Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (II)
உங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (II)
உங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (II)
Ebook922 pages5 hours

உங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (II)

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ప్రాతః ప్రాచీన కాలంలో కౌన్సిల్ ఆఫ్ నీసియా ప్రతిపాదించిన నిషియన్ క్రీడ్ నేటి క్రైస్తవులపై ఎంత చెడు ప్రభావాన్ని చూపిందో ఈ పుస్తకం వివరిస్తుంది.
ఈ యుగంలో తిరిగి జన్మించే సత్యాన్ని కల్గియుండాలిఅంట కొంచెం ఎక్కువ నేర్చుకోక తప్పదు. మరియు మీరు ఇప్పటివరకు నమ్మిన విశ్వాసం గురించి మరింత లోతుగా తెలుసుకోవాలి.
ఇప్పుడు మీరు ఈ పుస్తకంలో బాప్తిస్మమిచ్చు యోహాను ద్వారా యేసు యొక్క బాప్తిస్మము యొక్క అర్థాన్ని తప్పక కనుగొనాలి, ఇది నిషియన్ ఒప్పుకోలు నుండి తొలగించబడింది. కాబట్టి, మీ హృదయంలో నిజమైన రక్షణ మరియు శాంతిని పొందేందుకు ఇది ఒక అవకాశంగా ఉండాలి.
ఇప్పుడు మీరు యేసు స్వీకరించిన బాప్తిస్మములో నీరు మరియు ఆత్మ యొక్క సువార్త యొక్క నిజమైన విలువను కనుగొంటారు. బాప్తిస్మమిచ్చు యోహాను నుండి యేసు పొందిన బాప్తిస్మము యొక్క వాక్యం మీ ఆత్మను ఎలా ప్రభావితం చేసిందో మీరు మరింత లోతుగా మరియు స్పష్టంగా తెలుసుకుంటారు మరియు మీరు విశ్వాసం ద్వారా దేవునికి మహిమను చెల్లిస్తారు.

Languageதமிழ்
PublisherPaul C. Jong
Release dateMay 11, 2024
ISBN9788928223442
உங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (II)

Related to உங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (II)

Related ebooks

Reviews for உங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (II)

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (II) - Paul C. Jong

    paul_Tm68_coverFrontflap_Tm681st_page

    உங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (II)

    Smashwords Edition

    Copyright 2023 Hephzibah Publishing House

    எல்லா உரிமையும் பதிப்பாளருக்கே. இப்புத்தகத்தின் எப்பகுதியையும் பிரதியெடுக்கவோ, மறுபடியும் நூலாக்கும் வகையில் பதிவு செய்தலோ, மின்னனுவியல், இயந்திரவியல், ஒளிப்பிரதியெடுத்தல், பதிவு செய்தல், மேலும் எவ்வகையிலோ தகவல் பரிமாற்றம் செய்யலாகாது. அப்படிச் செய்வதானால் பதிப்பாளர் அல்லது பதிப்புரிமை உடையவர்களிடமிருந்து எழுத்து மூலமான அனுமதி பெறப்படவேண்டும்.

    வேதவசனங்கள் தமிழ் வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

    ISBN 978-89-282-2344-2

       பொருளடக்கம்   

    முன்னுரை

    1. தேவனுடைய ஜெபத்தின் படியாக ஜெபிப்பது எப்படி? (மத்தேயு 6:5-15)

    2. எத்தகைய விசுவாசத்தால் நம்மால் நம் பாவங்களுக்கான மன்னிப்பை இப்போது பெற்றுக் கொள்ள முடியும்? (லேவியராகமம் 1:1-9)

    3. தேவ குமாரராகிய, இயேசுவானவர் நம்மை இந்த உலகத்தின் பாவங்களில் இருந்து எப்படியாக இரட்சித்தார் (ரோமர் 3:25-31)

    4. கர்த்தருடைய சித்தத்தின் படியாக நிறைவேற்றப் பட்ட இரட்சிப்பு (மத்தேயு 11:25-30)

    5. தேவன் நமக்கு உண்மையாகவே பாவங்களுக்கான மன்னிப்பையும் உயிர்த்தெழுதலையும் கொடுத்தாரா? (யோவான் 11:1-42)

    6. வார்த்தையாக இருக்கும், கர்த்தரை பெற்றுக் கொள்ளுங்கள் (யோவான் 1:1-18)

    7. அரிமத்தேயாவின் யோசேப்புவின் விசுவாசத்தை உடைய மக்களாக நாம் இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் (லூக்கா 23:50-56)

    8. தேவன் நம்முடைய இருதயங்களை சுத்தப்படுத்தினார் (யோவான் 2:13-22)

    9. பாவநிவிர்த்திக்கான பலிகாணிக்கையாக மாறிய தேவன் (ஏசாயா 53:7-12)

    10. நம்மை நம் பாவங்களில் இருந்து இரட்சிக்கும் கர்த்தருடைய அருள் (எரேமியா 31:31-34)

    11. ஆவிக்குரிய பக்குவத்தை அடைய நாம் எந்த நற்செய்தியை விசுவாசிக்க வேண்டும்? (யாத்திராகமம் 32:25-29)

    0Preface.jpg

    முன்னுரை

    கிறிஸ்தவத்தின் வரலாறு முழுவதும் குழப்பத்தாலும் வெறுமையாலும் நிறைந்திருக்கிறது. இறையியல் சிந்தனைகளும் மதப் போதனைகளும் கூட அப்படியே இருக்கின்றன. மேலுமாக, இயேசுவானவரை விசுவாசிபவர்களின் இருதயங்களும் அப்படியே இருக்கின்றன. அவர்கள் குழப்பத்திலும் வெறுமையிலும் இருப்பதினால் அவர்களுடைய இருதயங்களில் பாவம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது, அவர்கள் இரட்சகரைத் தேடுகிறார்கள். அநேக மக்கள் இயேசுவானவரைத் தம்முடைய இரட்சகராக விசுவாசிக்கிறார்கள் ஆனால் பலவருடங்கள் சென்ற பிறகும் கூட குழப்பத்துடனே இருக்கிறார்கள். இறையியலாளர்கள் கூறுகிறார்கள்: இயேசுவானவரை விசுவாசித்து, நீங்கள் இரட்சிக்கப் பட்டீர்கள், நீங்கள் இரட்சிக்கப் படுகிறீர்கள், நீங்கள் இரட்சிக்கப் படுவீர்கள். இதனை இப்போது புரிந்து கொள்ளுகிறீர்களா? இன்றைய கிறிஸ்தவவத்தின் நிலையானது இத்தகைய விசுவாசமாகவும் மத நம்பிக்கையாகவும் இருக்கிறது.

    இன்றைய கிறிஸ்தவர்களிடம் ஏன் குழப்பமான விசுவாசம் இருக்கிறது? அவர்கள் குழப்பமான கொள்கைகளை விசுவாசிப்பதே அதற்கு காரணமாகும். தாம் தம்முடைய மூதாதையர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட பாவங்கள் தாம் இயேசுவானவரை விசுவாசித்து சபையிலே ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது மன்னிக்கப் பட்டுவிட்டன என்று கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கின்றனர், தம்முடைய சபையினரால் கூறப்பட்டிருக்கும் ஏழு பரிசுத்த காரியங்களை விசுவாசிப்பதின் மூலமாக தாம் செய்யும் எல்லாப் பாவங்களும் கூட மன்னிக்கப் படுகின்றன என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்கள் உருவாக்கிய இறையியல் கொள்கைகளில் மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுப்பது, படிப்படியாக பரிசுத்தமாதல், உபவாசம் இருத்தல் ஆகியவை அடங்கும்.

    நம்முடைய சொந்த மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுப்பதின் மூலமாக நம்மால் நம் பாவங்களைக் கழுவ முடியுமா? நீங்கள் அப்படி எண்ணினால், நீங்கள் இறையியலாளரின் இரட்சிப்பின் போதனையில் ஆழ்ந்து விட்டீர்கள். காலம் செல்லும் போது தான் கிறிஸ்தவர்கள் படிப்படியாக பரிசுத்தமாவர்கள் என்ற நடைமுறை இருந்தால், இது மனிதர்களினால் உருவாக்கப் பட்ட மதங்களில் மட்டுமே சாத்தியமாகும். காலம் செல்லுவதை சார்ந்திருந்து நம்மால் எப்படி நம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும்? காலம் செல்லும் போது ஒருவனால் தன் பாவங்களைக் கழுவிக் கொள்ள முடியும் என்றால், அது ஒருவன் தன் சொந்த சிந்தனைகளையும் சித்தத்தையும் விசுவாசிப்பதில் இருந்து வரும் ஒரு மாயை மட்டுமே.

