Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தேசியகீதங்கள்: பாரத நாடு தமிழ் நாடு
வசன கவிதை
பாஞ்சாலி சபதம்
Audiobook series11 titles

Bharathiyar Complete Works

Written by Bharathiyar

Narrated by Ramani

Rating: 0 out of 5 stars

()

About this series

பாரதியாரின் கண்ணன் பாட்டு மிகப் பரவலாக இசைக்கப்படும் பாடல்களைக் கொண்டது. ரமணியின் குரலில் விருத்த ஓசையில் கண்ணன் பாட்டென 23 பாடல்களும் தரப்பட்டுள்ளன.

தோழன், தாய், தந்தை, சேவகன், அரசன், சீடன், சற்குரு, குழந்தை, விளையாட்டுப்பிள்ளை, காதலன், காந்தன், காதலி, ஆண்டான், குலதெய்வம் என்றெல்லாம் கண்ணனை 23 பாடல்களில் பாரதி கொண்டாடுகிறார். இவற்றில் குறிப்பாக கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை, கண்ணன் என் காதலன் என்ற தலைப்பில் உள்ள ஐந்து பாடல்கள், கண்ணம்மா என் காதலி என்ற தலைப்பில் அமைந்த ஆறு பாடல்கள், கண்ணம்மா என் குலதெய்வம் என்ற பாடல் என பதின்மூன்று பாடல்களைக் கேட்டிருக்காத தமிழ்ச் செவிகளே இல்லையெனலாம்.

Languageதமிழ்
Release dateApr 30, 2023
தேசியகீதங்கள்: பாரத நாடு தமிழ் நாடு
வசன கவிதை
பாஞ்சாலி சபதம்

Titles in the series (11)

  • பாஞ்சாலி சபதம்

    3

    பாஞ்சாலி சபதம்
    பாஞ்சாலி சபதம்

    மகாபாரதக்கதையைப் பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம். இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியைப் பாரதத் தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்பு இது. இலக்கிய நயமும், கவிநயமும் கொண்டுள்ளது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் கொண்டது. இந்நூலில் சூழ்ச்சிசருக்கம், சூதாட்டச்சருக்கம், அடிமைச்சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச்சருக்கம் என ஐந்து சருக்கங்களில் நானூற்றுப் பன்னிரண்டு பாடல்கள் உள்ளன. இந்நூல் எளிய தமிழ்நடையினைக் கொண்டது. "எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்கு உயிர் தருவோன் ஆகின்றான்” – பாரதி எழுதிய முகவுரைப்பகுதி. பாரதிக் கூறும் உவமைகள் சொற் சுருக்கம் உடையவை என்றாலும் செறிந்த கருத்துடையவை. ‘உணர்ச்சி பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் மிகுந்துள்ளது. பாஞ்சாலி சபதத்தில் புலம்பலுக்கு ‘நெட்டோசையும் பகடை உருட்டுதற்கு உருளும் ஓசையும் அமைத்துக் காட்டியுள்ளார் பாரதியார். பாஞ்சாலியின் கதையைச் சித்தரிக்கும் பாஞ்சாலி சபதம் விடுதலை உணர்வையே தன் உயிரோட்டமாகக் கொண்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் இக்கதை எழுதப்பட்டதால் அகத்தே இருள் உடையவனாகிய துரியோதனன் ஆங்கிலேயரின் உருவாகவும் தருமன் பாரதத்தை ஆண்ட பண்டைய மன்னனாகவும், மாயச் சகுனி மாயச்சூதால் பொன்னையும் மணியையும் ஆட்டையும் மாட்டையும் நாட்டையும் கவர்ந்து கொள்வதால் வாணிகம் என்ற பெயரோடு வந்து புகுந்த ஆங்கிலேயர் நாட்டையே அடிப்படுத்தி நாட்டு மக்களையும் தமது வலையில் விழச் செய்வதைக் குறிப்பதாகவும் ‘மண்டபம் ந

