Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ninaivalaiyil...
Ninaivalaiyil...
Ninaivalaiyil...
Ebook537 pages5 hours

Ninaivalaiyil...

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
LanguageUnknown
Release dateJul 29, 2017
ISBN6580109202478
Ninaivalaiyil...

Reviews for Ninaivalaiyil...

Rating: 3.8666666666666667 out of 5 stars
4/5

45 ratings2 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 3 out of 5 stars
    3/5
    சங்கமம் evlo azhagana varthai nenga evlooo suppera handle pannirukkinga loved it
  • Rating: 5 out of 5 stars
    5/5
    super. உண்மையான அன்பு காதல் காமம் உறவு பாசம் நட்பு க்கு சான்று

Book preview

Ninaivalaiyil... - Infaa Alocious

http://www.pustaka.co.in

நினைவலையில்...

Ninaivalaiyil...

Author:

இன்பா அலோசியஸ்

Infaa Alocious

For more books

http://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

பகுதி - 4

பகுதி - 5

பகுதி - 6

பகுதி - 7

பகுதி - 8

பகுதி - 9

பகுதி - 10

பகுதி - 11

பகுதி - 12

பகுதி - 13

பகுதி - 14

பகுதி - 15

பகுதி - 16

பகுதி - 17

பகுதி - 18

பகுதி - 19

பகுதி - 20

பகுதி - 21

பகுதி - 22

பகுதி - 23

பகுதி - 24

பகுதி - 25

பகுதி - 26

பகுதி - 27

பகுதி - 28

பகுதி - 29

பகுதி - 30

பகுதி - 31

பகுதி - 32

பகுதி - 33

பகுதி - 34

பகுதி - 35

பகுதி - 36

பகுதி - 37

பகுதி - 38

பகுதி - 39

பகுதி - 40

பகுதி - 41

பகுதி - 42

பகுதி - 43

பகுதி - 44

பகுதி - 45

பகுதி - 46

பகுதி - 47

பகுதி - 48

பகுதி - 49

பகுதி - 50

பகுதி - 51

பகுதி - 52

பகுதி - 1

நினைவுகள் நல்லவைதான்

உன் நினைவு என்னை

கொல்லாதவரை...

விடியலை எதிர்நோக்கி கீழ்வானம் காத்திருக்கும் நேரம் நம் கதையின் நாயகன் ஷிஜு (ஷிஜு பொன் குமார்) ஆளை உள்ளிழுக்கும் மெத்தையில் AC அறையில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.

நினைவுகள் அலைமோத தன்னை அறியாமல் கண்ணயர்ந்தவனின் கண்களுக்குள் இதமான கனவு, ஆம் கனவுதான் தாலாட்டியது.

ஒரு கரம் அவனது தலைமுடிக்குள் அலைந்தது. ஈர உதடுகள் நெற்றியில் பதிந்தன. அவன் கண்ணோரத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தான ஒரு வளைக்கரம். அந்த கைகளில் கிடந்தது கண்ணாடி வளையல்கள்.

கண்ணீரை துடைத்த அந்த கரம், அவனது தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டது. அதுமட்டுமா சேயை தாய் அணைப்பதுபோல் அவனை மார்பில் தாங்கியது.

அவனது கண்ணீர் அந்த மார்பகங்களை நனைத்தது. அவனது தலை அவள் மார்பகங்களில் புதைந்தது. அதில் இருந்த ஒரே அடையாளம் மட்டும் அவன் நினைவில்.

கனவின் தாக்கத்தில் தலையணையில் அவன் தலை புரண்டது. மெத்தென்ற தலையணைதான். ஆனால் அதன் மென்மை அவனை தீண்டவில்லை. மாறாக தான் இப்பொழுது அந்த மார்புக்கு மத்தியில் இல்லை என்ற உண்மை அவனை சுட்டது.

கிட்டே நெருங்கிய உறக்கம் பறந்தது. தன் கண்ணீர் இன்றும் பொய்யில்லை. ஆனால் துடைத்த அந்த கரம் பொய், தான் புரண்ட மார்பு பொய்.

ஆனால் இவை அனைத்தும் ஒருநாள் நடந்ததே, அது பொய்யில்லை. என்றும் போல் அன்றும் தன்மீதே ஆத்திரம் பொங்க தலகாணியை தூக்கி எறிந்தான்.

மெத்தையை எட்டி உதைத்தான். அது எப்படி சாத்தியம், அந்த கை ஞாபகம் இல்லை, அது எப்படி இருந்தது கருப்பா, சிவப்பா, எதுவும்...

ஆனால் அந்த கையில் கிடந்த கண்ணாடி வளையல் ஞாபகம் இருக்கிறது. அவள் பேசிய பேச்சு மறக்கவில்லை ஒவ்வொரு வரியும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் குரல் ஞாபகம் இல்லை.

அந்த முகம் ஞாபகம் இல்லை ஆனால் அந்த இதழ் தந்த முத்தத்தின் ஈரம் இன்னும் என் நெஞ்சுக்குள். அவள் உடல் அழகு ஞாபகம் இல்லை ஆனால் அந்த மார்பு மச்சம் மட்டும் நினைவில்.

அன்று அனுபவித்த சுகம் ஞாபகம் இல்லை. ஆனால் அதில் தெரிந்த தாய்மை, கதகதப்பு, பாதுகாப்பு, உரிமை எல்லாம் நினைவில். அவள் பெயர் ஞாபகம் இல்லை அந்த சொல் 'பொம்மா' 'பொம்மா' இது பெயர்தானா என்பதுகூட தெரியவில்லை.