    லூத்தர் என்பவரால் தொடங்கப் பட்ட சீர்த்திருத்தம் கால்வினால் ஒரு முறைப்படியான கொள்கையாக மாற்றப் பட்டது. லூத்தர் தான் சீர்த்திருத்தத்தைக் கொண்டு வந்தார் என்றும் கால்வின் சீர்த்திருத்த இறையியலை உருவாக்கினார் என்றும் மக்கள் கூறுகிறார்கள். ஆயினும், இன்று வரையிலும், சீர்த்திருத்தம் என்பது வெறும் வரலாற்று நிகழ்வாக மட்டுமே மாறிப் போனது, சீர்த்திருத்த காலத்திலும் கூட மக்கள் இன்னமும் பாவங்களுடனேயே வாழுகிறார்கள்.

    மனித குலத்தின் இரட்சகராகிய தேவன், யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் என்பதை நீங்கள் கண்டிப்பாக இப்போது அறிந்து கொள்ள வேண்டும். இந்த விசுவாசத்தினால் நீங்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இப்படியாக, புதிய மற்றும் பழைய ஏற்பாடுகளில் வெளிப்படுத்தப் பட்ட இயேசுவானவரின் ஞானஸ்நான செயலை நீங்கள் அறிந்து விசுவாசித்தால், நீங்கள் நிச்சயமாகவே மறுபடியும் பிறப்பீர்கள். இல்லாவிட்டால், உங்கள் இருதயத்தில் பாவங்களுடன் மரித்துப் போவீர்கள். இந்தப் புத்தகத்திலே, அப்போஸ்தல கொள்கையின் ஒழுங்கிண்மை, அது எப்படி உருவாக்கப் பட்டது, ஆவிக்குரிய படியாக அது உங்களுக்கு எப்படியான பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை அறிந்து கொள்ளுவீர்கள்.

    இன்றைய கிறிஸ்தவர்களுக்கான விசுவாச தீர்வும் என்ன?

    அப்போஸ்தலனாகிய பேதுரு அப்போஸ்தலனாகிய பவுல் அப்போஸ்தலனாகிய யோவான் போன்ற இயேசுவானவரின் சீடர்களுடைய விசுவாசம் வேதாகமத்திலே வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. அப்படியானால் அவர்களைப் போன்ற விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும்.

    அப்போஸ்தலனாகிய பவுல், இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் என்று சாட்சி கூறினான். 1 பேதுரு 3:21 இல் வேதாகமம் கூறுகிறது, அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. பேதுரு இங்கே கூறினான், அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, இரட்சிக்கிறது. இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக அவர் மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு தன் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக கழுவி விட்டார் என்று பேதுரு விசுவாச அறிக்கைச் செய்வதை நாம் காணுகிறோம்.

    இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக அவர் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக கழுவி விட்டார் என்றுள்ள சத்தியத்தின் மீது அப்போஸ்தலனாகிய யோவானின் விசுவாசம் இருப்பதை நம்மால் காண முடியும். 1 யோவான் 5:4-8 கூறுகிறது, தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர். [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே] சாட்சியிடுகிறவர்கள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. இங்கே, அப்போஸ்தலனாகிய யோவான் இந்த உலகத்தை வெற்றிக்கொள்ளும் விசுவாசம் என்பது இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு நீர் மற்றும் இரத்தத்தினால் வந்தார் என்பதை விசுவாசிக்கும் விசுவாசமாக இருக்கிறது என்று சாட்சி கூறினான். இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக அவர் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக கழுவி விட்டார் என்ற சத்தியத்தை விசுவாசித்ததின் மூலமாக தான் உலகத்தை வெற்றிக் கொன்டதாக அவன் கூறுகிறான்.

    அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியர் 3:27 இல் கூறுகிறார், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக அவர் தன் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக கழுவி விட்டார் என்ற விசுவாசத்தின் அடிப்படையில் தன் இரட்சிப்பை பெற்றுக் கொண்டதாக அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான்.

    ஆயினும், அப்போஸ்தலர் கொள்கையின் மீதான விசுவாசம், அதாவது நாம் விசுவாசிப்பது, சிலுவையில் அறையப் பட்ட இயேசுவானவரின் அடிப்படையில் அமைந்தது, அவர் இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக தன்மீது ஏற்றுக் கொண்டார் என்பது இங்கே இல்லை. இன்று, 21 ஆம் நூற்றாண்டில் இருக்கும் கிறிஸ்தவம் அநேக பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது ஏனெனில் அது இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டார் என்ற உண்மையின் அடிப்படையில் அமையவில்லை.

    ஆகவே, தேவன் நிறைவேற்றிய இரட்சிப்பின் சத்தியம் மூலமாக நம்முடைய பாவப் பிரச்சனைகளுக்கான தீர்வினை நாம் கண்டிட வேண்டும். இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக அவர் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் என்ற சத்தியத்தின் அடிப்படையில் நாம் அவரை விசுவாசிக்கும் போது தான் நம்மால் நம் பாவங்களைக் கழுவி விசுவாசத்தால் பாவங்களின் தண்டனையில் இருந்து தப்ப முடியும். இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக, நம்மால் நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவவும் பரிசுத்த ஆவியானவரை வரமாக பெற்றுக் கொள்ளும் விலையேறப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பதை புரிந்து கொள்ளுவது முற்றிலும் இன்றியமையாதது ஆகும். இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் வார்த்தையை விசுவாசித்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவருடைய சரீரத்தில் சுமத்தக் கூடிய ஆசீர்வாதத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

    அல்லேலூயா!

    Sermon0101.jpg

    தேவனுடைய ஜெபத்தின் படியாக ஜெபிப்பது எப்படி?

    < மத்தேயு 6:5-15 >

    "அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது;

    பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே,

    உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;

    உம்முடைய ராஜ்யம் வருவதாக;

    உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல

    பூமியிலேயும் செய்யப்படுவதாக.

    எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை

    இன்று எங்களுக்குத் தாரும்.

    எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல

    எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

    எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்,

    தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,

    ராஜ்யமும், வல்லமையும், மகிமையும்

    என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

    மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்."

    இன்றைய வேதாகம வசனமானது தேவன் நமக்கு போதித்த ஜெபத்தைக் குறித்து பேசுகிறது. தேவன் இவ்வாறு கூறினார், மற்றவர்களுக்கு காண்பிக்கும் படியான ஒரு ஜெபத்தை ஏறெடுக்க வேண்டாம், அல்லது அப்படி ஜெபிப்பவர்களை நீங்கள் பின்பற்ற வேண்டாம். இந்த உலகத்தின் மதத்தின் மக்களைப் போல கபடமாக ஜெபிக்க வேண்டாம் என்று, அவர் தன்னுடைய சீடர்களுக்கும், நமக்கும் கூறினார். இன்று, தேவன் நமக்கு கற்பித்த ஜெபத்தின் பொருளடக்கத்தை நாம் கருத்தில் கொள்வோம்.

    மத்தேயு 6:9 இல் தேவன் நம்மிடம் என்ன கூறினார் என்பதை நாம் நெருக்கமாக பார்க்க வேண்டும்: நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது. தேவன் நமக்கு போதித்த ஜெபமானது இவ்வாறு தொடங்குகிறது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. பிதாவினுடைய பெயர் பரிசுத்தப் படும் படியான ஒரு வழியிலே ஜெபிக்கும் படியாக தேவன் நம்மிடம் கூறினார். இந்த வார்த்தையை நாம் தியாணித்து நாம் இந்த நாட்களில் செய்கிற ஜெபம் சரியாக இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அநேக கிறிஸ்தவர்கள் தம் ஞாபகத்தில் இருந்து சடங்காச்சாரமாக தேவனுடைய ஜெபத்தை ஜெபிக்கிறார்கள், ஆனால் இத்தகைய ஜெபங்கள் கர்த்தருடைய ஜெபத்திற்கான தேவைகளை நிறைவேற்றாது. தேவன் நமக்கு போதித்த ஜெபத்திலே, பரலோகத்திலே இருக்கிற பிதாவானவரின் பெயர் மகிமை படும் படியாக ஜெபிக்க வேண்டும் என்று அவர் நமக்கு கூறியிருக்கிறார்.