  • தேசியகீதங்கள்: பாரத நாடு தமிழ் நாடு

    4

    தேசியகீதங்கள்: பாரத நாடு தமிழ் நாடு
    தேசியகீதங்கள்: பாரத நாடு தமிழ் நாடு

     சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் வழங்கினார். விடுதலைப் போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசியக் கவியாகப் போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர். தன்னுடைய தாய்நாட்டை நினைத்துப் பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர். தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார். சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத

  • வசன கவிதை

    1

    வசன கவிதை
    வசன கவிதை

    வசன கவிதையை தமிழில் முதன்முதலாகத் தோற்றுவித்தவர் பாரதியார். வசன கவிதை என்பது உரை நடையின் சாயலோடு கூடிய வசனக் கவிதைகள். பாரதியின் வசன கவிதைகள் எளிமையானவை என்றாலும் அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் முழு வீச்சுடன் வெளிப்படுகின்றன. பாரதியின் வசன கவிதைகள் ஆறு பிரிவுகளாக அமைந்துள்ளன. காட்சி, ஞாயிறு, சக்தி, காற்று, கடல், ஜகத் சித்திரம், விடுதலை என்பன அவையாகும். "காட்சி" இயற்கையின் அற்புதத்தை வர்ணிப்பது. இயற்கை வழிபாட்டு உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. உலகமே இனியது என்கிற கோட்பாட்டை விளக்கும் கவிதை. வாழ்வின் அச்சாணியாகிய ஐம்பூதங்களையும் இனிமையானவை என்கிறார். இறுதியில் சாதல் இனிது என்கிறார். "ஞாயிறு" என்னும் கவிதை ஞாயிறு என்பது என்ன என்பது போன்ற தத்துவார்த்தமான கேள்விகளை அடுக்கிச் செல்கிறது. சுடுதலும் தாகமேற்படுத்துதலும் சோர்வு உண்டாக்குதலும் இறுதியில் இன்பம் விளைவிப்பதாக அமைகிறது என்கிறார். சக்தி உபாசகரான பாரதி அறிவுச்சுடர் பரவுவதற்காகக் கண்ட மந்திரச் சொல்லே சக்தி. சக்தி என்கிற வார்த்தையினை பாரதி இயற்கையின் ஆற்றலைக் குறிக்கவே பயன்படுத்துகிறார். இம்மகா சக்தியிடம் காவல் செய்ய, கவிதை செய்ய, பிறர்க்கு நன்மை தருவதற்கு அருள் வேண்டுகிறார். "காற்று" என்ற பகுதியில் என்ன சொன்னாலும் சொன்னதைக் கேட்காத வீட்டின் செல்லக் குழந்தையிடம் பேசுவது போலக் காற்றிடம் பேசுகிறார். "கடல்" என்கிற பகுதியில் கடலுக்கு மிகக் குறைந்த விண்ணப்பமாக எங்கள் தாபமெல்லாம் தீர்ந்து உலகம் தழைக்குமாறு இன்ப மழை பொழிதல் வேண்டும் என்று கேட்கிறார். "ஜகத் சித்திரம்" என்ற நாடகம் ஐந்து காட்சிகளாக அமைகிறது. மனித மன இயல்புகளையும் அதனால் விளையும் துன்பங்களையும் உருவகமாகச் சொல்கிறது. "விடுதலை" என்ற பகுதி இரண