எப்படி எப்படி... என் 28 வருட கன்னி விரதத்தை, காமம் கலக்காமல் தாய்மை கலந்து களவாடிச் சென்றவள் ஊர், பெயர், உருவம் எதுவும் ஞாபகம் இல்லை. ஆனால் அவளது அடையாளம். விரகத்தி புன்னகை அவன் இதழ்களில் உற்ப்பத்தி ஆனது.

அவளது அடையாளம் பரந்து விரிந்த அந்த மச்சம் மட்டுமே நினைவில். இதை யாரிடம் சொல்ல, எப்படி சொல்ல, எப்படி கண்டுபிடிக்க.

எங்கே இருக்கிறாய், எங்கே இருப்பாய், எப்படி இருக்கிறாய், எப்படி இருப்பாய். என்னை நினைவிருக்கிறதா உனக்கு. நினைவிருக்குமா, உன் பெண்மையை எனக்கு பரிசளித்துவிட்டு, உன் பெண்மையை விருந்தாக அல்ல, பரிசாக தந்துவிட்டு, என் நிம்மதியையும், சந்தோசத்தையும் திருடிச் சென்று விட்டாயே.

ஒரு நாளில் ஒரே நாளில் என் வாழ்வின் அர்த்தத்தையும், என் வாழ்க்கையின் அர்த்தத்தையும் மாற்றிவிட்டு சென்று விட்டாயே.

ஒரு பெண்ணால் தடுமாறிய என்னை இன்னொரு பெண்ணான நீ தாயாய் இருந்து அரவணைத்து, ஆறுதல் அளித்து, பரிசளித்து, என்னை எடுத்து வந்த சுவடு இல்லாமல், என் மனதில் நினைவாக தங்கிவிட்டு சென்று விட்டாயே.

நான் புலம்புவது உனக்கு கேட்க்கிறதா. கேட்டும் உன்னால் எப்படி என்னை விட்டு இருக்க முடிகிறது. என் நினைவு உனக்கு இல்லவே இல்லையா, எங்கிருந்து வந்தாய், எங்கே சென்றாய்.

பொம்மா.. பொம்மா.. நீ வேண்டும் எனக்கு, என் தேவை நீ, என் தாகம் நீ, என் தேடல் நீ உன்னை என்று பார்ப்பேன்.

என்று என் கண்முன் நீ வருவாய். உன்னால் எப்படி முடிந்தது, உன்னைத் தந்து என்னை திருடிச் செல்ல. விடை தெரியாத வினாக்கள் படையெடுக்க உறக்கம் தொலைத்து நினைவலையில் மூழ்கினான் ஷிஜு.

நினைவில் பதிந்த, நிழலாகிப் போன அவளை தொலைந்த உணர்வுடன், தொலையாத நினைவுடன், நினைவு அடுக்கில் தேடினான்.

முடிவு என்னவோ அதே பூஜ்யம். கண்முன் நிழலாடியது அந்த மச்சம் மட்டுமே. வேதனை நெஞ்சை அடைக்க சூனியத்தை வெறித்தன விழிகள்.

அவள் வருவாளா...

கொடைக்கானல், குளிருக்கு இதமாய் போர்வைக்குள் சுருண்டிருந்தாள் நம் கதையின் நாயகி ரிதன்யா . அருகில் தன் மூன்று வயது மகன் தாயின் அருகில் அவளை ஒன்றியபடி படுத்திருந்தான்.

சிறிது விழிப்பு வரவும் தன் தாயின் மார்பில் புதைந்து குளிர்ந்த தன் முகத்தை சூடாக்க முயன்றான்.

தன் மகனின் அந்த செய்கையில் அதிர்ந்து விழித்தாள் ரிதா. நான்கு வருடங்களுக்கு முன்னர் தான் தாங்கிய முகம் நினைவில் நிழலாடியது. அதே செய்கை அச்சு பிசகாமல் ஒரு சின்ன பாலகனால் செய்ய முடியுமா.

முடிகிறதே, அன்று தான் உணர்ந்த தாய்மை அவனது தேவை தன்னை மறந்து. தன் நிலையை மறந்து, சென்ற வேலையை மறந்து, தன் கவலையை மறந்து, அவனை மடி தாங்கியது.

என்ன நம்பிக்கையில், என்ன எண்ணத்தில், என்ன உரிமையில் அவ்வாறு நடந்துகொண்டேன் நான். என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான். என்ன நினைத்துக் கொண்டிருப்பான், நினைப்பானா, அவன் பெயர், ஊர், வேலை எல்லாம் நினைவில் இருக்கிறது.

அன்று நடந்ததன் அடையாளம், இதோ என் அருகில் இருக்கின்றானே. இதை எப்படி என்னால் மறக்க முடியும். என் பெண்மையை அவன் களவாட வில்லை. பறிக்கவில்லை, நான் கொடுத்தேன் என்னை அதுவும் எந்த நிலைமையில் நான் இருந்தேன் அன்று.

எனக்கு எப்படி அவன் துன்பத்தை போக்கவேண்டும் என்ற வேகம் எழுந்தது. அதைவிட என்ன காரணத்துக்காக நான் அந்த ஹோட்டல் போனேன். என்ன செய்து திரும்பினேன்.

எதுவுமே மறக்கவில்லையே, முழுதாக நான்கு வருடம் ஓடிவிட்டது. அவனுக்கு இப்பொழுது வேறு திருமணம் முடிந்திருக்கலாம், வேறு குழந்தைகூட பிறந்திருக்கலாம்.