    எப்படியாக ஜெபிக்க வேண்டும் என்று நமக்கு போதிக்கும் போது, நம்முடைய ஜெபத்தின் பொருளடக்கமானது பிதாவாகிய கர்த்தருடைய பெயரை மகிபைப்படுத்த வேண்டும் என்று தேவன் குறிப்பாக நமக்கு கூறினார். அப்படியானால், நம்முடைய ஜெபத்தின் முதலாவது தலைப்பு என்னவாக இருக்க வேண்டும்? நம்முடைய ஜெபத்திலே என்ன இருக்க வேண்டும் என்று கர்த்தர் கேட்பதை சந்திக்கும் படியாக, நாம் முதலாவதாக நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பை கேட்க வேண்டும். பிதாவானவரின் பெயர் பரிசுத்தம் அடையும் படியாக நம்முடைய பாவங்களைக் கழுவும் படியாக அவரிடம் வேண்ட வேண்டும். நம்முடைய சொந்தத்திலே கர்த்தருக்கு முன்னதாக நம்மை நாமே பாவம் இல்லாதவர்களாக மாற்றுவது இயலாத காரியமாக இருப்பதினாலே, நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஒரேதரமாக ஏற்றுக் கொண்டு அவற்றை கழுவி விட்டதைக் குறித்த உண்மையை நமக்கு போதிக்கும் படியாக நாம் அவரிடம் கேட்க வேண்டும்.

    இயேசு கிறிஸ்து நமக்கு போதித்த ஜெபமானது நம் விசுவாசத்தால் பிதாவாகிய கர்த்தருடைய பெயரை பரிசுத்தப் படுத்த வேண்டும் என்று கூறுகிறது. பிதாவாகிய கர்த்தருடைய பெயரை பரிசுத்தப் படுத்தும் விசுவாசத்தால் இப்படி ஜெபிக்க வேண்டுமானால், புதிய உடன் படிக்கையினாலான நம் இரட்சிப்பிற்கான வாக்குத்தத்தத்தை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கர்த்தர் நமக்கு செய்த முதலாவது உடன்படிக்கையை நாம் பற்றிக் கொள்ள வேண்டும், ஆனால் இந்த கருத்தைக் குறித்து இந்த கட்டுரையின் பின்பகுதியில் கூறுவேன்.

    பிதாவாகிய கர்த்தருடைய பெயர் பரிசுத்தமடையும் படியாக நாம் ஜெபிக்க வேண்டுமானால், கர்த்தருடைய முன்னதாக பரிசுத்தமடையும் விசுவாசம் உடையவர்களாக நாம் மாற வேண்டும். ஆகவே, கர்த்தர் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அப்படியாக ஜெபிக்க, நம்முடைய பாவங்களைக் கழுவக்கூடிய விசுவாசத்தை நமக்குத் தரும் படியாக அவரிடம் நாம் ஜெபிக்க வேண்டும்.

    பிதாவாகிய கர்த்தர் நம்மிடம் இருந்து எதிர்ப்பார்க்கும் ஜெபத்தினுடைய முதலாவது பகுதி கீழ்வருமாறு தொடங்குகிறது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. இயேசு கிறிஸ்துவினுடைய பரலோகப் பிதா மிகவும் பரிசுத்தமானவர். ஆகவே நம்மை ஜெபிக்கும் படியாக தேவன் கூறுகிறார், இதன் மூலமாக நாம் மறுபடியும் பிறப்பதைக் குறித்து நற்செய்தியின் வார்த்தையை அறிந்து நம் இருதயங்களில் இப்போது இருக்கும் எல்லாப் பாவங்களையும் கழுவிக் கொள்ள முடியும். தேவன் நமக்கு எடுத்து வந்த இரட்சிப்பைக் குறித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று அவரிடம் உதவி கேட்பது நம் ஜெபத் தலைப்புகளில் மிகவும் மேலானதாக இருக்கிறது. தன்னுடைய இருதயத்தில் பாவம் இருக்கும் யாராலுமே பரலோகத்தில் இருக்கும் பிதாவாகிய கர்த்தரை அழைக்க முடியாது, இதனால் தான் இந்த நொடிப் பொழுதே நம்முடைய பாவங்களை முதலாவதாக கழுவும் படியாக ஜெபிக்கும் படி அவர் நம்மிடம் கூறினார்.

    பரலோகத்தில் இருக்கும் நம் பிதா மிகவும் பரிசுத்தமான கர்த்தர், இந்நிலையில் ஒருவன் தன் இருதயங்களில் பாவங்கள் இருக்கும் நிலையில் அதனைக் கழுவும் படியாக வேண்டிக்கொள்ளாமல் எப்படியாக கர்த்தரிடம் உதவி கேட்டு அவரிடம் ஜெபிக்க முடியும்? நம்முடைய இருதயங்களில் ஏதாவது பாவம் இருந்தால், அதனைக் கழுவும் படியாக முதலாவதாக நாம் ஜெபிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். பாவிகளைத் தம் பாவங்களில் இருந்து விடுதலை செய்யும் இரட்சகராக கர்த்தர் இருக்கிறார். ஆகவே, ஒரு பாவி கர்த்தரிடம் ஜெபிக்கும் போதெல்லாம், தன் பாவங்களில் இருந்து தன்னை இரட்சிக்கும் படியாக அவன் முதலிலே கேட்க வேண்டும். பாவங்களுக்கான மன்னிப்பை நம் இருதயங்களில் பெற்றுக் கொண்டால் மட்டுமே அவை பரிசுத்தமாகும் என்பதே அதற்கு காரணமாகும், அப்போது மட்டுமே நம்மால் பரிசுத்தமான கர்த்தரை நம் கர்த்தர் என்பதுடனே நம் வாழ்விலே அவரை மகிமைப் படுத்தவும் முடியும்.

    பாவிகளின் மீது கர்த்தர் கிருபை வைக்கும் அதே நேரத்திலே, அவரால் அவர்களின் பக்கம் செல்ல முடியாது. அவர் பாவிகளை அவர்களுடைய பாவங்களில் இருந்து இரட்சிக்கக் கூடிய கர்த்தராக இருந்தாலும் கூட, அவர் அவர்களுடைய கர்த்தர் அல்ல. ஆகவே, பரிசுத்தமான கர்த்தரை நாம் நம்முடைய பிதா என்று அழைக்க வேண்டுமானால், முதலாவதாக நாம், தேவகுமாரராகிய, இயேசு கிறிஸ்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் விசுவாசித்து நம் இருதயங்களிலே முதலாவதாக பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே நம்மால் கர்த்தரை நம் பிதாவே என்று அழைக்க முடியும். நாம் அறிந்த படியாக, நம்மை பரிசுத்தமான கர்த்தரிடம் இருந்து பிரிப்பது நம்முடைய பாவங்களே, ஆகவே அவைகள் நம்மில் இருந்து அகற்றப் பட வேண்டும். இதனால் தான் இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவருடைய இரத்தத்தை விசுவாசித்து நம் பாவங்களை ஒரேதரமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    தேவகுமாரருடைய ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தை விசுவாசித்து, நாம் நம்முடைய பாவங்களில் இருந்து இரட்சிக்கப் படுவதின் மூலமாக நம் பாவங்களில் இருந்து கழுவப் பட முடியும். கர்த்தர் பாவிகளுடைய கர்த்தர் அல்ல, ஆனால் நம்முடைய பாவங்களைக் கழுவுவதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தினாலும் அவருடைய இரத்தத்தினாலும் நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக கழுவி விட்டார் என்ற சத்தியத்தை நாம் விசுவாசிக்க வேண்டும். மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் கழுவி விட்ட ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் விசுவாசிப்பவர்களின் மீது கர்த்தர் பிரியமாக இருக்கிறார். விசுவாசத்தின் மூலமாக பாவிகளாக இருந்த நாம் நீதிமான்களாக முதலில் மாறி, நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரினால் பிதாவிடம் ஜெபிப்பதைத் தான் அவர் விரும்புகிறார்.

    நான் மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், இப்போது பரலோகத்தில் இருக்கும் கர்த்தர் நம்முடைய பிதாவாக இருக்க வேண்டுமானால் எத்தகைய விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும்? தேவனுடைய குமாரராகிய, இயேசு கிறிஸ்து, யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் ஆகியவற்றின் மூலமாக மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு அவற்றைக் கழுவி விட்டார் என்ற விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும். நம்முடைய பாவங்களைக் கழுவக் கூடிய விசுவாசத்தை கர்த்தருடைய வார்த்தையில் இருந்து நம் இருதயங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இதற்கு பொருள் படுகிறது. மெல்கிசேதேக்கின் முறையின் படியாக வந்த பாவிகளுடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவே, நம்முடைய நித்தியமான ஆசாரியர் என்று நான் தொடர்ந்தும் சாட்சி கூறி வருகிறேன். இன்று, இந்த தலைப்பைக் குறித்து மீண்டும் ஒரு முறை சாட்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    மெல்கிசேதேக்கின் ஆசாரிய முறைமையின் படியாக நம்மைத் தேடி வந்த நித்திய ஆசாரியர் இயேசு கிறிஸ்து ஆவார்

    எரேமியா 31:33-34 ஐ இங்கே பார்ப்போம்: அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.

