Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yakshan Thanimaiyil Oru Rajangam
Yakshan Thanimaiyil Oru Rajangam
Yakshan Thanimaiyil Oru Rajangam
Ebook256 pages1 hour

Yakshan Thanimaiyil Oru Rajangam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Ramcharan Sundar a Mechanical Engineer, who is interested in writing and Photography.Currently he is working in Bangalore, India. So far he has written four novels,Out of which his fourth Tamil novel named "Yakshan" was published first. His objective is to spread great scholar's philosophical thoughts and spiritual thoughts in interesting and thrilling way. He recognized his writing skill when he was forced to participate in his college cultural activities.
LanguageUnknown
Release dateMay 6, 2016
ISBN6580104300462
Yakshan Thanimaiyil Oru Rajangam

Read more from Ramcharan Sundar

Related authors

Related to Yakshan Thanimaiyil Oru Rajangam

Related categories

Reviews for Yakshan Thanimaiyil Oru Rajangam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yakshan Thanimaiyil Oru Rajangam - Ramcharan Sundar

    http://www.pustaka.co.in

    யக்ஷன்

    தனிமையில் ஒரு ராஜாங்கம்

    Yakshan

    Thanimaiyil Oru Rajangam

    Author:

    இராம்சரண் சுந்தர்

    Ramcharan Sundar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ramcharan-sundar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கதை ஆசிரியரும் அவருடைய எழுத்தார்வமும்........

    என் பெயர் இராம்சரண். நான் ஒரு ME பட்டதாரி, நானும் என் மனைவியும் தற்பொழுது பெங்களூருவில் வசித்து வருகிறோம். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.