அன்று நடந்த எதுவுமே அவனுக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை. தன்னை மறந்த நிலையில் இருந்தவனால் என்னை எப்படி நினைவிருக்கும். அன்று என்ன நடந்தது என்பதுகூட நினைவிருக்காது.

ஆனால் எனக்கு அருகில் படுத்திருந்த மகனின் தலையை கோதினாள். சிபின் தாயின் ஸ்பரிசத்தில் புரண்டு படுத்தான்.

ரிதாவின் கண்கள் பக்கத்து கட்டிலை பார்த்தது. அது வெறுமையாக இருந்தது, இவ்வளவு காலையில் எங்கே போனாள் திரும்பிப் பார்த்தாள். ஜன்னலின் அருகில் இவளையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் இவளது உயிர் தோழி, தாய், தந்தை, சகோதரி இவர்களின் மொத்த உருவமான ஹேமா.

ஹேமா ரிதாவின் அருகில் வந்தாள், ரிதா என்ன இன்னைக்கும் உன் பையன் எழுப்பி விட்டானா. அதே நினைவா, மறக்க முடியவில்லை இல்ல.

எனக்கு எதுவும் இப்பொழுது நினைவில் இல்லை ஹேமா.

அப்படியா எங்கே என் கண்ணைப் பார்த்து சொல் எதுவும் ஞாபகம் இல்லையென்று.

உயிர் தோழியிடம் எப்படி பொய் சொல்லமுடியும் ரிதாவால். அதுவும் தனக்கு உயிர் கொடுத்த தோழியிடம்".

கண்கள் கலங்க தலை குனிந்தாள். ஹேமா அவளை நெருங்கி அணைத்துக்கொண்டாள். ஏன் இவ்வளவு வருத்தப் பட்டு இங்கே தனியாக இருந்து கஷ்ட்டப் படுறடா, எல்லாவற்றையும் என்னிடம் சொல்லுகிறாய் ஆனால் அவர் பெயர், ஊர் எதுவுமே சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாயே ஏண்டா.

உனக்கு தெரியாதா என்பதுபோல் பார்க்க, "சிபின்க்கு அப்பா வேணும், அவன் வளர்ந்துவிட்டான் தெரியுதா. இப்பவே என் அப்பா யார், எங்கே அவர் பெயர் என்ன என்று கேட்க துவங்கி விட்டான்.

அவனிடம் என்ன சொல்லுவாய், அவர் இறந்து"..

"ஹேமா., உன் வாயால் அப்படி சொல்லாதே அவர் எங்கே இருந்தாலும் நன்றாக இருக்கவேண்டும். அவரது வாழ்க்கையில் குறுக்கே போக எனக்கு விருப்பம் இல்லை.

இந்த பேச்சு இதோடு போகட்டும். சிபினை நான் சம்மாளித்துக் கொள்கிறேன், ப்ளீஸ் ஹேமா".

அவளது கலங்கிய கண்களும் கெஞ்சலும் ஹேமாவை வாய்மூட வைத்தது. எதுவும் சொல்லாமல் அவளை அணைத்துக் கொண்டாள்.

ரிதாவிற்கு நினைவு வந்தவளாக கேட்டாள், நீ இவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன செய்துட்டு இருந்த ஹேமா, பார்வை ஹேமாவை துளைத்தது.

பிடிபட்ட உணர்வுடன் அவள் பதில்சொல்ல திணறும் வேளையில், ஹம்மா... ஹம்மா. சிபின் குரல் கொடுத்தான்.

உன் ஹம்மா இங்கதாண்டா இருக்கிறேன். வாடா என் கண்ணா, நாம பால் குடிக்க போகலாமா. ரிதாவிடம் இருந்து தப்பி கிட்ச்சனில் புகுந்துகொண்டாள் ஹேமா.

ரிதாவின் இதழ்களில் சிறிய புன்னகை அரும்பியது. அவர்களை பின்தொடர்ந்து சென்று, சிபி எத்தனை நாள் சொல்லிவிட்டேன் ஹேமா அம்மா என்று கூப்பிடு என்று. அதென்ன ஹம்மா...

நா ஹம்மா தான் கூப்பிடுவேன். இது என் ஹம்மா நீ என் அம்மா சரியா நீ போ.

என்னடா இப்பவே என்ன சொன்னாலும் வாய்க்கு வாய் பேசிட்டு இருக்க, அம்மா சொன்னா கேக்க மாட்டியா.

ரிதா அவன் என்னை ஹம்மா ன்னு கூப்பிடுறதுதான் எனக்கு புடிச்சுருக்கு. அப்படியே விட்டுடேன் எதுக்கு இப்போ அவனை திட்டுற.

ஹேமா நான் எப்போ அவனை திட்டினேன். திருத்தினேன்னு சொல்லு உங்க ரெண்டுபேர்க்குள்ள நான் வர முடியுமா என்ன.

தெரியுதுல்ல அப்புறம் என்ன. ரிதா நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லவில்லை. என்ன முடிவு செய்திருக்கிறாய்.

ஹேமாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் ரிதா.

***

பகுதி - 2

தேடல் இல்லாமல் வாழ்க்கை இல்லை

எதை தேடுகிறேன் என்று தெரியவில்லை

நினைவடுக்கில் நீ நிழலாக...

விடியல் கிளம்பிவிட்டது, தன் வாழ்வின் விடியல் என்று என்று தெரியாமல், அதற்க்கு பதிலும் இல்லாமல் கிளம்பினான் ஷிஜு.

