Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saathanai Arasigal
Saathanai Arasigal
Saathanai Arasigal
Ebook138 pages46 minutes

Saathanai Arasigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேனம்மைலெக்ஷ்மணன் கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர், சுதந்திரப் பத்ரிக்கையாளர். சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண்பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு ஆகிய ஐந்து நூல்களின் ஆசிரியர். நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கத்தில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

குங்குமம், குங்குமம் தோழி, குமுதம், குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் ஹெல்த் ப்ளஸ், ஆனந்தவிகடன், அவள் விகடன், கல்கி, இந்தியா டுடே, தேவதை, மல்லிகை மகள், மெல்லினம், லேடீஸ் ஸ்பெஷல், பாக்யா, பூவரசி, சமுதாய நண்பன், நம் தோழி, சூரியக்கதிர், இவள் புதியவள், தினமலர், தினமணி, தினமணிக் கதிர், பெண்கள் ராஜ்ஜியம், புதிய தரிசனம், பரிவு, குறுஞ்செய்தி, தினகரன் வசந்தம், புதிய தலைமுறை, யுகமாயினி, இன் & அவுட் சென்னை, சென்னை அவென்யூ, கொளத்தூர் டைம்ஸ், ஆச்சி வந்தாச்சு, புதிய பயணி, ஹாலிடே நியூஸ், நமது மண்வாசம், கோகுலம், ஷெனாய் நகர் டைம்ஸ், தமிழ்த்தேர், மங்கையர்மலர், ஐபிசிஎன், மகளிர் தரிசனம், தென்றல் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி வருகின்றன.

இளமை விகடன், திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், அதீதம், முத்துக் கமலம், கழுகு, வலைச்சரம், ஊடகம், சுவடு, பூவரசி, தகிதா, புதிய “ழ” , அவள் பக்கம், தென்றல், காற்று வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ, சொல்வனம். அமீரத்தின் தமிழ்த் தேர், தமிழ் ரைட்டர்ஸ் போர்ட்டல் ஆகிய இணையங்களில் எழுதி வருகின்றார் .

நம் உரத்த சிந்தனை, தீக்கதிர், லேடீஸ் ஸ்பெஷல், தினமலர், தினமணி, இந்தியா டுடே, தி தமிழ் இந்து, புதிய தரிசனம், தென்றல், புன்னகை உலகம், மக்கள் தொலைக்காட்சி ஆகியவற்றில் இவர் பற்றியும் இவரது நூல் பற்றியும் வெளியாகி உள்ளன.. சாஸ்த்ரி பவன், போர்ட் ட்ரஸ்ட், பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். கலைஞர் தொலைக்காட்சி, விஜய் டிவி , சன் நியூஸ் தொலைக்காட்சி, புதிய யுகம், வானவில், பொதிகை, வானொலி ஆகியவற்றில் இவரது கருத்து & பேட்டி வெளியாகி உள்ளது.

இவருடைய கவிதைகள் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சகி என்ற கன்னடப் பத்ரிக்கையில் இவரது கவிதையின் மொழிபெயர்ப்பு வெளியாகி உள்ளது. அன்ன பட்சி நூலுக்காக ”அரிமாசக்தி” விருது பெற்றவர். ரியாத் தமிழ்ச்சங்கத்தின் கவிதைப் போட்டியில் இருமுறை பரிசு பெற்றவர். வலைப்பூ எழுத்துக்களுக்காக 25 விருதுகளும், சமூக இணையப் பங்களிப்புக்காக சிறப்பு விருதும், மதர் தெரசா அவார்டு, விமன் எம்பவர்மெண்ட் அவார்டு, கம்யூனிட்டி சர்வீஸ் அவார்டு பெற்றவர். லேடீஸ் ஸ்பெஷல் பத்ரிக்கையின் “ஸ்பெஷல் லேடி” விருது பெற்றவர்.

LanguageUnknown
Release dateJul 29, 2017
ISBN6580120802444
Saathanai Arasigal

Reviews for Saathanai Arasigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saathanai Arasigal - Thenammai Lakshmanan

    http://www.pustaka.co.in

    சாதனை அரசிகள்

    Saathanai Arasigal

    Author:

    தேனம்மை லெக்ஷ்மணன்

    Thenammai Lakshmanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/thenammai-lakshmanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தைர்ய லெக்ஷ்மி ரம்யா தேவி

    2. சுயம்புவாய் உருவான பெண் மோகனா சோமசுந்தரம்...

    3. புதிய இதயம் புதிய ஜீவிதம் உமாஹெப்சிபா...