    இந்த வார்த்தை இஸ்ரவேல் மக்களைக் குறித்து மட்டும் தான் பேசுகிறதா? இல்லை, அப்படி இருக்க வேண்டுமென்பதில்லை. இங்கே கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்துடன் பேசுகையில், அவர் நம் அனைவருடனும் பேசுகிறார். நம் கர்த்தர் இரக்கம் நிறைந்த கர்த்தர். எல்லாப் பாவங்களுக்கும் பாவங்களுக்கான மன்னிப்பைக் கொடுக்கும் படியாக அவர் ஒரு புதிய உடன்படிக்கையைக் குறித்து நம்மிடம் பேசுகிறார். பழைய ஏற்பாட்டின் காலத்தின் போது, இஸ்ரவேல் மக்கள் எத்தனைப் பாவம் செய்த போதிலும் கூட அவர்களைக் கைவிட கர்த்தர் முயற்சி செய்யவில்லை. ஆயினும், இஸ்ரவேல் மக்களால் தாம் செய்து கொண்டிருக்கும் பாவங்களை நிறுத்த முடியவில்லை. தீமை செய்கிறவர்களின் வித்தாகிய அவர்கள், பாவம் நிறைந்தவர்களாக இந்த பூமியிலே பிறந்தார்கள், ஆகவே தொடர்ந்து பாவம் செய்வதை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.

    ஆகவே, பிரமாண வார்த்தைக்கு பதிலாக புதிய உடன்படிக்கையின் வார்த்தையைக் கொடுக்க கர்த்தர் விரும்பினார். வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தர் தன்னுடைய குமாரரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மூலமாக மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் கழுவி அவர்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்க விரும்பினார். இந்த இரட்சிப்பும் பாவங்களுக்கான மன்னிப்பும் இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமல்லாது மனிதகுலம் முழுமைக்குமாக வாக்குத்தத்தம் செய்யப் பட்டது. நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் ஒரேதரமாக இரட்சிப்பது நித்தியமாக நம் அனைவரையும் தன் சொந்த மக்களாக மாற்றுவதும் இந்த வாக்குத்தத்த வார்த்தையாக இருக்கிறது.

    புதிய ஒரு உடன்படிக்கையின் மூலமாக, உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் எல்லாப் பாவிகளையும் இரட்சிக்கப் போவதாக கர்த்தர் வாக்குத்தத்தம் செய்தார். மனிதர்களுக்கான புதியதொரு உடன்படிக்கையை உருவாக்கிய கர்த்தர், காலம் வாய்த்த போது, தன்னுடைய குமாரராகிய இயேசு கிறிஸ்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவர் சிந்திய இரத்தத்தின் மூலமாக அவர்களுக்கு இரட்சிப்பை வழங்குவதை கர்த்தர் விரும்பினார். கர்த்தர் நமக்கு கொடுத்த புதிய உடன்படிக்கையானது தன்னுடைய குமாரராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து யோவானிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு சிலுவையில் அறையப்பட்டு மனிதகுலத்தை இரட்சிப்பார் என்று வாக்குத்தத்தம் செய்தது. கர்த்தர் தன் குமாரருக்குள் இந்த உடன்படிக்கையை மனிதகுலத்துடனே செய்தார். கர்த்தர் இஸ்ரவேல் மக்களுடன் செய்த பழைய உடன்படிக்கையினை அவர்களால் கைக்கொள்ள முடியாது போனதினால், அவர் இந்த உடன்படிக்கையை முடிவுக்கு கொண்டு வந்து மனிதகுலம் முழுவதுடனும் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்தார். மனிதர்களின் இருதயங்கள் தீமையானவை என்பதையும் இதன் காரணத்தினால் அவர்கள் அனைவரும் பாவிகள் என்பதையும் கர்த்தர் அறிவார். இப்போது மனிதகுலம் பாவத்திலே வாழுவதைப் போல, பழைய இஸ்ரவேல் மக்களும் கூட பாவங்களை விரும்பினார்கள். ஆயினும், தம்முடைய உண்மைத் தன்மையானது பாவக் குவியல் என்பதைத் தவிர வேறில்லை என்று அவர்களுக்கு தெரியாது இருந்ததினால், கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொண்டு தம் இரட்சிப்பை அடைய அவர்கள் முயற்சி செய்தார்கள். ஆயினும், அவர்கள் தம் வாழ்விலே கர்த்தருடன் செய்த உடன்படிக்கையை கைக்கொள்ள முடியாதவர்களாகவே இருந்தனர்.

    ஆகவே, காலம் வந்த போது, பாவங்களுக்கான மன்னிப்பைக்குறித்து நம் அனைவருடனும் கர்த்தர் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்தார். அவர் இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமல்ல எல்லா புறஜாதியாருக்கும் வாக்குத்தத்தம் செய்தார், நான் உங்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிப்பேன். கர்த்தர் தன்னுடைய பெயரினால் நம்முடன் உடன்படிக்கைச் செய்தார். தன்னுடைய பிரமாணத்தைக் கைக்கொள்ள இயலாத பலவீணர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை கர்த்தர் அறிந்திருந்ததினால், தன்னுடைய புது உடன்படிக்கை வார்த்தையின் மூலமாக தம் எல்லாப் பாவங்களில் இருந்தும் தம்மை இரட்சிக்கப் போவதாக அவர் வாக்குத்தத்தம் செய்தார். நாம் அறிந்த படியாக, மனிதர்களால் பிரமாணத்தைக் கைக்கொள்ளும் திறமை இல்லை, ஆகவே பழைய உடன்படிக்கையை அகற்றுவதே கர்த்தருக்கு உகந்த ஒன்றாக இருந்தது.

    கர்த்தருடைய பார்வையிலே, நாம் முழுவதும் பாவம் நிறைந்தவர்களாகவும் எத்தனைக் கடினமாக முயற்சி செய்தாலும் கூட அவருடைய பிரமாணத்தின் வார்த்தையைக் கைக்கொள்ள முடியாதவர்களாகவும் இருக்கிறோம். அப்படி இருந்தாலும் கூட, பழைய ஏற்பாட்டுக் காலத்தின் போதுள்ள மக்கள் மட்டுமல்ல புதிய ஏற்பாட்டின் காலத்தின் மக்களும் கூட கர்த்தருடைய பிரமாணத்தைக் கைக்கொள்ளப் போவதாக அறிவித்து மூர்க்கமாக சவால் விடுகிறார்கள். அநேக மக்கள் கர்த்தருடைய முழுமையான வார்த்தையை கைக்கொள்ள முயற்சி செய்கிறார்கள், தாம் தீமை செய்கிறவர்களின் வித்தாக இருப்பதைக் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது.

    இந்த நொடிப்பொழுதிலும் கூட, தம் சொந்தத்திலே கர்த்தருடைய பிரமாணத்தைக் கைக்கொள்ள முயற்சி செய்யும் அநேக மக்கள் இருக்கிறார்கள். ஆனால் கர்த்தர் அவர்களைப் பார்க்கிறார். தன்னுடைய பிரமாணத்தின் வார்த்தையைக் கைக்கொள்ளும் முயற்சியில் இருந்து மனிதகுலம் முழுவதும் விட்டு விடும் நேரத்திற்காக அவர் காத்திருக்கிறார், அதற்கான காலம் வரும் போது, விசுவாசத்தால் இரட்சிக்கப் படும் படி அவர் அவர்களிடம் கூறுகிறார், தன்னுடைய குமாரராகிய இயேசு கிறிஸ்து யோவானிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாகவும், சிலுவையில் அறையப் பட்டு அவர்களுடைய பாவங்களுக்காக அறையப்பட்டு, இதன் மூலமாக ஒரேதரமாக இரட்சிக்கப் படும் படியாக அவர் கூறுகிறார்.