ஆபீஸ் கிளம்பி தன் அறையில் இருந்து வெளிப்பட்டு, படிகளில் இறங்கி ஹாலில் பிரவேசித்தான். இவனுக்காகவே காத்திருந்ததைப் போல் அவன் தாய் டைனிங் டேபிள் ளில் டிபன் எடுத்து வைத்தார்.

அவரை கவனிக்காமல், கவனித்தாலும் பொருட்படுத்தாமல் பூஜை ரூமில் சென்று புகுத்துகொண்டான். தன் தந்தையின் படத்தை உற்றுப் பார்த்தான். ப்ரேம்முக்குள் மென்மையாக சிரித்துக் கொண்டிருந்தார்.

'அப்பா, என்னை இப்படி தவிக்க விட்டுட்டு போயிட்டிங்களே. உங்களால எப்படி மனிதர்களை இவ்வளவு சரியா எடை போடா முடிந்தது. நீங்க இறந்து என் கண்ணை துறந்து வச்சுட்டிங்களே.

நீங்க போனதுமே நானும் உங்களோட வந்திருப்பேன். ஆனால் வராமல் போனதற்கு காரணம் ஒரு பெண். என்னை வாழ சொல்லிவிட்டு என் வாழ்க்கையை திருடிவிட்டு போய்ட்டா.

அவளை என்று என் கண்ணில் காட்டப் போறீங்க. இல்ல காட்டியும் நான்தான் புரிந்து கொள்ளவில்லையா. சொல்லுங்கப்பா'.

தன் மன வேதனையை அவரிடம் மனதுக்குள் பகிர்ந்து கொண்டிருந்தான் ஷிஜு. அருகில் இருந்த தாயின் புகைப் படத்தையும் பார்த்தான். அவரது படத்தை தொட்டு வணங்கிவிட்டு எழுந்து டைனிங் ஹாலுக்குச் சென்றான்.

தன் தாயும் தம்பியும் அங்கு இருப்பதைப் பார்த்தான். அவர்களிடம் எதுவும் பேசாமல் சேரில் அமர்ந்துகொண்டான். பரிமாறப் போன தாயை விலக்கி தானே இட்லிகளை எடுத்து வைத்துக் கொண்டான்.

அவன் இரண்டு இட்லிகளை சாப்பிட்டு முடித்ததும் அவன் தாய் சீதா கேட்டார், ஷிஜு... நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், நம்ம பாஸ்கரோட பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்காங்களாம், என் கிட்ட உங்க பெரிய பையனுக்கு...

அவர் பேச்சை முடிக்கும் முன்னர் ஆவேசமாக எழுந்து சேரை தள்ளிவிட்டு அவரிடம் சொன்னான், "உங்களுக்கு ஒரே பிள்ளைதான் அதோ அங்கே உக்காந்து இருக்கானே அவன்தான் அவன். நான் உங்க பிள்ளை இல்லை.

தேவையில்லாமல் என் விஷயத்தில் மூக்கை நுளைக்கக் கூடாது. அது மட்டும் இல்லை என்னிடம் பேசுவது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்".

சொல்லிவிட்டு கையைகூட கழுவாமல் தன் காருக்கு விரைந்தான். காரில் அமர்ந்து ரிவர்ஸ் மிரர்ரை பார்த்தவன் தன் முகத்தில் தாடி வளர்ந்திருப்பதை பார்த்தான். அவள் சொன்ன வார்த்தை காதில் ஒலிக்க, காரில் இருந்து இறங்கி வீட்டினுள் சென்றான்.

அங்கே, அம்மா அண்ணன் உங்களை திட்டுவது என்ன புதுசா, ஏன் இப்படி அழுது உடம்பை கெடுத்துக்கறிங்க, பிஜு தன் தாயிடம் பேசுவது கேட்டது.

பிஜூ உன் அண்ணன் என்ன சொல்லிட்டு போறான் பாத்தியா. அவன் வாழ்க்கையில் நான் தலையிடக் கூடாதாம். அதுமட்டுமா அவன்கிட்டே பேசவே கூடாதுன்னு சொல்லிட்டு போறாண்டா.

"அம்மா அண்ணனை நீங்க பேசிய பேச்சுக்கு அவன் வேற எப்படித்தான் பேசுவான். கொஞ்சநாள் பொறுமையா இருங்கம்மா அவன் காயம் ஆறட்டும்னு சொன்னாலும் புரிந்துகொள்ளாமல் இப்படி நடந்துகொண்டால் நான் என்ன தான் செய்யட்டும்.

நீயே இப்படி சொன்னால். அவனுக்கு வயசு என்ன ஆகுது, கல்யாணம் செய்ய வேண்டாமா. ஏற்க்கனவே நாலு வருஷம் பொறுமையா இருந்தாச்சு.

"அம்மா நாலு வருஷம் இல்லை, அண்ணன் இன்னும் நாற்பது வருடம் ஆனாலும் இப்படித்தான் இருப்பன்' என்ற உண்மையை நான் சொன்னால் நீங்க தாங்க மாட்டீங்க.

நாலு வருஷம் தானே ஆயிருக்கு இன்னும் ஒரு இரண்டு வருடம் பேசாமல் இருங்க. பிறகு எல்லாம் நல்லபடியா நடக்கும் பாருங்க, தாய்க்கு மட்டுமல்ல தனக்கும் சேர்த்தே ஆறுதல் சொல்லிக் கொண்டான்.

இதைகேட்ட ஷிஜு மனதுக்குள் கோபம் கனன்றாலும் எதுவும் சொல்லாமல் படியேறிச் சென்றான். அறையினுள் டவல் எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்டு ஷேவிங் மெசின் எடுத்து கன்னத்தை மழித்துவிட்டு இரண்டே நிமிடங்களில் கண்ணாடியை விட்டு அகன்றான்.