  • குயில்பாட்டு

    2

    குயில்பாட்டு
    குயில்பாட்டு

    ரமணியின் குரலில் பாரதியாரின் குயில் பாட்டு... புதுவை நகரின் மேற்கில் ஒரு மாஞ்சோலை. அங்கு ஒரு நாளில் விந்தைக் குயிலொன்று பாடியது. "காதல் காதல் காதல்  காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்" இன்ப வெறியும் துயரும் கலந்த குரலில் குயில் பாடியதைக் கவிஞன் கேட்டான். குயிலே! உன் துயரம் யாது என்று அதனிடம் வினவினான். "நான் மனிதர்களின் மொழியெல்லாம் அறியும் பேறு பெற்றேன்; பாட்டில் நெஞ்சைப் பறி கொடுத்தேன்; இப்போது காதலை வேண்டிக் கரைகின்றேன்" என்று கூறியது. கவிஞனுக்குக் குயிலின் மீது அடங்காக் காதல். மற்ற பறவைகளெல்லாம் சோலைக்கு வந்துவிட்டன. குயில் கவிஞரை நான்காம் நாள் அவ்விடத்திற்கு வந்து விடக்கூறி மறைந்து விடுகிறது. கவிஞனின் காதல் மனம் உறங்கவில்லை; காதலியைப் பிரிந்த துயர் வருத்த மறுநாளே சோலைக்குச் செல்கின்றான். அங்குக் குயில் ஒரு குரங்கோடு காதல்மொழி பேசிக் கொண்டிருந்தது. நீசக் கருங்குயில் அதே பாட்டைப் பாடிக் குரங்கின் அழகைப் பாராட்டிக் கொண்டிருந்தது. கவிஞன் வாளைக் குரங்கின மீது வீச, குரங்கு தாவி ஒளிந்தது. குயிலும் பிற பறவைகளும் மறைந்தன. இரவு முழுவதும் துயில் கொள்ளாமல் இருந்து மூன்றாம் நாள் காலையில் கவிஞன் சோலைக்குச் சென்றான். அப்போது குயில் கிழக்காளை மாடு ஒன்றோடு காதல் மொழி பேசிக் கொண்டிருந்தது. கவிஞன் வாளை உருவிக் காளையின் மீது வீச, காளை ஓடிவிடக் குயிலும் மற்ற பறவைகளும் மறைந்தன. நான்காம் நாள் கவிஞன், சோலையிலே குயிலைச் சந்தித்து அதன் பொய்மையை எடுத்துரைக்கின்றான். குயில் தன் முற்பிறவிக் கதையைக் கூறுகின்றது. கவிஞன் குயிலின் பழம்பிறப்பையும் மாடன் குரங்கனின் மாயச் செயல்களையும் உணர்ந்து தெளிகிறான். குயிலை முத்தமிடுகிறான். குயில் மறைந்து அங்கே கொள்ளை வனப்புடை

  • தேசிய இயக்கப் பாடல்கள்

    5

    தேசிய இயக்கப் பாடல்கள்
    தேசிய இயக்கப் பாடல்கள்

    தேசிய இயக்கப் பாடல்கள் பாரதியாரி்டம் விடுதலை உணர்வு, நாட்டுப் பற்று முதலியவை ஊறிக் கிடந்தன. சத்ரபதி சிவாஜி மகாராட்டிர சுயராஜியத்திற்கு அடிப்படைக் காரணமானவர். சிவாஜியின் வீரம், நடுவு நிலைமை முதலிய அருங்குணங்களை இந்தியர் அறிந்து கொள்ள வேண்டும் என்று பாரதி சத்ரபதி சிவாஜி தம் படைகளுக்குக் கூறியதாகப் பாடியுள்ளார். ஆங்கிலேயருக்குத் தொண்டு செய்து அவர்களை அண்டி அடிமையாய் இருந்து வாழ்தலே மேன்மையானது என்ற எண்ணத்துடன் வாழும் மக்களைப் பாரதியார் அடிமை என்றே குறிப்பிடுகிறார். இந்தியர்கள் தங்களுக்குள்ளே உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, சமயப் பிரிவு, இனப்பிரிவு எனப் பல்வேறு வழக்கங்களுக்கும் சமுதாயப் பழக்கங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்தனர். இவற்றுக்கும் விடுதலை வேண்டும் என்று கருதினார். இழிந்தவர் என்று யாரும் இல்லாமல் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்று விரும்பினார். எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் விடுதலை வேண்டும் என்ற உலகளாவிய நோக்கம் கொண்டதாக இருந்தது. பெல்ஜியத்தை வீழ்த்திய ஜெர்மனி இந்திய வீரர்களிடம் அனுதாபம் உடையதாக இருந்தது.ஜெர்மனியால் வீழ்த்தப்பட்ட பெல்ஜியத்திற்கு வாழ்த்துக் கூறியிருக்கிறார். பாரதியாரின் தேசாபிமானத்தையும் வென்று நிற்கிறது மனிதாபிமானம். உருசியத் தோழர்கள் செய்து வரும் முயற்சிகளின் மீது கடவுள் பேரருள் செலுத்துவாராக என்று உருசியாப் புரட்சி பற்றிப் பாரதியார் பாடுகிறார். உருசியா நாடு புரட்சியில் வெற்றியடைந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறார். அதை நினைத்து ஆனந்தமாகப் பாடிக் களிக்கிறார். பாரததேசத்தின் பெருமை, பாரத மக்கள், அவர்களது விடுதலை வேட்கை, விடுதலை பெறுவதால் அடையும் மகிழ்ச்சி, பயன் தேசத்தலைவர்கள், பிற நா