    பாவிகள் கர்த்தருக்கு முன்னதாக வந்து அவருடைய கிருபை நிறைந்த இரட்சிப்பைக் கேட்கும் போது, யோவானிடம் இருந்து இயேசுவானவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தையும் அவருடைய சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்து தம் பாவங்களைக் கழுவிக் கொள்ளுமாறு இயேசுவானவர் அவர்களிடம் கூறுகிறார். தேவ குமாரர் யோவானிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவருடைய இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து தம் பாவங்களைக் கழுவ முயற்சி செய்கிறவர்களுக்கு, பிதாவாகிய கர்த்தர் அந்த வேண்டுதலையெல்லாம் நிறைவேற்றி அவர்களை இரட்சிக்கிறார். ஆனால், தம்முடைய சொந்த முயற்சியின் மூலமாக இரட்சிப்பை அடைய முயற்சி செய்யும் அனைவரையும் பார்த்து, தம்முடைய சொந்தத்திலே இன்னமும் அதிகமாக உழைத்துக் கொண்டேயிருங்கள் என்று கர்த்தர் கூறுகிறார்.

    கர்த்தருக்கு முன்னதாக நாம் எத்தகைய மக்களாக இருக்க வேண்டும்?

    அப்படியானால் இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? தேவகுமாரராகிய இயேசுவானவர் யோவானிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து உங்களுடைய பாவங்களைக் கழுவிக் கொள்ளுவீர்களா? அல்லது உங்கள் சொந்தத்தில் கர்த்தருடைய பிரமாண வார்த்தையைக் கைக்கொள்ளும் படியாக கடினமாக முயற்சி செய்வீர்களா? நாம் எதனை தெரிந்தெடுப்போம் என்று தேவன் நம்மிடம் கேட்கிறார். கர்த்தர் தன்னுடைய குமாரராகிய இயேசு கிறிஸ்து யோவானிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு சிலுவையில் அறையப் பட்டு நம் இரட்சகராகினார் என்பதை விசுவாசித்து நாம் இரட்சிக்கப் பட வேண்டும் என்று விரும்புகிறாரே தவிர, பழைய ஏற்பாட்டுக் காலத்தின் பலிகாணிக்கை மிருகங்களை அவருக்கு காணிக்கையாக்குவதை அல்ல.

    கர்த்தர் தன்னுடைய குமாரராகிய இயேசு கிறிஸ்து யோவானிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவருடைய சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து நாம் இரட்சிக்கப் பட வேண்டும் என்று விரும்புகிறார். கர்த்தருடைய வார்த்தையை இப்போது விசுவாசித்து நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மால் இரட்சிக்கப் பட முடியும். பாவங்களுக்கான மன்னிப்பு என்ற நற்செய்தி வார்த்தையில் நம் விசுவாசத்தை வைத்து நாம் இரட்சிக்கப் படுவோம் என்று கர்த்தர் காத்திருக்கிறார்.

    ஆகவே, தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்து, அவருடைய ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தை விசுவாசித்து நாம் இரட்சிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். கீழ்ப்படிதல் பலிகாணிக்கையை விட சிறந்தது என்றூ கர்த்தர் நமக்கு போதிக்கிறார். கர்த்தருக்கு முன்னதாக அடம் பிடித்து அவருடைய கிருபையின் வார்த்தையை விசுவாசிக்க மறுப்பதற்கு பதிலாக, கர்த்தர் நமக்கு கொடுத்த இரட்சிப்பின் வார்த்தையை கீழ்ப்படிதலுடன் விசுவாசிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நம் மீது கர்த்தர் கிருபையும் இரக்கமும் வைத்திருப்பதினால் இது அதிகமாக வெளிப்படுகிறது. தன்னுடைய குமாரர் யோவானிடம் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவருடைய இரத்தம் ஆகியவற்றை நாம் விசுவாசித்து, இந்த விசுவாசத்தின் மூலமாக நம்முடைய இருதயங்களின் பாவங்களைக் கழுவிக் கொள்ள வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார்.

    காலம் வாய்த்த போது, கர்த்தர் கூறினார், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே, இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன் (எரேமியா 31:31-34) நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்." வேறு வார்த்தைகளில் கூறினால், பிதாவாகிய கர்த்தர் நம்மைத் தன் குமாரராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நம் பாவங்களில் இருந்து இரட்சிப்பதாக வாக்குத்தத்தம் செய்தார், அவர் யோவானிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம் பாவங்களுக்காக நம் இடத்தில் இருந்து தண்டனை பெற்று நம் பாவங்களை கழுவியதால் இப்படி ஆயிற்று. இதுவே கர்த்தர் நமக்கு கொடுத்த புது உடன்படிக்கையின் வார்த்தையாக இருக்கிறது.

    தேவன் இப்போது நம் மணங்களிலும் இருதயங்களிலும் புதிய உடன்படிக்கை வார்த்தையை எழுதி வைத்திருக்கிறார், அவர் நமக்கு இரட்சிப்பின் வார்த்தையைக் கொடுத்து நம் பாவங்களைக் கழுவியை நிரூபித்திருக்கிறார். இயேசுவானவர் யோவானிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் சிலுவையின் இரத்தம் ஆகியவற்றின் மூலமாக நம் பாவங்களைக் கழுவினார் என்று இந்த சாட்சியின் வார்த்தை நமக்கு கூறுகிறது. கர்த்தர் நம்மிடம் கூறினார், நான் உங்களுக்கு கொடுத்த பிரமாணத்தின் வார்த்தை படியாக நீங்கள் வாழ முடியாதவர்கள். ஆகவே நான் உங்களுக்கான ஒரு இரட்சிப்பின் திட்டத்தை உருவாக்கியிருக்கிறேன், இதன் மூலமாக நான் உங்களுடைய கர்த்தராக இருப்பேன். உங்களை இப்போது உங்களுடைய பாவங்களில் இருந்து இரட்சிக்கும் படியாக என் குமரராகிய இயேசு கிறிஸ்துவை நித்தியமான ஆசாரியராக உருவாக்கியிருக்கிறேன். யோவான் ஸ்நானனிடம் இருந்து என் குமாரர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவர் சிந்திய இரத்தத்தின் வார்த்தையின் மூலமாக, இப்போது நான் உங்களுடைய எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக கழுவி விட்டேன்.

    பழைய ஏற்பாட்டிலே, எலியாவை அனுப்பப் போவதாக பிதாவாகிய கர்த்தர் வாக்குத்தத்தம் செய்தார், இந்த வாக்குத்தத்தத்தின் படியாக, அவர் புதிய ஏற்பாட்டின் எலியாவின் பாத்திரத்தை நிறைவேற்றும் படியாக இந்த பூமிக்கு யோவான் ஸ்நானனை அனுப்பி வைத்தார். ஆகவே இயேசுவானவர் யோவானிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக எடுத்துப் போட்டு, இதன் மூலமாக தம்மை விசுவாசிப்பவர்களை உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார். மேலுமாக இயேசுவானவர் சிலுவையிலே முடிந்தது! என்று கூறி, தன்னுடைய உலகத்திற்கான செயலை செய்து முடித்தார். இப்படியாக, கர்த்தர் தாமே ஒரேதரமாக நம்முடைய இரட்சகராக மாறினார், அவர் கீழ்வரும் வாக்குத்தத்தத்தின் படி செய்து முடித்தார், நான் உங்களுக்கு தேவனாயிருப்பேன் நீங்கள் என் மக்களாக இருப்பீர்கள்.

    கர்த்தர் நம்முடைய செய்த முதலாம் உடன்படிக்கையில், அவர் இவ்வாறு கூறினார், உங்கள் பாவங்களைத் துடைக்கும் நித்திய ஆசாரியராக நான் என் குமாரராகிய இயேசு கிறிஸ்துவை அனுப்புவேன். எலியாவின் ஆவியுடனே வருகின்ற அவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு உங்களுடைய எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக எடுத்துப் போடுவார். ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டும் சிலுவையில் அறையப்பட்டு உங்களுடைய பாவங்களுக்கான தண்டனைகளை ஒரேதரமாக ஏற்றுக் கொண்டும் என் குமாரர் உருவாக்குகின்ற இரட்சிப்பை நீங்கள் விசுவாசியுங்கள். யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொள்ளப் போகும் ஞானஸ்நானம் மற்றும் அவருடைய இரத்தத்தின் மூலமாக, நான் உங்களுடைய எல்லாப் பாவங்களையும் கழுவிப் போடுவேன். வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தர் இவ்வாறு வாக்குத்தத்தம் செய்தார், நீங்கள் இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் மற்றூம் இரத்தம் ஆகிய செயலை விசுவாசித்தால் இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் உங்களை ஒரேதரமாக இரட்சிப்பேன். உண்மையிலேயே இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, சிலுவையில் அறையப் பட்டு, இப்படியாக நம் இடத்தில் இருந்து நம் பாவங்களுக்காக தண்டனையை அனுபவித்து நம்மை இரட்சித்தார். மேலுமாக, உங்கள் இருதயங்களிலும் மனங்களிலும் என் பிரமாணத்தை எழுதுவேன் என்ற பிதாவாகிய கர்த்தரின் வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்றினார்.