இப்பொழுதெல்லாம் கண்ணாடியே பார்ப்பதில்லை, பார்த்தாலும் அதில் அவன் முகம் தெரிவதில்லை. தொலைந்துபோன அவளது முகம் தெரியுமா என்ற தேடலே அதிகமாகிறது.

அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அணு பிசகாமல் செய்வது என்னவோ அவளே உடனிருப்பதுபோன்ற உணர்வை தருகிறது அவனுக்கு. அன்று அவள் சொன்ன, உங்களுக்கு தாடி நல்லாவே இல்லை, இது உங்களுக்கு வேண்டாம். உங்கள் சோகம் இந்த தாடியில் வடிந்துவிடுமா என்று கேட்டதை நினைத்து அவன் அன்றுமுதல் தினமும் சவரம் செய்து கொள்வான்.

வேலை முடிந்ததும் எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப் படாமல் தன் ஆபீஸ் நோக்கிச் சென்றான்.

போகும் முன்னர் அவனைப் பற்றி, ஷிஜு 29 வயது கம்பீர ஆண்மகன். ஆறு அடி உயரம் அதற்கேற்ற எடை புருவமும் மீசையும் அவ்வளவு அடர்த்தி. விழிகள் யாரையுமே நம்பமாட்டேன் என்ற பிடிவாதம் அதில் தெரியும்.

பெண்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். அவர்கள் குரலையும் உள்வாங்க மாட்டான். ஆனால் அவர்களின் கையில் கண்ணாடி வளையல் தென்படுகிறதா என்று துழாவி விடுவான்.

பேச்சு ஒவ்வொன்றும் என்னைவிட்டு எட்டியே நில் என்று சொல்லாமல் சொல்லிவிடும். வெளிப் பார்வைக்கு கரடு முரடானவன். ஆனால் அழகன்.

மனமோ தன் விளையாட்டுத் தோழியை தொலைத்த குழந்தையென சதா அலை பாய்ந்துகொண்டிருக்கும். அதனாலோ என்னமோ எதிரில் இருப்பவர்க்கு அது தெரிந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருப்பான்.

சிவேஷ் கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்று பெயரிட்ட பிரம்மாண்டமான கட்டிடத்தினுள் தன் ஆடி காரை கொண்டுபோய் அதன் இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கி அவனது அறையை நோக்கிச் சென்றான்.

அறையில் அவரவர் கேபினுக்குள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இருந்தவர் அவனது நடையை வைத்தே அடையாளம் கண்டு எழுந்து காலை வணக்கம் சொன்னார்கள்.

அனைத்தையும் ஒற்றை தலையசைப்பில் பெற்றுக் கொண்டு, அங்கே ஒரு கோடியில் இருந்த குளிரூட்டப் பட்ட அறையினுள் சென்று, சுழல் நாற்காலியில் அமர்ந்தான்.

அமர்ந்த பின்பே எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த தன் நண்பன் வினோத்தைப் பார்த்தான்.

குட் மோர்னிங் ஷிஜு, என்னைக்கும் விட இன்னைக்கு நடையில் வேகம் ஜாஸ்த்தியா இருந்தது என்ன விஷயம்.

வெரி குட்மொர்னிங்க் வினோத், உனக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. இன்னைக்கு அம்மா என்கிட்டே பேசினாங்க, அதுதான். சரி அதைவிடு புதுசா ட்ரான்ச்பர் ஆகி வாற ஹேமா என்னைக்கு வாறாங்க. ஏன் இவ்வளவு தாமதம் ஆகுது, எப்பவுமே ஒன் வீக் தான் டைம் கொடுப்போம். இவங்களுக்கு அல்ரெடீ ரெண்டு வாரம் ஆகிடுச்சு இன்னும் ஏன் வரலை.

நண்பன் பேச்சை மாற்றுவது புரிந்து அவனும் மேலே எதுவும் விசாரிக்காமல் அவன் கேட்ட விவரங்களை சொன்னான்.

நானும் கேட்டேன் ஷிஜு, அவங்க ப்ரண்ட் ஒருத்தங்களுக்கும் இங்கே வேலை கிடைக்குமான்னு தேடிட்டு இருக்காங்களாம். கிடைத்த உடனே வாறதா சொன்னாங்க.

என்ன காரணம் இது வினோத், எல்லோரும் வீடு கிடைக்கணும், ஹோச்டல் கிடைக்கணும்னு காரணம் சொன்னா இவங்க வித்தியாசமா காரணம் சொல்லுறாங்க.

இதே டவுட் எனக்கும் வந்துச்சு, அதை கேட்டதுக்கு அவங்களுக்கு இருக்கும் ஒரே சொந்தம் அவங்களை தனியே விட்டுவிட்டு வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனால் முடிந்த அளவு சீக்கிரமே வருவாங்களாம்.

அவங்க ப்ரண்ட்க்கு வேலையே கிடைக்கவில்லையென்றால்...

"அவங்களோட திறமைக்கு கண்டிப்பாக சீக்கிரமே வேலை கிடைத்து விடுமாம். குறுக்கே கேட்கப்போன ஷிஜுவை அலட்ச்சியப் படுத்தி, அப்படி கிடைக்கவில்லையென்றால் அவங்களது வேலையையும் விட்டுவிட தயாராக இருக்காங்களாம்.

