Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Solaikkul Vasanthavizha!
Solaikkul Vasanthavizha!
Solaikkul Vasanthavizha!
Ebook150 pages1 hour

Solaikkul Vasanthavizha!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
LanguageUnknown
Release dateJul 29, 2017
ISBN6580115702487
Solaikkul Vasanthavizha!

Reviews for Solaikkul Vasanthavizha!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Solaikkul Vasanthavizha! - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    சோலைக்குள் வசந்தவிழா!

    Solaikkul Vasanthavizha!

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    இருள் அடர்ந்த தடத்தில் அந்தப் பேருந்து குளிரை கிழித்துக் கொண்டு ஓடியது. ஊட்டிக்கு இன்னும் சிறிது தூரம் இருக்கையில் மெல்ல ஊர்ந்து நின்றது. மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. குளிர் தாங்கவில்லை.

    செந்தில் எஸ்டேட் இறங்குங்கம்மா என்ற கண்டக்டர் புஷ்கலாவின் முன்பு நின்றான்.

    திடுக்கிட்டுப் போனாள் புஷ்கலா. அடர்ந்த இருளை மலைச்சரிவுகள், மரங்கள் கரிய பூதங்களாக தோற்றம் காட்டின.

    இன்னும் விடியல்லையே கண்டக்டர்

    கண்டக்டர் ஸ்வெட்டரை இழுத்து விட்டுக் கொண்டு சிரித்தான்.

    மலைப்பிரதேசம்மா. போர்த்திட்டு படுத்த சூரியன் மெல்லத்தாம்மா எழுந்து வருவாரு. ஊட்டி போய்த்தான் டீ குடிக்கோணும். சீக்கிரம் இறங்குங்க. இங்க ஒண்ணும் பயமில்ல. தோட்டத்துத் தொழிலாளிங்க வர ஆரம்பிச்சுடுவாங்க. எஸ்டேட்டுக்குள்ளாற போக பஸ் வந்துரும். சீக்கிரம் வாங்கம்மா... என்றவன் அவளது பெட்டியையும், பெரிய தோள் பையையும் இறங்கு படியில் அவள் எடுத்துக் கொண்டு போகத் தோதாக வைத்தான்.

    அவளுக்கு இத்தனை குளிர் இருக்கும் என்று தெரியாது. தோழி நவநீதத்தின் அப்பா கார் வந்து அழைத்துப் போகும் என்று சொன்னாரே… அவளை உதிர்த்து விட்ட பேருந்து போய் விட்டது. கன்னங்கரிய இருள் சூழ பயத்துடன் நின்றாள். மனதில் பயம் உடுக்கை கட்டியது. தொழிலாளர்கள் போகத் தொடங்காத தடம் வெறிச்சோடிக் கிடந்தது.

    அடுத்த பஸ்ல வந்திருக்கலாமோ? ஊஹீம். அதற்குக் காத்திருக்க முடியாத அவசர ஓட்டமல்லவா? மேல் சால்வையை இழுத்துக் கொண்டும் நடுங்கியது. பற்கள் கடகடவென்று தந்தியடித்தன. ஐந்து மணிக்குச் சென்னையில் இருள் மெல்ல விலகும் தருணம்… வாசல் பெருக்கி கோலமிடுபவர்களும், பால் போடுபவர்களின் நடமாட்டமும்… வீட்டினுள்ளேயே பள்ளிக்கூடம் போகிறவர்களின் நடமாட்டம் ஆரம்பமாகி விடுமே…

    இந்தத் தடத்தில் மரங்கள் பேயாட்டம் போடுகின்றன. மழை வருமோ? சாரலா மழையா… ரெண்டு துளிகள் மணிக்கட்டில் விழ துடைத்துக் கொண்டாள் புஷ்கலா.

    ஆரவாரமற்ற அமைதி பயத்தைக் கொடுத்தது. மழை பொழிந்தால் சொட்டச் சொட்ட நனைந்து விடுவாளே… ஒதுங்க இடமில்லையே. கடவுளே! அவள் பாதுகாப்பான இடத்திற்குத்தான் வந்திருக்கிறாளா? கண்ணீர் வரும் போல இருந்தது.

    அவள் இப்படி அனாதையாய் ஊட்டி போகும் தடத்தில் நிற்பது அம்மாவுக்குத் தெரியுமா? அம்மா, இழுத்துப் போர்த்திக் கொண்டு கிராமத்தில் நீ தூங்குவாய்தானே? இல்லை இல்லை… நினைப்பது தப்பு. ஒரு வீட்டில் ஒண்டிக் கொண்டு ஓசிச்சோறு சாப்பிடும் ஜீவன் சுகவாசியாக இருக்க முடியுமா?