    நம்மைப் படைத்தவரும் நம் இரட்சகருமாகிய கர்த்தருடைய வார்த்தையை நாம் விசுவாசிக்க வேண்டும். இப்படியாக புதிய உடன்படிக்கையின் வார்த்தை மூலமாக கர்த்தர் நம் இரட்சிப்பை வாக்குத்தத்தம் செய்தார் இதன் மூலமாக நம்மால் அவரை நம் பிதாவே என்று அழைக்க முடிகிறது. சுருக்கமாக, கூறினால், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவருடைய இரத்தம் ஆகியவற்றால் அவர் நிறைவேற்றிய இரட்சிப்பை விசுவாசித்து ஒரேதரமாக நம் எல்லாப் பாவங்களும் நிவிர்த்தி செய்யப் படும். யோவான் ஸ்நானனிடம் இருந்து நம் தேவன் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தை உடனடியாக விசுவாசிப்பதின் மூலமாக, நம் இருதயங்களினால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டு பரிசுத்தத்தை ஆடையாக அணிந்து கொள்ள முடியும். கர்த்தர் தன்னுடைய கிருபையினால், நம்மை இரட்சித்து நமக்கு நித்திய ஜீவனதைத் தந்தார். ஒரேதரமாக உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை இரட்சித்த இயேசு கிறிஸ்து, பரலோகத்தில் இருக்கும் கர்த்தரை நம் பிதாவே என்று அழைக்கும் படியாக நம்மை ஏதுவாக்கினார்.

    பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. தேவனுடைய ஜெபத்தின் மூலமாக இங்கே கர்த்தர் நமக்கு போதிக்கின்ற ஜெபமானது, தேவ குமாரராகிய இயேசு கிறிஸ்து யோவானிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் வார்த்தை மற்றும் அவருடைய சிலுவை இரத்தம் ஆகியவற்றின் மூலமாக நிறைவேறியது. இதன் பொருள் என்னவெனில் இப்போது இந்த சத்தியத்தின் மீது நம் விசுவாசத்தை வைத்து நம் பாவங்களைக் கழுவிக் கொண்டு, அதன் பிறகு கர்த்தர் நம் பிதாவே என்று அழைக்க வேண்டும் என்பதாகும். பரிசுத்தமான கர்த்தரை நம் கர்த்தர் என்று விசுவாசத்தால் அழைக்க வேண்டுமானால், அவருடைய குமாரராகிய இயேசு கிறிஸ்து யோவானிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவருடைய சிலுவையின் இரத்தத்தை முதலாவதாக நாம் நம்முடைய இரட்சிப்பாக விசுவாசிக்க வேண்டும்.

    நீங்களும் நானும் நன்றாக அறிந்தபடியாக, நாம் அனைவரும் ஆதாமின் சந்ததியினராக இருக்கிறோம், ஆகவே நாம் அனைவரும் இந்த உலகத்திலே கர்த்தருக்கு முன்னதாக முற்றிலும் குறைபாடுடைய பாவிகளாக பிறந்திருக்கிறோம். ஆயினும், தேவனுடைய குமாரராகிய, இயேசு கிறிஸ்து யோவானிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவர் சிந்திய இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பதின் மூலமாக, நாம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டோம். இப்படியாக பாவங்களைக் கழுவாமால், நம்மால் கர்த்தரை நம் பிதாவே என்று அழைக்க முடியாது. நாம் கர்த்தரை பெயர் கூறி அழைக்கலாம், ஆனால் அதற்கு முன்னதாக அவர் விரும்புகிற படியாக நம் பாவங்களைக் கழுவிய பிறகு தான் அவருடைய பரிசுத்தமான பெயரை நம்மால் அழைக்க முடியும், ஆகவே நம்மை மறுபடியும் பிறக்கும் படியாக ஏதுவாக்கும் நற்செய்தியாகிய ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் வார்த்தையை நாம் விசுவாசிப்பது நமக்கு முற்றிலும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

    தேவ குமாரர் யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவருடைய இரத்தம் ஆகியவற்றை நம் இரட்சிப்பாக நாம் ஏற்றுக் கொண்டால், நம் அனைவராலும் பரிசுத்தமான கர்த்தருடைய பிள்ளைகளாக மாற முடியும். ஆயினும், கர்த்தர் நமக்கு கொடுத்த இரட்சிப்பின் நற்செய்தியை நம் இருதயங்களில் ஏற்றுக் கொள்ள நாம் மறுத்தால், நம்மால் அவருடைய பிள்ளைகளாக முடியாது. ஆகவே கர்த்தர் தன்னுடைய குமாரரை இந்த பூமிக்கு அனுப்பி அவரை யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக எடுத்துப் போட்டார் என்பதை நம் இருதயங்களால் விசுவாசித்து நாம் இரட்சிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். பாவிகளுடைய கிருபாதாரபலியாக அவர்களுக்கான பலிகாணிக்கையாக இயேசு கிறிஸ்து தன் சரீரத்தை ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்து கொடுத்தார் என்பதையும் நாம் விசுவாசிக்க வேண்டும். இப்படியாக, யோவான் ஸ்நானனிடம் இருந்து இயேசுவானவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவர் சிந்திய இரத்தம் ஆகியவற்றின் மீதுள்ள விசுவாசத்தால் மட்டுமே நம்மால் நித்தியமான பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டு பரிசுத்தமான கர்த்தருடைய பிள்ளைகளாகவும் மாற முடியும். இத்தகைய இரட்சிப்பே பரிசுத்தமான கர்த்தருடைய நமக்கான சித்தமாக இருக்கிறது. நம்மை மறுபடியும் பிறக்கச் செய்கிற நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையை நாம் பெற்றுக் கொண்டு, அதன் மூலமாக கர்த்தர் நம்முடைய கர்த்தராக மாறுவார் என்று தேவனுடைய ஜெபம் நமக்கு போதிக்கிறது.

    ஆனால் நம்முடைய அடிப்படை சுபாவத்தின் படியாக, நாம் அனைவரும் கர்த்தருக்கு முன்னதாக வெறும் பாவக் குவியலாக மட்டுமே இருக்கிறோம். பரிசுத்தமான கர்த்தர் நம்முடைய பிதாவாக இல்லாத நிலையிலே நாம் அனைவரும் இந்த உலகத்திலே பிறந்தோம். இதனால் தான் நம்முடைய ஜெபத்திலே முதலாவதாகவே நம்முடைய பாவங்களைக் கழுவும் படியாக வேண்ட வேண்டும் என்று கர்த்தர் கூறினார் என்பதை நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும். இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய இருதயங்களின் பாவங்களை கழுவி விட்டார் என்று விசுவாசிக்க வேண்டும் என்று கர்த்தர் நம்மிடம் கூறினார், இதன் மூலமாக நம்மால் கர்த்தரை நம் பிதாவே என்று அழைக்கிற நீதிமான்களாக நாம் மாறுவோம்.

    தன் பாவங்களில் இருந்து ஒரேதரமாக மறுபடியும் பிறக்கும் படி கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பவர் யார்?

    தேவ குமாரராகிய, இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு தன் இரத்தத்தைச் சிலுவையில் சிந்தி நம் பாவங்களைத் துடைத்து விட்டார், இந்த இரட்சகரைப் புரிந்து அவரை விசுவாசிப்பவர்கள் தான் உண்மையாகவே மறுபடியும் பிறக்கும் படியான விசுவாசத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். கர்த்தருடைய பார்வையிலே, தம்முடைய பாவங்களில் இருந்து இரட்சிக்கப் பட்டவர்கள் உண்மையாகவே மறுபடியும் பிறந்தவர்கள் ஆவர். தேவ குமாரராகிய, இயேசு கிறிஸ்து, ஞானஸ்நானம் வார்த்தையாலும் பாவங்களுக்கான மன்னிப்பிற்கான இரத்தத்தினாலும் நம்மை ஒரேதரமாக இரட்சித்தார். ஆகவே, இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் ஆகியவற்றை இப்போது விசுவாசித்து, நம்முடைய இருதயங்களினுள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டு கர்த்தரை நம் பிதா என்று அழைக்க முடியும். இந்தப் பாடத்தை நமக்கு கற்பிக்கும் படியாகவே தேவன் நமக்குத் தன் ஜெபத்தை போதித்தார். இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தையும் அவருடைய சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்து ஜெபிப்பதைக் குறித்து தேவன் நமக்கு போதித்தார்.