ஒரு மாதம் டைம் கேட்டு இருக்காங்க, அதுவும் சம்பளம் இல்லாமல். ஆனால் இங்கே கட்டிடம் கட்ட அவர்கள் வரைந்து தரவேண்டிய பிளானை அவர்கள் வரும்போது கொண்டுவந்து விடுவார்களாம்.

அவர்களால் நம் வேலை துவங்க தாமதம் ஆகாதாம்", ஒரே மூச்சில் அனைத்தையும் சொல்லி முடித்து ஷிஜுவின் முகத்தைப் பார்த்தான்.

என்னடா வினோத் இது தன்னோட ப்ரண்ட்க்காக வேலையவே விட தயாராக இருக்காங்களா. ஆச்சரியமா இருக்கு. சரி அவங்க ப்ரண்ட் என்ன க்வாலிப்பிகேசனாம் எந்தமாதிரி வேலை தேடுறாங்களாம், நண்பனின் பேச்சில் வியந்தாலும் வெளியில்.

நான் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை ஷிஜு, உனக்கு வேண்டுமானால் நான் விசாரித்து சொல்லுகிறேன் சரியா.

சரி என்று சொன்னதுடன் பேச்சை முடித்துக் கொண்டான். அவன் தேடும் பொம்மா அவள்தான் என்று தெரிந்திருந்தால்...

ஹேமாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள் ரிதா. மனதில் குழப்பம் குடிகொண்டது. ஹேமா தன் முகத்தையே ஆர்வமாக பார்ப்பதை உணர்ந்தும் எதுவும் சொல்லாமல் இருந்தாள்.

"ரிதா நீ வந்தால்தான் நான் சென்னைக்கு செல்ல முடிவெடுப்பேன். நீ இல்லாமல், என் பையன் இல்லாமல் தனியாக இருக்க முடியாது.

நீ வரவில்லையென்றால் என் வேலையை ராஜினாமா செய்து விடுகிறேன். இங்கேயே வேறு வேலை தேடிக் கொள்கிறேன் நீ என்ன சொல்லுகிறாய்".

ரிதாவின் முகத்தில் கவலைக் கோடுகள் உற்பத்தி ஆயின. ஹேமா உன் ஆபீஸில் உனக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம். இதை விடுவது முட்டாள்தனம்.

அந்த முட்டாள்தனத்தை செய்ய எனக்கு விருப்பம்தான்.

ரிதா தன் தோழியை அணைத்துக் கொண்டாள். நீ இல்லாமல் என்னால் மட்டும் இருந்துவிட முடியுமா ஹேமா. வேறு எந்த ஊராக இருந்தாலும் நான் வர தயார். ஆனால் சென்னை...

ரிதா, ஷிபினோட அப்பா அங்கேயா இருக்கிறார்.

ஆம் என்பதுபோல் தலையை ஆட்ட, என்ன செய்தாவது ரிதாவை அழைத்துப் போவது என்று முடிவு செய்தாள் ஹேமா.

ஹம்மா.. அம்மா. நானு நானு. அவர்கள் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சிபின் தன்னையும் தூக்கச் சொன்னான்.

நீ இல்லாமலா என் ராஜா. அவனை தூக்கி அணைத்துக் கொண்டாள் ஹேமா.

இவர்களை பிரிப்பது பாவம் என்று எண்ணிக் கொண்டாள் ரிதா. ஷிபினை பெற்றதுமட்டுமே அவள் வளர்த்தது முழுவதும் ஹேமாவே. ஆனாலும் அதற்காக சென்னை செல்ல முடியுமா.

ஹேமாவை தனியாக விட முடியுமா. முடிவு எடுக்க முடியாமல் திணறினாள் ரிதா.

***

பகுதி - 3

என் தேடல்கள் தொடர்கின்றன

தேடும் நீ அருகிருப்பது தெரிந்தால்

தேடல் முடிந்துவிடும் - ஆனால்

நினைவில் துழாவுகிறேன்

வெறுமையே விடையாய்

ஷிஜு நான் ஒன்று சொன்னால் தவறாக நினைக்கவில்லையென்றால் ஒன்று சொல்லவா.

வினோத் முதல்ல என்னன்னு சொல்லு, நீ நான் தப்பா நினைக்கிற அளவுக்கு எதுவும் சொல்ல மாட்டாய். அதனால் தைரியமா சொல்லு.

இல்ல ஆபீஸ்-ல இதுவரை உனக்கு PA இல்லை, ஹேமாவோட ப்ரண்ட்டை உனக்கு நியமித்தால் என்ன. உனக்கு விருப்பம் இல்லையென்றால் வேண்டாம் நண்பன் அன்று விசாரித்ததில் கொஞ்சம் தைரியம் வந்து கேட்டான்.

அவங்க என்ன படிச்சு இருக்காங்களாம், நீ என்னமோ விட்டா அப்பொஇன்மெண்ட் செஞ்சுடுவ போல.

நான் கேட்டேன்டா, B,com அக்கௌன்ஸ் முடிச்சு இருக்காங்க, PA கோர்ஸ் முடிச்சு இருக்காங்க, டைப் ரைட்டிங், ஷோர்ட் ஹான்ட்...

ஹா ஹா ஹா... டேய் நிப்பாட்டு, என்னைவிட நிறைய படிச்சு இருப்பாங்க போல இருக்கே, எனக்கு PA பாக்குறியா இல்ல MD போஸ்ட்க்கு ஆள் எடுக்குறியா .