    4. மீண்டும் ஆடிய கால்கள் லெக்ஷ்மி என் ராவ்

    5. வாழும் வரை போராடு... மணிமேகலை... போராடி ஜெயித்த பெண்கள்

    6. நம்பிக்கை நட்சத்திரம் திருஷ்காமினி... போராடி ஜெயித்த பெண்கள்

    7. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு...போராடி ஜெயித்த பெண்கள்

    8. இறவாப் புகழ் பெற்ற அனுராதா போராடி ஜெயித்த பெண்கள்

    9. பெண் ஆட்டோ ஓட்டுநர் இன்று சிஐடியூவின் மாநிலக்குழு உறுப்பினர். போராடி ஜெயித்த பெண்கள்

    10. நோயோடு போராடிப் பணி செய்யும் ஆசிரியை லூர்துராணி. போராடி ஜெயித்த பெண்கள்

    11. கிராமத்துப் பெண்களைச் சாதிக்க வைத்த இருளர் இனத்தலைவி வசந்தி (போராடி ஜெயித்த பெண்

    12. டாக்டர் ஆக முடியாத டாக்டர்...ஆஸ்வின் ஸ்டான்லி (போராடி ஜெயித்த பெண்கள்)

    13. வானம் தொட்டுவிடும் தூரம்தான்... ஸ்ரீலேகா...

    14. திருதிரு துறு துறு பட டைரக்டர் நந்தினி ஜேஎஸ்.

    15. இளம்பாடலாசிரியர் பத்மாவதி.

    16. பெரிதினும் பெரிது கேள்.மகேஸ்வரி

    17. வயது ஒரு தடையல்ல...

    18. பன்முகத் திறமை கொண்ட பட்டாம் பூச்சி. அர்ச்சனா அச்சுதன்.

    19. காலால் வரையும் சாதனை ஸ்வப்னா...

    1

    தைர்ய லெக்ஷ்மி ரம்யா தேவி

    ஃபீனிக்ஸ் பறவை பார்த்து இருக்கிறீர்களா...? தன் சாம்பலில் இருந்தே திரும்பத் திரும்ப உயிர்த்தெழும் ஃபீனிக்ஸைப் பார்க்க வேண்டும் என்றால் ரம்யா தேவியைப் பார்க்கலாம்... இரும்பு மனுஷி., மலை அரக்கி என்றெல்லாம் தன் நண்பர்களால் செல்லமாக அழைக்கப் பெறும் ரம்யா என்றைக்கும் சந்தோஷப் பந்து...

    இன்றைக்கு ஒரு சிங்கப்பூர் பேஸ்டு கம்பெனியில்., சாஃப்ட்வேர் டிவிஷனில் ப்ராஜெக்ட் மானேஜராக இருக்கிறார். இதன் பின்னே நெடிய உழைப்பு இருக்கிறது. அசாதாரணமான உழைப்பு. பெண்கள் முன்னேற்றம் என்பது இப்போதும் கடினமாக இருக்கக் கூடிய சூழலில் தன் உபாதைகளையும் மீறி மீண்டெழுந்து புதிய பரிமாணங்களில் பரிணமிக்கிறார்.

    அவருக்குப் பதி்மூன்று வயதாயிருக்கும்போது ஏற்பட்ட ஒரு நெருப்புக் காயம் கிட்டத்தட்ட 42 ப்ளாஸ்டிக் சர்ஜரிகளுக்குப் பிறகு சரியாகி இருக்கிறது. இளமை தொடங்கும் வயது. பெண்மையின் ஆர்வமும் ஆசைகளும் துளிர் விடத் தொடங்கும் பருவம். எல்லாம் முடிந்துவிட்டது எனச் சோர்ந்துபோய்விடாமல்., முடங்கிப் போய்விடாமல்., போராடி ஜெயித்து தன்னை மீட்டுக் கொண்ட பெண் இவர்.

    முதல் பதினைந்து சர்ஜரிகளும் உயிர் காக்க செய்த சர்ஜரிகள். லைஃப் சேவிங்... மிச்சமெல்லாம் அதன் தொடர் சிகிச்சைகள். கடைசி சிகிச்சை கடந்த டிசம்பரில்தான் முடிந்திருக்கிறது. UG., PG., M.C.A., படித்து இருக்கிறார். மிகச் சிறந்த ஐக்யூ உள்ள குழந்தையாய் இருந்ததால் இரண்டு முறை பள்ளியில் டபிள் ப்ரமோஷன் கிடைத்து இருக்கிறது. ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்கும்., டென்த்திலிருந்து ப்ளஸ் டூவிற்கும். யூஜி முடித்தபின் கம்பெனியில் சேர்ந்து வேலை பார்த்துக் கொண்டே தொடர்ந்தும் இருக்கிறார்.