    தன்வசமிழந்து அம்மாவின் நினைவில் ஆழ்ந்த சமயம் கார் ஒன்று அவளருகே நின்றது. குளிரும், சூடாக ஏதாவது குடித்தால் தேவலாம் போன்ற வேட்கையும்தான் இங்கு பணிபுரிய வந்திருப்பவள் என்ற நினைப்பை மழுங்க வைத்தது.

    டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவன் நீங்கதானே அம்மணி மிஸ். புஷ்கலா என்று உறுதிப்படுத்திக் கொள்ளும் தோரணையில் கேட்டான்.

    அவளுக்கு கோபம் நெஞ்சை முட்டியது.

    என்ன டிரைவர்… தூங்கிட்டிங்களா? பஸ் வரப்ப இங்கே வந்திருக்க வேண்டாமா? பயந்து நடுங்கிட்டு இங்கே நிற்கிறேன். போனதும் பாஸ்கிட்ட முதல்ல கம்ப்ளைண்ட் பண்றேன். குளிர் நடுக்குது என்று சொற்களை முற்களாக குத்தி வீசினாள்.

    அவன் கோட் அணிந்து கழுத்தைச் சுற்றி ஒரு ஸ்கார்ப்பை வளைத்துப் போட்டிருந்தான். முகத்தை மூடி குல்லாய்…

    குளிருதுனு பேசிட்டே இருந்தீங்கன்னா எப்படி? கார்ல ஏறுங்கம்மா.

    அவன் குரல் சற்று அதட்டலாக மொழிவது போல பட்டது புஷ்கலாவிற்கு.

    நீங்க டிரைவர்தானே? என்றாள் சினம் அடங்காத குரலில்.

    அப்படிச் சொல்லித்தான் செந்தில் எஸ்டேட்ல சம்பளம் தராங்க.

    சம்பளம் வாங்கறீங்க இல்ல? அதுக்குத் தகுந்த வேலை செய்யணும் என்று அதட்டினாள்.

    என்ன வேலை செய்யணும்? சொல்லுங்க தாயி.

    லேட்டா வந்துட்டு கிண்டல் வேறயா? முதல்ல போய் பாஸ்கிட்ட சொல்லி…

    அவளை முடிக்க விடாமல் ஆமாம்மா… புள்ளைக்குட்டிக்காரன் நான். சம்பளத்தை ஏத்திக் கொடுக்கச் சொல்லுங்க கிண்டல் குரலில் தொனிப்பதை புரிந்து கொண்டாள்.

    முதல்ல குறைக்கச் சொல்றேன்.

    வேண்டாம் தாயி… என்ன செய்யணும்னு சொல்லுங்க

    பெட்டியை எடுத்து கார்ல வையுங்க.

    இன்னும் இருட்டு பிரியாததினால் அவனுடைய முகம் சரியாகத் தெரியவில்லை. குல்லாப் போட்டு மறைத்திருந்ததினால் கண்கள்தான் தெரிந்தது. பெட்டியை எடுத்து வைத்துவிட்டு பின்கதவைத் திறந்தவன் கார்ல உட்கார்றீங்களா? என்று கேட்டு அவள் ஏறிய பின் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து காரைக் கிளப்பினான்.

    கார் கிளம்பியது. இந்தக் குளிருக்கு நீங்க போட்டிருக்கிற ஷால் எல்லாம் போதாது. உங்க ஊர்ல மார்கழி மாத குளிருக்கே போதாதே…

    எனக்கு இவ்வளவு குளிர் இருக்கும்னு தெரியாது என்று கூச்சத்துடன் முனகினாள் புஷ்கலா. எங்க ஊர்ல இந்த நேரத்துக்கு பலபலனு பொழுது விடிஞ்சிடும்.

    இது மலைப்பிரதேசம். சுற்றிலும் மரங்கள் வேற… ரெண்டு நாளா மழை வேற கொட்டித் தள்ளுது... இன்னிப் பொழுதன்னிக்கும் இப்படியே கருமை கூடிட்டு இருந்தாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்ல.