    முதலில் எனக்குள் இந்த கதை எழுதும் எண்ணம் எப்படி உருவாகியது என்பதை தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் 1998 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பை பாதியிலயே நிறுத்திவிட்டு வேலூரில் ஒரு தொழில் நுட்ப பயிற்சி நிறுவனத்தில் Tools and Die making சேர்ந்தேன். அங்கே புதிதாய் சேர்ந்த மாணவர்கள் கட்டாயமாக எதாவது ஒரு கலை நிகழ்ச்சியில் பங்குபெற்று அதை 15 நாட்களுக்குள் அந்த தொழில் நுட்ப நிறுவனத்தின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் அரங்கேற்ற வேண்டும் என்று ஒரு சட்டம் இருந்தது. நான் அந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்த முதல் நாள் இந்த சட்டத்தை கேட்டு அதிர்ந்து போனேன், ஏனென்றால் நான் இதற்கு முன் என் வாழ் நாளில் கலை நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்றதில்லை. எனக்கு கூச்ச சுபாவம் வேறு, அதனால் என்னுடன் புதிதாய் சேர்ந்தவர்களில் யாருக்காவது இந்த கலை நிகழ்ச்சிகளில் ஆர்வம் இருக்கும், அவர்கள் எதாவது கான்செப்டை யோசித்து ஒரு குழுவாக ஒத்திகை பார்த்து கொண்டிருப்பார்கள், அவர்களுடன் சேர்ந்து ஒட்டிக்கொண்டு நானும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் பாருங்கள் என்று கணக்கு காட்டி விடலாம் என்று நினைத்தேன். என் துரதிர்ஷ்டம் அப்படி ஆர்வமாய் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களின் நாடகத்திலோ, ஆடல் பாடல் குழுக்களிலோ இடம் காலி இல்லை என்று என்னை தனிமை படுத்தி விட்டார்கள். நான் சோகமாக எப்படி தப்பிப்பது என்று யோசித்து கொண்டிருந்த வேளையில் திடீரென்று அந்த தொழில் பயிற்சி நிறுவனத்திலேயே கண்டிப்பானவர் என்று பெயர்பெற்ற ஒரு ஆசிரியர் வந்தார். அவர் வந்தவுடன் அனைவரும் கீழே அமர்ந்தனர். அவர் எந்த கலை நிகழ்ச்சிகளிலேயும் பங்கேற்காமல் யாராவது இருக்கிறீர்களா? அப்படி இருந்தால் உடனே எழுந்து நில்லுங்கள் என்று கேட்டார். இதை கேட்டவுடன் எனக்கு பீதியில் வயிறு கலங்கியது, அப்படியே திரு திருவென முழித்துக் கொண்டே எழுந்தேன். சுற்றி பார்த்தால் நான் மட்டும் தான் எழுந்து நின்று கொண்டிருந்தேன். போச்சு மாட்னேன் என்று சிந்தித்து கொண்டிருந்த வேளையில் மறுபடி அவர் ஒருத்தர் தானா?......இல்லை வேற யாரவது இருக்கீங்களா? அப்படி யாராவது பங்கு பெறலைன்னு தெரிஞ்சுதுனா அப்புறம் விஷயம் வேறமாதிரி போயிடும் என்று மிரட்டினார். அப்பொழுது என்னை போல் முகத்தில் அதே கலவரத்துடன் நான்கு மாணவர்கள் எழுந்தனர். இவர்களை பார்த்தவுடன் என் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம். அந்த கண்டிப்பான ஆசிரியர் எங்கள் ஐந்து பேரையும் ஒரு குழுவாக உருவாக்கினார். அந்த மாணவர்களுடன் பேசி பழகும் போது தான் அவர்களும் என்னை போல் கூச்ச சுபாவம் உடையவர்கள் என்றும், கலை நிகழ்ச்சி என்றால் கிலோ எவ்வளவு?என்று கேட்கும் அளவிற்கு அவர்களுக்கு கலை ஞானம் இருந்தது என்றும் தெரிந்தது. தினமும் அந்த கண்டிப்பான ஆசிரியர் எங்களை எதாவது கலை நிகழ்ச்சி செய்யுமாறு வற்புறுத்தி கொண்டிருந்தார். வேறு வழி இல்லாமல் அவரிடமிருந்து தப்பிக்க நான் ஆடியோ கேசட்டில் கேட்ட எஸ்.வி.சேகர் அவர்களின் நகைச்சுவை நாடகங்களையும், சினிமாவில் நான் ரசித்த நகைச்சுவை காட்சிகளையும் ஒரு மாதிரியாக வைத்து நான் ஒரு நகைச்சுவை நாடகத்தை எழுதினேன். எழுத எழுத எனக்கு ஆர்வம் அதிகமாகியது. நான் எழுதிய நாடகத்தையே அரங்கேற்றினோம். அதை பார்த்த அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். நான் அந்த நாடகத்தில் எம்.எல்.ஏ.வேதாசலம் என்ற வேடத்தில் நடித்தது மிகவும் பிரபலமாகியதால், அன்றிலிருந்து எல்லாரும் என்னை என் பெயரிட்டு கூப்பிடுவதற்கு பதிலாக எம்.எல்.ஏ.வேதாசலம் என்று அழைக்க ஆரம்பித்தனர். பிறகு அந்த தொழில் பயிற்சி நிறுவனத்தில் எதாவது கலை நிகழ்ச்சி என்றால் என்னை தான் அழைப்பார்கள், இது எனக்கு சந்தோஷத்தை அளித்தாலும் அவர்கள் என் தொழில் திறமையை கண்டு கொள்ளவில்லையே என்பது வருத்தத்தை அளித்தது. சரி நாம் இதை பற்றி இப்பொழுது பேச வேண்டாம், ஏனென்றால் அந்த தொழில் பயிற்சி நிறுவனத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையே ஒரு பெரிய நாவலாக எழுதி விடலாம். வருங்காலத்தில் அதை பற்றி எழுதினாலும் எழுதுவேன், அப்படி எழுதினால் அப்பொழுது படித்து தெரிந்து கொள்ளுங்கள். நான் அந்த தொழில் பயிற்சி நிறுவனத்தில் படிப்பை முடித்துவிட்டு வரும் பொழுது என்னுள் இருந்த அந்த எழுதும் திறமையை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நானும் பெரும்பாலான படிப்பை முடித்த மாணவர்களை போல் வேலை இல்லாமல் இருந்த காலகட்டங்களில் சும்மா இருக்கறதுக்கு எதாவது படிப்போமே என்று B.C. A டிகிரியை தொலைதூர கல்வி மூலமாக பயின்று வந்தேன். ஒரு டிகிரி இருந்தால் வெளிநாட்டில் வேலை கிடைப்பதற்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணம் தான் இந்த முடிவிற்கு காரணமே தவிர மற்றபடி எனக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வம் தான் என்று இதை வாசிப்பவர்கள் தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு அந்த டிகிரியில் உள்ள பாடங்களில் கணக்கும் ஒரு பாடம். அந்த கணக்கு பாடத்தில் வரும் differentiation integration என்றால் எனக்கு அலர்ஜி. எப்படியோ யார்யாரையோ பிடித்து ஓரளவுக்கு அந்த பாடத்தை பற்றி சில குறிப்புகளை வாங்கி பயின்று வந்து கொண்டிருந்தேன். 2002 ஆம் ஆண்டு எந்த மாதம் என்று சரியாக நினைவில் இல்லை ஒரு முறை இந்திரா நகர், சென்னையில் உள்ள என் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தேன். அந்த வீடு அடுக்கு மாடி கட்டட அமைப்பில் இருக்கும் வீடு. நான் கணக்கு பாடத்தை ஒரு புத்தகத்தில் எழுதி பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று யாரோ நான் அமர்ந்திருக்கும் நாற்காலியை அசைத்ததால் நான் எழுதி கொண்டிருந்த புத்தகத்தில் என் பேனாவும் அசைந்து கிறுக்கியது. நான் கோபத்தில் திரும்பி யார் அது என்று பார்த்தேன். திரும்பி பார்த்தால் யாரும் அங்கு இல்லை. ஆனால் என் நாற்காலி அசைந்தது உண்மை. அந்த வீட்டில் இருக்கும் வயதான என் தாத்த பாட்டியால் இப்படி என் நாற்காலியை அசைத்து விட்டு போயிருக்க முடியாது, வேறு யாரோ அசைத்து விட்டு ஓடி மறைந்து கொண்டிருக்கிறார்கள் அது யாரென்று தெரிந்து கொள்ள ஆர்வமாய் தேடினேன். அந்த வீட்டில் என் தாத்தா பாட்டியை தவிர வேறு யாரும் இல்லை. எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. நான் வெளியே எட்டிப் பார்த்தேன். அங்கே சுற்றுபுறத்தில் உள்ள வீடுகளிலிருந்த அனைவரும் வெளியே கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அனைத்து மக்களும் பதட்டமாக காணப்பட்டனர். கீழே இறங்கி நான் அவர்களிடம் விசாரித்ததில் தான் தெரிந்தது சிறு நில நடுக்கம் ஏற்பட்ட காரணத்தினால் தான் அவர்கள் வெளியே பயந்து ஓடிவந்தார்கள் என்று, நாற்காலியின் அசைவுக்கு காரணமும் எனக்கு புரிந்தது. நான் உடனே என் தாத்தா பாட்டியை கீழே கூட்டி வந்து விட்டேன்.