    நாம் இப்போது விசுவாசத்தின் மக்களாக மாறிவிட்டோம் ஆகவே நம்மால் இப்படி கர்த்தரை பரிசுத்தமான தகப்பனாக நம்மால் ஜெபம் செய்ய முடிகிறது. தேவ குமாரராகிய, இயேசு கிறிஸ்து, இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஒரேதரமாக ஏற்றுக் கொண்டு நம் இடத்தில் இருந்து சிலுவையில் அறையப் பட்டு நமக்கு இரட்சிப்பைத் தந்தார், இந்த இரட்சிப்பை நாம் விசுவாசித்து, இப்போது நாம் ஒரேதரமாக நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் கழுவப் பட்டோம். பிதாவாகிய கர்த்தர் தன்னுடைய குமாரராகிய இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஒரேதரமாக ஏற்றுக் கொண்டு, சிலுவையில் அறையப் படச் செய்தார், இப்படியாக அவர் தன்னை விசுவாசிக்கிறவர்களை விடுதலைச் செய்யும் படியாக இரட்சிப்பிற்கான செயலை செய்து முடித்தார்.

    பாவிகளை பாவங்களில் இருந்து இரட்சிக்கும் பிதாவாகிய கர்த்தருடைய நோக்கமானது நாம் அவருடைய பெயரை மகிமைப் படுத்துவதற்கானது. இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தையும் அவருடைய இரத்தத்தையும் விசுவாசிப்பவர்களை அவர்களின் பாவங்களில் இருந்து இரட்சித்தார் என்பதால் தேவனுடைய பெயர் துதிக்கப் படுகிறது. தன் குமாரரை யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ள செய்து அவரை சிலுவையில் அறைந்ததின் மூலமாக, பிதாவாகிய கர்த்தர் தன்னுடைய குமாரரை நம் இடத்தில் இருந்து பலிகாணிக்கை கொடுத்தார். ஆகவே, இந்த இரட்சிப்பின் சத்தியத்தை விசுவாசிப்பவர்கள் – அதாவது, இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவருடைய இரத்தம் – ஆகியவற்றை விசுவாசிப்பவர்களால் தம் இருதயங்களிலே தம்பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டு பரிசுத்தமான கர்த்தரின் பெயரைத் துதிக்க முடியும். கர்த்தரால் கொடுக்கப் பட்ட இரட்சிப்பை விசுவாசித்து நம் இருதயங்களிலே பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டதினால், நாம் பிதாவாகிய கர்த்தருடைய பிள்ளைகளாக மாறிவிட்டதினால் இப்போது நம்மால் அவரைத் துதிக்க முடிகிறது. இப்போது நம்மால் அவரைத் துதிக்க முடியும், அவரை பரலோகத்திலிருக்க பிதாவே என்று அழைக்க முடியும். நம்முடைய இருதயங்களில் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளும் போது மட்டுமே நம்மால் கர்த்தரை நம் பிதா என்று அழைக்க முடியும்.

    இந்த பிரபஞ்சம் உருவாக்கப் படுவதற்கு முன்னரேயே, இந்த உலகத்தின் அத்திவாரம் இடப்படுவதற்கு முன்னரேயே, திரியேகக் கர்த்தர் மனிதகுலத்தை அவர்களின் பாவங்களில் இருந்து இரட்சிக்க திட்டமிட்டனர் இதனால் அவர்களால் அவரைத் துதிக்கக் கூடும். காலம் வாய்த்த போது, கர்த்தர் தன் குமாரராகிய இயேசு கிறிஸ்துவை இந்த பூமிக்கு அனுப்பி யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ளச் செய்து இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சுமக்கச் செய்தார்; யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட இயேசுவானவர், தன் இரத்தத்தை சிலுவையில் சிந்தி நமக்காக தண்டிக்கப் பட்டு, இப்படியாக தன் விசுவாசிகளை அவர்களின் பாவங்களில் இருந்து இரட்சித்தார். நம் தேவன் யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஒரேதரமாக ஏற்றுக் கொண்டு, அவற்றிற்கான தண்டனையாக சிலுவையில் அறையப்பட்டு தன் இரத்தத்தைச் சிந்தி, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து விசுவாசிகளாகிய நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் ஒரேதரமாக இரட்சித்தார். நம்முடைய இந்த விசுவாசத்தை முன்னிட்டு, கர்த்தருடைய பார்வையிலே இப்போது நாம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டவர்களாக இருக்கிறோம்.

    தேவ குமாரராகிய, இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு தன் இரத்தத்தைச் சிந்தி நம்மை நீதிமான்களாக மாற்றினார் என்று நாம் நம்முடைய இருதயங்களினால் விசுவாசிக்க வேண்டும். நம்முடைய இருதயங்களின் ஆழத்திலும் மனதிலும் நம் தேவன் நிறைவேற்றிய இரட்சிப்பின் உண்மையான வார்த்தையை விசுவாசிக்க வேண்டும். தேவன் தன் ஞானஸ்நானம் மற்றும் தன் இரத்தம் சிந்துதல் ஆகியவற்றின் மூலமாக நிறைவேற்றியதின் மூலமாக நம்மை இந்த உலகத்தின் பாவங்களில் இருந்து இரட்சித்தமையால், நம்மால் இப்போது விசுவாசத்தால் இரட்சிக்கப் படுவது சாத்தியமாயிற்று. வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதினாலும் அவர் சிலுவையில் சிந்தியதினாலும் அவர் நம்மை இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்ததினால் இப்போது நாம் விசுவாசத்தினால் கர்த்தருடைய பிள்ளைகளாக மாற முடிகிறது. இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் மற்றும் அவருடைய சிலுவையின் இரத்தம் ஆகியவற்றை நாம் விசுவாசித்ததினால் தான் இப்போது கர்த்தரை நம் பிதாவே என்று நாம் அழைக்கும் படியாக ஆசீர்வதிக்கப் பட்டோம்.

    தேவன் நமக்கு இத்தகைய விசுவாச ஜெபங்களை போதிக்க முயற்சி செய்கிறார். இதன் மூலமாக நம்மால் நம் பரலோகத்தில் இருக்கிற பிதாவை அழைத்து அவரிடம் ஜெபிக்க முடியும், தேவனாகிய இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு சிலுவையிலே தன் இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாக நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார். இந்த இரட்சிப்பின் சத்தியத்தை விசுவாசிப்பவர்கள் கர்த்தருடைய பிள்ளைகள் என்று அவர் நம்மிடம் கூறுகிறார் (யோவான் 1:12). இயேசுவானவர் தான் யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவர் சிந்திய இரத்தம் ஆகியவற்றால் மனிதகுலத்தின் பாவங்களுக்கான கிரையத்தை ஒரேதரமாக கொடுத்து தீர்த்ததினால், இந்த சத்தியத்தை விசுவாசிப்பவர்களால் தம் பாவங்களில் இருந்து ஒரேதரமாக இரட்சிக்கப் பட முடியும்.

    இந்த இரட்சிப்பின் சத்தியத்தை விசுவாசிக்கும் அனைவராலும் இப்போது தம் பாவங்களுக்கான மன்னிப்பை தம் இருதயங்களிலே பெற்றுக் கொண்டு கர்த்தருடைய பிள்ளையாக முடியும். மெல்கிசேதேக்கின் முறைமையின் படியாக இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார், அவருடைய ஞானஸ்நானம் மற்றும் அவருடைய இரத்தம் சிந்துதல் ஆகியவற்றின் உதவியினால் நாம் நம்முடைய இரட்சிப்பை பெற்றுக் கொண்டோம். இயேசு கிறிஸ்துவினுடைய இரட்சிப்பின் கிருபையிலே நம் விசுவாசத்தை வைத்து நாம் இரட்சிக்கப் பட்டோம் என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்திருப்போமாக.