"ஷிஜு... நீ சிரிச்சு பாத்து ரொம்ப வருஷம் ஆச்சுடா, ஆனா இப்போ அவங்களைப் பத்தி பேச ஆரம்பிச்ச உடனேயே இவ்வளவு சிரிக்கிறியே . கண்டிப்பா அவங்கதான் உன் PA ன்னு நான் முடிவு பண்ணிட்டேன்.

வினோத்தின் பேச்சில் மனம் இளகியது ஷிஜுவிர்க்கு, என்னடா நானும் பாக்குறேன் இந்த கம்பெனி-க்கு நான் MD யா இல்ல நீயா.

MD யாருன்னு உனக்கு மறந்துட்டா நான் எதுவுமே செய்ய முடியாது. ஆனாலும் என் முடிவில் மாற்றம் இல்லை.

நான் இன்டர்வியுவாவது செய்யலாமா இல்லை அதையும் நீயே செஞ்சுடுறியா .

அப்போ உனக்கு சம்மதமா, அவங்ககிட்ட நான் சொல்லிடவா.

அப்போ இன்னும் சொல்லலையா.

உன்கிட்ட பேசி முடிவு செய்யாமல் எப்படி நானே செய்வேன்.

இதுமட்டும் சரியா செய் ஆனால் என் PA விஷயத்தில் மட்டும் இதுக்கு விலக்குபோல இருக்கு.

ஷிஜு இப்போ கூட உனக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்லு நான் மேலே எதுவும் செய்யலை, அவனது குரல் உள்ளே போய் விட்டது.

வினோத் எனக்கு இப்போ PA தேவையில்லை ஆனாலும் நீ சொல்லுவதால் எனக்கு இதில் பூரண சம்மதம். அவங்களை சீக்கிரமே வரச் சொல்லிவிடு சரியா.

ஷிஜு...

ஆமா வினோத் நீ எதை செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும். எனக்கு நல்லதே நடக்கும் அதனால்... சரியா.

வினோத் நான் உன்னிடம் ஒன்று கேட்க வேண்டுமே .

ஷிஜுவின் தயக்கத்திலேயே அவன் கேட்க வருவது என்னவென்று புரிந்தது அவனுக்கு. பதிலுக்கு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

அவனது மௌனத்தை பொருட்படுத்தாமலே, அம்மா போன் செஞ்சாங்க, நீ ஏன் அவங்க விருப்பத்தை நிறைவேற்றக்கூடாது.

ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க எனக்கு விருப்பம் இல்லை. நாம ஏற்கனவே இதைப் பற்றி நிறைய பேசிவிட்டோம், வேண்டாம் ஷிஜு என்னை இப்படியே விட்டுவிடு. நீ எப்போ கேட்டாலும் என் பதில் இதுதான்.

சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

அவனது இடத்தில் நானாக இருந்தாலும் இந்த முடிவைதான் எடுத்திருப்பேன். ஆனாலும் என் நண்பன் . இந்த இடத்தில் யோசனையை நிறுத்தி வேலையைத் தொடர்ந்தான்.

கொடைக்கானலில் ஹேமாவின் அலைப்பேசி அவளை அழைத்தது. ஹம்மா. போன். அவன் கையில் இருந்து போனை வாங்கிப் பார்த்தாள். சென்னை எண் ஒளிர்ந்தது.

'இவங்களுக்கு என்ன பதில் சொல்லுவது. ரிதா முடிவு சொல்லவேமாட்டேன் என்கிறாளே. பேசாமல் இருந்தால் அதுவும் தவறாக போய்விடும். சரி என்னவென்று கேட்டு விடலாம்'.

ஹலோ...

ஹலோ... நான் சென்னை பிரான்ச்ல இருந்து GM வினோத் பேசுறேன். நீங்க இன்னும் இங்கேவந்து ஜாயின்ட் பண்ணவே இல்லையே.

சாரி சார்... என் ப்ரண்ட்க்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. அதான்..., ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா, இன்னும் ஒரு மாதம் சம்பளம் இல்லாமல் லீவ் தர முடியுமா, நான் அடுத்த மாதம், கேட்பது அதிகம்னு தெரியும் ஆனாலும்...

"ஹேமா நான் உங்ககிட்ட அதைப் பத்தி பேசதான் போன் செய்தேன். உங்க ப்ரண்டுக்கும் நம்ம கம்பெனிலையே MD யோட PA வா வேலை தாறதா நாங்க முடிவு செய்திருக்கிறோம்.

அதனால் நீங்க அடுத்த திங்கள் கிழமை இங்கே இருக்க வேண்டும். இதையும் தவறவிட்டால் உங்கள் வேலைக்கு நான் பொறுப்பு இல்லை".

இல்லை சார் கண்டிப்பா அடுத்த திங்கள் நாங்க அங்கே இருப்போம், சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

அவனிடம் தைரியமாக சொல்லிவிட்டாலும் ரிதாவை சம்மாளிப்பது அவ்வளவு சுலபமில்லை என்பது அவளுக்குப் புரிந்தே இருந்தது.

இந்த ஒரு மாதமாக அவளிடம் பேசியும் முடிவு என்னவோ பூஜ்யம்தான். ஹம்மா வரவர நீங்க என்னை கவனிக்கிறதே இல்லை, எப்போ பாத்தாலும் யோசிச்சுகிட்டே இருக்க.

சே ஒரு சின்னப் பையன் கவனிக்கும் அளவுக்கா நம் யோசனை இருக்கிறது. சிபி அம்மா என்ன சொன்னாலும் கேப்பியா கண்ணா.

ஹம்மா நான் சிபி, நீ ராஜான்குற, கண்ணான்னு சொல்லுற போ நான் பேசமாட்டேன்.