  • பக்திப்பாடல்கள்

    6

    பக்திப்பாடல்கள்
    பக்திப்பாடல்கள்

    பாரதியார் பக்திப்பாடல்கள் வினாயகர் நான்மணி மாலை, முருகன் பாட்டு, வேலன் பாட்டு, கிளிவிடுதூது, எமக்கு வேலை, வள்ளிப்பாட்டு, போற்றி, சிவசக்தி, காணி நிலம் வேண்டும், நல்லதோர் வீணை, சக்திக்கூத்து, சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம், பேதை நெஞ்சே, முத்துமாரி, கண்ணனை வேண்டுதல், நந்தலாலா, கோவிந்தன் பாட்டு, யேசு கிறிஸ்து, அல்லா என்ற இன்னோரன்ன பல தலைப்புகளில் 78 பாடல்களைக் கொண்டது. இவற்றில் சில‌ பல்வேறு வகை இசைப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுள்ளன. இதில் சங்கடம் என்னவென்றால் மொத்தப் பாடல்களில் சிலவற்றையே பலரும் பாடிப் போயிருக்கின்றனர். அந்தச் சிலவும் பார்தியாரின் பக்திக் கோட்பாட்டின் விரிவான பரப்பைக் காட்டுவனவாக அமையவில்லை. ரமணி ஒலி நூலுக்காக அனைத்து 78 பாடல்களும் இந்த நூலில் உள்ளன. கட்டமைக்கப்பட்ட ராக தாள இசைக்குப் புறம்பாக பாவினம் மற்றும் சிற்றிலக்கிய வகைகளில் பரந்த பல வடிவங்களில் பாடவென அமைந்த வடிவில், குறிப்பாக விருத்தம், சிந்து போன்ற பாடல்களுக்கு உரிய ஓசையோடு ரமணி இந்த நூலுக்கு ஒலிவடிவம் கொடுத்திருப்பது தெற்றெனத் தெரியும் சிறப்பாகிறது.