    கலி முத்திடுத்து அதான் இப்படி நடக்கறது, உலகம் அழிய போகுது என்றெல்லாம் அந்த கூட்டத்தில் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். ஒருவேளை இது பெரிய நில நடுக்கமாக இருந்து நான் மட்டும் அந்த இடிபாடுகளில் மாட்டி இருந்தால் என்னவாகி இருக்கும்? என்றெல்லாம் என் எண்ணம் ஓடத்துவங்கியது. பிறகு ஆபத்து இல்லை என்றவுடன் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர். நான் இரவு படுத்துக் கொண்டிருக்கையில் மறுபடி தனியாக இடிபாடுகளில் மாட்டிக் கொண்டால் .. என்ற சிந்தனை வந்தது. இதை வைத்து ஒரு திரைப்படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அந்த படத்தின் காட்சிகள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் தனியாக ஒருவன் அந்த இடிபாடுகளில் மாட்டிக் கொண்டு தப்பிக்க முயற்சி செய்வதில் என்ன சுவாரசியம் இருக்க போகிறது, கூடவே ஒரு அழகிய பெண்ணும் சேர்ந்து மாட்டிக் கொண்டால் தான் சுவாரசியம் என்று கதையை வேறு மாதிரி யோசித்தேன். (குறிப்பு: தயவு செய்து யார் அந்த பெண் என்று என்னிடம் கேட்க வேண்டாம் ஏனென்றால் அதற்கு என்னிடம் பதில் கிடையாது). இந்த கதையை யோசித்து முடித்தவுடன் யாராவது கிடைத்தால் அவர்களிடம் இந்த கதையை கூறி அவர்களுடைய கருத்தை கேட்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இந்த கதையை என் நெருங்கிய நண்பர்கள் நிறைய பேரிடம் கூறினேன். அவர்களும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினர். இந்த பாராட்டுகள் என் வேலை கிடைக்காத விரக்தியை மறக்கடித்தது. அப்பொழுது எனக்கு வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கே ஒருவரிடம் இந்த கதையை கூறும் பொழுது அவர் இந்த கதையை எழுதுமாறு வலியுறுத்தினார். நானும் எழுதினேன். அதை மற்றவர்களிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன். சிலர் அதை படித்து விட்டு இன்னும் முயற்சி செய் இந்த கதை பரவாயில்லை நல்ல முயற்சி என்றனர். இதை போல் ஒரு கதையை இது வரை படித்ததில்லை என்று அவர்களை மெய்சிலிர்க்க வைக்க வேண்டும் என்று நான் மறுபடி வேறு ஒரு கதையை யோசித்து எழுதினேன். இப்படியே எனக்கு எழுதும் ஆர்வம் கட்டுக்கடங்காமல் வளர்ந்தது. ‘யக்ஷன்’ கதை என்னுடைய நாலாவது கதை. இப்படியே என் வாழ்கை போய் கொண்டிருக்க ஒரு நாள் திடீரென்று என்னுடன் பணிபுரிந்த என் நண்பர்கள் அனைவரும் அந்த நிறுவனத்திலிருந்து தங்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளிநாட்டிற்கு உழைக்க சென்றனர். அப்பொழுது தான் என் வேலையில் உள்ள முன்னேற்றத்தை ஆராய்ந்து பார்த்தேன். நான் என்னுடன் பணி புரிந்த நண்பர்களின் வருமான வளர்ச்சியை என்னுடைய வளர்ச்சியுடன் ஒப்பிட்டு பார்த்தேன். என்னுடைய நிலை கீழே இருந்தது. இந்த கதை எழுதும் ஆர்வம் எனக்கு போதை போல் இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் சரி எனக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதன் மூலமாக சம்பாதிக்கலாம் என்று முடிவெடுத்து நான் எழுதிய கதைகளிலேயே சிறந்த கதை ‘யக்ஷன்’ என்று கருதி அதை வெளியிட என் தந்தைக்கு தெரிந்தவர்கள் மூலமாக முயற்சித்தேன். அந்த முயற்சி தோல்வி அடைந்தது. என்னுடைய மாத வருமானம் சிறிய தொகை(2005 ஆம் ஆண்டு 5000 ரூ/- ) என்பதால் என்னால் மேற்கொண்டு இந்த கதையைவெளியிட முயற்சிக்க முடியவில்லை. சரி திரைப்பட துறைக்கு மாறினால் என் எழுத்து திறமையை வைத்து முன்னேறி விடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் சினிமால ஜெயிச்சவன விட தோத்தவன் தான் அதிகம், ஒரு திறமைசாலி சினிமா துறைல பிரபலம் ஆகி ஜெயிக்கிரான்னா அவனுக்கு பின்னாடி