    கர்த்தரால் கொடுக்கப் பட்ட அன்பின் நீதியை விசுவாசித்து தம் பாவங்களில் இருந்து இரட்சிக்கப் பட்டவர்கள் மட்டுமே பரிசுத்தமான கர்த்தரை அவருடைய சன்னிதியிலே பிதாவே என்று அழைக்க தகுதி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதற்கு மாறாக, தம் இருதயங்களிலே பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பிதாவைத் தம்முடைய பிதா என்று அழைப்பதற்கு போதுமான விசுவாசம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, அவர்களால் கர்த்தரிடம் ஜெபித்து பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே என்று அவர்களால் அழைக்க முடியாது. இத்தகைய மக்கள் தம்முடைய பாவங்களுக்கான விடுதலைக்காக முதலிலே ஜெபிக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தையும் அவருடைய இரத்தத்தையும் விசுவாசிக்க வேண்டும், இந்த விசுவாசத்தால் அவர்கள் தம்முடைய பாவங்களைக் கழுவிக் கொள்ள வேண்டும். இதன் பிறகு மட்டுமே அவர்களால் கர்த்தரைத் தம் பிதா என்று அழைக்க முடியும்.

    தம்மைப் போன்றே நம்மைப் பாவம் இல்லாதவர்களாக மாற்ற வேண்டும் என்பது கர்த்தருடைய நோக்கமாகும். இதனால் தான் நம் தேவன் நமக்கு போதித்த ஜெபத்திலே நம் பாவங்களுக்கான மன்னிப்பிற்காக ஜெபிக்கும் படியாக நம்மிடம் கூறினார். நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக மாற வேண்டுமானால், தேவ குமாரராகிய இயேசு கிறிஸ்து, உங்களுடையதும் என்னுடையதுமான பாவங்களை எப்படியாக துடைத்து விட்டார் என்று முதலில் துல்லியமாக அறிந்து, அதன் பிறகு இதனை நம் இருதயங்களால் விசுவாசிக்க வேண்டும். மறுபடியும் பிறந்த நமக்கு கர்த்தர் இப்போது நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளுவதற்கு ஏதுவான விசுவாசத்தைக் கொடுத்திருக்கிறார், இந்த இரட்சிப்பின் சத்தியம் என்பது என்னவெனில் அவருடைய குமாரராகிய இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானனிடம் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக உங்களுடையதும் என்னுடையதுமான எல்லாப் பாவங்களையும் தன்மீது ஒரேதரமாக ஏற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, இதன் மூலமாக நம்முடைய இரட்சகராக மாறினார்.

    வேதாகமத்தில் எங்கே பாவங்களுக்கான மன்னிப்பைக் குறித்த வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது?

    தேவன் கூறினார், வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது (மத்தேயு 5:18). அப்படியானால், தேவன் நம்மை உலகத்தின் பாவங்களில் இருந்து இரட்சித்தார் என்று சாட்சி கூறும் வார்த்தை எங்கே இருக்கிறது? நித்திய ஆசாரியராக இருந்து நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கும் படியாக தன் குமாரர் வருவார் என்று கர்த்தர் கூறினார், ஆனால் இந்த சாட்சி வார்த்தையில் எங்கே எழுதப்பட்டிருக்கிறது?

    இப்போது அப்படியானால், இந்த நேரத்திலே இதற்கான அத்தாட்சியைத் தேடும் படியாக வேதாகமத்தை நாம் திருப்புவோம். இயேசுவானவர் இந்த பூமியிலே நித்தியமான ஆசாரியராக உருவாக்கப் பட்டார் என்று கூறும் எழுதப் பட்ட வார்த்தையை நாம் முதலில் பார்ப்போம். அது சங்கீதம் 110:4 இல் எழுதப்பட்டுள்ளது:

    "நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி

    என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று

    கர்த்தர் ஆணையிட்டார்,

    மனம் மாறாமலுமிருப்பார்."

    இங்கே பழைய ஏற்பாட்டிலே, பரிசுத்தமான கர்த்தருடைய பெயரைக் குறிக்கும் படியாக தேவன் என்ற சொல் பயன் படுத்தப் பட்டிருக்கிறது, இந்தப் பெயரின் பொருள் இருக்கிறவராகவே இருக்கிறவர் என்பதாகும். இயேசு கிறிஸ்துவைக் குறித்து கூறும் போது அவர் இருக்கிறவராக இருப்பதாக கூறுகிறார், நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர். நம்முடைய இரட்சிப்பிற்காக தன் குமாரர் யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு சிலுவையில் அறையப் பட்டு விசுவாசிகளை அவர்களின் பாவங்களில் இருந்து இரட்சிப்பதால் இயேசு கிறிஸ்து என்றழைக்கப் படுவதாக கர்த்தர் கூறினார்.

    இப்படியாக எழுதப் பட்டிருக்கிறது நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர், நம்முடைய நித்திய ஆசாரியராக இருக்கும் படியாக பிதாவாகிய கர்த்தர் தன்னுடைய குமாரரை எழுப்பினார். மேலுமாக, இந்த உலகத்தின் பாவங்களில் இருந்தும் தண்டனையில் இருந்தும் உங்களையும் என்னையும் பாவங்களில் இருந்து இரட்சிக்க, இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் அனைவரையும் உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார். ஆகவே, இந்த உண்மையான இரட்சிப்பை இப்போது விசுவாசித்து நாம் நம்முடைய பாவங்களைக் கழுவிக் கொண்டோம். கர்த்தர் தன்னுடைய குமாரராகிய இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவருடைய சிலுவை இரத்தம் ஆகியவற்றின் மூலமாக நம்மை நம் பாவங்களில் இருந்து ஒரேதரமாக இரட்சித்து, விசுவாசிகளாகிய நம்மை, தன்னுடைய சொந்தப் பிள்ளைகளாக மாற்றினார்.

    பிதாவாகிய கர்த்தர் தன்னுடைய குமாரராகிய இயேசு கிறிஸ்துவை நம் நித்திய ஆசாரியராக மாற்றினார். அப்படியானால், எதற்காக கர்த்தர் இயேசு கிறிஸ்துவை மெல்கிசேதேக்கின் முறைமையின் படியாக நித்திய ஆசாரியராக எழுப்பினார்?

    "அவன் கெதர்லாகோமேரையும் அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர் கொண்டுபோனான். அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, அவனை ஆசீர்வதித்து,

    வானத்தையும் பூமியையும் உடையவராகிய

    உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம்

    ஆபிராமுக்கு உண்டாவதாக.

    உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த

    உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம்

    என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும்

    தசமபாகம் கொடுத்தான்."

    ஆசாரியனாகிய மெல்கிசேதேக்கின் அடிப்படையில் தான் தன்னுடைய குமாரர் மனிதகுலத்தை உலகத்தின் பாவங்களில் இருந்து இரட்சிக்கப் போகும் நித்திய ஆசாரியர் என்று கர்த்தர் கூறுகிறார்.

    ஆதியாகமப் புத்தகத்தின் இந்த வசனத்தின் அடிப்படையில் தான், கர்த்தர் சங்கீதம் 110:4 இல் கூறினார், நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர். ஆதியாகமம் எழுதப் பட்ட காலத்திற்கும் சங்கீதம் எழுதப் பட்ட காலத்திற்கும் வெகு நீண்டகால இடைவெளி இருக்கிறது. ஆசாரியனாகிய மெல்கிசேதேக்கின் மூலமாக கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதித்து வெகுகாலத்திற்கு பிறகு சங்கீதம் எழுதப் பட்டது. அப்படி இருந்தாலும் கூட, சங்கீதம் 110:4 ஐ எழுதியவன் ஆசாரியனாகிய மெல்கிசேத்திக்கின் முறைமையின் படியாக கர்த்தர் தன்னுடைய குமாரரை நித்தியமான ஆசாரியராக உருவாக்கப் போவதாக கூறிய கர்த்தருடைய தீர்க்கதரிசனத்தை சங்கீதம் 110:4 ஐ எழுதியவன் குறிப்பிடுகிறான். இந்த தீர்க்கதரிசன வார்த்தையின் படியாக இயேசுவானவர் உண்மையிலேயே நம்முடைய நித்தியமான ஆசாரியராக மாறிவிட்டார் என்பதை நம்மால் காண முடியும்.

    பிரபஞ்சத்தையும் மனிதகுலத்தையும் படைப்பதற்கு முன்னரேயே, திரியேகக் கர்த்தர் தம்முடைய குமாரராகிய இயேசு கிறிஸ்துவை இந்த பூமிக்கு அனுப்பி, அவர் பெற்றுக் கொள்ளப் போகும் ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்தப் போகும் இரத்தத்தின் மூலமாக மனிதகுலம் முழுவதையும் இரட்சித்து, இப்படி விசுவாசிப்பவர்களை கர்த்தருடைய சொந்தப் பிள்ளைகளாக மாற்றப் போவதாக திரியேகர் திட்டமிட்டார். காலம் கடந்த நிலையிலே, இயேசு கிறிஸ்து தன் நித்திய

    Enjoying the preview?
    Page 1 of 1