    ப்ளாஸ்டிக் சர்ஜரிகளும் மற்ற செலவும் ஹாஸ்டலில் தங்கி தன் சம்பாத்தியத்திலேயே செய்து கொண்டிருக்கிறார். ஹாஸ்டலில் இவருக்கு கிடைத்த அற்புத நட்பு அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் செல்வி என்ற காயத்ரி. சில நல்ல நட்புக்கள் வாழ்வு முழுமைக்கும் தொடரும் உறவுகளாய் இருப்பது உண்மை... இவருக்கான சிகிச்சை செலவு எல்லாம் இவரின் அத்யந்தத் தோழி தன் சம்பாத்தியத்திலும் செய்து இருக்கிறார். சிறு வயதில் நம்முள் உண்டாகும் நல்ல குணங்கள் என்றென்றும் எந்த சூழ்நிலையிலும் நம்முடன்தான் இருக்கும். சிறு வயதிலேயே பக்கத்தில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு சென்று உதவுவது இவருக்கு மிகப் பிடித்தமான ஒன்று. அது இன்றும் தொடர்கிறது. அது எத்தகைய இன்பமயமானது என்பதை இவரின் எழுத்துக்களில் படிக்கும்போது உணரமுடிகிறது.

    இவரின் தோழியும் இவரும் இவர்களின் தாயார்களுடன் ஒன்றாக வசித்துப் பின் இவர்களின் தாயார்களின் காலத்துக்குப் பிறகும் தொடர்ந்து நிறைய சேவை செய்து வருகிறார்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று உதவுவது., இளம் வயதில் வாழ்வைத் தொலைத்த பெண்களுடன் பேசி பெற்றோருடன் சேர்த்து வைப்பது., எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுப் பிறக்கும் கைக்குழந்தைகளுக்கு சேவை செய்வது., என நீளுகிறது இவரின் சேவைப் பட்டியல்... மிக முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும். கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதால் கேள்விக்குறியான எதிர்காலத்தோடு இருப்பவர்களை எல்லாம் ஆச்சர்யக்குறியாக்கும் முயற்சியில் சில மாணாக்கர்களைத் தேர்ந்தெடுத்து தனது சம்பாத்தியத்தில் கிட்டத்தட்ட 60 சதவிகிதத்தைச் செலவழித்து தனது நேரடி கண்காணிப்பிலேயே படிக்க வைக்கிறார்கள். ஹைதையில் பிறந்து புதுகையில் பள்ளிப் படிப்பு., சென்னையில் கல்லூரி படிப்பு முடித்து தற்போது நல்ல பணியில் இருக்கும் ரம்யா வாழ்க்கையைத் தொலைத்த., வாழ்வில் ஏமாந்த., வாழ்க்கையை வாழ பயப்படும் ஒரு பிரிவிற்காக (பெண்களுக்காக) வலைத்தளத்திலும் எழுதி வருகிறார். மிகத் தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகள். இன்னும் முதியோர்கள்., ஆதரவு அற்றவர்கள்., குழந்தைகள் எல்லாருக்கும் ஒரே இடத்தில் ஷெல்டர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இயன்றவர்களின் உதவியையும் ஏற்றுக் கொள்கிறார். நல்லபடி எல்லாம் அமைந்து இவரின் சேவைகள் பலருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.

    email:- ramya3122@gmail.com

    ph:- 99419 13286.

    டிஸ்கி: ரம்யா பற்றிய என்னுடைய இந்தக் கட்டுரை அக்டோபர் மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வெளிவந்துள்ளது.

    2

    சுயம்புவாய் உருவான பெண் மோகனா சோமசுந்தரம்...

    சுயம்பு மூர்த்திகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். சுயம்புவாய் உருவான பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா...? அவர்தான் மோகனா சோமசுந்தரம்.

    ஸ்தலங்களுக்குப் பேர்போன தஞ்சை மாவட்டத்தில் காவிரிக் கரையில் மாயவரம் பக்கம் சோழம்பேட்டையில் பிறந்த இவர் தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட சிற்பம்.

    பணம்., ஜாதி., கடவுள்., இவற்றில் நம்பிக்கையற்ற சுயம்பு. பள்ளி சென்று படித்ததே மிக அதிகம் என்று நினைக்கும் குடும்பத்தில் தன்னைக் கல்லூரியில் படிக்க வைக்க தந்தையிடம் திருமணத்திற்காக தாத்தா வழிச் சொத்தில் தனக்குள்ள பங்கைக் கொடுத்து படிக்க வைக்கக் கேட்டவர். இவர் ஒரு பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர் என்றால் வியப்பாயிருக்கும்.

    ஆணாதிக்கம் நிறைந்த., அடிப்படை வசதிகளற்ற., ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து., கல்லூரிப் படிப்பை முடித்தபின்

    Enjoying the preview?
    Page 1 of 1