ஏண்டா நீ என்னை ஹம்மான்னு சொலுற அதுக்கு இது பரவாயில்லை.

நீ என்ன குட்டி பையனா. நீதான் வளந்துட்டியே...

சரிடா சிபி கண்ணா... இன்னைக்கு அம்மா வந்ததும் நாம சென்னை போகலாம்னு அம்மா கிட்ட சொல்லுறியா.

சென்னைல யார் இருக்கா.

அங்கதாண்டா உன், இல்லை அங்க பெரிய பீச் இருக்கு, உனக்கு கடல் பாக்கணும்னு ஆசையா இருக்குன்னு சொன்ன இல்ல. நாம சென்னை போனா, அம்மா உன்னை டெய்லி கடல் பாக்க கூட்டி போவேன் அதான் அம்மா கிட்ட சொல்லுறியா.

பீச் ன்னா என்ன...

பீச்-ல நிறைய தண்ணி இருக்கும்டா.

அதுதான் இங்கேயே நிறைய தண்ணி இருக்கே, மலையில. அதை இங்க வரச் சொல்லு".

எப்படிஎல்லாம் யோசிக்கறான் பாரு, பீச் இங்க வராதுடா.

நாம மட்டும் போறோம், அப்போ பீச் மட்டும் வராதா.

பீச்-ல தண்ணி தானே இருக்கும். தண்ணி எப்படி இங்க வரும் நாமதான் போகணும்டா.

ஹம்மா... பொய் சொல்லாதிங்க, இங்க மலைல இருந்து தண்ணி வருதுல்ல, அப்போ பீச் தண்ணீ மட்டும் இங்கே வராதா.

ஹையோ தெரியாத்தனமா வாய் விட்டோமே என்று எண்ணிக் கொண்டாள். அவனிடம் பேசி சம்மாளிக்க முடியாது என்று எண்ணியவள், சரி போ, ஹம்மாவுக்கு தூக்கம் வருது நான் தூங்கப் போறேன்.

ஹம்மா... பீச் சென்னைல இருக்கு அதுக்கு யாரும் டிக்கெட் எடுக்க மாட்டாங்களா அதனால்தான் அது இங்கே வராதா.

அடடே ஆமாடா கண்ணா.

உங்களுக்கு மறந்துபோச்சா அதனால்தான் சொல்லலையா.

அதெல்லாம் சரிதான், இப்போ அம்மா கிட்ட சொல்லுறியாடா கண்ணா.

அதுமட்டும் இல்லை இங்க நீ மழையில் நனைய முடியாது. ஆனால் அங்கே போனா நாம மழையில் நனையலாம்.

இங்கே நாள்முழுக்க சொட்டர் போட்டுட்டு இருக்க, அங்கே அது போட வேண்டாம். நிறைய ஐஸ் கிரீம் சாப்பிடலாம். உனக்கு இங்கே அடிக்கடி சளி பிடிக்குதுல்ல அங்கே அது பிடிக்காது.

அம்மா கிட்ட சொல்லுறியா".

ஐஸ் கிரீம், ஸ்வெட்டர் போடா வேண்டாம், மழையில் விளையாடலாம் என்ற சொற்களைக் கேட்டதும் குஷியாகிவிட்டான் குட்டி.

ஆனாலும் தாயிடம் கேட்கச் சொன்னதும் தயக்கம் குடிகொண்டது அவனது முகத்தில். இது எல்லாமே வேணும், ஆனா

ஹம்மா நான் சொன்னா அம்மா அழுவாங்க நான் சொல்லமாட்டேன். அன்னைக்கு நீங்க கேட்டதுக்கு அழுதாங்க இல்ல.

ஹேமாவிற்கு கண்கள் கலங்கியது. இந்த சின்ன வயதிலேயே அவன் ரிதாவின் மனதை எந்த அளவு கவனிக்கிறான் என்பது புரிந்தது. அவனை அணைத்துக் கொண்டாள்.

ஹம்மா உன்னை விட்டு போனால் உனக்கு சம்மதமாடா. ஹம்மா மட்டும் சென்னை போகட்டுமா.

வேண்டாம் ஹம்மா, நீ என் ஹம்மா இல்ல... போக வேண்டாம் எனக்கு ஹம்மாவும் வேணும், அம்மாவும் வேணும் .

அப்பா வேண்டாமாடா .

அப்பா வேணும், ஆனா அப்பா வெளிநாடு போயிருக்காங்களே இங்க எப்படி வருவாங்க.

ரிதா எதையோ சொல்லி சிபியை சமாதானம் செய்திருப்பது புரிந்தது. இதில் தான் தலையிட்டு குழப்ப அவள் விரும்பவில்லை. ஆனாலும் தந்தை இருந்தும் இல்லாமல் இருப்பது, அதுவும் தெரியாமலே இருப்பது இந்த குழந்தைக்கு செய்யும் துரோகம் அல்லவா.

ரிதாவின் பக்கம் நியாயம் இருக்கலாம். ஆனாலும்..., முடியாது இவர்களை சேர்க்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை விடவும் முடியாது.

இன்று ரிதா வேலையில் இருந்து வந்ததும் ஒரு முடிவு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

மாலையில்...

ரிதா வந்ததும் அவளுக்கு காபி கொடுத்தாள். ஹேமா, சிபி தூங்கிட்டு இருக்கானா.

ஆமா மதியம் சாப்பிட்டுவிட்டு ஒரே ஆட்டம் கடைசியா நான்கு மணிக்குதான் தூங்கினான்.

"ஓ...,

Enjoying the preview?
Page 1 of 1