ஆயிரம் ஆயிரம் திறமைசாலிகள் தோக்கடிக்க படறாங்க என்றெல்லாம் கூறி பயத்தை கிளப்பினார்கள். அந்த சமயத்தில் யாரும் எனக்கு ஊக்கத்தையோ, தைரியத்தையோ, ஆதரவையோ தர முன்வரவில்லை. நான் தனிமையாக இருக்கிறேன் எனக்கென்று யாரும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். என் வருங்காலத்தை பற்றி யோசிக்கும் பொழுது பயந்தேன். முதலில் பணத்தை சம்பாதித்து வாழ்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்து என் மனதோடு உறவாடிக் கொண்டிருந்த என் கலை படைப்புகளான என் கதைகளை மேலே பரணையில் தூக்கி வைத்து விட்டு நான் சேர்ந்த B.tech மாலை கல்லூரியில் கவனத்தை செலுத்த தொடங்கினேன். நான் B.tech படித்து முடித்த பிறகு நல்ல வருவாய்க்கு வேறு வேலை தேடினேன், ஆனால் நான் படித்த B.tech பகுதி நேரபடிப்பு என்பதால் கம்மியான சம்பளமே கிடைத்தது, பணம் சம்பாதித்தால் தான் வாழ்கையில் முன்னேற முடியும் என்று கருதி என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர பொறியியல் கல்லூரியில் சேர்ந்து M.E பயின்றேன். பிறகு நான் எதிர்பார்த்ததை போல் வேலையும், வருவாயும் கிடைத்தது.(வாசகர்கள் ஒரு வேளை நிறைய சம்பாதிக்கரானோ? என்றெல்லாம் நினைக்க வேண்டாம், ஒரு குடும்பம் நடத்தும் அளவிற்கு தான் நான் சம்பாதிக்கறேன், அதே போல் எல்லாருக்கும் தனியார் நிறுவனத்தில் இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வு எனக்கும் இருக்கிறது). 2013 ஆம் ஆண்டு நான் விரும்பிய பெண்ணுடன் திருமணமாகியது. எனக்கு பிடித்த வண்டியை வாங்கினேன். வீட்டிற்கு தேவையான பொருட்களை எனக்கு பிடித்தார் போல் வாங்கினேன். (வீட்டை மட்டும் சொல்லவில்லை ஏனென்றால் அதை மட்டும் நான் வாங்கவில்லை) இவ்வளவு நல்ல விஷயங்கள் நடந்தாலும் என்னை விட அதிகமாக சம்பாதிப்பவர்களே என் கண்ணுக்கு தெரிந்தனர், அவர்களை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. இந்த பணம் சம்பாதிக்கும் போட்டியில் சோர்வடைந்தேன். 2014 பிப்ரவரி மாதம் ஒரு தினத்தில் தனியாக விரக்தியில் வாழ்கையில நிம்மதியே இல்லையே ஏன்? என்று யோசிக்க தொடங்கினேன். சரி என் வாழ்கையில எனக்கு சந்தோஷத்தை கொடுத்த விஷயங்களை யோசிச்சு பார்ப்போம் என்று நான் 1998ஆம் ஆண்டு தொழில் பயிற்சி நிறுவனத்தில் எழுதிய நாடகங்களையும், 2005 ஆம் ஆண்டு நான் எழுதிய நான்கு கதைகளையும் நினைத்து பார்த்து இன்புற்றேன் . அந்த கதைகளை தூசி தட்டி படித்தேன். எனக்குள் இருந்த இந்த திறமை, இந்த திறமையால் வந்த அந்த கதைகளுக்குள் இருந்த ஆழ்ந்த கருத்துக்களை பார்த்து அதிசயித்து போனேன். நான் 1998 ல் தொழில் பயிற்சி நிறுவனத்தில் கலை நிகழிச்சிகளில் பங்கு பெற முடியாமல் ஏற்பட்ட கடினமான சூழ்நிலைகளிலும், வேலை கிடைக்காத விரக்தியான நாட்களிலும் என்னை சந்தோஷப் படுத்தியது என்னுடைய எழுத்து திறமையும், கற்பனை திறனும் தான். அதே போல் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் விரக்தி நிலையையும் நான் எழுத தொடங்குவது மூலமாகவும் கற்பனை திறன் மூலமாகவும் கடந்து விடலாம் என்று நினைத்து புதிய கதை ஒன்றை எழுத தொடங்கியிருக்கிறேன். தினமும் இதற்காக ஒரு மணிநேரம் ஒதுக்கி வைப்பேன். காலையில் 5.30 மணியிலிருந்து 6.30 மணி வரை இதற்கு நேரம் ஒதுக்குவேன், பிறகு அன்றாட வேலைகளை செய்ய தொடங்குவேன். எனக்கு எதேற்சியாக வலை தளத்தில் NOTION PRESS பற்றி தெரிய வந்தது. அவர்களின் மூலமாக நான் 9 வருடங்களுக்கு முன்னால் எழுதிய யக்ஷன் என்னும் கதையை வெளியிட முடிவெடுத்தேன். இதற்கு முன்னால் எழுதிய கதைகளையும் வெளியிட திட்டமிட்டுள்ளேன். லாபம் அடைகிறதோ இல்லையோ இந்த கலை பயணம் நிச்சயமாக என் வாழ்வின் முடிவு வரை தொடரும்.