    அவனுடைய குல்லா வாயையும் சேர்த்து பொத்தி இருந்ததினாலே குரல் அடைபட்டாற்போல வந்தது. காரில் ஏறினாலும் கூட குளிர் அடங்காமல் வெடவெடக்க வைத்தது. மேடுகளிலும் சரிவுகளிலும் அவன் லாவகமாக காரை ஒட்டும் அழகை புஷ்கலா ரசித்துக் கொண்டாள்.

    உங்க பெயர் என்னங்க? டிரைவரைக் கேட்டாள்.

    எதுக்குங்க கேட்கிறீங்க? பாஸ்கிட்ட போட்டுத் தரவா?

    ஊருக்குப் புதுசான ஒரு பொண்ணு வந்து ஆள்அரவமற்ற பாதையில நிக்கறப்ப நீங்க முன்னாலேயே வந்திருக்க வேண்டாமா?

    சற்று முன் பயந்த பயம் நெஞ்சில் டமாரம் தட்ட குரலில் சீற்றத்தைக் காட்டினாள்.

    நீங்க நேரா சென்னையிலேர்ந்து ஊட்டி பஸ்ல வரீங்க. இல்லையாம்மா?

    ஆமாம்

    பஸ் டிரைவர், கண்டக்டருக்கு குளிருக்கு டீத்தண்ணி குடிக்கோணும். அதனால இந்நேரத்துல ஆள் இல்லேனு பஸ்ஸை வேகமா ஓட்டிட்டு சீக்கிரம் வந்துட்டானுங்க. எம்மேல எந்தத் தப்பும் இல்லீங்க.

    வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.ல கமல்ஹாசன் ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது காரணத்தைச் சொல்லுவாரு. அதுமாதிரியே பேசுறீங்க நீங்க.

    அப்ப என்னையும் நடிக்கப் போகலாம்னு சொல்றீங்களா?

    அவன் சற்றுநேரம் கழித்து வந்ததை அவளால் இன்னும் மன்னிக்க முடியவில்லை. நாட்டில் ஏதேதோ நடக்கிறது. விடியலின் இருட்டுத் தடத்தில் அவளுக்கும் ஏதேனும் நடந்திருந்தால்? யாருக்குத் தெரியப் போகிறது? அதற்கு இந்த செந்தில் எஸ்டேட்காரர்கள் பொறுப்பேற்பார்களா? நினைக்கும் பொழுதே அவளின் தளிர் உடம்பு நடுங்கியது.

    சட்டென்று மனக் குரல் எதுவும் நடக்காத பொழுது ஏன் LJயப்LJட வேண்டும் என்று ஓலமிட்டது. ஆமாம்! பெண் என்பவள் பயப்படக்கூடாது என்பதில் அவள் உறுதியான கோட்பாடுகள் உள்ளவள்தான். ஆனால் சில சம்பவங்கள் அவள் வாழ்க்கையிலேயே திகிலடையும் வண்ணம் நடைபெற்று வந்ததே... அதற்குக் காரணம் என்ன?

    இப்பொழுது தன் வாழ்க்கையைச் செப் பனி டு ம் எண்ணத்தில்தான் சென்னையை விட்டு ஓடோடி வந்திருக்கிறாள்.

    என்னங்கம்மா… ரொம்ப குளுருதா?

    உங்க பெயரைச் சொல்லலையே?

    என் பெயரா? சங்கர்லால்.

    அவள் கலகலவென்று சதங்கைகளின் குலுங்கலாக நகைத்தாள்.

    என்னங்கம்மா… எம்பேரு சிரிக்கும்படியாவா இருக்குது?

    இல்லை… இல்லை… தமிழ்வாணனின் சங்கர்லால் ஞாபகம் வந்துடுச்சு தமிழ்வாணனின் ரசிகை போல இருக்கே?

    ஏன் நீங்க ரசிகர் இல்லையா?

    எங்கம்மா அப்பாவே அவரோட கதைகளைப் படிச்சுத்தான் எனக்கு இந்தப் பெயரை வச்சாங்க.

    அவங்க நல்ல ரசிகர்களா இருக்கணும்.

    தமிழ்வாணனின் புஸ்தகங்கள் எங்கிட்ட நிறையவே இருக்குது.

    நான் ஒரு புஸ்தகப் புழு. எனக்கு படிக்கத் தரீங்களா?

    திருப்பித் தர உத்திரவாதம் இருந்தா கண்டிப்பா தருவேன்.

    என்னைப் பார்த்தா திருப்பித் தருவேன்ங்கற நம்பிக்கை இல்லையா? நான் திருடி இல்லீங்க… சங்கர்லால்.

    Enjoying the preview?
    Page 1 of 1