  • ஞானப்பாடல்கள்

    7

    ஞானப்பாடல்கள்
    ஞானப்பாடல்கள்

    ரமணி ஒலி நூலகத்துக்காக பாரதியாரின் ஞானப்பாடல்கள் 25 இந்த நூலில் அமைந்துள்ளன. இவற்றை வேதாந்தப் பாடல்கள் என்றும் தெய்வப் பாடல்கள் என்றும் சொல்வதுண்டு. இசைப் பாடல் அமைப்பிலன்றி யாப்பு மற்றும் விருத்த ஓசையில் ரமணி இந்த 25 பாடல்களையும் தந்திருக்கிறார். பாரதி தனது ஞானப் பாடல்கள் வழி ஞானத்தேடலை ஆனந்தத்தை, கண்டடைதலை வெற்றி முழக்கம், அஞ்ச வேண்டியதில்லை, விடுதலையைப் பேசுதல். மனதில் உறுதி வேண்டும், மாயையைப் பழித்தல், அறிவின் சிறப்பு, பொய்யோ? மெய்யோ?, பக்திச் சிறப்பு என்பதான உட்தலைப்புகளின் வழி ஆராய்கிறது. ஞான நிலையானது உண்மை அறிவை, பேரறிவை கண்டடைதல். இவ் உண்மை அறிவு உள்ளொளியைக் கண்டடைதலுமாகும். இதன் மூலமாக வாழ்வில் எல்லையற்ற பேரானந்த நிலையை மனிதன் எய்திட முடியும். பாரதியின் இந்த ஞானப்பாடல்கள் அனைத்தும் மெய்ப்பொருளை கண்டடைவதன் மூலம் தம் அகமனதை முழுமையான மகிழ்ச்சிக்குரியதாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை எடுத்தியம்புகின்றன. மேலும் ஞானத்தை ஞானிகளுக்கு உரிய ஒன்றாக அல்லது சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக தத்துவவாதிகள் விளக்கிக் கொண்டிருக்க, பாரதி அறிவின்வழி பயணித்து எல்லோரும் எளிதாக கண்டடையக் கூடியதாக, ஆனந்தப்படக் கூடிய ஒன்றாக ஞானப்பாடல்களை அமைத்துள்ளார்.

  • தனிப்பாடல்கள்

    9

    தனிப்பாடல்கள்
    தனிப்பாடல்கள்

    தனிப்பாடல்கள் என்ற தலைப்பின் கீழ் பாரதியாரின் 24 கவிதைகளை ரமணி இந்த ஒலி நூலில் அளித்திருக்கிறார். பாரதியார் கவிதைகளில் மிகவும் பரிச்சயமான பல வரிகள் இந்த ஒலி நூலில் காணக் கிடக்கின்றன. "காதலினாலுயிர் தோன்றும். இங்கு காதலினாலுயிர் வீரத்திலேறும். காதலினாலறிவெய்தும் இங்கு காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்." "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்." "சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொற்புதிது சோதி மிக்க‌ நவகவிதை எந்நாளும் அழியாத‌ மாகவிதை..." போன்ற வரிகள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன,

  • பல்வகைப்பாடல்கள்

    10

    பல்வகைப்பாடல்கள்
    பல்வகைப்பாடல்கள்

    ரமணி ஒலி நூலுக்காக பல்வகைப் பாடல்கள் என்ற தலைப்பில் அமைந்த 11 பாடல்களில் ரமணி இவ்வொலி நூலாக்கியிருக்கிறார். பாரதி பல்வகைப்பாடல்களில் நீதி என்ற தலைப்பின் கீழ் புதிய ஆத்தி சூடி அமைந்திருக்கிறது. விழுமியங்களும் பண்புகளுமே இந்தப் பாடலின் தலையாய பேசு பொருட்களாகின்றன. ஓடி விளையாடு பாப்பா என்ற பாப்பாப் பாடல் பாடாத தமிழ் நாவேது! முரசு என்ற பாடல் விழுமியங்களின் வெற்றியைப் பறை சாற்றுகிறது. வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் என்ற வரிகள் இப்பாடலில்தான் அமைகின்றன. சமுகம் என்ற தலைப்பின் கீழ் புதுமைப் பெண், பெண்மை வாழ்க, பெண்கள் விடுதலைக் கும்மி, பெண் விடுதலை ஆகிய பாடல்களின் தாக்கம் நூறாண்டுகள் கடந்தும் தமிழ் நாட்டில் போற்றப்படுகின்றது. தொழில், மறவன் பாட்டு ஆகிய இரண்டு பாடல்கள் உழைப்பின் மேன்மையை வலியுறுத்துகின்றன. தாகூரின் ஒரு பாடலின் மொழிபெயர்ப்பாக நாட்டுக் கல்வி என்ற பாடல் அமைகிறது. புதிய கோணங்கி இனிவரும் காலம் இனிய காலம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