    அன்புடன்

    இராம்சரண் சுந்தர்

    முன்னுரை

    2005 ஆம் ஆண்டு என்னுடைய மூன்றாவது கதையை எழுதி முடித்த பிறகு நான்காவது கதைக்கு யக்ஷன் என்று தலைப்பு வைத்தேன். இந்த கதை நான் எழுதிய மற்ற கதைகளை விட படிப்பவர்களுக்கு விறுவிறுப்பாகவும், படிக்கும் பொழுது மர்மமாகவும், முடிவில் ஆழமான ஆன்மீக கருத்துகளை வெளிப்படுத்துவது போல அமையவேண்டும் என்று எழுத ஆரம்பித்தேன். என்னுடைய சிறு வயதில் மகாபாரத நாடகத்தில் யக்ஷன் என்ற கதாபாத்திரம் என்னை கவர்ந்ததை நினைவு கோரி இந்த தலைப்பை வைத்தேன். நான் 2005 ஆம் ஆண்டு காஷ்மீர் சுற்றுலா சென்றிருந்த பொழுது அங்கே எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ படையினரிடம் கலந்துரையாடிய விஷயங்களும், நான் சிறு வயதில் ஏன் பணம் கொடுத்து மாம்பழம் வாங்கறீங்க?, மாம்பழத்தை பறிச்சா அந்த மாமரம் நம்ம கிட்ட காசு கேக்குதா? என்று கேட்ட முட்டாள் தனமும் தான் எனக்கு இந்த கதையை எழுத உதவியது. நான் எழுதிய இந்த கதையை நீங்கள் படித்து உங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1