரு சிறிய இணைப்பு உண்டு. இதனால்தான் அவர்கள் கூறிய நல்ல வாக்குகள் பலித்தன. இந்த சக்தி அவர்களை தெய்வத்திற்கு சமமாய் மதிக்க வைத்தது.

    எல்லோரது வாழ்க்கையிலும் சோகம் உண்டு. நோய்களும் உண்டு. அதையே நினைத்துக் கொண்டு இருந்தால் நாம் வாழப்போகும் நாட்கள் சுமையாக மாறிவிடும். உடம்பில் நோய் குணமாக வேண்டுமென்றால் மருத்துவர் தரும் மருந்தைக் காட்டிலும் ‘நமக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1