  • சுயசரிதை

    9

    சுயசரிதை
    சுயசரிதை

    மகாகவி பாரதியார் 'சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார். பாரதியாரின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கு உதவும் கவிதைகளிலொன்று அவரது இந்தக்கவிதை. இதுவொரு நீண்ட கவிதை. கவிதையின் ஆரம்பம் "பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே." என்ற பட்டினத்துப்பிள்ளையாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகின்றது. பாரதியார் தன்னைச் சித்தர்களிலொருவராகக்கருதுபவர். சித்தர்களிலொருவரான பட்டினத்தாரின் இருப்பு பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பமாகியிருப்பது ஒன்றினை நன்கு புலப்படுத்துகின்றது. அது பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனையினைத்தான். 'பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்னும் கூற்றுக்கேற்ப அவரது வாழ்வில் கடந்து போன இழப்புகளைப்பற்றிச் சுயசரிதை விவரிக்கின்றது. பாரதி அறுபத்தாறு என்ற பகுதியில் ‘எனக்கு முன்னே பல சித்தர்கள் இருந்தனர், யானும் வந்தேன் – ஒரு சித்தன் இந்நாட்டில்’ என்று தன்னையும் ஒரு சித்தனாக அறிமுகப்படுத்திக் கொண்டு துவங்குகிறார். கடவுள் வாழ்த்து, மரணத்தை வெல்லும் வழி, கடவுள் எங்கே இருக்கிறார்? சினத்தின் கேடு. பொறுமையின் பெருமை, குள்ளச்சாமி கதை, கோவிந்தசாமி புகழ், யாழ்ப்பாணத்து சாமி புகழ், குவளைக்கண்ணன் புகழ் என்று செல்லும் இப்பாடல் பெண் விடுதலை, தாய் மாண்பு, காதலின் புகழ் என்று தொடர்கிறது. சர்வமத சமரசம் என்ற முத்தாய்ப்போடு பாடல் முடிகிறது. மாங்கொட்டைசாமி மற்றும் குள்ளச்சாமி எனுப்படும் சித்தர் – அவரையே பாரதி – தன் மோனகுரு - கோவிந்தசாமி மற்றும் யாழ்ப்பாணத்துச்சாமி ஆகியோரின் நேரடித் சந்திப்புகள் பாரதியின் ஆன்ம தாகத்திற்கு உரமூட்டின. ரமணி இந்நூலை ஒலி நூலாக்கியிருக்கிறார்.

  • கண்ணன்பாட்டு

    11

    கண்ணன்பாட்டு
    கண்ணன்பாட்டு

    பாரதியாரின் கண்ணன் பாட்டு மிகப் பரவலாக இசைக்கப்படும் பாடல்களைக் கொண்டது. ரமணியின் குரலில் விருத்த ஓசையில் கண்ணன் பாட்டென 23 பாடல்களும் தரப்பட்டுள்ளன. தோழன், தாய், தந்தை, சேவகன், அரசன், சீடன், சற்குரு, குழந்தை, விளையாட்டுப்பிள்ளை, காதலன், காந்தன், காதலி, ஆண்டான், குலதெய்வம் என்றெல்லாம் கண்ணனை 23 பாடல்களில் பாரதி கொண்டாடுகிறார். இவற்றில் குறிப்பாக கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை, கண்ணன் என் காதலன் என்ற தலைப்பில் உள்ள ஐந்து பாடல்கள், கண்ணம்மா என் காதலி என்ற தலைப்பில் அமைந்த ஆறு பாடல்கள், கண்ணம்மா என் குலதெய்வம் என்ற பாடல் என பதின்மூன்று பாடல்களைக் கேட்டிருக்காத தமிழ்ச் செவிகளே இல்லையெனலாம்.

Related to Bharathiyar Complete Works

Related categories

Reviews for Bharathiyar Complete Works

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words